விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7839 topics in this forum
-
தோனி, கோலியை விட அதிக சம்பளம் பெறும் ரவி சாஸ்திரி, கவாஸ்கர் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் (பிசிசிஐ) இருந்து அதிக சம்பளம் வாங்குவதில் அணி கேப்டன் தோனி, துணை கேப்டன் கோலி ஆகியோரை முன்னாள் வீரர்கள் ரவி சாஸ்திரி, சுனில் கவாஸ்கர் ஆகியோர் விஞ்சிவிட்டனர். கவாஸ்கர், ரவிசாஸ்திரி இருவரும் இந்த ஆண்டில் ரூ.6 கோடிக்கு மேல் பிசிசிஐ-யிடம் இருந்து சம்பளமாக பெற்றுள்ளனர். இது இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி, துணை கேப்டன் விராட் கோலி ஆகியோருக்கு பிசிசிஐ கொடுக்கும் சம்பளத்தைவிட அதிகமாகும். கடந்த 12 மாதங்களில் டெஸ்ட், ஒருநாள், 20 ஓவர் கிரிக்கெட் என மொத்தம் 35 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள தோனிக்கு பிசிசிஐ ரூ.2.59 கோடி சம்பளம் கொடுத்துள்ளது. 39 ப…
-
- 0 replies
- 635 views
-
-
ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்தின் விசித்திர கேட்சை அனுமதித்தது ஏன்? - ஐசிசி விளக்கம் பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற 3-வது ஒருநாள் போட்டியில் ஆஸி.வீரர் ஸ்டீவ் ஸ்மித் பிடித்த விசித்திர கேட்ச் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. கடைசி ஓவரில் 2 ரன்களை எடுக்க முடியாமல் 2 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து, பாகிஸ்தான் தோற்ற 3-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் பிடித்த கேட்ச் பெரும் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. நடந்தது என்ன? ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 232 ரன்கள் வெற்றி இலக்கத் துரத்தி வந்தது. அப்போது ஆட்டத்தின் 18-வது ஓவரில் ஆஸ்திரேலிய வீரர் சேவியர் டோஹெர்ட்டி பவுலிங் செய்ய அழைக்கப்பட்டார். பாகிஸ்தான் இடது கை பேட்ஸ்மென் பவாத்…
-
- 0 replies
- 508 views
-
-
உலகக் கோப்பைக்கு பாகிஸ்தான் கேப்டனாக இருக்க விரும்பவில்லை: மிஸ்பா-உல்-ஹக் அறிவிப்பு உலகக் கோப்பை போட்டிக்கு பாகிஸ்தான் கேப்டனாக இருக்க விரும்பவில்லை என்று பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் அணி கேப்டன் மிஸ்பா-உல்-ஹக் கூறியுள்ளார். பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட முடியாததால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியின்போது அணியில் இருந்து மிஸ்பா விலகினார். அப்ரிடி கேப்டன் பொறுப்பை ஏற்றிருந்தார். உலகக் கோப்பை போட்டி வரை பாகிஸ்தான் கேப்டனாக மிஸ்பா-உல்-ஹக் இருப்பார் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஏற்கெனவே கூறியுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர் தோல்விக்குப் பிறகு மிஸ்பா இது தொடர்பாக கூறியது: சமீபகாலமாக என்னால் அதிக ரன் எடுக்க முடியவில்லை. சிறப்பான ஆட்டத்தை …
-
- 0 replies
- 298 views
-
-
சர்வதேசக் கிரிக்கெட் சபை விதிமுறைகளை தாண்டி பந்துவீசும் பந்து வீச்சாளர்களை தடைசெய்யும் செயற்பாட்டில் 20 வருடம் தாமதித்துள்ளது என, முரளிதரனின் பந்துவீச்சு முறையற்றது என கூறிய அவுஸ்திரலியா நடுவர் டரில் ஹேர் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியா பத்திரிகை ஒன்றிற்கே இவாறு தெரிவித்துள்ளார். இதன் மூலம் தலைமுறையாக இவ்வாறான பந்துவீச்சாளர்கள் உருவாகியுள்ளதாக கூறியுள்ளார். 1995ஆம் ஆண்டே சர்வதேசக் கிரிக்கெட் சபை இந்த சுத்தமாக்கல் நடவடிக்கையை செய்து இருக்க வேண்டும். ஆனால் 19 வருடம் தாமதித்து, விதிமுறைகளை தாண்டி பந்தை வீசி எறிபவர்கள் கிரிக்கெட்டில் இனி வேண்டாம் என கூறி இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இது மிகப் பிந்திய செயற்பாடு எனவும் கூறியுள்ளார். நடுவர்கள் துணிவற்றவர்கள் எனவும், த…
-
- 6 replies
- 498 views
-
-
உலகக் கோப்பையை வெல்ல பாகிஸ்தானுக்கு வாய்ப்பு குறைவு: ஷாகித் அப்ரிடி பகிரங்கம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டம் வெல்ல வாய்ப்பு குறைவு என்று அந்த அணியின் மூத்த வீரர் ஷாகித் அப்ரிடி பகிரங்கமாக கூறியுள்ளார். இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் உலகக் கோப்பைக்காக அனைத்து அணிகளும் முழுவீச்சில் தயாராகி வருகின்றன. ஆனால் பாகிஸ்தான் அணி தொடர் தோல்விகளால் துவண்டுள்ளது. அந்த அணி வீரர்கள் விரக்தியின் உச்சத்தில் உள்ளதை அப்ரிடியின் பேச்சு வெளிக்காட்டியுள்ளது. இது தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளது: உலகக் கோப்பை நெருங்கி வரும் நிலையில் எங்கள் அணியின் பேட்டிங் மிகவும் மோசமாக உள்ளது. பேட்ஸ்மேன்களால் களத்தில் தாக்குப்பிடிக்க…
-
- 0 replies
- 251 views
-
-
முதல் ஒருநாள் போட்டி: பாகிஸ்தானை நசுக்கியது ஆஸ்திரேலியா ஷார்ஜாவில் நேற்று நடைபெற்ற பாகிஸ்தான், ஆஸ்திரேலியா அணிகள் மோதிய முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா எளிதில் வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா ஸ்டீவ் ஸ்மித்தின் சதத்துடன் 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 255 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் 36.3 ஓவர்களில் 162 ரன்களுக்குச் சுருண்டு படுதோல்வி அடைந்தது. வழக்கம் போல் ஜான்சன் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஷார்ஜாவின் கடும் வெயிலில் ஸ்டீவ் ஸ்மித் அடித்த சதம், சென்னை வெயிலில் ஆஸ்திரேலிய வீரர் டீன் ஜோன்ஸ் எடுத்த 210 ரன்களுடன் ஒப்பிட்டு பேசப்பட்டு வருகிறது. ஆரோன் பின்ச் முதல் பந்தில் ஆட்டமிழந்த பிறகு களமிறங்…
-
- 4 replies
- 474 views
-
-
நான் மிஸ்பா அல்ல; மிஸ்பாவும் நான் அல்ல: ஷாகித் அப்ரீடி பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா உல் ஹக்கின் கேப்டன்சி முறை வேறு தன்னுடைய முறை வேறு என்று ஆல்ரவுண்டர் ஷாகித் அஃப்ரீடி தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 ஒரு நாள் போட்டிகளிலும் தோல்வி தழுவியது பாகிஸ்தான், அதுவும் கடைசி போட்டியில் கடைசி ஓவரில் 2 ரன்கள் வெற்றிக்குத் தேவை என்ற நிலையில் கிளென் மேக்ஸ்வெல்லின் ஜெண்டில் பந்து வீச்சிற்கு ஒரு ரன் கூட எடுக்காமல் கடைசி 2 விக்கெட்டுகளையும் பறிகொடுத்து தோல்வி அடைந்ததையடுத்து அந்த அணியில் கடும் சர்ச்சைகள் கிளம்பியுள்ளன. இத்தனைக்கும் நேற்றைய கடைசி ஒருநாள் போட்டியில் மிஸ்பா உல் ஹக் தன்னைத்தானே அணியிலிருந்து விலக்கிக் கொண்டதால் ஷாகித் அஃப்ரீடிதான் கேப்டன்சி செய்தார். இந…
-
- 0 replies
- 441 views
-
-
ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட்: ஸ்டார் குழுமத்துக்கு ஒளிபரப்பு உரிமை வரும் 2015 முதல் 2023-ம் ஆண்டு வரையிலான சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) ஒளிபரப்பு உரிமையை ஸ்டார் இந்தியா நிறுவனமும், ஸ்டார் மத்திய கிழக்கு நிறுவனமும் பெற்றுள்ளன. இதன் மூலம் இரண்டு டி-20 மற்றும் இரண்டு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகளை ஒளிபரப்பும் உரிமையை இந்நிறுவனங்கள் பெற்றுள்ளன. இந்த ஒளிபரப்பு உரிமையைக் கோரி மொத்தம் 17 ஒப்பந்தப் புள்ளிகள் ஐசிசிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. “துபாயில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் ஐசிசி பிசினஸ் கார்ப்பரேஷன் இம்முடிவை எடுத்தது” என ஐசிசி தலைவர் ஸ்ரீநிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். வரும் 2015-ம் ஆண்டு ஒரு நாள் உ…
-
- 0 replies
- 389 views
-
-
ஆஸ்திரேலியா மீண்டும் முதலிடம் அக்டோபர் 12, 2014. துபாய்: ஐ.சி.சி., ஒருநாள் போட்டிக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியலில், ஆஸ்திரேலிய அணி மீண்டும் ‘நம்பர்–1’ இடத்துக்கு முன்னேறியது. சர்வதேச ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான ரேங்கிங் பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் நேற்று வெளியிட்டது. இதில், ஆஸ்திரேலியா, இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகள் தலா 113 புள்ளிகளுடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டன. தசம புள்ளிகள் வித்தியாசத்தில் மூன்று அணிகளுக்கும் ‘ரேங்க்’ வழங்கப்பட்டது. இதன்படி, பாகிஸ்தானுக்கு எதிரான முதலிரண்டு போட்டியில் வெற்றி பெற்று, ஒருநாள் தொடரை கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணிக்கு ‘நம்பர்–1’ இடம் வழங்கப்பட்டது. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான இரண்ட…
-
- 0 replies
- 350 views
-
-
திராவிட் என்னுடைய உண்மையான குரு: கெவின் பீட்டர்சன் தன்னுடைய பேட்டிங் உத்தியில் நிரந்தர மாற்றத்தை ஏற்படுத்தியவர் திராவிட், அவர் மூலம் உண்மையான குருவைக் கண்டடையும் தனது தேடலும் முடிந்தது என்று கூறியுள்ளார் கெவின் பீட்டர்சன். KP என்ற அவரது சுயசரிதை நூலில் ஸ்பின்னர்களை விளையாடும் உத்திகள் பற்றி திராவிட் தனக்கு அனுப்பியிருந்த மின்னஞ்சல் பற்றி பீட்டர்சன் மீண்டும் மீண்டும் குறிப்பிட்டுள்ளார். அதாவது திராவிட் கற்றுக் கொடுத்த அந்த உத்திகள் தனது பேட்டிங்கில் மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தியது என்று அவர் அதில் கூறியுள்ளார். “அவரது பேட்டிங் காலத்தில் ராகுல் திராவிட் இந்தியாவின் நாயக பேட்ஸ்மென், சுழற்பந்து வீச்சைக் கையாள்வதில் அவர் ஒரு மேதை. எங்கள் இருவருக்கும் இடையே ந…
-
- 0 replies
- 418 views
-
-
வேயன் ஸ்மித்தின் கனவைத் தகர்த்த இந்தியா...! டெல்லி: நீதிமன்றம் கண்டிராத விசித்திரம் இது என்று பராசக்தியில் வசனம் வரும். அப்படித்தான் ஆகியுள்ளது மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் வீரர் வேயன் ஸ்மித்தின் நிலையும். கடந்த 10 வருடமாக அவர் கிரிக்கெட் ஆடி வருகிறார். 92 ஒரு நாள் போட்டிகளில் ஆடி விட்டார். ஆனால் இதுவரை ஒரு சதம் கூட போட்டதில்லை. நேற்று டெல்லியில் நடந்த இந்தியா, மேற்கு இந்தியத் தீவுகள் இடையிலான 2வது ஒரு நாள் போட்டியில் பிரமாதமாக ஆடிய ஸ்மித், 97 ரன்களில் பரிதாபமாக அவுட்டாகி விட்டார். அவரது 10 வருட சதக் கனவு நேற்றும் கை கூடாமல் போய் விட்டது. நேற்று ஸ்மித் ஆடியது அவரது 93வது ஒரு நாள் போட்டியாகும். இதுவரை ஒரு சதம் கூட போடாமல் கிட்டத்தட்ட 100 ஒரு நாள் போட்டிகளை நெருங…
-
- 1 reply
- 821 views
-
-
இது விளையாட்டல்ல, வெற்றி சூத்திரம் ஏழு ஐபிஎல்களில் ஆறு முறை இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்ற அணி. ஏழாவதில் செமி பைனல் வரை வந்த அணி. இரண்டு முறை கோப்பையை வென்ற அணி. ‘சேம்பியன்ஸ் கோப்பை’யை இரண்டு முறை அள்ளிய அணி. நம்பர் ஒன் அணி என்று போட்டியாளர்களால் கூட போற்றப்படும் அணி. நண்டு சிண்டு முதல் தொண்டு கிழம் வரை கண்டு குதூகலம் கொண்டு விசில் போடும் அணி நம்மூர் சென்னை சூப்பர் கிங்க்ஸ்! இவர்களிடம் கற்றுக்கொள்ள நிறைய உண்டு. கிரிக்கெட்டை விடுங்கள். அதை மற்ற டீம்கள் கற்றுக் கொள்ளட்டும். தொலைநோக்கு டீமிடம் நாம் தொழில் ரகசியம் தெரிந்து கொள்வோம். மஞ்சள் பிளேயர்களிடம் மானேஜ்மெண்ட் கற்றுக் கொள்வோம். விசில் போட வைப்பவர்களிடம் விஷயங்களைப் புரிந்துகொள்வோம். அடிப்படை ரகசியம் 20-20…
-
- 0 replies
- 650 views
-
-
தென் ஆபிரிக்காவுக்காக விளையாடாதமை மிகப் பெரிய தவறு: இங்கிலாந்து முன்னாள் வீர் கெவின் பீட்டர்சன் தென் ஆபிரிக்க அணி சார்பில் விளையாடாதமை தான் செய்த மிகப் பெரிய தவறு என இங்கிலாந்தின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார். தென் ஆபிரிக்காவில் பிறந்த கெவின் பீட்டர்சன் இங்கிலாந்து அணியின் சார்பில் கிரிக்கெட் போட்டிகளில் பங்குபற்றி அனைத்து வகை போட்டிகளிலும் இங்கிலாந்தின் சார்பில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரராக விளங்குகிறார். ஆனால், 2013/14 ஆஷஸ் தொடரில் அவுஸ்திரேலியாவிடம் படுதோல்வியைத் தழுவியதையடுத்து அவர் அணியிலிருந்து சர்ச்சைக்குரியவிதமாக நீக்கப்பட்டார். அவர் எழுதிய சுயசரிதை நூல் இன்று வ…
-
- 0 replies
- 253 views
-
-
இந்தியா–வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு பாதிப்பில்லை * பி.சி.சி.ஐ., உறுதி அக்டோபர் 09, 2014. புதுடில்லி: ‘‘இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் தொடருக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. போட்டிகள் திட்டமிட்டபடி தொடர்ந்து நடக்கும்,’’ என, பி.சி.சி.ஐ., செயலர் சஞ்சய் படேல் தெரிவித்தார். ஐந்து ஒருநாள், மூன்று டெஸ்ட், ஒரு ‘டுவென்டி–20’ போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க, இந்தியா வந்தது வெஸ்ட் இண்டீஸ் அணி. இதனிடையே, புதிய சம்பள ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கொச்சியில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் களமிறங்க, வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் முதலில் மறுத்தனர். பிறகு ஒரு வழியாக கொச்சியில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி,போட்டியில் வெற்றி பெற்று 1–0 என, தொடரில் முன்னிலையில் உள்ளது. இருப்பினும…
-
- 0 replies
- 372 views
-
-
நான் விக்கெட் எடுக்கவில்லையென்றாலும் தென் ஆப்பிரிக்கா உலகக் கோப்பையை வெல்ல வேண்டும்: ஸ்டெய்ன் 2015 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் தான் விக்கெட் எடுக்காவிட்டாலும் தென் ஆப்பிரிக்கா கோப்பையை வென்றால் அதுவே போதுமானது என்று டேல் ஸ்டெய்ன் கூறியுள்ளார். "ஊக்கமளிக்கக் கூடிய வீரர்களான டிவிலியர்ஸ், வெர்னன் பிலாண்டர் ஆகியோரிடையே ஆடுவதே சிறந்தது. டிவிலியர்ஸ், ஆம்லா பேட் செய்வதைப் பார்ப்பது, வெர்னன் பிலாண்டர், மோர்னி மோர்கெல் சிறப்பாக ஆடுவதைப் பார்ப்பதே நம்மை ஒரு சிறந்த வீரராக மாற்றும். நான் இவர்களை விட சிறந்தவனாக விரும்பவில்லை, வெற்றி அணியில் அவர்களுடன் இருந்தால் போதும். நான் ஒரு விக்கெட் கூட எடுக்காமல் முடிந்து போனாலும் கோப்பையை வென்றால் எனது கழுத்தைச் சுற்றி பதக்கம் க…
-
- 0 replies
- 513 views
-
-
சுனில் நரைன் தடையால் லாபமா அக்டோபர் 05, 2014. ஐதராபாத்: சாம்பியன்ஸ் லீக் பைனலில், சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரைனுக்கு தடை விதிக்கப்பட்டதில், இந்தியாவின் பங்கு இருப்பதாக, வெஸ்ட் இண்டீஸ் சந்தேகிக்கிறது. சாம்பியன்ஸ் லீக் தொடரில் கோல்கட்டா அணிக்காக பங்கேற்றார் வெஸ்ட் இண்டீசின் ‘சுழல் மாயாவி’ சுனில் நரைன். இத்தொடரில் அதிக விக்கெட் சாய்த்த வீரர்களில் முதலிடம் (15 விக்.,) இவருக்குத் தான். டால்பின்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில், சுனில் நரைன் சுழற்பந்துவீச்சு குறித்து அம்பயர்கள் அனில் சுவுத்ரி, சம்சுதீன் மற்றும் மூன்றாவது அம்பயர் தர்மசேனா இணைந்து, புகார் தெரிவித்தனர். தொடர்ந்து ஹோபர்ட் அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியிலும், ஐ.சி.சி., நிர்ணயித்த 15 டிகிரிக்கும் கூடு…
-
- 1 reply
- 621 views
-
-
ஆஸி. தொடருக்கு முன் சில சோதனை முயற்சிகளைச் செய்ய தோனி முடிவு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நாளை (புதன்கிழமை) கொச்சியில் முதல் ஒருநாள் போட்டி தொடங்கவுள்ள நிலையில், சில சோதனை முயற்சிகளை செய்து பார்க்க முடிவெடுத்திருப்பதாக கேப்டன் தோனி தெரிவித்துள்ளார். இன்று போட்டிக்கு முந்தைய வழக்கமான செய்தியாளர்கள் சந்திப்பில் தோனி கூறும்போது, “நாம் மிகப்பெரிய முன்புலத்தை பார்க்க விரும்புகிறோம். ஆகவே இந்தத் தொடரில் சில புதிய முயற்சிகளை முயற்சி செய்து பார்க்கவுள்ளோம். இப்போது செய்யாமல் ஆஸ்திரேலியாவுக்குச் சென்ற பிறகு இதனை அப்பொழுதே செய்திருக்கலாம் என்று நினைப்பதைவிட இப்போதே சில சோதனை முயற்சிகளை செய்து பார்க்கலாம் என்று தோன்றுகிறது. நம் வீரர்கள் என்ன வழங்குகிறார்கள் என்பதையும் என்ன…
-
- 0 replies
- 600 views
-
-
இங்கிலாந்து ஓய்வறையைப் பற்றி இந்திய வீரர்களிடம் கேளுங்கள்: கெவின் பீட்டர்சன் இங்கிலாந்து பயிற்சியாளர் ஆண்டி பிளவர் மற்றும் விக்கெட் கீப்பர் மேட் பிரையர் ஆகியோர் சக வீரர்களை திட்டியும், அசிங்கப்படுத்தியும் மோசமாக நடந்து கொண்டதாகக் குற்றம்சாட்டிய கெவின் பீட்டர்சன், இந்திய வீரர்களுக்கே இது நன்றாக்த் தெரியும் என்று கூறியுள்ளார். "இலங்கை வீரர்களைக் கேளுங்கள், ஆஸ்திரேலிய வீரர்களைக் கேளுங்கள், இந்திய வீரர்களைக் கேளுங்கள், மேற்கிந்திய வீரர்களைக் கேளுங்கள், இந்தியர்களிடமிருந்து எனக்கு மெசேஜ் வந்தது. அதாவது நான் எப்படி இப்படிப்பட்ட வீரர்களுடன் விளையாடி வருகிறேன், நம்பமுடியவில்லை’என்று எனக்கு மெசேஜ் செய்துள்ளனர். சர்வதேச கிரிக்கெட் வீரர்களின் தொலைபேசி எண்களைத் தருகிறேன்,…
-
- 0 replies
- 444 views
-
-
வீரர்களை மோசமாக திட்டி அசிங்கப்படுத்திய பயிற்சியாளர்: கெவின் பீட்டர்சன் குற்றச்சாட்டு கிரிக்கெட்டின் தாயகமான இங்கிலாந்தில் அந்த விளையாட்டை மையப்படுத்தி பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. அந்த அணியின் பயிற்சியாளராக இருந்த ஜிம்பாப்வே முன்னாள் வீரர் ஆண்டி பிளவர், விக்கெட் கீப்பர் மேட் பிரையர், மூத்த பந்து வீச்சாளர்கள் ஆகியோர் சகவீரர்களை மோசமாக திட்டியதாகவும், வீரர்களின் அறையில் எப்போதும் ஒரு அசாதாரண சூழ்நிலை நிலவியதாகவும். வீரர்களை திட்டி அச்சுறுத்தும் புதிய கலாச்சாரத்தை ஆண்டி பிளவர் புகுத்தியதாகவும் பீட்டர்சன் குற்றம்சாட்டியுள்ளார். ஆஸ்திரேலியா – இங்கிலாந்து இடையிலான ஆஷஸ் டெஸ்ட் தொடர் இருநாடுகளுக்கு இடையிலான ஆயுதம் ஏந்தாத போராக அந்நாட்டு தீவிர கிரிக்கெட் ரசிகர்களால் ப…
-
- 0 replies
- 542 views
-
-
மெஸ்ஸிக்கு சிறை...? வரி ஏய்ப்பு வழக்கில் ஆர்ஜன்டீனா கால்பந்தாட்ட அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸிக்கு குறைந்த ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆர்ஜன்டீனா கால்பந்து அணியின் முன்னணி வீரரான லியோனல் மெஸ்ஸி ஸ்பெயினின் பார்சிலோனா மாவட்டத்தில் வசித்து வருகின்றார். இந்நிலையில், கடந்த 2007-2009ஆம் ஆண்டிற்கான கணக்குகளில் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக லியோனல் மெஸ்ஸி மீதும், அவரது தந்தை ஜோர்ஜ் மெஸ்ஸி மீதும் குற்றச்சாட்டு எழுந்தது. இவர்கள் இருவரும் பெலிஸ், உருகுவே போன்ற அயல்நாட்டு நிறுவனங்களுக்கு மெஸ்ஸியின் புகைப்படத்தை பயன்படுத்தும் உரிமையை விற்றுள்ளனர் என்று கூறப்படுகின்றது. இவ்வாறு செய்வதன்மூலம் அவர்கள் ஸ்பெயினில் 4 மில்லியன் யூரோவிற…
-
- 5 replies
- 756 views
-
-
ஆஸ்திரேலியா அபார வெற்றி அக்டோபர் 06, 2014. துபாய்: பாகிஸ்தானுக்கு எதிரான ‘டுவென்டி–20’ போட்டியில், ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பாகிஸ்தான், ஆஸ்திரேலிய அணிகள் மோதிய ‘டுவென்டி–20’ போட்டி, துபாயில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் அப்ரிதி, ‘பேட்டிங்’ தேர்வு செய்தார். பாகிஸ்தான் அணியின் ஜியா (3), அமின் (0), மக்சூத் (0), ஷேசாத் (10) நிலைக்கவில்லை. பின் வரிசையில் உமர் அக்மல் (1), அப்ரிதி (2), அன்வர் அலி (5) ஒற்றை இலக்க ரன்களில் திரும்பினர். நசிம் மட்டும் அதிகபட்சமாக 25 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் அணி 20 ஓவரில், 9 விக்கெட்டுக்கு 96 ரன்கள் மட்டும் எடுத்தது. ஹசன் (13), இர்பான் (1) அவுட்டாகாமல் இருந்தனர். எளிய இலக்கைத் துரத்தி…
-
- 0 replies
- 558 views
-
-
-
ஹெய்டன், ஹஸ்ஸி, கோஹ்லியிடம் கற்றது கை கொடுத்தது... ரெய்னா பெங்களூர்: மாத்யூ ஹெய்டன், மைக் ஹஸ்ஸி, விராத் கோஹ்லியிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டேன். அது சென்னை சூப்பர் கிங்ஸுக்காக சிறப்பாக ஆட கை கொடுத்தது என்று சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ், 2014ம் ஆண்டின் சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்றுள்ளது. இது இந்த அணிக்கு 2வது வது கோப்பையாகும். இதற்கு முன்பு 2010ம் ஆண்டில் சாம்பியன்ஸ் டிராபியை வென்றிருந்தது சென்னை. கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான நேற்றைய இறுதிப் போட்டியின்போது சென்னை அணியின் சுரேஷ் ரெய்னா அபாரமாக ஆடி சதம் போட்டு சென்னையை வெற்றிப் பாதைக்குக் கொண்டு போய் விட்டார். முன்னதாக ஆடிய கொல்கத்தா அணிக்காக கேப்டன் கெளதம் கம்பீர் சிறப்பாக ஆடி 90 ரன்க…
-
- 0 replies
- 703 views
-
-
வெண்கலப்பதக்கத்தை கொரிய வீராங்கனையிடம் கொடுத்தது ஏன்? - சரிதா தேவி விளக்கம் இன்சியானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் மகளிர் குத்துச் சண்டையில் இந்திய வீராங்கனை சரிதா தேவிக்கு நடுவரால் அநீதி இழைக்கப்பட்டது. இதனையடுத்து அவர் தனக்கு அளிக்கப்பட்ட வெண்கலப்பதக்கத்தை பதக்கமளிப்பு விழா மேடையில் கொரிய விராங்கனை ஜினா பார்க்கிடமே அளித்தார். அவ்வாறு தன் செய்யக் காரணம் என்ன என்பதை அவர் விளக்கியுள்ளார்: "பதக்கமளிப்பு நிகழ்ச்சியில் நான் அவ்வாறு நடந்து கொண்டதற்குக் காரணம், என்னால் அடக்கி வைக்க முடியவில்லை. நான் கொரிய வீராங்கனை ஜினா பார்க்கிடம் ஏன் வெண்கலப்பதக்கத்தை அளித்தேன் என்றால் அந்தப் பதக்கத்திற்குத்தான் அவர் தகுதி. எனக்கு வெண்கலத்தை விட சிறப்பான தகுதி இரு…
-
- 1 reply
- 475 views
-
-
சென்னையில் பந்து வீச்சு சோதனை மையம்: ஐசிசி அறிவிப்பு துபாய்: பந்து வீசும் முறையில் சந்தேகம் ஏற்பட்டால் அந்த பவுலர்களை சோதித்து பார்க்க சென்னையில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) இதுகுறித்து இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பிரிஸ்பேனிலுள்ள ஆஸ்திரேலியாவின் தேசிய கிரிக்கெட் மையம் மற்றும் சென்னையிலுள்ள ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழகம் ஆகியவை சந்தேகத்திற்கிடமான பந்து வீச்சாளர்களின் பவுலிங்கை சோதித்து பார்க்கும் மையங்களாக செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பந்து வீச்சு சோதனை மையம்: ஐசிசி அறிவிப்பு இதுவரை பிரிஸ்பேனில் மட்டுமே இந்த சோதனைகள் செய்யப்பட்டு வந்த நிலையில், இனிமேல் சென…
-
- 0 replies
- 636 views
-