விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7840 topics in this forum
-
அல்ஜாரி ஜோசப் : 22 வயதில் அறிமுக ஐபிஎல் போட்டியில் அசத்தல் சாதனை - யார் இந்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்? 18 நிமிடங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைSWAPAN MAHAPATRA ஐபிஎல் போட்டியொன்றில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய அல்ஜாரி ஜோசப் வெறும் 12 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து எதிரணியின் ஆறு விக்கெட்டுகளை கைப்பற்…
-
- 0 replies
- 1.1k views
- 1 follower
-
-
கனேரியாவிடம் 5 கோடி ரூபா அபராதம் கோருகிறது இங்கிலாந்து கிரிக்கெட் சபை கிரிக்கெட் தடைக்குட்பட்டுள்ள பாகிஸ்தான் வீரர் டனிஷ் கனேரியாவுக்கு விதிக்கப்பட்ட தண்டப்பணம் மற்றும் செலவினத் தொகையான 249,000 ஸ்டேர்லிங் பவுண்ட்களை (சுமார் 5 கோடியே 6 இலட்சம் ரூபா) பெற்றுத்தர உதவுமாறு பாகிஸ்தான் நீதிமன்றம் ஒன்றிடம் ஆங்கிலேய கிரிக்கெட் அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இசெக்ஸ் பிராந்திய அணிக்காக 2009இல் விளையாடிய மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் போட்டியின்போது கனேரியா ஊழல் மோசடியில் ஈடுபட்டமை நிரூபிக்கப்பட்டதை அடுத்து 2012இல் அவரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை தடை செய்திருந்தது. அத்துடன் 100,000 ஸ்டேர்லிங் பவுண்ட்கள் அபராதத்தையும் சபை விதித்திருந்தது. …
-
- 0 replies
- 335 views
-
-
பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் மெத்தியூஸ்- மலிங்க பாகிஸ்தான் சுப்பர் லீக் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்கு இலங்கை டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி தலைவரான அஞ்சலோ மெத்தியூஸ் மற்றும் இருபதுக்கு 20 ஓவர் போட்டி அணித் தலைவர் லசித் மலிங்கவும் ஒப்பந்தமாகியுள்ளதாக பாகிஸ்தான் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்திய கிரிக்கெட் சபையினால் நடத்தப்படும் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரைத் தொடர்ந்து எல்லா நாட்டு கிரிக்கெட் சபைகளும் 20 ஓவர் லீக் தொடரை நடத்த முன்வந்துள்ளன. அதிக அளவு வருமானம் ஈட்டப்படுவதால் இதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இந்தியாஇ மேற்கிந்தியத் தீவுகள், அவுஸ்திரேலிய கிரிக் கெட் சபைகளையடுத்து பாகிஸ்தானும் இதில் குதித்துள்ள…
-
- 0 replies
- 325 views
-
-
சகிப்பின் சதம் வீணானது ; 106 ஓட்டத்தால் இங்கிலாந்து வெற்றி! இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் பங்களாதேஷ் அணி 280 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 106 ஓட்டத்தினால் தோல்வியைத் தழுவியுள்ளது. ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 12 ஆவது போட்டி இயன் மோர்கன் தலைமையிலான தலைமையிலான இங்கிலாந்து மற்றும் மோத்ரசா தலைமையிலான பங்களாதேஷ் அணிகளுக்கிடையே கார்டீப்பில் இன்று மாலை 3.00 மணிக்கு ஆரம்பமானது. இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி களடுத்தடுப்பை தேர்வுசெய்ய இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 386 ஓட்டங்களை குவித்தது. 387 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்…
-
- 0 replies
- 639 views
-
-
துலிப் சமரவீரவுக்கு அவுஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் 20 ஆண்டுகள் தடை! நடத்தை விதிகளை மீறிய காரணத்திற்காக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் துலிப் சமரவீரவுக்கு அவுஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் 20 ஆண்டுகள் தடை விதித்துள்ளது. 52 வயதான சமரவீர, கிரிக்கெட் விக்டோரியா ஊழியராக இருந்த காலத்தில் அவுஸ்திரேலிய கிரிக்கெட்டின் நடத்தை விதிகளை கடுமையாக மீறியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்த விசாரணைகளை முன்னெடுத்த அவுஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் அவருக்கு 20 ஆண்டுகள் தடை உத்தரவை வழங்கியது. 1993 மற்றும் 1995 க்கு இடையில் இலங்கைக்காக ஏழு டெஸ்ட் மற்றும் ஐந்து ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் விக்டோரியா பெண்கள…
-
- 0 replies
- 257 views
-
-
முழு பலத்துடன் களமிறங்கவுள்ளோம் : லசித் மலிங்க இருபதுக்கு 20 உலகக் கிண் ணத்திற்கு நாம் தயாராகிக்கொண்டிருக்கிறோம். எந்தெந்த பயிற்சிகள் தேவையோ அத்தனையை யும் பெற்று முழு பலத்துடன் களமிறங்கவுள்ளோம். நடப்பு சம்பியன் என்ற சூழலில் களமிறங்குவதால் அழுத்தம் இருக்கி றதா என்று கேட்கிறார்கள். அப்படியெல்லாம் இல்லை. வெற்றி என்பது ஒரு திருப்புமுனைதான். தொடர் வெற்றியே எமது இலக்கு என இலங்கை இருபதுக்கு 20 அணித் தலைவர் லசித் மலிங்க தெரிவித்தார். இலங்கையின் இருபதுக்கு 20 ஆண்கள் கிரிக்கெட் அணிக்கும் பெண்கள் கிரிக்கெட் …
-
- 0 replies
- 516 views
-
-
'சுழல் தமிழன்' அஸ்வினின் ஐம்பெரும் சாதனைகள்! அஸ்வின் | படம்: ஏ.எஃப்.பி. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நாக்பூரில் நடைபெற்ற 3வது டெஸ்டில் இந்திய அணி 124 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 2-0 என தன்வசமாக்கியது. வெளிநாட்டு தொடர்களை கடந்த 9 ஆண்டுகளாக இழக்காமல் இருந்த வந்த தென் ஆப்பிரிக்க அணியின் சாதனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஆட்ட நாயகனாக 12 விக்கெட்டுகள் வீழ்த்திய அஸ்வின் தேர்வானார். 2006-க்குப் பின்னர் தென் ஆப்பிரிக்க அணி தொடர்ச்சியாக 15 தொடர்களை வென்றது. தற்போது முதன்முறையாக தோல்வியை சந்தித்துள்ளது. இதற்கு அஸ்வினின் பந்துவீச்சு முதன்மைக் காரணம். இத்துடன்…
-
- 0 replies
- 696 views
-
-
சர்வதேச தடகள சம்மேளனத்தின் மூன்று உயரதிகாரிகளுக்கு வாழ்நாள் தடை சர்வதேச தடகள சம்மேளனத்தின் தலைமை அலுவலகம் ரஷ்ய தடகள விளையாட்டு வீரர்களின் ஊக்கமருந்து மோசடிகளை மூடிமறைக்க முயன்ற குற்றச்சாட்டில் தடகள விளையாட்டு உலகின் மூன்று மூத்த அதிகாரிகளுக்கு ஆயுள்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. இவர்கள் விளையாட்டுத் துறைக்கு எதிர்பார்த்திராத பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச தடகள சம்மேளனத்தின் ஒழுக்கநெறி ஆணையம் கூறியுள்ளது. ரஷ்ய தடகள சங்கத்தின் தலைவர், உலக தடகள சம்மேளனத்தின் முன்னாள் தலைவரான Lamine Diack-இன் மகன் ஆகியோரும் தடைவிதிக்கப்பட்டவர்களில் அடங்குகின்றனர். ரஷ்ய மராத்தன் ஓட்ட வீராங்கனை ஒருவர் ஊக்கமருந்தை பயன்படுத்தியதை மறைப்பதற்கு இவர்கள் லஞ்சம் கோரியதாக ஒழ…
-
- 0 replies
- 329 views
-
-
ஆஸ்திரேலியாவை வீழ்த்துமா இந்தியாவின் இந்த 5 அஸ்திரங்கள்? இந்திய கிரிக்கெட் அணி, போன வருடம் ஜிம்பாப்வே தொடர் தவிர வேறெந்த ஒருநாள் போட்டித் தொடரையும் கைபற்றவில்லை. உலகக் கோப்பையில் அரையிறுதி, வங்கதேச மற்றும் தென்னாப்பிரிக்க தொடரை இழந்தது என தோனி அண்ட் கோ சறுக்கிக் கொண்டேதான் இருந்தது. இப்போது ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்துக்கு, சில புதுமுகங்கள் மற்றும் அனுபவசாலிகள் என முழு பலத்தோடு சென்றிருக்கிறது இந்திய அணி. இது பலம் என்றாலும், சொந்த மண்ணில் ஆஸியை வீழ்த்துவது கடினம் என்பதையும் மறக்கக் கூடாது. ஆனாலும், ஆஸ்திரேலியாவை சொந்த மண்ணில் வீழ்த்த இந்தியாவுக்கு 5 விஷயங்கள் சாதகமாக இருக்கிறது. தெறி பேட்டிங் பேட்டிங்கை பொறுத்தமட்டில் இந்தியா எப்போதுமே கில்…
-
- 0 replies
- 468 views
-
-
3 தமிழ் வீரர்களுடன் மலேஷியா பயணமாகியது இலங்கை அணி ( படங்கள் இணைப்பு ) வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மூன்று தமிழ் வீரர்கள் உட்பட அனைத்து மாவட்ட வீரர்களையும் உள்ளடக்கிய இளையோர் இலங்கை அணி மலேஷியாவுக்கான பயணத்தை மேற்கொண்டுள்ளது. இவர்களுக்கான வழியனுப்புதல் நிகழ்வு இலங்கை கிரிக்கெட் சபைத் தலைவர் திலங்க சுமதிபால தலைமையில் இலங்கை கிரிக்கெட் சபையில் இடம்பெற்றது. இலங்கை கிரிக்கெட் அணியில் இடம்பெற்றுள்ள தமிழ் வீரர்களுக்கு எமது ஆதரவினையும் உந்துசக்தியையும் வழங்கி அவர்களை தேசிய அணியில் இடம்பெறச் செய்வேண்டும். இந்நிலையில் ஏனைய வீரர்களும் குறிப்பாக தமிழ் வீரர்களும் பல சாதனைகள் புரிந்து எமது தாய்நாட்டை உய…
-
- 0 replies
- 643 views
-
-
கடைசி ஓவரில் நான்கு சிக்சர்களை விளாசிய கார்லோஸ் பிராத்வெய்ட் யார்? சாமுவேல்ஸ், பிராத்வெய்ட். | படம்: பிடிஐ. உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் இறுதிப் போட்டியில் கடைசி ஓவரில் சற்றும் எதிர்பாராத விதமாக 4 மிகப்பெரிய சிக்சர்களை அடித்த அந்த நெடிய, வலுவான வீரர் பிராத்வெய்ட் பார்படாஸைச் சேர்ந்தவர். இங்கிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் கடைசி ஓவர் வரை இங்கிலாந்தே வெற்றி பெறும் என்று எதிர்பார்த்தனர், பிராத்வெய்ட் இப்படியொரு ராட்சத ஹிட்டராக இருப்பார் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். முதல் பந்தே ஸ்டோக்ஸ் லெக்ஸ்டம்பில் ஹாஃப்-வாலி லெந்தில் வீச டீப் பேக்வர்ட் ஸ்கொயர் லெக் திசைக்குப் பறந்தது. ஆனால் அடுத்த பந்து ஃபுல் லெந்த் என்று கூற மு…
-
- 0 replies
- 555 views
-
-
அவுஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் எட்டு விக்கெட்டுக்களினால் இலங்கை வெற்றி பெற்றுள்ளது. கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அவுஸ்திரேலிய சென்றுள்ள இலங்கை அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் இரண்டாவது போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அடிலெய்ட் ஓவலில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி இலங்கை வீரர்களின் சிறப்பான பந்துவீச்சை முகங்கொடுக்க முடியாமல் 46.5 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 170 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. முதலாவது விக…
-
- 0 replies
- 606 views
-
-
பங்களாதேஷ் பிரீமியர் லீக் – முதல் நாள் மழையால் கழுவப்பட்டது பங்களாதேஷ் பிரீமியர் லீக் – முதல் நாள் மழையால் கழுவப்பட்டது. இந்தாண்டுக்கான பங்களாதேஷ் பிரீமியர் லீக் போட்டித் தொடரின் முதல் நாள் போட்டிகள் மழையால் கழுவப்பட்டது. இன்று ஆரம்பமான இந்தப் போட்டிகளில் இலங்கையின் சங்ககார, மஹேல உள்ளிட்ட 11 பேர்பங்கெடுக்கின்றமை குறிப்பிடத்தக்கது. http://vilaiyattu_com.apache5.cloudsector.net/en/%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%86%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%aa%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%be%e0%ae%a4%e0%af%8…
-
- 0 replies
- 297 views
-
-
இலங்கை அணிக்கு புதிய முகாமையாளர் நியமனம் இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளராக முன்னாள் இலங்கை வீரர் ரஞ்சித் பெர்னாண்டோ தெரிவுசெய்யப்பட்டுள்ளார். எதிர்வரும் தென்னாபிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கெதிராக இடம்பெறவுள்ள தொடர்களுக்கு இவர் இலங்கை அணியின் முகாமையாளராக இவர் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று இலங்கை கிரிக்கெட் சபையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/14255
-
- 0 replies
- 271 views
-
-
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் மீது துப்பாக்கி சூடு: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷபூர் ஷத்ரான் சென்ற வாகனம் மீது அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதில் ஷபூர் உயிர்தப்பினார். ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியில் இடம்பிடித்துள்ள வேகப்பந்து வீச்சாளர் ஷபூர் ஷத்ரான். 29 வயதாகும் இவர் அந்த அணிக்காக 39 ஒருநாள் மற்றும் 27 டி20 போட்டிகளில் பங்கேற்றுள்ளார். கடைசியாக அயர்லாந்து அணிக்கெதிராக கடந்த ஆண்டு ஜூலை 12-ந்தேதி சர்வதேச போட்டியில் விளையாடி உள்ளார். தற்போதும் அந்த அணிக்காக விளையாடி வருகிறார். இவர்…
-
- 0 replies
- 352 views
-
-
“உயிரிழந்த எமது உறவுகளுக்காகவே விளையாடினோம்” : யுரோப்பா கிண்ணத்தை கைப்பற்றிய மென்சென்ஸ்டர் யுனைட்டட்! (காணொளி இணைப்பு) யுரோப்பா கிண்ண கால்பந்தாட்ட தொடரின் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று மென்சென்ஸ்டர் யுனைட்டட் அணி இவருடத்திற்கான சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது. இறுதிப்போட்டியில் எஜக்ஸ் அணியை எதிர்கொண்ட மென்சென்ஸ்டர் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. போட்டி ஆரம்பித்த 18 ஆவது நிமிடத்தில் மென்செஸ்டர் அணியின் பௌல் பொக்பா முதலாவது கோலினை அணிக்கு பெற்றுக்கொடுக்க, 48 ஆவது நிமிடத்தில் ஹென்ரிக் மெக்கிட்டரியான் கோல் அடித்து அணியின் வெற்றியை உறுதிசெய்தார். எஜக்ஸ் அணி கடும் முயற்சிகளை மேற்கொண்டும், எவ்…
-
- 0 replies
- 381 views
-
-
நெய்மரின் இடத்தை நிரப்பி, மெஸ்ஸியுடன் கைகோக்கும் அந்த வீரர் யார்? ஓர் அலசல்! பிரேசில் டாப் ஸ்டார் நெய்மர் பார்சிலோனா அணியிலிருந்து பி.எஸ்.ஜி (P.S.G) அணிக்குச் சென்றது வரலாறாகி விட்டது. டாப் ரேட்டட் பிளேயர்கள் அதிக தொகைக்கு ஏலம் போவது விவாதிக்க வேண்டிய விஷயமே என்றாலும், கால்பந்து உலகின் டிரான்ஸ்ஃபர் வரலாற்றில் ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு வீரர் அதிக தொகைக்கு வாங்கப்படுவது வாடிக்கைதான் எனும்போது, நெய்மர் 1,677 கோடி ரூபாய்க்கு (அதாவது 222 மில்லியன் யூரோக்கள்) பி.எஸ்.ஜி அணிக்கு மாறியது சரியா, தவறா என விவாதிப்பது வீண் வேலை. நெய்மரின் இடத்தை நிரப்புவதற்காக, அடுத்த வீரரைத் தேடும் பணியில் இறங்கிவிட்டது பார்சிலோனோ. நெய்மரின் இடத்தை நிரப்பப்போவது யார் எ…
-
- 0 replies
- 597 views
-
-
அபத்தப் பெருமித வர்ணனையும் தோனி ஆட்டமிழப்பும் தோனி, ஸாம்ப்பா பந்தில் ஸ்டம்ப்டு ஆகும் காட்சி. | - படம். | ரிதுராஜ் கொன்வர் குவஹாத்தியில் நடைபெறும் 2-வது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய கேப்டன் வார்னரால் முதலில் பேட் செய்ய அழைக்கப்பட்ட இந்திய அணியின் பேட்டிங் சரிவு கண்டது. தோனியும், கேதர் ஜாதவ்வும் அணியை தூக்கி நிறுத்த முயற்சி செய்து வந்தார்கள். அப்போது ஆட்டத்தின் 10-வது ஓவரை ஆடம் ஸாம்ப்பா வீசினார். முதல் பந்தை ஜாதவ் சிங்கிள் எடுக்க தோனி ஸ்ட்ரைக்குக்கு வந்தார். ஸாம்பா வீச மேலேறி வந்தார் தோனி, பந்தின் லெந்தை சற்றே குறைத்தார் ஸாம்ப்பா, மிட் ஆஃபில் தட்டி விட்டார் தோனி ரன் இ…
-
- 0 replies
- 578 views
-
-
கடலூரில் கபடி வீரர் மரணம்: விளையாட்டின்போது நம் ஆரோக்கியத்தில் எதையெல்லாம் கவனிக்க வேண்டும்? க. சுபகுணம் பிபிசி தமிழ் 26 ஜூலை 2022, 05:01 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES கடலூர் மாவட்டம் காடாம்புலியூரை அடுத்த புரங்கணி கிராமத்தைச் சேர்ந்த கபடி வீரர், கபடி போட்டியில் விளையாடிக் கொண்டிருந்த களத்திலேயே மயங்கி உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு விளையாட்டு வீரர்கள் என்ன மாதிரியான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு ஆரோக்கியத்தை பேண வேண்டும் என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. என்ன நடந்தது? கபடி வீரர் விமல், கபடி போட…
-
- 0 replies
- 268 views
- 1 follower
-
-
அர்ஜென்டினாவின் முன்னாள் நட்சத்திர ஆட்டக்காரர் மரடோனா மெஸ்ஸியை பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். முன்னாள் கால்பந்து வீரர் கேரி மற்றும் ஆங்கில தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆகியோர் அர்ஜென்டினா அணியின்போட்டி திறமை பிரேசில் அணியுடன் எப்படி இருக்கிறது என்பது பற்றி விவாதித்தனர். அந்த நிகழ்ச்சியில் முன்னாள் அர்ஜென்டினா அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் மரடோனா கலந்து கொண்டு பேசினார். மரடோனா கணித்தது போல் மெஸ்ஸி உலகக்கிண்ணத்தை வெல்வாரா என்று கேள்வி கேட்கப்பட்டது. இது பற்றி அவர் கூறியதாவது என் கையில் அதிர்ஷ்டத்தின் அடையாளமாய் சே குவேராவை பொறித்துள்ளேன் என்று சிரித்துக் கொண்டே கூறினார். பின்னர் நாங்கள் மிக உயரமாக கட்டப்பட்ட மூன்று மேடைகள் வைத்துள்ளோம். ஒன்று ஆல்ஃபிரடோ டி ஸ்டெபனோ …
-
- 0 replies
- 828 views
-
-
சங்ககராவின் சாதனையை முறியடித்துள்ள டோனி இருபதுக்கு இருபது போட்டியில் 134 பந்துகளை பிடித்ததன் மூலம் மகேந்திர சிங் டோனி, இலங்கை முன்னாள் வீரர் குமார் சங்ககராவின் சாதனையை முறியடித்துள்ளார். இந்தியா – தென்ஆபிரிக்கா அணிகளுக்கிடையில் நடைபெற்றுவரும் இருபதுக்கு இருபது கிரிக்கெட் தொடரின் நேற்றைய முதல் போட்டியில் இந்தியா 28 ஓட்டவித்தியாசத்தில் வெற்றியீட்டியிருந்தது. இந்தப் போட்டியின் போது புவனேஸ்வர் குமார் வீசிய பந்தை ஹென்றிக்ஸ் அடித்தபோது மேல்நோக்கி சென்ற பந்தினை டோனி பிடித்திருந்தார். இதன்மூலம் இருபதுக்கு இருபது போட்டியில் 134 பந்துகளை பிடித்து சங்ககராவின் சாதனையை முறியடித்தார்.சங்ககரா 254 போட்டிகளில் 134 பிடிகளை பிடித்துள்ளார். டோனி 275 …
-
- 0 replies
- 230 views
-
-
மாரின் சிலிச் சாம்பியன்: கிராண்ட் ஸ்லாம் சாதனை வாய்ப்பைக் கோட்டைவிட்ட நிஷிகோரி அமெரிக்க ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் குரேசிய வீரர் மாரின் சிலிச், ஜப்பான் வீரர் நிஷிகோரியை நேர் செட்களில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். அமெரிக்க ஓபன் பட்டம் வெல்லும் முதல் ஆசிய டென்னிஸ் வீரர் என்ற சாதனையை ஜப்பான் வீரர் நிஷிகோரி நிகழ்த்துவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அவரோ 1 மணி 54 நிமிட ஆட்டத்தில் 6-3, 6-3, 6-3 என்ற நேர் செட்களில் தோல்வி அடைந்தார். கோரான் இவானிசவிச் என்ற ஒரு அபாரமான குரேசிய வீரர் அப்போது சாம்ப்ராஸ், அகாஸி உள்ளிட்ட பெரிய வீரர்களுக்கு இணையாக, சில சமயங்களில் அவர்களுக்கு அச்சுறுத்தலையும் கொடுத்துக் கொண்டிருந்தார். அவ…
-
- 0 replies
- 571 views
-
-
உலகக் கிண்ணத்துக்கு கனவு காணும் இலங்கை அணியின் இன்றைய நிலை இலங்கை கிரிக்கெட் அணிக்கு கடந்த வருடம் எதிர்பார்த்தளவு வெற்றிகளைக் கொடுக்கவில்லை என்றே சொல்ல முடியும். தரப்படுத்தலில் முன்னிலையிலும், பின்தங்கிய நிலையிலும் உள்ள அணிகளிடம் மிகவும் மோசமான தோல்விகளை கண்ட இலங்கை அணிக்கு, இன்னும் தோல்வியின் பிடியில் இருந்து மீளமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வீரர்களை சரியாக இனங்காணாமை, வீரர்கள் அடிக்கடி உபாதைகளுக்கு உள்ளாவது, மோசமாக களத்தடுப்பு என பலவித நெருக்கடிகளை இலங்கை அணி சந்தித்து வருகின்றது. நாளுக்கு நாள் வீழ்ச்சிப் பாதையை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் இலங்கை அணிக்கு விமோசனத்தைப் பெற்றுக்கொடுப்பதற்காக பங்களாதேஷ் கிரிக்கெட் அணியி…
-
- 0 replies
- 357 views
-
-
டி20 போட்டியில் 62 பந்தில் 202 ரன்கள் விளாசிய 12 வயது சிறுவன் அ-அ+ தென்ஆப்பிரிக்கா கேப்டவுனில் நடைபெற்ற டி20 போட்டியில் 12 வயது சிறுவன் 62 பந்தில் 202 ரன்கள் குவித்துள்ளார். #T20Cricket தென்ஆப்பிரிக்காவில் கேப்டவுன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் சுற்று டி20 போட்டியில் பிரைம்ரோஸ் ஹப் அணிக்காக 12 வயது சிறுவன் கீரன் பொவர்ஸ் விளையாடினார். இவர் 62 பந்தில் 202 ரன்கள் குவித்தார். இதன்மூலம் தென்ஆப்பிரிக்காவில் நடைபெறும்…
-
- 0 replies
- 311 views
-
-
செஞ்சுரி அடி, முத்தம் கொடு... தப்பே இல்லை.. கோஹ்லிக்கு கொட்டு வைத்த கபில்! டெல்லி: விராத் கோஹ்லி ஒரு சதம் போட்டு விட்டு, பெவிலியனில் இருக்கும் தனது காதலிக்கு முத்தம் கொடுத்தால் அதில் தவறே இல்லை. மாறாக ரன்னே எடுக்காமல் பறக்கும் முத்தம் கொடுத்தால் அது எனக்கு கவலை தரும் என்று கபில்தேவ் அதிரடியாக கூறியுள்ளார். இந்தியாவுக்கு முதல் உலகக் கோப்பையைப் பெற்றுத் தந்த கேப்டன் என்ற பெருமை கபில்தேவுக்கு உண்டு. அதன் பின்னர் டோணி ஒருமுறை பெற்றுத் தந்தார். இந்த நிலையில் அடுத்த உலகக் கோப்பை வந்து விட்டது. பிப்ரவரி 15ம் தேதி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானைச் சந்திக்கவுள்ளது இந்தியா. இந்த நிலையில், இந்திய அணி குறித்து மனம் திறந்து சில கருத்துக்களை தனது பாணியில் அதிரடியாக கூறியுள்ளார் கப…
-
- 0 replies
- 549 views
-