விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7840 topics in this forum
-
நியூசிலாந்தை இலகுவாக வீழ்த்துவோம்- மத்தியூஸ் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் சிறப்பாக செயல்பட்டு தொடரைக் கைப்பற்றுவோம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் இலங்கை அணித்தலைவர் மத்தியூஸ். இலங்கை அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 2 ரி-20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் டெஸ்ட் ஆட்டம் அடுத்த மாதம் 10ஆம் திகதி தொடங்குகிறது. இந்நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரை கைப்பற்றுவோம் என்று இலங்கை அணியின் தலைவர் மத்தியூஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ‘மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம். ஆனால் நியூசிலாந்தில் நிலைமை வேறு வி…
-
- 0 replies
- 916 views
-
-
ஒரே ஓவரில் 34 ரன் விளாசிய ஹர்திக் பாண்டியா இந்தியாவில் நடைபெற்று வரும் சையது முஷ்டாக் அலி டி 20 உள் ளூர் தொடரில் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் பரோடா வீரர் ஹர்திக் பாண்டியா ஒரே ஓவரில் 5 சிக்சர், ஒரு பவுண்டரியுடன் 34 ரன் விளாசினார். வேகப்பந்து வீச்சாளர் அகேஷ் சுதன் வீசிய 19வது ஓவரில் இந்த ரன்ளை ஹர்திக் பாண்டியா குவித்தார். மேலும் பைஸ் மூலம் 4 ரன்கள் கிடைத்தது. சிக்ஸர் அடித்த பந்தில் ஒரு நோ பாலும் அடங்கும். இதன்மூலம் அந்த ஓவரில் 39 ரன் சேர்க்கப்பட்டது. இந்த வகையில் உள்ளூர் டி 20 தொடரில் ஒரே ஓவரில் அதிக ரன்கள் குவிக்கப் பட்டதும் தற்போது தான் நடந்துள் ளது. இதற்கு முன்னர் நியூஸிலாந் தின் ஸ்காட் ஸ்டைரிஸ் உள்ளூர் தொடரில் ஓரே ஓவரில் 38 ரன்கள் விளாசியி…
-
- 0 replies
- 529 views
-
-
ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக் தொடரின் இறுதி 16 அணிகளுக்கிடையிலான விலகல் முறையிலான சுற்றுக்கு, நடப்புச் சம்பியன்கள் லிவர்பூல், ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான பொரூசியா டொட்டமுண்ட், இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான செல்சி, இத்தாலிய சீரி ஏ கழகமான நாப்போலி, ஸ்பானிய லா லிகா கழகமான வலென்சியா, பிரெஞ்சு லீக் 1 கழகமான லயோன் ஆகியவை தகுதிபெற்றுள்ளன. ஒஸ்திரியக் கழகமான றெட் புல் சல்ஸ்பேர்க்கின் மைதானத்தில், நேற்றிரவு நடைபெற்ற அவ்வணியுடனான குழு ஈ போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் வென்று அக்குழுவின் வெற்றியாளர்களாக விலகல் முறையிலான சுற்றுக்கு இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான லிவர்பூல் தகுதிபெற்றுள்ளது. லிவர்பூல் சார்பாக, நபி கெய்ட்டா, மொஹமட் சாலா ஆ…
-
- 0 replies
- 584 views
-
-
கரீபியன் பிரிமியர் லீக் February 13, 2016 கரீபியன் பிரிமியர் லீக் டி20 தொடரில் விளையாட சங்கக்காரா, டிவில்லியர்ஸ் உள்ளிட்ட பல நட்சத்திர வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளும் தாங்கள் நாட்டில் டி20 லீக் தொடரை நடத்தி வருகிறது. அந்த வரிசையில் தற்போது மேற்கிந்திய தீவுகள் நடத்தி வரும் கரீபியன் பிரிமியர் லீக் தொடரும் பிரபலமடைந்து வருகிறது. இந்நிலையில் இதில் விளையாடும் பார்படோஸ் டிரிடென்ட்ஸ் அணி தென்ஆப்பிரிக்காவின் அணித்தலைவர் டிவில்லியர்சை ஒப்பந்தம் செய்துள்ளது. அதேபோல் இலங்கை அணியின் முன்னாள் தலைவரான குமார் சங்கக்காரா ஜமைக்கா டாலாவாஸ் அணிக…
-
- 0 replies
- 509 views
-
-
எவின் லுவிஸின் அபார சதத்தினால் மேற்கிந்திய தீவுகளுக்கு ஹெட்ரிக் வெற்றி By Mohammed Rishad - @AFP மேற்கிந்திய தீவுகளின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரும், அதிரடி ஆட்டக்காரருமான எவின் லுவிஸின் அபார சதத்தின் உதவியுடன் அயர்லாந்து அணிக்கெதிரான மூன்றாவதும், இறுதியுமான ஒருநாள் போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணி டக்வர்த் லுவிஸ் முறைப்படி 5 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றது. இதன்மூலம் மேற்கிந்திய தீவுகள் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாகக் கைப்பற்றியது. மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து அணி, 3 போட்டிகள் கொண்ட ஒரு…
-
- 0 replies
- 629 views
-
-
இருதயக் கோளாறு: 26 வயதிலேயே இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜேம்ஸ் டெய்லர் ஓய்வு இருதயக் கோளாறினால் 26 வயதிலேயே ஓய்வு பெற்றார் இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் டெய்லர். | கெட்டி இமேஜஸ். இருதயக் கோளாறுகள் காரணமாக இங்கிலாந்து பேட்ஸ்மென், நாட்டிங்கம்ஷயர் வீரர் ஜேம்ஸ் டெய்லர் தனது 26-வது வயதிலேயே கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற நேரிட்டுள்ளது. இருதயத்தின் வலது அறையில் தசை சுருங்கி விரிவதில் இவருக்கு தீவிர பிரச்சினைகள் இருப்பது மருத்துவப் பரிசோதனையில் தெரிய வந்தது. இருதய தசை சுருங்கி விரிவதில் பிரச்சினைகள் இருந்தால் அது மாரடைப்பில் போய் முடியும். இந்நிலையில் அவர் ஓய்வு அறிவித்துள்ளார். கடந்த மார்ச் 2012-ல் கால்பந்து வீரர் பாப்ரிஸ் மும்பா இதே …
-
- 0 replies
- 448 views
-
-
ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் பணப்பரிசு நான்கு மடங்காக அதிகரிப்பு; சம்பியன் அணிக்கு 134 கோடி ரூபா Published By: Digital Desk 3 01 Sep, 2025 | 05:12 PM (நெவில் அன்தனி) இந்தியாவிலும் இலங்கையிலும் இந்த மாதம் பிற்பகுதியில் ஆரம்பமாகவுள்ள 8 அணிகளுக்கு இடையிலான ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் மொத்த பணப் பரிசாக 418 கோடியே 5 இலட்சத்து 74,000 ரூபா (13.88 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) வழங்கப்படவுள்ளது. இதன் படி இந்த வருடம் நடைபெறவுள்ள மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான மொத்த பணப் பரிச நான்கு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது என சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது. நியூஸிலாந்தில் 2022இல் நடைபெற்ற ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் (50 ஓவர்) போட்டியில் மொ…
-
-
- 49 replies
- 1.3k views
- 2 followers
-
-
விம்பிள்டன் பணப்பரிசு அதிகரிப்பு விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளில் சம்பியன் பட்டம் வெல்பவர்களுக்கான பணப்பரிசு இவ் வருடம் அதிகரிக்கப்பட்டுள்ளது. வருடாந்தம் நடத்தப்படும் நான்கு மாபெரும் டென்னிஸ் (கிராண்ட் ஸ்லாம்) போட்டிகளில் தூய்மையின் அடையாளமாக விளங்குவது விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளாகும். இப் போட்டிகளில் பங்குபற்றும் அனைவரும் வெள்ளை அங்கிகளையே அணிய வேண்டும் என்பது விம்பிள்டன் ஏற்பாட்டுக் குழுவின் நியதியாகும். இதன் மூலம் தூய்மையின் முக்கியத்துவம் எடுத்துக்காட்டப்படுகின்றது. இப்போட்டிகளில் பங்குபற்றுபவர்கள் …
-
- 0 replies
- 631 views
-
-
உலகிலேயே ரி-20 கிரிக்கெட்டில் இரட்டைச் சதம் யாரால் அடிக்க முடியும்? by : Anojkiyan உலகிலேயே ரி-20 கிரிக்கெட்டில் இரட்டைச் சதம் முதல் வீரராக, இந்தியக் கிரிக்கெட் அணியின் ஆரம்ப அதிரடி துடுப்பாட்ட வீரர் ரோஹித் சர்மா இருப்பார் என அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணியின் வீரர் பிரட் ஹோக் கூறியுள்ளார். இதுவரை ஒருநாள் போட்டிகளிலும், டெஸ்ட் போட்டிகளிலும் பல வீரர்கள் இரட்டைச் சதம் அடித்துள்ளார்கள். ஆனால், ரி-20 போட்டிகளில் எந்த வீரரும் இன்னும் இரட்டைச் சதம் அடிக்கவில்லை. அவுஸ்ரேலிய அணியின் ஒருநாள் தலைவர் ஆரோன் பிஞ்ச் அதிகபட்சமாக 2018ஆம் ஆண்டு சிம்பாப்வே அணிக்கு எதிராக 76 பந்துகளில் 172 ஓட்டங்கள் சேர்த்த போதிலும் இரட்டைச் சதம் அடிக்…
-
- 1 reply
- 704 views
- 1 follower
-
-
விலக்கப்பட்டார் வான் கால் மன்செஸ்டர் யுனைட்டெட் கழகத்தின் முகாமையாளர் லூயிஸ் வான் கால், அப்பதவியிலிருந்து நீக்கப்படுவதாக அக்கழகம், உத்தியோகபூர்வமாக இன்று அறிவித்தது. அவர் நீக்கப்படும் செய்தி, கடந்த சனிக்கிழமையிலிருந்து வெளிவந்த நிலையிலேயே, தற்போது உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அவரது இடத்துக்கு, செல்சி அணியின் முன்னாள் முகாமையாளரான ஜொஸ் மொரின்ஹோ, நாளை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. எப்.ஏ கிண்ணத்தில் மன்செஸ்டர் யுனைட்டெட் அணியைச் சம்பியன் ஆக்கிய பின்னரே, வான் கால் பதவி விலக்கப்பட்டுள்ளார். சம்பியன்ஸ் லீக் தொடருக்குத் தெரிவாகாமை உட்பட, கழகத்தின் அண்மைக்காலப் பெறுபேறுகளில் திருப்தியடை…
-
- 1 reply
- 482 views
-
-
குத்துச்சண்டை ஜாம்பவானான முஹம்மட் அலி காலமானார் குத்துச்சண்டை ஜாம்பவானான முஹம்மட் அலி, தனது 74ஆவது வயதில் காலமானதாக அவரின் குடும்பப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். உலகின் முன்னாள் அதிபாரக் குத்துச்சண்டை சம்பியனும், உலகின் நன்கு அறியப்பட்டுள்ள விளையாட்டு வீரரான அலி, ஐக்கிய அமெரிக்காவின் அரிஸோனா மாநிலத்திலுள்ள ஃபோனிக்ஸ் நகரத்திலுள்ள வைத்தியசாலையில், இவ்வார ஆரம்பத்தில், அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே மரணமடைந்துள்ளார். சுவாசம் தொடர்பான நோய்களோடு போராடிக் கொண்டிருந்த அலியின் நிலைமை, பார்க்கின்ஸன் நோயால் மேலும் மோசமாகியிருந்தது. இந்நிலையில், அலியின் இறுதிக் கிரியைகள், அவரது சொந்த நகரமான, கென்டக்கி மாநிலத்திலுள்ள லூய்வ…
-
- 18 replies
- 4.9k views
-
-
டெல்லி கிரிக்கெட்: கடைசி நேர திருப்பத்தில் பெரும் போராட்டத்தில் இந்திய அணிக்கு த்ரில்லான ஆறுதல் வெற்றி!!டெல்லி: டெல்லியில் நடைபெற்ற பாகிஸ்தானுடனான கடைசி ஒருநாள் போட்டியில் கடைசி நேர திருப்பத்தில் கடுமையான போராட்டத்துக்கு இடையே த்ரில்லாக 10 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்தியா. ஒருநாள் போட்டியில் தொடர் தோல்விகளை சந்தித்த இந்தியாவுக்கு இது ஆறுதல் வெற்றி!இந்தியா வருகை தந்துள்ள பாகிஸ்தான் அணியுடனான 2 ஒருநாள் போட்டிகள் சென்னை மற்றும் கொல்கத்தாவில் நடைபெற்றது. இந்த இரண்டு போட்டிகளிலுமே இந்தியா தோல்வியை சந்தித்தது. இன்றைய போட்டியில் ஷேவாக் இடம்பெறவில்லை. ரஹானேவும் அசோக் திண்டாவுக்குப் பதில் சமி அகமது சேர்க்கப்பட்டனர்.சொதப்பல் இந்தியாபோட்டியின் தொடக்கத்தில் டாஸ் வென்ற இந்திய அண…
-
- 0 replies
- 412 views
-
-
உலகக்கோப்பை தகுதிச் சுற்று கால்பந்து: பிரேசில் முன்னிலை; கடும் சிக்கலில் அர்ஜென்டினா வெனிசூலா அணிக்கு எதிரான வெற்றியைக் கொண்டாடும் பிரேசில் வீரர்கள். | படம்: ராய்ட்டர்ஸ். உலகக்கோப்பை கால்பந்து தென் அமெரிக்கப் பிரிவு தகுதிச் சுற்று போட்டிகளில் பிரேசில் தொடர்ச்சியாக தனது 4-வது வெற்றியைப் பதிவு செய்து முன்னிலை வகிக்க மற்றொரு பெரிய அணியான அர்ஜென்டினா பராகுவே அணிக்கு எதிராக சொந்த மண்ணில் அதிர்ச்சித் தோல்வி கண்டு 5-வது இடத்தில் உள்ளது. பராகுவே அணிக்கு எதிராக 1-0 என்று காயமடைந்த மெஸ்ஸி இல்லாத அர்ஜென்டின அணி தங்கள் நாட்டிலேயே அதிர்ச்சித் தோல்வியடைந்ததையடுத்து ரஷ்யாவில் 2018-ல் நடைபெறும் உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளுக்கு நேரடியாக தகு…
-
- 1 reply
- 269 views
-
-
இது தொடக்கம் மட்டுமே; இன்னும் அதிகம் சாதிக்க விரும்புகிறோம்: விராட் கோலி சென்னையில் வெற்றி பெற்று டிராபியை பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்கூரிடமிருந்து பெறும் கேப்டன் விராட் கோலி. | படம்.| பிடிஐ. 18 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா தோல்வியடையாமல் ஆடி வருகிறது. இது ஒரு ‘சிறுதுளியே’ என்கிறார் விராட் கோலி, இன்னமும் நிறைய சாதனைகள் செய்ய விரும்புகிறோம் என்கிறார் கேப்டனும், தொடர் நாயகனுமான கோலி. மேலும் 2016-ம் ஆண்டில் 9-வது டெஸ்ட் போட்டியை சென்னை வெற்றி மூலம் வென்றுள்ளது. செய்தியாளர்களிடம் பேசிய விராட் கோலி கூறியதாவது: இரண்டு பின்னடைவுகளுக்குப் பிறகு 2016-ம் ஆண்டு அணிக்கு சிறப்பாகவே அமைந்தது. ஆஸ்திரேலியாவில…
-
- 1 reply
- 399 views
-
-
மலிங்க விளையாடலாம் ; வைத்திய குழு தீர்மானம் இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க உபாதையிலிருந்து மீண்டு முழு உடல் தகுதியுடன் உள்ளார் என இலங்கை கிரிக்கெட் சபையின் வைத்திய குழு உறுப்பினர் அர்ஜுன் த சில்வா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மலிங்க இம்மாதம் அவுஸ்திரேலியாவுக்கெதிராக இடம்பெறவுள்ள இருபதுக்கு-20 தொடரில் விளையாடுவதற்கான முழு உடற் தகுதியுடன் உள்ளார், வைத்திய குழு சார்பில் அவர் விளையாடலாம் என்ற அறிக்கையை கிரிக்கெட் சபையிடம் ஒப்படைத்துள்ளோம். எனினும் தேர்வு குழு இலங்கை அணிக்குழாமை தெரிவுசெய்வதுடன், கிரிக்கெட் சபை இறுதித் தீர்மானத்தை எடுக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார…
-
- 0 replies
- 254 views
-
-
பார்சிலோனாவிற்காக 100 கோல்கள் அடித்து நெய்மர் அசத்தல் பிரேசில் நாட்டின் கால்பந்து அணியின் கேப்டனான நெய்மர் பார்சிலோனா அணிக்காக தனது 100-வது கோலை பதிவு செய்துள்ளார். பிரேசில் நாட்டின் கால்பந்து அணியின் கேப்டனான நெய்மர் பார்சிலோனா அணிக்காக தனது 100-வது கோலை பதிவு செய்துள்ளார். ஸ்பெயின் நாட்டின் கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையில் நடைபெறும் மிகப்பெரிய தொடர் லா லிகா கால்பந்து தொடர். இதில் பார்சிலோனா, ரியல் மாட்ரிட் ஆகியவை தலைசிறந்த அணிகள். பார்சிலோனா அணியில் மெஸ்சி, சுவாரஸ், நெய்மர் ஆகிய மூன்று தலைசிறந்த வீ…
-
- 0 replies
- 320 views
-
-
மெஸ்ஸி சோபிக்கவில்லை, மீண்டும் அர்ஜெண்டினா, சிலி அணிகள் தடுமாற்றம் YouTube லயோனல் மெஸ்ஸி, வெனிசூலா வீரர் ஜூனியர் மொரீனோவுக்குக் கைகொடுக்கிறார். - படம். | ஏ.எஃப்.பி. 2018 உலகக்கோப்பை கால்பந்துத் தொடருக்கான தகுதிப்போட்டிகள் நடைபெற்று வருகின்றன இதில் அர்ஜெண்டினா அணி வெனிசூலாவுக்கு எதிராக 1-1 என்று டிரா செய்ய சிலி அணி பொலிவியாவுக்கு எதிராக 0-1 என்ற கோல் கணக்கில் தோல்வி தழுவியது. அர்ஜெண்டினா அணி இடைவேளை வரை ஏகப்பட்ட கோல் வாய்ப்புகளை கோல் அருகில் சென்று மோசமான பினிஷிங்கினால், திட்டமிடலின்மையால் தவற விட்டது. கடைசியில் வெனிசூலா அணி தன் கோலில் அடித்த ஷாட்டின் மூலமே அர்ஜெண…
-
- 0 replies
- 287 views
-
-
இந்த ஆண்டு இறுதியில் பிரேசிலில் உலககோப்பை கால்பந்து போட்டி நடக்க உள்ளது. இதற்காக அந்நாட்டில் ரியோடி ஜெனிரோ நகரில் பிரமாண்ட ஏற்பாடுகள் நடந்து வருகிறது. புதிய ஸ்டேடியங்கள் மற்றும் வீரர்கள், ரசிகர்கள் தங்குவதற்கான உள்கட்டமைப்புகள் கோடிக்கணக்கான ரூபாய் செலவில் நடந்து வருகிறது. இதற்கு அந்நாட்டில் கடும் எதிர்ப்பும் இருந்து வருகிறது. சாவோ பாலோ நகரில் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் உலககோப்பை கால்பந்து போட்டிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் மற்றும் ஊர்வலம் நடத்தினர். பாதுகாப்புக்காக சென்ற போலீஸ் வாகனங்களை அடித்து துவம்சம் செய்தனர். கோடிக்கணக்கான ரூபாயை உலககோப்பைக்கு செலவு செய்வதை நிறுத்திவிட்டு அந்த பணத்தை சுகாதாரம், கல்வி மற்றும் போக்குவரத்து, வீட்டு வசதிக்கு செலவு செய்ய …
-
- 0 replies
- 377 views
-
-
டீம்ல நாலு ஃபாஸ்ட் பெளலர் இருந்தாபோதும்... எந்த டீமுக்கும் தண்ணி காட்டலாம் ! "ஆம், அந்தப் பந்தை இன்னும் 20, 30 முறை எதிர்கொண்டாலும் நான் அவுட்தான் ஆவேன். பெளலரைப் பாராட்டிவிட்டு, இந்த விஷயத்தை விட்டு நகருங்கள்..." - ஜேம்ஸ் வின்ஸ் வார்த்தைகளில் குற்றவுணர்வு. அவரால் கம்பீரமாக பத்திரிகையாளர்களை எதிர்கொள்ள முடியவில்லை. அந்த பந்தைப் பற்றி அவர்கள் கேட்டுக்கொண்டே இருந்தது ரொம்பவுமே எரிச்சலூட்டியது. ஏனெனில், அவர் அவுட்டான விதம் அப்படி. சமீபத்தில் முடிந்த ஆஷஸ் தொடரில், மிச்செல் ஸ்டார்க் வீசிய அந்த மாயப்பந்தில், ஆஃப் ஸ்டம்ப் சரிந்து விழ, பெய்ல்கள் மின்னிக்கொண்டே பறக்க, ஆட்டமிழந்தார் வின்ஸ். கேட்ச், எல்.பி.டபிள்யூ, ரன் அவுட் என வேறு எப்படி அவுட் ஆகியிருந்த…
-
- 0 replies
- 487 views
-
-
கோலியை தேர்வு செய்ய எதிர்த்த தோனி; பலிகடாவான தமிழக வீரர் பத்ரிநாத்: அம்பலப்படுத்தினார் வெங்சர்க்கர் கோப்புப் படம் விராட் கோலி அணியில் இடம்பெற வேண்டும் என்பதற்காக கடந்த 2008-ம் ஆண்டு தமிழக வீரர் பத்ரிநாத் சுப்பிரமணியன் தேர்வு செய்யப்படவில்லை என்று இந்திய அணியின் முன்னாள் வீரரும், கேப்டனுமான திலிப் வெங்சர்க்கர் அம்பலப்படுத்தியுள்ளார். அணிக்குள் விராட் கோலியைத் தேர்வு செய்ய அப்போது கேப்டனாக இருந்த எம்.எஸ்.தோனியும், பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனும் எதிர்ப்பு தெரிவித்தனர் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் திலிப் வெங்சர்க்கர், கடந்த 2006-ம் ஆண்டில் …
-
- 0 replies
- 330 views
-
-
வட மாகாண விளையாட்டு விழா : வவுனியா மாணவனுக்கு தங்கம், வெள்ளி By DIGITAL DESK 2 20 DEC, 2022 | 05:16 PM வட மாகாண விளையாட்டு விழாவில் வவுனியா மாவட்டத்தைச் செர்ந்த சசிகுமார் டனுசன் ஒரு தங்கம் உட்பட 2 பதக்கங்களை வென்று பலத்த பாராட்டைப் பெற்றார். யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் அண்மையில் நடைபெற்ற இவ் விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கத்தையும் 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும் வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலய மாணவன் சசிகுமார் டனுசன் வென்றெடுத்தார். 1,500மீற்றர் ஓட்டப் போட்டியை 4 நிமிடங்கள், 37.00 செக்கன்களில் ஓடி முடித்து சசிக…
-
- 0 replies
- 234 views
- 1 follower
-
-
இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டிகளுக்கு விராட் கோஹ்லி கேப்டன்! மும்பை: இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் டோணிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, பார்முக்கு திரும்பியுள்ள விராட் கோஹ்லிக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. சம்பள பிரச்சினை காரணமாக மேற்கிந்திய தீவுகள் அணி திடீரென ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலகிக் கொண்டதால், அதற்கு பதிலாக, நவம்பரில், இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடுகிறது. இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டிகளுக்கு விராட் கோஹ்லி கேப்டன்! இந்த சுற்றுப் பயணத்துக்கான இந்திய அணி தேர்வு இன்று நடைபெற்றது. இதன்படி, டோணிக்கு ஓய்வளிக்கப்பட்டு கோஹ்லி, இத்தொடருக்கான கேப்டனாக்கப்பட்டுள்ளார். டோணிக்கு பதிலாக விருத்திமான் ச…
-
- 0 replies
- 979 views
-
-
ஒரு ஆணும் பெண்ணும் நண்பர்களாகவே இருக்க முடியாதா? பாலிவுட் நடிகை நித்தி அகர்வாலுடன் நட்பு குறித்து கே.எல்.ராகுல் பாலிவுட் நடிகை நித்தி அகர்வாலுடன் இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் கொண்டுள்ள நட்பு குறித்து சமூகவலைத்தளங்கள் படங்களுடன் அலற, இது காதல்தான் என்று பலரும் தங்கள் கருத்துகளை வெளியிட்டுள்ள நிலையில் கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல், ஒரு ஆணும் பெண்ணும் நண்பர்களாகவே இருக்க முடியாதா? அது அவ்வளவு கடினமா? என்று அங்கலாய்த்துள்ளார். இது தொடர்பாக என்.டி.டிவியில் கே.எல்.ராகுல் கூறும்போது, “ஒரு ஆணும் பெண்ணும் நண்பர்களாக இருக்க முடியாதா? அது அவ்வளவு கடினமானதா? எனக்கு அவரை நீண்டகாலமாகத் தெரியும், நாங்கள் இருவரும் ஒரே நகரைச…
-
- 0 replies
- 603 views
-
-
2 ஆயிரம் ஓட்டங்களைக் கடந்து மிதாலி ராஜ் சாதனை இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை மிதாலி ராஜ் சர்வதேச இருபதுக்கு- 20 போட்டிகளில் 2 ஆயிரம் ஓட்டங்களைக் கடந்த முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார். மிதாலி ராஜ், இந்திய மகளிர் அணியின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணித் தலைவியாக செயற்பட்டு வருகின்றார். மிதாலி ராஜ், அனைத்த வகையான கிரிக்கெட் போட்டிகளுக்கும் சிறந்த மகளிர் துப்பாட்ட வீராங்கனையாக கருதப்படுகின்றார். இந்நிலையில், மிதாலி ராஜ் புதிய சாதனையொன்றை தற்போது படைத்துள்ளார். இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்ற மகளிர் ஆகியக் கிண்ண லீக் போட்டியில் மிதாலி ராஜ் 23ஓட்டங்களை பெற்றபோது, சர்வதேச டஇருபதுக்கு - 20 போட்டிகளில் 2 ஆயி…
-
- 0 replies
- 735 views
-
-
விம்பிள்டனில் புதிய சாதனை: முன்னணி வீராங்கனைகளை வீழ்த்தி காலிறுதிக்குத் தகுதி பெற்றவர்கள்! (படங்கள்) கிராண்ட்ஸ்லாம் ஓபன் எராவில் இப்படி நடைபெற்றதில்லை. இதுவே முதல்முறை என்பதால் இந்த எட்டு வீராங்கனைகளும் புதிய சாதனைகளைப் படைத்துள்ளார்கள். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இந்த வருட விம்பிள்டன் போட்டியில் மகளிர் பிரிவில் காலிறுதிக்குத் தகுதி பெற்ற எட்டு வீராங்கனைகளும் போட்டித் தரவரிசையில் டாப் 10-க்கு வெளியே உள்ளவர்கள். ஓபன் எரா காலக்கட்டத்தில் எந்தவொரு கிராண்ட்ஸ்லாமிலும் இதுபோல நடைபெற்றதில்லை. (ஓபன் எரா - 19…
-
- 0 replies
- 414 views
-