விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7834 topics in this forum
-
ஸ்டீவ் வாக் மகனுக்கு ரோல் மாடல் விராட் கோலி! இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி போல விளையாட வேண்டுமென ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் தனது மகனுக்கு அறிவுரை கூறியுள்ளார். ஆஸ்திரேலிய மண்ணில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரின் போது, விராட் கோலியின் ஆட்டம் மட்டுமே ஸ்டீவ் வாக்கை கவர்ந்துள்ளது. விராட் கோலி குறித்து ஸ்டீவ் வாக் கூறுகையில், '' ஆஸ்திரேலிய அணிக்கு எதிரானத் தொடரில் விராட் கோலியின் சரசாரி ஒவ்வொரு இன்னிங்சிலும் 86 ரன்கள். களத்தில் விராட் கோலியின் ஆவேசமான செயல்பாடு எனக்கு பிடிக்கும்.தற்போதைய கிரிக்கெட் உலகின் சிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலிதான். சில சமயங்களில் ஆவேசப் போக்கிலும் கட்டுப்பாடு அவசியம். எனக்கு தற்போது 16 வயது மகன் இருக்கிறார். விராட் கோ…
-
- 0 replies
- 313 views
-
-
ஸ்டீவ் ஸ்மித் 10,000 ரன்கள்; எல்கரிடம் அவுட்டான அசிரத்தை: ட்விட்டர்வாசிகளின் ‘கமெண்ட்’ ஸ்டீவ் ஸ்மித் எல்.பி. ஆன பந்து. - படம். | ட்விட்டர். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் தனது 10,000 சர்வதேச கிரிக்கெட் ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார். இதனைக் கொண்டாடும் ட்விட்டர்வாசிகள், டீன் எல்கர் என்ற பகுதி நேர பவுலரிடம் எல்.பி.ஆகி 2வது இன்னிங்சில் வெளியேறியது பற்றி கேலியும் கிண்டலுமடித்து வருகின்றனர். நடபெற்று வரும் டர்பன் டெஸ்ட் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் முதல் இன்னிங்ஸில் இடது கை ஸ்பின்னர் மஹராஜ் பந்தை கட் செய்ய முயல டிகாக் கிளவ்வில் பட்டு டிவில்லியர்ஸிட…
-
- 1 reply
- 244 views
-
-
ஸ்டீவ் ஸ்மித் அதிரடி வருகை: 85 ரன்கள் விளாசினார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள ஆஸி. அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தனது கிளப் அணி சார்பில் பங்கேற்ற ஆட்டத்தில் 85 ரன்களை விளாசி தனது திறமையை பறை சாற்றியுள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரின் போது, பந்தை சேதப்படுத்த முயன்றதாக எழுந்த புகாரின் பேரில் கேப்டன் ஸ்மித், டேவிட் வார்னர், வீரர் பேங்க்கிராப்ட் ஆகியோரை கிரிக்கெட் ஆஸ்திரேலியா சஸ்பெண்ட் செய்தது. ஸ்மித், வார்னருக்கு தலா ஓராண்டு தடை விதிக்கப்பட்டது.சர்வதேச கிரிக்கெட் போட்டி தவிர உள்ளூர் ஆட்டங்களில் பங்கேற்று ஆடலாம் என சிஏ அறிவித்தது. கனடா கிரிக்கெட் லீ…
-
- 0 replies
- 458 views
-
-
ஸ்டீவ் ஸ்மித் ஆடும் புதிய ஷாட்டுக்குப் பெயர் ‘ட்வீனர்’ ஸ்டிவ் ஸ்மித் மோர்னி மோர்கெலுக்கு எதிராக ஆடிய ‘ட்வீனர்’ ஷாட். படம்: ஏ.எஃப்.பி. ஆஷஸ் தொடர் லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 215 ரன்களையும் 2-வது இன்னிங்சில் 58 ரன்களையும் விளாசி இங்கிலாந்தை படுத்தி எடுத்த ஸ்டீவ் ஸ்மித் புதிய ஷாட் ஒன்றை பயன்படுத்தினார். ஆஃப் திசையில் முற்றிலும் ஒதுங்கிக் கொண்டு தனது இருகால்களுக்கும் இடையே பந்தை லெக் திசையில் அடிக்கும் கடினமான ஒரு ஷாட்டை ஸ்மித் பயன்படுத்தி வருகிறார். இந்த ஷாட் ‘ட்வீனர்’ என்று அழைக்கப்படுகிறது. அதாவது in-between என்பதை குறிக்க ட்வீனர் (tweener) என்று அழைக்கின்றனர். அதாவது இந்த ஷாட் கிரிக்கெட்டுக்குப் புதிது ஆனால் டென்னிஸ், கூடைப்பந்து ஆகியவற்றில் இந்த வ…
-
- 0 replies
- 366 views
-
-
‘பால் டாம்பரிங்’ விவகாரத்தில் கோபம்: ஸ்டீவ் ஸ்மித்தின் கிரிக்கெட் சாதனங்களை வீசி எறிந்த தந்தை ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித்தை ஆற்றுப்படுத்தும் அவரின் தந்தை பீட்டர் - படம்: ஏஎப்ஃபி பந்தை சேதப்படுத்தும் விவகாரத்தில் சிக்கி 12 மாதங்கள் தடை பெற்ற ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்தின் கிரிக்கெட் உபகரணங்களை, அவரின் தந்தை பழைய பொருட்கள் வைக்கும் அறையில் வீசி எறிந்துள்ளார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் போது, பந்தை சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், கேமரூன் பான்கிராப்ட் ஆகியோர் சிக்கினார்கள். இந்த குற்றத்துக்கு …
-
- 0 replies
- 301 views
-
-
ஸ்டீவ் ஸ்மித்தை பின்னுக்குத் தள்ளி நம்பர் 1 இடத்தைப் பிடித்தார் ஜோ ரூட் டெஸ்ட் தரவரிசையில் புதிய மகுடம் பெற்ற ஜோ ரூட். | படம்: ராய்ட்டர்ஸ். ஆஷஸ் தொடரை இங்கிலாந்து வெல்வதில் முக்கிய பங்கு வகித்த இங்கிலாந்து பேட்ஸ்மென் ஜோ ரூட் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் ஸ்டீவ் ஸ்மித்தை கீழிறக்கி நம்பர் 1 இடத்தைப் பிடித்துள்ளார். ஸ்மித் 3-ம் இடத்துக்குச் செல்ல ஜோ ரூட் முதலிடம் பிடித்தார், ஏ.பி.டிவில்லியர்ஸ் 2-ம் இடத்தில் உள்ளார். டிரெண்ட் பிரிட்ஜ் டெஸ்ட் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித்தை இங்கிலாந்து நிறுத்தி வைத்து வீழ்த்தினர், ஒரு பவுண்டரியை ஆஃப் திசையில் அடித்த பிறகு பீல்டர் ஒருவரை அதே திசையில் சுமார் 25-30 அடி வலப்புறமாக நகர்த்தியதைக் கவனியாமல் தேநீர் இடைவேளைக்கு 2 பந்துகளே இருக்கும் போது …
-
- 1 reply
- 300 views
-
-
ஸ்டெபி கிராபின் சாதனையை முறியடித்த ஜோகோவிச் Published By: DIGITAL DESK 5 01 MAR, 2023 | 12:18 PM (எம்.எம்.சில்வெஸ்டர்) சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் 378 தடவைகள் முதலாவது இடத்தை கைப்பற்றிய சேர்பிய டென்னிஸ் நட்சத்திரமான நொவாக் ஜோகோவிச், அதிக தடவைகள் முதலாவது இடத்தை பிடித்தவர் என்ற ஜேர்மனியின் ஸ்டெபி கிராபின் சாதனையை முறியடித்துள்ளார். சர்வதேச டென்னிஸ் சங்கம் வீர, வீராங்கனைகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை கடந்த 28 ஆம் திகதியன்று வெளியிட்டது. இதில் சேர்பியாவின் நொவாக் ஜோகோவிக் 3980 புள்ளிகளுடன் முதலாவது இடத்தைப் பிடித்து தொடர்ந்தும் முதல் இடத்தை தக்க வைத்துள்ளார். இதன்படி, 378 தடவைகள் சர்வத…
-
- 4 replies
- 663 views
- 1 follower
-
-
ஸ்டெம்பின் மீது தவறி விழுந்த சங்கக்காரா: மைதானத்தில் ஏற்பட்ட பதற்றம் (வீடியோ இணைப்பு) றொயல் லண்டன் ஒருநாள் கிண்ண 2வது அரையிறுதி போட்டியில் சர்ரே அணியின் சங்கக்காரா ஸ்டெம்பின் மீது தவற விழுந்தது சற்று பதற்றத்தை ஏற்படுத்தியது.இங்கிலாந்தில் நடக்கும் றொயல் லண்டன் ஒருநாள் கிண்ணத் தொடரின் 2வது அரையிறுதி போட்டியில் சர்ரே- நாட்டிங்காம்ஷைர் அணிகள் மோதியது. இதில் முதலில் சர்ரே அணி துடுப்பெடுத்தாடியது. இதில் ஓட்டங்கள் எடுக்கும் போது குமார் சங்கக்காரா மறுமுனையில் இருந்த ஸ்டெம்ப் மீது தவறி விழுந்தார். ஆனால் அதிர்ஷ்டவசமாக அவருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. பின்னர் சிரித்தபடியே எழுந்து தொடர்ந்து விளையாடிய சங்கக்காரா, அந்தப் போட்டியில் 166 ஓட்டங்கள் குவித்தார். இதனால் அவரது அணி 4 ஓட்டங…
-
- 7 replies
- 1.1k views
- 1 follower
-
-
ஸ்டெம்பிற்கு பின்னால் நின்று பேட்டிங் செய்த சமாரா சில்வா - வைரலாகும் வீடியோ இலங்கை வீரர் சமாரா சில்வா புதிய பாணியில் பந்தை எதிர்கொள்ள முயன்று அவுட் ஆன வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கொழும்பு: இலங்கையில் நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட்டில் எம்.ஏ.எஸ். யுனிசலா மற்றும் டீஜே லங்கா ஆகிய இரு அணிகள் மோதின. அப்போது பேட்டிங் செய்த சமாரா சில்வா புதிய பாணியில் பந்தை அடிக்க முயன்றார். வேகமாக வந்த பந்தை ஸ்டம்பிற்கு வெளியே சென்று அடிக்க வெண்டும். அதே போல் சில்வாவும் பந்தை அடிப்பதற்காக வெளியே சென்றார். பந்து வீசப்பட்டது. வேகமாக வந்த பந்தை சில்வா முன்ன…
-
- 0 replies
- 640 views
-
-
ஸ்டெம்பை தெறிக்கவிட்ட முகமது அப்பாஸ் - திகைத்துப்போன பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நேற்றுமுன்தினம் தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியின் மசூத், பாபர் அசாம் மற்றும் சதாப்கான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இறுதியில் பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 326 ரன்கள் எடுத்தது. சிறப்பாக ஆடிய மசூத் அதிகபட்சமாக 156 ரன்கள் குவித்தார். இதையடுத்து, இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான ரோய் பொர்ன்ஸ் மற்றும் டொமினிக் சிப்லி களமிறங்கினர். ரோய் 4 ரன்னிலும், சிப்லி 8 ரன்னிலும் ஷாகின் அப்ரிடி மற்றும் முகமத…
-
- 0 replies
- 542 views
-
-
ஸ்டெயின் டெஸ்ட் கிரிக்கெட்டில் 145 கி.மீ. வேகத்தில் பந்து வீசுவது கடினம்- டு பிளிசிஸ் ஸ்டெயின் காயத்தில் இருந்து மீண்டு வந்து டெஸ்ட் போட்டியில் இடம்பிடித்தால், 150 கி.மீ. தூரத்தில் பந்து வீசுவது கடினம் என டு பிளிசிஸ் கூறியுள்ளார். தென்ஆப்பிரிக்காவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின். சர்வதேச அளவில் அதிவேக பந்து வீச்சாளராக திகழ்ந்து வந்த ஸ்டெயின், ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரின்போது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. அதற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதனால் கடந்த 6 மாதங்களுக்கு மேல் ஓய்வில் இருந்து வருகிறார். சமீபத்தில் இங்கிலாந்தில் நடைபெற்ற தொட…
-
- 0 replies
- 414 views
-
-
ஸ்டெயின், றபாடா துல்லியமான பந்துவீச்சு – தொடரை இழந்தது அவுஸ்ரேலியா! தென்னாபிரிக்க அணியின் டேல் ஸ்டெயின் மற்றும் றபாடாவின் துல்லியமான பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அவுஸ்ரேலிய அணி தோல்வியை தழுவியுள்ளது. அதன்படி அவுஸ்ரேலிய அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியை தென்னாபிரிக்கா வென்றுள்ளது. ஓவல், ஹோபர்ட் மைதானத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்ரேலிய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய தென்னாபிரிக்க அணியின் ஆரம்ப விக்கெட்கள் சொற்ப ஓட்டத்துடன் பறிபோனது. இருப்பினும் 15.3 ஆவது ஓவரில் இருந்து இணைந்த அணித்தலைவர் டு பிளசிஸ் மற்றும் டேவிட் மில்லர் ஆகியோர் அ…
-
- 0 replies
- 390 views
-
-
ஸ்டோக்ஸ் பவுன்சரில் கீழே விழுந்த முஷ்பிகுர்; தமிம் சதத்திற்கு பிறகு சரிந்த வங்கதேசம் ஸ்டோக்ஸ் பவுன்சரில் தலையில் வாங்கி கீழே விழுந்த முஷ்பிகுர் ரஹிம் எழுந்து நிற்க முயல்கிறார். | படம்: ஏ.எஃப்.பி. 2-வது டெஸ்டில் இங்கிலாந்துக்கு எதிராக சதம் எடுத்த தமிம் இக்பால். | படம்: ஏ.பி. டாக்காவில் இன்று தொடங்கிய இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் முதல் இன்னிங்சில் 220 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆட்ட முடிவில் இங்கிலாந்து குக் (14), டக்கெட் (7), பாலன்ஸ் (…
-
- 2 replies
- 323 views
-
-
லண்டன் கடந்த ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் வீரர்கள் ஸ்பாட் பிக்சிங் ஈடுப்பட்ட வழக்கில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் சல்மான் பட்க்கு 30 மாதங்கள் சிறை தண்டனை சூதாட்டக்காரர் மசார் மஜீத்க்கு 32 மாதங்கள் சிறை தண்டனை மற்ற இரண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் முகமது ஆசிப்க்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை மற்றும் முகமது அமீர்க்கு ஆறு மாதங்களில் சிறை தண்டனை விதித்து லண்டன் நீதிமன்றம் தீர்பளித்துள்ளது . malaimalare
-
- 3 replies
- 1.1k views
-
-
ஸ்பாட்பிக்சிங் சூதாட்டத்தில் சிக்கிய 5 பாகிஸ்தான் வீரர்கள் நாட்டை விட்டு செல்ல தடை பாகிஸ்தான் சூப்பர் ‘லீக்‘ போட்டியின்போது ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் சிக்கிய 5 வீரர்கள் நாட்டை விட்டு செல்ல தடை விதித்து பாகிஸ்தான் உள்துறை மந்திரி நிசார் அலிகான் உத்தரவிட்டுள்ளார். லாகூர்: பாகிஸ்தான் சூப்பர் ‘லீக்‘ (பி.எஸ்.எல்.) கிரிக்கெட் போட்டியில் ‘ஸ்பாட் பிக்சிங்’ சூதாட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சூதாட்டத்தில் ஈடுபட்ட அந்நாட்டைச் சேர்ந்த ஷர்ஜில்கான், காலித் லத்தீப், முகமது இர்பான், நாசிர் ஜாம்ஷெட்…
-
- 0 replies
- 231 views
-
-
ஸ்பானிய கால்பந்து லீகில் 300 கோல்கள்: மெஸ்ஸி சாதனை லயோனல் மெஸ்ஸி. | படம்: கெட்டி இமேஜஸ். ஸ்பானிய கால்பந்து லீகில் முதன் முதலாக 300 கோல்கள் அடித்த சாதனையை அர்ஜெண்டீன நட்சத்திரம் லயோனல் மெஸ்ஸி நிகழ்த்தியுள்ளார். இதனை தனது 334-வது லா லீகா போட்டியில் நிகழ்த்தினார் மெஸ்ஸி. ஸ்போர்ட்டிங் கிஜோன் அணிக்கு எதிராக பார்சிலோனா அணி பெற்ற 3-1 என்ற கோல் கணக்கிலான வெற்றியில் லயோனல் மெஸ்ஸி இரண்டு கோல்களை திணித்தார். இந்த வெற்றி மூலம் பார்சிலோனா அணி தற்போது 24 போட்டிகளில் 60 புள்ளிகள் பெற்று முதலிடம் வகிக்கிறது. 2-வது இடத்தில் அத்லெடிகோ மேட்ரிட் அணியும் 3-வது இடத்தில் ரியால் மேட்ரிட் அணியும் உள்ளன. மெஸ்ஸியின் 300-வது கோல்: ஆட்டத்தின் …
-
- 0 replies
- 352 views
-
-
ஸ்பானிய மாடு பிடி விளையாட்டில் இந்த நூற்றாண்டின் முதல் பலி ஸ்பெயின் பிரசித்தி பெற்ற மாடு பிடி நிகழ்வில் , மாடு பிடி வீரர் ஒருவர் மாடால் முட்டிக்கொல்லப்பட்டார். இந்த நூற்றாண்டில் ஒரு மாடுபிடி விளையாட்டு வீரர் மாடால் முட்டிக்கொல்லப்படும் முதல் சம்பவம் இதுவாகும். கொல்லப்பட்டவர் 29 வயதான விக்டர் பேரியோ என்ற ஒரு தொழில்முறை மாடுபிடி விளையாட்டு வீரர். ஸ்பெயினின் கிழக்குப் பகுதி நகரான டெருவெல் என்ற இடத்தில் நடந்த இந்த நிகழ்வு நேரடியாக தொலைக்காட்சிகளால் ஒளிபரப்பப்பட்டுக்கொண்டிருந்தது. மாடு பேரியோவை குத்தித் தூக்கி வீசி,பின்னர் அவரது வலப்புற நெஞ்சில் மூர்க்கமாகக் குத்தித் தூக்கி எறிந்ததை தொலைக்காட்சிக் காட்சிகள் காட்டின. சனிக்கிழமை இந்த சம்பவம…
-
- 1 reply
- 530 views
-
-
ஸ்பானிஷ் லா லிகா: புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்தது ரியல் மாட்ரிட் இரண்டு கோல்கள் அடித்து ரியல் மாட்ரிட் அணியின் வெற்றிக்கு வழிவகுத்த மகிழ்ச்சியில் ஆர்ப்பரிக்கும் கரிம் பென்ஸிமா. படம்: கெட்டி இமேஜஸ் மாட்ரிட் முன்னணி 20 கால்பந்து அணிகள் பங்கேற்கும் ஸ்பானிஷ் லா லிகா கால்பந்துப் போட்டியில் அத்லெடிக் பில்பாவோ அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ரியல் மாட்ரிட் அணி, 13 புள்ளிகள் பெற்று புள்ளிகள் பட்டியில் முதலிடம் பிடித்துள்ளது. அதேசமயம், பார்சிலேனாவை, செல்டா 4-1 என்ற கோல்கணக்கில் அபாரமாக வீழ்த்தி அதிர்ச்சி யளித்தது. ரியல் மாட்ரிட் அணிக்கும் அத்லெடிக் பில்பாவோ அணிக்கும் இடையே நடந்த போட்டியில், 19-வது நிமிடத்தில் பிரான்ஸின் கரிம் பென்ஸிமா ரியல்மாட்ரிட் அணிக…
-
- 1 reply
- 349 views
-
-
ஸ்பானிஷ் லீக்கிலிருந்து வெளியேற பார்சிலோனா முடிவு! ஸ்பெயினில், தனி நாடு கேட்டு பல ஆண்டுகளாக கட்டலோனியா மாகாணம் போராடிவந்தது. சுதந்திர நாடாகச் செயல்படுவதுகுறித்து கட்டலோனியா மாகாணத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. கட்டலோனியா தனி நாடாகச் செயல்பட மக்கள் அமோக ஆதரவு அளித்தனர். கட்டலோனியா பிரிந்துசெல்லும் பட்சத்தில், பார்சிலோனா கால்பந்து அணிக்கு ஸ்பானிஷ் லீக் தொடரில் விளையாட அனுமதி கிடையாது என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்பானிஷ் லீக்கில் சனிக்கிழமை நடந்த பார்சிலோனா- லாஸ் பால்மஸ் அணிகள் மோதிய ஆட்டத்தைக் காண ரசிகர்கள் அனுமதிக்கப்படவில்லை. வெற்று மைதானத்தில் போட்டி நடத்தப்பட்டது. இந்நிலையில் , ''கட்டலோனியா சுதந்திர நாடாக மாறும்பட்சத்தில…
-
- 0 replies
- 445 views
-
-
ஸ்பானீஸ் சூப்பர் கோப்பை: பரபரப்பான ஆட்டத்தில் பார்சிலோனா அணியை வீழ்த்தியது ரியல் மாட்ரிட் கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஸ்பானீஸ் சூப்பர் கோப்பை தொடரின் முக்கிய போட்டியில் பார்சிலோனா அணியை 1-3 என்ற கணக்கில் ரியல் மாட்ரிட் அணி வெற்றி பெற்றது. மாட்ரிட்: கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஸ்பானீஸ் சூப்பர் கோப்பை தொடரின் முக்கிய போட்டியில் பார்சிலோனா அணியை 1-3 என்ற கணக்கில் ரியல் மாட்ரிட் அணி வெற்றி பெற்றது. ஸ்பானிஸ் சூப்பர் கோப்பை தொடர் கால்பந்து போட்டிகள் ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வருகின்றன. இதில், ஸ்பெயினின் முக்கிய க…
-
- 3 replies
- 428 views
-
-
ஸ்பின் பவுலிங்குக்கு எதிராக தடவும் இந்திய பேட்ஸ்மென்களுக்கு ராகுல் திராவிட் கூறுவது என்ன? ராகுல் திராவிட். | கோப்புப் படம். நடப்பு இந்திய அணி ஸ்பின் பந்துவீச்சுக்கு எதிராக தடுமாறுவது குறித்து இந்தியா ஏ பயிற்சியாளர் ராகுல் திராவிட் தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு பிரத்யேகமாக அளித்த பேட்டி. இந்திய பேட்டிங் கடந்த சில ஆண்டுகளாக ஸ்பின் பந்துவீச்சுக்கு எதிராக திணறுகிறது... ஸ்பின் பந்துவீச்சை விளையாடுவது நமது பெரிய பலம். இந்திய பிட்ச்கள் மாறிவிட்டன, சர்வதேச அணியில் இருக்கும் போது நிறைய சுழற்பந்து வீச்சை வீரர்க்ள் எதிர்கொள்வதில்லை. கால்களை நகர்த்துவதில் பிரச்சினையா? கால்களை சுறுசுறுப்பாக பயன்படுத்துவது உதவும். ஆனால் ஒவ்வொரு வீரரும் ஸ்பின் பந்து வீச்சை ஒவ்வொரு விதமாக விளையாட…
-
- 1 reply
- 344 views
-
-
ஸ்பெயினில் மெஸ்சி... மற்ற நாடுகளில் யார் டாப்? 2016-17 சீஸன் டாப் ஸ்ட்ரைக்கர்கள்! கால்பந்து உலகின் 2016 - 17 ஆண்டுக்கான சீஸன் முடிந்துவிட்டது. இந்த சீஸனில் பல சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன. பல இளம் திறமையாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அனுபவ வீரர்களும் இளம் வீரர்களும் கலந்துகட்டி கலக்கிய 2016 - 17 சீஸனின் டாப் - 5 கோல் ஸ்கோரர்கள் பற்றிய விவரம் இங்கே... லியோனல் மெஸ்சி – லா லிகா – ஸ்பெயின் உலகின் நம்பர் - 1 வீரரான லியோனல் மெஸ்சிதான் ஸ்பெயின் நாட்டின் இந்த வருட லா லிகா தொடரின் டாப் ஸ்கோரர். பார்சிலோனா அணியின் அடையாளமான இவர், அர்ஜென்டினா தேசிய அணியையும் தோள்களில் சுமப்பவர். பந்தை முழுக்க முழுக்க தன் கட்டுப்பாட்டிலேயே வ…
-
- 0 replies
- 414 views
-
-
ஸ்பெயின் ஏழு கால்பந்து கிளப்புகள் மில்லியன் கணக்கான டாலர்களை திரும்ப வழங்க உத்தரவு மில்லியன் கணக்கான அமெரிக்க டாலர்களை திரும்ப வழங்க ஏழு ஸ்பெயின் கால்பந்து கிளப்புகளுக்கு உத்தரவு ஸ்பெயினிலுள்ள ஏழு முன்னிலை கால்பந்து கிளப்புகள் , மில்லியன் கணக்கான அமெரிக்க டாலர் அரசின் உதவி அல்லது ஆதரவை திரும்ப செலுத்த வேண்டுமென ஆணையிடப்பட்டுள்ளது. வரி மற்றும் சொத்துக்களில் சலுகைக் கடன்கள் மற்றும் உடன்பாடுகளால் அரசிடமிருந்து உதவிகளை பெற்று பயனடைந்துள்ளதன் மூலம் அவை ஐரோப்பிய சட்டங்களை மீறியுள்ளதாக ஐரோப்பிய ஆணயைம் முடிவு செய்துள்ளது. ஸ்பெயினின் தலைநகரில் சொத்து விவகாரம் தொடர்பான ஒரு வழங்கில், உலகிலேயே மிகப் பணக்கார கிளப்பான ரியல் மாட்ரிட் 20 மில்லியன் (2 கோடி…
-
- 0 replies
- 256 views
-
-
ஸ்பெயின் கால்பந்து வீரர் டேவிட் சில்வா ஓய்வு டேவிட் சில்வா. ஸ்பெயின் கால்பந்து மூத்த வீரர்களில் ஒருவரான டேவிட் சில்வா சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஸ்பெயின் கால்பந்து அணியின் முன்னணி வீரர்களில் ஒருவராக இருந்தவர் டேவிட் சில்வா. 32 வயதான சில்வா, தற்போது மான்செஸ்டர் சிட்டி கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை ஸ்பெயின் அணிக்காக 125 போட்டிகளில் பங்கேற்று 35 கோல்கள் அடித்து சாதனை புரிந்துள்ளார். சமீபத்தில் ரஷியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ஸ்பெயின் நாக்அவுட் சுற்றோடு வெளியேற்றம் கண்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் டேவிட் சில்வாவும் ஓய்வு …
-
- 0 replies
- 267 views
-
-
ஸ்பெயின் கேப்டன் ஐகெர் கேசிலாஸ் சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு கடந்த 2010ம் ஆண்டு யூரோ 2012ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற ஸ்பெயின் அணியின் கேப்டன் ஐகெர் கேசிலாஸ் சர்வதேச கால்பந்தில் இருந்து ஒய்வு அறிவித்துள்ளார். நடப்பு யூரோ தொடரில் நாக்அவுட் சுற்றிலேயே ஸ்பெயின் அணி இத்தாலியிடம் 2 கோல்கள் வாங்கி தோல்வியடைந்தது. இந்த தொடரில் ஸ்பெயின் அணியில் கேசிலாஸ் இடம் பெற்றிருந்தாலும் கோல்கீப்பிங் பணியை டிஜியா மேற்கொண்டார். தற்போது 35 வயதான கேசிலாஸ் மாற்று ஆட்டக்காரராகவே இருந்தார். யூரோவில் இருந்து ஸ்பெயினும் வெளியேறியதை தொடர்ந்து கேசிலாஸ் சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெறும் முடிவுக்கு வந்துள்ளார். கடந்த 2000ம் ஆண்டு முதல் ஸ…
-
- 0 replies
- 396 views
-