Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. ஆசிய கிரிக்கெட் தொடர்களில் இருந்து விலக BCCI முடிவு! ஆசிய கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்படும் தொடர்களில் இருந்து விலக BCCI முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அந்தவகையில் அடுத்த மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள எமர்ஜிங் மகளிர் ஆசிய கோப்பையில் இருந்து விலகுவதாகவும் மின்னஞ்சல் மூலம் BCCI தெரிவித்துள்ளது. ஆசிய கிரிக்கெட் சங்கத் தலைவராக பாக்கிஸ்தான் அமைச்சர் மொசின் நக்வி பதவி வகிக்கும் நிலையிலேயே இந்திய கிரிக்கெட் சபை இவ் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நிலவி வரும் மோதல் போக்கு காரணமாக இந்த முடிவு எடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. கடந்த வருடம் இலங்கை மற்று…

  2. ருமேனியா சூப்பர்பெட் கிளாசிக் செஸ் தொடரில் இந்தியாவின் பிரக்ஞானந்தா வெற்றி! ருமேனியாவில் நடைபெற்ற சூப்பர்பெட் கிளாசிக் செஸ் தொடரில் இந்தியாவின் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். புகரெஸ்ட் நகரில் நடைபெற்று வந்த இத்தொடரில் இந்தியா சார்பில் குகேஷ், பிரக்ஞானந்தா உள்ளிட்ட பல முன்னணி வீரர்கள் கலந்து கொண்டனர். ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடிய பிரக்ஞானந்தாவை போல ஏனைய வீரர்களும் திறமையை வெளிப்படுத்தினர். 3 பேரும் 9 சுற்றுகள் முடிந்த பின்னர் 5.5 புள்ளிகள் பெற்றிருந்த நிலையில் , வெற்றியாளரை தேர்வு செய்ய டைபிரேக்கர் முறை கடைபிடிக்கப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற இறுதிச்சுற்றில் ஏனைய வீரர்களை வீழ்த்தி பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டத்தை வென்றார். இதேவேளை, இந்த தொடரில் குகே…

  3. விராட் கோலி எடுத்த அதிரடி முடிவு! Published By: DIGITAL DESK 2 10 MAY, 2025 | 11:24 AM டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி அறிவித்துள்ளார். இந்நிலையில், முடிவை திரும்பப் பெறுவது குறித்து பரிசீலனை செய்யுமாறு இந்திய கிரிக்கெட் சபை விராட் கோலியிடம் தெரிவித்துள்ளது. இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான விராட் கோலி, இருபதுக்கு 20 போட்டியில் ஓய்வுபெற்றுள்ள நிலையில், ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகின்றார். ஐ.பி.எல். தொடர் நிறைவடைந்த பின்னர் இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இடம்பெறவுள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. நியூசிலாந்து மற்றும் அவுஸ…

  4. Published By: VISHNU 12 MAY, 2025 | 07:17 PM 2025 ஆம் ஆண்டுக்கான வட மாகாண விளையாட்டு திணைக்களத்தால் நடத்தப்பட்ட யூடோ போட்டியில் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஆண்கள் பெண்கள் இரு அணிகளும் 1ஆம் இடத்தை தமதாக்கி சாதனை படைத்துள்ளனர். கிளிநொச்சி உள்ளக அரங்கில் வடமாகாண விளையாட்டு திணைக்களத்தால் 10.05.2025 அன்று நடத்தப்பட்ட வடக்கின் 5 மாவட்டங்களும் பங்குபற்றியதான வட மாகாண யூடோ போட்டியில் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஆண்கள் அணியும், பெண்கள் அணியும் வட மாகாணத்தில் 1ஆம் இடத்தை பெற்றுக்கொண்டனர். ஆண்கள் பிரிவில் 1ஆம்இடம் முல்லைத்தீவு மாவட்டம் 4தங்கம் 1 வெள்ளி 3வெண்கலம் 2ஆம் இடம் கிளிநெச்சி மாவட்டம் 2தங்கம் 1வெள்ளி 2வெண்கலம் 3ஆம் இடம் வவுனியா மாவட்டம். 1தங்கம்,4வெள்ளி,4வெண்கலம் 4ஆவது ம…

  5. Published By: DIGITAL DESK 2 08 MAY, 2025 | 12:16 PM (நெவில் அன்தனி) டெஸ்ட் கிரிக்கெட் அரங்கிலிருந்து ஒய்வுபெறுவதாக இந்திய டெஸ்ட் அணித் தலைவர் ரோஹித் ஷர்மா, தனது இன்டக்ராம் கணக்கில் பதவிட்டுள்ளார். இந்திய - பாகிஸ்தான் எல்லையில் புதன்கிழமை (07) இரவு பதற்றம் அதிகரித்துக்கொண்டிருக்க டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக ரோஹித் ஷர்மா அறிவித்துள்ளார். அவரது இந்தத் தீர்மானம் ஆச்சரியப்படத்தக்க ஒன்றல்ல. அவுஸ்திரேலியாவுக்கான டெஸ்ட் தொடர் விஜயத்தில் ரோஹித் ஷர்மா துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறியிருந்தார். எனினும் அந்தத் தொடர் 1 - 3 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியாவுக்கு தோல்வியில் முடிவடைந்து நான்கு மாதங்கள் கழித்தே ரோஹித் ஷர்மா இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். 'அனை…

  6. இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் மீதமுள்ள போட்டிகளை நடத்துவதற்கு இங்கிலாந்து தீர்மானம் ! இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் மீதமுள்ள போட்டிகளை நடத்துவதற்கு இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபை முன்வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றத்தை அடுத்து ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் ஒரு வார காலத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஃப்;ளே ஒஃப் போட்டிகள் உட்பட 16 போட்டிகள் இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில் குறித்த போட்டிகளை நடத்துவதில் நிச்சயமற்ற தன்மை உருவாகியுள்ள நிலையில் மீதமுள்ள போட்டிகளை நடத்துவது தொடர்பில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரிச்சட் கோல்ட், இந்திய கி…

  7. ஏப்ரல் 5, 6ம் திகதிகளில் சுற்காட், ஜேர்மனியில் நடந்த கற்டான் உலகக்கிண்ணப் போட்டியில் கோகுலன் நரேந்திரன் என்ற தமிழர் வெற்றி பெற்றுள்ளார். CATANCATAN Worldchampionship 2025 in StuttgartCongratulations to Kohulan Narendran! He is the new CATAN World Champion.

    • 0 replies
    • 312 views
  8. பஹல்காம் தாக்குதல் எதிரொலி: பாகிஸ்தானுடன் விளையாடப் போவதில்லை- பி.சி.சி.ஐ. உறுதி. பஹல்காம் தாக்குதலின் எதிரொலியாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியுடன் விளையாடப் போவதில்லை என இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை (BCCI ) அறிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இத் தாக்குதலுக்கு விளையாட்டுப் பிரபலங்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதன் எதிரொலியாக இனி வரும் காலங்களில் பாகிஸ்தானுடன் இரு தரப்பு தொடர்களில் விளையாடப் போவதில்லை என பி.சி.சி.ஐ. உறுதி அளித்துள்ளது. இது குறித்து பி.சி.சி.ஐ. துணை தலைவர் ராஜீவ் சுக்லா கருத்துத் தெரிவி…

  9. 23 APR, 2025 | 09:08 PM 'உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் என்பது கவர்ந்திழுக்கக்கூடிய விரும்பத்தகாத போலித்தனத்தை மூடி மறைக்கும் ஒன்று' என கிரிக்கெட்டின் விவிலியம் என வருணிக்கப்படும் விஸ்டன் சஞ்சிகை ஆசிரியர் லோரன்ஸ் பூத் விமர்சித்துள்ளார். அதற்கான முறைமை மாற்றப்படவேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார். வருடாந்தம் வெளியிடப்படும் விஸ்டன் சஞ்சிகை நூலின் 162ஆவது பதிப்பில், தனது பார்வையை சர்வதேச கிரிக்கெட் பேரவை மீது பூத் திருப்பியுளளார். ஐசிசி சம்பயின்ஷிப் கிண்ண கிரிக்கெட் போட்டியை முன்னின்று நடத்தும் வரவேற்பு நாடாக சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் பாகிஸ்தானுக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், ஐசிசியினால் அனுமதிக்கப்பட் பாகிஸ்தானுக்கு செல்ல இந்தியா மறுத்தது. அந்த சந்தர்ப்பத்தில…

  10. ஆசிய இளையோர் மெய்வல்லுநர் சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கைக்கு மூன்று பதக்கங்கள்! 18 வயதுக்குட்பட்ட ஆசிய இளையோர் மெய்வல்லுநர் சாம்பியன்ஷிப் போட்டியில் நேற்று (18) நடைபெற்ற தடகளப் போட்டியில் தருஷி அபிஷேகா தங்கப் பதக்கத்தைப் பெற்றுள்ளார். பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் 2 நிமிடங்கள் 14.86 வினாடிகளில் போட்டியை முடித்து அவர் தங்கப் பதக்கத்தை தனதாக்கிக் கொண்டார். இதுதவிர, நேற்று மாலை நடைபெற்ற ஆண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த ஷவிந்து அவிஷ்க வெண்கலப் பதக்கத்தை சுவீகரித்துக் கொண்டார். 1 நிமிடங்கள் 53.41 வினாடிகளில் தனது பந்தயத்தை முடித்த ஷவிந்து இந்தப் பதக்கத்தை வென்றுள்ளார். இதேவேளை, பவன் நெத்ய சம்பத் ஆண்கள் உயரம் தாண்டுதல் போட்டியில் (2.0…

  11. 15 APR, 2025 | 02:31 PM (நெவில் அன்தனி) சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தற்போது பயன்படுத்தப்பட்டுவரும் 2 பந்துகள் முறைமையை மாற்றுவது குறித்து ஐசிசி பரிசீலனை செய்துவருகிறது. அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 60 செக்கன் நிறுத்தக் கடிகாரத்தை செயல்படுத்துவது குறித்து கிரிக்கெட் சபைகள் பரிசீலனை செய்து கருத்துக்களை சமர்ப்பிக்கவுள்ளன. துடுப்புக்கும் பந்துக்கும் (bat and ball) இடையில் சமநிலையைப் பேணும் முயற்சியாக சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தற்போதுள்ள 2 பந்துகள் முறைமையை மாற்றுவது குறித்து ஐசிசி பரிசீலித்து வருகிறது. ஹராரேயில் இந்த வாரம் நடைபெற்ற ஐசிசி கூட்டங்களின்போது 35ஆவது ஓவரிலிருந்து ஒரு பந்தை மாத்திரம் பயன்படுத்தவேண்டும் என்ற சிபாரிசு முன்வைக்கப்பட்…

  12. 2025 Masters வெற்றியாளர் ரோரி மெக்கல்ரோய் Rory McIlroy இந்த வருட மாஸ்டேர்ஸ் சற்றுமுன் நடந்து முடிந்தது. இப்போட்டியில் ரோரி மெக்கல்ரொய் வெற்றியீட்டி பச்சை மேல்சட்டையைத், Green Jacket, தனதாக்கிக் கொண்டார். 35 வயதான ரோரி இதற்காக 14 வருடங்களாகப் போராடிக் கொண்டிருந்தார். 2011 ஆம் வருடப் போட்டி அவரின் வாழ்க்கையில் ஏறபடுத்திய வலியிலிருந்து அவரால் மீளவே முடியவில்லை. நான்கு புள்ளிகள் முன்னணியில் இருந்து. கடைசி நாளில் காலடி எடுத்து வைத்தவர், கடைசியில் மிக மோசமாகத் தோற்றார். Meltdown என்று சொல்வார்கள். அவனால் ஒரு பந்தையும் fairwayல் அடிக்கவே முடியவில்லை. திரும்பத் திரும்ப மரங்களுக்கும், வெளியாலும் அடித்து, 8 புள்ளிகளால் பின்தங்கினார். மூன்றாம் நாள் முடிவில் முதலாவதாக இருந்தவர் கடைசி…

  13. கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசனின் சொத்துக்கள் பறிமுதல்! பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னணி சகலதுறை வீரரான ஷகிப் அல் ஹசனின் சொத்துகளைப் பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.பி.யான ஷகிப் அல் ஹசன், கடந்த ஆண்டு இடம்பெற்ற அரசுக்கு எதிரான மாணவர்களின் கிளர்ச்சியின் போது, கனடாவில் தஞ்சம் அடைந்தார். இதற்கிடையே, கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் 15ம் திகதி ஐ.ஐ.எப்.சி., வங்கியின் சார்பாக ஷகிப் அல் ஹசன் உட்பட நால்வர் மீது 3 கோடி ரூபாய் செக் மோசடி வழக்கு நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. இவ் வழக்கில் ஆஜராகாததினால் ஷகிப் அல் ஹசனுக்கு எதிராக நீதிமன்றம் பிடியாணைப் பிறப்பித்திருந்தது. இந்நிலையில் தற்போது அவரது சொ…

  14. Published By: DIGITAL DESK 3 07 APR, 2025 | 01:01 PM வட கொரியாவில் 6 ஆண்டுகளுக்கு பின்னர் முதல் முறையாக பியோங்யாங் சர்வதேச மரத்தன் ஓட்டப் போட்டி நடைபெற்றுள்ளது. இந்த மரத்தன் ஓட்டப்போட்டியில் சுமார் 200 வெளிநாட்டு வீரர்களை வட கொரியாவின் தலைநகர் வரவேற்றுள்ளது. 1981 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த மரத்தன் ஓட்டப் போட்டி வட கொரியாவின் முதல் ஜனாதிபதி கிம் இல் சுங்கின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதி நடத்தப்படுகிறது. இறுதியாக 2019 ஆம் ஆண்டு மரத்தன் ஓட்டப் போட்டி நடைபெற்றது. அதில் 950 வெளிநாட்டவர்கள் பங்கேற்றுள்ளனர். கொவிட்-19 தொற்று பரவியமையை அடுத்து வட கொரியா மரத்தன் ஓட்டப் போட்டியை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தது. இந்நிலையில், வடகொர…

  15. சமூக சேவைகள் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட 2025 ஆண்டிற்கான அங்கவீனமுற்ற நபர்களுக்கான (மாற்றுத் திறனாளிகளுக்கான) தேசிய மட்ட விளையாட்டுப் போட்டி இன்றையதினம் 03.04.2025 மகிந்த ராஜபக்ஷ விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. தேசிய மட்டத்தில் 25 மாவட்டத்திலிருந்தும் இதில் போட்டியாளர்கள் பங்குபற்றியிருந்தனர். 06 தங்கப் பதக்கத்தையும் , 10 வெள்ளிப் பதக்கத்தையும் பெற்று கிளிநொச்சி மாவட்டம் தேசிய மட்டத்தில் முதலாமிடத்தினைப் பெற்றுக் கொண்டது. குறித்த விளையாட்டுப் போட்டியில் கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து 21 மாற்றுத்திறனாளிகள் பங்குபற்றியிருந்தனர். குறித்த நிகழ்வில் கிராமிய அபிவிருத்தி சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர், அமைச்சின் செயலாளர் மற்றும் சமூக சேவைகள் திணைக்களத…

  16. 2025 ஆம் ஆண்டுக்கான இன்டோர் கிரிக்கெட் உலகக் கிண்ணம் இலங்கையில்! 12 ஆவது உலகக் கிண்ணப் போட்டியான 2025 ஆம் ஆண்டுக்கான இன்டோர் கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை நடத்துவதாக சிலோன் இன்டோர் கிரிக்கெட் சங்கம் (CICA) அறிவித்துள்ளது. 5 மாதங்களுக்கு முன்பு CICA மிகவும் வெற்றிகரமான உலக மாஸ்டர்ஸ் தொடரை நடத்திய பின்னர் சர்வதேச இன்டோர் கிரிக்கெட் கூட்டமைப்பு (WICF) போட்டியை நடத்தும் உரிமையை வழங்கியது. இந்த போட்டிகள் பின்வரும் ஆண்கள் ஓபன், பெண்கள் ஓபன், 22 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் 22 வயதுக்கு உட்பட்ட பெண்கள் ஆகிய பிரிவுகளின் கீழ் நடத்தப்படும். அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, இந்தியா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சிங்கப்பூர், அமெரிக்கா மற்றும் நடத்தும் இலங்கை ஆகிய…

  17. Published By: VISHNU 01 APR, 2025 | 07:44 PM (நெவில் அன்தனி) கொட்டாஞ்சேனை புனித ஆசீர்வாதப்பர் கல்லூரிக்கும் பொறளை வெஸ்லி கல்லூரிக்கும் இடையில் பி.சரவணமுத்து ஓவல் சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்ற 5ஆவது வணக்கத்துக்குரிய ஜேம்ஸ் காட்மன் கிண்ண இரண்டு நாள் கிரிக்கெட் போட்டி எவ்வித பரபரப்பையும் ஏற்படுத்தாமல் வெற்றி தோல்வியின்றி இன்று (01) முடிவடைந்தது. இதன் காரணமாக வணக்கத்துக்குரிய ஜேம்ஸ் காட்மன் கிண்ணம் இரண்டு அணிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது. எனினும் முதல் இன்னிங்ஸில் முன்னிலையில் இருந்த புனித ஆசீர்வாதப்பர் கல்லூரிக்கு மேலும் ஒரு வருடத்திற்கு கிண்ணம் சொந்தமானது. இரண்டு அணிகளும் 3 இன்னிங்ஸ்களிலும் 200க்கும் மேற்பட்ட ஓட்டங்களைக் குவித்ததுடன், வெஸ்லி கல்லூரி சார்பாக நால்வர…

  18. இலங்கை தேசிய எறிபந்து அணிக்கு யாழ் தெல்லிப்பளை யூனியன் கல்லுாரி வீராங்கனைகள் தெரிவு! யாழ் தெல்லிப்பளை யூனியன் கல்லுாரி வீராங்கனைகள் இலங்கை தேசிய எறிபந்து அணிக்கு தெரிவாகியுள்ளனர் இந்த பெருமைமிகு சாதனைக்காக அவர்களுக்கு கல்லுாரி சார்பாகவும் பழைய மாணவர்கள் சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றனர். (ப) இலங்கை தேசிய எறிபந்து அணிக்கு யாழ் தெல்லிப்பளை யூனியன் கல்லுாரி வீராங்கனைகள் தெரிவு!

  19. 19 FEB, 2025 | 05:56 PM (நெவில் அன்தனி) வல்லுநர்கள் (Masters) என விபரிக்கப்படும் புகழ்பூத்த சர்வதேச முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பங்குபற்றும் 6 அணிகளுக்கு இடையிலான சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் நவி மும்பை, வடோதரா, ராய்ப்பூர் ஆகிய மைதானங்களில் நடைபெறவுள்ளது. இப் போட்டியில் இலங்கை, இந்தியா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், தென் ஆபிரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த மாஸ்டர்ஸ் அணிகள் பங்குபற்றுகின்றன. இலங்கை மாஸ்டர்ஸ் அணிக்கு குமார் சங்கக்கார, இந்திய மாஸ்டர்ஸ் அணிக்கு சச்சின் டெண்டுல்கர், அவுஸ்திரேலிய மாஸ்டர்ஸ் அணிக்கு ஷேன் வொட்சன், இங்கிலாந்து மாஸ்டர்ஸ் அணிக்கு ஒய்ன் மோர்கன், மேற்கிந்தியத் தீவுகள் மாஸ்டர்ஸ் அணிக்கு ப்றயன் லாரா, தென் ஆபிர…

  20. கடைசி ஓவர் வரை திக் திக்! மும்பை இந்தியன்ஸ் 2-வது முறையாக சாம்பியன் - மதுரை வீராங்கனை கமலினி சாதித்தது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் 2025 சீசனுக்கான மகளிர் ஐபிஎல் டி20 போட்டித் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. மும்பை அணி வெல்லும் 2வது சாம்பியன் பட்டம் இதுவாகும். ஏற்கெனவே 2023ம் ஆண்டில் அறிமுக ஐபிஎல் தொடரில் மும்பை அணி பட்டம் வென்றுள்ளது. மும்பையில் பிராபோர்ன் மைதானத்தில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 8 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது மும்பை அணி. முதலில் பேட் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் சேர்த…

  21. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், மேத்யூ ஹென்றி பதவி, பிபிசி விளையாட்டுப் பிரிவு செய்தியாளர் 10 மார்ச் 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடங்கிய இடத்திலிருந்து 1,000 கி.மீ தள்ளியும், முடிந்திருக்க வேண்டிய இடத்திலிருந்து 2,000 கி.மீ அப்பாலும் நிறைவடைந்துள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப்போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. கடந்த ஜூன் மாதம் டி20 உலகக் கோப்பையை வென்ற பின்னர் இந்தியா பெற்றுள்ள இந்த வெற்றி உலகின் முன்னணி 'வெள்ளை பந்து' அணியாக அதன் இடத்தை உறுதிப்படுத்தியுள்ளது. 16 மாதங்களுக்கு முன்பு ஆமதாபாத்தில் 50 ஓவர் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றதால் இந்திய அணி அனுபவித்த வேதன…

  22. பாகிஸ்தானுக்கு இந்தியா செல்லாது; ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் அட்டவணை திருத்தப்படலாம்? (நெவில் அன்தனி) ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியின்போது பாகிஸ்தான் செல்லப்போவதில்லை என இந்தியா உறுதிபடக் கூறியுள்ளது. இது குறித்து சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை அறிவித்துள்ளது. இதன் காரணமாக ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட்டுக்கான அட்டவணைகளில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தானில் 2025 பெப்ரவரி 19ஆம் திகதி ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் ஆரம்பமாகவுள்ள நிலையில், இந்தியாவின் இந்தத் தீர்மானம் போட்டியின்போது சிக்கல்களை தோற்றுவிக்கும் என கருதப்படுகிறது. …

  23. Published By: Vishnu 05 Mar, 2025 | 10:56 PM (நெவில் அன்தனி) யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் இடையிலான மிகவும் விறுவிறுப்பான 118ஆவது வடக்கின் சமர் மாபெரும் வருடாந்த 3 நாள் கிரிக்கெட் போட்டி யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் நாளை வியாழக்கிழமை (06) ஆரம்பமாகவுள்ளது. இந்தப் போட்டி கடந்த வாரம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் திடீரென சீரற்ற காலநிலை நிலவியதால் பிற்போடப்பட்டிருந்தது. ஐக்கிய அரபு இராச்சியத்தில் கடந்த வருட இறுதியில் நடைபெற்ற 19 வயதுக்குபட்ட ஆசிய கிண்ண இளையோர் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய இருவர் இந்த இரண்டு கல்லூரி அணிகளிலும் இடம்பெறுகின்றமை விசேட அம்சமாகும். சென். ஜோன்ஸ் அணியில் இடம்பெறும் வலதுகை வேகப்பந்துவீச்சாளர் குகதாஸ் மாத…

  24. Published By: Vishnu 06 Mar, 2025 | 10:05 AM (நெவில் அன்தனி) யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்டு வரும் பாடசாலைகளுக்கு இடையிலான மாபெரும் கிரிக்கெட் போட்டிகளில் இரண்டாவது பழைமைவாய்ந்த சென். பெட்றிக்ஸ் அணிக்கும் யாழ்ப்பாணக் கல்லூரிக்கும் இடையிலான 108ஆவது பொன் அணிகளின் போர் சென். பெட்றிக்ஸ் மைதானத்தில் வியாழக்கிழமை (06) ஆரம்பமாகிறது. இந்தப் போட்டி கடந்த வாரம் நடைபெறுவதாக இருந்தபோதிலும் சீரற்ற காலநிலை காரணமாக ஒரு வாரத்தால் பிற்போடப்பட்டிருந்தது. சென். பெட்றிக்ஸ் கல்லூரி இந்த வருடம் 175 வருட பூர்த்தியைக் கொண்டாடுவதை முன்னிட்டு முதல் தடவையாக பொன் அணிகளின் போர் மூன்று நாள் போட்டியாக நடத்தப்படவுள்ளது. இதன் காரணமாக இந்த வருடப் போட்டியில் முடிவு கிட்டும் என நம்பப்படுகிறது. பொன் அணிகளின் …

  25. 05 Mar, 2025 | 01:16 PM (நெவில் அன்தனி) அவுஸ்திரேலியாவின் அற்புதமான கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான ஸ்டீவன் ஸ்மித் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். பாகிஸ்தானிலும் ஐக்கிய அரபு இராச்சியத்திலும் நடைபெற்றுவரும் 9ஆவது ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியிலிருந்து அவுஸ்திரேலியா வெளியேறியதை அடுத்து, சர்வதேச 50 ஓவர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக ஸ்டீவ் என எல்லோராலும் அன்பாக அழைக்கப்படும் ஸ்டீவன் ஸ்மித் அறிவித்தார். இந்தியாவுக்கு எதிராக துபாய் சர்வதேச விளையாட்டரங்கில் நேற்று செவ்வாய்க்கிழமை (04) நடைபெற்ற சம்பியன்ஸ் கிண்ண அரை இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியா தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து ஸ்டீவன் ஸ்மித் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். 'இத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.