Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. ஆட்ட நிர்ணய சதி ; இலங்கை அணியின் முன்னாள் தலைவரிடம் விசாரணை இலங்கை அணியின் முன்னாள் தலைவர் ஒருவர் ஆட்ட நிர்ணய சதி முயற்சிகள் தொடர்பான குற்றச்சாட்டுக்குள்ளாகி விசாரணைகளை எதிர்கொண்டுள்ளார். ஆட்ட நிர்ணய சதி தொடர்பில் அவரிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ள ஐ.சி.சி.யின் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அவரின் கையடக்கத்தொலைபேசிகளை கைப்பற்றியுள்ளனர் இதேவேளை இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் ஊழல் தடுப்பு பிரிவினர் ஆட்ட நிர்ணய சதி முயற்சியில் ஈடுபட்டனர் என்ற சந்தேகத்தில் இரு இந்தியர்களை கைதுசெய்துள்ளனர். காலி, தம்புள்ள அணிகளிற்கு இடையில் கண்டியில் இடம்பெற்ற இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் இருபதிற்கு 20 போட்டியின் போது சந்தேகத்த…

  2. ஆட்ட நிர்ணய சதியில் சிக்கியது இலங்கை கிரிக்கெட் காலி மைதானத்தை இலங்கை அணிக்கு சாதகமானதாக மாற்றுவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் குறித்த பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை தொடர்ந்து இலங்கைக்கான இங்கிலாந்து அணியின் சுற்றுப்பயணம் பாதிக்கப்படலாம் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன. அல்ஜசீரா தொலைக்காட்சி நாளை வெளியிடவுள்ள விவரணச்சித்திரத்தில் இந்த விடயங்கள் இடம்பெற்றுள்ளன. புலனாய்வு செய்தியாளர் ஒருவர் ஆட்டநிர்ணய சதியில் ஆர்வமுள்ள வர்த்தகர் போன்று நடித்து காலி சர்வசே மைதானத்தின் அதிகாரிகளுடன் உரையாடியுள்ளார். முன்னாள் வீரர் ஒருவரும் தற்போது விளையாடும் வீரர் ஒருவரும் அந்த பத்திரிகையாளருடன் இது குறித்து பேசியுள்ளனர். …

  3. ஆட்டத்தின் ஒவ்வொரு துறையிலும் தோற்கடிக்கப்பட்டோம்: ஸ்மித் கடும் ஏமாற்றம் லங்கைக்கு எதிராக முதன் முதலாக ஒயிட்வாஷ் வாங்கிய கேப்டன் என்ற எதிர்மறைச் சாதனைக்குரியவரான ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித், தோல்வி குறித்து கடுமையாக ஏமாற்றமடைந்ததாக தெரிவித்தார். “எப்படி இவ்வாறு நிகழ்ந்தது என்பதை புரிந்து கொள்ள உண்மையில் கடினமாக உள்ளது. மீண்டும் ஒரு கடினமான தொடரை எதிர்கொண்டோம், துணைக்கண்டத்தில் தொடர்ச்சியான 3 ஒயிட்வாஷ் தோல்விகள்! நாங்கள் தொட்டது எதுவும் துலங்கவில்லை. பேட்ஸ்மென் சூழலுக்கேற்ப தகவமைத்துக் கொள்ளவில்லை. ஸ்பின் பவுலர்களின் நிலையும் அதுதான். வேகப்பந்து வீச்சாளர்களை நான் குறை கூற மாட்டேன். குறிப்பாக ஸ்டார்க் உண்மையில் தன்னை அர்ப்பணித்து வீசினார். பேட்டிங்கு, ஸ்பின் …

  4. ஆட்டத்தை ஆரம்பித்தார் ஹத்­து­ரு இலங்கைக் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்­சி­யா­ள­ராக பொறுப்­பேற்­றுள்ள இலங்கை அணியின் முன்னாள் வீரரும், பங்­க­ளாதேஷ் அணியின் முன்னாள் பயிற்­சி­யாள­ரு­மான சந்­திக்க ஹத்­து­ரு­சிங்க, நேற்று தனது பயிற்­சி­களை ஆரம்­பித்தார். கொழும்பு ஆர்.பிரே­ம­தாச மைதா­னத்தில் மாலை 3.00 மணிக்கு ஆரம்­ப­மான சந்­திக்­க­வு­ட­னான பயிற்­சியில் தேசிய அணி வீரர்கள் அனை­வரும் கலந்­து­கொண்­டனர். எதிர்­வரும் ஜன­வரி மாதம் இலங்கை அணி பங்­க­ளாதேஷ் செல்­ல­வுள்ள நிலையில் பயிற்­சிகள் தீவி­ர­மாக நடை­பெறும் என்றும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. அதே­வேளை இலங்கை அணியின் தலை­மையும் மாறலாமாம். இலங்கை அணித் தலைவராக மீண்டும் மெத்தியூஸ் அல்லது…

  5. ஆட்டநாயகனாக தோனி: ‘வாட்டர் பாயாக’ மாறி சகவீரர்களுக்கு தண்ணீர், கிட்களை சுமந்து நெகிழ்ச்சி அயர்லாந்துக்கு எதிரான 2-வது டி20 போட்டியின் போது, வாட்டர் பாயாக வந்த தோனி, சுரேஷ் ரெய்னாவுக்கு தண்ணீர், குளிர்பானம் கொடுத்தார். அயர்லாந்துக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் ஓய்வில் இருந்த தோனி வாட்டர் பாயாக மாறி, சகவீரர்களுக்கு குளிர்பானம், தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தும், அவர்களின் கிட் பேக்கை சுமந்து சென்று ரசிகர்கள் முன் நாயகனாக வலம் வந்தார். மூத்த வீரர் என்ற எந்த விதமான கவுரமும் பார்க்காமல், இந்தப் பணியை தோனி இறங்கிச் செய்தது சமூக வலைத்தளங்களில் வெகுவாகப் பாராட்டப்படுகிறது. இங்கிலாந்து சென்ற இந்திய அ…

  6. ஆட்டநாயகன் தோனி, அஷ்வின், குல்தீப் யாதவ் சுழலில் சுருண்டது மேற்கிந்தியத் தீவுகள்! இன்று, மேற்கிந்தியத் தீவுகளுடன் நடந்த 3-வது ஒருநாள் போட்டியில், இந்திய அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் பாகிஸ்தானிடம் கோப்பையை நழுவவிட்ட இந்திய அணி, தற்போது மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளது. 5 ஒருநாள் மற்றும் 1 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா விளையாடுகிறது. 2 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. முதல் போட்டி மழையால் கைவிடப்பட்டது. இதனிடையே, இன்று ஆண்டிகுவாவில் 3-வது ஒருநாள் போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற மேற்கிந்திய…

  7. ஆட்டநிர்ணய மோசடிகளைத் தடுக்க புதிய நடவடிக்கை; சந்­தே­கத்­திற்­கு­ரி­ய­வர்கள் தொலை­பே­சிகள், இலத்­தி­ர­னியல் கரு­வி­க­ளையும் ஒப்­ப­டைக்க நிர்ப்­பந்­திக்­கப்­ப­டுவர் மோச­டி­களைத் தடுக்கும் நட­வ­டிக்­கை­யாக ஆட்ட நிர்­ண­யத்தில் ஈடு­படும் சந்­தே­கத்­திற்­கு­ரி­ய­வர்கள் கைய­டக்க தொலை­பே­சி­க­ளையும் இலத்­தி­ர­னியல் கரு­வி­க­ளையும் கட்­டாயம் ஒப்­ப­டைக்­க­வேண்டும் என நிர்ப்­பந்­திக்­கப்­ப­ட­வுள்­ளனர். வட்ஸ்அப், ஸ்னப்சட் ஆகி­ய­வற்றின் மூலம் அனுப்­பப்­படும் தனிப்­பட்ட தக­வல்­களை இறக்கம் செய்­வ­தற்­கான அதி­கா­ரத்தை சர்­வ­தேச கிரிக்கெட் பேர­வையின் மோசடி தடுப்புப் பிரிவு பெற­வுள்­ளது. இதற்­கான பிரே­ரணை முன்­மொ­ழி­யப்­ப…

  8. ஆட்டமிழக்காத உறுதி: புதிய சாதனை ஒன்றை உருவாக்கிய கிரெய்க் பிராத்வெய்ட் ஷார்ஜா டெஸ்ட் நாயகன் கிரெய்க் பிராத்வெய்ட் பரிசு பெறும் காட்சி. | படம்: ஏ.எஃப்.பி. ஷார்ஜா டெஸ்ட் போட்டியில் மே.இ.தீவுகள் வெற்றியில் 142 மற்றும் 60 நாட் அவுட் என்று 2 நாட் அவுட்கள் மூலம் தொடக்க வீரர் கிரெய்க் பிராத்வெய்ட் புதிய சாதனை ஒன்றை உருவாக்கியுள்ளார். அதாவது ஒரு தொடக்க வீரர் ஒரு டெஸ்ட் போட்டியில் 2 இன்னிங்ஸ்களிலும் ஆட்டமிழக்காமல் இருக்கும் சாதனை ஒன்றை முதன் முதலாக உருவாக்கியுள்ளார் மே.இ.தீவுகளின் தொடக்க வீரர் கிரெய்க் பிராத்வெய்ட். ஷார்ஜா வெற்றியில் முதல் இன்னிங்சில் 142 ரன்கள் என்று தொடக்கத்தில் இறங்கி அணி ஆல் அவுட் ஆன போதும் ஒரு முனையில் நாட் …

  9. ஆட்டம் காண்கிறது அவுஸ்திரேலிய கிரிக்கெட்! தேர்வாளர் ரொட்னி மார்ஷ் பதவி விலகினார் 2016-11-18 11:26:25 அவுஸ்­தி­ரே­லிய கிரிக்கெட் அணியின் படு­தோல்­வி­க­ளி னால் மனம் நொந்­து­போன ரொட்னி மார்ஷ், அவுஸ்­தி­ரே­லிய கிரிக்கெட் தேர்வுக் குழுத் தலைவர் பத­வியை இரா­ஜி­னாமா செய்­துள்ளார். தென் ஆபி­ரிக்­கா­வுக்கு எதி­ரான இரண்­டா­வது டெஸ்ட் கிரிக்கெட் போட்­டியில் தோல்வி அடைந்த பின்னர் மார் ஷும் தெரிவுக்குழு உறுப்­பி­னர்­க­ளான ட்ரவொ ஹோன்ஸ், மார்க் வோ ஆகி­யோரும் ஹோபார்ட்டில் கூடினர். அந்தச் சந்­தர்ப்­பத்தில் தனது பத­வியை உட­ன­டி­யாக இரா­ஜி­னாமா செய்­வ­தாக ரொட்னி மார்ஷ் அறி­வித்தார். அவ­ரது பதவிக்காலம் அட…

  10. இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுநர் சங்கத்தினால் நடத்தப்படும் 84ஆவது சேர் ஜோன் டார்பட் சிரேஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளின் முதலாம் நாளான நேற்று நிலைநாட்டப்பட்ட சாதனைகளில் ஒரு சாதனை யாழ். மாவட்டத்திலுள்ள அளவெட்டி அருணோதயா கல்லூரியைச் சேர்ந்த கே. நெப்தலி ஜொய்சன் என்பவரால் நிலைநாட்டப்பட்டது. ஆண்களுக்கான 18 வயதுக்குட்பட்ட கோலூன்றிப் பாய்தலில் 4.20 மீற்றர் உயரத்தைத் தாவியதன் மூலம் நெப்தலி ஜொய்சன் புதிய சாதனையை நிலைநாட்டி தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார். இதன் மூலம் அவரது கல்லூரியைச் சேர்ந்த பீ. லவணன் 2012இல் நிலைநாட்டிய 3.77 மீற்றர் என்ற சாதனையை நெப்தலி ஜொய்சன் முறியடித்தார். கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் அண்மையில் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுநர் போட்டியில் 17 வ…

  11. 09 DEC, 2024 | 02:08 PM (நெவில் அன்தனி) ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியை 20.04 செக்கன்களில் ஓடி முடித்ததன் மூலம் அரை நூற்றாண்டு நீடித்த அவுஸ்திரேலியா மற்றும் ஓஷானியா சாதனையையும் 16 வயதுடையோருக்கான யுசெய்ன் போல்டின் சாதனையையும் அவுஸ்திரேலியாவின் கௌட் கௌட் முறியடித்து புதிய சாதனை நிலைநாட்டினார். அவுஸ்திரேலிய அனைத்துப் பாடசாலைகள் சம்பியன்ஷிப் போட்டியிலேயே கௌட் கௌட் (Gout Gout) இந்த புதிய சாதனையை நிலைநாட்டி தங்கப் பதக்கத்தை வென்றெடுத்தார். ஆண்களுக்கான 200 ஓட்டப் போட்டியில் 1968ஆம் ஆண்டு பீட்டர் நோமன் நிலைநாட்டிய ஓஷானியாவுக்கான (கடல்சூழ் நாடுகள்) 20.06 செக்கன்கள் என்ற சாதனையை முறியடித்த கௌட் கௌட், 2003ஆம் ஆண்டு யுசெயன்…

  12. 17 APR, 2024 | 05:42 PM (நெவில் அன்தனி) ஓக்லஹோமா, ரமோனாவில் ஞாயிறன்று நடைபெற்ற ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் லிதுவேனியாவின் மெய்வல்லுநர் மிக்கோலாஸ் அலெக்னா நம்பமுடியாத 74.35 மீட்டர் தூரத்துக்கு தட்டை எறிந்து தட்டெறிதலுக்கான முன்னைய சாதனையை முறியடித்தார். முன்னைய உலக சாதனை கிட்டத்தட்ட 38 வருடங்கள் நிலைத்திருந்தது. இயூஜினில் 2022ஆம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மிக்கோலாஸ் அலெக்னா, புடாபெஸ்டில் கடந்த வருடம் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். அவர் ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் பழைமையான சாதனையை முறியடித்து புதிய வரலாறு படைத்தார். ஒக்லஹோமா, ரமோனாவில் நடைபெற்ற எறிதல…

  13. 18 SEP, 2024 | 04:51 PM (நெவில் அன்தனி) சர்வதேச கிரிக்கெட் பேரவையின் கிரிக்கெட் வரலாற்றில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமான பரிசுத் தொகை வழங்கும் சகாப்தம், ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியுடன் உதயமாகிறது. கடந்த வருடம் ஜூலை மாதம் நடைபெற்ற ஐசிசி வருடாந்த மாநாட்டில் இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டது. 2030ஆம் ஆண்டிலேயே இருபாலாருக்கும் சம பரிசுத் தொகையை வழங்குவதென ஐசிசி முடிவுசெய்திருந்தது. ஆனால் இப்போது 6 வருடங்களுக்கு முன்னரே அந்தத் தீர்மானத்தை அமுல்படுத்துவதென ஐசிசி முடிவுசெய்துள்ளது. இந்த வருட மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் ஒட்டுமொத்த பணப்பரிசாக 7.95 மில்லியன் அமெரி…

  14. ஒலிம்பிக் தடகளத்தில் இன்று ஆண்கள் 100 மீ., ஓட்டத்தின் தகுதி சுற்று போட்டிகள் நடக்கிறது. இதில் மின்னல் மனிதன் ஜமைக்காவின் உசைன் போல்ட், அசத்தலை தொடர்வார் எனத் தெரிகிறது. இங்கிலாந்து தலைநகர் லண்டனில், 30வது ஒலிம்பிக் போட்டி நடக்கிறது. இதில் நேற்று முதல் தடகள போட்டிகள் துவங்கின. இன்று நடக்கும் 100 மீ., ஓட்டத்தில், பீஜிங்கில் (9.69 வினாடி) தங்கம் வென்ற ஜமைக்காவின் உசைன் போல்ட், மீண்டும் சாதிக்கும் நோக்கத்துடன் களமிறங்குகிறார்.தவிர, பெர்லினில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில், 9.58 வினாடியில் வந்து உலக சாதனை படைத்துள்ளார். இன்றும் இவர் சிறப்பாக செயல்படலாம். இருப்பினும், இவரது சக வீரர் யோகன் பிளேக், சமீபத்தில் நடந்த உள்ளூர் போட்டியில், போல்ட்டை போல்டு செய்துள்ளார்…

    • 1 reply
    • 673 views
  15. ஆண்கள் கிரிக்கெட் போட்டியில் பணியாற்றும் முதல் பெண் நடுவர் ஆஸ்திரேயாவில் நடைபெறும் உள்ளூர் ஆண்கள் கிரிக்கெட் போட்டியில் முதல்முறையாக கிளாரி போலோசாக் என்ற பெண் நடுவராக களமிறங்க உள்ளார். கான்பெரா: ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிளாரி போலோசாக் (29) என்பவர் கடந்த 2 ஆண்டுகளாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் நடுவர் குழுவில் பணியாற்றி வருகிறார். சென்ற ஆண்டு நடைபெற்ற பெண்களுக்கான உலகக் கோப்பை தொடரின் 4 போட்டிகளில் நடுவராக இருந்தார். இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உள்ளூர் ஆண்கள் கிரிக்கெட் போட்டியில் இவர் நடுவராக நியமிக்கப்பட்டுளார். ஆண்கள் கிரிக்கெ…

  16. ஆண்டர்சன் இருக்கும் ஃபார்மிற்கு விராட் கோலி கஷ்டம்தான்: கிளென் மெக்ரா 2014 தொடரில் விராட் கோலியை வீழ்த்திய ஆண்டர்சன். - படம். | ஏ.எஃப்.பி. 2014-ல் இங்கிலாந்தில் ஆடிய கோலி இப்போது இல்லை என்றாலும் பார்மில் உள்ள இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் நிச்சயம் விராட் கோலிக்குக் குடைச்சலைக் கொடுப்பார் என்று ஆஸி. கிரேட் கிளென் மெக்ரா அபிப்ராயப்படுகிறார். இது தொடர்பாக கிளென் மெக்ரா கூறும்போது, “கோலி தற்போது கொஞ்சம் அனுபவமிக்க வீரர். தரமான வீரர், இதைப்பற்றி எந்தவித சந்தேகமும் இல்லை, ஆனால் இங்கிலாந்து சூழ்நிலைகள் எப்போதும் கடினம். அதுவும் ஜிம்மி ஆண்டர்சன் இருக்கும்போது, நன்றாக வீசும்போது நிச்சயம் இது கடினமான …

  17. ஆண்டர்சன், பிராட் நீக்கம் லண்டன்: நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கும் இங்கிலாந்து அணியில் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் உள்ளிட்டோர் நீக்கப்பட்டனர். இங்கிலாந்து சென்றுள்ள நியூசிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி வரும் ஜூன் 9ல் பர்மிங்காமில் நடக்கிறது. மீதமுள்ள போட்டிகள் லண்டன் (ஜூன் 12), சவுத்தாம்ப்டன் (ஜூன் 14), நாட்டிங்காம் (ஜூன் 17), செஸ்டர்–லி–ஸ்டிரீட் (ஜூன் 20) நகரில் நடக்கவுள்ளன. இத்தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டது. இதில் வேகப்பந்துவீச்சாளர்களான ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் நீக்கப்பட்டனர். இயான் பெல், சுழற்பந்துவீச்சாளர் மொயீன் அலி ஆகியோருக்கும் இடம் கிடைக்கவில்லை. அடுத்த மாதம்…

  18. ஆண்டர்ஸனில் இருந்து ராகுல் வரை ஆர். அபிலாஷ் லார்ட்ஸில் நடந்து வரும் இரண்டாவது டெஸ்டில் நான் மிகவும் ரசித்த ஒரு விசயம் ஆண்டர்ஸனின் பந்து வீச்சு. அதற்கு அடுத்து ராகுலின் ரசிக்கத்தக்க, ரொம்ப ஸ்டைலான மட்டையாட்டம். 1 ) ஆண்டர்ஸன் மிதவேக வீச்சாளர்களிடையே ஒரு உன்னதமான கலைஞன் என்று சொல்லலாம். அவரால் வழக்கமான seam up பந்து வீச்சில் ஈடுபட முடியும். குளிரும் மந்தமான வானிலையும் கொண்ட காலைப் பொழுதில், மாலை வேளையில் நான்காவது ஸ்டம்பில் போட்டு ஸ்விங் பண்ண முடியும். பகற்பொழுதில் ஐந்தாவது ஸ்டம்பில் பொறுமையாக வீசி ரன்களை கட்டுப்படுத்த முடியும். பேட்ஸ்மேனை வைடாக செல்லும் பந்தை துரத்த வைத்து அவுட் ஆக்க முடியும். உள்ளே வெளியே…

  19. ஆண்டின் சிறந்த இலங்கையராக குமார் சங்ககார தெரிவு தெரண ஊடக வலையமைப்பு ஏற்பாடு செய்திருந்த சிறந்த இலங்கையர்களை கௌரவிக்கும் “Ada Derana Sri Lankan of the Year - 2016” மா பெரும் விருதுவழங்கும் நிகழ்வு நேற்று (23) கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இடம்பெற்றது. பல்வேறு துறைகளில் நாட்டிற்கு பெருமை தேடித்தந்த இலங்கையர்கள் விருதி வழங்கி கௌரவிக்கப்பட்டனர். ரசிகர்களின் அதிக விருப்புக்களை வென்ற இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் குமார் சங்ககார ஆண்டின் சிறந்த பிரபலமான இலங்கையராக தெரிவு செய்யப்பட்டார். இந்நிகழ்வில் விருதுகளை பெற்றுக் கொண்ட ஆண்டின் சிறந்த இலங்கையர்கள் விபரம் வருமாறு, Sports – Mathew Abeysinghe Global Entertainer - Jacqueline Fern…

  20. ஆண்டின் சிறந்த கால்பந்து வீரர் விருதை வென்றார் மெஸ்ஸி நட்­சத்­திர வீரர் லியனல் மெஸ்ஸி ஆண்டின் சிறந்த கால்­பந்து வீரர் விருதை தன­தாக்­கி­யுள்ளார். குளோப் கால்­பந்து விருது வழங்கும் நிகழ்வு நேற்று துபாயில் நடை­பெற்­றது. இதன்­போது கால்­பந்து வீரர்கள், பயிற்­சி­யா­ளர்கள், துறைசார் சாத­னை­யா­ளர்கள் மற்றும் கழ­கங்கள், ஆகிய பிரி­வு­களில் பிர­கா­சித்­த­வர்­க­ளுக்கு விரு­துகள் வழங்கி கௌர­விக்­கப்­பட்­டி­ருந்­தன. அத­ன­டிப்­ப­டையில் பார்­சி­லோனா கழக அணிக்­காக விளை­யாடி வரும் ஆர்­ஜென்­டீ­னாவைச் சேர்ந்த 28வய­தான நட்­சத்­தி­ர­வீரர் லியனல் மெஸ்ஸி ஆண்டின் சிறந்த கால்­பந்து வீர­ருக்­கான விருதை சுவீ­க­ரித்­துக்­கொண்டார். ஆண்டின் சிறந்த கழ­க­மாக …

  21. ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர் விராட் கோலி: பிசிசிஐ விருதுக்கு தேர்வு சிறந்த கிரிக்கெட் வீரராக விராட் கோலி தேர்வு: படம்: ஏ.பி. மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் 5,000 ரன்கள் எடுத்த முதல் இந்திய வீராங்கனை மிதாலி ராஜ், சிறந்த மகளிர் கிரிக்கெட் வீராங்கனையாக தேர்வு. | படம்: வி.வி.சுப்பிரமணியம். டெஸ்ட் கேப்டன்சியில் புதிய சாதனைகளை நோக்கி முன்னேறி வரும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியை ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரராக பிசிசிஐ தேர்வு செய்துள்ளது. மகளிர் கிரிக்கெட்டில் இந்திய கிரிக்கெட் வீராங்கனை மிதால…

  22. ஆண்டின் சிறந்த வீரராக சாமுவேல்ஸ் அன்டிகுவாவில் செவ்வாய்க்கிழமை (19) இடம்பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபையின் வருடாந்த விருதுகள் வழங்கும் விழாவின்போது, ஆண்டின் சிறந்த ஒருநாள் சர்வதேசப் போட்டி வீரராகவும், ஆண்டின் சிறந்த வீரராகவும் மார்லன் சாமுவேல்ஸ் பெயரிடப்பட்டார். 2015ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரையில் 22 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்ற சாமுவேல்ஸ், மூன்று சதங்கள் உள்ளடங்கலாக 859 ஓட்டங்களைப் பெற்றதோடு, இந்தியாவில் இடம்பெற்ற உலக இருபதுக்கு-20 பட்டத்தை மேற்கிந்தியத் தீவுகள் கைப்பற்றுவதற்கும் முக்கியமானவராக அமைந்திருந்தார். குறித்த இறுதிப் போட்டியில், மேற்கிந்தியத் தீவுகள் அணி 156 ஓட்டங்களை துரத்தியிருந்தபோது, இறுதி வரை …

  23. ஆண்டின் டாப் 3 கோல்கள்: மெஸ்ஸி, நெய்மரைக் கடந்து முக்கியத்துவம் பெற்ற மலேசிய வீரர் இந்த ஆண்டின் 3 டாப் கோல்களுக்கான பரிசுப் பட்டியலில் மெஸ்ஸி, நெய்மர் போன்றோரைக் கடந்து மலேசிய கால்பந்து வீரர் மொஹமது ஃபைஸ் சுப்ரி என்பவரது கோல் ஃபிபா பட்டியலில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. மலேசிய சூபர் லீக் கால்பந்து போட்டியில் பெனாங் அணிக்காக ஆடிய மொகமது ஃபைஸ் சுப்ரி, பஹாங் அணிக்கு எதிராக அடித்த கோல் பல சர்வதேச கோல்களை பின்னுக்குத் தள்ளியுள்ளது. அதாவது 1997-ம் ஆண்டு பிரேசில் நட்சத்திரம் ரொபர்ட்டோ கார்லோஸ் பிரான்ஸுக்கு எதிராக அடித்த மறக்க முடியாத ஃப்ரீ கிக் கோலை இது பலவகையிலும் நினைவூட்டுவதாக அமைந்துள்ளது. இடது புறத்தில், சற்றே ஓரமாக, கோலிலிருந்து சுமார் 11…

  24. ஆண்டுக்கு ரூ. 7 கோடி சம்பளம்: உலகின் பணக்கார பயிற்சியாளராகிறார் ரவி சாஸ்திரி! வங்கதேச சுற்றுப்பயணம் முடிந்த பின் இந்திய அணிக்கு ரவிசாஸ்திரி நிரந்தர பயிற்சியாளராக நியமிக்கப்படவுள்ளதாகவும், இதற்காக ஆண்டுக்கு ரூ.7 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருடன் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த டங்கன் ஃபிளட்சரின் ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது. அதற்கு பின், இன்று வரை இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமிக்கப்படவில்லை. தற்போது வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய அணிக்கு தற்காலிக பயிற்சியாளராக ரவி சாஸ்திரி பொறுப்பேற்றுள்ளார். வங்கதேசத் தொடர் முடிந்ததும் இந்திய அணி ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள…

  25. ஆண்ட்ரூ சைமண்ட்ஸ்: ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் கார் விபத்தில் உயிரிழப்பு ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஆஸ்திரேலியாவின் பிரபல கிரிக்கெட் வீரரான ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கார் விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 46. சனிக்கிழமை இரவு ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்தின் டவுன்ஸ்வில்லே பகுதியில் சைமண்ட்ஸ் பயணித்த கார் விபத்துக்குள்ளானது. ஐசிசி வெளியிட்ட தகவலின்படி, சைமண்ட்ஸ் காரில் தனியாக பயணித்திருக்கிறார். அப்போது, கார் கட்டுப்பாட்டை இழந்து உருண்டு விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் , அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த விபத்து குறித்து தடயவியல் விபத்து பிரிவ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.