விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7843 topics in this forum
-
-
கேட்ச்களை கோட்டைவிட்ட தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்தது பெர்த்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை, ஆஸ்திரேலியா 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என்று முன்னிலை வகித்தது. நல்ல பேட்டிங் பிட்சில் தெ.ஆ. கேப்டன் டிவிலியர்ஸ் முதலில் பீல்ட் செய்ய முடிவெடுத்தார். இதனால் ஆஸ்திரேலியா அபாரமாக விளையாடி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 300 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 48.1 ஓவர்களில் 268 ரன்களுக்குச் சுருண்டது. பெய்லிக்கு மட்டும் தவறவிடப்பட்ட 4 கேட்ச்கள்: தென் ஆப்பிரிக்கா அணியின் பீல்டிங் இன்று படு மோசமாக இருந்தது. ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் க…
-
- 5 replies
- 859 views
-
-
ஆஸ்திரேலியா ஓபன் : முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற பெலாரஸ் வீராங்கனை christopherJan 28, 2023 18:23PM மெல்போர்னில் இன்று (ஜனவரி 28) நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் மகளிர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் வென்று பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார். மெல்போர்னில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான இதில் சாம்பியன் பட்டத்தை தட்டிச்செல்வதற்காக டென்னிஸ் உலகின் முன்னணி வீரர்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டி மெல்போர்ன் ரோட் லேவர் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் கஜகஸ்தான் நாட்டைச் சே…
-
- 2 replies
- 700 views
- 1 follower
-
-
ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியிலிருந்து 5 பேர் அதிரடி நீக்கம் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான காமன்வெல்த் பேங்க் டெஸ்ட் போட்டியில் படுதோல்வி அடைந்த ஆஸ்திரேலிய அணியிலிருந்து 5 பேர் நீக்கப்பட்டுள்ளனர். மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான அணியில் விளையாட நான்கு புதுமுக வீரர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். இதுவரை நடந்த இரண்டு டெஸ்ட் போட்டியிலும் படுதோல்வி அடைந்துள்ளது ஆஸ்திரேலிய அணி. தென் ஆப்ரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையே காமன்வெல்த் பேங்க் டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இந்த தொடரில் ஏற்கனவே இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிந்துள்ளன. இந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் ஆஸ்திரேலியா தென் ஆப்ரிக்காவிடம் படுதோல்வி அடைந்தது. இரண்டாவது டெஸ்டில் ஆஸ்திரேலிய …
-
- 0 replies
- 461 views
-
-
ஆஸ்திரேலியா தலைமை பயிற்சியாளர் டேரன் லேமன் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி சிட்னி: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் டேரன் லேமன் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று ஆஸ்திரேலியா கிரிக்கெட் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று சிட்னியில் நடைபெற்றது. இதில் இந்தியா 49.4 ஓவரில் 331 ரன்கள் எடுத்து 330 ரன்னை சேஸிங் செய்தது. ஆஸ்திரேலிய மண்ணில் அதிகபட்ச சேஸிங் இதுவாகும். இதனிடையே ஆஸ்திரேலியா அணியின் தலைமை பயிற்சியாளர் டேரன் லேமனுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சிட்னியில் உள்ள ராயல் பிரின்ஸ் ஆல்பர்ட் மருத…
-
- 0 replies
- 339 views
-
-
ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: யுவராஜ் மீண்டும் சேர்ப்பு! சென்னை: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாட உள்ள இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 12 ல் தொடங்கி 31-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில், அந்நாட்டுடன் இந்திய அணி 5 ஒருநாள் போட்டியிலும், மூன்று 20 ஓவர் போட்டிகளிலும் விளையாட உள்ளது. இதற்காக இந்திய ஜனவரி 6-ம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொள்ளவிருக்கிறது. இந்நிலையில், ஆஸ்திரேலியாவுடன் மோதும் இந்திய அணியின் வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 5 ஒருநாள் போட்டி ஒருநாள் போட்டிக்கான இந்திய அணிக்கு தோனி, ஷிகர் தவான், ரோகித் சர்மா, விராட் கோலி, மணிஷ் பாண்டே, ரஹானே, அஷ்வின், ஜடேஜா, மு…
-
- 1 reply
- 643 views
-
-
ஆஸ்திரேலியா மீண்டும் ஆலன் பார்டரிலிருந்து தொடங்க வேண்டும்! #SAvAUS தோல்வியை உங்களால் தாங்கிக்கொள்ள முடியுமா? தோல்வியைத் தாங்கிக்கொள்ள முடியாதவர்கள், தோல்வி பெற்றுவிடுவோமோ என்று பயப்படுபவர்கள் என்னவெல்லாம் செய்வார்கள் என்பதற்கு சமீபத்திய உதாரணம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி. கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அவமானமாக தென் ஆப்பிரிக்க மண்ணில் 3-1 என டெஸ்ட் தொடரை இழந்திருக்கிறது ஆஸ்திரேலியா. கடைசி டெஸ்ட்டில் 492 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி என்பது கடந்த 90 ஆண்டுகளில் ஆஸ்திரேலியா சந்திக்காத சறுக்கல். உலகுக்கே கிரிக்கெட் எப்படி ஆடப்படவேண்டும், கேப்டன்ஷிப் எப்படி இருக்க வேண்டும் என்று கற்றுக்கொடுத்த ஆஸ்திரேலியா இப்படி ஒரு மாபெரும் அவமானத்…
-
- 0 replies
- 377 views
-
-
ஆஸ்திரேலியா மீண்டும் முதலிடம் அக்டோபர் 12, 2014. துபாய்: ஐ.சி.சி., ஒருநாள் போட்டிக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியலில், ஆஸ்திரேலிய அணி மீண்டும் ‘நம்பர்–1’ இடத்துக்கு முன்னேறியது. சர்வதேச ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான ரேங்கிங் பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் நேற்று வெளியிட்டது. இதில், ஆஸ்திரேலியா, இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகள் தலா 113 புள்ளிகளுடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டன. தசம புள்ளிகள் வித்தியாசத்தில் மூன்று அணிகளுக்கும் ‘ரேங்க்’ வழங்கப்பட்டது. இதன்படி, பாகிஸ்தானுக்கு எதிரான முதலிரண்டு போட்டியில் வெற்றி பெற்று, ஒருநாள் தொடரை கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணிக்கு ‘நம்பர்–1’ இடம் வழங்கப்பட்டது. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான இரண்ட…
-
- 0 replies
- 352 views
-
-
கிரிக்கெட் என்பது ஜென்டில்மேன்ஸ் கேம் என்ற நிலை மாறி முரடர்களின் ஆட்டமாக மாறி வருகிறதோ என்று கருதும் அளவிற்கு கிரிக்கெட் வீரர்களின் நடத்தை தரம் தாழ்ந்து வருகிறது. எந்த இரு அணிகள் மோதினாலும், கிரிக்கெட் மட்டைகளும் பந்தும் பேசுவது போய், வீரர்கள் ஒருவருடன் ஒருவர் மோதுவது, பேட்ஸ்மென்கள் மீது எதிரணியினர் வசை மாறிப் பொழிவது என்பதெல்லாம் மிகச் சாதாரணமாகிவிட்டது. ஆஸ்திரேலிய அணியினரே இம்மாதிரியான முரண்பட்ட நடத்தைக்கு வித்திட்டனர் என்று சுனில் கவாஸ்கர், டோனி கிரேக் உள்ளிட்ட முன்னாள் வீரர்களும், வர்ணனையாளர்களும் வெளிப்படையாகவே குற்றம்சாட்டும் அளவிற்கு இந்த வசைபாடல் (ஸ்லெட்ஜிங்) வளர்ந்துவிட்டது. ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் ஸ்டீவ் வாஹ் இதுபோன்ற வசைமொழிகளை பயன்…
-
- 1 reply
- 1.2k views
-
-
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மண்ணில் தொடரை வெல்லாமல் ஓய்வு பெற மாட்டேன்: பாகிஸ்தான் வீரர் யூனிஸ் கான் சூளுரை யூனிஸ் கான் ஆஸ்திரேலியா மற்றும் இங்கி லாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்லும் வரையில் ஓய்வுபெற மாட்டேன் என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மூத்த பேட்ஸ்மேனான யூனிஸ் கான் தெரிவித்துள்ளார். இந்த மாதத்தின் தொடக்கத்தில் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடியபோது 100-வது டெஸ்ட் போட்டியில் விளை யாடியவர் என்ற பெருமையைப் பெற்றார் 37 வயதான யூனிஸ்கான். இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் 377 ரன்கள் என்ற இலக்குடன் பேட் செய்த பாகிஸ்தான் அணியில் யூனிஸ்கான் ஆட்டமிழக்காமல் 171 ரன்கள் குவிக்க, அந்த அணி வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது. பாகிஸ்தானின் தலைசிறந்த வீரர்களில்…
-
- 0 replies
- 292 views
-
-
உலக கோப்பையில் மறக்க முடியாத போட்டி ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் விளையாடிய காலிறிதி ஆட்டம். குறிப்பாக Wahab Riaz பந்து வீச்சு பற்றி பல கிரிக்கெட் ஜாம்பவான்கள் பேச ஆரம்பித்துள்ளனர். "இதுதான் கிரிக்கெட் விளையாட்டு, Watson, ஆடமிளக்காமல் நின்றது அதிஸ்டமே. இவரால் ஒன்றுமே செய்ய முடியவில்லை, அபாரமான பந்து வீச்சு". என்று கூறியுள்ளார் Ricky Ponting. மற்றும் Brian Lara, "இந்த பந்து வீச்சில் Watson கிரிக்கெட் பாடசாலை மட்டதிக்கு சென்று விட்டது, Wahab Riaz ஐ நேரில் காணும் போது இவரின் அபராத தொகையை நான் செலுத்துவேன்". http://www.cricket.com.au/news/ricky-ponting-praises-wahab-riaz-and-shane-watson-as-brian-lara-hits-out-at-icc/2015-03-23
-
- 0 replies
- 535 views
-
-
ஆஸ்திரேலியான்னா 'பயம்'... அது இப்போ இல்லையா? #CricketAustralia "ஸ்விங் பந்துகளையும் சரி, ஸ்பின் பந்துகளையும் சரி, ஸீம் பவுலிங்கையும் சரி எங்களால் எதையுமே சரியாக எதிர்கொள்ள முடியவில்லை. தன்னம்பிக்கை அடியோடு உடைந்து போயிருக்கிறது" - வருத்தம் தோய்ந்த முகத்தோடு வார்த்தைகள் உலர பொறுமையாகச் சொல்லியிருக்கிறார் ஆஸியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித். இதுவரை எந்த ஆஸி கேப்டனும் இப்படித் தேம்பியதில்லை, கிரிக்கெட் வரலாற்றில் ஒரே ஆண்டில் இப்படிச் சரிந்ததும் இல்லை. டெஸ்ட், ஒருநாள் போட்டி, டி20 என அத்தனையிலும் மண்ணை கவ்வி, நிலைகுலைந்து போயிருக்கிறது ஆஸ்திரேலியா. கிரிக்கெட் வரலாற்றில் ஆஸ்திரேலியா ஒரு சிறந்த அணி என்பதில் எந்த வித சந்தேகமும் கிடையாது, ஆனால் ஆக்ரோஷமிக்க…
-
- 0 replies
- 460 views
-
-
ஆஸ்திரேலியாவின் பணக்கார கிரிக்கெட் வீரர் ஷேன் வாட்சன் ஆஸ்திரேலிய அணியில் தனது இடத்தைத் தக்கவைக்கப் போராடி வரும் ஷேன் வாட்சன், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீர்ர்களில் அதிகம் பணம் ஈட்டுபவராக உள்ளார், 2014ஆம் ஆண்டுக்கான பி.ஆர்.டபிள்யூ.வின் டாப் 50 பணக்கார ஆஸ்திரேலிய விளையாட்டு வீரர்களின் பட்டியலில் ஷேன் வாட்சன் 8-வது இடத்தில் உள்ளார். இந்தப் பட்டியலில் மிட்செல் ஜான்சன் 10-வது இடத்திலும், கேப்டன் மைக்கேல் கிளார்க் 11-வது இடத்திலும், டேவிட் வார்னர் 12-வது இடத்திலும் உள்ளனர். ஷேன் வாட்சன் கடந்த ஆண்டு ஈட்டிய தொகை 4.5 மில்லியன் டாலர்கள். மிட்செல் ஜான்சன் 4.1 மில்லியன் டாலர்களையும், மைக்கேல் கிளார்க் 4 மில்லியன் டாலர்களையும் ஈட்டியுள்ளனர். இந்தப் பட்டியலில் ஆஸ்திரேலிய கூ…
-
- 0 replies
- 404 views
-
-
ஆஸ்திரேலியாவின் பழங்குடியினப் பெண்கள் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் ஆஸ்திரேலியாவின் பழங்குடியினப் பெண்கள் கிரிக்கெட் அணி ஒன்று முதல்முறையாக வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இந்தியாவில் இந்த அணியின் வரலாற்று முக்கியத்துவம் மிக்க பத்து நாள்கள் பயணத்தில் டெல்லியிலும் மும்பையிலும் நடைபெறும் கிரிக்கெட் போட்டி தொடர் ஒன்றில் விளையாட உள்ளது. பழங்குடியினரின் கிரிக்கெட் விளையாட்டானது பல இலட்சக்கணக்கான பங்கேற்பாளர்களோடு ஆஸ்திரேலியாவில் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. http://www.bbc.com/tamil/sport/2016/05/160520_cricket?ocid=socialflow_facebook
-
- 0 replies
- 348 views
-
-
ஆஸ்திரேலியாவில் அதிக தோல்வி: மோசமான சாதனையில் சச்சினுடன் இணைந்தார் குக் ஆஸ்திரேலிய மண்ணில் அதிக தோல்விகளை சந்தித்த வீரர்கள் என்ற மோசமான சாதனையில் சச்சினுடன் அலஸ்டைர் குக் இணைந்துள்ளார். ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையிலான ஆஷஸ் தொடரின் 3-வது டெஸ்ட் பெர்த்தில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் மற்றும் 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியது. இங்கிலாந்து தொடர்ந்து மூன்று தோல்விகளை சந்தித்துள்ளது. அந்த அணியின் முன்னாள் கேப்டனும் அனுபவ வீரருமான அலஸ்டைர் குக்கிற்கு இது 150-வது டெஸ்ட் ஆகும். சிறப்புமிக்க இந்த டெஸ்டில் குக் 7, 14 என சொற்ப ரன்கள…
-
- 0 replies
- 296 views
-
-
ஆஸ்திரேலியாவில் இந்தியாவுக்கு கடும் சவால்கள் காத்திருக்கிறது: ஷேன் வாட்சன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இந்திய கிரிக்கெட் அணி கடும் சவால்களைச் சந்திக்கும் என்று ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார். அதாவது, இந்தியாவுக்கு தங்கள் அணி வரும்போது எத்தகைய பிட்ச்களை வழங்கி கடினமாக்கினார்களோ அதே போன்று இங்கு இந்திய அணிக்கு கடும் சவால்கள் காத்திருக்கின்றன என்கிறார் ஷேன் வாட்சன். ஆஸ்திரேலிய ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டியில் கூறும்போது, “ஆஸ்திரேலியாவில் பிட்ச் தயாரிப்பாளர்கள் நிச்சயம் எங்களுக்குச் சாதகமான பிட்சையே தயாரிப்பார்கள் என்று நம்பலாம், இந்தியாவில் எப்படி அந்த அணிக்குச் சாதகமாக பிட்ச் தயாரிக்கப்படுகிறதோ அப்படி, ஆகவே இந்திய அணிக்குக் கடும் சவால்கள் காத்திருக்கின்றன.…
-
- 0 replies
- 335 views
-
-
ஆஸ்திரேலியாவில் கோலி அடித்த 4 டெஸ்ட் சதங்களுக்கு ஈடு இணை இல்லை: ரவி சாஸ்திரி ரவிசாஸ்திரியிடம் பேட்டிங் ஆலோசனை பெறும் முரளி விஜய், விராட் கோலி. | கோப்புப் படம்: கே.பாக்யபிரகாஷ். இந்திய அணியுடன் தனது 18 மாத கால அனுபவம் தன் வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவம் என்று கூறிய ரவிசாஸ்திரி கோலியின் வளர்ச்சி குறித்து பாராட்டியுள்ளார். செய்தி நிறுவனத்துக்கு ரவி சாஸ்திரி அளித்த பேட்டியில், “இந்திய கிரிகெட்டுடன் ஒரு வீரராக பிறகு ஒரு இயக்குநராக இணைந்து பணியாற்றியதில் இந்த 18 மாத கால அனுபவம் என்னால் மறக்க முடியாத தருணங்களாகும். நாங்கள் ஒரு அணியாகச் சாதித்ததை நினைத்துப் பார்க்கும் போது இந்த 18 மாத கால அனுபவம் மறக்க முடியாதது. நான் ஒரு வீரராக …
-
- 0 replies
- 327 views
-
-
ஆஸ்திரேலியாவில் டாக்சி டிரைவரான பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்! பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அர்ஷாத் கான் தற்போது ஆஸ்திரேலியாவில் டாக்சி டிரைவராக மாறியுள்ளார். கடந்த 1997ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்காக அறிமுகமான அர்ஷாத் கான், சுழற்பந்துவீச்சாளர் ஆவார். 2005 ஆம் ஆண்டு வரை பாகிஸ்தான் அணிக்காக 9 டெஸ்ட் மற்றும் 58 ஒருநாள் போட்டிகளில் அவர் விளையாடியுள்ளார். கொச்சியில் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில், 33 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தியது இவரது அதிகபட்ச சாதனை ஆகும். கடந்த 2001ஆம் ஆண்டு வரை அர்ஷாத் கானுக்கு பாகிஸ்தான் ஒருநாள் அணியில் இடம் கிடைத்து வந்தது. அதற்கு பின் வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. தொடர்ந்து 2005ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற அவர், சிட்னி நகருக்க…
-
- 0 replies
- 308 views
-
-
ஆஸ்திரேலியாவில் பயிற்சியாளராக அடியெடுத்து வைக்கும் தோனி! ஓய்வு வயதை எட்டியிருக்கும் இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி, ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் கிரேட் மெக்டர்மார்ட் தொடங்கியிருக்கும் சர்வதேச கிரிக்கெட் அகாடமியின் பயிற்சியாளர் மற்றும் விளம்பரத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய முன்னாள் பந்துவீச்சாளர் கிரேக் மெக்டர்மார்ட் தொடங்கியுள்ள 'கிரேக் மெக்டர்மாட் கிரிக்கெட் அகாடமி ' சார்பில், 'ஸ்போர்ட்ஸ் சயின்ஸ் மற்றும் மேனேஜ்மென்ட்' என்ற பெயரில் 4 வருட பட்டப்படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஐடியா தோனியை கவர, அந்த நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசடராக செயல்பட ஒப்புக் கொண்டுள்ளார். விளையாட்டில் ஈடுபாடு கொண்ட குழந்தைகளை,…
-
- 0 replies
- 423 views
-
-
பட மூலாதாரம், Supplied படக்குறிப்பு, பயிற்சியின் போது கிரிக்கெட் பந்து தாக்கியதில் 17 வயதான பென் ஆஸ்டின் இறந்தார் கட்டுரை தகவல் லானா லாம் பிபிசி செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் மெல்போர்னில் கிரிக்கெட் பயிற்சியின் போது பந்து தாக்கியதில் ஆஸ்திரேலிய சிறார் ஒருவர் உயிரிழந்தார். செவ்வாயன்று கிரிக்கெட் வலை பயிற்சி செய்துகொண்டிருந்த 17 வயதான பென் ஆஸ்டின் கழுத்து பாதுகாப்பு இல்லாமல் ஹெல்மெட் மட்டும் அணிந்திருந்தார். அப்போது, கையடக்க பந்து லாஞ்சரைப் பயன்படுத்தி வீசப்பட்ட பந்து அவரது கழுத்தில் தாக்கியது. தகவல் தெரிவிக்கப்பட்டதும், உள்ளூர் நேரப்படி மாலை 5:00 மணியளவில் அவசரகால பணியாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட …
-
- 1 reply
- 221 views
- 1 follower
-
-
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆவேசமாக வீசுவேன்: வஹாப் ரியாஸ் உறுதி நியூஸிலாந்துக்கு எதிராக சமீபத்தில் முடிந்த தொடரில் பவுலிங் செய்யும் வஹாப் ரியாஸ். | படம்.| ஏஎஃப்பி. ஆஸ்திரேலியாவில் கடந்த 7 ஆண்டுகளாக டெஸ்ட் தொடரில் விளையாடாத பாகிஸ்தான் தற்போது விளையாடவுள்ள நிலையில் வஹாப் ரியாஸ் ஆஸ்திரேலியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். 2015 உலகக்கோப்பையின் போது ஷேன் வாட்சனுக்கும் இவருக்கும் நடந்த அந்தச் சவாலான போட்டி மறக்க முடியாததாக அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அதை விடவும் ஆவேசமாக வீசுவேன் என்கிறார் பாகிஸ்தான் வேகப்பட்ந்து வீச்சாளர் வஹாப் ரியாஸ். “நான் வீசியதிலேயே சிறந்த மேட்ச் அது (2015 உ.கோ.…
-
- 0 replies
- 240 views
-
-
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா பதிலடி கொடுக்குமா?- ராஜ்கோட்டில் நாளை 2வது போட்டி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா பதிலடி கொடுக்குமா?- ராஜ்கோட்டில் நாளை 2வது போட்டி இந்தியா -ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நாளை (17-ந்தேதி) நடக்கிறது. ராஜ்கோட்: …
-
- 0 replies
- 400 views
-
-
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கேமராவால் கவர் செய்ய முடியாத சிக்ஸ் அடித்த குப்தில் ( வீடியோ) ஆக்லாந்தில், சேப்பல் ஹார்ட்லி ஒருநாள் கிரிக்கெட் தொடர் தொடங்கியது. முதலில் விளையாடிய நியூசிலாந்து 307 ரன்கள் அடித்தது. மார்ட்டின் குப்தில் 90 ரன்கள் அடித்து அசத்தினார். இந்த போட்டியில், கானே ரிச்சர்ட்சன் பந்தில் குப்தில் அடித்த அபார சிக்சர், 113 மீட்டர் தொலைவு போய் ஸ்டேடியத்தின் மேற் கூரையில் விழுந்தது. இந்த போட்டியில் தொடர்ந்து பேட் செய்த ஆஸ்திரேலிய அணி, 24.2 ஓவரில் 148 ரன்களில் ஆல் அவுட்டாகி 159 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. http://www.vikatan.com/news/sports/58517-martin-guptill-hits-six-onto-eden-park-roof.art
-
- 0 replies
- 416 views
-
-
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெய்லர் சதத்தால் நியூசிலாந்து அணி வெற்றி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3-வது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 24 ரன்னில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் 3 போட்டி கொண்ட தொடரை நியூசிலாந்து 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஹேமில்டன்: ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. இரு அணிகள் இடையேயான 3 ஒருநாள் போட்டித் தொடரில் ஆக்லாந்தில் நடந்த முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. …
-
- 1 reply
- 334 views
-
-
ஆஸ்திரேலியாவுக்கு ஒயிட்வாஷ் தோல்வி: வரலாறு படைத்த இலங்கை அணி 3 டெஸ்ட் போட்டிகளில் 28 விக்கெட்டுகள் ஒயிட்வாஷ் தொடரின் நாயகன் ரங்கனா ஹெராத். | படம்: ஏ.பி. 33 ஆண்டுகால இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் ஆஸ்திரேலிய அணியை ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் மட்டுமே வீழ்த்தியிருந்த இலங்கை அணி இன்று டெஸ்ட் தொடரை 3-0 என்று கைப்பற்றி ஆஸி.க்கு ஒரு ஒயிட்வாஷ் அதிர்ச்சியை அளித்து புதிய வரலாறு படைத்தது. இதன் மூலம் இப்போதைக்கு இந்திய அணி டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளது, ஆனால் இதனைத் தக்கவைக்க போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடைபெறும் டெஸ்ட்டிலும் இந்தியா வெல்வது அவசியம். ஆஸ்திரேலியா முதலிடத்திலிருந்து 3-ம் இடத்துக்கு சரிந்தது. 10 புள்ளிகள் கூடுதலாகப் பெற்று இல…
-
- 0 replies
- 309 views
-