விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7841 topics in this forum
-
235 ஓட்டங்களுக்குள் சுருண்டது தென்னாபிரிக்கா இலங்கை அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்க அணி தனது முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 235 ஓட்டங்களுக்குள் சுருண்டுள்ளது. தென்னாபிரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணியானது தென்னாபிரிக்க அணியுடன் டெஸ்ட், ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் இன்று டர்பனில் ஆரம்பமாகிய மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன களத்தடுப்பை தெரிவுசெய்தார். அதற்கிணங்க முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரக்க அணி 59.4 ஓவர்களை எதிர்கொண்டு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்த…
-
- 2 replies
- 750 views
-
-
விறுவிறுப்பான போட்டியில் ஆஸி. திரில் வெற்றி இந்தியாவுக்கு எதிரான முதலாவது இருபதுக்கு 20 சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகளினால் திரில் வெற்றியீட்டியுள்ளது. இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிக்கிடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரின் முதல் போட்டி இன்று மாலை 7.00 மணியளவில் விசாகப்பட்டனத்தில் ஆரம்பானது. இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி களத்தடுப்பை தெரிவுசெய்ய, இந்தியா முதலாவதாக ஆடுகளம் நுழைந்து துடுப்பெடுத்தாடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 126 ஓட்டங்களை பெற்றது. இதையடுத்து 127 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த ஆவுஸ்த…
-
- 0 replies
- 444 views
-
-
டி20 போட்டியில் ஆப்கானிஸ்தான் புதிய உலக சாதனை அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில், ஆப்கானிஸ்தான் 278 ஓட்டங்களை குவித்து புதிய உலக சாதனை படைத்துள்ளது. ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகின்றன. இரு அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் நடைபெற்று வருகிறது. நாணய சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஹஸ்ரத்துல்லா ஷாஷை, உஸ்மான் கனி ஆகியோர் களமிறங்கினர். ஹஸ்ரத்துல்லாவின் அதிரடி சதத்தால் ஆப்கானிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 278 ஓட்டங்கள் எடுத்து சாதனை புரிந்துள்ளது. http://tamil.adaderana.lk/news.php?nid=111610
-
- 0 replies
- 484 views
-
-
உபாதை காரணமாக லசித் அம்புள்தெனிய போட்டியில் இருந்து விலகினார் இடது பெருவிரலில் ஏற்பட்ட உபாதை காரணமாக இலங்கை அணி வீரர் லசித் அம்புள்தெனிய, தென்னாபிரிக்காவுக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளார். இலங்கை கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 3 ரி 20 போட்டிகளில் விளையாடுவதற்காக தென்ஆப்பிரிக்கா சென்றுள்ளது. 2 வது டெஸ்ட் போட்டி தென்னாப்பிரிக்காவின் போர்ட் எலிசபெத் மைதானத்தில் நடைபெறுகின்றது. நாணய சுழற்சியை வென்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாப்பிரிக்கா அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 222 ஓட்டங்கள் மட்டுமே பெற்றது. இலங்கை அணி சாரபில் வேகப்பந்து வீச்சாளர் …
-
- 3 replies
- 1.7k views
-
-
யாழ்ப்பாணம் வடமராட்சி கல்வி வலயப் பாடசாலைகளுக்கு இடையிலான 20 வயதுக்கு உட்பட்ட பெண்களிற்கான வலைப்பந்தாட்டத்தில் பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலை அணி சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துள்ளது. இதன் இறுதியாட்டம் கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரி மைதானத்தில் இன்று நடைபெற்றது. இறுதியாட்டத்தில் பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலை அணியை எதிர்த்து வட இந்து மகளிர் கல்லூரி அணி மோதியது. ஆட்டம் ஆரம்பம் முதல் ஆதிக்கம் செலுத்திய பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலை அணி 28:13 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துள்ளது. …
-
- 0 replies
- 615 views
-
-
யாழ்ப்பாணம் அளவெட்டி அருணாசலம் வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி அண்மையில் நடைபெற்றது. பாடசாலை அதிபர் கு.லங்காபிரதீபன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், தெல்லிப்பழை கோட்டக் கல்விப் பணிப்பாளர் .மா.ஆனந்தகுமார், வலிவடக்குப் பிரதேச சபையின் தவிசாளர் சோ.சுகிர்தன் ஆகியோர் கலந்து கொண்டனர். https://newuthayan.com/story/15/அருணாசலம்-வித்தியாலயத்தின்-விளையாட்டுப்-போட்டி.html
-
- 0 replies
- 726 views
-
-
சர்வதேச துப்பாக்கி சுடுதல் விளையாட்டுப் போட்டி ஒன்றில் பாகிஸ்தான் குழுவினர் பங்கேற்க இந்தியா அனுமதி அளிக்காததைத் தொடர்ந்து, இந்தியாவுக்கு வரும் காலங்களில் ஒலிம்பிக் தொடர்பான நிகழ்வுகளை நடத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது. பிப்ரவரி 14 அன்று காஷ்மீரில் புல்வாமா அருகில் நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலில், 40 துணை ராணுவப் படையினர் கொல்லப்பட்டதற்கு எதிர்வினையாகவே, பாகிஸ்தான் குழுவினருக்கு இந்தியா விசா வழங்கவில்லை என்று கருதப்படுகிறது. சர்வதேச துப்பாக்கி சுடுதல் விளையாட்டு சம்மேளனம் இந்தியாவில் நடத்தவுள்ள உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தான் வீரர்கள் பங்கேற்க இருந்த த…
-
- 0 replies
- 463 views
-
-
இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் உபதலைவராக மதிவாணன் தெரிவு In இலங்கை February 21, 2019 6:53 am GMT 0 Comments 1070 by : Benitlas இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் உபதலைவராக மதிவாணன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தல் இன்று(வியாழக்கிழமை) 10.30 மணிக்கு ஆரம்பமானது. விளையாட்டுத்துறை அமைச்சின் டன்கன் வைட் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற தேர்தலில் உபதலைவராக மதிவாணன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதற்கமைய இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் உப தலைவர்கள் பதவிக்காக போட்டியிட்ட ரவீன் விக்கிரமரத்ன 82 வாக்குகளையும், மதிவாணன் 80 வாக்குகளையும் பெற்று வெற்றி பெற்றுள்ளனர். இந்த பதவிக்காக போட்டியிட்ட அமைச்சர…
-
- 0 replies
- 529 views
-
-
மேற்கிந்தியத் தீவுகளை வென்றது இங்கிலாந்து Editorial / 2019 பெப்ரவரி 21 வியாழக்கிழமை, மு.ப. 08:12 Comments - 0 மேற்கிந்தியத் தீவுகள், இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், பார்படோஸில் நேற்று இடம்பெற்ற முதலாவது போட்டியில் இங்கிலாந்து வென்றது. ஸ்கோர் விவரம்: நாணயச் சுழற்சி: மேற்கிந்தியத் தீவுகள் மேற்கிந்தியத் தீவுகள்: 360/8 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: கிறிஸ் கெய்ல் 135 (129), ஷே ஹோப் 64 (65), டரன் பிராவோ 40 (30), ஜோன் கம்பெல் 30 (28), அஷ்லி நேர்ஸ் ஆ.இ 25 (08) ஓட்டங்கள். பந்துவீச்சு: பென் ஸ்டோக்ஸ் 3/37 [8], அடில் ரஷீட் 3/74 [9], கிறிஸ் வோக்ஸ் 2/59 [10]) இங்கிலாந்து: 364/4 (48.4 ஓவ. ) (துடுப்…
-
- 0 replies
- 688 views
-
-
எடுடா வண்டிய போடுடா விசில - இம்ரான் தாகீர் ஐ.பி.எல். 2019 தொடருக்கான முதல் 2 வாரத்திற்கான போட்டி அட்டவணை நேற்று வெளியான நிலையிலேயே அவர் இந்த பதிவை டுவிட்டர் பக்கத்தில் பதிவிறக்கம் செய்துள்ளார். அந்தப் பதிவில் அவர் தெரிவித்திருப்பதாவது, "என் இனிய தமிழ் மக்களே நலமா? மார்ச் 23 ஆம் திகதி நமது கோட்டையில் களம் இறங்குகிறோம். வந்தோம் வென்றோம் சென்றோம். வருவோம் வெல்வோம் செல்வோம். இந்த வருஷமும் காளியோட ஆட்டத்த பாப்பீங்க. கொல காண்டுல வாரோம். செண்டிமெண்ட் இருக்குறவன் குறுக்க வராதீங்க. எடுடா வண்டிய போடுடா விசில" என பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவுக்கு பதில் அளிக்கும் வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ்-ன் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில், …
-
- 1 reply
- 703 views
-
-
துரையப்பா விளையாட்டரங்கின் பெயரை மாற்றுவது கண்டனத்திற்குரியது: சீ.வி.கே.சிவஞானம்! துரையப்பா விளையாட்டரங்கின் பெயரை மாற்றுவது கண்டனத்திற்குரிய விடயம் என வட.மாகாண சபை அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தபோது, “எதிர்வரும் மாநகரசபை அமர்வின் போது, யாழ்.துரையப்பா விளையாட்டு அரங்கின் பெயரை பொது விளையாட்டு மைதானமாக மாற்றுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாநகர சபை உறுப்பினர் ஒருவர் பிரேரணை முன்வைக்கவுள்ளளார். துரையப்பா விளையாட்டு அரங்கை உருவாக்கியது துரையப்பா, கடந்த 35 வருடங்களுக்கு முன்னர் உருவாக்கிய இந்த விளையாட்டு அரங்கின…
-
- 2 replies
- 884 views
-
-
விண்டிஸ் அணிக்கு எதிரான 3 ஆவது டெஸ்ட் – இங்கிலாந்து நிதான ஆட்டம்! விண்டிஸ் அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், 231 ஓட்டங்களைப் பெற்று இங்கிலாந்து நிதான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி டெஸ்ட், ஒருநாள், மற்றும் T-20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் முதலில் நடைபெற்று வரும் நிலையில், 3வதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பமாகியது. செயின்ட் லூசியாவில் ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற விண்டிஸ் அணி முதலில் பந்து வீச தீர்மானித்துள்ளது. அதன் பிரகாரம் இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்…
-
- 1 reply
- 798 views
-
-
யாழ்ப்பாணம் வலி. கிழக்கு பிரதேச எல்லே சம்பியனாக வாதரவத்தை தமிழ் நிலா அணி தெரிவு செய்யப்பட்டுள்ளது. வலி. கிழக்குப் பிரதேசத்தில் பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான இவ்வருடத்திற்குரிய குழு நிலைப் போட்டிகள் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன. அதனடிப்படையில் பிரதேச கழகங்களுக்கிடையிலான எல்லே போட்டிகள் புத்தூர் வீனஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் நேற்று நடைபெற்றன. இறுதிப் போட்டியில் வாதரவத்தை தமிழ் நிலா அணியும், புத்தூர் வீனஸ் அணியம் களமிறங்கின. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற தமிழ்நிலா அணி முதலில் த…
-
- 0 replies
- 758 views
-
-
யாழ்ப்பாண மாவட்ட பிரதேச செயலகங்களுக்கு இடையிலான ஆண்களுக்கான மேசைப்பந்தாட்ட தொடரில் யாழ்ப்பாண பிரதேச செயலக அணி கிண்ணம் வென்றது. யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி உள்ளகரங்கில் நேற்று இறுதிய ட்டம் இடம் பெற்றது. ஆண்களுக்கான இறுதியாட்டத்தில் நல்லூர் பிரதேச செயலக அணியை எதிர்த்து யாழ்ப்பாண பிரதேச செயலக அணி மோதியது. முதல் செற் ஆட்டத்தில் யாழ்ப்பாண பிரதேச செயலக அணியை பிரதிநிதித்துவப்படுத்தி மேசாக்கும், நல்லூர் பிரதேச செயலகஅணியை பிரதிநிதித்துவப்படுத்தி தனுஸஸூம் மோதிக் கொண்டனர். இதில் நல்லூர் பிரதேச செயலக அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி விளையடிய தனுஸ் 3:2 என்ற செற் கணக்கில் வெற்றி பெற்றார். …
-
- 0 replies
- 443 views
-
-
இலங்கை பாடசாலைகள் குத்துச்சண்டைச் சங்கம் தேசிய ரீதியாக நடத்திய குத்துச்சண்டைப் போட்டியில் வவுனியா புதுக்குளம் மகா வித்தியாலயம் மாணவிகள் ஒரு தங்க பதக்கத்தையும் மூன்று வெண்கல பதக்கங்களையும் பெற்றுள்ளனர். கொழும்பு இன்கிரிய மத்திய கல்லூரியில் நேற்று இந்தத் போட்டி இடம் பெற்றது. இதில் பெண்களுக்கான போட்டியில் 64-69 இடைப்பட்ட கிலோ பிரிவில் கே.லோஜனா தங்க பதக்கத்தையும், 60-64 இடைப்பட்ட கிலோ பிரிவில் எம்.மேனுகாவும், 57-60 இடைப்பட்ட கிலோபிரிவில் எஸ்.தனுசாவும் ,48-51 இடைப்பட்ட கிலோபிரிவில் என்.புகழினியும் வெண்கலப் பதக்கங்களைக் கைப்பற்றினர். அதேவேளை ஆண்களுக்கான குத்துச்சண்டை போட்டியில் வவுனி…
-
- 1 reply
- 933 views
-
-
இந்தியா அணி போராடி தோற்றது – தொடர் நியூசிலாந்து வசம்! மூன்றாவதும் இறுதியுமான T-20 போட்டியில் கடின இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி 4 ஓட்டங்களால் போராடி தோற்றுள்ளது. அதன்படி 3 போட்டிகள் கொண்ட T-20 தொடரை நியூசிலாந்து அணி 2-1 என கைப்பற்றியுள்ளது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஹெமில்டனில் ஆரம்பமான இறுதி T-20 போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இந்தியா அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்துள்ளது. அதன் பிரகாரம் முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் அதிரடியை வெளிக்காட்ட, அவ்வணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்களை மட்டுமே இழந்து 212 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. அவ்வணி சார்பில் கோலின் முன்ரோ 72 ஓட்டங்களையும், டிம் சீஃபெர்ட் 43 ஓட்டங…
-
- 0 replies
- 720 views
-
-
இந்தியா அணிக்கெதிரான முதலாவது ரி-20 போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி! இந்தியா அணிக்கெதிரான முதலாவது ரி-20 போட்டியில், நியூசிலாந்து அணி 80 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. வெலிங்டனில் இன்று நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்தியா அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. இதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 219 ஓட்டங்களை பெற்றது. இதில் அணியின் அதிகபட்ச ஓட்டமாக டிம் செய்பர்ட், 84 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் ஹர்திக் பாண்ட்யா 2 விக்கெட்டுகளையும், காலீல் அஹமட், குர்ணல் பாண்ட்யா, புவனேஸ்வர் குமார், யுஸ்வேந்திர சஹால் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர். இதனைதொடர…
-
- 0 replies
- 732 views
-
-
யாழ்ப்பாணம் காரைநகர் பிரதேச செயலக பிரிவில் பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக்கழக்களுக்கு இடையிலான வருடாந்த விளையாட்டுப் போட்டித் தொடரில் ஒர்அங்கமான இருபாலருக்குமான கபடிப் போட்டியில் பெண்கள் பிரிவில் காலநிதி விளையாட்டுக்கழக அணியும், ஆண்கள் பிரிவில் ஒளிச்சுடர் விளையாட்டுக்கழக அணியும் கிண்ணம் வென்றன. கடந்த திங்கட்கிழமை கரைநகர் இந்துக்கல்லூரி மைதானத்தில் இறுதியாட்டங்கள் இடம் பெற்றன. முதலில் இடம் பெற்ற ஆண்களுக்கான இறுதியாட்டத்தில் ஒளிச்சுடர் விளையாட்டு கழக அணியை எதிர்த்து காரை சலைஞ்சஸ் விளையாட்டு கழக அணி மோதியது. 43:26 என்ற புள்ளி அடிப்படையில் ஒளிச்சுடர் விளையாட்டு கழக அணி வெற்றி பெற்றது. …
-
- 0 replies
- 612 views
-
-
கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக்கழகங்களுக்கு இடையிலான வருடாந்த விளையாட்டுப் போட்டித் தொடரில் ஒர்அங்கமான ஆண்களுக்கான மென் பந்துத் துடுப்பாட்டத் தொடரில் சென்.பீற்றஸ் விளையாட்டுக்கழக அணி கிண்ணம் வென்றது. கடந்த திங்கட்கிழமை முல்லையடி விநாயகர் விளையாட்டுக்கழக மைதானத்தில் இறுதியாட்டம் இடம் பெற்றது. இதில் துர்க்கா விளையாட்டுக்கழக அணியை எதிர்த்து சென்.பீற்றஸ் விளையாட்டுக்கழக அணி மோதியது. முதலில் துடுப்பெடுத்தாடிய துர்கா விளையாட்டுக்கழக அணியினர் 8 பந்துப்பரிமாற்றங்கள் நிறைவில் சகல இலக்கினையும் இழந்து 44 ஓட்டங்களைப் பெற்றது. …
-
- 0 replies
- 643 views
-
-
அட்லாண்டாவில் அமைக்கப்பட்ட சுப்பர் பவுல் விளையாட்டரங்கத்தின் வான்வழி காட்சிகள்! அமெரிக்காவின் ஜோர்ஜியா மாநிலத்தின் தலைநகர் அட்லாண்டாவில் அமைக்கப்பட்டுள்ள மேர்சிடிஸ் பென்ஸ் சுப்பர் பவுல் விளையாட்டரங்கத்தின் வௌிப்புற காட்சிகளை அமெரிக்க சுங்கத்துறை மற்றும் கரையோர பாதுகாப்பு பிரிவு முகவரக துறையினர் வௌியிட்டுள்ளனர். கால்பந்தாட்ட சுற்றுப்போட்டிகளை நடத்துவதற்காக மிகப் பாரிய பொருட் செலவில் உருவாக்கப்பட்ட அதிசொகுசு உள்ளரக அரங்கம் தயார்படுத்தப்பட்டுள்ள நிலையில் அதன் கம்பீர தோற்றத்தை உலங்கு வானூர்திகள் மூலம் காட்சிப்படுத்தியுள்ளனர். நியூ இங்கிலாந்தின் தேசபக்தர்கள் லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்ஸுக்கு எதிராக அமெரிக்காவின் மிகப்பெரிய நிகழ்ச்சியாக கருதப்படுவதில் எதிர்பார்க்கப்படுவார்…
-
- 1 reply
- 571 views
-
-
தடுமாறிய ஆஸி.யை மீட்ட பேர்ன்ஸ் - ஹெட் இலங்கைக்கு எதிரான இரண்டாவது முரளி - வோர்ன் கிண்ண டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியின் முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் அவுஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுக்களை இழந்து 384 ஓட்டங்களை குவித்துள்ளது. அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி அவுஸ்திரேலிய அணியுடன் இரண்டு போட்டிகள் கொண்ட முரளி - வோர்ன் கிண்ண தொடரில் விளையாடி வருகிறது, இதில் முதலாவதாக நடைபெற்று முடிந்த டெஸ்ட் தொடரை அவுஸ்திரேலிய அணி கைப்பற்றியுள்ள நிலையில், தொடரின் இறுதியும் இரண்டாவதுமான போட்டி இன்று கேன்பிராவில் ஆரம்பமானது. இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்தது. அதன்படி அவுஸ்த…
-
- 2 replies
- 902 views
-
-
கடைசி ஒருநாள் போட்டி - நியூசிலாந்து வெற்றி பெற 253 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா வெல்லிங்டனில் நடைபெற்று வரும் 5வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு 253 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. வெல்லிங்டன்: இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வெல்லிங்டனில் இன்று காலை 7.30 மணிக்கு தொடங்கியது. இந்திய அணி முதல் 3 போட்டியில் வெற்றி பெற்று ஏற்கனவே தொடரை கைப்பற்றி இருந்தது. விராட்கோலி இல்லாத அணி 4-வது போட்டியில் 92 ரன்னில் சுருண்டு மோசமான தோல்வியை தழுவியது. இதனால் இன்றைய கடைசி போட்டிக்கான அணியில் 3 மாற்றம் இருந்தது. காயத்தில் இருந்து குண…
-
- 1 reply
- 820 views
-
-
திமுத் காருணாரத்னவுக்கு காயம் அவுஸ்திரேலியவுக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணி வீரர் திமுத் காருணாரத்னவுக்கு துடுப்பாட்டத்தின் போது காயமேற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். 46 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையிலேயே அவருக்கு காயமேற்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சாளர் கும்மின்ஸ் வீசிய பந்து அவர் மீது பட்டதிலேயே திமுத் காருணாரத்ன காயமடைந்துள்ளார். அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் இலங்கை அணி துடுப்பெடுத்தாடிக் கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. http://tamil.adaderana.lk/news.php?nid=111022
-
- 0 replies
- 830 views
-
-
2019 ஆசிய கிண்ணத்தை கைப்பற்றி வரலாற்று வெற்றியை பதிவு செய்தது கட்டார்! அபுதாபியில் நடைபெற்ற ஜப்பான் அணிக்கு எதிரான ஆசிய கிண்ண உதைபந்தாட்ட இறுதி போட்டியில் கட்டார் அணி 3–1 என்ற கோல் அடிப்படையில் அபார வெற்றி பெற்று கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது. ஐக்கிய அரபு இராஜ்யத்தை சொந்த நாட்டில் வீழ்த்தி முதன் முறையாக ஆசிய கிண்ண உதைபந்தாட்ட இறுதிப் போட்டிக்கு கட்டார் அணி தெரிவாகியது. இந்நிலையில் அபுதாபியில் உள்ள, ஸாய்ட் ஸ்போர்ட் சிட்டி மைதானத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இறுதி போட்டி இடம்பெற்றது. இதில் இறுதிப் போட்டியில் நான்கு முறை கிண்ணத்தை வென்ற ஜப்பான் அணியை எதிர்கொண்ட கட்டார் அணி 3– 1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்று வரலாற்று வெற்றியை பதிவு செய்தது. இந்த ப…
-
- 0 replies
- 694 views
-
-
90 ஓட்டத்தால் பணிந்தது நியூஸிலாந்து! நியூஸிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 90 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. இன்று காலை 7.30 மணிக்கு நியூஸிலாந்தின், மவுண்ட் மன்கன்யில் ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடி 324 ஓட்டங்களை பெற்றது. 325 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த நியூஸிலாந்து அணியின் முதல் விக்கெட் 23 ஓட்டத்துக்கு வீழ்த்தப்பட்டது. அதன்படி மார்டீன் குப்டீல் 15 ஓட்டத்துடன் புவனேஸ்வர் குமாரின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இரண்டாவது விக்கெட்டுக்காக அதை் தலைவர் களமிறங்கி முன்றோவுடன் ஜோடி சேர்ந்தாட நியூஸிலாந்து அணி 8 ஆவது ஓவருக்காக…
-
- 6 replies
- 957 views
-