விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
அமைதியாக தூங்கு தம்பி.. நானும் ஒரு நாள் வருவேன்.. மைக்கல் கிளார்க் உருக்கம்! மாக்ஸ்வில்லி, நியூ செளத்வேல்ஸ், ஆஸ்திரேலியா: மறைந்த கிரிக்கெட் வீரர் பில் ஹியூக்ஸுக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் மைக்கேல் கிளார்க் உருக்கமான இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். பேச முடியாமல் துக்கம் தொண்டையை அடைக்க மிகுந்த சிரமத்துடன் தனது இரங்கல் செய்தியை வாசித்த கிளார்க்கின் நிலை மிகவும் சோகமாக இருந்தது. ஹியூக்ஸ் மரணமடைந்தது முதலே கிளார்க் சோகமாக காணப்பட்டார். தனது தம்பி போலவே ஹியூக்ஸுடன் நெருக்கமாக பழகி வந்தவர் கிளார்க். இதனால் ஹியூக்ஸின் மரணம், கிளார்க்கை உலுக்கி விட்டது. அமைதியாக தூங்கு தம்பி.. நானும் ஒரு நாள் வருவேன்.. மைக்கல் கிளார்க் உருக்கம்! இந்த நிலையில் ஹியூக்ஸ் இறுதிச்…
-
- 3 replies
- 1.3k views
-
-
தரவரிசையில் 2-ஆம் இடத்தில் உள்ள ஆஸ்திரேலியாவுக்கு 6-ஆம் இட இந்தியா சவால் அளிக்குமா? பிலிப் ஹியூஸ் அகால மரணத்திற்குப் பிறகு கனத்த இதயத்துடன் ஆஸ்திரேலியா நாளை அடிலெய்டில் கிளார்க் தலைமையில் களமிறங்குகிறது. மாறாக உற்சாகமான கோலியின் தலைமையில் புதிய திருப்பம் காண இந்தியா எதிர்கொள்ள தயாராக இருக்கிறது. இந்திய அணியில் புவனேஷ் குமார் ஆடமுடியாது போயுள்ளது ஒரு பின்னடைவே. ஆனாலும் நாளை காலைதான் கூற முடியும் என்று கூறியுள்ளார் கோலி. புவனேஷ் குமார் சிக்கனமாக வீசுவதோடு, தொடக்கத்தில் விக்கெட்டுகளைக் கைப்பற்றும் திறமையை சமீபமாக இங்கிலாந்து அணிக்கு எதிராக நிரூபித்துள்ளார். மேலும், பின்னால் பேட்டிங்கில் களமிறங்கி அருமையான திறமையை வெளிப்படுத்தி ஒரு முழுமையான டெஸ்ட் ஆல்ரவுண்டராக மாற…
-
- 1 reply
- 347 views
-
-
‘நடால் ஹெட் பேண்ட் கழற்றிய அந்த நிமிடம்!’ -அதிர்ச்சியடைந்த பார்வையாளர்கள் #US_Open அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் காயம் காரணமாக அரையிறுதிப்போட்டியில் இருந்து நடால் பாதியில் வெளியேறினார். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் அரையிறுதிப்போட்டிகள் இன்று நடைப்பெற்றது. இதில் முதல்நிலை வீரர் ரபேல் நடால் - டெல்போட்ரோவை எதிர்க்கொண்டார். இதில் முதல் செட்டில் இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. அப்போது நடாலுக்கு காலில் வலி ஏற்பட்டதால் சிகிச்சை எடுத்துக்கொண்டார். காலில் வலி குறைவதற்காக டேப் ஒட்டப்பட்டது. கடுமையாக போராடிய நடால் இந்த செட்டை 6-7என்ற க…
-
- 0 replies
- 531 views
-
-
இங்கிலாந்து அணியை நீக்க திட்டம்? *உலக கோப்பை தொடரில் அதிர்ச்சி ஜனவரி 17, 2015. துபாய்: இங்கிலாந்து அணியை உலக கோப்பை தொடரில் இருந்து நீக்குவதற்கான வேலைகளில் ஐ.சி.சி., இறங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இங்கிலாந்து உலக கோப்பை அணிக்கு கேப்டனாக, அயர்லாந்தை சேர்ந்த இயான் மார்கன் உள்ளார். தவிர, கேரி பேலன்ஸ் (ஜிம்பாப்வே), பென் ஸ்டோக்ஸ் (நியூசிலாந்து) உள்ளிட்ட வீரர்கள் வேறு நாட்டினை சேர்ந்தவர்கள். வேகப்பந்து வீச்சாளர் ஜோர்டன், வெஸ்ட் இண்டீசின் பார்படாசை சேர்ந்தவர். அதாவது, இங்கிலாந்து உலக கோப்பை அணியில் தேர்வு செய்யப்பட்ட வீரர்களில் பலர், பாரம்பரியமாக இங்கிலாந்தை சேர்ந்தவர்கள் அல்ல. விதியால் பலன்: ஐ.சி.சி., விதி 2010, 3.3ன் படி, ‘ தேர்வு செய்யப்ப…
-
- 0 replies
- 289 views
-
-
பிராட் ஹாட்டின் ஒரு நாள் போட்டிகளிலிருந்து ஓய்வு உலகக் கிண்ணத்தை வென்ற அவுஸ்திரேலிய அணியின் விக்கெட் காப்பாளர் பிராட் ஹாட்டின் ஒரு நாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுகிறார். பி.ஜே. என்ற பட்டப்பெயரால் அழைக்கப்படும் ஹாட்டின் இடது கை துடுப்பாட்ட வீரராவார். இதுவரை 126 போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர், 115 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ளார். 2 சதங்களையும், 16 அரை சதங்களையும் அடித்துள்ள இவர், இதுவரை 3122 ஓட்டங்களை குவித்துள்ளார். அதே போல் விக்கெட் காப்பாளர் பொறுப்பில் 170 பிடிகளை எடுத்துள்ளதுடன் 11 ஸ்டம்பிங்களையும் செய்துள்ளார். இந்நிலையில் ஒரு நாள் போட்டிகளில் இருந்து இவர் ஓய்வு பெறுவதாக தற்போது அறிவித்துள்ளார். htt…
-
- 0 replies
- 438 views
-
-
எடுடா வண்டிய போடுடா விசில - இம்ரான் தாகீர் ஐ.பி.எல். 2019 தொடருக்கான முதல் 2 வாரத்திற்கான போட்டி அட்டவணை நேற்று வெளியான நிலையிலேயே அவர் இந்த பதிவை டுவிட்டர் பக்கத்தில் பதிவிறக்கம் செய்துள்ளார். அந்தப் பதிவில் அவர் தெரிவித்திருப்பதாவது, "என் இனிய தமிழ் மக்களே நலமா? மார்ச் 23 ஆம் திகதி நமது கோட்டையில் களம் இறங்குகிறோம். வந்தோம் வென்றோம் சென்றோம். வருவோம் வெல்வோம் செல்வோம். இந்த வருஷமும் காளியோட ஆட்டத்த பாப்பீங்க. கொல காண்டுல வாரோம். செண்டிமெண்ட் இருக்குறவன் குறுக்க வராதீங்க. எடுடா வண்டிய போடுடா விசில" என பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவுக்கு பதில் அளிக்கும் வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ்-ன் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில், …
-
- 1 reply
- 713 views
-
-
திருநெல்வேலி விளையாட்டுக்கழக அணி ஜே.பி.எல்.க்கு தகுதி யாழ்ப்பாணம் பிறிமியர் லீக் எனப்படும் ஜே.பி.எல் டுவெண்டி 20 கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் தகுதிகாண் போட்டியில் திருநெல்வேலி விளையாட்டுக்கழக அணி வெற்றிபெற்று ஜே.பி.எல் சுற்றில் விளையாடத் தகுதி பெற்றுள்ளது. யாழ்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (14) நடைபெற்ற தகுதிகாண் சுற்றில் சுழிபுரம் விக்டோரியன்ஸ் அணியும் திருநெல்வேலி விளையாட்டுக்கழக அணியும் மோதின. நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய திருநெல்வேலி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 245 ஓட்டங்களைப் பெற்றது. என்.லவகாந் அதிரடியாக ஆடி 120 ஓட்டங்களையும், எஸ்.சுரேந்திரன் 36, என்.சிவராஜ் 27 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்த…
-
- 0 replies
- 282 views
-
-
தோனியை விடுவிக்க சென்னை அணி நிர்வாகம் முடிவு? ஐ.பி.எல். போட்டியில் விளையாட சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை அணியின் கேப்டன் தோனி, சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இனி எந்த அணிக்காக விளையாடுவார்கள் என்ற கேள்வி ரசிகர்கள் முன் எழுந்து நிற்கிறது. லோதா கமிட்டியின் தண்டனை விபரம் வெளியிட்ட பின்னர் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாகிகள் சந்தித்து ஆலோசனை நடத்தினர். சென்னை சூப்பர் கிங்ஸ் எப்படி ஒரு மிகப் பெரிய பிராண்ட் வேல்யூ உள்ள அணியோ அது போல் தோனியும் பிராண்ட் வேல்யூ மிக்க ஒரு வீரர். எனவே அவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தொடர கட்டாயப்படுத்த வேண்டாம் என்ற முடிவுக்கு சென்னை அணி நிர்வாகத்தினர் வந்திருப்பதாக கூறப்ப…
-
- 2 replies
- 554 views
-
-
மட்டையிலும் பந்திலும் மனிதத்தை இழக்கக்கூடாது -கப்டன் கூல் அட்வைஸ் October 03, 2015 ஆக்ரோசமாக விளையாடலாம். ஆனால், அந்த ஆக்ரோசம் தவறான நடத்தைக்குக் கொண்டு சென்று விடக்கூடாது என்று கருத்துத் தெரிவித்துள்ளார் டோனி. இந்திய டெஸ்ட் அணித்தலைவர் கோக்லி, இயக்குநர் ரவி சாஸ்திரி, இந்திய அணியின் வீரர்கள் எனப்பலரும் ஆக்ரோசம் தொடர்பாக எதிர்மாறான கருத்துத் தெரிவித்துள்ள நிலையில், தென்னாபிரிக்காவுக்கு எதிரான ரி-20 தொடர் ஆரம்ப மாகும் முன்னதாக ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து டோனி ஆக்ரோசம் தொடர்பாக தனது நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளார். டோனி மேலும் தெரிவித்ததாவது – ஆக்ரோசம் என்பதற்கு சூடான வார்த்தைகளை பரிமாறிக் கொள்வதும், உடலளவில் இடித்துத்தள்ளுவதும் என்று அர்த்தம் கிடையாது. மிகச் சிறந்த வ…
-
- 0 replies
- 438 views
-
-
விராட் கோலி செய்கையால் நெகிழ்ந்து போன மொகாலி பிட்ச் பராமரிப்பாளர்! இந்தியா தென்ஆப்ரிக்க அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி 5ஆம் தேதி மொகாலி நகரில் தொடங்குகிறது. இரு அணி வீரர்களும் தற்போது மொகாலி மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராட் கோலியும், நேற்று மொகாலி பிட்சை பார்வையிட்டார். மொகாலி மைதானத்திற்குள் வந்த விராட் கோலி, முதல் வேலையாக அந்த மைதானத்தின் பிட்ச் பராமரிப்பாளர் 73 வயது தல்ஜித் சிங்கின் பாதங்களை தொட்டு வணங்கினார். கடந்த 20 வருடங்களாக தல்ஜித் சிங் இந்த பிட்ச்சின் பராமரிப்பாளராக இருந்து வருகிறார். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, அவரது காலை தொட்டு வணங்கியது. தல்ஜித் சிங்கை மிகுந்த உணர்ச்சிவசப்பட வைத்தது. வி…
-
- 1 reply
- 198 views
-
-
அதிபார குத்துச்சண்டையில் விளாடிமிர் கிளிட்ஷ்கோவை வீழ்த்தி புதிய உலக சம்பியனானார் டைசன் ஃபியூரி அதிபாரப் பிரிவு குத்துச்சண்டை போட்டிக்கான புதிய உலக சம்பியன் பட்டங்களை பிரித்தானிய டைசன் ஃபியூரி சுவீகரித்துக்கொண்டார். டஸ்ல்டோர்வ் எஸ்ப்ரிட் அரங்கில் நேற்று முன்தினம் நடைபெற்ற அதிபாரப் பிரிவுக்கான உலக சம்பயின் பட்டத்திற்கான குத்துச்சண்டைப் போட்டியில் நடப்பு உலக சம்பியனான யுக்ரைனிய வீரர் விளாடிமிர் கிளிட்ஷ்கோவை 115–112, 115–112, 116–111 என்ற மூன்று மத்தியஸ்தர்களின் புள்ளிகளின் அடிப்படையில் 27 வயதான டைசன் ஃபியூரி வெற்றிகொண்டார். பொப் ஃபிட்சிமன்ஸ்…
-
- 0 replies
- 1.3k views
-
-
இந்திய தொடரிலிருந்து விலகும் தமிம் இக்பால் : முஷ்பிகுர் ரஹீமின் அதிரடி அறிவிப்பு By Mohamed Azarudeen - 28/10/2019 பங்களாதேஷ் கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதோடு, இந்திய கிரிக்கெட் அணியுடன் 3 போட்டிகள் T20 தொடர் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் என்பவற்றில் ஆடவிருக்கின்றது. இந்த சுற்றுப்பயணத்தில் இருந்து பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான தமிம் இக்பால், தனது சொந்தக் காரணங்களை அடிப்படையாக கொண்டு விலகுவதாக குறிப்பிட்டிருக்கின்றார். தமிம் இக்பால் இன்னும்…
-
- 0 replies
- 384 views
-
-
மலையக விளையாட்டு வீரர்கள் தற்போது நாளுக்கு நாள் விளையாட்டுத்துறையில் சர்வதேச ரீதியில் வெற்றிவாகை சூடி இலங்கைக்கும் மலையகத்திற்கும் பெருமை சேர்த்து வருகின்றனர். தற்போது அனைவரும் மலையகத்தையும் விளையாட்டுத்துறையில் திரும்பி பார்க்கும் அளவிற்கு இந்த சாதனைகள் அமைந்து இருக்கின்றன. இந்த சாதனைகளை ஆண்கள் மாத்திரமே தனக்கென சொந்தம் கொண்டாடி கொண்டிருக்கும் இவ்வேளையில் மலையக பெண்களும் சலைத்தவர்கள் அல்ல என்று சொல்லும் அளவிற்கு புஸ்ஸல்லாவ கட்டுகித்துலை பெரட்டாசி தோட்டம் மேமொழி பிரிவை சேர்ந்த சின்னகருப்பன் பவாணிஸ்ரீ என்ற சிங்க பெண் தற்போது நேபாளத்தில் நடந்து முடிந்த 13 வது தெற்காசிய மெய்வல்லுனர் விளையாட்டு போட்டியில் கத்தி சண்டையில் பங்குபற்றி வெங்கல பதக்கத்தை வென்று வெற்றியை …
-
- 0 replies
- 1k views
-
-
நியூஸிலாந்து ரசிகர்கள் எல்லை மீறுகின்றனர்: டேவிட் வார்னர் பாய்ச்சல் ஸ்மித், வார்னர். | படம்: ஏ.எஃப்.பி. நடந்து முடிந்த நியூஸிலாந்துக்கு எதிரான தொடரில் அந்நாட்டு ரசிகர்கள் மைதானத்தில் ஆஸ்திரேலிய வீரர்களை கடுமையாக வசைமழை பொழிந்ததாக ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் கொதித்தெழுந்துள்ளார். எல்லைக்கோட்டருகே பீல்ட் செய்த ஜோஷ் ஹேசில்வுட் உட்பட மற்றொரு பவுலர் ஆகியோரை கிறைஸ்ட்சர்ச் டெஸ்டின் போது ரசிகர்கள் ஆபாசமான வசைமொழியினால் திட்டினார்கள் என்று டேவிட் வார்னர் ஆவேசமடைந்துள்ளார். இது குறித்து ஏபிசி-க்கு டேவிட் வார்னர் கூறியதாவது: உள்நாட்டிலோ, வெளிநாட்டிலோ, வீரர்களுக்கு சில வசைகள் வந்து விழும் என்பது தெரிந்ததே. ஆனால் நாள் முழுதும், …
-
- 0 replies
- 360 views
-
-
ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து கிரிக்கெட் வீரர் ஓய்வு! நியூசிலாந்து அணியின் ஆல்-ரவுண்டர் கிராண்ட் எலியாட் சர்வதேச ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி அரை இறுதியில் தோல்வி கண்ட சில தினங்களுக்குள் அந்த அணியின் ஆல்-ரவுண்டர் கிராண்ட் எலியாட் சர்வதேச ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 37 வயதான கிரான்ட் எலியாட் தனது ஒருநாள் போட்டி வாழ்க்கை முடிவுக்கு வந்து விட்டதாக தெரிவித்துள்ளார். ஆனால் அவர் மற்ற வகையான (டெஸ்ட், 20 ஓவர்) போட்டியில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. கடந்த ஒருநாள் உலக கிண்ண போட்டியில் நியூசிலாந்து அணி…
-
- 0 replies
- 430 views
-
-
லா லிகா தொடர்: மீண்டும் முதலிடத்தில் பார்சிலோனா ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையே இடம்பெற்று வரும் லா லிகா தொடரில், கடந்த சனிக்கிழமை (30) இடம்பெற்ற போட்டிகளின்போது வெவ்வேறு நேரங்களில் மூன்று அணிகள் முன்னிலையில் இருந்தபோதும் இறுதியாக பார்சிலோனா அணி தனது முதலிடத்தைப் பெற்றுள்ளது. றியல் மட்ரிட், றியல் சொஸைடட் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியின் இறுதி நேரங்களில் றியல் மட்ரிட்டின் கரித் பேல் பெற்ற கோலின் காரணமாக அவ்வணி 1-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று, லா லிகா புள்ளிகள் தரவரிசையில் 84 புள்ளிகளைப் பெற்று ஒரு கட்டத்தில் முன்னிலைக்கு வந்திருந்தது. இப்போட்டியில் காயம் காரணமாக, அவ்வணியின் கிறிஸ்டியானோ ரொனால்டோ, கரிம் பென்ஸீமா ஆகியோர் விளையாடவில்லை …
-
- 0 replies
- 299 views
-
-
03 Oct, 2025 | 02:38 PM கனடா, மெக்சிக்கோ மற்றும் அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகள் இணைந்து நடத்தும் 2026 ஃபிபா உலகக்கிண்ண கால்பந்து போட்டிக்கான உத்தியோகபூர்வ பந்தான 'ட்ரையோண்டா' (TRIONDA)வை ஃபிபா (FIFA) அமைப்பு அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. ட்ரையோண்டாவின் சிறப்பம்சங்கள் அடிடாஸ் (Adidas) நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட இந்தப் பந்து, மூன்று நாடுகளின் ஒற்றுமை மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டை பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 1. பெயரின் பின்னணி: 'ட்ரையோண்டா' என்ற பெயரானது, ஸ்பானிய மொழியில் "மூன்று அலைகள்"(Three Waves) என்று பொருள்படும்.'ட்ரை' (Tri) என்பது போட்டியை நடத்தும் மூன்று நாடுகளையும், 'ஓண்டா' (Onda) என்பது அலை அல்லது உற்சாகத்தையும் குறிக்கிறது. 2. வடிவமைப்பு மற…
-
- 0 replies
- 147 views
- 1 follower
-
-
மொத்த பணப்பரிசு 28.1 மில்லியன் யூரோக்களை வாரி வழங்கும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் இன்று ஆரம்பம் சர்வதேச டென்னிஸ் அரங்கில் தூய்மையின் அடையாளமாக விளங்குவதும் வருடத்தின் மூன்றாவது மாபெரும் (க்ராண்ட் ஸ்லாம்) டென்னிஸ் போட்டியாக அமைவதுமான விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் இன்று முதல் ஜூலை 10ஆம் திகதிவரை நடைபெறவுள்ளன. விம்பிள்டன் டென்னிஸ் வரலாற்றில் இவ்வருடம் 130ஆவது அத்தியாயமாக நடைபெறும் போட்டிகளில் 28.1 மில்லியன் யூரோக்கள் மொத்த பணப் பரிசாக வழங்கப்படவுள்ளது. இவ் வருடம் முதல் தடவையாக ஒற்றையருக்கான சக்கர இருக்கை டென்னிஸ் போட்டி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதா…
-
- 16 replies
- 1.1k views
-
-
இங்கிலாந்தை மிரட்டிய இம்ருல் கயேஸ், ஷாகிப்: வங்கதேசம் தோல்வி வங்கதேச வீரர் இம்ருல் கயேஸ் சதம் அடித்து மட்டையை உயர்த்திய காட்சி. | படம்: ஏ.எஃப்.பி. வங்கதேசத்தின் மிர்பூரில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி வங்கதேசத்தை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்று முன்னிலை பெற்றது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து பென் ஸ்டோக்ஸ் விளாசல் சதத்தின் மூலம் 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 309 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய வங்கதேச அணி 47.5 ஓவர்களில் 288 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இங்கிலாந்தின் அறிமுக வீச்சாளர் ஜேக் பால் அறிமுக போட்டியிலேயே 5 விக்…
-
- 0 replies
- 329 views
-
-
'சிறந்த உப தலைவராக இருக்கவில்லை' அவுஸ்திரேலிய அணியின் தலைவராக றிக்கி பொன்டிங் இருந்த போது, அவருக்குப் பொருத்தமான உப தலைவராக தான் இருந்திருக்கவில்லை என, மைக்கல் கிளார்க் ஏற்றுக் கொண்டுள்ளார். அவரது புதிய சுயசரிதைப் புத்தகத்திலேயே, அவர் இதை ஏற்றுக் கொண்டுள்ளார். 2013ஆம் ஆண்டு, தனது சுயசரியை வெளியிட்ட றிக்கி பொன்டிங், தனது உப தலைவராக இருந்த மைக்கல் கிளார்க்குடன் காணப்பட்ட தடுமாற்ற உறவை விவரித்திருந்தார். இந்நிலையிலேயே, தனது சுயசரிதைப் புத்தகத்திலும் அது குறித்து, மைக்கல் கிளார்க் எழுதியுள்ளார். "உப தலைவராக என் மீது, சில விடயங்களில் ஏமாற்றமடைந்ததாக, அவரது சுயசரிதைப் புத்தகத்தில் றிக்கி எழுதியுள்ளார்.…
-
- 1 reply
- 516 views
-
-
தோற்ற பிறகு மான்செஸ்டர் சிட்டி அணி வீரரிடம் நிதானம் இழந்த ‘லயன்’ மெஸ்ஸி தோல்வி அதிர்ச்சியில் பார்சிலோனாவின் ஜேவியர் மஸ்சரானோ, லயோனல் மெஸ்ஸி, நெய்மர். | படம்: ஏ.எஃப்.பி. மான்செஸ்டர் சிட்டி அணிக்கு எதிராக சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் பார்சிலோனா அணி 1-3 என்ற கோல் கணக்கில் தோல்வி தழுவிய பிறகு மெஸ்ஸி மான்செஸ்டர் சிட்டி வீரர் ஒருவருடன் மோதல் மேற்கொண்டதாக ஸ்பானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மெஸ்ஸி, பிரேசில் நட்சத்திரம் நெய்மர் ஆகியோர் இருந்தும் மான்செஸ்டர் சிட்டி அணியிடம் பார்சிலோனா தோல்வி தழுவியது குறிப்பிடத்தக்கது. ஸ்பானிய செய்தித் தாள்களான ‘முண்டோ டிபோர்டிவோ’ மற்றும் மார்கா ஆகியவை தனது செய்தியில் பார்சிலோனா அணிக்…
-
- 1 reply
- 345 views
-
-
'கிரிக்கெட்டை மேம்படுத்த வேண்டும்' வா.கிருஸ்ணா கிழக்கு மாகாணத்தில் விளையாட்டு மைதானங்களைப் புனரமைத்து கிரிக்கெட் விளையாட்டினை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கப்போவதாக, இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழுவின் தலைவரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான சனத் ஜயசூரிய தெரிவித்தார். மட்டக்களப்பு சென்றலைட் விளையாட்டுக்கழகத்தின் 25வது ஆண்டு நிறைவினையொட்டிய நிகழ்வு, கடந்த வெள்ளிக்கிழமை (20) மட்டக்களப்பில் நடைபெற்றது. மட்டக்களப்புக்கு விஜயம் செய்த சனத் ஜெயசூரியவுக்கு, மெதடிஸ்த மத்திய கல்லூரியில் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது. …
-
- 0 replies
- 835 views
-
-
கிறிஸ்ரியானோ றொனால்டோவின் அதிசிறந்த 10 கோல்கள் (2016)
-
- 0 replies
- 396 views
-
-
இலங்கை - பங்களாதேஷ் முதலாவது இருபதுக்கு-20 போட்டி ; ரசல் ஆர்னோல்டுக்கு திருமண கோரிக்கை ; ரசல் எடுத்த அதிரடி முடிவு இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு-20 போட்டியின் போது கிரிக்கெட் வர்ணனையாளரான ரசல் ஆர்னோல்டுக்கு திருமண கோரிக்கை விடுத்த சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இலங்கையின் பிரபல கிரிக்கெட் வர்ணனையாளரான ரசல் ஆர்னோல்டுக்கு நேற்றைய தினம் இடம்பெற்ற கிரிக்கெட் போட்டியின் போது பெண்ணொருவர் தன்னை திருமண செய்யுமாறு பதாதை ஏந்திய சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பெண் ஏந்திய பதாதையை கண்ணுற்ற ரசல் ஆர்னோல்ட் போட்டியின் போது எதுவும் தெரிவிக்காது மௌனம் காத்துவிட்டு, போட்டி முடிவடைந்த பின் …
-
- 0 replies
- 347 views
-
-
இரண்டாவது முறையாகவும் இடம்பெறவுள்ள கிறாஸ்ஹொப்பேர்ஸ் பிறீமியர் லீக் யாழ்ப்பாணத்தில் யாழ் கிறாஸ்ஹொப்பேர்ஸ் விளையாட்டுக் கழகமானது தமது கழகத்தின் முன்னாள் வீரர்களான ராஜசிங்கம் றொஹான் மற்றும் சிவசங்கர் ஆகியோரது ஞாபகார்த்தமாக நடாத்திவரும் அணிக்கு 06 பேர் விளையாடும் 05 ஓவர்கள் கொண்ட கிறாஸ்ஹொப்பேர்ஸ் பிறீமியர் லீக் (ஜி.பி.எல்) போட்டித் தொடர் இரண்டாவது முறையாக இவ்வருடமும் மிகவும் கோலாகலமாக இடம்பெறவிருக்கின்றது. ரொஹான் மற்றும் சங்கர் ஆகியோர் 1989ஆம் ஆண்டு கிறாஸ்ஹொப்பேர்ஸ் அணிக்காக முரசொலி கிரிக்கெட் கிண்ணத்தினைப் பெற்றுக்கொடுத்ததில் முக்கிய பங்காளிகளாவர். முரசொலி கிரிக்கெட் தொடர் 6 பேர் விளையாடும் 5 ஓவர்கள் கொண்ட போட்டியாகவே அமை…
-
- 0 replies
- 615 views
-