Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. கருத்தாடல் த.தே.ம.முன்னணி சரியான முடிவுகள் எடுக்கிறதா?கஜேந்திரகுமார்.

  2. தோல்வி நெருக்கடி தற்காலிக ஒற்றுமை-நிலாந்தன் மகாதேவா

    • 0 replies
    • 692 views
  3. ஜனநாயகம் பறிபோகிறது- சிங்களக் கட்சிகளின் கூக்குரலும் தமிழர்களின் அரசியல் விடுதலையும்! By sharmi - இலங்கை ஒற்றையாட்சி அரசின் ( (Unitary State) நீதித்துறை எப்போதும் சுயாதீனமாகச் செயற்பட்டதாகக் கூற முடியாது. சில நேரங்களில் சுயாதீனமாகச் செயற்பட்டது என்று கூறினாலும் அது சிங்கள நிலை சார்ந்ததாக அமைந்திருக்கும். ஆனாலும் ஆட்சியாளர்களின் தேவை கருதி சில முக்கியமான சந்தர்ப்பங்களில், சுயாதீனத் தன்மை இழந்ததும் உண்டு. 1999 ஆம் ஆண்டு சந்திரிகா இரண்டாவது தடவையாக ஜனாதிபதியாகப் பதவியேற்றதும் சிறாணி பண்டாரநாயக்கவை மூப்பு நிலைக்கு மாறாக உயர் நீதிமன்ற நீதியரசராக நியமித்திருந்தார். …

  4. வெளிக் கிளம்பும் பூதங்கள் கிணறு வெட்டப்போய், பூதம் கிளம்பிய’ கதைபோல, உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பில் எதிர்பாராத, ஆச்சரியமான தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் அளிக்கப்படும் சாட்சியங்கள், இதற்குப் பின்னால் பெரியதொரு வலைப்பின்னலும் மறைகரமும் இருந்திருக்கின்றன என்ற சந்தேகத்தை, மேலும் வலுவடையச் செய்து கொண்டிருக்கின்றன. 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி, நாட்டின் பல்வேறு இடங்களில் உள்ள தேவாலயங்களிலும் நட்சத்திர ஹோட்டல்களிலும் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்கள் மிகப் பாரதூரமானவை. இதனால் ஏற்பட்ட உயிர், உடமை இழப்புகளும் அதன் பின்னர் இனங்களுக்கு இடையில் ஏற்பட்ட நம்பிக்கைய…

  5. தேயிலைச் சாயம்’: பேசப்படாத மறுபக்கம் பா.நிரோஸ் மலையகத் தமிழ் மக்களின் வாழ்க்கையை சிறந்த முறையில் முன்னேற்றுவதற்காகவும் கொள்கை ரீதியான கலந்துரையாடலை உருவாக்கும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டும் ‘தேயிலைச் சாயம்’ என்கிறப் புகைப்படக் கண்காட்சி, கொழும்பு லயனல் வென்ட் கலையகத்தில், கடந்த வாரத்தின் இறுதியில் நடைபெற்றது. மலையக மக்களின் வாழ்வியலை, புகைப்படங்களின் வாயிலாக சர்வதேசத்துக்கு உணர்த்திய மிகச் சிறந்த ஓர் ஆவணப்படமாக இந்தக் கண்காட்சி அமைந்திருந்தது என்றால் அது மிகையாகாது. மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தினூடாக, ஊவா சக்தி நிறுவனவத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்புகைப்படக் கண்காட்சி, நுவரெலியா, பதுளை ஆகிய மாவட்டங்களிலும் நடைபெற்றிருந்தது. ஓகஸ்ட் …

  6. இருபதாவது திருத்தச் சட்டமூலத்தை ஏன் எதிர்க்கிறார்கள்? ஜனாதிபதித் தேர்தலிலோ நாடாளுமன்றத் தேர்தலிலோ ஒரு கட்சி வெற்றி பெற்றால், நாட்டை ஆட்சி செய்ய, அந்தக் கட்சிக்கு மக்கள் ஆணை வழங்கியதாகவே கருதப்படுகிறது. ஆனால், பதவிக்கு வரும் அக்கட்சி, விரும்பியவாறு எதையும் செய்வதற்கு, அக்கட்சிக்கு மக்கள் ஆணை வழங்கியதாக அதன் மூலம் அர்த்தம் கொள்ளலாமா? முடியாது. அரசமைப்பின் 19ஆவது திருத்தத்துக்குப் பதிலாக, எவ்வாறான அரசமைப்புத் திருத்தத்தை அரசாங்கம் கொண்டு வரப்போகிறது என்று ராஜபக்‌ஷ குடும்பத்தினரைத் தவிர, வேறு எவரும் அறிந்திருந்தார்களா என்பது சந்தேகமே. அந்தநிலையில், தமக்கு மக்கள் ஆணை கிடைத்துள்ளது என்று, எதேச்சாதிகாரமாக எதையும் செய்வதற்கு, அரசாங்கத்தின் தலைவர்கள் முயல முடியாத…

  7. காவியுடைக் காடையர்களும் ஆட்சியின் காவலர்களா? – கலாநிதி அமீரலி கலாநிதி அமீரலி சில தினங்களுக்குமுன் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடந்த ஒரு வெட்கக்கேடான சம்பவம் இலங்கையின் பௌத்த மக்களுட்பட மனிதாபிமானம் கொண்ட எந்த ஒரு பிரஜைக்கும் மிகக் கவலையையும், ஏன் ஆத்திரத்தையும் கொடுத்திருக்கலாம். மட்டக்களப்பு நகரின் மங்களறாமய விகாரையைச் சேர்ந்த அம்பிற்றிய சுமணரத்தன தேரர் என்ற ஒரு காவியுடை தரித்த நபர் தன்னை ஒரு பௌத்த துறவியெனப் பறைசாற்றிக் கொண்டு அரசாங்க தொல்லியற் திணக்கள அதிகாரிகள் மூவரை (இருவர் தமிழர், ஒருவர் சிங்களவர்), அகழ்வாய்வுக்கென குறிவைக்கப்பட்ட ஒரு நிலத்தை அவர்கள் கனரக யந்திரத்தைக்கொண்டு தரைமட்டமாக்கினரென்று குற்றஞ்சாட்டி, அவர்களை அடித்துக் காயப்படுத்தி, ஒரு கொட்டகைக்குள் …

  8. கிழக்கு மைய அரசியல் வாதமும் அதன் பின்னணிகளும்? - யதீந்திரா அண்மையில் கிழக்கு-மைய அரசியல் என்பது தெற்கை நோக்கிப் போவதல்ல என்னும் தலைப்பின் ஒரு கட்டுரை வெளிவந்திருந்தது. அதனைத் தொடர்ந்து, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஆலோசகராக அடையாளம் காணப்படும் ஒருவர் அதற்கு எதிர்வினையாற்றிருந்தார். மீண்டும் அதற்கொரு பதில் எதிர்வினையாற்றும் கட்டுரையும் வெளியாகியிருந்தது. உண்மையில் இப்படியொரு கட்டுரை எழுதுவதற்கான தூண்டுதலை மேற்படி உரையாடல்கள்தான் ஏற்படுத்தியிருந்தன. அண்மையில் என்னுடன் சமகால அரசியல் விடயங்கள் தொடர்பில் பேசிக் கொண்டிருந்த ஒரு மட்டக்களப்பு நண்பர் – இவ்வாறு தெரிவித்தார். அதாவது, மட்டக்களப்பிலிருந்து வெளிவரும் சில முகநூல் பதிவுகளை பார்க்கும் போது, மிகவும் அர…

  9. ராஜபக்‌ஷர்களின் அரசியலை எதிர்கொள்ளுதல் ஓர் அரசியல்வாதிக்கும் (politician) ஓர் அரசியலாளுமைக்கும் (statesman) உள்ள வித்தியாசம் என்னவென்றால், ஒர் அரசியல்வாதி அடுத்த தேர்தலைப் பற்றிச் சிந்திக்கும்போது, அரசியலாளுமை அடுத்த தலைமுறையைப் பற்றிச் சிந்திக்கிறார்” என்கிறார் ஜேம்ஸ் க்ளார்க். சமகால இலங்கையின் தன்னிகரில்லா ‘அரசியல்வாதிகள்’, ராஜபக்‌ஷர்கள்தான் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. அதேவேளை, ஒருவகையில் பார்த்தால் அவர்கள், மிகச்சிறந்த அரசியலாளுமையும் கூட! ஏனென்றால், அவர்கள் அடுத்த தலைமுறையைப் பற்றியும் மிகத் தௌிவாகச் சிந்திக்கிறார்கள். ஆனாலென்ன, அது ராஜபக்‌ஷர்களினுடைய அடுத்த தலைமுறையாகவே இருக்கிறது; அவ்வளவுதான் வித்தியாசம். இதற்காகவே அவர்கள், தமக்கானதொரு கட்ச…

  10. திலீபனுக்காக இணைந்த தமிழ்க் கட்சிகள்- ஐக்கியம் தொடரும் வாய்ப்பு உள்ளதா? திலீபனின் நினைவேந்தல் நிகழ்ச்சிகளுக்கு கோத்தபாய ராஜபக்ஷ அரசாங்கம் விதித்த தடையை தமிழ் கட்சிகளிடையே ஒற்றுமையை ஏற்படுத்தி இருக்கின்றது. அனைத்துக் கட்சிகளும் இணைந்து திலீபனின் நினைவேந்தலில் அதுவும் – அரசாங்கத்தின் தடைகளை தகர்த்துக் கொண்டு வந்து பங்கு கொண்டது தமிழ் மக்கள் மத்தியில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கின்றது. தமிழ் அரசியல் பரப்பில் அண்மைக் காலத்தில் ஏற்பட்ட முக்கியமான ஒரு திருப்பமாக இதனை கருத முடியும். தமிழ் தேசிய அரசியலை முன்னெடுக்கும் இந்த கட்சிகள் அனைத்தும் ஏற்கனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இணைந்து செயற்பட்ட கட்சிகள் என்பதும் கவனிக்கத்தக்கது. பின்னர் கூட்டமைப்புக்குள் ஏற்பட்ட மு…

  11. ஒற்றையாட்சியின் சட்டங்களை நியாயப்படுத்தி அரசியல் நடத்தும் தமிழ்க் கட்சிகள் 2009ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் தமிழ்க் கட்சிகள் அல்லது தமிழ் அரசியல் பிரதிநிதிகள் அச்சாப்பிள்ளை அரசியலில் ஈடுபட்டு வருவதையே காண முடிகின்றது. அதாவது இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்புக்கு அமைவாகச் செயற்பட்டுச் சிங்கள ஆட்சியாளர்களின் மனங்களையும் நோகடிக்காமல், அதேவேளை தமிழ்த் தேசிய அரசியலையும் தீவிரமாகப் பேசிக் கொண்டு சொத்துச் சுகங்களையும் அனுபவித்துக் கொண்டு தம்மைத் தியாகிகளாகவும் வெளிப்படுத்த முற்படுகின்றனர். ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைக்காக உண்ணா நோன்பிருந்து உயிர் நீத்த தியாகி திலீபன் நினைவேந்தல் நிகழ்வுக்கு இலங்கை ஒற்றையாட்சி அரசின் யாழ் நீதவான் நீதிமன்றம் மேலும் 14 நாட்கள…

  12. கட்சிகளின் ஐக்கியம் ?- இ. தயாபரன்

  13. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 45 ஆவது கூட்டத் தொடரில் நடைபெறுவது என்ன? விளக்குகின்றார் கிருபாகரன் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 45 ஆவது கூட்டத் தொடர் ஜெனீவாவில் ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றது. இலங்கை விவகாரமும் இந்தக் கூட்டத் தொடரில் பிரஸ்தாபிக்கப்பட்டிருக்கின்றது. இது குறித்தும் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள இரண்டு வருடகால அவகாசம் அடுத்த மார்ச் மாதத்துடன் முடிவுக்கு வரும் போது என்ன நடைபெறும் என்பதையிட்டும் பிரான்ஸிலிருந்து செயற்படும் தமிழ் மனித உரிமைகள் இயக்கத்தின் தலைவர் சா.வி.கிருபாகரன் தினக்குரல் இணையத்துக்கு விளக்குகின்றார். கடந்த சுமார் மூன்று தசாப்த காலமாக ஜெனீவாவிலிருந்து கிருபாகரன் செயற்பட்டுவருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. http://thina…

  14. யார் கண் பட்டதோ? அம்மா..! நீங்கள் சாப்பிடுங்கள் நான் உறங்கப் போகிறேன்” என, தனது ஹோட்டலில் இருந்து கொண்டுவந்த உணவை, மனைவியைப் பெற்றவளிடம் கொடுத்துவிட்டு, தனது மனைவியுடனும் குழந்தையுடனும் நித்திரைக்குச் சென்ற ஷமிலவுக்கும் அவரது அன்பான குடும்பத்துக்கும் மாத்திரம், மறுநாள் பொழுது புலராமலே சென்றுவிட்டது. இம்மாதம் 20ஆம் திகதி, கண்டியில் இடம்பெற்ற இந்தத் துயரச் சம்பவம், மனிதம் நிறைந்த அனைத்து உள்ளங்களையும் ஒரு கணம் உலுக்கியது. தனது மகளைப் பறிகொடுத்த 59 வயதுடைய ஜயந்தி குமாரி, இவ்வாறு தெரிவிக்கின்றார். “ வெலிமடை பிரதேசத்தைச் சேர்ந்த நாங்கள், விவசாயிகள். இரண்டு பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் மூத்தவளாக அச்சலா பிறந்தாள். அவள், படிப்பு உள்ளிட்ட அனைத்து விடயங்க…

    • 2 replies
    • 1.1k views
  15. திலீபனை முன்னிறுத்தி சில கேள்விகள் – நிலாந்தன் திலீபனின் ஏன் உண்ணாவிரதம் இருந்தார்? யாருக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்தார்? அவர் இலங்கை இந்திய அரசுகளுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்தார். இரண்டு அரசுகளிடமும் நீதிகேட்டு உண்ணாவிரதம் இருந்தார். அதாவது திலீபனின் உண்ணாவிரதம் எனப்படுவது நாட்டுக்கு உட்பட்டது அல்ல. அதற்கு ஒரு பிராந்திய பரிமாணம் உண்டு. ஈழத் தமிழர்களின் ஆயுதப் போராட்டம் பிராந்திய பரிமாணத்தை அடைந்ததன் விளைவாக எழுதப்பட்டதே இந்திய – இலங்கை உடன்படிக்கை. அந்த உடன்படிக்கையின் போதாமைகளையும் இயலாமைகளையும் உணர்த்துவதற்காகவே திலீபனும் பூபதியும் உண்ணாவிரதம் இருந்தார்கள். அதாவது மறு வளமாகச் சொன்னால் இந்தியத் தலையீட்டின் விளைவாக ஏற்பட்ட இனப்பிரச்சினைக்கான தீர்வை புலி…

  16. உள்நாட்டு விவகாரங்களில் ஐ.நா. தலையிடாதிருத்தல் முக்கியமானது; ஐ.நா. பொதுச் சபையில் காணொளி மூலம் ஜனாதிபதி உரை “நாடுகளின் இறையாண்மையைப் பாதுகாத்தல், ஆள்புல ஒருமைப்பாடு மற்றும் அவர்களின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாதிருத்தல் ஆகியவற்றை உள்ளடக்கிய ஐ.நா. சாசனத்தின் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்” என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்திருக்கின்றார். ஐக்கிய நாடுகள் சபையின் எழுபத்தைந்தாவது பொதுச் சபைக் கூட்டத் தொடரில் காணொளி மூலமாக ஆற்றிய உரையிலேயே இதனை அவர் வலியுறுத்தினார். அவரது உயைில் முழுமையான வடிவம் வருமாறு: ஆரம்பத்தில், ஐக்கிய நாடுகள் சபையின் 75 வது கூட்டத்தொடரின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மேன்மைதங்கிய வோல்கன் போஸ்கிர் அவர்களுக்கு …

  17. அதிகார பலத்தால் அடக்க முயலும் பெரும்பான்மை சமூகம்.

  18. இலங்கை ஒற்றையாட்சி அரசை திருப்திப்படுத்த அச்சாப்பிள்ளை அரசியல் நடத்தும் தமிழ்க் கட்சிகள் நாடாளுமன்ற சபா மண்டபத்தில் மாவீர்களுக்குத் தீபம் ஏற்றியதை மறந்துவிட்ட முன்னணியின் அரசியல் 2009ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் தமிழ்க் கட்சிகள் அல்லது தமிழ் அரசியல் பிரதிநிதிகள் அச்சாப்பிள்ளை அரசியலில் ஈடுபட்டு வருவதையே காண முடிகின்றது. அதாவது இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்புக்கு அமைவாகச் செயற்பட்டுச் சிங்கள ஆட்சியாளர்களின் மனங்களையும் நோகடிக்காமல், அதேவேளை தமிழ்த் தேசிய அரசியலையும் தீவிரமாகப் பேசிக் கொண்டு சொத்துச் சுகங்களையும் அனுபவித்துக் கொண்டு தம்மைத்…

  19. நல்லிணக்கம், பொறுப்பு கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவிப்பதாக சர்வதேச சமூகத்திற்கு உறுதியளித்த இலங்கை அரசாங்கம் அதனை அப்பட்டமாக மீறி வருகிறது. மனித உரிமை விடயங்களுக்கும், சுயாதீன ஆணைக்குழுக்களுக்கும் சாவு மணி அடிக்கும் 20வது திருத்த சட்டத்தை கொண்டு வருவதன் மூலம் இலங்கையின் எதிர்காலம் அச்சம் நிறைந்ததாக இருக்க போகிறது என்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நாயகம் மிச்செல் பச்லெட் அவர்களின் எச்சரிக்கையுடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 45வது கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை ஜெனிவாவில் ஆரம்பமாகியிருக்கிறது. கொரோனா வைரஸ் தாக்கத்தினால் கடுமையான பிரயாண கட்டுப்பாடுகளை சுவிட்சர்லாந்து அரசு விடுத்திருக்கும் நிலையில் மனித உரிமை பேரவையின் தலைவர் எலிசபெத் டிசி தலைமைய…

  20. தமிழ் மக்களுக்கு இன்று தேவைப்படுவது ‘புதிய கூட்டு’ என்ற பெயரிலான இணைப்பு அல்ல… திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளுக்குப் பொலிஸார் விதித்துள்ள தடை உத்தரவை அடுத்து, தேர்தல் களத்தில் முகம்மாறி, திசைமாறி நின்ற தலைலைமைகள் மீண்டும் ஒன்று கூடி, ஒரு முடிவை எடுத்திருப்பது, புதிய தமிழ் கூட்டுக்கான நல்ல சமிக்ஞை என்று பலராலும் கூறப்படும் நிலையில் ……. தேவை “புதிய கூட்டு” என்ற பெயரிலான ஒட்டுப் போடுவதைப்போன்ற இணைப்பு அல்ல…. தற்போதைய கட்சிகள் அனைத்தையும் கலைத்துவிட்டு, ஒரு புதிய –ஒரேயொரு – தமிழ் அமைப்புஉருவாக வேண்டும் என்ற விடயம், ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பே முன்வைக்கப்பட்டது.. அது தொடர்பாகக் கடந்த பெப்ரவரி 2020 அன்று தினக்குரல் வார இதழில் , “பேசிப்பார்த்தோம்” என்ற தொடரில் 11வது …

  21. திலீபனுக்கான நினைவேந்தல் தடையை எதிர்கொள்ளுதல்... புருஜோத்தமன் தங்கமயில் / 2020 செப்டெம்பர் 24 தியாகி திலீபனின் நினைவேந்தல் காலம் இது. 33 ஆண்டுகளுக்கு முன்னால், தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை நெஞ்சில் ஏற்றி, தன்னை ஆகுதியாக்கிய தற்கொடைப் போராளி அவர்! ஆயுதப் போராட்ட வீரனாக எழுந்து, அஹிம்சை தேசத்துக்கே அஹிம்சை போதித்தவர். அவருக்கான நினைவேந்தலை முன்னெடுக்க முடியாதவாறு நீதிமன்றங்களின் ஊடாக, பொலிஸார் தடை உத்தரவுகளைப் பெற்று வருகிறார்கள். வடக்கு, கிழக்கு மாகாணங்களில், அம்பாறை மாவட்டம் தவிர்ந்து, ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் இந்தத் தடை உத்தரவு இதுவரை பெறப்பட்டிருக்கிறது. மரணித்தவர்களை நினைவு கூருதலும் அவர்களுக்கான சமயக் கிரியைகளைச் செய்வதும் தனி உரிமை. ஒ…

  22. இலங்கையின் வெளியுறவில் இந்தியா முதலிடம் என்பது இராஜதந்திரமா.? இலங்கை இந்திய உறவு பற்றிய உரையாடல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறதை காணமுடிகிறது. அதிலும் இலங்கையின் வெளியுறவுச் செயலாளர் ஜனநத் கொலம்பகே இந்தியா தொடர்பில் அதிக கரிசனையுடன் பொது வெளியில் உரையாடிவருகிறார். குறிப்பாக உள்ளார்ந்த ரீதியில் உரையாடி முடிபுகளை மேற்கொண்டு அமுல்படுத்த வேண்டிய வெளியுறவு தொடர்பிலான நகர்வுகளை வெளிப்படையாக அவர் உரையாடிவருகிறார். வெளியுறவின் மையமே இராஜதந்திரமேயாகும். அத்தகைய இராஜதந்திரம் அமைதியாக நகர்வுகளை மேற்கொள்வதனைக் குறிப்பதாகும். அதிலும் சீனாவின் நட்புக்குள்ளும் இந்தியாவின் அயலுக்குள்ளும் இருக்கும் இலங்கை வெளிப்பமைடயாக இல்லாத போக்கினை அல்லவா கடைப்பிடிக்க வேண்டும். ஆன…

  23. தமிழர் தாயகத்தின் கரையோரப் பகுதிகளை கைப்பற்றும் சிங்கள அரசின் திட்டம் ஈழத்தமிழினம் இன்று சிங்கள பௌத்த இனவாதத்தின் அடக்குமுறைக்குள் இலங்கைத் தீவிலும், புலம்பெயர்ந்து உலகெங்கும் பரந்து வாழும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர். அன்று தமிழர் தாயகத்தின் எல்லைப் பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்களை ஆரம்பித்து, அதன் பின்னர் தமிழர் தாயகப் பகுதியினுள் தமிழர் தாயகத்தை துண்டாடும் நோக்கத்திலும், செயற்படுத்தப்பட்டன. அந்த வகையில் இன்று தமிழர் தாயகத்தின் கரையோரப் பகுதிகளையும் சிங்களமயப்படுத்தி தமிழர் தாயக எண்ணக்கருவை அழிக்கும் செயற்திட்டங்கள் திட்டமிடப்பட்டு செயற்படுத்தப்பட்டும் வருகின்றன. இச் செயற்திட்டங்கள் நிறைவேறும் போது, தமிழர்களின் வாழ்வு நிலை, வாழ்வு இயக்கங்கள் யாவும் கட்டுப்படுத்தப…

  24. விக்கியும் அவருக்கான அரசியல் நாகரிகமும் புருஜோத்தமன் தங்கமயில் / 2020 செப்டெம்பர் 22 நீதிமன்ற அவமதிப்பு வழக்கொன்றில், நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தண்டிக்கப்பட்டுவிடலாம் என்ற பதற்றம் கடந்த சில வாரங்களாக தமிழ் அரசியல் பரப்பில் தொற்றிக் கொண்டிருக்கின்றது. விக்னேஸ்வரனுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடுத்த பா.டெனீஸ்வரனிடம், வழக்கை மீளப்பெறுமாறு, அரசியல்வாதிகள், புத்திஜீவிகள் உள்ளிட்ட தரப்புகளினால் தொடர்ந்தும் கோரிக்கைகள் விடுக்கப்பட்ட நிலையில், அவரும் அதற்கு இணங்கியிருக்கிறார். இந்தப் பத்தி எழுதப்படும் வரையில், வழக்கை மீளப்பெறுவது தொடர்பிலான இறுதித் தீர்மானம், நடைமுறையில் வந்திருக்கவில்லை. விக்னேஸ்வரனுக்கும் டெனீஸ்வரனுக்கும் இடையில் வழக்கை நீதிமன்றத்…

  25. மாகாண சபைகள் தப்பிப் பிழைக்குமா? மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர, “மாகாண சபைகளை இரத்துச் செய்வதாக, நான் ஒருபோதும் கூறவில்லை” எனக் கூறியிருக்கிறார். இது, பிரதான அச்சு ஊடகங்களிலும் பல இணையத்தளங்களிலும் வெளியாகியுள்ளன. சரத் வீரசேகர, இவ்வாறு கூறுவதாலேயே இது முக்கிய செய்தியாகிறது. ஏனெனில், அவர் மாகாண சபைகளுக்கு எதிரானவர். “மாகாண சபைகளை ஒழிப்போம்” என அவர் கூறினாலும், அது செய்திதான். ஆனால், “நான் மாகாண சபைகளை ஒழிப்பதாகக் கூறவில்லை” என்று அவர் கூறுவது, அதைவிட முக்கியமான செய்தியாகும். உண்மையிலேயே, மாகாண சபைகளை இரத்துச் செய்வதாக சரத் வீரசேகர எங்கும் கூறவில்லையா? நேரடியாக இல்லாவிட்டாலும், அந்தக் கருத்துப்பட பலமுறை, அவர் கருத்து…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.