அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
வெளியார் தொடர்பான அச்சம்? Jun 02, 20190 யதீந்திரா இலங்கைத் தீவில் இடம்பெறும் எல்லாவற்றையும் வெளித்தரப்புக்களுடன் தொடர்புபடுத்தி சிந்திக்கும் ஒரு போக்கு நீண்டகாலமாகவே இருந்துவருகிறது. இந்த விடயத்தில், புத்திஜீவிகளாக தங்களை காண்பித்துக் கொள்பவர்களுக்கும் சாதாரண பொது மக்களுக்கும் இடையில், பெரும்பாலான சந்தர்ப்பங்களில், பெரிய வேறுபாடுகள் இருப்பதில்லை. புத்திஜீவிகள் தங்களின் மொழியிலும் சாதாரண மக்கள் தங்களின் மொழியிலும் இதனை பேசிக் கொள்கின்றனர். இதில் தமிழர் தரப்பு சிங்களத் தரப்பு என்னும் பாகுபாடுகளும் பெரியளவில் இல்லை. இரண்டு தரப்பினர்களிடமும் இந்த வகையான புரிதல் அதிகமாகவே காணப்படுகிறது. தமிழ்ச் சூழலில் எல்லாவற்றையும் அதிகம் இந்தியாவுடன்…
-
- 0 replies
- 822 views
-
-
தினமென் சதுக்க படுகொலைகளை உலகம் மறக்கவிடமாட்டோம் ரோஜினா சியாவோக்கிங் ஹீ கார்டியன்- தமிழில் - ரஜீபன் 1989 இல் தினமென் சதுக்கத்தில் படையினரால் சுடப்பட்ட இளைஞன் ஒருவனின் சகோதரனனை கட்டுப்படுத்துவதற்கு தான் எவ்வளவு முயற்சிகளை மேற்கொண்டார் என்பதை லயனே நினைவுகூறுகின்றார். அவன் சிறியவன் ஆனால் பெரிய மனிதர்களை போன்று கதறினான் என அவர் தெரிவிக்கின்றார். 1989 இல் தினமென் சதுக்கத்தில் ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பமானவேளை லயனே ஹொங்ஹொங் பல்கலைகழகத்தில் கல்வி பயின்றுகொண்டிருந்தார்.ஆர்ப்பாட்டங்கள் பற்றி அறிந்ததும் அதற்கு ஆதரவு வழங்குவதற்காக அவர் தினமென் சதுக்கத்திற்கு சென்றார். யூன் 3 ம் திகதி சீனா 200,000 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆயுதமேந்திய படையினரை அப்பாவி பொதுமக்க…
-
- 0 replies
- 426 views
-
-
தடம் மாறியதா தமிழ்த் தேசியம்? Editorial / 2019 ஜூன் 04 செவ்வாய்க்கிழமை, மு.ப. 09:48 Comments - 0 -க. அகரன் அபிவிருத்தி அடைந்து வரும் நாடொன்றின் ஸ்திரத்தன்மை என்பது, அதன் இறையாண்மை, பொருளாதாரப் பெருக்கம், பாதுகாப்பு என்பவற்றின் மூலோபாயங்களிலேயே தங்கியுள்ளது. அந்த வகையில், வளர்முக நாடுகளைப் பொறுத்த வரையில், அவை தமது இறைமையில் தளர்வின்றிச் செயற்பட்ட போதிலும், பாதுகாப்பு உட்படப் பொருளாதார மேம்பாட்டில், பிறநாடுகளின் கடைக்கண் பார்வையின் அவசியத்தை எதிர்பார்த்தேயுள்ளன என்பதே யதார்த்தம். பொருளாதார பலம்வாய்ந்த நாடுகளைத் தவிர, ஏனைய நாடுகள் வௌிநாட்டு முதலீட்டாளர்களின் வருகை, வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் வருகையையே பெரிதும் நம்பியுள்ள நிலையில், இவ்…
-
- 0 replies
- 547 views
-
-
ஒருங்கிணைந்த மண்ணில் ஒன்றிணைந்த வாழ்வு காரை துர்க்கா / 2019 ஜூன் 04 செவ்வாய்க்கிழமை, மு.ப. 09:36 Comments - 0 அன்று தைப்பொங்கல் திருநாள். கவிதாவின் வீட்டுக்கு, அவளின் நண்பர்களான அன்வரும் மேரியும் தமது பெற்றோருடன் வந்திருந்தனர். தோழர்களைக் கண்ட கவிதா, வீட்டு வாசல் வரை ஓடி வந்து, அவர்களை அன்புடன் வரவேற்றாள். “வணக்கம்! வாருங்கள் வாருங்கள்” எனக் கவிதா நண்பர்களை வரவேற்றாள். மேரியும் அன்வரும் பொங்கல் வாழ்த்துகளைக் கூறி, அன்பையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினர். இது நான்காம் ஆண்டு மாணவர்களுக்கான, தமிழ்ப் பாட நூலில், ‘பண்டிகைகள்’ என்ற தலையங்கத்தின் கீழ், உரையாடல் வடிவில் அமைந்த பாடப்பரப்பு ஆகும். எம் உயிரிலும் மேலான தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட…
-
- 0 replies
- 605 views
-
-
முஸ்லிம்கள் மீதான பல்கோண ‘நெருக்குதல்கள்’ மொஹமட் பாதுஷா / 2019 ஜூன் 02 ஞாயிற்றுக்கிழமை, பி.ப. 08:40 Comments - 0 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பிறகு, முஸ்லிம்கள் மீதான நெருக்குவாரங்கள், பல வழிகளிலும் அதிகரித்திருக்கின்றன. முஸ்லிம் பெயர்தாங்கிகள்தான், இந்த மிலேச்சத்தனமான தாக்குதல்களை மேற்கொண்டிருந்தனர் என்றாலும்கூட, நிஜத்தில், இத்தாக்குதல் முஸ்லிம் சமூகத்துக்கே பெரும் சிக்கல்கள் நிறைந்த நிலையை ஏற்படுத்தி இருக்கின்றது. இலங்கை முஸ்லிம்கள் மீது, இன்னுமொரு கட்ட ஒடுக்குமுறையைப் பிரயோகிப்பதற்கும், அதற்கு நியாயம் கற்பிப்பதற்குமான ஒரு களச் சூழலை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றது. ஒரு குழுவினர் செய்த, வரலாற்றுத் தவறான பயங்கரவாத நடவடிக்கையைக் காரணமாகக் கூறி, 2…
-
- 1 reply
- 702 views
-
-
அவசரகாலச் சட்டமும் கரடிப் பொம்மையும் – நிலாந்தன்… June 2, 2019 கழுத்துறை சிறீ தேவானந்தா வித்தியாலயத்தில் பாடசாலை மாணவர்களின் புத்தகப் பைகளைச் சோதிப்பதற்கு ஒரு புதிய உத்தி கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்படுகிறது. அவ் ஒளிப்படங்களில் கரடியாக வேடமணிந்து ஒரு நபர் குழந்தைகளின் புத்தகப் பைகளை சோதிக்கிறார் இவ்வாறு சோதிப்பதன் மூலம் பாடசாலை வாசலில் தமது புத்தகப் பைகள் சோதிக்கப்படுவதை குறித்து பிள்ளைகளுக்கு எதிர்மறையான ஒரு மனப்பதிவு வரக்கூடாது என்று சிந்திப்பதாக கூறப்படுகிறது. பாடசாலை வாசல்களில் துப்பாக்கிகளோடு படைத்தரப்பு நிற்பதும் பொலிசார் நிற்பதும் அவர்கள் முன்னிலையில் ஆசிரியர்கள் பிள்ளைகளின் புத்தகப் பைகளை சோதி…
-
- 0 replies
- 959 views
-
-
முள்ளிவாய்க்கால் இறுதிப் போரும் தமிழகத்தின் எதிர்வினையும் ..! தமிழீழ வரலாற்றில் மட்டுமல்ல, தமிழக வரலாற்றிலும் முள்ளிவாய்க்கால் நிகழ்வு, மனசாட்சியை உலுக்கும் மாபெரும் சோக வரலாறாக என்றென்றும் நிலைத்திருக்கும். இத்துன்பியல் நிகழ்வு, தமிழருக்கு - ஏன் உலக விடுதலை வரலாற்றுக்கும் - பல புதிய படிப்பினைகளை நல்கி உள்ளது. இட்லரின் நாஜிப்படையினருக்கு நூரம்பர்க் விசாரணை கடும் தண்டனைகளை வழங்கியது போல், ஈழத்தமிழர்களை இனப்படுகொலை புரிந்த சிங்களக் காடையர்களுக்கும் கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பது தமிழர்களின் ஆறா வேட்கையாக இன்னும் கனன்று கொண்டிருக்கிறது. தமிழீழத்தில் இனப் படுகொலை பத்து ஆண்டுகள் கடந்த பிறகும் முள்ளிவாய்க்கால் படுகொலைகளை நினைத்து பார்த்தால், மனம…
-
- 0 replies
- 1.1k views
-
-
புதிய பாதையின் அவசியம்! உயிர்த்த ஞாயிறு தினத்தில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களின் பின்னணியிலும் கொழும்பு துறைமுக நகர நிர்மாணத்தின் பின்னணியிலும் நாட்டின் மீது அக்கறையும் கரிசனையும் கொண்டுள்ள சர்வதேச நாடுகளின் கவனத்தைத் தமிழ் அரசியல் தரப்பினர் தமக்கு சாதகமாகப் பயன்படுத்தி காய் நகர்த்தல்களை மேற்கொள்ள வேண்டும். இதன் ஊடாக தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளையும் பிரச்சினைகளையும் தீர்த்துக் கொள்வதற்கான புதிய வழிமுறையொன்றில் பயணம் செய்வதற்கு முயற்சிக்க வேண்டும். இத்தகைய முயற்சிக்கான சூழலும் நாட்டின் நிலைமைகளும் எவ்வாறிருக்கின்றன என்று நோக்குவது முக்கியம். கொழும்பிலும் மட்டக்களப்பிலும்…
-
- 0 replies
- 548 views
-
-
முஸ்லிம் மக்கள் மீது தவறான கண்ணோட்டம் இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு எதிராகப் பலரும் குரல் கொடுத்து வருகின்றார்கள். அந்த அடிப்படைவாதத் தைத் தழுவிய ஒரு குழுவினரால் நடத்தப்பட்ட தொடர் தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களும், அவர்களுடைய கொள்கைக ளும் பலதரப்பினராலும் கண்டிக்கப்பட்டிருக்கின்றன. பல்வேறு சந்தர்ப்பங்களில் சில தரப்பினராலும், சில அரசியல் பின்னணியைக் கொண்டவர்களினாலும் முழு முஸ்லிம் சமூகமும் இந்த கண்டனங்களுக்குள்ளேயும் விமர்சனங்களுக்குள்ளேயும் உள்ளடக்கப்படுகின்ற துரதிர்ஷ்டவசமான சூழ லும் ஏற்பட்டிருக்கின்றது. அதேவேளை, இஸ்லாமிய அடிப்படைவாத தீவிரவாதிகளின் பயங்கரவாதப் போக்…
-
- 0 replies
- 449 views
-
-
ஈழத்தை அணுகுதல் -01 உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் விளைவாக இலங்கையில் நிகழ்ந்துவரும் சிங்கள -முஸ்லிம் கலவரங்கள் கவலைக்குரியது.சிங்களக் காடையர்களால் நடத்தப்படும் இந்தக் காட்டுமிராண்டித்தனமான வன்முறைத் தாக்குதல்களைக் கட்டுக்குள் கொண்டுவர இலங்கை அரசாங்கம் எந்த முனைப்பையும் காட்டாது.இன்று மிகப்பதற்றமானதொரு வாழ்வை சந்தித்திருக்கும் முஸ்லிம் மக்களுக்காய் ஒரு கோவில் வாசலில் நின்று பிரார்த்தித்தேன்.அவர்கள் இப்படியான நெருக்கடிமிக்க நாட்களை இனி எதிர்கொள்ளவே கூடாது என விரும்புகிறேன்.தமிழர்கள் இத்தனை ஆண்டுகாலமாக தமது உரிமைக்காக போராடிய ஒரு அறம்சார்ந்த போராட்டத்தை சிங்கள ஆட்சியாளர்களோடு துணை நின்று ஒடுக்கிய முஸ்லிம் அரசியல்வாதிகளும்,முஸ்லிம் மதஅடிப்படைவாதிகளும் தமது சொந்த மக்கள் எ…
-
- 0 replies
- 1k views
-
-
சீனா உருவாக்கும் ‘நிழற்படை’ கே. சஞ்சயன் / 2019 மே 31 வெள்ளிக்கிழமை, மு.ப. 08:35 Comments - 0 ஏப்ரல் 21ஆம் திகதி கொழும்பு, நீர்கொழும்பு, மட்டக்களப்பு நகரங்களில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை, சக்தி வாய்ந்த பல்வேறு நாடுகள், தமது நலன்களை உறுதிப்படுத்திக் கொள்வதற்குப் பயன்படுத்திக் கொள்ள ஆரம்பித்துள்ளன. சீனாவும் அதற்கு விதிவிலக்கானது அல்ல என்பதை, நிரூபித்திருக்கிறது. அண்மையில் சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, கடந்த 14ஆம் திகதி, சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார். ‘ஆசிய நாகரிகங்களின் கலந்துரையாடல்’ மாநாட்டில் பங்கேற்பதற்காகவே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தப் பயணத்தை மேற்கொண்டா…
-
- 1 reply
- 1.1k views
-
-
இந்தியத் தேர்தல் முடிவுகள்: அயலுறவுகளும் ஆபத்துகளும் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2019 மே 30 வியாழக்கிழமை, மு.ப. 08:45 Comments - 0 தேர்தல்களே ஜனநாயகத்தின் அளவுகோல்களாக மாற்றப்பட்டுள்ள நிலையில், ஜனநாயகம் எவ்வகையான தெரிவுகளையெல்லாம் வழங்குகின்றது என்பதை, நாம் அடிக்கடி காண்கிறோம். ‘மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு’ என்றதொரு முதுமொழியை நாம் துணைக்கழைக்கிறோம். மக்கள் தீர்ப்புகள் எல்லாம், மகேசன் தீர்ப்புகள் தானா என்பதை, எல்லோரையும் விட இலங்கையர்கள் நன்கறிவர். இப்போது, மகேசன் தீர்ப்பை, இந்திய மக்கள் வழங்கி இருக்கிறார்கள். அதற்கான பலன்களை, வருங்காலத்தில் அவர்கள் அனுபவிப்பர். இந்தத் தேர்தல் முடிவுகள், இந்தியாவுக்கு மட்டுமல்ல, அதையும் தாண்டி, அண்டை நாடுகளிலும்…
-
- 0 replies
- 368 views
-
-
இலங்கை சிவசேனை: பேசப்பட வேண்டிய அயோக்கியர்களின் யோக்கியதை Editorial / 2019 மே 30 வியாழக்கிழமை, மு.ப. 09:57 Comments - 0 எமது சமூகம், முற்போக்கான திசைவழியில் பயணப்படுவது பலரது நலன்களுக்கு ஆபத்தானது. அவர்கள் மதத்தின் பெயராலும், சாதியின் பெயராலும் மக்களைப் பிரிக்கும் காரியத்தைக் கனகச்சிதமாகச் செய்கிறார்கள். இதைச் செய்யப் புறப்பட்டிருக்கும் இன்னொரு குழுதான் இலங்கை சிவசேனை. இலங்கையில் மக்களை மதரீதியாகப் பிரித்து, தமது அரசியல் நலன்களை நிறைவேற்றிக் கொள்ளும் வேலையையே இவர்கள் செய்கிறார்கள். இந்த ஆபத்துகளை, நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். அண்மையில், பொதுபல சேனா அமைப்பின் தலைவர் ஞானசார தேரரை விடுவித்ததைப் பாராட்டி, அறிக்கையொன்றை வெளியிட்ட, இலங்கை ச…
-
- 0 replies
- 912 views
-
-
‘நீரோ மன்னன் பிடில் வாசித்த கதை’ Editorial / 2019 மே 30 வியாழக்கிழமை, மு.ப. 05:30 Comments - 0 -இலட்சுமணன் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவர் நியமனம் தொடர்பாக, தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும் சர்ச்சைகள் எழுந்துள்ளன. இதில், மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைமை விடயம் தொடர்பில், வியாழேந்திரன் மாவட்டச் செயலாளரிடம் கேட்பதை விடுத்து, ஜனாதிபதியிடம் தான் கேட்க வேண்டும் என்ற கருத்துகள் முக்கியத்துவம் பெறுகின்றன. உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாணசபை மற்றும் உள்ளூராட்சிகள் அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின் பிரகாரம், மட்டக்களப்பு மாவட்டத்தில் எந்தவொரு தமிழரும் ஒருங்கிணைப்பாளர் குழுத் தலைவராக நியமனம் பெற வாய்ப்பு இல்லை. ஏ…
-
- 0 replies
- 802 views
-
-
வரப் போகும் தேர்தல்களில் ஈஸ்டர் தாக்குதல்களின் தாக்கம் எம்.எஸ்.எம். ஐயூப் / 2019 மே 29 புதன்கிழமை, பி.ப. 06:32 Comments - 0 தேசிய தவ்ஹீத் ஜமாஅத் பயங்கரவாதிகளின் தற்கொலைக் குண்டுத் தாக்குதலால், நேரடியாகவே பாதிக்கப்பட்டவர்கள் கிறிஸ்தவர்கள். ஆனால் அவர்கள், ‘நடந்தவை இறைவனின் நாட்டம்’ எனக் கருதி, அதற்காக முஸ்லிம்களைப் பழிவாங்கவோ, முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பை விதைக்கவோ முற்படாமல், அமைதியாக இருக்கிறார்கள். இலங்கை கத்தோலிக்கர்களின் பேராயரான கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையும் “நடந்தவை இறைவனின் சோதனை” என்றே வர்ணித்தார். ஆனால், பயங்கரவாதத் தாக்குதலால் நேரடியாகப் பாதிக்கப்படாத ஏனைய பேரினத்தவர்கள், அதனைப் பாவித்து, முஸ்லிம்களைக் கொடுமைப்படுத்தி வருகிறா…
-
- 0 replies
- 609 views
-
-
ஞானசார தேரரின் விடுதலையும் அச்சுறுத்தலும் புருஜோத்தமன் தங்கமயில் / 2019 மே 29 புதன்கிழமை, பி.ப. 06:26 Comments - 0 நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டனை பெற்றுச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பொதுபல சேனாவின் பொதுச்செயலாளரான ஞானசார தேரர், ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் கடந்த வாரம் விடுதலையானார். மக்கள் போராட்டங்களை நடத்தி, சிறை சென்று திரும்பும் தலைவர்களை வரவேற்பதற்கு உண்டான வரவேற்பை, ஞானசார தேரருக்கும் வழங்குவதற்காக நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் சிறை வாசலில் கூடியிருந்தார்கள். அதனை நேரடி ஒளிபரப்புச் செய்வதற்காக, தொலைக்காட்சிகள் சிலவும் காத்திருந்தன. பொதுபல சேனா என்கிற பௌத்த அடிப்படைவாத அமைப்பின் உருவாக்கமும் நோக்கமும் முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் அடி…
-
- 0 replies
- 552 views
-
-
அரசியல் தந்திரோபாயம் நாட்டில் ஜனநாயகம் கோலோச்சுகின்றது. அது ஜனாதிபதி ஆட்சி முறையைக் கொண்டது என்று கூறப்படுகின்றது. ஆனால், அந்த ஜனநாயகத்தில், தானே தன்னிகரில்லாத உயர்ந்த சக்தி என்பதை நிறைவேற்று அதிகாரம் மீண்டும் ஒரு முறை உரத்து வெளிப் படுத்தி இருக்கின்றது. நிறைவேற்று அதிகாரம், நீதித்துறை, சட்டவாக்கம் ஆகிய மூன்றுடன் சமூகத்தின் காவல் நாய் என வர்ணிக்கப்படுகின்ற ஊடகத்துறையையும் சேர்த்து நான்கு தூண்களில் கட்டி எழுப்பப்பட்டிருப்பதே ஜனநாயகம் என்பதே கோட்பாடு. இந்தக் கோட்பாட்டின் அடிப்படையில் நான்கு சக்திகளும் தம்மளவில் தனித்துவமானவை. ஓன்றையொன்று மிஞ்ச முடியாது. ஒன்று மற்றொன்றை மேவிச் செயற்…
-
- 0 replies
- 750 views
-
-
பேரினவாதத்தின் குறுக்கு வழி முகம்மது தம்பி மரைக்கார் / 2019 மே 28 செவ்வாய்க்கிழமை, மு.ப. 03:07Comments - 0 முஸ்லிம் சமூகத்தின் மீது உத்தியோகப்பற்றற்ற ஒரு ‘போர்’ பிரகடனப்படு- த்தப்பட்டுள்ளதோ என்கிற பீதி உருவாகி இருக்கிறது. எல்லாத் திசைகளிலிருந்தும் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் நடக்கின்றன. குர்ஆனை வைத்திருந்தவர்கள் கூட, கைது செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதியிடம் மக்கள் பிரதிநிதிகள் முறையிட்டு இருக்கிறார்கள். காடையர்கள், ஒரு பக்கம் முஸ்லிம்களின் சொத்துகளை அடித்து நொறுக்கியமைக்கு நிகராக, உளரீதியான தாக்குதல்களும் முஸ்லிம்கள் மீது தொடரப்பட்டு வருகின்றன. முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்வதற்கு, கடந்த காலங்களில் தீட்டி வைக்கப்பட்டிருந்த திட்டங்கள், ஈஸ்டர்…
-
- 0 replies
- 495 views
-
-
ஆள்வதற்கான விருப்பமும் மகிழ்வதற்கான விருப்பமும் காரை துர்க்கா / 2019 மே 28 செவ்வாய்க்கிழமை, மு.ப. 02:21 Comments - 0 நாட்டின் சமகால நெருக்கடிகளுக்கு மத்தியிலும் முல்லைத்தீவு, வற்றாப்பளை அம்மனைத் தரிசித்தால் எமது நெருக்கடிகள் தீரும் என்ற அளப்பரிய நம்பிக்கையுடன், அம்பாளின் வைகாசிப் பொங்கலுக்கு (மே20) சென்றிருந்தோம். அன்னையிடம் மக்கள் தங்களது ஆற்றொனாத் துன்பங்களைக் கொட்டிக் கதறி வழிபட்டனர். மனதில் அடக்கி வைத்திருக்கும் ஆதங்கங்களை, ஆற்றாமைகளை இவ்வாறாகக் கொட்டுவது ஒருவித உளவியல் ஆற்றுப்படுத்தல் ஆகும். அன்றைய போக்குவரத்தில், பலரோடு பலவித எண்ணங்களைப் பகிரும் சந்தர்ப்பங்கள் நிறையவே ஏற்பட்டன. அதில் ஒருவர், ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர்; மற்றையவர் வணிகம் செய்பவ…
-
- 0 replies
- 563 views
-
-
தற்கொலை தாக்குதலும் அதன் தாக்கமும் "பதவிக்காக மற்றொருவரை அழிக்கும் முயற்சிகளைக் கைவிட்டு, புத்தபிரான் கற்பித்தது போல் மட்டற்ற சமாதானத்தை நாம் அனைவரும் முன்னெடுக்க வேண்டும்" என்று பௌத்தர்களுக்கு மிகவும் புனிதமாகக் கருதப்படும் வெசாக் தினத்துக்கான தனது செய்தியில் நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மேலும் "வெறுப்பின் மூலம் வெறுப்புணர்வைத் தணிக்க முடியாது, அன்பின் மூலமே அதைத் தணிக்க முடியும்" என்றும் அவரது செய்தி கூறுகிறது. ஆனால், சொல்லுக்கும் செயலுக்கும் எவ்வளவு வித்தியாசம் உள்ளது என்பதை நாடறியும். புத்தபிரான் கூறியதைக் கேட்டிருந்தால் நாட்டில் கலவரங்களும், உள்நாட்டு யுத்தமும், படுகொலைக…
-
- 0 replies
- 693 views
-
-
ஞானசார தேரரின் விடுதலை இன நல்லுறவுக்கு எதிரான முடிவா? பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சர்ச்சைக்குரிய ஒரு பிரமுகர். சிறைத் தண்டனை அனுபவித்து வந்த அவருடைய விடுதலையும் சர்ச்சைக்குரியதாகி இருக்கின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொது மன்னிப்பு வழங்கி அவரை விடுதலை செய்துள்ளார். நீதிமன்றத் தீர்ப்பிற்கு அமைய தண்டனையை அனுபவித்து வந்த ஒரு சிறைக் கைதியை அரச தலைவராகிய ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் தண்டனை விலக்களித்து விடுதலை செய்யலாம். அதற்கு அவருடைய நிறைவேற்று அதிகாரம் என்ற அரசியல் அந்தஸ்துடனான அதிகார பலம், உரிமை அவருக்கு இருக்கின்றது. அதனை கேள்விக்கு உட்படுத்த முடியாது. …
-
- 0 replies
- 426 views
-
-
தொடரும் தண்டனை விலக்கீட்டுக் கலாசாரம் – பி.மாணிக்கவாசகம்.. May 27, 2019 உயிர்த்த ஞாயிறு தின தற்கொலைக்குண்டுத் தாக்குதல்களின் பின்னர், மூன்று வாரங்கள் கடந்த நிலையில் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள், நாட்டில் நிலவுகின்ற ஒரு மோசமான வன்முறைப் போக்கை வெளிப்படுத்தியிருக்கின்றது. அது நிறைவேற்று அதிகாரம், நாடாளுமன்ற ஆட்சி முறை என்பவற்றை உள்ளடக்கிய இறைமையுள்ள அரசாங்கத்தையும் மீறிய ஒரு கும்பலாட்சி – குண்டர்களின் ஆட்சி நாட்டில் நிலவுவதையே அடையாளப்படுத்தி உள்ளது. யுத்த வெற்றிவாத அரசியல் மனோநிலை சார்ந்த எதேச்சதிகார ஆட்சிக்கு 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலிலும் தொடர்ந்து நடைபெற்ற பொதுத் தேர்தலிலும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு நாட்டில் நல்லாட்ச…
-
- 0 replies
- 771 views
-
-
பாதிக்கப்பட்ட மக்களை கவனத்தில் கொள்ளுங்கள் யுத்தம் முடிவடைந்து பத்து வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் இதுவரை யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி நிலைநாட்டப்படவுமில்லை. நிவாரணங்கள் சரியான முறையில் அந்த மக்களை சென்றடையவுமில்லை. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்ட மக்களாகவே இருப்பதுடன் நீதிக்காக தொடர் போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கின்றனர். நாட்டின் தற்போதைய இக்கட்டான சூழலில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் விடயங்கள் குறித்து கவனம் செலுத்துவது முக்கியத்துவமற்றது என யாரும் கருதிவிடக் கூடாது நாட்டின் தற்போதைய நிலையிலிருந்து நாட்டை மீட்டெடுத்து…
-
- 0 replies
- 453 views
-
-
'மோடியின் வெற்றி உலகிற்கும், இந்தியாவிற்கும் கெடுதியானதொரு செய்தியாகும்' இந்தியப் பொதுத்தேர்தலில் நரேந்திர மோடிக்குக் கிடைத்திருக்கும் பிரம்மாண்டமான வெற்றி இந்தியாவிற்கும், உலகிற்கும் நல்லதொரு செய்தியல்ல. குறிப்பாக இந்தியாவின் ஆன்மாவுக்குத் தீங்கானது என்று லண்டன் கார்டியன் பத்திரிகை இந்தியத் தேர்தல் முடிவு குறித்து எழுதிய ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிட்டிருக்கிறது. அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது, வரலாற்றில் மிகப்பெரிய தேர்தலில் மோடி என்ற ஒரு மனிதன் வெற்றி பெற்றிருக்கிறார். சுதந்திர இந்தியாவின் அரசியல் வரலாற்றில் 1971 ஆம் ஆண்டுக்குப் பிறகு தனியொரு கட்சியை அறுதிப் பெரும்பான்ம…
-
- 0 replies
- 322 views
-
-
வெசாக் தினத்தில் வௌிப்பட்ட நல்லிணக்கம் சி.சி.என் இம்முறை வெசாக் தினம் மிகவும் அமைதியான முறையில் அனுஷ்டிக்கப்பட்டது. பெரும்பான்மையினர் செறிந்து வாழ்ந்து வரும் பிரதேசங்களில் வெசாக் தோரணங்கள்,வர்ண அலங்காரங்கள் , மின்குமிழ் வேலைப்பாடுகளுக்கு குறைவிருக்கவில்லை. எனினும் முதன் முறையாக தொரண என்ற அலங்கார அமைப்பு இல்லாத ஒரு வெசாக் தினமாகவும் பெரியளவான உணவு தன்சல் இல்லாததாகவும் இது அனுஷ்டிக்கப்பட்டமை ஒரு குறையாகவே தெரிந்தது. இந்த குறையை இல்லாதாக்குவது போன்று இம்முறை அனைவரையும் ஆச்சரியப்பட வைத்த சம்பவம் பல முஸ்லிம்கள் தமது மார்க்க கட்டுப்பாடுகளையும் தளர்த்தி வெசாக் பந்தல் அமைத்தல், தன்சல் செயற்பாடுகளில் ஈடுபடல் ஏன் விகாரைகளுக்கு செல்லல் போன்ற விடயங்களில் ஈடுபட…
-
- 0 replies
- 981 views
-