அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
இந்துமா சமுத்திரத்தின் பாதுகாப்பு, பயன்பாடுகள் தொடர்பான ஆதிக்கம் யாருக்கு? ஆராய கொழும்பில் சர்வதேச மாநாடு (கூர்மை தென்னாபிரிக்காவின் சர்வதேச உறவுகள் மற்றும் ஒத்துழைப்புக்கான பிரதிப் பணிப்பாளர் நாயகம் அனில் சூக்லால் மற்றும் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் சிறப்புத் தூதுவர் பீற்றர் தொம்சன் ஆகியோரும் இந்த மாநாட்டில் பங்குகொள்ளவுள்ளனர். ஜப்பான் சார்பில் கொழும்பில் உள்ள தூதரக உயர் அதிகாரிகள் கலந்துகொள்ளவார்கள். இந்த மாநாட்டுக்கான ஏற்பாட்டை இலங்கை அரசு செய்துள்ளதாக ஊடகங்களுக்கு கூறப்பட்டுள்ளது. ஆனால், அமெரிக்கா, ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகளின் அழுத்தங்களினால் இந்த மாநட்டை இலங்கை அரசு ஏற்பாடு செய்ததாக உயர்மட்டத் தகவல்கள் கூறுகின்றன. …
-
- 0 replies
- 409 views
-
-
http://www.kaakam.com/?p=1355 தமிழீழ மண்ணின் அரசியல் தலைமை ஆங்கிலப் புலமைவாய்ந்த மேட்டுக்குடிக் கனவான் கும்பல்களிடம் மீண்டும் போய்ச் சேர வேண்டுமென்பதில் மேற்கு மற்றும் இந்தியத் தூதரங்கள் உறுதியாகவுள்ளன. உழைக்கும் மக்களிடமிருந்து போராட்ட ஆற்றல் தலைதூக்கிவிட ஏதுவான அத்தனை வாய்ப்புகளையும் இல்லாதாக்கியும் மடைமாற்றியும் இந்தக் கனவான் கும்பலிடம் கொண்டு சென்று தமிழர்களின் அரசியல் தலைமையை அடகுவைப்பதில் இந்த மேற்குலக இந்தியச் சூழ்ச்சி நிகழ்ச்சி நிரல் வேலை செய்கின்றது. இந்த நுண்ணரசியற் கேடுகளை உணர்ந்துகொள்ளத் தடையாக உள்ள பல தடைகளில் தமிழ்ச் சமூகம் NGO க்களுடன் பின்னிப்பிணைந்திருப்பது ஒரு பெருந்தடையாக இருக்கிறது. இது குறித்த விழிப்பூட்டல்களை மக்களிடத்தில் மேற்கொள்ள …
-
- 5 replies
- 843 views
-
-
அரசியல் கைதிகளும் தமிழ் அரசியலின் இயலாத்தனமும் – நிலாந்தன் October 7, 2018 அநுராதபுரம் சிறைச்சாலையில் அரசியற்கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கிய அதே காலப்பகுதியில் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தமிழமுதம் என்ற பெயரில் ஒரு தமிழ் விழாவை விமரிசையாகக் கொண்டாடியது. அவ்விழாவிற்கு நிதி அனுசரணை செய்தவர்களுள் தமிழரசுக் கட்சியின் உத்தியோகபூர்வ பத்திரிகையான புதிய சுதந்திரன் பத்திரிகையின் நிர்வாக பணிப்பாளரும் ஒருவர். ஐம்பதாயிரம் ரூபா நிதியுதவி வழங்கிய இவர் கூட்டமைப்பின் கனடா அணியைச் சேர்ந்தவர் என்று கருதப்படுகிறது. கடந்த ஆண்டு அரசியற்கைதிகள் போராடிய போது அதில் யாழ் பல்கலைக்கழகமும் பங்குபற்றியது. கைதிகளுக்கு ஆதரவாக போராட்டத்தை முன்னெடுத்த சமூக அமைப்…
-
- 1 reply
- 648 views
-
-
அரசியல் கைதிகளின் விவகாரமும் கூட்டமைப்பின் படுதோல்வியும் யதீந்திரா அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான விவகாரம் நீண்ட காலமாகத் தொடர்கிறது. அதற்கு ஒரு நியாயமான தீர்வை இன்றுவரை காண முடியவில்லை. அரசியல் கைதிகள் சிலர் சாகும் வரை உணவுதவிர்ப்பில் ஈடுபட்டிருக்கின்றனர். இந்தக் கட்டுரை எழுதிக் கொண்டிருக்கும் போது, மகசின் சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 43 அரசியல் கைதிகள் உண்ணாவிரத்தில் ஈடுபட்டுள்ளதான செய்தி வெளியாகியிருக்கிறது. இது புதிய விடயமல்ல. இதற்கு முன்னரும் கூட பல தடவைகள் இ;வ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன. அப்போது என்ன நடைபெற்றதோ அதுவே இப்போதும் நடைபெறுகிறது. அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி ஆங்காங்கே எதிர்ப்புக்கள் கிளம்பியிருக்கின்றன. இதனைத் தொடர்ந்து…
-
- 0 replies
- 408 views
-
-
விக்னேஸ்வரன் இன்னொரு கஜேந்திரகுமாரா? October 4, 2018 பரசுராம் இது அறிக்கைப் போர் காலம். தேர்தல் இன்னும் நெருக்கவில்லையென்பதால், மேடையில் ஏறி பேசாமல், அலுவலகங்களில் இருந்து அறிக்கைகளை தட்டிவிட்டு, பரபரப்பை ஏற்றிக் கொண்டிருக்கிறார்கள் அரசியல் கட்சியினர். தமிழ் தேசிய கூட்டமைப்பு, முதலமைச்சர் தரப்பு, ஈ.பி.டி.பி, வடக்கு எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா ஆகிய தரப்பினர் இந்த அறிக்கைப் போரில் முன்வரிசையில் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். பொதுவாகவே பேஸ்புக், அறிக்கை விவகாரங்களில் பிய்த்து உதறும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி காரர்கள், இந்த விடயத்தில் திடீரென இவர்களின் விஸ்பரூபத்தை பார்த்து மிரண்டு விட்டார்கள் போல தெரிகிறது. ஆயினும், முதலமைச்சர்தான் இதில் ஒரு அடி முன்னால்…
-
- 0 replies
- 509 views
-
-
மகிந்தாவாதிகளின் இடைக்கால அரசாங்க இடைச்செருகல் ஏன்? Prem இலங்கைஅரசியல்வாதிகளிடம் இருந்து தினசரி ஏதாவது செய்திகள் கிட்டத்தான் செய்கின்றன. அந்தவரிசையில் இடைக்காலஅரசாங்கத்தை அமைக்கும்முயற்சி என்ற புதிய செய்தி கிட்டியிருக்கிறது. மகிந்தாவாதிகளின் முக்கியமுகமும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. திஸாநாயக்காதான் இந்தஇடைக்கால அரசாங்கம் என்ற இடைச்செருகலை நேற்று செய்திருந்தார். கதை கதையாம் காரணமாம் காரணத்தில் ஒரு தோரணமாம் தோரணத்தில் ஒரு தொங்கட்டானாம் என்ற பாணியில் அவரது பட்டியல்கள் போடப்பட்டன. அரசாங்கம் சமர்ப்பிக்கும் வரவு - செலவுத்திட்டம் எனப்படும் பாதீட்டை தோற்கடிப்பது. அதன்பின்னர் தமது அணியின் தலைமையில் தமிழ், முஸ்லிம் கட்சிகளின் உதவியுடன் இடைக்காலஅரச…
-
- 0 replies
- 521 views
-
-
வடக்கின் ‘சுற்றுலா அரசியல்’ கே. சஞ்சயன் / 2018 ஒக்டோபர் 05 வெள்ளிக்கிழமை, மு.ப. 08:36 கடந்த செப்டெம்பர் 26ஆம் திகதி, நல்லூரில் தியாகி திலீபனின் நினைவு நாள் நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்க, யாழ். மாநகரசபை மைதானத்தில், தேசிய சுற்றுலா நாள் நிகழ்வு நடந்து கொண்டிருந்தது. இந்த இரண்டு நிகழ்வுகளில், ஒன்றில், யாழ். மாநகர மேயரும், இன்னொன்றில், வட மாகாண முதலமைச்சரும் பங்கேற்றிருந்தார்கள். இருவருமே, அரசியலில் எதிரெதிர் முகாம்களில் இருக்கின்றவர்கள். திலீபன் நினைவு நிகழ்வு நடக்கும்போது, யாழ். மாநகர சபைப் பகுதியில், வேறு நிகழ்வுகள் நடத்தக்கூடாது என்று, தடுக்கும் முயற்சிகள் மாநகர சபையால் மேற்கொள்ளப்பட்டன. அது, வடமாகாண முதலமைச்சர் பங்கேற்கும், தேசிய சுற்று…
-
- 0 replies
- 1.9k views
-
-
“பிரபாகரனை முடித்துவிடுமாறே தமிழ்நாடு வலியுறுத்தியது” -பாட்டலி சம்பிக்க கூறுகிறார் Menaka Mookandi / 2018 ஒக்டோபர் 04 வியாழக்கிழமை “இன்று, வேலுப்பிள்ளை பிரபாகரன் பற்றி, பலரும் பரிதாபமாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், பாதுகாப்புப் படையினரால், இறுதி யுத்தத்தில் பிரபாகரன் சுற்றிவளைக்கப்பட்ட போது, தமிழ் நாட்டின் அனைத்து அரசியல் தலைமைகளிடமும், இந்திய அரசாங்கத்தால் அது குறித்து அறிவிக்கப்பட்டிருந்தது. இன்னும் சில நாள்களில், பிரபாகரன் கொல்லப்பட்டு விடலாம். அதனால், சர்வதேசத் தலையீடு அவசியமா என்று, தமிழ்நாடு அரசியல் தலைமைகளிடம் கேட்கப்பட்ட போது, அவர்கள் அனைவரும், பிரபாகரனை முடித்துவிடுங்கள் என்று கூறியதாக, இந்திய அரசாங்கத்தின், முக்கிய ஆலோசகர் ஒருவர் என…
-
- 3 replies
- 950 views
-
-
2018 நொபெல் பரிசுகள்: காலம் கடந்த வாழ்வு தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2018 ஒக்டோபர் 04 வியாழக்கிழமை, பரிசுகளுக்கு ஒரு மரியாதை உண்டு. ஆனால், அது என்னென்றைக்குமானதல்ல. அது சாகித்திய விருது முதல் நொபெல் பரிசு வரை அனைத்துக்கும் பொருந்தும். நம்பகத்தன்மையைத் தக்கவைக்கும் விருதுகள், காலங்கடந்தும் நிலைக்கின்றன. நம்பகத்தன்மையை இழந்த விருதுகள், காலங்கடந்தும் வாழும் போதும், அதன் நிலை அவலமானது. நாடகத் தன்மையுடனும் சடங்காசாரங்களுடனும் அது தன்னைத் தக்க வைக்க முனைகிறது. காலங்கடந்த வாழ்வு, மனிதர்களுக்கு மட்டுமல்ல, பரிசுகளுக்கும் துன்பமானது. இக்கட்டுரையை, நீங்கள் வாசிக்கும்போது, சமாதானத்துக்கான பரிசும் இலக்கியத்துக்கான பரிசும் தவிர்த்து, ஏனைய துறைசார் நொபெல் பர…
-
- 0 replies
- 424 views
-
-
பரபரப்பு அரசியலில் தமிழ்த் தலைமைகள் -க. அகரன் இலங்கை அரசியல் நிலைமை அண்மைக் காலமாக கொதி நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளமையை அவதானிக்க முடிகின்றது. தென்பகுதி அரசியல், முக்கோண அரசியல் நகர்வில் உள்ள நிலையில், அதையொத்து வடபகுதி அரசியலும் உள்ளமை, மக்கள் மத்தியில் ‘அவதானிப்பு அரசியலை’ அதிகரித்துள்ளது. வெறுமனே அரசியல் தலைமைகளை விமர்சிக்கும் மக்கள் இன்று, அதை ஆராய்ந்து, அவதானித்துத் தீர்மானம் எடுக்கும் செயன்முறையொன்றுக்குள் நகர்ந்திருப்பதானது, ஆரோக்கியமான அரசியலாக உள்ளபோதிலும், அரசியல்வாதிகள் அரசியல் கட்சிகளுக்குள் ஏற்பட்டுள்ள குழப்பகரமான நிலை, முழுநாட்டு மக்களையும் பொறுத்தளவில், ஆரோக்கியமற்றதாகவே உள்ளது. அரசியல்வாதிகளுக்கு மத்தியில் அதிகாரப்போட்டி நிலவ…
-
- 0 replies
- 455 views
-
-
ஜப்பான் அரசின் இரண்டு போர்க்கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்தில்- நல்லிணக்கம் என்கிறது ஜப்பான் தூதரகம் 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் வசதியான அரசியல் நகர்வுகள் இலங்கையின் அம்பாந்தோட்டைத் துறைமுகம் அனைத்து நாடுகளினதும் கப்பல்கள் வந்துசெல்லக் கூடிய வகையில் மாற்றியமைக்கப்பட வேண்டும் என ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் கஸுயுகி நகானே, (Kazuyuki Nakane) கடந்த ஓகஸ்ட் மாதம் கொழும்பில் கூறியிருந்தார். அதனையடுத்து ஜப்பான் உதவியின் கீழ் பதினொரு மில்லியன் டொலருக்கும் அதிகமான பெறுமதியுடைய இரண்டு ரோந்து சேவைக் கப்பல்கள் இலங்கை …
-
- 2 replies
- 502 views
-
-
தமிழினத்தின் தலைவிதியை தமிழ் மக்கள் பேரவை மாற்றுமா? மு .திருநாவுக்கரசு தலைவனை வரலாறு உருவாக்குகிறது. வரலாற்றை தலைவன் முன்னெடுக்கின்றான். காலத்தை முன்னெடுப்பவனை வரலாறு முன்னுயர்த்தி அவனை அம்மக்களின் குறியீடாக்குகிறது. முள்ளிவாய்க்கால் பேரவலத்தைவிடவும் மிகப் பெரிய அரசியல் பேரவலத்திற்கு தமிழ் மக்கள் ஆளாகியுள்ள காலமிது. தோலிருக்க சுளை பிடுங்கும் நுட்பமான அரசியல் அவலத்திற்கு தமிழ் மக்கள் உள்ளாக்கப்படும் காலமிது. கடந்த ஒரு நூற்றாண்டு காலத்தில் இப்படியொரு பாரிய அரசியல் அவலத்திற்கு தமிழ் மக்கள் உள்ளாகியதில்லை. இது ஒரு நூற்றாண்டு காலம் கண்டிராத மொத்த அவலம். முள்ளிவாய்க்கால் ஒரு பேரவலந்தான். அது ஓர் இனப்படுகொலை வாயிலாக இராணுவம் தமிழரை நசுக்கிய அவலம். ஆயினும் மறுவளம…
-
- 0 replies
- 559 views
-
-
கத்தலோனியர்களும்... ஈழத்தமிழர்களும்! Prem இன்று உலகஊடகங்களில் மீண்டும் ஒருமுறை கத்தலோனியா குறித்த செய்திகள்முக்கிய இடத்தைப் பிடித்தன. அதற்குக்காரணம் கடந்த இரவு அங்கு இடம்பெற்றமோதல்கள். பார்சலோனா நகரில் அறவழியில்பேரணி சென்ற ஒரு லட்சத்து எண்பதினாயிரத்துக்குமேற்பட்ட கத்தலோனியர்களுக்கும் காவற்துறையினருக்கும்இடையில் மோதல்கள் இடம்பெற்றன. நூற்றுக்கணக்கனக்கான கத்தலோனிர்கள் அதிவேக தொடருந்து வழிதடங்களையும்அதிவேகச்சாலைகளையும் வீதிகளையும் சில மணிநேரங்களாக முடக்கி போராடினர். சுதந்திரகத்தலோனியா குறித்து கடந்த வருடம் ஒக்டோபர் 1-ந் திகதி கத்லோனியர்கள் நடத்திய குடியொப்ப வாக்கெடுப்பின்ஒருவருட நினைவு நாளுக்காக இந்த போராட்டங்கள் இடம்பெற்றன. இற்றைக்கு ஒரு வருடத்துக…
-
- 0 replies
- 516 views
-
-
யூதர்கள் ஏன் இத்தனை கொடூரமானவர்களாக இருக்கின்றார்கள்? யூதர்கள் ஏன் தொடர்ச்சியாக அழிக்கப்பட்டு வருகின்றார்கள்? யூதர்களை இந்த உலகம் ஏன் வெறுக்கின்றது? யூதர்கள் ஏன் மிகக் கொடூரமாக செயற்படுகின்றார்கள்? இந்தக் கேள்விகளுக்கான பதிலைத் தேடுவதற்கு முயல்கின்றது இந்த உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி: இந்த கட்டுரை ஒரு பொது எழுத்தாளர் Gokulan அவர்களால் வழங்கப்பட்டு 28 Sep 2018 எமது செய்திப்பிரிவால் பிரசுரிக்கப்பட்டது. இந்த கட்டுரையின் எந்தவொரு தயாரிப்பிலும் IBC Tamil செய்திப்பிரிவு பங்கேற்கவில்லை. https://www.ibctamil.com/articles/80/106810
-
- 0 replies
- 686 views
-
-
தானும் போர்க்குற்றவாளி என்கிறாரா மைத்திரிபால? October 1, 2018 குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…. இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வெளிநாட்டு நடவடிக்கைள் ஏமாற்றத்தை தரும் வகையில் இருப்பதாக தமிழ் தேசியக் கூட்மைப்பு தெரிவித்துள்ளது. இலவு காத்த கிளியின் கதைபோல சிங்களத் தலைவர்களை நம்பியிருப்பது என்பது வரலாறு முழுவதும் நடத்திருக்கிறது. மைத்திரிபால சிறிசேனவின் நடவடிக்கையிலும் இதை உணரும் காலம் வெளிப்படையாகியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவரவும் மைத்திரிபால சிறிசேன ஆட்சியைக் கைப்பற்றிக் கொள்ளவும் தமிழ் மக்கள் பெரும் பங்களிப்பை ஆற்றினர். ஆனால் இவ்விரு ஆட்சிகளும் இனப்பிரச்சினை விடயத்தில் எந்த வேறுபாடுகளும்…
-
- 0 replies
- 470 views
-
-
‘பேரினவாதமும் தேசியவாதமும்’ – லோகன் பரமசாமி Oct 01, 2018 உலகிலேயே மிகவும் வலிமைமிக்க அரசியல் சக்தி எது என்ற கேள்வியுடன் சர்வதேச உறவுகள் குறித்து தலைசிறந்த மேலைத்தேய ஆய்வாளர்களில் ஒருவராகப் போற்றப்படும் ஸ்டீபன் வோல்ற் என்பவர் 2011ஆண்டில் Foreign Policy என்ற சஞ்சிகையில் கட்டுரை ஒன்றை எழுதி இருந்தார். அந்த கட்டுரையிலே உலகில் தற்போது அரசியல் செல்வாக்குமிகுந்த அம்சங்கள் பலவற்றை எடுத்துக் கூறுகிறார். சமயம்சார்ந்த அரசியலா? அல்லது மனித உரிமை சார்ந்த அரசியலா? அல்லது இணையத்தளத்தால் பலம்பெற்றுள்ள டிஜிற்ரல் தொழில்நுட்பமா? இவை எல்லாவற்றையும் விட நாடுகள் பாதுகாப்புக்கான மிகப்பெரும் ஆயுதமாகப் பயன்படுத்தும் அணு ஆயுத பலமா? எது இன்றைய உலகில் மிகவும் செல்வாக்குமிக்க அரசியல…
-
- 0 replies
- 622 views
-
-
கட்சி மாநாடுகளும் தமிழர் அரசியலும் 2018 ஒக்டோபர் 02 செவ்வாய்க்கிழமை -அதிரன் அரசியல் என்பது நாடு, அரசு, சமூகம், குடிமக்கள், ஆட்சிமுறை, சட்டம் போன்ற அமைப்புகள் மற்றும் அவை சார்ந்த வழக்குப் பொருள்கள் என அனைத்தையும் உள்ளடக்கியதாகும். இன்றைய காலத்தில் அரசியலை ஒதுக்கி வைத்துவிட்டு அன்றாடச் சாப்பாட்டைக்கூட நினைக்க முடியாத அளவுக்கு, அரசியலின் ஆதிக்கம் வியாபித்திருக்கிறது. திருக்குறளில் பல தலைப்புகளில் அரசியல் விவரிக்கப்பட்டுள்ளது. பொருட்பாலில் அமைச்சியல், அரணியல், கூழியல், படையியல், நட்பியல், குடியியல் என ஆறு இயல்களில் இயற்றப்பட்டுள்ள நாற்பத்தைந்து தலைப்புகளில் 450 குறள்கள் கூறுவதும் அரசியல் பற்றியதாகத்தான் இருக்கிறது. சாணக்கியர், தொல்காப்ப…
-
- 0 replies
- 519 views
-
-
திலீபன் – 2018 – திரைப்பட விழாவும் இசை வேள்வியும் – நிலாந்தன்… September 30, 2018 1 Min Read கடந்த சில ஆண்டுகளாக திலீபனின் நினைவு நாட்களில்தான் யாழ்ப்பாணத்தில் உலகத் திரைப்பட விழா ஒழுங்கு செய்யப்பட்டு வந்தது. இது திட்டமிட்டு செய்யப்பட்டதல்ல. தற்செயலாக நிகழ்ந்த ஒன்று. அதை ஒழுங்குபடுத்தும் யாழ் பல்கலைக்கழகம் நல்லூர் பெருவிழாவை முன்னிட்டு நாட்களை தெரிவு செய்யும் போது கிட்டத்தட்ட திலீபனின் நாட்களுக்குள்ளேயே திரைப்பட நாட்களில் சில வந்துவிட்டன. இது ஒரு சில பகுதியினரால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வந்தது. திலீபனின் நினைவு நாட்களை அவமதிக்கும் ஒரு செயலாக அது பார்க்கப்பட்டது. உலக திரைப்பட விழாவினை ஆதரித்த ஒரு சிலர் பின்வருமாறு கேட்டார்கள். ‘…
-
- 0 replies
- 606 views
-
-
மாலைதீவின் தேர்தல் முடிவு நமக்குச் சொல்லும் செய்தி என்ன? யதீந்திரா மாலைதீவின் தேர்தல் முடிவு உலக ஊடகங்களில் அதிக கவனத்தை பெற்றிருக்கின்றது. கடந்த சில வருடங்களாக மாலைதீவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் கடுமையான விரிசல்கள் ஏற்பட்டிருந்தன. இதன் உச்சமாக இந்தியாவினால் வழங்கப்பட்ட இரண்டு உலங்கு வானூர்திகளை திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறு மாலைதீவு நிர்வாகம் பணித்திருந்தது. மாலைதீவில் தங்கியிருந்த இந்தியாவின் 26 விமானப்படை அதிகாரிகளுக்கான கடவுச் சீட்டை இரத்துச் செய்தது. அத்துடன் மாலைதீவில் பணியாற்றிக் கொண்டிருந்த 2000 இந்திய பணியாளர்களுக்கான வேலை அனுமதிப்பத்திரத்தை இரத்துச் செய்தது. வழமையாக இந்தியர்களால் விண்ணப்பிக்கப்பட்டு, பெறப்படும் மாலைதீவின் விளம்பர நிறுவனங்களுக்கு இந…
-
- 0 replies
- 797 views
-
-
எல்லை நிர்ணய மீளாய்வுக் குழு: முஸ்லிம்களின் முன்னுள்ள கடப்பாடு மொஹமட் பாதுஷா / 2018 செப்டெம்பர் 28 வெள்ளிக்கிழமை, மு.ப. 07:42 அதிகார எல்லைகளை, விஸ்தரித்துக் கொள்வதற்காக, பன்னெடுங்காலமாக உலகில், நாடுகளுக்கிடையில் நிலம்சார் யுத்தங்கள், நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தனிமனிதனும் கூட, காணிகளை உரிமையாக்கிக் கொள்வதில், அதீத அக்கறை எடுத்துச் செயற்படுகின்ற காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஆனால், இலங்கை முஸ்லிம்கள், மாகாணங்களின் எல்லை மீள்நிர்ணயம் தொடர்பிலும், அதனது மீளாய்வு குறித்தும் முனைப்புக் காட்டாமல் இருப்பதை, நன்றாகவே அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. ‘விகிதாசாரத்துக்குள் தொகுதி’ எனச் சொல்லப்படும், கலப்புத் தேர்தல் முறையொன்று, நாட்…
-
- 0 replies
- 543 views
-
-
வடக்குக்கு வந்துள்ள ஆபத்து கே. சஞ்சயன் / காலநிலை மாற்றங்களால், அடுத்த 30 ஆண்டுகளில் இலங்கையின் பொருளாதாரம், வாழ்க்கைத் தரம் என்பன மோசமான நிலையை எட்டும் என்று, உலக வங்கியின் அண்மைய அறிக்கைகள் சுட்டிக் காட்டுகின்றன. “வெப்பநிலை, மழைவீழ்ச்சி மாற்றங்கள் வாழ்க்கைத் தரத்தில் ஏற்படுத்தப் போகும் தாக்கங்கள்” என்ற தலைப்பில், அண்மையில் உலக வங்கி, ஓர் அறிக்கையை வெளியிட்டிருந்தது. தெற்காசியாவில், இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் ஆகிய நாடுகள் குறித்து, தனித்தனியான அறிக்கைகளாக வெளியிடப்பட்டன. இந்த அறிக்கையில், 2050ஆம் ஆண்டில், இலங்கை எதிர்கொள்ளப் போகின்ற மிகப்பெரிய அச்சுறுத்தல்கள் தெளிவாகவே சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. ஒட்டுமொத்த…
-
- 0 replies
- 778 views
-
-
இன அரசியல்-1: மனித இனத்தின் தோற்றமும் - பரவலும் பிரபஞ்சம் மற்றும் உயிர்த் தோற்றம் பிரபஞ்சத்தின் வயது சுமார் 1400 கோடி ஆண்டுவரை இருக்கலாம். உலகம் உட்பட சூரியக் குடும்பத்தின் வயது ஏறத்தாழ 450 கோடி ஆண்டு ஆகும். உலகில் முதன் முதலில் உயிர்கள் தோன்றியது ஏறத்தாழ 300 கோடி ஆண்டுகளுக்கு முன்னர்தான். முதலில் தோன்றியவை பாக்டீரியா போன்ற ஓரணு உயிரிகளே. இன்றுள்ள அனைத்துச் செடிகொடிகளும் விலங்கு பறவைகளும் ஒரே மூலத்தில் தோன்றியவையே ஆகும். இவ்வுயிரின வகைகளில் 15 இலட்சம் தனி இனங்கள் (Species) கண்டுபிடிக்கப்பட்டு பெயர் சூட்டப்பட்டுள்ளன. இன்னும் இனம் கண்டுபிடிக்கப்படாதவையும், ப…
-
- 15 replies
- 8.9k views
-
-
கிழக்கு அரசியல், பல்கலைக்கழக காதல்? -அதிரன் பல்கலைக்கழகத்தில் கற்கும் காலத்தில், ஒரு பெண்ணுடன், பல பெண்களுடன் பழகுவோம். அந்தப்பெண்களைத்தான் வாழ்நாள் துணையாக தொடருவோம் என்றில்லை. இதேபோலத்தான், இன்றைய கால அரசியல் கட்சிகளின் இணைவும் தேர்தல் கூட்டுகளும் ஆட்சிக் கூட்டுகளுமா என்ற கேள்விக்குப் பதில் தேடத்தான் வேண்டும். வாக்குறுதிகளை நம்பி, போராட்டங்களை நடத்துவதும் கைவிடுவதும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. நல்லாட்சி அரசாங்கம் வருவதற்கு முன்னர், கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றிக் கொண்டதா என்ற கேள்வி எல்லோருடைய மனங்களிலும் வரத் தொடங்கியிருக்கிறது. இந்நிலையில் தான் மாகாண சபைத் தேர்தல், ஜனாதிபதித்…
-
- 0 replies
- 582 views
-
-
சமூகநல அரசாங்கங்களின் முடிவு: ஸ்கன்டினேவிய அனுபங்கள் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / மக்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான உறவு, தொடர்ச்சியாக மாற்றமடைந்து வருகிறது. மக்களின் நலன்களைக் காக்கும் அரசாங்கம், ஒருபோதும் இருந்ததில்லை. ஆனால், போராட்டங்களும் புரட்சிகளும் அரசாங்கத்தை, மக்கள் நலன் பேணும் ஒன்றாக மாற்றின. இப்போது நிலைமை மாறுகிறது. அரசாங்கங்கள் சமூக நலன்களைத் தவிர்ப்பனவாக உருமாறியுள்ளன. இம்மாற்றம், சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கி உள்ளது. பல ஐரோப்பிய நாடுகள், மக்கள் நலன்களை இல்லாமல் செய்கின்ற நிலையிலும் சுவீடன், நோர்வே ஆகிய ஸ்கன்டினேவிய நாடுகள், சமூக…
-
- 0 replies
- 581 views
-
-
கல்முனை தொடர்பாக ON KALMUNAI Latter from Ashroffali Fareed கல்முனையில் மாநகர சபையில் ஒன்றிணைந்து இருக்கவே அங்குள்ள தமிழர்கள் விரும்பவில்லை என்பதே நிதர்சனம். அதன் காரணமாகவே ஹென்றி மகேந்திரன் காரியப்பர் வீதிக்கான பெயர்ப்பலகையை உடைத்து நொறுக்கினார். இப்படி எத்தனையோ சம்பவங்களை வரிசைப்படுத்தலாம். அதன் பின்னர் தான் ஹென்றி மகேந்திரனின் செல்வாக்கு அதிகரித்தது. அடுத்தவர் கோடீஸ்வரன். நாளுக்கு நாள் இனவாதம் பேசிக் கொண்டிருக்கின்றார். இவர்கள் மாறமாட்டார்கள்- Ashroffali Fareed * Reply of V.I.S.Jayapalan. * அன்புக்குரிய Ashroffali Fareed அவர்களுக்கு, ஆம் நண்பா நீங்கள் சொல்லுவது முற்றிலும் உண்மை. . தமிழர்கள் 1948ல் இருந்தே தங்கள் நிலத்தை விட்டுக்கொடுக்காத அரசிய…
-
- 0 replies
- 679 views
-