அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9274 topics in this forum
-
தமிழ் அரசியல் கைதிகளுக்கு உயிர் அச்சுறுத்தல்- அமைச்சரைப் பதவி விலகவைத்துப் பொறுப்புக்கூறும் தோற்றப்பாட்டை ஜெனீவாவுக்குக் காண்பிக்க முயற்சி கிளிநொச்சி அலுவலகத்தை நல்லிணக்கச் செயற்பாடு என்று பாராட்டிய ஆணையாளருக்கு மற்றுமொரு நம்பிக்கையா? வடமத்திய மாகாணம் அநுராதபுரம் சிறைச்சாலையில் குடிபோதையில் சென்ற இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்த தமிழ் அரசியல் கைதிகளை முழந்தாளிடச் செய்து, துப்பாக்கி முனையில் கைதிகளுக்கு உயிர் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகளும் பொது அமைப்புகளும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளன. அமைச்சர் லொகான் ரத்வத்தயைக் கைது செய்ய வேண்டுமெனவும் கோரியுள்ளன. ஜெனீவ…
-
- 0 replies
- 351 views
-
-
கடப்பாட்டுக்கா, நிலைப்பாட்டுக்கா இந்தியாவின் முன்னுரிமை? பாரதீய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தர்ராஜன் தனிப்பட்ட பயணம் ஒன்றை மேற்கொண்டு அண்மையில் இலங்கை வந்திருந்தார். தனிப்பட்ட பயணமாக வந்திருந்தாலும் அவர் வெளிவிவகார அமைச்சர், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் எனப் பலரையும் அவர் சந்தித்திருந்தார். ஆனாலும், அவர்களையெல்லாம் தானாகத் திட்டமிட்டுச் சந்திக்கவில்லை என்றும், தம்மைச் சந்திக்க விரும்பியவர்களையே சந்தித்தேன் என்ற பாணியில் அவர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்டிருந்தார். யாழ். சென்றிருந்த தமிழிசை சௌந்தர்ராஜன், அங்கு வடக்கு மாகாண முதலமைச்…
-
- 0 replies
- 401 views
-
-
அதிர்ச்சி வைத்தியம் அளித்த எமர்சன் இலங்கை வந்த ஐ.நா. விசேட நிபுணர் பென் எமர்சனின் அறிக்கை நாட்டில் பாரியதொரு சலசலப்பை ஏற்படுத்திவிட்டது என்றே கூறலாம். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி வழங்கல் செயற்பாட்டில் அலட்சியப் போக்கையும் இழுத்தடிக்கும் விதமான அணுகுமுறையையும் முன்னெடுத்து வந்த அரசாங்கம் சற்று ஆடிப்போய்விட்டது என்றே கூறலாம். சர்வதேசம் விழிப்புடன் தான் இருக்கின்றது என்பதை எமர்சனின் அறிக்கை ஊடாக புரிந்துகொண்ட அரசாங்கம் சற்று விழித்துக்கொண்டது என்றே கூறலாம் அதிர்ச்சி மற்றும் ஆச்சரியம் கலந்த ஒரு அறிவிப்பை கடந்தவாரம் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் பென் எமர்சன் வெளியிட்டிருந்தார். இதனால…
-
- 0 replies
- 416 views
-
-
புலம்பெயர்ந்த தமிழர்கள் பாதுகாப்புடன் வாழ்கிறார்கள் - அரசறிவியல் பேராசிரியர் [ வெள்ளிக்கிழமை, 09 மே 2014, 07:55 GMT ] [ நித்தியபாரதி ] இந்தியாவைப் போலல்லாது, அபிவிருத்தியடைந்த நாடுகளில் புகலிடக் கோரிக்கை என்பது குடியுரிமை பெறுவதற்கான முதலாவது படிமுறையாகக் காணப்படுகிறது. அபிவிருத்தியடைந்த நாடுகளின் குடிப்பரம்பலில் சிறிலங்காத் தமிழர்கள் நிரந்தரமானவர்களாகக் காணப்படுகின்றனர். இவ்வாறு The New Indian Express ஆங்கில ஊடகத்தில் முன்னாள் அரசறிவியல் பேராசிரியர் V Suryanarayanan* எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. சிறிலங்காவில் இடம்பெற்ற பல்வேறு மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அனைத்துலக விசாரணை மேற்கொள்ளப்பட வ…
-
- 0 replies
- 693 views
-
-
ஜப்பானைத் தனிமைப்படுத்தும் சிங்கப்பூர் சந்திப்பு - ஜனகன் முத்துக்குமார் வடகொரியாவுக்கும் தென்கொரியாவுக்கும் இடையிலான அண்மைக்காலத்து சமாதான இணக்கப்பாடுகளைத் தொடர்ந்து, வடகொரியத் தலைவருக்கும் ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதிக்கும் இடையில் சிங்கப்பூரில் சந்திப்பு நடைபெறவிருக்கும் நிலையில், குறித்த இரண்டு விடயங்களிலும் தனது பங்கு இல்லாமல் போனமை குறித்து, ஜப்பான் கவலை தெரிவித்துள்ளமை, சர்வதேச விவகாரங்களில் மிகவும் உன்னிப்பாகப் பார்க்கப்பட வேண்டியதாகவும். தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே-இன்னுடன் அண்மையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கருத்துத் தெரிவித்த ஜப்பானியப் பிரதமர் ஷின்ஸோ அபே, ஐ.அமெரிக்க - வடகொரிய பேச்சுவார…
-
- 0 replies
- 457 views
-
-
விடுதலைப் போரைக் கொச்சைப்படுத்தும் அரசியல்வாதிகள்! (தயாளன்) புரிந்துணர்வு என்பது அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை எந்தக் காலத்திலும் உணர முடியாத விடயம். இதனை எம்.கே.சிவாஜிலிங்கம், சிவசக்தி ஆனந்தன், செல்வம் அடைக்கலநாதன் ஆகிய மூன்று அரசியல் வாதிகளும் நிரூபித்துள்ளனர். விடுதலை உணர்வு என்றால் என்ன வென்று இவர்களுக்கு சில விடயங்களைச் சுட்டிக் காட்டவேண்டியுள்ளது. ஏனெனில் அரசியல்வாதி என்ற சட்டை இவர்கள் உடம்போடு ஒட்டிவிட்டது . அதனை பிய்த்து எடுப்பது என்பது முடியாத காரியம். முதலில் பரமதேவா விடயம் - கிழக்கில் அவருக்கென்று தனி வரலாறு உண்டு. அவரும் அரசியல் கைதியாக இருந்தார். அவர் விடுதலையாவதற்கு மிகக் குறுகிய காலமே இருந்தது. அப்படி இருந்தும் 23.09.1983 அன்று ம…
-
- 0 replies
- 1.2k views
-
-
மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தல் என்.கே அஷோக்பரன் Twitter: @nkashokbharan தனது தாயார் சிறிமாவோவின் கொள்கைகள் தொடர்ந்து நடைமுறையில் இருந்திருந்தால் நாடு வங்குரோத்து அடைந்திருக்காது என்று அண்மையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குறிப்பிட்டிருந்தமை நகைப்பை வரவழைப்பதாக இருந்தது. இந்த நாடு சுதந்திரமடைந்த 75 ஆண்டுகளில், 26 ஆண்டுகள் இந்நாட்டின் ஆட்சித் தலைமை பண்டாரநாயக்க குடும்பத்திடம் இருந்திருக்கிறது. முதலில் எஸ்.டபிள்யு.ஆர்.டீ.பண்டாரநாயக்க, அதன் பின்னர் சிறிமாவோ பண்டாரநாயக்க, அதன் பின்னர் சந்திரிகா பண்டாரநாயக்க என சுதந்திர இலங்கையின் வாழ்நாளில் மூன்றிலொன்றைவிட அதிககாலம் நாட்டை ஆண்டவர்கள் இவர்கள். பொருளாதாரக் கொள்கை என்பதை தனி…
-
- 0 replies
- 771 views
-
-
நடக்கப்போவது என்ன தேர்தல்? எம்.எஸ்.எம். ஐயூப் நாட்டில் முதலில் நடக்கப்போவது ஜனாதிபதித் தேர்தலா பொதுத்தேர்தலா என கயிறுழுப்பு ஒரு புறம் நடந்து கொண்டிருக்க மறுபுறத்தால் மீண்டும் நாட்டிலும் ஆட்சியிலும் ராஜபக்ஷ குடும்பத்தின் அதிகாரத்தை நிலை நாட்டுவதற்கான திரை மறைவு வேலைகள் தீவிரம் பெற்று வருகின்றன. மொட்டை மீண்டும் மலர வைத்து ராஜபக்ஷ குடும்பத்தை மீண்டும் ஆட்சி பீடமேற்ற தற்போது மீண்டும் நாடு திரும்பியுள்ளார் 7 மூளைக்காரரான பசில் ராஜபக்ஷ. தேர்தல் மேகங்கள் கருக்கட்டியுள்ள நிலையில், பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான பசில் ராஜபக்ஷ மீண்டும் நாடு திரும்பியுள்ளதால், தங்களின் ஆட்சியை மீள உருவாக்க முடியும், அதிகாரங்களை மீளப்பெற முடியும் என்று பொதுஜன பெரமுனவில் …
-
- 0 replies
- 256 views
-
-
வஞ்சம் - முஸ்லிம் சமூகம் மீது வஞ்சம் தீர்க்க வாய்ப்பான ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதல்கள் முகம்மது தம்பி மரைக்கார் / 2019 மே 23 வியாழக்கிழமை, பி.ப. 12:53 Comments - 0 முஸ்லிம் சமூகம் மீது, வஞ்சம் தீர்க்கக் காத்திருந்தோருக்கு, ஈஸ்டர் தினத்தன்று நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்கள், நல்லதொரு வாய்ப்பாக அமைந்து விட்டன. ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களையும் பயங்கரவாதிகளாகச் சில கூட்டம் சித்திரித்துக் கொண்டிருக்கிறது. மறுபுறத்தில், இந்தத் தாக்குதல்களைச் சாட்டாக வைத்து, முஸ்லிம் பிரதேசங்கள் பலவற்றில், காடைத்தனங்கள் இடம்பெற்றுள்ளன. இத்தனைக்கும், பாதிக்கப்பட்ட கிறிஸ்தவ மக்கள், மிகவும் பொறுமையுடனும் சகிப்புத் தன்மையுடன் இருக்கத்தக்கதாகவே, இவ்வளவு கூத்து…
-
- 0 replies
- 803 views
-
-
பொதுத் தேர்தல் களம் – 2024 November 8, 2024 — சின்னத்தம்பி குருபரன் — நிறுவனமயப்படுத்தப்பட்ட இலங்கைத் தமிழர் அரசியல் வரலாறு பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் 1878 இல் படித்த இலங்கையருக்கான பிரதிநிதித்துவம் சேர்.பொன்னம்பலம் இராமநாதனுக்கு வழங்கப்பட்டதில் இருந்து ஆரம்பமாகிறது. படித்த இலங்கையர் ஒருவரைத் தமிழர் சார்பாகத் தெரிவு செய்வதற்கான தெரிவுப் போட்டி 1878 இல் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரின் சைவப் பிரகாச வித்தியாசாலை மண்டபத்தில் வை.விசுவநாதபிள்ளை தலைமையில் நடைபெற்றது. அதில் இராமநாதனும் பிரபல சட்டத்தரணி பிறிட்டோவும் போட்டியிட்டனர். தெரிவுக்கான விவாதம் நீடித்துக் கொண்டு போகவே ஆறுமுக நாவலர் தலையிட்டுச் சுமுகமாகத் தீர்த்து வைத்ததனால் பொன்னம்பலம் இராமநாதன் தெரி…
-
- 0 replies
- 380 views
-
-
தமிழரசுக்கட்சி கூட்டுக் கடிதத்தில் கையெழுத்திடாது? நிலாந்தன். செம்மணிப் புதைகுழிக்குள் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களை அடையாளம் காண்பதற்கு நீதிமன்றம் மக்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.இம்மாதம் ஐந்தாம் திகதி குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் மக்கள் பொருட்களை அடையாளம் காட்டலாம்.அது ஒரு நீதிமன்றத்தில் ஆளுகைக்கு உட்பட்ட நடவடிக்கை என்ற காரணத்தால் அதற்குரிய ஒழுங்குகளையும் நீதிமன்றம் அறிவித்துள்ளது. அரசாங்கம் இந்த விடயத்தில் சீரியஸாக இருக்கிறது, உண்மையாக இருக்கிறது என்று கூறுபவர்களுக்கு இது உற்சாகமூட்டக்கூடியது.குறிப்பாக அடுத்த ஜெனீவா கூட்டத்தொடரை நோக்கி அரசாங்கம் உழைத்து வருவதை இது காட்டுகிறது. ஊழல்களுக்கு எதிராக அரசாங்கம் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஆர்…
-
- 0 replies
- 172 views
-
-
தேர்தல் முடியும் வரை கிழக்கு மக்கள் காத்திருப்பார்கள்? -இலட்சுமணன் ஆளுமை மிக்கவர்கள் அரசியலுக்குள் வரவேண்டும் என்ற ஒரு கதையை பலரும் சொல்கிறார்கள். எதனை வைத்து அதனை மட்டிடுகிறார்கள் என்பதுதான் புரிந்துகொள்ள முடியாத விடயமாக இருக்கிறது. “எனது மகன் வைத்தியராக வரவேண்டும்”, “பொறியியலாளராக வரவேண்டும்”, “கணக்காளராக வரவேண்டும்”, “சட்டத்தரணியாக வரவேண்டும்” என்று கனவு, கற்பனை வைத்து கற்பிக்கின்ற பெற்றோர், எனது மகன் அரசியல்வாதியாக வர வேண்டுமென்று எண்ணம் கொள்வதே இல்லை. இது வெறும் வாசகம் அல்ல நாம் அறிந்த உண்மை. தேர்தல் வரும் போதெல்லாம், நாம் எல…
-
- 0 replies
- 281 views
-
-
கொரோனா வைரஸ் காரணமாக செயற்படும் நாடாளுமன்றம் இல்லாத நிலையில் இலங்கை Rajeevan Arasaratnam May 29, 2020 கொரோனா வைரஸ் காரணமாக செயற்படும் நாடாளுமன்றம் இல்லாத நிலையில் இலங்கை2020-05-29T21:28:26+00:00அரசியல் களம் டி.டபில்யூ இலங்கை செவ்வாய்கிழமை கொரோனா வைரசிஸ் முடக்கலை தளர்த்தியது, கொழும்பு கம்பஹாவில் ஊரடங்குகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் நாடாளுமன்றத்தை கலைக்கும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் நடவடிக்கை தொடர்பில் மீண்டும் கவனம் திரும்பியுள்ளது. இலங்கை தற்போது ராஜபக்சவின் அதிகாரத்தை கேள்விக்குட்படுத்துவதற்கான நாடாளுமன்றம இல்லாமல் செயற்படுகின்றது. அரசமைப்பு செயற்பாட்டாளர்கள் கூடிய விரைவில் தேர்தல் இடம்பெறவேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றனர…
-
- 0 replies
- 419 views
-
-
ஐனாதிபதியின் மறுபக்கம் நல்லாட்சி அரசாங்கத்திற்குள் பிளவுகள் ஏற்பட்டுவிட்டதோ......., அடுத்து என்ன நடக்கப்போகின்றதோ...... என்ற ஐயப்பாடுகள் இப்போது பரவலாக எழுந்துள்ளன. புலனாய்வு பொலிஸ் பிரிவினர் -(சி.ஐ.டி), நிதி குற்றவியல் விசாரணை பிரிவினர் (எவ்.சி.ஐ.டி) மற்றும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினர் மீது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி என்ற ரீதியில் வெளியிட்டுள்ள அதிருப்தியே இதற்குக் காரணமாகும். முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபாய ராஜபக் ஷ, முன்னாள் கடற்படைத்தளபதிகள், இராணுவ புலனாய்வு பிரிவினர் ஆகியோரை விசாரணைக்கு உட்படுத்தி வருவதையும் அவர்களை நீதிமன்றத்தில் …
-
- 0 replies
- 617 views
-
-
உலகம்தழுவிய ஆளில்லா விமான (Drone – ட்ரோன்) போர்முகத்தை சீனா உருவாக்கிவிட்டது. N 76 Views உலகம்தழுவிய ஆளில்லா விமான (Drone – ட்ரோன்) போர்முகத்தை சீனா உருவாக்கிவிட்டது. அமெரிக்கா அந்த சந்தையில் கட்டாயம் இணையவேண்டும் அல்லது பின்னால் நிற்கவேண்டும். ட்ரோன் போர்முறை என்பது இருபத்தியோராம் நூற்றாண்டின் உலகளாவிய பாதுகாப்பு விடயத்தில் முக்கிய இடத்தை வகிக்கிறது. அல்கெய்தா (al Qaeda)போன்ற அரசல்லாத தரப்புகள் முதல் கடந்த தைமாத்தில் ஈரானிய மேஜர் ஜெனரல் காசிம் சொலைமானியை (Qasem Soleimani) கொலை செய்ததுவரை ஆயிரக்கணக்கான ஆளில்லா வானூர்தித் தாக்குதல்களை அமெரிக்கா நிகழ்த்தியுள்ளது. குர்திஸ்தானிய த…
-
- 0 replies
- 520 views
-
-
அஜித் டோவால் விஜயமும் இலங்கை அரசியலும்! - கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம் இலங்கை அரசியல் உறுதிப்பாடு என்பது இந்தியாவுடனான உறவிலே அதிகம் தங்கியிருப்பதான தோற்றப்பாடு உண்டு. அதனை நிராகரிக்க முடியாது விட்டாலும் இலங்கை இந்தியாவை கையாளுவதனைப் பொறுத்ததாகவே அத்தகைய எண்ணம் வளர்ந்துள்ளது. அதிலும் இலங்கைத் தமிழர் விடயத்தில் இந்தியாவின் அணுகுமுறைமை இலங்கை ஆட்சிக்கு விரோதமாக அமைய ஆரம்பித்ததன் பின்பாடு இந்தியாவைக் கையாளும் திறன் இலங்கை ஆட்சியாளருக்கு அவசியமானதாக அமைந்தது. ஆனால் இந்தியத் தரப்பு இலங்கையைத் திருப்திப்படுத்த முடியாத சூழலிலேயே இலங்கைத் தமிழரை அரவணைத்துக் கொண்டது. ஈழத் தமிழரின் ஆயுதப் போராட்டத்தின் தொடக்கமும் முடிவும் அதனையே வெளிப்படுத்தியது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந…
-
- 0 replies
- 381 views
-
-
தொலைந்து வரும் அதிகாரக் கனவு - கே.சஞ்சயன் மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் அதிகாரத்துக்குக் கொண்டு வரும் நோக்கில், அவருக்கு ஆதரவான கூட்டு எதிரணியினர் கடந்த மாதம் 27ஆம் திகதி நுகேகொடையில் பேரணி ஒன்றை நடத்தியிருந்தனர். இந்தப் பேரணியில், உரையாற்றிய மஹிந்த ராஜபக்ஷ, அரசாங்கத்துக்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் இரண்டு எச்சரிக்கைகளை விடுத்திருந்தார். புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்பது அவர் அரசாங்கத்துக்கு விடுத்த எச்சரிக்கை. இலங்கையில் துறைமுகங்கள், விமான நிலையங்கள், நிலங்கள் எவற்றைக் கொள்வனவு செய்தாலும் அவை அரசுடமையாக்கப்படும் என்பது அவர் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு விடுத…
-
- 0 replies
- 531 views
-
-
தாயின் பசி – நிலாந்தன்! March 14, 2021 “ஐநா எனப்படுவது எங்கள் எல்லோரையும் இணைக்கும் ஒரு அற்புதமான கருத்து. அது மேலும் பலம் அடைவதை மேலும் சிறப்பானதாகஉறுதியான நிலைப்பாடுடைய ஒன்றாக வருவதை விரும்புகிறேன். ஆனால் இப்பொழுதும் ஐ.நா.மனித உரிமைகளோடு தொடர்பே இல்லாத அரசியல் நலன்களின் செல்வாக்குக்கு உள்ளாகிறது. அது ஐநாவை அமைப்பு ரீதியாக ஊழல் மிகுந்தது ஆக்கிவிட்டது. நான் நம்புகிறேன் நாங்கள் ஐநாவை மக்களுக்கு சேவை செய்யும் ஒன்றாக மாற்றவேண்டும். அரசியல்வாதிகளுக்கு சேவை செய்யும் ஒன்றாக அல்ல. எனது படம் ஆகிய Quo Vadis Aida ஐநாவின் முடிவுகளின் சுயாதீனம் மற்றும் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கான உறுதியான நிலைப்பாடு குறித்த கேள்விகளை எழுப்ப உதவும் என்று நான் …
-
- 0 replies
- 413 views
-
-
போராடும் மக்களுக்கு விடிவு கிடைக்காதா ? ரொபட் அன்டனி தமது பிரச்சினைகளைத் தீர்த்து வைக்குமாறு மக்கள் தொடர்ச்சியாக அரசாங்கத்திடம் கோரி வருகின்ற நிலையில் அதற்கு அரசாங்கம் உரிய முறையில் பதிலளிக்காவிடினும் அல்லது மக்களின் பிரச்சினைகளை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் செவிமடுக்காவிடினும் மக்கள் விரக்தி அடைந்துவிடுவதுடன் தொடர் போராட்டங்களை நடத்துவதற்கு முன்வந்துவிடுவார்கள். காரணம் கோரிக்கைகளின் மூலம் அல்லது வேண்டுகோள்களின் மூலம் நிறைவேற்றிக்கொள்ள முடியாத தமது தேவைகளை மக்கள் போராட்டங்களின் மூலம் நிறைவேற்றிக்கொள்வதற்கு முயற்சிப்பதை தவிர்க்க முடியாது. அந்தவகையில் வடக்கு, கிழக்க…
-
- 0 replies
- 249 views
-
-
ஆட்சி மாற்றமும் தலைமை நீக்கமும் - கே.சஞ்சயன் ஒரு பக்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உள்ளேயும் அதற்கு வெளியேறும் இருக்கின்ற தரப்புகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை நீக்கப்பட்டு, புதியதொரு தலைமைத்துவம் உருவாக்கப்பட வேண்டும் என்ற பிரசாரங்களை வலுப்படுத்தி வருகின்றன. இன்னொரு பக்கத்தில், சின்னஅடம்பனில் ஒரு வீட்டுத் திட்ட கையளிப்பு விழாவில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், “தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இந்த அரசாங்கமும் தவறினால் அதனையும் தமிழ் மக்கள் வீட்டுக்கு அனுப்புவார்கள்” என்று எச்சரித்திருக்கிறார். சம்பந்தனின் இந்த உரைக்குப் பதிலளிக்கும் வகையில், யாழ்ப்பாணத்தில் ஓர் ஊடகவியலாளர் சந்…
-
- 0 replies
- 522 views
-
-
சோதனைக்களம் தமிழ் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளுக்கு அமைவாக புதிய அரசிய லமைப்பில் அரசியல் தீர்வு கிட்டுமா என்பது சந்தேக மாக உள்ள நிலையிலேயே புதிய அரசியலமைப்பும் அவசி யமில்லை. அரசியலமைப்புத் திருத்தமும் தேவையில்லை என்ற பௌத்த மத பீடத் தலைவர்களான மகாநாயக்கர்களின் கருத்து வெளியாகியிருக்கின்றது. மகாநாயக்கர்களின் இந்தக் கருத்தானது, அரசாங்கத்தின் புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சியை ஆட்டம் காணச் செய்திருப்பதைப் போலவே கூட்டமைப்பின் தலைமையையும் அதிர்ச்சிக்கும் தவிப்புக்கும் உள்ளாக்கியிருக்கின்றது. புதிய அரசியலமைப்போ அல்லது அரசியலமைப்புக்கான திருத்தமோ இப்போது அவசியமில்லை என்று பௌத்த மகாசங்க…
-
- 0 replies
- 646 views
-
-
இன்றைய ஆளும் அதிகாரத்தரப்பில் பதவி வகிக்கும் ஒரு கட்சியின் தலைவர் இந்நாட்டில் தமிழர்களுக்கு எதுவித பிரச்சினைகளும் இல்லை என்பதே தனது கணிப்பு என்று அண்மையில் தெரிவித்ததாகச் செய்திகள் வெளியாகின. "இல்லை பிரச்சினைகள் பலவுள்ளன. தீர்க்கப்பட வேண்டிய அவை தீர்க்கப்பட்டாலேயே நாட்டில் சமத்துவம் கட்டிக்காக்கப்படும். தமிழர்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். முடிவுகட்டப்பட வேண்டும்' என்று அழுத்தம் திருத்தமாக எடுத்துக்காட்டி, தமது நியாயத்தை வெளிப்படுத்த வேண்டிய பொறுப்பு தமிழர் தரப்புக்கு உள்ளது. அது தமிழர் தரப்பால் உரியபடி ஆற்றப்படுவதாக இல்லை. இலங்கையின் அரசியலரங்கை ஆராயும்போது, பேரினவாத அரசியல்வாதிகளுக்கும் தமிழரல்லாத மற்றைய சிறுபான்மையினத்து அரசியல்வாதிகளுக்கும…
-
- 0 replies
- 477 views
-
-
முள்ளிவாய்க்காலை அநுராதபுரத்துக்குள் புதைத்தல் யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்கான, பொது நினைவுத் தூபியை அநுராதபுரத்தில் அமைப்பதற்கு, அரசாங்கம் இணங்கியிருக்கின்றது. யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்கான பொதுத்தூபி மற்றும் பொது நினைவு தினம் ஆகியவற்றை முடிவு செய்வது தொடர்பிலான தனிநபர் பிரேரணையொன்று ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி) நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவால் கடந்த காலத்தில் முன்வைக்கப்பட்டிருந்தது. குறித்த பிரேரணை மீதான விவாதம், கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற போதே, பொது நினைவுத் தூபியை, அநுராதபுரத்தில் அமைக்க முடியும் என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவ…
-
- 0 replies
- 650 views
-
-
வரும் ஆனால் வராது : இது ஒரு நவீன ஆக்கிரமிப்பு யுக்தி June 12, 2022 —கருணாகரன்— “வரும், ஆனா வராது” என்று நடிகர் வடிவேலுவின் மிகப்பிரபலமான பகடி ஒன்றுண்டு. அதை இன்னும் பிரபலமாக்கிக் கொண்டிருக்கிறது இலங்கையின் – இலங்கை அரசின் – இன்றைய துயர நிலவரம். கடைகளில் “சமையல் எரிவாயு இருக்கா?” என்று கேட்டால், தலையை உயர்த்திப் பார்க்காமலே “இல்லை” எனப் பதில் சொல்கிறார் கடைக்காரர். “எப்ப வரும்?” என்று கேட்டால், “வரும், ஆனால் வராது” என்கிறார். இதைக் கடந்து சிலவேளை “பின்னேரம் வந்து பாருங்கோ” அல்லது “நாளைக்கு வரும்” என்று அவர் சொன்னாலும் அந்தப் பொருள் அப்படி உரிய நேரத்தில் வருமென்றில்லை. அதற்கான உத்தரவாதமெல்லாம் முடிந்து விட்டது. அந்தக் காலமே மலையேறி எங…
-
- 0 replies
- 396 views
-
-
கோத்தாவின் வீழ்ச்சி ? -நிலாந்தன்.- ஒன்பதாம் திகதிக்கும் ராஜபக்சக்களுக்கும் பொருந்தி வராது போல? நிச்சயமாக இது ஒரு எண் சோதிடப் பதிவு அல்ல. அல்லது எண் சோதிடத்திற்கும் அரசியலுக்கும் இடையில் இருக்கக்கூடிய தொடர்பு பற்றிய பதிவும் அல்ல. கடந்த மே மாதம் ஒன்பதாம் திகதி மஹிந்த மூட்டிய நெருப்பு அவருடைய ஆதரவாளர்களின் வீடுகளை எரித்தது. அவர் பதவி விலக நேர்ந்தது. இலங்கைத் தீவின் நவீன வரலாற்றில் நாடாளுமன்ற உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பகுதியினரின் வீடுகள் எரிக்கப்பட்டன, சொத்துக்கள் அழிக்கப்பட்டன. ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் ஒரு பிரதேச சபை தலைவரும் அடித்தே கொல்லப்பட்டார்கள். இச்சிறிய தீவின் நவீன வரலாற்றில் ஆளுங்கட்சியை சேர்ந்தவர்களுக்கு அப்படி ஒரு ஆபத்து முன்னபொழுதும் வந்ததே இல்லை. மஹிந…
-
- 0 replies
- 442 views
-