அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9222 topics in this forum
-
கிழக்கு அரசியல்வாதிகளின் உண்மை தோற்றத்தை புரிந்து கொள்ளும் நிலைமை உருவாகியுள்ளது கிழக்கு மாகாணம் செல்வம் கொழிக்கும் மாகாணம். அனைத்து வளங்களையும் கொண்ட மாகாணம். இந்த மாகாணத்தின் வளங்கள் பொருளாதார நிலையினை பெருக்கக் கூடிய நிலையில் இருந்ததன் காரணமாகவே அந்நியரின் ஆட்சியானது இந்த நாட்டில் உருவாகுவதற்கு காரணமாக அமைந்தது. வடகிழக்கு மாகாணத்தின் கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் அதிகளவில் வாழ்ந்து வந்தபோதிலும், அது தமிழர்களின் மாகாணமாக ஆகிவிடக் கூடாது என்பதில் இந்த நாட்டின் ஆட்சியாளர்கள் தொடர்ச்சியாக பல்வேறு செயற்பாடுகளை மேற்கொண்டு வந்தனர். தமிழர்கள் மத்தியில் காலங்காலமாக காணப்பட்ட ஒற்றுமையீனத்தையும், சுயநலத்தினையும் கொண்டு தமிழர்களின் தாயகத்தினை இலகுவில் கூறுபோடும் ச…
-
- 0 replies
- 723 views
-
-
20 ஆவது திருத்தத்தின் மூலமாகராஜபக்ஷக்களுக்கு கிடைத்தது என்ன? -அகிலன் 31 Views பெரும் சர்ச்சைகளுடன் நோக்கப்பட்ட அரசியலமைப்புக்கான 20ஆவது திருத்தம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டு விட்டது. எதிர்க் கட்சியைச் சேர்ந்த எட்டுப் பேரின் ஆதரவு கிடைத்ததால் 156 வாக்குகளைப் பெற்று, திருத்தம் நடைமுறைக்கு வந்திருக்கின்றது. கட்சிகளின் ஏழு உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்காவிட்டிருந்தால், அரசாங்கத்தின் நிலைப்பாடு தடுமாற்றமானதாகவே இருந்திருக்கும். ஆக, இந்த தனிச் சிங்கள – பௌத்த அரசாங்கத்தைப் பாதுகாப்பதில் சிறுபான்மையினக் கட்சிகளும் தமது பங்களிப்பை வழங்கியுள்ளன. ஆனால், இதன் மூலம் அவர்களுக்கு என்ன கிடைக்கப் போகின்றது? …
-
- 0 replies
- 372 views
-
-
இந்தோ-பசுபிக் பாதுகாப்பு மாநாட்டில் இலங்கையும் பங்குபற்றியது ஏன்?மிலேனியம் ஒப்பந்தம் கைச்சாத்தாகும்! சீன உறவு என்னாகும்? தோ- பசுபிக் பிராந்தியத்தில் பதற்றத்தைத் தணிப்பது குறித்த ஏற்பாடுகளிலேயே அமெரிக்க ஜனாதிபதியாகப் புதிதாகப் பதவியேற்கவுள்ள ஜோ பைடன் கவனம் செலுத்துவாரென எதிர்ப்பார்க்கப்படுகின்றது. ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சீனாவுடன் அளவுக்கதிகமான குழப்பங்களையும் முரண்பாடுகளையும் உருவாக்கிவிட்டாரென்ற உணர்வு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்திற்கு சமீபகாலமாக வெளிப்பட ஆரம்பித்துள்ளதை ஜோ பைடன் தெரிவிக்கும் கருத்துகள் கட்டியம் கூறுகின்றன. இந்த இடத்திலேதான் இலங்கையுடனான அமெரிக்காவின் மிலேனியம் சவால்கள் கூட்டுத் தாப…
-
- 0 replies
- 408 views
-
-
தமிழ் மக்கள் பேரவையின் தோற்றமும் இருப்பும் : மறைக்கப்படும் உண்மைகள்! 11/23/2016 இனியொரு... தமிழ் மக்கள் பேரவையின் பத்திரிகையாளர் மாநாடு கொழும்பில் நேற்று 22/11/16 அன்று நடைபெற்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றவாத அரசியல் தலைமை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ள வெற்றிடத்தைப் பிரதியிடுவதற்கு முனைந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தோல்வியடைந்த போது அதற்கு மாற்றாகத் தோற்றுவிக்கப்பட்டதே தமிழ் மக்கள் பேரவை. ஜேர்மனியில் புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்கள், தமது அரசியல் பினாமிகளை உருவாக்கும் நோக்கத்துடன் 2015 ஆம் ஆண்டு மாவை சேனாதிராசாவை அழைத்துப் பேச்சுக்கள் நடத்தின. அப் பேச்சுக்களின் அடிப்படையில் புலம்பெயர் அமைப்புக்கள் தாம் சுட்டுவிரலை நீட்டும் சிலரை கூட்டமைப…
-
- 0 replies
- 442 views
-
-
கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு கையளிக்கும் தீர்மானம் - ஜெனீவாவை கையாளும் உத்தியா.? இலங்கையின் இந்திய அரசியல் களம் மீளவும் ஒரு உரையாடலுக்குள் நகருகின்றது. அதனை இந்திய ஆட்சித்துறையின் நலனுக்கான வாய்ப்புக்கள் என்றும் இன்னோர் பக்கம் இலங்கை ஆட்சியாளரின் நலனுக்கான வாய்பான களம் என்றும் வாதிட முடியும். வெளிப்படையாகப் பார்த்தால் இரு தரப்பும் தமது நலன்களை நோக்கி நகர்வதாகவும் அதில் சமபலமுடையவையாகவும் தெரியும். ஆனால் உள்ளார்ந்த அர்த்தத்தில் பார்த்தால் எத்தகைய போக்கு நிலவுகிறது என்ற தெளிவாகும். எப்போதும் இலங்கை இந்தியத் தரப்புக்களுக்கிடையே நிலவும் அரசியல் நகர்வுகள் இரு தரப்புக்கும் ஏற்றமும் இறக்கமும் உடையதாகவே தெரிகிறது. சில சந்தர்ப்பங்களில் ம…
-
- 0 replies
- 529 views
-
-
நெதர்லாந்து தேர்தலும் தேசியவாதத்தின் தாக்கமும்
-
- 0 replies
- 351 views
-
-
எர்டோகானின் எழுச்சி ஒரு சுல்தானின் உருவாக்கம் முற்று முழுதான அதிகாரத்தைக் கொண்ட ஆட்சியாளராக துருக்கியில் எர்டோகானின் எழுச்சி ஜனநாயக நாடுகள் இன்று எதிர்நோக்குகின்ற நெருக்கடிக்கு செம்மையான ஒரு உதாரணம் துருக்கியில் எதிர்வரும் 16 ஆம் திகதி நடைபெறவிருக்கும் சர்வஜன வாக்கெடுப்பில் தனது அரசியலமைப்புத் திருத்த திட்டங்களுக்கு வாக்காளர்களில் பெரும்பான்மையானவர்களின் ஆதரவைப் பெறுவதற்கு ஜனாதிபதி றிசேப் தஜீப் எர்டோனால் இயலுமாக இருந்ததால் நாட்டின் அரசியல் ஒழுங்கு முறை கடுமையான மாற்றங்களுக்கு உள்ளாகும். எர்டோகானின் தலைமையிலான நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சியின் …
-
- 0 replies
- 498 views
-
-
வடமாகாணசபைத் தேர்தல் யாருடைய நலனுக்காக – வேல்ஸ் இல் இருந்து அருஷ் வடமாகாண சபைக்கான தேர்தல் மற்றும் 13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பான சர்ச்சைகளே தற்போது சிறீலங்காவில் பேசப்படும் முக்கிய விடயம். அதிலும் வடமாகாண சபைத் தேர்தலின் மூலம் தமிழீழம் உருவாக்கப்பட்டுவிடும் என்ற கருத்தை விதைப்பதில் தென்னிலங்கை இனவாத அரசியல் சக்திகள் முனைப்பாக செயற்பட்டுவருகின்றன. ஏற்கனவே தமிழ் மக்களால் 1987 ஆம் ஆண்டே நிராகரிக்கப்பட்ட 13 ஆவது திருத்தச்சட்டத்தை தேர்தலின் முன்னர் முற்றுமுழுதாக செயற்திறனற்றதாக மாற்ற வேண்டும் என தென்னிலங்கை அரசியல்வாதிகள் கூச்சலிடுகின்றனர். வடமாகாணசபைக்கான தேர்தலை நடாத்துவோம், 13 ஆவது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என பிரச்சாரம் மேற்கொண்டுவரும் சிறீலங்கா அரசு …
-
- 0 replies
- 527 views
-
-
முடியப்பு றெமிடியஸ் என்ற பெயர் நினைவிருக்கிறதா? இவர் ஒரு சட்டவாதி. யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர். மனித உரிமை வழக்குகளில் நீதிமன்றம் ஏறி வாதாடுபவர். அண்மையில் மாநகர சபை உறுப்பினர் பதவியில் இருந்து விலகிவிட்டார். விலகிய கையோடு ஆளும் அய்க்கிய சுதந்திர மக்கள் முன்னணி என்ற சிங்கள (அவரே சொல்வது) கட்சியோடு சங்கமமாகிவிட்டார். யாழ்ப்பாண மாநகர சபைக்குத் தேர்தல் நடந்த போது ததேகூ சார்பாகப் போட்டியிட்டு றெமிடியஸ் வென்றார். அதிகப்படியான விரும்பு வாக்குகள் பெற்ற காரணத்தால் எதிர்க்கட்சித் தலைவராகவும் கொலுவிருந்தார். அது கொஞ்ச நாட்கள்தான். பின்னர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்து கொண்டு ஆளும் கட்சியை ஆதரிக்கத் தொடங்கினார். மாநகரசபையில் ஆளும் கட்சி கொண்டு வரும் தீர்மானங்களு…
-
- 0 replies
- 652 views
-
-
காலநிலை நெருக்கடி: சிறுவெள்ளமும் பெருங்கேள்விகளும் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ இன்னொரு மாரி காலம், இன்னுமொரு வெள்ளம், நிலச்சரிவு, உயிரிழப்புகள், இடப்பெயர்வுகள், அனர்த்தம், ஆபத்து என்ற கொடுஞ்சுழல், இன்னொரு முறை இலங்கையை தாக்கியுள்ளது. இது கடைசிமுறையல்ல என்பதை மட்டும், உறுதியாக நம்பவியலும். வருடாந்தம் எம்மை அலைக்கழிக்கும் இப்பெருமழையும் கொடுவெள்ளமும், பல கேள்விகளை எழுப்புகின்றன. ‘மரத்தில் இருந்து விழுந்தவனை மாடேறி மிதித்த கதை’யாய், நொந்தழிந்து போயுள்ள விவசாயிகளை, உணவின்றித் தவிக்கும் ஏழைகளை, கொரோனாவால் கதியிழந்தவர்களை என, அனைவரையும் பாரபட்சமின்றிச் சோதிக்கிறது இப்பெருமழை. கடந்த பல ஆண்டுகளாக இச்சோதனை, தொடர் நிகழ்வாயுள்ளது. அந்த நேரத்துக்கு அது செய்தி…
-
- 0 replies
- 547 views
-
-
இலங்கையின் இரட்டைவேடம்- குறைகூற விரும்பாத அமெரிக்க- இந்திய அரசுகள் ஈழத்தமிழர் விவகாரத்தில் கட்சி வேறுபாடுகளின்றி ஒரே குரலில் பேசும் சிங்கள ஆட்சியாளர்கள் ஈழத்தமிழர் விவகாரத்தை அமெரிக்க இந்திய அரசுகள் எப்படி கையாளுகின்றன என்பது பற்றிய விளக்கங்கள், அதனை மாற்றியமைக்க வேண்டிய வழிமுறைகள், இப் பத்தியில் ஏற்கனவே சுட்டிக்காட்டப்பட்டது. ஆனாலும் தமிழ்த்தேசியக் கட்சிகள் இதுவரையும் ஒரே குரலில் பேசுவதற்கான புள்ளியில் வருவதாக இல்லை. சிங்கள ஆட்சியாளர்களைப் பொறுத்தவரை ஆட்சி மாறினாலும் ஈழத்தமிழர்கள் விவகாரத்தில் ஒரு குரலில் பேசுகின்றனர். முன்னைய ஆட்சியாளர்கள் அணுகிய இராஜதந்திரத்தைப் புதிய ஆட்சியாளர்கள் தொடரும் பண்பு, ஜே.ஆர்.ஜயவர்த்தன காலத்தில்…
-
- 0 replies
- 567 views
-
-
காலக்கெடு; கெடுகாலம்; வெட்கக்கேடு இலங்கையில் அரசியல்வாதிகள் காலக்கெடு வழங்குதல் என்பது சர்வசாதாரணமான விடயம் ஆகிவிட்டது. ஒரு பிரச்சினையிலிருந்து தப்புவதற்கு, வாக்குறுதி வழங்கியவருக்கான, ஒரு வகையான இடைக்கால நிவாரணம் என்று கூட இந்தக் காலக்கெடுக்களைக் கூறலாம். நாட்டின் இனப்பிரச்சினையைத் தீர்ப்பது தொடர்பில், காலங்காலமாக ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள், பல ஆயிரம் காலக்கெடுக்களை, வாக்குறுதிகளைத் தமிழ் மக்களுக்கு வழங்கி உள்ளார்கள். ஆனால், அவர்களின் வாக்குறுதிகள் யாவும் உறுதியற்ற, வெற்றுப் பேச்சுகளாகவே மாற்றம் பெற்றன; இது கசப்பான வரலாறு. தற்போது அரசாங்கம் அடித்துக் கூறும் எந்த வாக்குறுதியையும் படித…
-
- 0 replies
- 410 views
-
-
Annonces Google 1918 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 18 ஆம் திகதி தென்னாபிரிக்காவில் உள்ள குலு கிராமத்தில் நெல்சன் மண்டேலா பிறந்தார். 1941 ஆம் ஆண்டு ஜொகனஸ்பேர்க்கிற்கு சென்று பகுதி நேரத்தில் சட்டக்கல்வியை கற்றார். 1958 ஆம் ஆண்டு மண்டேலா வின்னி மடிகி லேனா என்பவரை திருமணம் செய்துகொண்டார். 1939 ஆம் ஆண்டில் தனது 21 ஆவது வயதில் கறுப்பின இளைஞர்களை ஒன்றிணைத்தார். 1948 ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவின் ஆட்சியைப் பொறுப்பேற்றார். 1956 இல் தென்னாபிரிக்காவில் ஆட்சியில் இருந்த அரசுக்கு எதிராக புரட்சியை மேற்கொண்டார். 1956 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் திகதி தேசத்துரோகக் குற்றச்சாட்டுகளுக்காக மண்டேலாவும் அவரின் 150 மேலதிகமான தோழர்களும் தென்னாபிரிக்க அரசால் கைது செய்யப்பட்டனர். 1961 ஆம் ஆ…
-
- 0 replies
- 1.1k views
-
-
நிதானம் இழக்கும் அரசியல் லக்ஸ்மன் மக்கள் கிளர்ச்சி ஒன்றே தீர்வுக்கான வழி என்ற நிலை தோன்றியிருப்பதாகவே உணரமுடிகிறது. ஆனால் ஆட்சி மாற்றம் நிச்சயமான தீர்வலல்ல என்பது மாத்திரம் உண்மை. இதனை மக்கள் உணரத் தலைப்படவேண்டும். இப்போது நாட்டுக்கும் மக்களுக்கும் தேவையானது, நிதானமும் அதனுடன் இணைந்த தீர்மானமுமேயாகும். போராட்டங்கள் வெடிக்கின்றன. அவற்றினை அடக்குவதற்கான வழிகளும் கண்டுபிடிக்கப்படுகின்றன. இந்த வழிமுறைகள் புதியவையல்ல. தமிழர்களின் உணர்வுகளையும் போராட்டங்களையும் எதிர்ப்புகளையும் அடக்குவதற்காக கண்டுபிடிக்கப்பட்ட முறைகளே அவை. அவை இப்போது சிங்கள முஸ்லிம் மக்களையும் அடையாளப்படுத்துகின்றன. அதனால்தான், மக்கள் கிளர்ச்சியை அடிப்படைவாதத்தின் பெயரை கொண்டு அடக்க அரசா…
-
- 0 replies
- 347 views
-
-
போராட்டங்கள் ஊடாக பிரசைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல் Prof. Jayadeva Uyangoda on May 24, 2022 May 23, 2022 Photo, Selvaraja Rajasegar காலி முகத்திடல் போராட்டம் தற்போது நிலவும் சூழமைவின் முக்கியத்துவம் என்னவென்றால் ‘முறைமை மாற்றம்’ என தாம் கருதுவது என்ன என்பதனை போராட்டக்காரர்கள் அரசியல் உயர் வகுப்பினர் ஊடாகச் செல்லாது அல்லது அவர்களின் ஆதிக்கத்திற்குட்பட்ட அரசியல் கட்சிகளின் ஊடாகச் செல்லாது அது பற்றி தாமே மிகத் தெளிவாகப் பேச ஆரம்பித்துள்ளமையாகும். இலங்கையின் இன்றைய பிரச்சினைக்கு மூல காரணமே இந்த இரண்டு சகோதரர்களும்தான். இவர்களே இப்பிரச்சினைக்கான பொறுப…
-
- 0 replies
- 253 views
-
-
மேற்காசிய புவிசார் அரசியல் சதுரங்கத்தில் பகடைக்காயாக லெபனான் லெபனான் பிரதமர் சாட் ஹரிரியின் திடீர்ப் பதவிவிலகல் இன்னொரு தடவை நாட்டை அரசியல் உறுதிப்பாடற்ற நிலைக்குள் தள்ளிவிட்டிருப்பது மாத்திரமல்ல, சவூதி அரேபியாவுக்கும் ஈரானுக்கும் இடையிலான பிராந்திய பதற்ற நிலையை மீளவும் மூளவைத்திருக்கிறது. லெபனான் பல வருடங்களாக பிராந்திய நாடுகளின் மறைமுக யுத்தங்களுக்கான (Proxy wars) களமாக இருந்துவந்திருக்கிறது. சவூதி அரேபியாவுடன் நெருக்கமான வர்த்தக மற்றும் அரசியல் உறவுகளைக் கொண்ட சுன்னி முஸ்லிமான ஹரிரி ஈரானின் ஆதரவைக் கொண்ட ஹிஸ்புல்லா இயக்கத்துடன் கூட்டரசாங்கமொன்றை 11 மாதங்களுக்கு முன்னர் ஏ…
-
- 0 replies
- 377 views
-
-
அரசமைப்பு அரசியல் Ahilan Kadirgamar அரசியல் தீர்வு தொடர்பாக, நாடு முழுவதிலும் உள்ள மக்களிடத்தில், பெருமளவுக்கு ஆர்வம் இல்லாமலிருப்பதற்கான காரணம் என்ன? தெற்கிலும் வடக்கிலும் உள்ள பிற்போக்கான சக்திகள், பொதுத் தளத்தில் தமது ஆதிக்கத்தை உயர்த்தியிருப்பதோடு, அரசமைப்புச் சீர்திருத்தச் செயற்பாடுகளை நிராகரிப்பதில் முன்னேற்றம் காண்பது எப்படி? அரசாங்கத்திலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்திலும், அரசியல் தூரநோக்குப் போதாமலிருப்பது தான் காரணமென நான் வாதிடுவேன். மக்களுடன் கலந்துரையாடி, அரசியல் தீர்வு தொடர்பாக மக்களைச் சென்றடையாமல், அரசாங்கம் மாற்றப்பட்ட பின்னர் 3 ஆண்டுகள் வீணாக்கப்பட்டிருக்கின்றன. அதனோடு சேர்…
-
- 0 replies
- 739 views
-
-
தேசிய அரசாங்கமும் தமிழர் தரப்பும் லக்ஸ்மன் உட்கட்சி முரண்பாடுகளோடு கொள்கைப்பிடிப்போடும் கட்சிகளை நடத்திச் செல்வதென்பது மிகவும் சிக்கலான விடயமே. இதில் உட்கட்சி ஜனநாயகம் பெரும் குழப்பமாகவே இருந்து கொண்டிருக்கிறது. இதில் நம்முடைய நாடும் அகப்பட்டே இருக்கிறது. இப்படியிருக்கையில் நாட்டின் அரசியல், பொருளாதார நிலைமை காரணமாக ஒரு சர்வ கட்சி அரசாங்கத்தினை அமைத்து அதனை ஸ்திரப்படுத்திவிடவேண்டும் என்றே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சர்வ கட்சி அரசாங்கத்தினை அமைப்பதற்கான முயற்சிகளை எடுத்திருந்தார். ஆனால் அது இதுவரை கைகூடவில்லை. அதற்குப் பல காரணங்கள் சொல்லப்பட்டுக்கொண்டே இருக்கிறது. அதனால் அம் முயற்சியைக் கைவிட்டு தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பது தொடர்பான முயற்சிகள் ஆரம்பமாகவு…
-
- 0 replies
- 246 views
-
-
இலங்கை ஜனாதிபதியின் நிபுணர் குழு ஐ.நாவுக்கான சவாலா? ச.பா. நிர்மானுசன் படம் | JDSrilanka ஜூலை 15ஆம் திகதி ஆரம்பமான ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் விசாரணை நடவடிக்கைகள் மஹிந்த ராஜபக்ஷ அரசை நெருக்கடிக்குள் தள்ளும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த சூழலில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தன்னால் உருவாக்கப்பட்ட, போர்க்காலப் பகுதியில் காணமற்போனோர் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு, சர்வதேச ரீதியில் அங்கீகாரமும் பிரபல்யமுமுடைய மூன்று நிபுணர்களை ஆலோசகர்களாக நியமித்துள்ளார். இந்த நடவடிக்கை சர்வதேச சமூகத்தின் பணிகளை அதிகரித்துள்ளதோடு, அதிர்ச்சியடைய வைத்திருப்பதாகவும் அறிய வருகிறது. இது, சர்வதேச சமூகத்துக்கும் இலங்கை அரசுக்குமிடையில் நிலவிய மென்போக்கு அ…
-
- 0 replies
- 674 views
-
-
போதைப் பொருளைத் தடுக்க ஒரு படைப்பிரிவு? – நிலாந்தன். October 30, 2022 “வடக்கில் இராணுவத்தினரால் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது கஞ்சா தொகையாகக் கைப்பற்றப்பட்டது. இந்தியாவிலிருந்து யாழ்ப்பணப் பகுதிக்கு மிகவும் பிரமாண்டமான முறையில் போதைப்பொருள் கடத்தல்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில் இளம்சந்ததியினரும் அவற்றிற்கு அடிமையாகின்ற தன்மையானது வெகுவாக அதிகரித்துள்ளது. அந்த வகையில் இந்த துர்ப்பாக்கிய நிலையினை இல்லாதொழிப்பதனை நோக்கமாகக் கொண்டு யாழ். பாதுகாப்புப் படைகளின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜேயசுந்தர அவர்களினுடைய தலைமையில் விசேட படைப் பிரிவானது உருவாக்கப்பட்டு விசேட சோதனை நடவடிக்கைகள் மற்றும் சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு அதன…
-
- 0 replies
- 275 views
-
-
புரட்சியால் பதவிக்கு வந்து அதே புரட்சியை நசுக்கிய ரணிலும் சிசியும் 2011 ஆம் ஆண்டு எகிப்தில் அரபு வசந்தம் வெடித்த போது இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வெளிநாட்டு சதிகாரர்கள் இலங்கையில் அப்படி ஒரு கிளர்ச்சியை உருவாக்கினால் அது வெற்றியடையாது என்று கூறினார். ஆனால் அரபு வசந்த அலை 2022 இல் இலங்கைக்கு வந்தது. இன்று மகிந்த மட்டுமல்ல, ராஜபக்ச குடும்பமும் அந்த அலையில் சிக்கி அழிந்துவிட்டது. ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஜனாதிபதி பதவியை வழங்கிவிட்டு ராஜபக்சக்கள் வெளியேறினர். அரபு வசந்தம் இலங்கையில் அரகலய என்று அழைக்கப்பட்டது. அந்த போராட்டத்தில் விளைவாக ஜனாதிபதியான ரணில் எகிப்தில் நடைபெறும் சுற்றுச்சூழல் மாநாட்டில் பங்கேற்…
-
- 0 replies
- 371 views
-
-
மேலும் ஒரு கோவிலுக்கு ஆபத்து? நிலாந்தன். April 16, 2023 கடந்த திங்கட்கிழமை பங்குனித் திங்களன்று நெடுங்கேணியில் உள்ள நொச்சிக்குளம் அம்மன் கோவிலை வழிபடச் சென்ற பக்தர்களைத் தொல்லியல் திணைக்களம் தடுத்து நிறுத்தியதாக செய்திகள் வெளியாகின. பக்தர்களைப் பொறுத்தவரை அது கோவில். தொல்லியல் திணைக்களமோ அதை ஒரு தொல்லியல் அமைவிடமாக கருதுகிறது. நாட்டின் தொல்லியல் சட்டங்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை விடவும் இறுக்கமானவை என்று நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறுகிறார். ஒரு மக்கள் கூட்டத்தால் தொடர்ச்சியாக வழிபடப்படும் ஒரிடத்தை தொல்லியல் திணைக்களம் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது என்றால் முதலில் அந்த வழிபாட்டிடத்தை நிர்வகிக்கும் தனிநபர் அல்லது நிர்வாக …
-
- 0 replies
- 748 views
-
-
நீதிபதி சரவணராஜாவின் வெளியேற்றம் சொல்லும் செய்தி புருஜோத்தமன் தங்கமயில் முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா பதவி விலகி, நாட்டை விட்டு வெளியேறியுள்ள விடயம், நீதித்துறையின் சுயாதீனம் தொடர்பில் பலத்த விவாதங்களைத் தோற்றுவித்துள்ளது. தன்னுடைய நீதித்துறை செயற்பாடுகள் மீதான அழுத்தம் மற்றும் அச்சுறுத்தல் காரணமாக பதவி விலகுவதாக நீதிச் சேவைகள் ஆணைக்குழுக்கு நீதிபதி சரவணராஜா அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். குறித்த கடிதம், அவர் நாட்டை விட்டு பாதுகாப்பாக வெளியேறிய பின்னர் நீதிச் சேவைகள் ஆணைக்குழுவுக்கு அனுப்பப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. ஏனெனில் அந்தத் கடிதத்தின் படங்கள், அலைபேசியில் எடுக்கப்பட்டிருக்கின்றன. அவைதான், ஆரம்பத்தில் இணைய, சமூக ஊடகங்கள…
-
- 0 replies
- 330 views
-
-
ஏன் தோற்றார்? ஏன் வென்றார்? அரசியலின் மர்ம முடிச்சு!
-
- 0 replies
- 476 views
-
-
கொழும்பு மிரருக்காக பீ. தெய்வீகன் சிறிலங்காவின் எட்டாவது பொதுத்தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து நாட்டின் பதிவுசெய்யப்பட்ட அறுபதுக்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் களத்திலிறங்கி மக்கள் முன்னிலையில் மத்தளம் கொட்ட ஆரம்பித்துவிட்டன. வழமையான வாக்குறுதி, திருவிழாக்கள் சந்திக்குச் சந்தி, முழத்துக்கு முழமென முழங்கிக்கொண்டிருக்கின்றன. சுமார் இரண்டரைக்கோடி சனத்தொகை கொண்ட சிறிலங்காவில் வாக்களிப்பதற்கு தகுதியான ஒன்றரை கோடி வாக்காளர்களும் எதிர்வரும் ஓகஸ்ட் 17 ஆம் திகதி நடைபெறவுள்ள இந்த விறுவிறுப்பான தேர்தலை எதிர்கொள்வதற்கு ஆவலுடன் காத்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட 400 கோடி ரூபா செலவில் நடைபெறவுள்ள இந்த தேர்தலினால் எந்த திசையில் நாட்டின் தலைவிதி தீர்மானிக்கப்படவுள்ளது என்பத…
-
- 0 replies
- 316 views
-