அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9274 topics in this forum
-
-
- 0 replies
- 737 views
-
-
ஆயர்களின் அறிக்கை – நிலாந்தன்! November 21, 2021 2019 இலிருந்து கத்தோலிக்க திருச்சபையின் நான்கு தமிழ் ஆயர்களும் இணைந்து வடக்கு கிழக்கு கத்தோலிக்க ஆயர் மன்றம் என்ற பெயரில் ஓர் அணியாக செயல்பட்டு வருகிறார்கள். வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் மக்களின் அபிலாசைகளை அதிகம் பிரதிபலிக்கும் விதத்தில் இவ்வாறு தமிழ்ப்பகுதி ஆயர்கள் ஓரணியாக நிற்பது வரவேற்கத்தக்கதே. தெற்கில் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஓரினச் சாய்வுடையவராக பார்க்கப்படும் ஒரு சூழலில் நான்கு வடகிழக்கு ஆயர்களும் ஒன்றிணைந்து முடிவெடுப்பது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் உடையது. கர்தினால் மல்கம் ரஞ்சித் ஈஸ்டர் குண்டுவெடிப்பை தொடர்ந்து வெளிப்படுத்தும் கருத்துக்கள் சர்ச்சைக்குரியவை. ஆட்சியைக் கைப்பற்…
-
- 0 replies
- 662 views
-
-
ஏன் இவ் வரைபை இந்தியாவிடம் கொடுக்க இப்போது அவசரம் காட்டுகிறார்கள் என்பது புரியவில்லை? – சுமந்திரன் இணைந்து இந்திய பிரதமருக்கு அனுப்புவதற்காக தமிழ் கட்சிகள் தயாரிக்கப்பட்டுள்ள வரைபை இந்தியாவிடம் கொடுக்க இப்போது ஏன் அவசரம் காட்டப்படுகிறது என்பது குறித்து தன்ககு எதுவும் தெரியாதென்றும், இவ்விடயம் தொடர்பில் தனக்கு பல கேள்விகள் இருப்பதாகவும் த.தே.கூட்டமைப்பின் பா.மன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். திருகோணமலை எண்ணைக்குதம், இலங்கையின் மேற்கு முனையும இந்தியாவிற்கு கொடுப்பதாக செய்திகள் வருகின்ற இப்படியான நேரந்தில் இந்தியாவுக்கு 13 ஆம் திருத்தம் தொடர்பில் அவசரமாக ஒரு கடிதம் கொடுக்கப்பட …
-
- 0 replies
- 315 views
-
-
கொழும்பில் இராணுவ தலைமையகத்தில் செவ்வாய்க் கிழமை (25/04/2006) சிறிலங்காவின் இராணுவத்தளபதியைக் குறி வைத்து நடாத்தப் பட்ட குண்டுத்தாக்குதல் சமாதானப் பேச்சு வார்த்தைகளைச் சீர்க்குலைக்கும் நடவடிக்கையாகவும் சர்வதேச மட்டத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான எண்ணக்கருத்தை உருவாக்கு முகமாகவும் நடாத்தப்பட்டது என்ற சந்தேகத்தையும் தோற்றுவித்துள்ளது. விடுதலைப் புலிகளால் இக்குண்டுத் தாக்குதலுக்கான தொடர்பு உறுதியாக மறுக்கப்பட்டுள்ளது. அப்படியானால் இக் குண்டுத்தாக்குதலால் நன்மையடையக் கூடிய சக்திகள் யார் என்பதை நாம் இனங்கண்டு கொள்ள வேண்டும். அதியுச்சப் பாது காப்பு வலையத்தில் இராணுவத்தின் உயர் பதவி வகிக்கும் ஒருவரைத் தேடிச் சென்று அழிப்பது என்பது அதுவும் நீண்ட நேரம் காத்திருந்து அ…
-
- 0 replies
- 1.4k views
-
-
கடன் சுமையிலிருந்து மீண்டு வரும் இலங்கை - பேராசிரியர் எம்.சுனில் சாந்த (சப்ரகமுவ பல்கலைக்கழகம்) இலங்கை சுதந்திரம் அடைந்த போது, இலங்கையின் பொருளாதாரமானது அந்நியச் செலாவணியால் அபிவிருத்தியடைந்திருந்தது. அப்போது இலங்கையின் வெளிநாட்டு இருப்புகளின் அளவு, மூன்றரை வருடங்களுக்கு நாட்டின் செலவைத் தாங்கிக் கொள்ளுமவுக்குப் போதுமானதாகவிருந்தது. குறித்த நாட்களில், வெளிநாட்டுச் சொத்து வளங்கள் உயர் மட்டத்தில் காணப்பட்டதுடன், ஜப்பான் போன்ற நாடுகளின் பொருளாதார நிலையோடும், ஆசிய வலயத்தின் இரண்டாவது பலம்பொருந்திய பொருளாதாரமாகவும் காணப்பட்டது. எனினும், இந்த நாட்டின் வெற்றிகரமான செயற்பாட்டால் ஏற்பட்ட ப…
-
- 0 replies
- 651 views
-
-
சமஷ்டி அடிப்படையிலான தீர்வுக்கு ஒன்றுபடுவோம் தமிழ் தேசியத்தை நேசிக்கும் தமிழ் மக்களும் தமிழ்கட்சிகளும் ஒன்றுபட்டு சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு ஒன்றை ஒருமுகமாக முன்வைத்து போராடுவதற்கு நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலின் முடிவுகள் வழிவகுத்துள்ளன. தென் இலங்கையிலும் அரசியல் மாற்றம் ஏற்படவுள்ளது. இலங்கை சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் நிறைவுற்ற நிலையில் 70 வீதமான சிங்கள மக்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி சிங்கள மக்களையும் சிங்கள நாட்டையும் முன்னேற்றி வருவதையும் தமிழ் மக்கள் எல்லா வழிகளிலும் இனரீதியாக ஒதுக்கப்பட்டு வருவதையும் அறிவீர்கள். எமது அடிப்படை உரிமைகளைப் ப…
-
- 0 replies
- 573 views
-
-
இவ்வருடம் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறும் என்ற நம்பிக்கையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது மொட்டு கட்சியின் செல்வாக்கை மக்கள் மத்தியில் உயர்த்த பல முயற்சிகள் எடுத்து வருகின்றார். முதலாவதாக பாராளுமன்றத் தேர்தலையே நடத்த வேண்டும் என்ற பிடிவாதத்துடன் அமெரிக்காவிலிருந்து திரும்பிய பொது ஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்சவின் சகல முயற்சிகளையும் தவிடு பொடியாக்கி விட்டார் ஜனாதிபதி ரணில். கட்சியை ஆரம்பித்ததிலிருந்து அதை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கு பல மறைமுக பணிகளை ஆற்றிய பஸில் ராஜபக்ச தனது தவறான கொள்கைகளால் மக்கள் மத்தியில் வெறுப்புணர்வை சம்பாதித்துக்கொண்டிருக்கின்றார். கோட்டாபயவை ஜனாதிபதி வேட்பாளராக்கியதே மகிந்தவும் பஸிலும் செய்த தவறுகள். அதை நியாயப்…
-
- 0 replies
- 427 views
-
-
நல்லிணக்கத்துக்கான சம்பந்தனின் இருமுனைப் போராட்டம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் சில காலமாக நிலவி வரும் கருத்து முரண்பாடுகள், சில வெளிநாடுகளின், குறிப்பாக இந்தியாவின் கவனத்தையும் ஈர்த்துள்ளன. மூன்று நாள் விஜயமொன்றை மேற்கொண்டு கடந்த 10ஆம் திகதி வட மாகாணத்துக்குச் சென்ற இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சின்ஹா, இந்த விடயத்தைப் பற்றி வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுடன் கலந்துரையாடி இருக்கிறார். அந்த அளவுக்கு அது இந்தியாவுக்கு முக்கியமாக இருக்கிறது. இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான சிறந்ததோர் நிலைமை உருவாகியிருக்கும் இந்தத் தருணத்தில், பிரதான தமிழ் அரசியல் சக்தியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்ப…
-
- 0 replies
- 508 views
-
-
விட்டுக்கொடுப்பு அரசியல் செய்யப்பழகும் தமிழ்க்கட்சிகள் June 23, 2025 — வீரகத்தி தனபாலசிங்கம் — உள்ளூராட்சி தேர்தல்களை பொறுத்தவரை, தென்னிலங்கையில் எதிரணி அரசியல் கட்சிகளுக்கும் வடக்கு, கிழக்கில் தமிழ் அரசியல் கட்சிகளுக்கும் இடையில் மூன்று ஒற்றுமைகளை காணக்கூடியதாக இருந்தது. இரு தரப்புகளுக்கும் பொது அரசியல் எதிரியாக ஆளும் தேசிய மக்கள் சக்தி விளங்குகிறது என்பது முதல் ஒற்றுமை. ஆளும் கட்சியை எதிர்த்து இரு முனைகளிலும் கட்சிகளினால் ஒன்றுபட்டு களமிறங்க முடியாமல் போனமை இரண்டாவது ஒன்றுமை. தேர்தல்கள் முடிவடைந்து ஒரு மாதத்துக்கும் கூடுதலான காலம் கடந்துவிட்ட நிலையில், உள்ளூராட்சி சபைகளில் நிருவாகங்களை அமைப்பதற்கு மற்றைய கட்சிகளின் ஆதரவை நாடி பேச்சுவார்த்கைளை நடத்துவது மூன்றாவது…
-
- 0 replies
- 233 views
-
-
ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனின் இலங்கை விஜயம் பலதரப்பினரி டையேயும் பரபரப்பையும் பல்வேறு எதிர்பார்ப்புக்களையும் ஏற்படுத்தியிருந்த பின்ன ணியில் பல சம்பவங்கள் நடந்தேறியுள் ளன. மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றச் செயற்பாடுகள் என்பவற்றிற்குப் பொறுப்பு கூறும் வகையில் ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் அரசாங்கம் பல ஒப்புதல்களை அளித்திருந்தது. ஆயினும் உள்நாட்டில், அத்தகைய ஒப்பு தல்களுக்கு முரணான வகையில் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அத்துடன் அவற்றுக்கு நேர் முரணான வகையில் அரசியல் ரீதியாகவும், அரசாங்கத்தின் நிலைப்பாடு ரீதியாகவும் சாதாரண அரசியல்வாதிகள் தொடக்கம், அரச தலைவர்களான ஜனாதிபத…
-
- 0 replies
- 447 views
-
-
விடிவு வராது: இப்போதைக்கு ‘வீடியோ’தான் தெய்வீகன் மட்டக்களப்பில் கிராம சேகவர் ஒருவருக்கு எதிராக பௌத்த பிக்கு ஒருவர் மேற்கொண்ட வெறித்தனமான - இனவாத தாக்குதல் தொடர்பான காணொளி ஒன்று, கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையங்களில் பரவலாக உலாவுகிறது. “தமிழர்கள் எல்லோரும் புலிகள்தான்; உங்கள் எல்லோரையும் கொன்றொழிப்பேன்” என்று அடிவயிற்றிலிருந்து குரலெடுத்துக் குழறும் அந்த மதகுருவின் பேச்சுக்கு எந்த மறுபேச்சும் இல்லாமல் அந்தக் கிராமசேவகர் சிலைபோல நிற்கிறார். தொடர்ந்தும் தனது குரூரமான முகபாவங்களால் திரட்டிய பல கெட்டவார்த்தைகளை அந்தக் கிராம சேவகரின் மீது கொட்டித்தீர்க்கிறார் அந்தப் பிக்கு. அந்தக் கிராமசேவகர் எந்தப் பதிலும்…
-
- 0 replies
- 309 views
-
-
ஜெனீவா காலத்திலும் அரசாங்கத்தின் விடாப்பிடியான நிலைப்பாடு -மொஹமட் பாதுஷா நாட்டில், கடந்த ஒரு வருட காலமாக கொவிட்-19 நோய்த் தொற்றுடன் தொடர்புபட்ட நெருக்கடிகள் பற்றியே, பேசிக் கொண்டிருக்கின்றோம். கொரோனா வைரஸ் தொற்றாமல் பாதுகாப்பது, தொற்றியவர்களுக்கு சிகிச்சையளிப்பது ஆகியவற்றைத் தாண்டி, பேசப்பட்ட ஒரேயொரு விடயம் ஜனாஸா எரிப்பு விவகாரமாகும். ஆனால், மேற்குறிப்பிட்ட எந்த நெருக்கடியும் இதுவரை முடிவுக்கு வரவில்லை. வைரஸ் பரவலோ, மரணங்களோ முற்றாகக் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை. எல்லா விடயங்களிலும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிவுறுத்தலைப் பின்பற்றும் இலங்கை, ‘உடல்களை அடக்கம் செய்யவும் முடியும்' என்ற வழிகாட்டலை மட்டும் பின்பற்றவில்லை. ஒரு நாடு என்ற அடிப்படையில், இலங்க…
-
- 0 replies
- 543 views
-
-
13ஆவது திருத்தமும் சிங்களக் கடுந்தேசியவாதமும் - நிலாந்தன் 30 ஜூன் 2013 இலங்கை-இந்திய உடன்படிக்கை எனப்படுவது ஒரு கெடுபிடிப் போரின் குழந்தை. கெடுபிடிப்போரின் நிலைமைகளுக்கேற்ப அது உருவாக்கப்பட்டது. எனது முன்னைய கட்டுரையில் கூறப்பட்டது போல அது வன்புணர்வின் மூலம் பிறந்த ஒரு குழந்தைதான். இந்தியாவின் முன்னாள் வெளியுறவுச் செயலர் வெங்கடேஸ்வரன் அதை ''செத்துப் பிறந்த குழந்தை' என்று ஒரு முறை வர்ணித்திருந்தார். ஜெயவர்த்தன அரசாங்கம், விடுதலைப்புலிகள் இயக்கம், பிரேமதாஸ அரசாங்கம் மற்றும் ஜே.வி.பி. ஆகிய நான்கு தரப்பும் சேர்ந்து அதைச் செயலிழக்கச் செய்தன. எப்பொழுது விடுதலைப்புலிகள் இயக்கமும், பிரேமதாஸ அரசாங்கமும் கூட்டுச் சேர்ந்து ஐ.பி.கே.எவ்.ஐ வெளியேறுமாறு கேட்டனவோ அப்பொழுதே இந்…
-
- 0 replies
- 615 views
-
-
யூதர்கள் ஏன் அதி சாமர்த்தியசாலிகள்? தொழில்நுட்பம், இசை, விஞ்ஞானம் என்று எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் யூதர்கள் முன்னணியில் இருக்கிறார்கள் என்பதை எவருமே மறுக்க முடியாது. உலக வர்த்தகத்தில் கிட்டத்தட்ட 70% யூதர்களின் கைவசமே உள்ளது. அழகு சாதனங்கள், நாகரிக உடைகள், உணவுப் பொருட்கள், ஆயுதங்கள், சினிமாத் துறை (ஹாலிவுட் மற்றும் பல) என்று பலவற்றிலும் யூதர்கள் சிறந்து விளங்குவது நிஜம். நான் இஸ்ரேல் நாட்டில் சுமார் 3 ஆண்டுகள் சில மருத்துவ மனைகளில் உள்ளகப் பயிற்சிக்காக கழிக்க நேர்ந்தபோதுதான் ஏன் யூதர்கள் அதி சாமர்த்தியசாலிகளா…
-
- 0 replies
- 831 views
-
-
தமிழ் - முஸ்லிம் உறவின் எதிர்காலம் போருக்குப் பின்னரான இலங்கையில் இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் மற்றும் பகைமறத்தல் பற்றியெல்லாம் பேசப்பட்டு வருகின்றது. சிங்கள - தமிழ் - முஸ்லிம் மக்களிடையே நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்துவதற்காக அரசாங்கம் ஓர் ஆணைக்குழுவை நியமித்தது. இனங்களுக்கு இடையில் உறவைப் பலப்படுத்தும் விதத்தில் அமைச்சுளை உருவாக்கியது; அதிகாரிகளை நியமித்தது. இருப்பினும் நல்லிணக்கம் என்பது எதிர்பார்த்த அளவு ஏற்படவில்லை என்றே கூற வேண்டும். குறிப்பாக, நாட்டில் வாழ்கின்ற இரு சிறுபான்மை இனங்களான தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் சீர்குலைந்துள்ள உறவைக் கட்டியெழுப்ப வேண்டும் என்றும் இவ்வி…
-
- 0 replies
- 874 views
-
-
ஜனாதிபதி தேர்தலை மனதில் வைத்து உயிர்த்தஞாயிறு தாக்குதலின் பின்னர் அமைதியின்மையை ஏற்படுத்த முயன்றனர்- மல்கம் ரஞ்சித் ஜனாதிபதி தேர்தலை மனதில் வைத்து உயிர்த்தஞாயிறு தாக்குதலின் பின்னர் அமைதியின்மையை ஏற்படுத்த முயன்றனர் என கர்தினால் மல்கம் ரஞ்சித் குற்றம்சாட்டியுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்க எவ்வாறு திட்டமிடப்பட்டது தாக்குதலை தடுக்க முயன்றவர்கள் எவ்வாறு தடுக்கப்பட்டனர் என்பது உட்பட பல விடயங்கள் விரைவில் தெரியவரும் என அவர் தெரிவித்துள்ளார். உண்மை வெளிவருவதை எவராலும் தடுக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார். ஆண்டவன் உண்மையை வெளிப்படுத்துவதை எவராலும் தடுக்க முடியாது, உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சில சக…
-
- 0 replies
- 311 views
-
-
குடும்ப அரசியலின் புதிய பரிமாணங்கள் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ ஸ்ரீ லங்கா முதல் சிங்கலே வரை - 03 சுதந்திரத்துக்குப் பிந்தைய இலங்கையில், அரசியல் கட்சிகளிடையே குடும்ப அரசியல் தவிர்க்கவியலாத ஒன்றாகியது. 1970களின் பின்னர், அது புதிய கட்டத்தை அடைந்தது. 1970களில் ஐக்கிய தேசிய கட்சியிலும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலும் இதேவகையிலான குடும்ப அரசியல், வெவ்வேறு வழிகளில் செல்வாக்குச் செலுத்தியது. இவை, இவ்விரு கட்சிகளின் இருப்புக்குமே ஆப்பு வைக்கும் நிலைக்கு, இறுதியில் சென்றுள்ளதை தற்போதைய அரசியல் நிலைமைகள் எடுத்துக் காட்டுகின்றன. சுதந்திரத்துக்குப் பிந்தைய ஏழு தசாப்தகால தேர்தல் அரசியலில், இருபெரும் மையங்களாக நிலைபெற்றிருந்த ஐக்கிய தேசிய கட்சியும் ஸ்ரீ லங்கா …
-
- 0 replies
- 425 views
-
-
கடந்து செல்லும் கொந்தளிப்பான ஆண்டு - நிலாந்தன் இலங்கைத்தீவின் நவீன வரலாற்றில் பல மாற்றங்கள் ஒன்றாக நிகழ்ந்து மிகக் கொந்தளிப்பான ஒரு ஆண்டு நம்மைக் கடந்து போகிறது. இந்த ஆண்டில்தான் இலங்கைத்தீவின் நவீன வரலாற்றில் முப்பொழுதும் ஏற்பட்டிராத ஒரு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. அதற்கு எதிராக சிங்கள மக்கள் தெருக்களில் இறங்கிப் போராடினார்கள். அரகலய என்று அழைக்கப்பட்ட அப்போராட்டமானது உலகத்தின் கவனத்தை ஈர்க்குமளவுக்கு படைப்புத்திறன் மிக்கதாக காணப்பட்டது. போரை வெற்றி கொண்ட ஒரு குடும்பம் நாட்டின் கருவூலத்தை திருடிவிட்டது என்று சிங்கள மக்கள் குற்றம்சாட்டினார். போராட்டத்தை ஒடுக்குவதற்கு அக்…
-
- 0 replies
- 311 views
-
-
அதிகரிக்கும் இனவாதப் போக்கும் வாக்குறுதி தவறும் தலைவர்களும் – பி.மாணிக்கவாசகம் ஒன்பது வருடங்களுக்கு முன்னர் இராணுவ ரீதியாக விடுதலைப்புலிகளைத் தோற்கடித்து, அந்த அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை இல்லாதொழித்துள்ளதாக அரச தரப்பினர் கூறுகின்றனர். ஆயினும் இல்லாமல் செய்யப்பட்ட விடுதலைப்புலிகளின் பெயரைப் பயன்படுத்தி, பயங்கரவாதம் தலையெடுக்கின்றது. நாட்டில் பிரிவினைவாதம் உயிர்த்தெழுகின்றது என அச்சமூட்டி அரசியல் செய்கின்ற மோசமான அரசியல் பிற்போக்கு இப்போது தீவிரமடைந்திருக்கின்றது. குறிப்பாக ஜனநாயகத்தை மீண்டும் நிலைநிறுத்தி, ஊழல்களை ஒழித்து, தேர்தல் முறையில் மாற்றத்தை ஏற்படுத்தவும், குடும்ப அரசியல…
-
- 0 replies
- 359 views
-
-
அமெரிக்காவை தனிமைப்படுத்தும் ஐரோப்பிய பாதுகாப்புக் கட்டமைப்பு - ஜனகன் முத்துக்குமார் கடந்த ஏழு தசாப்தங்களாக, ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புக்கான செயற்பாடுகளை ஐக்கிய அமெரிக்காவே வகித்திருந்துள்ளது. அமெரிக்காவின் வழமையான இராணுவ வல்லமை மற்றும் கட்டமைப்பு, அணுசக்தி ஆயுதங்கள், மற்றும் அத்லாண்டிக் சமுத்திரத்தை சூழவும் அமைத்துக் கொண்ட இராணுவத் தளங்கள் மூலம் குறித்த பாதுகாப்புக்கான உத்தரவாதம் அளிக்கப்பட்டிருந்தது. இந்த பாதுகாப்பு உத்தரவாதமானது பெரும்பாலும் வொஷிங்டனுக்கும் இலண்டனுக்கும் இடையேயான உறவின் அடிப்படையில், குறிப்பாக 1949இல் நேட்டோவை உருவாக்குவதன் மூலம் தீர்மானிக்கப்பட்டத…
-
- 0 replies
- 356 views
-
-
சீனா – மஹிந்த கடன் பொறி சீனாவிடம் இருந்து மஹிந்த ராஜபக் ஷ பெற்றுக் கொண்டதாகக் கூறப்படும் நிதி, என்பது மிகவும் மோசமான அரசியல் நடத்தையாகவே பார்க்கப்படும். இதற்கு எதிராக, பொலிஸில் முறைப்பாடுகள் செய்யப்பட்ட விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த விவகாரம் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் முக்கியமானதொரு பிரச்சினையாக மாற்றப்படும் வாய்ப்புகள் உள்ளன. இதனால் தான், மஹிந்த ராஜபக் ஷ தரப்பு இந்த விவகாரத்தில் இருந்து தப்பிக்க முடியாமல் திண்டாடுகிறது அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா எவ்வாறு பெற்றுக் கொண்டது? என்பதை விவரிக்கும் வகையில், நியூயோர்க் டைம்ஸ் கடந்த மாத இறுதி வாரத்தில் வெளியிட்ட கட…
-
- 0 replies
- 1.1k views
-
-
சம்பந்தனின் நகர்வுகள் தோல்வியுறுமா? - யதீந்திரா படம் | AP Photo/Eranga Jayawardena, NEWS. YAHOO தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் என்ன நடைபெறுகிறது? இப்படியொரு கேள்வி சாதாரணமாக அனைவர் மத்தியிலும் உண்டு. சில நேரங்களில் கூட்டமைப்பின் அரசியல் விறுவிறுப்பானதாக இருக்கிறது. சில நேரங்களில் குளறுபடியாகத் தெரிகிறது. இன்னும் சில வேளைகளிலோ உண்மையில் கூட்டமைப்பிற்குள் என்னதான் நடைபெறுகிறது என்பதை விளங்கிக்கொள்ள முடியாதளவிற்கு ஒரே புதிராக இருக்கிறது. இதற்கான காரணம் என்னவென்று பார்த்தால் கூட்டமைப்பு ஒரு தெளிவான அரசியல் வேலைத்திட்டத்தின் கீழ் இயங்கவில்லை என்பதை காணலாம். அண்மைக்காலமாக கூட்டமைப்பின் சார்பில் வெளிவரும் அறிக்கைகள் மேற்படி நிலைமையை தெளிவாக படம்பிடித்து காட்டுகின்றன. …
-
- 0 replies
- 353 views
-
-
இலங்கை அரசியல் இனவாதத்தில் இருந்து மீளாதா? September 11, 2023 — கருணாகரன் — “இலங்கை அரசியல் இனவாதத்திலிருந்தும் இன அடையாளத்திலிருந்தும் மீளாதா? இனப்பிரச்சினைக்கு முடிவு வராதா? தீர்வு கிடைக்காதா? இனவெறிக் கூச்சல்கள் அடங்காதா…” என்று புலம்பெயர் நாடொன்றிலிருந்து வந்த ஒரு இளைஞர் சில நாட்களுக்கு முன்பு கேட்டார். அவருடைய கண்களில் பெரிய ஏக்கம் நிறைந்திருந்தது. அவர் காண விரும்புவது வேறொரு இலங்கையை. வேறொரு அரசியற் களத்தையும் அரசியல் பண்பாட்டையும். இன சமத்துவமும் பல்லினத்தன்மைக்குரிய இடமும் ஐக்கியமும் அமைதியும் தேசத்தின் மீதான அக்கறையும் கொண்ட சூழலை அவர் விரும்புகிறார் என்பதை அவருடன் தொடர்ந்த உரையாடலின்போது உணர்ந்தேன். “உலகம் எப்படி மாறிக் கொண்டுள்…
-
- 0 replies
- 334 views
-
-
"வீச்சு" : The Reach !!! அதிகாரப்பகிர்வை நிராகரித்த கோட்டாபய ராஜபக்சவும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 70 ஆம் ஆண்டும். கருத்தாளர்கள் : பொன் பாலராஜன் நிக்ஸன் அமிர்தநாயகம் நெறியாளர் : உதயன் S. பிள்ளை
-
- 0 replies
- 403 views
-
-
ஜனாதிபதி அநுரவின் கச்சதீவு விஜயம் September 7, 2025 — வீரகத்தி தனபாலசிங்கம் — இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் தகராறுக்குரிய ஒரு பிராந்தியமாக கச்சதீவு இருந்திருந்தால் கடந்த வாரம் (செப்டெம்பர் 1) ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க தரிசு நிலமாகக் கிடக்கும் அந்த தீவுக்கு மேற்கொண்ட முன்கூட்டியே அறிவிக்கப்படாத விஜயம் சர்ச்சை ஒன்று மூளுவதற்கு காரணமாக இருந்திருக்க முடியும். ஆனால், இலங்கைக்கு சொந்தமான ஒரு நிலப்பரப்புக்கு அதன் ஜனாதிபதி செய்த விஜயம் அரசியல் மற்றும் இராஜதந்திர உரையாடல்களில் ஒரு பேசுபொருளாக கச்சதீவை மாற்றியிருக்கிறது. இந்திய அரசாங்கம் திசநாயக்கவின் கச்சதீவு விஜயம் குறித்து இதுவரையில் எந்தவிதமான பிரதிபலிப்பையும் வெளிக்காட்டவில்லை. ஆனால், இந்திய அரசியல் அரங்கி…
-
- 0 replies
- 160 views
-