Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. நச்சு அரசியல் கலாசாரத்தின் எழுச்சி உலகளாவிய ஊடகப் பரப்பை, அண்மைக்காலத்தில் அவதானித்து வந்தவர்களுக்கு, “கடும்போக்கு வலதுசாரி அரசியலின் எழுச்சி” என்பது, அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட சொற்றொடராக இருக்குமென்பது தெரிந்திருக்கும். ஐக்கிய அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப் தொடக்கம், ஐக்கிய இராச்சியத்தில் பிரெக்சிற் (ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியம் விலகுதல்), பிரான்ஸிலும் ஜேர்மனியிலும் இன்னோரன்ன ஐரோப்பிய நாடுகளிலும் கடும்போக்கு வலதுசாரிகளின் எழுச்சி, இந்தியாவின் நரேந்திர மோடியின் கட்சிக்கு அதிகரித்துவரும் செல்வாக்கு என, கடும்போக்கு வலதுசாரி அரசியலின் செல்வாக்கு அதிகரிப்புக்கான உதாரணங்கள், தாராளமாக இருக்கின்றன. …

  2. பாடாத கீதம்: தமிழ் பேசும் மக்களின் தேச உணர்வு மொஹமட் பாதுஷா / 2020 பெப்ரவரி 07 , மு.ப. 08:51 இரண்டு விடயங்கள் பற்றிக் குறிப்பாகப் பேச வேண்டியிருக்கின்றது. ஒன்று, இந்த நாட்டில் வாழ்கின்ற தமிழ், முஸ்லிம் மக்களை, பெரும்பான்மை இனமும் பெருந்தேசியமும் ஆட்சியாளர்களும் இலங்கைத் தேசத்தின் மக்களாகப் பார்க்க வேண்டிய கடப்பாடு பற்றியதாகும். இரண்டாவது, சிறுபான்மைச் சமூகங்கள், ‘இலங்கையர்’ என்ற பொதுமைப்பாட்டுக்குள், தம்மைச் சரியாக நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும் என்பது பற்றியதாகும். ஏனெனில், வெறுமனே தேசிய கீதத்தைத் தமிழில் பாடுவதால் மாத்திரம், ஒரு நாட்டின் மீதான தேசபக்தி உருவாகி விடுவதில்லை. அதுபோலவே, எல்லா மக்களையும் சமமாக மதிக்கின்றோம் என்று, சி…

  3. சண்முகதாசனும் விஜேவீரவும் – கலாநிதி சரத் அமுனுகம கலாநிதி சரத் அமுனுகம கம்யூனிஸ்ட் தலைவரும் தத்துவவாதியும் தொழிற்சங்கவாதியுமான என்.சண்முகதாசனின் பிறந்த நூற்றாண்டு தினத்தை முன்னிட்டு அவரின் வாழ்வு மற்றும் பணிகள் மீது கவனத்தை ஈர்த்தமைக்காக “சண்டே ஐலண்ட்” பத்திரிகையின் வாசகர்கள் கலாநிதி தயான் ஜயதிலகவிற்கும் அதன் பிரதம ஆசிரியர் மெனிக் டி சில்வாவிற்கும் கடமைப்பட்டவர்களாக இருக்கிறார்கள். எனது அனுபவத்தில் நான்கு தமிழ் மார்க்ஸியவாதிகள், சிறுபான்மைச்சமூகத்தில் இருந்து வந்தவர்கள் என்றாலும்கூட அவர்கள் அங்கம் வகித்த மார்க்ஸிய கட்சிகளினால் அவற்றின் வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் மிகப்பெரிய அங்கீகாரத்திற்கு உரியவர்களானார்கள். ஆனால், அவர்களது இறுதியான அரசியல்கதி 1950 க…

  4. அரசியல் தந்திரசாலி ரணிலின் வெற்றி! புருஜோத்தமன் தங்கமயில் நம்பிக்கைக் கதைகளின் புதிய அத்தியாயமாக இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட புதிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இடம்பிடித்திருக்கிறார். ஐந்து தசாப்த கால அரசியல் வாழ்வைக் கொண்டிருக்கின்ற ரணில், ஜனாதிபதிக் கனவை ஒவ்வொரு நாளும் கொண்டு சுமந்தார். இரண்டு தடவைகள் ஜனாதிபதித் தேர்தலில் நேரடியாக போட்டியிட்டு தோல்வியடைந்த போதிலும், அவர் தனது கனவை அடைவதற்கான அனைத்துச் சந்தர்ப்பங்களையும் பரீட்சித்துப் பார்ப்பதற்கு தயாராக இருந்தார். அதுதான், அவரை காலம் இன்று ஜனாதிபதியாக்கியிருக்கிறது. நம்பிக்கைக் கதைகளில் புதிய நாயகனாகவும் மாற்றியிருக்கின்றது. இலங்கை அரசியல் வரலாற்றில் ஒரு கட்சித் தலைவராக ரணில் மிக மோசமான தோல்விகளைச் ச…

  5. முரண்பாடான நிலைப்பாடு இலங்­கையில் ஆயுத மோதல்கள் முடி­வுக்குக் கொண்­டு­வ­ரப்­பட்டு விட்­டது. ஆனால், சிறு­பான்­மை­யி­ன­ரா­கிய தமிழ் மக்­களின் தேசி­யத்­துக்­கான போராட்­டங்கள் ஓய­வில்லை. இந்தப் போராட்­டங்­களை முடி­வுக்குக் கொண்டு வரு­வ­தற்கு ஆளுந்­த­ரப்­பி­னரோ அல்­லது இந்த நாட்டின் முன்­னணி அர­சியல் தலை­வர்­க­ளாக வர்­ணிக்­கப்­ப­டு­ப­வர்­களோ ஆக்­க­பூர்­வ­மான முறையில் முயற்­சி­களை மேற்­கொள்­வ­தாகத் தெரி­ய­வில்லை. முப்­பது வருட கால மோச­மான யுத்­தத்தின் பின்னர், இனங்­க­ளுக்­கி­டையில் ஏற்­பட்­டுள்ள மனக்­க­சப்­புக்­களை, அர­சியல் ரீதி­யான அதி­ருப்­தி­களை வெறு­மனே பெய­ருக்­காக மேற்­கொள்­ளப்­ப­டு­கின்ற நல்­லி­ணக்க நட­வ­டிக்­கை­களின் மூலம் போக்­கி­விட முடி­யாது என்ற யதார்த்­த…

  6. பொருந்துமா பொருத்து வீடுகள்? நிலாந்தன் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு பொருத்து வீடுகளைக் கட்டிக் கொடுக்கப்போவதாக அரசாங்கம் அறிவித்திருக்கிறது. இது தொடர்பில் அமைச்சரவை தனது அங்கீகாரத்தை வழங்கி விட்டது. வரும் ஏழாம் திகதி இத்திட்டம் ஆரம்பிக்கப்படவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை தமிழ்ப்பத்திரிகைகளில் இது தொடர்பாக ஒரு முழுப்பக்க விளம்பரம் பிரசுரிக்கப்பட்டுள்ளது. பொருத்து வீடுகளை தமிழ் மக்களின் பிரதிநிதிகளில் பெரும்பாலானவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. வடமாகாண சபை இது தொடர்பாக ஏற்கனவே தனது எதிர்ப்பை வெளிக்காட்டி விட்டது. முதலமைச்சர் இது தொடர்பாக மிக விரிவான விளக்கத்தைக் கொடுத்து விட்டார். அரசாங்கத்தோடு அதிகம் இணங்கிப்போகும் தம…

  7. அம்மாக்களும் அப்புக்காத்துமாரும்- நிலாந்தன் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கடந்த வாரம் வவுனியாவில் தங்களுக்கிடையே மோதிக் கொண்டார்கள். ஆளுக்காள் அடிபட்டு, அதன் விளைவாக போலீஸ் நிலையம்வரை போயிருக்கிறார்கள். போலீசாரை சம்பவ இடத்துக்கு அழைத்ததும் அவர்கள்தான். எந்தப் போலீசுக்கு எதிராக இதுவரை காலமும் போராடினார்களோ, அதே போலீஸிடம் போய் ஆளுக்காள் முறைப்பாடு செய்திருக்கிறார்கள். இந்த மோதல் தொடர்பில் வடக்கு-கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் சங்கம் ஓர் அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கையில் மோதலைப் பற்றிய விளக்கம் உண்டு. ஆனால் அது முழுமையானதாக தெரியவில்லை. தமிழர் தாயகத்தில் உள்ள எல்லாச் …

  8. இருமுகத்தோற்றம் யுத்தம் முடி­வுக்குக் கொண்டு வரப்­பட்ட தின­மா­கிய மே 18 ஆம் நாள் நாட்­டை­ அ­ர­சியல் உணர்வு ரீதி­யாக இரு துரு­வங்­க­ளாக்­கி­யி­ருக்­கின்­றது. இன ஐக்­கி­யத்­திற்கும் அமைதி–சமா­தா­னத்திற்கும் வழி வகுக்கும் என்று எதிர்­பார்க்­கப்­பட்ட யுத்த முடிவு தின­மா­னது அந்த எதிர்­பார்ப்பை நிறை­வேற்றத் தவ­றி­விட்­டது. அந்த தினம் நேர் முர­ணான இரு முகத்­தோற்­றங்களைக் கொண்­டி­ருக்­கின்­றது. நாட்டின் பெரும்­பான்மை இன மக்கள் மத்­தியில் அது யுத்த வெற்றி தின­மாகக் கொண்­டா­டப்­ப­டு­கின்­றது. ஆனால் வடக்­கிலும்–கிழக்­கிலும் நாட்டின் ஏனைய பிர­தே­சங்­களிலுள்ள தமிழ் மக்கள் மனங்­க­ளிலும் அந்த தினம் ஆழ்ந்த துய­ரத்தைத் தரும் ஒரு சோக தின­மாக–- துக்­க­ தி­ன­மாக…

  9. நீதி வழங்கத் தவறி விட்டதா நிலைமாறு கால நீதி? ஒரு நாடு முன்னேற்றம் அல்லது அபிவிருத்தி அடைந்த தேசம் என்பதை அளவிடப் பொதுவாக பலவிதமான சமூகப் பொருளாதார பண்புக் குறிகாட்டிகள் பயன்படுகின்றன. ஆனாலும், அவற்றில் அந்த நாட்டு மக்கள் அனுபவிக்கும் அமைதி, சமாதானம், நீதியான ஆட்சி பரிபாலனம் ஆகிய அம்சங்களைத் தாங்கிய விடயங்களே மேலாண்மை பெறுகின்றன. அத்துடன், இவ்வாறான பண்புச் சுட்டிகள் இல்லாத வெறும் பொருளாதார அபிவிருத்தியை, முழுமையான முன்னேற்றம் என அர்த்தம் கொள்ள முடியாது. இலங்கையில், 2009 மே மாதத்தில் ஆயுத மோதல்கள் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட போதிலும், பாதிக்கப்பட்ட சமூகம் உண்மைக்காகவும் நீதிக்காகவும் காத்த…

  10. கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம்: மருதங்கேணி மக்களை நோக்கிய வசை மருதங்கேணியில் முன்னெடுக்கப்படவிருந்த கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம், ‘சூழலுக்கு பாதிப்பினை ஏற்படுத்தி மீன்பிடித்தொழிலைப் பாதிக்கும் என்று விஞ்ஞான ஆய்வுகளிலிருந்து தெரியவந்துள்ளதால்’ கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மருதங்கேணி கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் தொடர்பில் ஆராயும் கூட்டமொன்று கடந்த 18ஆம் திகதி யாழ். மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் நாகலிங்கம் வேதநாயகம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசம், வடமராட்சி கிழக்கு அபிவிருத்தி அமைப்பு மற்றும் வடமராட்சி கிழக்கு பட்டப்படிப்பு மாணவர் ஒன்றியம…

  11. தமிழர்களை அலையவிடும் சிங்களத்தின் உத்தி | அரசியல் களம் | போரியல் ஆய்வாளர் அருஸ்

    • 0 replies
    • 428 views
  12. தமிழ் மக்களை யார் யாரெல்லாம் அரசியல் நீக்கம் செய்து வருகிறார்கள்? நிலாந்தன் கடந்த வாரம் யாழ் மறைக் கல்வி நிலையத்தில் ஒரு சந்திப்பு நிகழ்ந்தது. வடக்கு – கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இச் சந்திப்பில் சிவில் சமூகப் பிரதிநிதிகளும், மதகுருமார்களும் பங்கு பற்றியிருந்தார்கள். நிலைமாறு கால கட்ட நீதியை தமிழ் நோக்கு நிலையிலிருந்து விளங்கிக் கொள்வதும் இது விடயத்தில் சிவில் இயக்கங்களை எப்படிப் பங்காளியாக்கலாம் என்பது பற்றிச் சிந்திப்பதற்குமான இச்சந்திப்பில் ஒரு கிறிஸ்தவ மதகுரு பின்வரும் தொனிப்படக் கருத்துத் தெரிவித்தார்.... 'நீங்கள் பெரிய பெரிய சொற்களைப் பயன்படுத்துகிறீர்கள், பெரிய பெரிய அரசியல் கோட்பாடுகளைப் பற்றிக் கூறுகிறீர்கள். ஆன…

  13. மஸ்ஜித் அல் அக்ஸா மீதான இஸ் ரேல் அட்­டூ­ழி­யங்கள் யுனெஸ்கோ வாக்­கெ­டுப்பின் போது இலங்கை மாயம் ஒரு காலத்தில் அடக்கி ஒடுக்­கப்­பட்ட பலஸ்­தீன மக்­களின் உரி­மைக்­காக சர்­வ­தேச அரங்­கு­களில் ஓங்கி ஒலித்த குரல் இலங்­கையின் குரல். ஆனால், இஸ்­ரேலின் ஆக்­கி­ர­மிப்பின் கீழ் உள்ள ஜெரூ­ஸலம் நகரில் அல் குத்ஸ் வளா­கத்­துக்குள் உள்ள மஸ்­ஜிதுல் அக்­ஸாவின் ஹரம் அல் ஷரப் பகு­தியில் இஸ்ரேல் இழைத்து வரும் கொடு­மை­களைக் கண்­டிக்கும் வகையில் 2016 அக்­டோபர் 13இல் யுனெஸ்கோ அமர்வில் ஒரு தீர்­மானம் முன்­வைக்­கப்­பட்­ட ­போது இலங்­கையின் குரல் மௌனித்துப் போய்­விட்­டது. மிகவும் கௌர­வ­மான முறையில் நடு­நி­லை­யான வெளி­நாட்டுக் கொள்­கையைக் கடைப்­பி­டித்து வந்த இலங்­கைய…

  14. ராஜீவ் காந்தி கொலை வழக்கு *தொடரும் தவிப்பு* பேரறிவாளன் அம்மா அற்புதம்மா மற்றும் அனைவரின் அம்மாக்கள் உறவுகள் நிலை சொல்லும் தவிப்பு இது.

    • 0 replies
    • 428 views
  15. அறுதிப் பெரும்பான்மையில் சிறுபான்மைச் சமூகங்களின் எதிர்காலம் மொஹமட் பாதுஷா / 2020 ஓகஸ்ட் 18 சுதந்திர இலங்கையில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு, மூன்றிலிரண்டு அறுதிப் பெரும்பான்மையுடனான ஆட்சியை இம்முறை, பொதுஜன பெரமுன நிறுவிக் கொண்டிருக்கின்றது. இந்தப் பலம், ஆட்சியாளர்களுக்குத் தாம் நினைத்ததைச் செய்யக் கூடிய இயலுமையை வழங்கும். இதற்காகவே, படாதபாடுபட்டு 150 ஆசனங்களைப் பொதுஜன பெரமுன பெற்றிருக்கின்றது. ஆனால், முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் அடுத்துவரும் ஐந்து வருடங்களில் வசந்தகாலம் நிலவுமா என்ற கேள்விக்கு, பொறுத்திருந்துதான் விடை காண வேண்டும். தேர்தல் முடிவுகளை ஆழமாக அலசுகின்றவர்கள், மூன்றிலிரண்டு பெரும்பான்மை வெற்றி என்பதற்கு அப்பால், மேலும் பல விடயங்களைப் …

  16. சர்வஜன வாக்கெடுப்புக்கான உயர்நீதிமன்றின் வியாக்கியானம் மொஹமட் பாதுஷா மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்துடன் வெற்றிபெற்ற அரசாங்கத்துக்கு, அரசமைப்பில் ஒரு திருத்தத்தை கொண்டுவந்து, வெற்றிகரமாக நிறைவேற்றுவது, ஒரு பெரிய காரியமாக இருக்கப் போவதில்லை என்றே, ஆரம்பத்தில் பரவலாகக் கருதப்பட்டது. கொரோனா வைரஸ் பரவலின் மற்றுமொரு பேரிடர் ஏற்பட்டுள்ளமையால், இந்தச் சந்தர்ப்பத்தைச் சாதகமாகப் பயன்படுத்தி, அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட மூலத்தை, இலாவகமாக வெற்றிபெற வைக்கலாம் என்ற அனுமானங்களும் வெளியாகியிருந்தன. உத்தேச திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களைப் பரிசீலித்த நீதியரசர் குழாம் எடுத்திருக்கும் தீர்மானம்…

  17. சுதந்திரக் கட்சியின் இரட்டைவேடம் - கே.சஞ்சயன் ஜனாதிபதியாகப் பதவியேற்று, இப்போதுதான் இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்து மூன்றாவது ஆண்டுக்குள் காலடி எடுத்து வைத்திருக்கிறார் மைத்திரிபால சிறிசேன. அதற்குள்ளாகவே, 2020 ஆம் ஆண்டு நடக்கும் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில், மைத்திரிபால சிறிசேனவே, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட வேண்டும் என்றொரு தீர்மானத்தை, அந்தக் கட்சியின் மத்திய குழு நிறைவேற்றியிருப்பதாக அமைச்சர் சரத் அமுனுகம கூறியிருக்கிறார். எனினும், அத்தகையதொரு தீர்மானத்தை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி எடுக்கவில்லை என்றும், அமைச்சர்கள் சிலரே அதனை வலியுறுத்தி இருக்கின்றனர் என்றும் சுதந்திரக் கட்சியின் போசகர்களில் ஒ…

  18. நல்லாட்சி அரசாங்கம் வெட்கப்பட வேண்டியதும் தலைகுனிய வேண்டியதுமான மற்றுமொரு சர்ச்சைக்குரிய விடயமே பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவின் "சேர்' போட்ட தொலைபேசி உரையாடல் நாடகமாகும். தொழில் தர்மமும் தார்மிகமும் சாகடிக்கப்பட்ட அம்சமாக கருதப்படுகிறது. வெட்கித் தலைகுனிய வேண்டிய விவகாரம் வெளியே எள்ளிநகையாடப்படுகின்றது. உள்ளகத்தே ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் தவறை ஒப்புக் கொள்கின்றனர். மூன்றாவது நம்பிக்கைக்கு உரியவர்களையும் பிரதமர் இழந்து விடுவாரோ என்கிற கேள்விகளும் உண்டு. புலமை புலப்பட்டதா? தொழில்வாண்மை புலப்படச் செய்யாத பொலிஸ்மா அதிபர் ஒரு தொலைபேசி அழைப்புக்கு பதிலளிப்பதில் தடுமாறியுள்ள தருணத்தை பாராளுமன்றம் மாத்திரமல்ல முழு நாடுமே பேசுகிறது. ஏற்கனவே ஜனாதிபதியின…

  19. முஸ்­லிம்­களை நெருங்கும் ராஜ­பக்‌­ஷாக்கள்! முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்‌ஷ, முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக்‌ஷ உட்­பட ராஜ­பக்‌ஷ குடும்­பத்­தினர் அண்மைக் கால­மாக முஸ்லிம் சமூ­கத்­து­ட­னான தமது உறவை மீள்­பு­துப்­பிக்க ஆரம்­பித்­தி­ருப்­பதை பகி­ரங்­க­மா­கவே அவ­தா­னிக்க முடி­கி­றது. முஸ்லிம் அமைப்­பு­களைச் சந்­தித்தல், முஸ்­லிம்­களின் பொது நிகழ்­வு­களில் பங்­கேற்றல், இப்தார் நோன்பு துறக்கும் நிகழ்­வு­களை நடத்­துதல் என பல வகை­களில் இந்த உறவு புதுப்­பித்தல் நிகழ்­வுகள் நடந்­தேறி வரு­கின்­றன. கோத்­த­பாய ராஜ­பக்‌ஷ 'எளிய' அமைப்பை ஆரம்­பித்து 2020 ஆம் ஆண்டை நோக்­கிய தனது அர­சியல் வேலைத்­திட்­டத்தை முன்­னெ­டுத்து வரு­கின்ற ந…

  20. தொல்பொருள் போர்வையில் வடக்கு கிழக்கை ஆக்கிரமிக்க திட்டமா? வடக்கு கிழக்கில் உள்ள தொல்­பொருள் வல­யங்­களைப் பாது­காக்கப் போகிறோம் என்ற போர்­வையில் அர­சாங்கம் இன­வாத சக்­தி­களின் துணை­யுடன் பாரிய ஆக்­கி­ர­மிப்பு வேலைத்­திட்டம் ஒன்றைத் தொடங்­கி­யி­ருக்­கி­றதா எனும் சந்­தேகம் கடந்த சில வாரங்­க­ளாக வலுப்­பெற ஆரம்­பித்­துள்­ளது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, நீதி மற்றும் புத்­த­சா­சன அமைச்சர் விஜே­தாச ராஜ­பக் ஷ, ஆரம்ப கைத்­தொழில் அமைச்சர் தயா கமகே மற்றும் பொது பல சேனாவின் பொதுச் செய­லாளர் ஞான­சார தேரர், மட்­டக்­க­ளப்பு மங்­க­ள­ரா­மய விகா­ரா­தி­பதி அம்­பிட்­டியே சும­ண­ரத்ன தேரர் ஆகியோர் இது தொடர்பில் நடாத்­திய கூட்­டங்­களும் வெளி­யிட்ட கருத்­துக…

  21. நாயாறு எரியூட்டல்: தொடர் அச்சுறுத்தலுக்குள் வடக்கு மீனவர்கள் முல்லைத்தீவு, நாயாறு கடற்கரைப் பகுதியில், தொழில் நடவடிக்கைகளுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு படகு, மூன்று இயந்திரங்கள், 27 வலைத்தொகுதிகள், எட்டு வாடிகள் (தற்காலிக கூடாரங்கள்) இனந்தெரியாத குழுவொன்றால் திங்கட்கிழமை (13) இரவு, எரியூட்டி அழிக்கப்பட்டிருக்கின்றன. அழிந்து போயிருக்கின்ற தொழில் உபகரணங்களின் பெறுமதி, 10 மில்லியன் ரூபாய் அளவில் இருக்கும் என்று பாதிக்கப்பட்ட மீனவர்கள் கூறுகிறார்கள். கடந்த ஒன்றரை மாதங்களுக்குள், வடக்கு கடற்கரையோரங்களில் தொழில் உபகரணங்கள், படகுகள் இனந்தெரியாதோரால் எரியூட்டி அழிக்கப்பட்ட, மூன்றாவது சந்தர்ப்பம் இதுவாகும…

  22. ஐ.நா தீர்மானத்தின் உத்தேச வரைபு பொறுத்து தமிழ்க் கட்சிகளை ஏன் ஒன்றிணைக்க முடியவில்லை? - நிலாந்தன் கடந்த ஜனவரி மாதம் மூன்று தமிழ் தேசியக் கட்சிகளும் சிவில் சமூகங்களும் இணைந்து ஒரு பொதுக்கடிதத்தை தயாரித்து ஐநாவுக்கு அனுப்பிவைத்தன. அதில் கூட்டமைப்பு எதுவித எதிர்ப்புமின்றி பங்குபற்றியது. அக்கட்சியின் பேச்சாளர் மூன்று சந்திப்புகளிலும் மிகவும் “கூலாக” இருந்து கலந்துரையாடல்களில் ஈடுபட்டார். விக்னேஸ்வரனின் கூட்டமைப்பும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் பல்வேறு விடயங்களில் ஆளுக்காள் மோதிக்கொண்ட பொழுது கூட்டமைப்பு ஒரு அப்பாவி போல தான் எல்லாவற்றுக்கும் தயார் என்பது போல ஒரு தோற்றத்தை காட்டிக்கொண்டு அமைதியாக காணப்பட்டது. இனப்படுகொலை என்பதை அந்தக் கடிதத்தில் இணைப்பதற்கும் …

  23. மாயையைக் கண்டு மிரளும் மைத்திரி : உள்ளூராட்சிச் சபை தேர்தல் மேலும் தாமதம் எதைச் செய்­தா­வது ஆட்­சி­யைத் தக்க வைத்­துக்­கொள்ள வேண்­டும் என்ற கட்­டா­யத்­துக்­குள் இந்த ஆட்­சி­யா­ளர்­க­ளும்-, எதைச் செய்­தா­வது இந்த ஆட்­சி­யைக் கவிழ்க்க வேண்­டும் என்ற கட்­டா­யத்­துக்­குள் மகிந்த அணி­யி­ன­ரும் தள்­ளப்­பட்­டுள்­ளதை தற்­போ­தைய அர­சி­யல் செயற்­பா­டு­க­ளைப் பார்க்­கும்­போது தெளி­வாக அவ­தா­னிக்­க­லாம். ஊழல்,மோச­டி­களை ஒழிக் கப் போவ­தா­க­வும், நாட்­டின் பொரு­ளா­தா­ரத்­தைக் கட்டி எழுப்­பப் போவ­தா­க­வும், பூரண ஜன­நா­ய­கத்தை நிலை­நாட்­டப் போவ­தா­க­வும் வாக்­கு­று­தி­ய­ளித்து மகிந்­த­வி­ட­மி­ருந்து ஆட்­சி­யை தற்­போ­தைய ஆட்­சி­யா­ளர்­கள் கைப…

  24. 19 வருடங்களிற்கு முன்னர் அலுவலகத்தில் படுகொலை செய்யப்பட்ட மனிதாபிமான பணியாளர்கள் ; மூதூர் செல்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சியை தடுத்த இராணுவத்தினர் ; வீதியை மறித்த கும்பல் ; ஆதாரங்களை சேகரிப்பதில் ஆர்வம் காட்டாத பொலிஸார் Published By: Rajeeban 04 Aug, 2025 | 03:40 PM ஏசிஎவ் அமைப்பின் அறிக்கையிலிருந்து -- ஜூலை 31 ஆகஸ்ட் முதலாம் திகதி காலை பட்டினிக்கு எதிரான அமைப்பின் 17 பணியாளர்கள் மூதூர் நகரிலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் தங்கள் திட்டங்களை முன்னெடுப்பதற்காக புறப்பட்டு சென்றனர். பட்டினிக்கு எதிரான அமைப்பின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காகவும் தேவையற்ற பயணங்களை மட்டுப்படுத்துவதற்காகவும் மூதூரில் ஒரு அலுவலகத்தை கொண்டிருந்தது. ஆகஸ்ட் முதலாம் திகதி அவர்கள் கடல்வழியாக மீ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.