அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9274 topics in this forum
-
போர் வெற்றி எதைச் சாதித்தது? மூன்று தசாப்தங்களாக நீடித்து வந்த, தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம், முள்ளிவாய்க்காலில் முடிவுக்கு வந்து இன்றுடன், ஒன்பது ஆண்டுகள் நிறைவடைகின்றன. தமிழ் மக்களின் உரிமைக்கான, ஆயுதப் போராட்டம் பேரெழுச்சி பெறுவதற்குக் காரணமாக அமைந்த இடம் திருநெல்வேலி. 1983ஆம் ஆண்டு, திருநெல்வேலியில் நடத்தப்பட்ட விடுதலைப் புலிகளின் கண்ணிவெடித் தாக்குதலுக்குப் பின்னர்தான், ஆயுதப் போராட்டம் அதிகாரபூர்வமாக முனைப்புப்பெற்றது. திருநெல்வேலியைப் போலவே, முள்ளிவாய்க்காலுக்கும் ஆயுதப் போராட்ட வரலாற்றில் ஒரு தனி இடம் உள்ளது. ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட இடம் அது. …
-
- 0 replies
- 540 views
-
-
ஓயாத அலைகள் காலத்தில் புதுக்குடியிருப்பில் இருந்தபோது போராளியாக இருந்த ஒரு நண்பர் கூறிய தகவல் இது: ஓயாத அலைகள் - 3 படை நடவடிக்கையின்போது, ஆணையிறவு கைப்பற்றப்பட்ட பின்னர், தென்மராட்சியைக் கைப்பற்றுவதற்கு புலிகள் நடவடிக்கை எடுத்த காலம். இரவுடன் இரவாக இரகசியமாக முன்னேறிச் சென்ற புலிகளின் படையணிகள், தென்மராட்சியை யாழ்ப்பாணத்தில் இருந்து தனிமைப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுகின்றன. கைதடிச் சந்தியில் இருந்து கோப்பாய் சந்தியை நோக்கிச் செல்லும் பாதையில் புலிகளின் அணியொன்று நிலைகளை அமைக்கிறது. இந்தத் தகவல் அந்தப் பகுதியில் உள்ள மக்களுக்குத் தெரியவந்ததும், மக்கள் திரண்டு செல்கிறார்கள். மோதல்கள் ஆரம்பமாவதற்கு முன்பு தம்மை இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் செல்வதற்கு அனுமதிக்குமாற…
-
- 0 replies
- 671 views
-
-
கல்வி ஒரு தீவிரமான அரசியல் ஆயுதம் திரு. கா. ஆறுமுகம் மலேசியக் கல்விச் சூழலில் மிக முக்கியமாக அவதானிக்கப்படுபவர். குறிப்பாக கல்வி கொள்கைகள்வழிதான் தாய்மொழிக்கல்வி என்பதை ஓர் அரசியல் அடையாளமாக உருவாக்க இயலும் என்பதிலும் அதன்வழிதான் பண்பாட்டை காக்க இயலும் என்றும் வாதிடுபவர். தொடர்ந்து நமது நாட்டிலும் அனைத்துலக அளவிலும் கல்வி சார் கருத்தரங்குகள், மாநாடுகள், சந்திப்புகளில் முக்கிய பேச்சாளராகப் பங்குகொண்டு விவாதித்து வருபவர். சுவராம் எனப்படும் மலேசியாவின் மனித உரிமை இயக்கத்தின் தலைவரான இவர், பல முக்கிய நிறுவனங்களில் பொறியியலாளராக பணிபுரிந்தவர். வணிக நிர்வாக துறையில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர் ஒரு வழக்கறிஞரும் ஆவார். செம்பருத்தி இணைய இதழின் ஆசிரியரான அவரோடு இடம்பெற்ற ஓர்…
-
- 0 replies
- 1.2k views
-
-
மாவீரர் நாள் 2023 உணர்த்துவது – நிலாந்தன். மட்டக்களப்பு, மாவடி முன்மாரி மாவீரர் துயிலுமில்லத்தில், மாவீரர் நாளன்று போலீசார் பெருமளவுக்குத் தடைகளை ஏற்படுத்தினார்கள்.அத் துயிலுமில்லத்தின் ஏற்பாட்டுக் குழுவைச் சேர்ந்தவர்களை அடிக்கடி கூப்பிட்டு விசாரித்தார்கள்.அக் குழுவிற்குப் பொறுப்பாக இருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரனைக் கூப்பிட்டு விசாரித்தார்கள். அந்த துயிலுமில்லத்தின் ஒரு பகுதியில் மலைக் கல்லில் பொறிக்கப்பட்டிருந்த கார்த்திகை 27 என்ற எழுத்தை அகற்றுமாறு கேட்டார்கள். கொடிகளை அகற்றச் சொல்லியும், பாடல்களை நிறுத்தச் சொல்லியும், ஒலிபெருக்கியை நிறுத்த சொல்வியும்,தொடர்ச்சியாக அறிவுறுத்தல்களை கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.சுடர் வணக்க நேரத்தின் போது ஒலிபெருக்கி…
-
- 0 replies
- 583 views
-
-
மன்னார் மனிதப் புதைகுழியும் கார்பன் அறிக்கையும் புருஜோத்தமன் தங்கமயில் / 2019 மார்ச் 13 புதன்கிழமை, பி.ப. 01:00 மன்னார், சதொச கட்டட வளாகத்தில், கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்கள், கி.பி 1477 - 1642 காலப்பகுதிக்குரியவை என்று, கார்பன் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையை முன்வைத்து, வாதப்பிரதி வாதங்கள் கடந்த சில நாள்களாக, அனைத்து மட்டங்களிலும் முன்னெடுக்கப்படுகின்றன. அதுவும், திருக்கேதீஸ்வர கோவில் நுழைவு வளைவு முரண்பாடுகள் ஏற்படுத்திவிட்ட, மத அடிப்படைவாத விவாதங்களில் நின்றும், மன்னார் மனிதப் புதைகுழி விவகாரத்தைக் கையாளச் சில தரப்புகள் முயல்கின்றன. மன்னார் மனிதப் புதைகுழியில் இருந்து, …
-
- 0 replies
- 1.1k views
-
-
ஓடாத குதிரையின் பந்தயக் கனவு முகம்மது தம்பி மரைக்கார் / 2019 செப்டெம்பர் 24 செவ்வாய்க்கிழமை, பி.ப. 06:45 அமைச்சர் சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிப்பதற்கு, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உடன்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்தவகையில், நாளை புதன்கிழமை அந்த அறிவிப்பு வரலாம் என்றும் கூறப்படுகிறது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாமல் செய்வதற்கான முயற்சியைப் பிரதமர் ரணில் மேற்கொண்ட போதே, சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்க வேண்டிய சூழ்நிலை அவருக்கு ஏற்பட்டு விட்டது என்பதை ஊகிக்க முடிந்தது. சூழ்நிலைக் கைதி ஐக்கிய தேசியக் கட்சியின் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஐக்கிய தே…
-
- 0 replies
- 1k views
-
-
நாளொன்றுக்கு ஐந்து பேர்: இலங்கை தாங்குமா?. இலங்கையில் நாள் ஒன்றுக்கு ஐந்து பேர் கடத்தல்கள், காணாமல் போதல்கள் மற்றும் படுகொலைகளுக்கு உள்ளாக்கப்படுவதாக மூன்று மனித உரிமை அமைப்புக்கள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் பிரகாரம் யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பில் நாளொன்றுக்கு குறைந்தது இருவர் இந்த நிலைக்கு உள்ளாகின்றனர். மக்கள் கண்காணிப்புக் குழு, சுதந்திர ஊடக இயக்கம் மற்றும் சட்டத்துக்கும் சமூகத்துக்குமான அறநிலையம் ஆகிய அமைப்புக்கள் கூட்டாக இணைந்து வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில், கடந்த ஜனவரி 1 முதல் ஒகஸ்ட் 31 வரையான காலப்பகுதியில், 662 படுகொலைச் சம்பவங்களும், 540 கடத்தல் சம்பவங்களும் இலங்கையில் இடம்பெற்றிருப்பதாகக் குறிப்பிட…
-
- 0 replies
- 1.1k views
-
-
சிறைக்கம்பிகளின் பின்னால் துருப்பிடிக்கும் நல்லாட்சி ப.தெய்வீகன் தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் இன்னொரு தடவை ஆரம்பிக்கப்பட்டு, 'சம்பிரதாயபூர்வ உறுதிமொழிகளுடன்'முடித்துவைக்கப்பட்டிருக்கிறது. கைதிகளை வழக்கமாக சென்று உருக்கமாக பார்க்கும் அரசியல்வாதிகளும் இம்முறை அதிகம் அக்கறைப்படவில்லை. சிறைச்சாலை ஆணையாளர்தான், சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்து உத்தரவாதத்தை பெற்றுக்கொடுத்திருக்கிறார். அவரது உறுதிமொழியை அடுத்து நீதிமன்றம் கொண்டுசெல்லப்பட்ட உண்ணாவிரதிகள் இடைக்கால திருப்தியுடன் மீண்டும் தடுப்புக்காவலுக்கு திரும்பியுள்ளனர். கடந்த தடவை கைதிகளின் உண்ணாவிரதம் தொடர்பாக திமிறிய பல ஊடகங்களும்கூட இம்முறை இடம்பெற்ற கைதிக…
-
- 0 replies
- 501 views
-
-
ஐ.நா மனித உரிமைகள் பேரவையால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சிறிலங்கா எவ்வளவு தூரம் நிறைவேற்றியுள்ளது என்பது தொடர்பாக யூன் 29 அன்று இடம்பெற்ற மனித உரிமைகள் பேரவையின் 32வது கூட்டத்தொடரின் போது ஆராயப்பட்டது. குறிப்பாக, பல பத்தாண்டுகளாகத் தொடரப்பட்ட உள்நாட்டு யுத்தத்தினால் ஏற்பட்ட வடுக்களை ஆற்றுவதற்கேற்ற வகையில் கடந்த ஒக்ரோபரில் நிறைவேற்றப்பட்ட இத்தீர்மானத்திற்கு சிறிலங்கா இணைஅனுசரணை வழங்கியிருந்தது. நீண்டகாலமாக சிறிலங்காவில் அதிகாரத்துவ ஆட்சியை மேற்கொண்டு வந்த மகிந்த ராஜபக்ச கடந்த ஜனவரி 2015ல் நடத்தப்பட்ட அதிபர் தேர்தலில் எதிர்பாராத வகையில் தோல்வியைத் தழுவினார். இதன் பின்னர் ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொண்ட சிறிலங்காவின் புதிய அரசாங்கமானது விரிசலடைந்திருந்த மேற்குலக நாடு…
-
- 0 replies
- 602 views
-
-
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் எதிர்காலம்
-
- 0 replies
- 400 views
-
-
மாணவர்கள் படுகொலை; நீதிக்கான அடைவு எங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும்? யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கடந்த வாரம் பொலிஸாரினால் மிலேச்சத்தனமாகப் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். இது, தமிழ் மக்களைப் பெரும் கவலைக்கும் அதிர்வுக்கும் உள்ளாக்கியிருக்கின்றது. பெரும் படுகொலைக் களங்களைத் தொடர்ச்சியாகச் சந்தித்து வந்திருக்கின்ற மக்கள் என்கிற ரீதியில், ஒவ்வொரு உயிரையும் தக்க வைப்பதற்கான தமிழ் மக்களின் போராட்டம் மிகப் பெரியது. அப்படிப்பட்ட நிலையில்தான், பொலிஸாரின் அதிகார அத்துமீறலின் நிமித்தம் இரண்டு உயிர்கள் பலிவாங்கப்பட்டிருக்கின்றன. மிகவும் உணர்ச்சிகரமான நாட்கள் இவை! மிக உச்சமானதும் உன்னதமானதும் சந்தர்ப்பங்களில்கூட, எந்தவொரு காரணத்துக்காகவும் எதிர்க…
-
- 0 replies
- 214 views
-
-
-
- 0 replies
- 684 views
-
-
‘கிளிநொச்சியை’ சம்பந்தர் மீட்பாரா? - தெய்வீகன் புதிய ஆண்டுக்குள் நுழைந்திருக்கும் தமிழரது அரசியல் இயல்பான சோர்வுடனும் ஒருவித அயர்ச்சியுடனும் காணப்படுகிறது. 2016 ஆம் ஆண்டுக்குள் தீர்வொன்றை பெற்றுத்தரப்போவதாகத் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அவர்கள் கூறிய வார்த்தைகளைக் கடந்த 31 ஆம் திகதிவரை எண்ணிக்கொண்டிருந்த பல புத்திஜீவிகளுக்குப் பலத்த ஏமாற்றம். எல்லாவற்றையும் அரசாங்கத்திடம் இழந்துவிட்டுச் சரணாகதி அரசியல் நடத்திய தமிழ்த் தேசிய கூட்டமைப்பினை நம்பி, இனி ஏதாவது நடைபெறுவதற்கு சாத்தியம் உள்ளதா என்று இன்னும் பலருக்கு விரக்தி. அரசாங்கத்தைக் கூட்…
-
- 0 replies
- 592 views
-
-
இரட்டை நிலைப்பாட்டில் தடுமாறும் அரசாங்கம் இலங்கை தேயிலைக்குப் பெயர் பெற்ற நாடாகும். உலகில் எந்தவொரு நாட்டிலும் தேயிலையைப் பற்றி குறிப்பிட்டால், உடனடியாக நினைவில் இலங்கை என்ற சின்னஞ்சிறிய நாடே மனதில் நிழலாடும். சிலோன் என்று ஆரம்ப காலத்தில் அழைக்கப்பட்டு சிறிலங்கா என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள இலங்கை தேயிலையின் மறுபெயராகவே உலக நாடுகள் பலவற்றினாலும் கருதப்பட்டு வந்தது. ஆனால் அந்த நிலைமைகள் இப்போது இல்லை. ஆங்கிலேயரின் நாடாகிய பிரித்தானியாவில் இன்னும் இலங்கைத் தேயிலைக்கு இருந்த மரியாதையும் கௌவரமும் இருப்பதாகக் கருதப்படுகின்ற போதிலும், உலக அரங்கில் மனித உரிமைகளை மீறிய ஒரு நாடாகவே இப்போது இலங்கை உ…
-
- 0 replies
- 348 views
-
-
யாரந்த நபர்? வடக்கு மாகாணசபைக்கான முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் நிலவும் புதிர் - யதீந்திரா எங்கும் வடக்கு மாகாணசபை தொடர்பான ஆரவாரங்களையே காண முடிகிறது. இன்றைய அர்த்தத்தில், இலங்கையின் அரசியல் அரங்கானது வடக்கு தொடர்பான வாதப் பிரதிவாதங்களாலேயே நிரம்பிக் கிடக்கின்றது. வடக்கு தேர்தல் தொடர்பான செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து, தெற்கில் அது தொடர்பில் பல்வேறு வகையான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்று வருகின்றன. இவ்வகையான வாதங்களை மூன்று வகையில் காணலாம். ஒன்று, மாகாணசபை முறைமையை இல்லாதொழிக்க வேண்டும். இவ்வகையான அபிப்பிராயங்கள் அதிகமாக தெற்கின் கடும்போக்குவாதிகள் மத்தியிலேயே காணப்படுகிறது. இரண்டு, வடக்கு தேர்தலுக்கு முன்னர் 13வது திருத்தச் சட்டத்தின் கீழுள்ள காணி மற்றும் பொலிஸ் அதிக…
-
- 0 replies
- 548 views
-
-
-
- 0 replies
- 830 views
-
-
பொசன் நாடகம்? நிலாந்தன்! June 27, 2021 கடந்த 12 ஆண்டுகாலத் தமிழ் அரசியலின் இயலாமையை வெளிக்காட்டும் குறிகாட்டிகளில் ஒன்று தமிழ் அரசியல் கைதிகளின் விவகாரம். கடந்த 12 ஆண்டுகளாக தமிழ் மக்கள் வினைத்திறன் மிக்க விதத்தில் போராடவில்லை என்பதற்கு அது ஒரு குறிகாட்டி. கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக தமிழ் அரசியல் தலைமைகள் பொருத்தமான வெற்றிகள் எதனையும் பெறத் தவறி விட்டார்கள் என்பதற்கு அது ஒரு குறிகாட்டி. தமிழ்க் கட்சிகளில் துருத்திக்கொண்டு தெரியும் பலரும் சட்டத்துறை ஒழுக்கத்தை சேர்ந்தவர்கள். ஆனால் கடந்த 12 ஆண்டுகளில் அரசியல் கைதிகளுக்காக போராடுவதற்கென்று சட்ட உதவிக் கட்டமைப்பு எதையும் இன்று வரையிலும் எந்த ஒரு அரசியல் கட்சியும் உருவாக்கியிருக்கவில்லை. மனித உரி…
-
- 0 replies
- 503 views
-
-
யுத்தத்தை அழித்த மஹிந்தவுக்கு அரசியலால் தமிழர்களை வெற்றி கொள்ள முடியவில்லை - -அ.நிக்ஸன்- 23 செப்டம்பர் 2013 "மதுவுக்கும் பணத்திற்கும் வாக்குகளை விற்பணை செய்வது மற்றும் நிவாரண அரசிலுக்கும் பழக்கப்பட்டவர்கள் அல்ல தமிழர்கள்" தமிழ் மக்கள் தமிழ் ஈழம் கேட்கிறார்களா கேட்கவில்லையா என்பதற்கு அப்பால் சுயமரியாதைய இழக்க அவர்கள் விரும்பவில்லை. விடுதலைப் புலிகள் தமிழ் ஈழம் கேட்டு போராடினார்கள். பெரும்பான்மைத் தமிழ் மக்கள் அதற்கு ஆதரவு வழங்கினர். பேரிணவாதத்துக்கு அடிப்பதற்கு புலிகள்தான் சரி என்ற முடிவு தமிழர்களிடம் இருந்தது. ஆனால் சர்வதேசம் புலிகளை பயங்கரவாதிகள் என்று கூறி அவர்களை அழிப்பதற்கு மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கு உதவியளித்தனர். இந்தியா அதற்கான நகர்வு…
-
- 0 replies
- 935 views
-
-
அமெரிக்க போர்க்கப்பல்களின் படையெடுப்பு இலங்கையும் அணுஆயுத தாக்குதலுக்கு இலக்காகும் ஆபத்து இருப்பதாக, கடந்தவாரம் கொழும்பில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் முன்னாள் அமைச்சர் திஸ்ஸ விதாரண, எச்சரிக்கை ஒன்றை விடுத்திருந்தார். அணுவாயுத நாடான வடகொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில், எந்த நேரத்திலும் போர் வெடிக்கக் கூடிய பதற்றமான சூழல் நிலவுகின்ற நிலையில் தான், அவர் இந்த எச்சரிக்கையை விடுத்தார். இலங்கையை அமெரிக்கப் படைகள் ஒரு தற்காலிக தளமாகப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளதாலேயே இவ்வாறான எச்சரிக்கையை திஸ்ஸ விதாரண விடுக்க நேரிட்டது. அமெரிக்க கடற்படையின் நிமிட்ஸ் விமானந்தாங்கி தாக்கு…
-
- 0 replies
- 628 views
-
-
மாயாஜாலம் ஒரு மாயாஜாலம் போலவே, உள்ளுராட்சிமன்றத் தேர்தலின் புதிய முறைமை, இன்னும் பலருக்குத் தெரிந்து கொண்டிருக்கிறது. ஒரு சபையில், அதிக வட்டாரங்களை வென்ற கட்சிக்கும் அதே சபையில் ஒரு வட்டாரத்தை மட்டும் வெற்றிகொண்ட கட்சிக்கும், இறுதியில் ஒரே தொகை உறுப்பினர்கள் கிடைத்திருக்கின்றனர். கிட்டத்தட்ட முக்கால்வாசி வட்டாரங்களில் வெற்றிபெற்ற கட்சிக்கு, அந்த சபையில் ஆட்சியமைக்க முடியாத நிலைவரம் ஏற்பட்டுள்ளது. அதிக வட்டாரங்களை வெற்றிகொண்ட கட்சிக்காரர்கள், அந்த வெற்றியைக் கொண்டாட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றார்கள். நடைபெற்று முடிந்த தேர்தலானது, தேசிய ரீதியாக அரசியலைப் புரட்டிப் போட்டிருக்கிறது. அரசாங்…
-
- 0 replies
- 298 views
-
-
அணிசேரா இயக்கம் புதிய திசையை நோக்கி பயணிக்குமா? உலக வல்லரசுகளான ஐக்கிய அமெரிக்காவும் சோவியத் ரஷ்யாவும் அரசியல், இராணுவ, பொருளாதார, விஞ்ஞான துறைகளில் ஜாம்பவான்களாக விளங்கிய காலகட்டத்தில் அபிவிருத்தியடைந்துவரும் மூன்றாம் உலக நாடுகள் குறிப்பாக ஆசிய, ஆபிரிக்க, இலத்தீன் அமெரிக்க நாடுகள் வல்லரசுகளின் ஆதிக்கத்தினால் ஏற்பட்ட பாதக நிலைமைகளைக் கருத்திற்கொண்டன. நேரடியாக இரு வல்லரசுகளின் நிகழ்ச்சி நிரலுடன் இணையாமல் மூன்றாவது அணியாக சர்வதேச மேடைகளில் பல நாடுகளினைக் கொண்ட ஒரு அணி உருவாக வேண்டுமென்ற வேட்கையில் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, இந்தோனேசிய ஜனாதிபதி சுகர்ணோ, எகிப்திய ஜன…
-
- 0 replies
- 4.6k views
-
-
ஐ.தே.க மறுசீரமைப்பு தேர்தல் வெற்றிக்கு உதவாது அரசாங்கமும் ஆளும் கட்சியிலுள்ள இரண்டு பங்காளிக் கட்சிகளும், கடந்த சில வாரங்களாகக் குறிப்பாக, உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடைபெற்ற பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி முதல், நாட்டு மக்களை முற்றாக மறந்து விட்டன போலும். அவற்றுக்குள்ளே தோன்றியுள்ள பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளவே, அவற்றுக்கு நேரம் போதாது போல்தான் தெரிகிறது. அவ்வாறு இருக்க, அரசாங்கத்தினதும் அவ்விரண்டு கட்சிகளினதும் தலைவர்கள், எவ்வாறு மக்களைப் பற்றிச் சிந்திக்கப் போகிறார்கள்? நீண்ட காலமாக, அரசாங்கத்துக்குள் நிலவி வந்த முரண்பாடுகள், உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை அடுத்து, மோதலாக மாறி, பிளவாகவும் மாறி வருகிறது. அரசாங்கத்திலிருந்த ஜ…
-
- 0 replies
- 292 views
-
-
நிலைமாறுகால நீதி கிடைக்குமா? பி.மாணிக்கவாசகம்… நிலைமாறுகால நீதிப் பொறிமுறைகளில் ஒன்றாகிய காணாமல் போனோர் அலுவலகத்தைச் செயற்படுத்துவதில் சிக்கல்கள் எழுந்திருக்கின்றன. அந்த அலுவலகத்தின் மீது தமக்கு நம்பிக்கை இல்லை என தெரிவித்து, சர்வதேச விசாரணையே தேவை என கோரி, அதற்கு எதிராக, காணாமல் போயுள்ளவர்களின் உறவினர்கள் யாழ்ப்பாணம் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கின்றார்கள். இந்த மாவட்டங்களில் காணாமல் போனோருடைய உறவினர்களுடன் நடத்திய அமர்வின்போதே, காணாமல் போனோர் அலுவலக அதிகாரிகள் எதிர்ப்புகளுக்கு முகம் கொடுக்க நேர்ந்திருக்கின்றது. . யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்திலும், கிளிநொச்சி பல…
-
- 0 replies
- 598 views
-
-
இந்திய அமைதிப்படையை நியாயப்படுத்தும் ஜெயமோகனிற்கு இலக்கிய தேட்ட விருது!!! ஒரு படைப்பு என்பது எப்பொழுதும் மக்களிற்கானது. மக்கள் பக்கம் இருந்து எழுதும் படைப்பாளியின் எழுத்துகள் மக்கள் விரோத கருத்துக்களை அம்பலப்படுத்தும். பொய்களை தோலுரிக்கும். நிலப்பிரபுத்துவம், முதலாளித்துவம், கத்தோலிக்க திருச்சபை என்பவற்றை எதிர்த்துப் போரிட்டன மாக்சிம் கோர்க்கியின் எழுத்துக்கள். அதனால் தான் அவரின் "தாய்" இன்றைக்கும் இலட்சக்கணக்கானவர்களால் வாசிக்கப்படுகிறது. "தாயை" படிப்பவர்களின் மனதில் புரட்சித்தீயை அவரின் கருத்துகள் ஏற்றி விடுகின்றன. "வால்காவில் இருந்து கங்கை வரை" என்று இராகுல சங்கிருத்தியன் எழுதியவைகள் புராணப்பொய்களை சின்னாபின்னமாக உடைத்து மக்கள் வரலாற்றை உண்மையின் வெளிச்…
-
- 0 replies
- 939 views
-
-
இந்திய இலங்கை வர்த்தக உறவைச் சீர்ப்படுத்தும் முயற்சி -வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை மீட்கும்போது, தமிழர்களின் அரசியல் விடுதலை குறித்த விவகாரம் இலங்கை ஒற்றையாட்சிக் கட்டமைப்புக்குள் அடங்கிவிட வேண்டும் என்ற ஏற்பாடுகளுடன், ரணில் தனது உத்தியை வகுக்கிறார். இந்த உத்தி ஏனைய சிங்கள ஆட்சியாளர்களுக்கும் பொருந்தும். இந்தியக் கொள்கை வாகுப்பாளர்களுக்கும் ஏற்புடையது- அ.நிக்ஸன்- பொருளாதார நெருக்கடிச் சூழலில் சர்வதேச நாயணய நிதியம் வழங்கிய நிதி போதாது. அத்துடன் அடுத்த கட்ட நிதி தற்போதைக்குக் க…
-
- 0 replies
- 283 views
-