அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9226 topics in this forum
-
வட்டுவாகல் பகுதியில் சிறிலங்கா கடற்படையினரால் நிரந்தரமாகக் கையகப்படுத்தப்படத் திட்டமிடப்பட்ட நிலப்பகுதியை அளவீடு செய்து அவற்றின் எல்லைகளைக் குறிப்பதற்காகச் சென்ற முல்லைத்தீவு மாவட்ட நிலஅளவைத் திணைக்கள அதிகாரிகள் கடந்த வாரம், கிராம மக்களால் திருப்பி அனுப்பப்பட்டனர். நில அளவையை மேற்கொண்டு எல்லைகளைக் குறிப்பதன் மூலம் சிறிலங்கா கடற்படையினர் 617 ஏக்கர் நிலப்பகுதியையும் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான இறுதி முயற்சியில் வெற்றி பெற்றிருப்பார்கள். இதில் அரைவாசி நிலப்பகுதி பொதுமக்களுக்குச் சொந்தமானதாகும். இதனால் தமது சொந்த நிலங்களை சிறிலங்காக் கடற்படையினர் தமது முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கான இறுதிமுயற்சியாக நிலஅளவைத் திணைக்கள அதிகாரிகள் அழைக்கப்…
-
- 0 replies
- 375 views
-
-
புத்த சிலைகள் நல்லிணக்கத்தின் குறியீடுகள் அல்ல! யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சில வாரங்களுக்கு முன்னர் மாணவர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தை அடுத்து பலதரப்புகளுக்குள் இருந்து ஒருவகையான கிளர்ச்சி மனநிலையோடு கூடிய கருத்துக்கள் வெளிப்பட்டன. கருத்துச் சொல்வதற்கும் போதனை செய்வதற்கும் மனித மனங்களில் அநேகமாவை பெரும் ஆர்வத்தோடு காத்திருக்கின்றன. அப்படியானதொரு வாய்ப்பினைப் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மோதல் சம்பவமும் ஏற்படுத்திக் கொடுத்தது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மோதல் சம்பவத்தின் தோற்றுவாய் என்ன? அதன் போக்கு எப்படிப்பட்டது? அதனை எவ்வாறு கையாள வேண்டும்? என்கிற எண்ணப்பாடுகள் மற்றும் போதிய அறிவு இன்றி பலரும் கருத்துச் சொல்ல ஆரம்பித்…
-
- 0 replies
- 413 views
-
-
என்ன செய்யப் போகிறார் மைத்திரி? ஜனசட்டன என்ற பெயரில் பாதயாத்திரை மற்றும் கூட்டம் என்று, அரசாங்கத்துக்கு எதிரான, பெரியளவிலான போராட்டம் ஒன்றை நடத்தியிருக்கிறார் மஹிந்த ராஜபக்ஷ. மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிரணியினர் நடத்தியிருக்கும், இந்த அரசியல் நடவடிக்கை குறித்து அரசாங்கத்தின் தரப்பில் இருந்து வெளியிடப்படும் கருத்துக்களில் தாம் எதற்கும் அஞ்சவில்லை என்பது போன்ற தொனியை அவதானிக்க முடிகிறது. என்னதான் கொக்கரித்தாலும், 2020 ஆம் ஆண்டு வரை அரசாங்கத்தை அசைக்க முடியாது என்று அமைச்சர்கள் பலரும் கூறி வருகின்றனர். கால்கடுக்க நடந்தாலும் சரி, வாய்கிழியக் கத்தினாலும் சரி, நாம் ஒன்றும் எமது பயணத்தை நிறுத்திவிடப் போவதி…
-
- 0 replies
- 824 views
-
-
அரசியல் கைதிகளின் விடுதலையில் மனிதாபிமானம் காட்டப்படுமா? நிருபா குணசேகரலிங்கம்:- அரசியல் கைதிகளின் விடுதலை இன்று வரையில் நடைபெறவில்லை. அவர்கள் தொடர்பில் அரசாங்கம் மனிதாபிமானத்தினை வெளிப்படுத்தவில்லை. சிறைகளுக்கு உள்ளிருந்து விடுதலைக்காக ஏங்கும் அரசியல் கைதிகள் விடயத்தில் சிறைகளுக்கு வெளியே காணப்படவேண்டிய காத்திரமான அழுத்தங்களுக்கும் பற்றாக்குறையே நிலவுகின்றன. அரசியல் கைதிகளின் விடுதலைக்கான கோரிக்கைகளும் போராட்டங்களும் பல காலமாக நடைபெற்றே வருகின்றன. சிறைகளுக்கு உள்ளிருந்து அரசியல் கைதிகள் தமது விடுதலைக்காக தம்மை வருத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எனினும் அவர்களுக்கு நியா…
-
- 0 replies
- 528 views
-
-
வல்லரசுகள் தமது நலன்களை பேணும் போக்கில் கவனம் கொண்டுள்ளன. அரசியல்வாதிகள் தமது பதவிகளை பேணுவதில் கவனம் கொண்டுள்ளனர். மக்களும் தமது நலன்களின் அடிப்படையிலேயே வாழ விரும்புவர். இந்நிலையில் கடந்த காலங்களில் வாழ்ந்த தியாகம் மற்றும் தன்னலமற்ற போராட்டம் என்பன இப்பொழுது தமிழ் மக்கள் மத்தியில் வெறும் பேச்சுப்பொருளாக மாறும் அபாயமே உள்ளது . கடந்த இரு கட்டுரைகளில் பாகிஸ்தானும் மியான்மரும் சீன தலையீட்டையும் மேலைத்தேய அழுத்தத்தையும் கையாழும் தன்மைகள் குறித்து ஆராயப்பட்டது. இந்த வரிசையிலே சிறிலங்கா குறித்த ஆய்வு இங்கே தரப்படுகிறது — புதினப்பலகைக்காகலோகன் பரமசாமி* அமெரிக்க தலைமையிலான தாராள பொருளாதார கொள்கை போக்கை கொண்ட மேற்கு நாடுகளும் யப்பானும் இணைந்து,யப்பானில் இடம் பெற்ற ஏழு …
-
- 0 replies
- 377 views
-
-
தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் கெட்டவர் என கூறிக்கொண்டிருக்கும் பலர் அவரிடம் சென்று நன்மை பெற்றவர்களே. நான் சிறீசபாரத்தினம், சிவகுமாரன் ஆகியோருடன் படித்தவள். அந்த காலத்தில் தரப்படுத்தல் என்ற மோசமான ஒன்று வந்தமையினாலேயே இந்த போராட்டம் தொடங்கியது என நல்லிணக்க செயன்முறைகளுக்கான செயலணியிடம் ஓய்வு பெற்ற நீதிமன்ற ஆவண காப்பாளர் ஒருவர் கருத்து கூறியிருக்கின்றார். மேற்படி செயலணியின் மக்கள் கருத்தறியும் கூட்டம் நேற்றய தினம் காலை யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்றிருந்தது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், தரப்படுத்தல் என்ற விடயம் ஒரு இரவில் வந்தமையினாலேயே இளைஞர்கள் ஆயுதங்களை தாங்கி போராடவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்ட…
-
- 3 replies
- 724 views
-
-
மஹிந்த்தவின் காவடியாட்டம் மஹிந்த ராஜபக் ஷவின் ஆதரவு அணியான அரசாங்கத்துக்கு எதிராக செயற்படும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினால் கண்டியிலிருந்து கொழும்பை நோக்கி மேற்கொள்ளப்பட்ட பாதயாத்திரை ஒருவாறு முடிவடைந்து விட்டது. பொது எதிரணியைப் பொறுத்தவரை இந்த பாதயாத்திரை மாபெரும் வெற்றி என்று கூறிக் கொண்டிருப்பதுடன். ஆளும் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பிவைக்கும் சுபநேரம் ஆரம்பமாகி விட்டது எனவும் அந்த அணியினர் சூளுரைத்துக் கொண்டிருக்கிறார்கள். மறுபுறம் கால்வீக்கம் ஏற்படும் வரை பாதயாத்திரை செய்வதனால், எந்தப்பயனும் ஏற்படப் போவதில்லை. இனவாதத்தை பொங்கியெழ மீளவும் மேற்கொள்ளப்படும் முயற்சி என ஜனாதிபதி உட்பட, அரசாங்கத்தைச் சேர்ந்த உயர்மட்டத் தலைவர்கள் கூறிக் கொண்டிருக்கிறா…
-
- 0 replies
- 667 views
-
-
-
- 0 replies
- 382 views
-
-
இலங்கை ஊடாக இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்போகிறதா சீனா? நாட்டின் பொருளாதாரம் பாரிய நெருக்கடிக்குள் சிக்கியுள்ளதாக வலியுறுத்தப்பட்டுவருகின்ற நிலையில் அரசாங்கமும் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் நோக்கில் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முயற்சிக்கின்றது. குறிப்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உலக நாடுகளுக்கு விஜயம் செய்து நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் நோக்கில் பல முயற்சிகளை முன்னெடுத்துவருகின்றார். குறிப்பாக சர்வதேச நாடுகளுடன் பொருளாதார உடன்படிக்கைகளை உருவாக்கிக்கொள்வது குறித்து அரசாங்கம் பாரிய கவனம் செலுத்திவருகின்…
-
- 0 replies
- 616 views
-
-
EDITTED எழுத்தாளர் ஜெயமோகனுக்கு எனது 2வது விண்ணப்பம் வ.ஐ.ச.ஜெயபாலன் ---------------------------------- எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் பின்வரும் தர்க்கங்களை முன் வைக்கிறார். இது இலங்கை அரசுக்கு சார்பு நிலையா இலங்கை அரசின் மீதான விமர்சனமா அல்லது இலங்கை அரசுக்கு எதிர் நிலையா என்கிற கேழ்விக்கு உங்கள் பதில் என்ன? இனி எழுத்தாளர் ஜெயமோகன் சொல்வதை வாசியுங்கள். ``முதலில், இலங்கையில் நடந்தது இனப்படுகொலை கிடையாது என்பது என் பார்வை. எந்த ஓர் அரசும் தனக்கு எதிராக சில குழுக்கள் போரில் ஈடுபடும்போது அதை ஒரு போராகத்தான் பார்க்குமே தவிர, சிவில் சொசைட்டியின் எதிர்ப்பாகப் பார்க்காது.,,,,,,,,,,,,,, ஆயிரக்கணக்கான இளைஞர்களைக் கொன்றுதானே இந்தியாவில் நக்சலைட் போராட்டத…
-
- 0 replies
- 573 views
-
-
வரலாற்றின் அத்தனை திடீர் திருப்பங்களையும், அத்தனை எழுச்சிகளையும், வீழ்ச்சிகைளையும் தீர்மானிப்பவைகளாக உரைகளே விளங்கி இருக்கின்றன. இன்னும் விளங்கி வந்து கொண்டிருக்கின்றன. தமிழீழதேசியமும் எழுச்சி பெறவும் அது தொடர்ந்து அத்தனை நெருக்கடிக்குள்ளாகவும் நின்று போராட தேவையான தெளிவை தருபவையாகவும் இரண்டு உரைகளை வரலாற்றில் குறித்து கொள்ளலாம். இலங்கை ஒரு ஒற்றைநாடு என்ற கனவு தமிழர்களுக்கு முழுமையாக கலைந்த அந்த ஜூலை நாட்களில் சிங்கள தேச அதிபர் ஆற்றிய அந்த உரை ஒரு முக்கியமானது. அதனை போலவே உலகின் நான்காவது பெரும் படையை கொண்ட இந்தியா அமைதி படை என்ற பெயரில் வந்து இறங்கி எமது தேசிய விடுதலை போராட்டத்தை நசுக்கி எறிய முனைந்த நாட்களில் எமது மக்களுக்கு, எம…
-
- 0 replies
- 374 views
-
-
ஹிலாரி வீசிய தூண்டிலில் மாட்டிய ட்ரம்ப் கனகலிங்கம் கோபிகிருஷ்ணா அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலின் முக்கியமான கட்டம் வந்திருக்கிறது. பிரதான இரு கட்சிகளினதும் தேசிய மாநாடுகள் இடம்பெற்று, தங்கள் கட்சிகளின் சார்பில் முன்னிலை வகித்த வேட்பாளர்கள், உத்தியோகபூர்வ வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள். இதன்மூலமாக, அரசியல் கேலிக்கூத்தானது, முடிவுக்கு வந்திருப்பதாக ஒரு தரப்பினரும், இனிமேல் தான் உண்மையான கேலிக்கூத்து ஆரம்பிக்கவுள்ளதாக மற்றைய தரப்பினரும் தெரிவிக்கின்றனர். அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலும் அதன் முடிவுகளும், அமெரிக்காவை மாத்திரமல்லாது, லிபியாவுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவை இலக்குவைத்த தாக்குதல்களை அமெரிக்கா ஆரம்பித்திருக்கும் நிலையில், ஒட்டுமொத்த…
-
- 0 replies
- 506 views
-
-
`` `ஈழத்தில் நிகழ்ந்த இனப்படுகொலைக்குப் பின்னால் இந்திய அரசின் கரங்கள் இருந்தன’ என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இந்தியத் தேசியத்தை ஆதரிப்பவர் என்ற முறையில் இதுகுறித்த உங்கள் கருத்து என்ன? உங்களது ‘உலோகம்’ நாவல், இந்திய அமைதிப்படை குறித்த கட்டுரை ஆகியவை தொடர்ச்சியாக ஈழவிடுதலைக் குரல்களுக்கு எதிராக இருக்கின்றனவே?’’ ``முதலில், இலங்கையில் நடந்தது இனப்படுகொலை கிடையாது என்பது என் பார்வை. எந்த ஓர் அரசும் தனக்கு எதிராக சில குழுக்கள் போரில் ஈடுபடும்போது அதை ஒரு போராகத்தான் பார்க்குமே தவிர, சிவில் சொசைட்டியின் எதிர்ப்பாகப் பார்க்காது. 1960, 70-களில் புரட்சிகரக் கருத்தியல் காலகட்டம் உருவானபோது, உலகம் முழுக்க அரசுக்கு எதிரான பல புரட்சிகள் நடந்தன. காங்கோ, பொலிவியா, இந்தோன…
-
- 21 replies
- 3.9k views
-
-
சிறிலங்கா மீதான சீனாவின் செல்வாக்கு அதிகரித்துள்ள நிலையில், தற்போது ஜப்பானும் சிறிலங்கா மீதான தனது கவனத்தை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இலங்கைத் தீவின் கரையோர பாதுகாப்புச் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு ஜப்பான் சாதகமான பங்களிப்பை வழங்கி வருவதன் மூலம் சிறிலங்கா மீதான தனது செல்வாக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கரையோரப் பாதுகாப்புத் திறன் மேம்பாட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக கடந்த யூன் மாதம் 1.8 பில்லியன் யென்னை சிறிலங்கா அரசாங்கத்திடம் ஜப்பான் வழங்கியது. சிறிலங்காவின் கரையோரப் பாதுகாப்புப் படையின் திறனை மேலும் மேம்படுத்தும் நோக்குடனேயே இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கப்பல்கள் பாதுகாப்பான போக்குவரத்தை மேற்கொள்வதை உறுதிப்படுத்துதல், கடற்கொள்ளையர…
-
- 0 replies
- 419 views
-
-
கிழட்டுச் சிங்கத்தின் ஈனமான கர்ஜனை! சிங்கக் கூட்டத்திலிருந்து விரட்டப்பட்ட கிழட்டு ஆண் சிங்கமொன்றை முன்னிறுத்திக் கொண்டு, சிறுநரிகளும் ஓநாய்களும், புதிய பயணமொன்றை மேற்கொள்ள முயல்கின்றன. அந்தக் கிழட்டுச் சிங்கத்தின் தொடைகளும் தாடைகளும், பெரும் வேட்டையை நடத்தும் வலுவை இழந்துவிட்டன. இப்போது, அதனால் மான்களின் வேகத்துக்கு ஓட முடியாது. ஏதாவது, மீந்துபோன இரைகள் கிடைக்குமா என்று காத்திருக்க வேண்டும். நிலைமை அப்படியிருக்க, கிழட்டுச் சிங்கம் பெரும் வேட்டையை நடத்தும், அதனூடு தாங்களும் வயிற்றை நிறைத்துக் கொள்ளலாம் என்று சிறுநரிகளும் ஓநாய்களும் கனவு காண்கின்றன. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிரணி, கண்டியிலிருந்து கொழும்பு வ…
-
- 0 replies
- 561 views
-
-
தமது எதிர்காலப் போர்களுக்காக, அமெரிக்காவுக்கு வெளியே, நடக்கும் போர்கள் மற்றும் இராணுவ விவகாரங்களை ஆராய்வதற்காக, வெஸ்ற் பொயின்ற் அதிகாரிகள் உலகம் முழுவதிலும் முன்னர் பயணங்களை மேற்கொண்டு வந்தனர். 1919ல் முடிவுற்ற முதலாம் உலக மகா யுத்தத்தில் பங்குகொண்டு அதிலிருந்து தப்பிய இராணுவ வீரர்கள் பகிர்ந்து கொண்ட அனுபவங்கள் தற்போதும் முன்னணிப் போர் அரங்குகளில் பயிற்றுவிக்கப்படும் முக்கிய இராணுவப் பாடங்களாக உள்ளன. 1875ல், உள்நாட்டு யுத்த வீரர்களுக்கான அமையத்தை அமெரிக்க இராணுவத் தளபதியான ஜெனரல் வில்லியம் ரி.செர்மன் தனது கட்டளைத் தளபதி பதவி நிலையிலிருந்தவாறு மீளவும் வடிவமைத்தார். இவர் யப்பான், சீனா, இந்தியா, பேர்சியா, ரஸ்யா, இத்தாலி, ஜெர்மனி, ஒஸ்ரியா, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்…
-
- 0 replies
- 769 views
-
-
முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மகிந்த ராஜபக்ஸ மற்றும் கூட்டு எதிர்க்கட்சியினால் முன்னெடுக்கப்பட்ட பாதயாத்திரை தற்போது இடம் பெற்று வருகின்றது. இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டமானது கண்டியில் கடந்த 28 ஆம் திகதி ஆரம்பமாகியது. ஐந்து நாட்களாக திட்டமிடப்பட்டிருந்த இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஆகஸ்ட் முதலாம் திகதியுடன் கொழும்பில் நிறைவடைய உள்ளது. சிங்களம் மற்றும் தமிழ் சமுதாயங்கள் கண்டியில் இருந்து கொழும்பு நோக்கிய ஆர்ப்பாட்டம் என்றவுடன் ஒரு விடயம் நினைவுக்கு வருகின்றது. இதே போன்றதொரு பேரணி கடந்த 60 வருடங்களுக்கு முன் இடம் பெற்றது என்பது உங்களில் யாருக்காவது தெரியுமா? ஆம், இவ்வாறான எதிர்ப்பு…
-
- 0 replies
- 477 views
-
-
5 வருட முயற்சி பலிக்குமா? அன்று காலை நாடு ஒருபரபரப்பான சூழலில் காணப்பட்டது. முழு நாடும் புதிய பிரதமர் பதவியேற்பதையும் புதிய அமைச்சரவை பதவியேற்பதையும் தொலைக்காட்சியூடாக பார்ப்பதற்கு தயாராகிக் கொண்டிருந்தது. 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஆட்சியமைக்கக்கூடிய பெரும்பான்மை பலத்தை பெறாவிடினும் கூடிய ஆசனங்களான 106 எம்.பி.க்களை பெற்று ஐக்கிய தேசியக் கட்சி வெற்றியீட்டிருந்தது. எனவே, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆட்சியமைப்பார் என்றும் பிரதமராக பதவியேற்பார் என்றும் ஐக்கிய தேசிய கட்சியின் புதிய அமைச்சரவை பதவியேற்கும் என்றும் முழு நாடும் ஏன் சர்…
-
- 0 replies
- 358 views
-
-
ஐ. நா மனித உரிமை சபையும் ஈழ தமிழரும் ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமை சபையின் 32 ஆவது கூட்டத் தொடர் நடந்து முடிந்துள்ள நிலையில், இம் மனித உரிமை சபையில் நேர்மையாக விசுவாசமாக திடகாத்திரமாக தமிழ் மக்களுக்கான நீதிக்கு, அரசியல் உரிமைகளுக்கும் எதிர்காலத்தில் என்ன செய்யமுடியும், என்ன செய்யலாம் என்பது மிகவும் முக்கியம். நாம் கடந்த இரண்டரை தசாப்தங்களாக ஐ.நா.மனித உரிமை செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவது மட்டுமல்லாது, இதனால் ஏற்படும் நன்மை தீமைகளின் பங்காளிகளாகவும், பகைவர்களாகவும் திகழ்ந்து வருகின்றோம். நாம் 1990 ஆம் ஆண்டு இச் செயற்பாடுகளில் ஆரம்பத்திலிருந்து, அன்றும் இன்றும் என்றும் மாறுபட்ட அரசுகள் எம்மை ஓர் பக…
-
- 0 replies
- 393 views
-
-
ஆஸ்திரிய அரசியல் அமைப்பு ஈழத்தமிழர் பிரச்சினைக்கு தீர்வாகுமா? இனப்பகைமை அற்ற ஆஸ்திரியாவில் உருவான அதிகாரமற்ற சமஷ்டி முறையை இனப்பகைமை கொண்ட இலங்கையின் அரசியலுக்கு தீர்வாக்க முடியாது. ஆஸ்திரியாவில் காணப்படும் சமஷ்டிமுறை ஆட்சித் தீர்வை இலங்கையின் இனப்பிரச்சினைகக்கு தீர்வாக பரிசீலிக்கலாம் என்று தமிழ்த் தரப்பில் உள்ள சில அரசியல்வாதிகளால் பேசப்படுகிறது. இத்தகைய ஆஸ்திரிய சமஷ்டிமுறையின் மீது தற்போது பதவியில் இருக்கும் அரசாங்கம் கவனம் செலுத்துவதாகவும் அவ்வாறான ஒரு தீர்வைக்காண அது தமிழ்த் தலைவர்களுடன் உள்ளூர உரையாடி வருவதாகவும் பேசப்படுகிறது. இந்நிலையில் ஆஸ்திரிய அரசியல் யாப்பைப் பற்றிய புரிதல…
-
- 0 replies
- 576 views
-
-
மஹிந்தவின் மறு எழுச்சியா? 'ஜன சட்டன’ என்ற பெயரில், கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி நேற்றுத் தொடங்கப்பட்டுள்ள கூட்டு எதிரணியின் பாதயாத்திரைக்கு ஊடகங்கள் அதிகளவு முக்கியத்துவத்தைக் கொடுத்திருக்கின்றன. அரசியல் வட்டாரங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் பாதயாத்திரையின் விளைவுகள் எத்தகையதாக இருக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகமாகவே காணப்படுகிறது. ஏனென்றால், மஹிந்த ராஜபக்ஷ ஆட்சி அதிகாரத்தை இழந்த பின்னர், நடத்துகின்ற மிகப்பெரிய அரசியல் நடவடிக்கையாக இது காணப்படுகிறது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியைப் பறிகொடுத்த பின்னர், அரசியல் ரீதியாகத் தன்னை நிலைப்படுத்திக் கொள்வதற்காக கடுமையாகப…
-
- 0 replies
- 354 views
-
-
பொறுப்புக் கூறலும் அபிவிருத்தி அரசியலும் உரிமை அரசியல் மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படுமா அல்லது அபிவிருத்தி அரசியலின் மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படுமா என்று இப்போது சிந்திக்க வேண்டிய தேவை எழுந்திருக்கின்றது. கடந்த அறுபது வருடங்களுக்கு மேலாக இனப்பிரச்சினை இந்த நாட்டை உலுக்கி எடுத்து வருகின்றது. கூடவே அபிவிருத்தி தொடர்பான பிரச்சினையும் தமிழ் மக்களைப் பல்வேறு வழிகளில் வாட்டிக்கொண்டிருக்கின்றது. இனப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காகவே அகிம்சை ரீதியிலும், ஆயுதமேந்திய வழிகளிலும் போராட்டங்கள் இடம்பெற்றிருந்தன. மென்முறையிலும், வன்முறையிலும் மேற்கொள்ளப்பட்ட தமிழர் தரப்பின் வலிமையான போராட்டங்களினால், அரசுகள் பெரும் நெருக்கடிகள…
-
- 1 reply
- 508 views
-
-
வடக்கு, கிழக்கு இணைப்பில் முஸ்லிம்களின் பங்கு மொஹமட் பாதுஷா இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டம் எவ்வாறான ஒரு பொதியாக இருக்கும் என்பது பிரகடனப்படுத்தப்படவில்லை என்றாலும், முன்னர், தமிழீழம் என்று கற்பனையாக வரையறை செய்யப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களை மையமாகக் கொண்டதாக அது அமைவதற்கான நிகழ்தகவுகளே அதிகமுள்ளன. வடக்கையும் கிழக்கையும் சட்டப்படி இணைப்பது என்றால், அங்கு வாழ்கின்ற சர்வ ஜனங்களின் சம்மதம் இன்றியமையாதது. இதன் பிரகாரம் முஸ்லிம்களின் சம்மதத்தை பெற்றுக் கொள்வதற்கான அன்றேல், வடக்கு, கிழக்கு இணைப்பு தொடர்பில் அவர்கள் என்ன நினைக்கின்றனர் என்பதை நாடிபிடித்துப் பார்ப்பதற்கான பணிகளை தமிழ்த் தேசியம் ஆரம்பித்திருப்பதை காண முடிகின்றது. …
-
- 0 replies
- 350 views
-
-
பிரித்தானியாவின் வட அயர்லாந்து மீதான சட்ட அதிகார எல்லையை முடிவுக்குக் கொண்டுவர முயன்று கொண்டிருந்த சின் பெயின் (Sinn Fein), ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கு ஆதரவாக பிரித்தானிய வாக்களிப்பு முடிவுகள் வெளிவந்ததையடுத்து, ஐக்கிய அயர்லாந்து உருவாக்கத்துக்கு மீண்டும் முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியுள்ளது. இதன் அங்கமாகவே, குறித்த வாக்களிப்பு முடிவு தொடர்பான செய்திகள் வெளிவந்து குறுகிய நேரத்துக்குள்ளேயே, வட அயர்லாந்தின் ஜனநாயக திடசங்கற்பத்தை ஆங்கில வாக்குகள் தடம்புரள வைத்துள்ளன. இது, ஐக்கிய அயர்லாந்தின் தேவையை மீளவும் கோடிட்டு காட்டுகிறது என சின் பையினின் தலைமைத்துவம் தெரியப்படுத்தியுள்ளது. வட அயர்லாந்தின் 56% மக்கள் ஐக்கிய இராச்சியம் ஐரோப்பிய ஒன்றித்திற்குள் தொடர…
-
- 0 replies
- 578 views
-
-
இலங்கையின் தமிழ் அரசனான எல்லாளனின் சமாதியானது அனுராதபுர மாவட்டத்தில் காணப்படுவதாகக் கூறப்படும் தகவலில் உண்மையில்லை என வரலாற்று ஆய்வாளரும் பேராசிரியருமான எஸ்.பத்மநாதன் தெரிவித்தார். ‘எல்லாள மன்னனின் சமாதி இருப்பதற்கான எவ்வித ஆதாரங்களும் இங்கு காணப்படவில்லை. அனுராதபுரத்திற்கு அருகில் எரிந்த நிலையில் காணப்படும் செங்கற்களால் அமைக்கப்பட்ட இடிந்து போன கட்டடம் தான் எல்லாள மன்னனின் சமாதி எனக் கூறப்பட்டாலும் கூட இதில் பொறிக்கப்பட்டுள்ள தமிழ்ப் பிராமி வார்த்தைகளை எவராலும் வாசிக்க முடியவில்லை’ என பேராசிரியர் பத்மநாதன் குறிப்பிட்டுள்ளார். அனுராதபுரத்தில் காணப்படும் அழிவடைந்த கட்டடமானது இந்துக்களின் அல்லது பௌத்தர்களின் ஆலயமாக இருக்கலாம் எனவும் பெரும்பாலும் இது ஒரு பௌத்த ஆலயம…
-
- 0 replies
- 658 views
-