அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9213 topics in this forum
-
இலங்கை தமிழரசு கட்சியின் மேலாதிக்கம் தொடருமா? யதீந்திரா தமிழீழ விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்கு பின்னரான கடந்த எட்டு ஆண்டுகளாக இலங்கை தமிழரசு கட்சியே தமிழ் அரசியலில் மேலாதிக்கம் செலுத்துவருகிறது. இந்த மேலாதிக்கத்தின் மையமாக இருப்பவர் இரா.சம்பந்தன். இந்தக் கட்டுரையை நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கின்ற தருணம் வரையில், சம்பந்தன் என்னும் மனிதர்தான் தமிழரசு கட்சியின் ஒரேயொரு பலமாக இருக்கின்றார். சம்பந்தன் இவ்வாறானதொரு இடத்திற்கு அவரது திறமையின் காரணமாக மட்டும் வரவில்லை. சம்பந்தனின் காலத்தை ஒட்டிய பலர் உயிரோடு இல்லாத ஒரு சூழலில்தான் சம்பந்தன் தமிழ் மக்கள் மத்தியில் வாழ்பவர்களில் முக்கியமானவர் என்னும் தகுதியை பெற்றார். இன்று அவர் இலக…
-
- 0 replies
- 391 views
-
-
வெறும் விழலுக்கு இறைத்த நீர் முல்லைத்தீவு மாவட்டத்தில், புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவில் உள்ள வள்ளிபுனம் கிராமத்தில், தற்காலிக கொட்டிலில், அடிப்படை வசதிகள் அற்ற நிலையில், வறுமையில் வாடிய குடும்பம் ஒன்றுக்கு, சிறிலங்கா பொலிஸார் வீடொன்றைக் கட்டிக் கொடுத்துள்ளனர். அந்த வீட்டைப் பொலிஸ் மா அதிபர், நாடாவை வெட்டித் திறந்து வைத்து, வீட்டின் திறப்பையும் குடும்பத்தினரிடம் கையளித்தார். யாழ்ப்பாணத்தில் படைத்தளபதியின் ஏற்பாட்டில், இரண்டு நிறுவனங்கள் இணைந்து, வறுமைக் கோட்டுக்கு உட்பட்ட ஐம்பது மாணவர்களுக்கு, வருடாந்தம் ஐயாயிரம் ரூபாய் வீதம் ஐந்து ஆண்டுகளுக்குப் புலமைப்பரிசில் வழங்க உள்ளது. படைய…
-
- 0 replies
- 1.1k views
-
-
13உம் இனவாதமும் என்.கே அஷோக்பரன் Twitter: @nkashokbharan ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடனத்தின் மீதான விவாதத்தில் பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஜே.வி.பியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க, அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் அல்லது 13+ இனப்பிரச்சினைக்கு தீர்வாக அமையாது என்று அறுதியிட்டு ஜே.வி.பியின் மிக நீண்டகால நிலைப்பாட்டை மீள வலியுறுத்திக் கருத்துரைத்திருந்தார். 1978ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அரசியலமைப்புச் சட்டமோ அல்லது அதில் கொண்டுவரப்பட்ட திருத்தங்களோ மக்கள் வாக்கெடுப்பின் மூலம் அங்கிகரிக்கப்படவில்லை என்ற அநுர குமார, வடக்கு மற்றும் தெற்கில் உள்ள மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்தும் புதிய அரசியலமைப்பின் மூலமே இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என பாராளுமன்றத்தி…
-
- 0 replies
- 702 views
-
-
தொடரும் அக்கறையற்ற போக்கு பி. மாணிக்கவாசகம் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றச் செயற்பாடுகள் தொடர்பில் பொறுப்புக்கூறுவதற்கான கடப்பாட்டை ஏற்றுள்ள அரசாங்கம் அவற்றை உரிய முறையில் நிறைவேற்றவில்லை என்று பரவலாகக் குறை கூறப்படுகின்றது. சாதாரண குறை கூறுதலாக இல்லாமல், அழுத்தமான குற்றச்சாட்டாகவே அந்த அதிருப்தி முன்வைக்கப்பட்டிருப்பதைக் காண முடிகின்றது. பொறுப்புக்கூறும் விடயத்தில் முக்கியமாக பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்க வேண்டும் என்ற கடப்பாட்டை நிறைவேற்றுகின்ற பொறுப்பை அரசாங்கம் கிடப்பில் போட்டுள்ளது என்பது முக்கியமானது. இந்தச் சட்டத்தை இல்லாமற் செய்வதற்கு அரசாங்கத்திற்கு…
-
- 0 replies
- 453 views
-
-
CMR வானொலியில் இடம்பெற்ற கருத்துக்களத்தில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான திரு.அமீர் அலி அவர்கள் வழங்கிய நேர்காணல்!
-
- 0 replies
- 244 views
-
-
இளையதம்பி தம்பையா முன்னாள் பாலஸ்தீன இயக்கத் தலைவர் யசீர் அரபாத்தின் இறப்பு கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தை அவரது மனைவி உட்பட, அவருக்கு நெருக்கமானவர்கள் எழுப்பி இருந்தபோதும் இன்னும் தீர்வு காணப்படாத புதிராக இருக்கிறது. யசீர் அரபாத் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு அடிபணிந்துவிட்டதாகவும், அவர் பாலஸ்தீன மக்களின் விடுதலை பற்றி அக்கறை கொண்டவரல்லர் என்றும் பரவலாக குற்றஞ்சாட்டப்பட்டது. இக்குற்றச்சாட்டு ஹமாஸ் என்ற மத அடிப்படை வாதத்தை கொண்ட பாலஸ்தீன இயக்கம், மட்டுமன்றி, பாலஸ்தீன மக்கள் விடுதலை முன்னணி என்ற இடதுசாரியத்தை அடிப்படையாகக் கொண்ட இயக்கமும் அவரை ஏகாதிபத்திய கைக்கூலி என்று கூறத்தவறவில்லை. இவ்வாறான குற்றச்சாட்டை இலங்கையில் சில அமைப்புகள் மட்டுமன்றி இந்தியாவின் சில அமைப்புக…
-
- 0 replies
- 232 views
-
-
மாவீரர்களின் தியாகங்களை தமிழர்கள் மறந்து வருகின்றார்களா? – மட்டு.நகரான் November 26, 2024 தமிழர்களின் தாகம் தமிழீழ தாயகம்.தமிழர்களின் உரிமை, தனித்தும், தேசியம் என்பனவற்றினை பெறுவதற்காக கடந்த 75 வருடத்திற்கு மேலாக பல்வேறு வழிகளிலும் போராடிவருகின்றார்கள். தமிழர்கள் இந்த நாட்டில் தனித்துவமாகவும் இந்த நாட்டில் வாழும் பெரும்பான்மையினம் அனுபவிக்கும் அனைத்து உரிமைகளையும் பெற்றுவாழவேண்டும் என்பதற்காகவே பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தது.அதில் ஆயுதப் போராட்டம் பிரதான பங்கினை வகிக்கின்றது. இந்த நாட்டில் தமிழர்கள் சுயகௌர வத்துடன் வாழவேண்டும் என்பதற்காக வாழ வேண்டிய வயதில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் தங்கள் இன்னுயிரை தியாகம் செய் திருக்கின்றார்கள்.தன் இனம் தன்…
-
- 0 replies
- 262 views
-
-
நீராவியடியில் எரிந்த பேரினவாதத் தீ புருஜோத்தமன் தங்கமயில் / 2019 செப்டெம்பர் 25 புதன்கிழமை, பி.ப. 01:00 கொடுக்கில் இனவாத, மதவாத விசத்தைக் கொண்டு அலையும் பொதுபல சேனாவின் ஞானசார தேரர் தலைமையிலான பிக்குகள் குழுவொன்று, திங்கட்கிழமை (23) நீதிமன்றத் தீர்ப்பின் மீது, ஏறி நின்று, நர்த்தனமாடி இருக்கின்றது. நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதற்கு ஒத்துழைக்க வேண்டிய பொலிஸாரோ, அதைப் புறந்தள்ளி, பிக்குகளின் ஆட்டத்துக்குப் பாதுகாப்பு வழங்கி இருக்கின்றனர். முல்லைத்தீவு, செம்மலை, நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தை ஆக்கிரமித்து, அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரை தொடர்பிலான வழக்கு, நீதிமன்றத்தில் இன்னமும் நிலுவையில் இருக்கிறது. அந்த விகாரையின் விகாராதிபதி, அண்மை…
-
- 0 replies
- 935 views
-
-
கோட்டாபய மீண்டும் வெல்ல களத்தில் செய்தவை என்ன? அது இனவாதத்தின் வெற்றியா? அகிலன் கதிர்காமர்அரசியல் பொருளியலாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES (கட்டுரையில் இடம் பெற்றிருப்பது கட்டுரையாளரின் கருத்துகள். இவை பிபிசி தமிழின் கருத்துகள் அல்ல.) இலங்கை அதன் அரசியலைப் பொறுத்தவரை …
-
- 0 replies
- 468 views
- 1 follower
-
-
நாயக நடிகர்கள்: பதவி மோக அரசியலும், பறிபோகும் பாமர மக்கள் உயிர்களும் 29 Sep 2025, 7:47 AM ராஜன் குறை கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற நெகிழவைக்கும், மகிழவைக்கும் நிகழ்ச்சியை தமிழக அரசு சென்ற வாரம் வியாழனன்று நடத்தியது. எளிய, சாமானிய குடும்பப் பின்னணி கொண்ட பெண்களும், ஆண்களும் அரசின் புதுமைப்பெண், நான் முதல்வன், தமிழ் புதல்வன் போன்ற திட்டங்களின் உதவியுடன் கல்வியிலும், வாழ்விலும் ஏற்றம் பெற்றதை எடுத்துக்கூறும் நிகழ்ச்சியாக அது அமைந்தது அனைத்து தரப்பினரையும் பாராட்ட வைத்தது. அந்த மகிழ்ச்சியை முற்றிலும் குலைக்கும் வகையில் கரூரில் சனிக்கிழமையன்று பெருந்துயரம் அரங்கேறியுள்ளது. நடிகர் விஜய் தனது தமிழக வெற்றிக் கழகத்திற்காக சனிக்கிழமை தோறும் செய்யும் பரப்புரைப் பயணத்தில் அன்றைக…
-
- 0 replies
- 132 views
-
-
இம்முறை தாயகத்தில் மே 18 பரவலாக நினைவு கூரப்பட்டுள்ளது. அரசாங்கம் அதை உத்தியோகபூர்வமாகத் தடைசெய்யவில்லை. அதனால் கடந்த ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் இம்முறை நினைவு கூரும் நிகழ்வுகள் பரவலாகவும் செறிவாகவும் இடம்பெற்றுள்ளன. வடமாகாணசபை உத்தியோகபூர்வமாக நினைவு கூரப் போகின்றது என்ற செய்தி வெளிவந்ததிலிருந்து கூட்டமைப்பு பிரமுகர்கள் கடந்தவாரம் முழுவதும் ஓடி ஓடி விளக்கேற்றினார்கள். இதில் ஒருவித போட்டி நிலவியது எனலாம். யார் எங்கே விளக்கேற்றுவது என்பதில் அவர்களுக்கிடையே ஒருங்கிணைப்பு எதுவும் இருக்கவிலலை. அவரவர் தமக்குரிய செல்வாக்குப் பிரதேசத்திற்குள் விளக்கேற்றுவதில் போட்டி போட்டார்கள். ஒவ்வொரு பிரமுகருக்கும் ஊருக்குள் ஒரு அல்லது பல அணுக்கத் தொண்டர்கள் இருப்பார்கள். அந்த அணுக்கத் தொண…
-
- 0 replies
- 556 views
-
-
தமிழ்த் தேசிய அரசியலா? தமிழ்த் தேசிய நீக்க அரசியலா? தமிழ் மக்களுக்கு எது தேவை? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஊடகப் பேச்சாளருமான சுமந்திரன் சிங்கள ஊடகமொன்றிற்கு அளித்த நேர்காணல் தொடர்பாக பலத்த வாதப் பிரதிவாதங்கள் எழுச்சியடைந்துள்ளன. இதுவரை காலமும் சுமந்திரனை மாற்றுக் கட்சியினரும், கூட்டமைப்பிலிருந்து வெளியேறியவர்களுமே அதிகளவில் விமர்சித்தனர். தற்போது கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியிடமிருந்து மட்டுமல்ல சொந்தக் கட்சியான தமிழரசுக்கட்சியிடமிருந்தும் பலத்த விமர்சனங்கள் அவரை நோக்கி வந்துள்ளன. யாழ்ப்பாணம் நல்லூரில் அவரின் உருவப்படத்திற்கு செருப்பு மாலையும் போடப்பட்டுள்ளது. தமிழரசுக்கட்சி கட்சி இரண்டு அணிகளாகப் பிரிந்துள்ளமை தெளிவாகத்தொடங்கியுள்…
-
- 0 replies
- 464 views
-
-
வலுவேறாக்கம் இல்லாத- இலங்கை ஒற்றையாட்சி அரசின் நீதித்துறையும் ராஜபக்சக்களும் ஈழத் தமிழர்களின் அரசியல்சார்ந்த விவகாரங்களில் வழங்கப்படும் தீர்ப்புகளின் சுயாதீனமற்ற தன்மை இலங்கை ஒற்றையாட்சி அரசின் (Unitary State) நீதித்துறை எப்போதும் சுயாதீனமாகச் செயற்பட்டதாகக் கூற முடியாது. சில நேரங்களில் சுயாதீனமாகச் செயற்பட்டது என்று கூறினாலும் அது சிங்கள நிலை சார்ந்ததாக அமைந்திருக்கும். ஆனாலும் ஆட்சியாளர்களின் தேவை கருதி சில முக்கியமான சந்தர்ப்பங்களில், சுயாதீனத் தன்மை இழந்ததும் உண்டு. 1999 ஆம் ஆண்டு சந்திரிகா இரண்டாவது தடவையாக ஜனாதிபதியாகப் பதவியேற்றதும் சிறாணி பண்டாரந்யாக்கவை மூப்பு நிலைக்கு மாறாக உயர் நீதிமன்ற நீதியரசர…
-
- 0 replies
- 646 views
-
-
மார்ச் மாதத்தை நோக்கிய எதிர்பார்ப்புக்கள் ஆரம்பித்திருக்கின்றன. ஐ.நாவில் தொடங்கவுள்ள கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான தீர்மானங்கள் வலுவாக மேற்கொள்ளப்படும் என்ற எதிர்பார்ப்புகளும்,கோரிக்கைகளும் பல தளங்களிலும் மேற்கொள்ளப்படுகின்றன. இலங்கையும் அதனைக் கருத்தில் கொண்டு ராஜதந்திர நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியிருக்கின்றது. முதற்கட்டமாக இந்தியா இலக்குவைக்கப்பட்டிருக்கின்றது. கடந்த வார இறுதிப் பகுதியில் இந்தியா சென்ற இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இந்தியா அமைதியாக இருந்து கொண்டால் மட்டும் போதும் என்று கூறிவந்திருக்கின்றார். சர்வதேசத்தை கவனிக்கத் தங்களுக்குத் தெரியும் எனவும் சொல்லியிருக்கின்றார். இந்த நிலையில் ஜி.எல். பீரிஸ் குறிப்பிட்டது போல இம்முறை இலங்…
-
- 0 replies
- 477 views
-
-
சிறுபான்மையினரை துண்டாடும் சதி! -சத்ரியன் நாடாளுமன்றத்தில் பெற்றுக் கொண்ட மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வைத்துக் கொண்டு, தலைகால் புரியாமல் ஆடத் தொடங்கியிருக்கிறது அரசாங்கம். மாகாணசபைகளை இல்லாதொழிக்கும் நிகழ்ச்சி நிரல் அதில் முதலாவது. தற்போதுள்ள மாகாண சபைகளுக்குப் பதிலாக புதியதொரு நிர்வாக அமைப்பை உருவாக்க முனைவது இரண்டாவது. இலங்கைத் தீவில் தமிழ் மக்களின் அடையாளம், தனித்துவத்தை முற்றாக இல்லாதொழிப்பதில், சிங்கள பௌத்த பேரினவாதம் மிக சூட்சுமமாகத் திட்டமிட்டுச் செயற்படுகிறது. காலத்துக்குக் காலம் ஒவ்வொரு தரப்புகள் அதற்கென தலையெடுக்கின்றன. தலைமை தாங்குகின்றன. தமிழரின் ஆயுதப் போராட்டத்தை நசுக்குவதில், சிங்கள பௌத்த பேரினவாதிகள் ஒன்றுபட்டு செ…
-
- 0 replies
- 485 views
-
-
-
மாவீரர்களுக்காய் ஒளிர்ந்த நிலம் – குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்- மாவீரர் தினத்தை வடகிழக்கில் கொண்டாட அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது இது குறித்து அரசின் நிலைப்பாடு என்ன? என்று இலங்கை அரசின் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் கேள்வி எழுப்பினார் ஒரு செய்தியாளர். அதற்குப் பதில் அளித்த ராஜித எத்தனை பேர் விளக்கேற்ற வருகிறார்கள் என்று பார்க்கதானே போகிறோம் என்று நக்கலாகப் பதில் அளித்தார். அதற்குத்தான் நவம்பர் 27 அன்று அலையாக திரண்டு பதில் அளித்துள்ளனர் தமிழ் மக்கள். இதற்கான முதல் எழுச்சியை ஏற்படுத்தியது கிளிநொச்சி துயிலும் இல்லம். இந்த நிலையில் கிளிநொச்சி மாவீரர் துயிலும் இல்லம் புனரமைக்கப்பட்டு, அங்கு மாவீரர்களுக்கு விளக்கேற்றத் தீர்மானித்த…
-
- 0 replies
- 507 views
-
-
அதிகாரத்தின் உரையாடல்: ஆண்டகைக்கும் அழைப்பு வந்ததா? தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ கடந்த வார அரசியற்களம் ‘தொலைபேசி அழைப்பு’களால் நிரம்பியிருந்தது. இங்கு இரண்டு நிகழ்வுகள் முக்கியமானவை. ஒன்று, கொழும்புத் துறைமுக நகரம் தொடர்பில், விஜயதாஸ ராஜபக்ஷ எம்.பி தெரிவித்த கருத்துகளை அடுத்து, ஜனாதிபதி, அவரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு, கடுந்தொனியில் பேசியதாகத் தெரிவிக்கப்பட்டது. இரண்டு, பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை, தான் பேசிய கருத்துக்கு முற்றிலும் மாறாக, மறுநாள் கருத்து வெளியிட்டிருந்தார். அதிகாரத்தின் குரலின் வலிமையை, நாம் ஐயப்பட வேண்டியதில்லை. ஆனால், அதை விளங்குவதே இன்று நம்முன்னுள்ள சவால். ஈஸ்டர் தாக்குதல்கள் விசாரணைகள் தொடர்பில், அண்மைக…
-
- 0 replies
- 395 views
-
-
தடுப்பூசியில் அரசியல்: மனிதவுரிமை யோக்கியர்கள் எங்கே? தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ ‘புதிய வழமை' என்பது, இப்போது பழக்கப்பட்டுப் போய்விட்டது. முன்னொரு காலத்தில், (வரலாற்றில் அவ்வாறுதான் குறிக்கப்படும்) மனிதர்கள் நேருக்கு நேரே சந்திக்கும் போது, “நலமாக இருக்கிறீர்களா?” என்ற நலன்விசாரிப்புடன் உரையாடல் தொடங்கும். இப்போது, இந்த உரையாடல் தொலைபேசி வழியே நடக்கிறது, “தடுப்பூசி போட்டுவிட்டீர்களா?” என்ற நலன் விசாரிப்புடன்! காலங்கள் மாறிவிட்டன; ஆனால், அனைத்தும் மாறிவிடவில்லை என்பதை, தடுப்பூசிகளை மையமாக வைத்து, நிகழ்ந்துகொண்டிருக்கும் அவலமும் அதன் அரசியலும், வெட்டவெளிச்சமாக்கி உள்ளன. சில நாடுகள், தங்கள் தேவையை விடப் பன்மடங்கு அதிகமான தடுப்பூசிகளை வைத்திருக்கையில், இன்ன…
-
- 0 replies
- 736 views
-
-
சடலங்களாக கரை ஒதுங்குவதுதானா வடக்கு மீனவர்களின் விதி? புருஜோத்தமன் தங்கமயில் யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு, வத்திராயன் பகுதியில் இருந்து ஜனவரி 27ஆம் திகதி வியாழக்கிழமை, சிறிய படகொன்றில் தொழிலுக்காகக் கடலுக்குச் சென்ற மீனவர்கள் இருவர், நான்கு நாள்களின் பின்னர், சடலங்களாக மீட்கப்பட்டனர். கடலுக்குச் சென்றவர்கள் அடுத்த நாள் நீண்ட நேரமாகியும் கரைக்குத் திரும்பாததை அடுத்து, அவர்களைத் தேடும் பணிகளை, அந்தப் பகுதி மீனவர்கள் முன்னெடுத்தனர். அதன்போது, அவர்களின் வலைகள் வெட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டன. அதையடுத்து, தேடுதலை இன்னும் விரிவுபடுத்திய வடமராட்சிக் கிழக்கு மீனவர்கள், தொடர்ச்சியாக நான்கு நாள்களாக இரவு, பகலாக இயங்கினர். ஆனாலும், காணாமற்போன மீனவர்களை மீட்க…
-
- 0 replies
- 359 views
-
-
கட்டுப்பாடுகளை மீறுகின்றனரா தமிழ் அகதிகள்.. இலங்கை தமிழர் முகாம் பற்றிய ஆய்வு.... ஈழத்தில் இருந்து இடப்பெயர்வினை மேற்கொண்டு 29 ஆண்டுகளை தொடுகின்றது எம்மினம்.. இன்னும் 100 க்கு மேற்பட்ட தமிழக முகாம்களில் சுமார் ஒரு லட்சம் ஈழத்தமிழ் அகதிகள் வாழ்ந்து வருகின்றனர், 1983, 1990, 2006 என மூன்று பெரிய காலகட்டங்களின் போது இடம் பெயர்ந்த இவர்களில் பெரும்பாலானவர்களுக்கு நாம் ஏன் இங்கு இருக்கின்றோம் என்பதே தெரியாதவர்கள் 25வயதுக்குக்கு உட்பட்ட பலர் சொந்த மண்ணின் வாசனை தெரியாதவர்கள். தமிழகத்தில் அகதியாக வரும் ஈழத் தமிழர்கள் ஈழத்தின் இறுதிக் கட்ட போர் முடிவு வரைக்கும் தாம் தாயகத்துக்கு மீண்டும் செல்வோம் அங்கு சொந்த நிலங்களில் குடியேறுவோம் என்ற நம்பிக்கையினை மனதி…
-
- 0 replies
- 2.5k views
-
-
சிறிலங்காவில் அரசாங்கங்களைக் கவிழ்ப்பதற்கான முக்கியமான கேந்திர நிலையமாக திருகோணமலை விளங்குகிறது என்று சிலோன் ருடே ஆங்கில நாளிதழில், உபுல் ஜோசப் பெர்னான்டோ எழுதியுள்ள பத்தியில் குறிப்பிட்டுள்ளார். இதனை 'புதினப்பலகை'க்காக மொழியாக்கம் செய்துள்ளவர் கார்வண்ணன். எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அண்மையில், வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசிடம் நாடாளுமன்றத்தில் ஒரு கேள்வியை எழுப்பியிருந்தார். சீன அரசாங்கத்துடன் இணைந்த நிறுவனம் ஒன்று திருகோணமலையில், விமானப் பராமரிப்பு திட்டம் ஒன்றை ஆரம்பிக்க அரசாங்கம் அனுமதி அளித்திருந்தால், அதுபற்றித் தெரியப்படுத்துமாறு அவர் கோரியிருந்தார். அந்த திட்டம், இந்திய - சிறிலங்கா உடன்பாட்டை மீறுகின்ற ஒன்று என்றும், அது இந்தியாவுக்குப் ப…
-
- 0 replies
- 788 views
-
-
இந்திய தேர்தல் ஆணையம் புதிதாக ஆரம்பிக்க பட்ட கட்சியினை மாநில கட்சியாக அங்கிகாரம் செய்ய சில நிபந்தனைகளை விதித்துள்ளது. அதன்படி குறிபிட்ட விழுக்காடு ஒட்டுகளும். சட்டமன்றத்தில் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களும் உள்ள ஒரு புதிய கட்சியினை தேர்தல்ஆணையம் அங்கிகாரம் அளித்து ஒரு சின்னத்தை அந்த கட்சிக்கு அளிக்கிறது. இவ் நிபந்தனையினை நிறைவேற்ற பாமக , மாதிமுக போன்ற கட்சிகள் பல தேர்தல்களில் முயன்று, மேற்படி நிபந்தனை நிறைவு செய்ய இயலாமல்,கடைசியில் திமுக அல்லது அதிமுக போன்ற பெரிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து மேற்படி நிபந்தனையினை நிறைவு செய்து அங்கிகாரம் பெற்றன. தற்போது, நடிகர் விஜயகாந்த் கட்சி அதிக விழுக்காடு ஓட்டு பெற்றும் , சட்டமன்றத்தில் இரண்டு உறுப்பினர் இல…
-
- 0 replies
- 1.5k views
-
-
வேற்றுமையால் தீமையே விளையும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் எழுதிய ‘நீதியரசர் பேசுகிறார்’ எனும் நூலின் வெளியீட்டு விழா இம்மாதம் 24 ஆம் திகதி யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நிகழ்ந்தது. இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் பின்வருமாறு கூறியிருக்கிறார். நான் 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்குப்பின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்தபோது அவர் மஹிந்த ராஜபக் ஷவுடன் பேசுமாறு கூறினார். அதன்படி நாம் மஹிந்தவைக் கண்டதும் மஹிந்த என்னைப்பார்த்து எனது தோல்விக்கு நீரே காரணம் என்றார். உடனே நான் அதற்கு…
-
- 0 replies
- 375 views
-
-
மறைமுக நிகழ்ச்சி நிரல் வடக்கு, கிழக்கு பிரதேசங்கள் தமிழ் மக்களின் பூர்வீக வாழ்விடங்களாகும்;. இதன் காரணமாகவே வடக்கும் ,கிழக்கும் தமிழர்களின் தாயக மண் என்று உரிமை கொள்ளப்படுகின்றது. இதன் அடிப்படையிலேயே, வடக்கும் ,கிழக்கும் இணைந்த தாயக பிரதேசத்தில் சமஷ்டி முறையிலான தன்னாட்சி உரிமைக்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டது. ஆனால் அந்த கோரிக்கை நிறைவேற்றப்படுமா என்பது ஒருபுறமிருக்க, அந்த பிரதேசங்களில் தமிழ் மக்களின் இருப்பே கேள்விக்குறிக்கு ஆளாகும் வகையில் நிலைமைகள் மோசமடைந்து செல்வதையே காண முடிகின்றது. வரலாற்று வாழ்விடங்களில் தமது ஆட்சி உரிமையை நிலை நிறுத்தி கொள்வதற்கான தமிழ் மக்களின் கோரிக்கை…
-
- 0 replies
- 1k views
-