Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. சுரேஷ் சலேயின் கைதின் பின்னணி எம்.எஸ்.எம். ஐயூப் ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக அரச உளவுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டமை நாட்டில் பெரும் சர்ச்சையை கிளப்பிவிட்டுள்ளது. பிரதான ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் பெருமளவில் அது தொடர்பாக கருத்துக்கள் பறிமாறப்பட்டுள்ள போதிலும் அவை எதுவும் நடுநிலையாக தெரிவிக்கப்பட்ட கருத்துக்களாக தெரியவில்லை. எல்லோரும் தத்தமது அரசியல் கண்ணோட்த்திலேயே பிரச்சினையை அணுகியுள்ளனர். உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் பற்றிய விசாரணைகள் இறுதியில் சட்ட நடவடிக்கையாகவே தீர்க்கப்பட வேண்டியுள்ளது. ஆனால் அதன் பின்னால் அரசியலும் இருப்பதாக தெரிவதால் பலர் அதனை அரசியல் கண்கொண்டு பார்ப்பதை…

  2. இரான்: போர் எந்த பாதையில் செல்கிறது என்பதை இன்னும் கணிக்க முடியவில்லையா? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,அமெரிக்காவை அடையக்கூடிய ஏவுகணைகளை இரான் உருவாக்கி வருவதாக டிரம்ப் கூறியது, அமெரிக்க உளவுத்துறை மதிப்பீடுகளால் ஆதரிக்கப்படவில்லை கட்டுரை தகவல் ஜெரிமி போவன் சர்வதேச ஆசிரியர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள் அமெரிக்கா, இஸ்ரேல், இரான் இடையே புதிய போர் தொடங்கி நான்கு நாட்கள் கடந்துவிட்டன. அமெரிக்காவின் நட்பு நாடுகளான அரபு நாடுகளையும், வளைகுடா முழுவதும் இரானின் அண்டை நாடுகளையும் இரான் தாக்க முடிவெடுத்த பிறகு, இதுவொரு பிராந்திய போராக உருவெடுத்தது. பிரிட்டனில் உள்ள தனது தளங்களை அமெரிக்கா பயன்படுத்துவதற்கு பிரிட்டன் தெரிவித்து வந்த மறுப்பைக் கை…

  3. வேலையற்ற பட்டதாரிகளை உற்பத்தி செய்யும் சமூகம் ? நிலாந்தன்! இக்கட்டுரை எழுதப்படுகையில் யாழ் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நடந்து கொண்டிருக்கிறது. அதுதொடர்பாக சமூக வலைத்தளங்களில் ஒரு விவாதம் எழுந்திருக்கிறது. அரச பல்கலைக்கழகங்களில் நிகழும் பட்டமளிப்பு விழாக்களில் வேலை இல்லாத புதிய தொகுதி பட்டதாரிகள் உற்பத்தி செய்யப்படுகிறார்கள் என்று அந்த வாதப் பிரதிவாதங்களில் சுட்டிக்காட்டப்படுகிறது. அரச வேலை தேடும் மேலும் ஒரு தொகுதி பட்டதாரிகள் இன்று வெளியேறுகிறார்கள் என்று அவர்கள் விமர்சிக்கிறார்கள். ஏற்கனவே 4000க்கும் குறையாத பட்டதாரிகள் வேலை தேடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை நான் வெளியேற்றப்பட்ட பட்டதாரிகள் என்று எழுதுவதற்கு பதிலாக அரச வேலை இல்லாத பட்டதாரிகள் என்று எழுதுவதே பொர…

  4. அப்பத்தை எப்படிப் பங்கிடுவது? அப்பத்தை யார் சாப்பிடுவது ? - நிலாந்தன் தமிழ் நாடு,திருச்சியில், கடந்த வாரம் சீமான் நடத்திய கூட்டம் ஈழத்தமிழர்கள் மத்தியில் உள்ள சீமானின் ஆதரவாளர்களுக்குப் பெரிய உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது. அதை ஒரு பிரம்மாண்டமான தமிழ்த் தேசிய வெற்றியாக அவர்கள் போற்றுகிறார்கள். அண்மை மாதங்களாக சீமானுக்கும் விஜய்க்கும் ஈழத் தமிழர்கள் மத்தியில் ஆதரவாளர்கள் அதிகரித்து வருகிறார்கள். தமிழகத்தில் சீமானும் விஜேயும் ஒருவர் மற்றவருக்கு எதிராகக் காணப்படுகிறார்கள். ஆனால் ஈழத் தமிழர்கள் மத்தியில் அவர்களுக்கு ஆதரவாளர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் நடந்த சீமானின் கூட்டத்தோடு அவருடைய ஆதரவாளர்கள் மிகவும் நம்பிக்கையோடு காணப்படுகிறார்கள். ஈழத் தமிழர்கள் தமிழ…

  5. யாழ்க்கள உறவுகளே,தமிழீழ மக்களின் தற்போதைய அரசியற்கையறுநிலைகுறித்த உரையாடலாக உள்ளதால் இணைத்துள்ளேன். நன்றி - யூரூப் நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி

    • 0 replies
    • 186 views
  6. சாலே கைதின் புதிய வெளிப்பாடுகளும்... அடுத்த கைதும்... அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே கைது செய்யப்பட்டதற்கான காரணம் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் தற்காலிக விதிகளின் கீழ்தான் என்பதை காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. அதன்படி, அவரை 72 மணி நேரம் காவலில் வைத்து விசாரிக்க சட்டப்பூர்வ அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கிடைத்த தெளிவான ஆதாரங்களின் அடிப்படையில் இந்தக் கைது மேற்கொள்ளப்பட்டதாக, இன்று (25) பொலிஸ் ஊடகப் பிரிவில் நடைபெற்ற சிறப்பு ஊடகவியலாளர் சந்திப்பில், மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான மூத்த பிரதிப் காவல்துறை மா அதிபர் சஜீவ மெதவத்த தெரிவித்தார். ஏப்ரல் 21, 2019 அன்று , சஹாரான் …

  7. தேசிய மக்கள் சக்தியை, இன்றைய ஜேவிபியை தமிழ்த்தரப்பு புரிந்து கொள்ள வேண்டும் February 24, 2026 — கருணாகரன் — தமிழ்த் தரப்பினர் தமது அரசியலைச் சரிசெய்ய வேண்டும் என்றால், மெய்யாகவே முன்கொண்டு செல்ல வேண்டும் என்றால், தேசிய மக்கள் சக்தியைப் புரிந்து கொள்ள வேண்டும். தேசிய மக்கள் சக்தியை (அதாவது இன்றைய அரசாங்கத்தை) புரிந்து கொள்ள வேண்டும் என்றால், இன்றைய ஜே.வி.பியைப் புரிந்து கொள்ள வேண்டும். இன்றைய ஜே.வி.பியைப் புரிந்து கொள்ள முடியாதோரின் கண்களுக்கு ரோஹண விஜேவீர, சோமவன்ஸ அமரசிங்க போன்ற முகங்களே தென்படும். அந்த முகங்கள் பிரதிபலித்த பழைய – தீவிர இனவாத முகத்தையும் அது மேற்கொண்ட பகிரங்க வெறுப்பு நடவடிக்கைகளுமே நினைவில் எழும். அவ்வாறு தோன்றுவதால்தான் பழைய ஜே.வி.பியை நினைத்துக்கொண்ட…

  8. --கொழும்பில் நடந்த பெளத்த மாநாடு-- சிங்கள அரசியல் தலைவர்களுக்கு வழங்கிய செய்தி! --- --- *வடக்கு கிழக்கு உட்பட இலங்கை முழுவதும் பெளத்த தொல்லியல் ஆய்வுகளுக்கு முக்கியத்துவம். தடை விதிக்க முடியாது. *பௌத்த சமயம் தற்போது எதிர்கொள்ளும் நெருக்கடிகளுக்கு அநுர பொறுப்புக் கூற வேண்டும்... *பிக்குகள் மீது திட்டமிட்ட தாக்குதல் நடத்தப்படுவதாக குற்றச்சாட்டு ---- ----- ----- இலங்கைத்தீவில் பௌத்த சமயத்திற்கும் பௌத்த தேரர்களுக்கும் ஏற்படும் அழுத்தங்கள், புத்த சாசனம் மற்றும் வடக்கு கிழக்கு உள்ளிட்ட இலங்கைத் தீவின் தற்போதைய நிலைமை குறித்த கவலைகளை வெளிப்படுத்தி நடைபெற்ற பௌத்த மகா சங்க மாநாடு, சிங்கள அரசியல் தலைவர்களுக்கு பலவிதமான செய்திகளை வழங்கியுள்ளன. வெள்ளிக்கிழமை இடம்பெற்ற மாநாட்டில்,…

  9. PSTB: சட்டத் திருத்தமா? அல்லது அடக்குமுறைக்கான ஆயுதமா? Veeragathy Thanabalasingham on February 23, 2026 தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் 2025 டிசம்பரில் வெளியிட்ட பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாப்பதற்கான உத்தேச சட்ட வரைவு (Protection of State from Terrorism Act – PSTA) கடந்த 47 வருடங்களாக நடைமுறையில் இருந்து வரும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை (Prevention of Terrorism Act – PTA ) பதிலீடு செய்வதற்காக முன்னெடுக்கப்படுகின்ற மூன்றாவது முயற்சியாகும். அந்தச் சட்ட வரைவு குறித்து பெப்ரவரி 28ஆம் திகதி வரை பொதுக் கருத்துக்களை தெரிவிப்பதற்கு அரசாங்கம் அவகாசம் வழங்கியிருக்கிறது. அண்மைய கடந்த காலத்தில் மைத்திரி – ரணில் அரசாங்கத்தினால் 2018ஆம் ஆண்டில் பயங்கரவாதத் தடுப்புச் சட்ட வரைவும் …

  10. மாகாண சபைத் தேர்தல் – மீண்டும் ஒரு காலங்கடத்தல் லக்ஸ்மன் குழுக்கள் அமைப்பதும், ஆராய்வதும், அறிக்கை சமர்ப்பிப்பதும், பின்னர் கலைந்து போவதும் நமது நாட்டில் சாதாரணமாக நடைபெறும் ஒன்று. இப்போது மாகாண சபை தேர்தலை நடத்துவதா இல்லையா, பழைய முறையிலா புதிய முறையிலா என்று தீர்மானிப்பதற்காக அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் ஒரு குழுவை இந்த அரசாங்கம் அமைத்திருக்கிறது. முன்னைய அரசாங்கங்களின் காலத்தை வீணடிக்கும் செயற்பாட்டுக்கு ஒப்பாகவே இதுவும் அமைந்திருக்கிறது என்று ஒரே வார்த்தையில் கூறிவடவும் முடியாது. அதே நேரத்தில் ஒரு இலக்கைக் கொண்டிருக்கின்ற தரப்புக்கு அவர்களது சிந்தனையைத் திசை திருப்பும் செயற்பாடாகவும் அமையலாம் என்றும் கூறலாம். ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தியானது 2024ஆம்…

  11. எகிய ராஜ்யவும் இளங் கலைஞர் மன்றச் சந்திப்பும் - நிலாந்தன் அண்மை மாதங்களாக அரசாங்கம் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு என்று ஒரு புதிய யாப்புருவாக்க முயற்சியைத் தொடங்கலாம் என்று கஜேந்திரக்குமார் எச்சரித்து வருகிறார். அரசாங்கத்தின் தேர்தல் வாக்குறுதிகளில் அவ்வாறு உண்டு.ரணில்-மைத்திரி அரசாங்கத்தின் காலத்தில் தயாரிக்கப்பட்டு இடையில் நிறுத்தப்பட்ட இடைக்கால வரைபை அடுத்தடுத்த கட்டங்களுக்கு வளர்த்து செல்ல அரசாங்கம் முயற்சிக்கலாம் என்றும் கஜேந்திரகுமார் எச்சரிக்கின்றார். சில மாதங்களுக்கு முன்பு சுவிற்சர்லாந்தில் நடந்த ஒரு சந்திப்பில் அரசாங்கத்தின் பிரதிநிதியாக வந்திருந்தவர் அவ்வாறு எகிய ராஜ்ஜிய என்று அழைக்கப்படும் அந்த இடைக்கால வரைபை அடுத்த கட்டத்திற்கு முன்னெடுக்கவிருப்பதாகத் தெரிவ…

  12. கழண்ட கத்திகள் ? - நிலாந்தன் சில ஆண்டுகளுக்கு முன் இந்திய வெளியுறவுச் செயலர் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்தார். யாழ்ப்பாணத்தில் தெரிந்தெடுக்கப்பட்ட 10 பேரை அவர் சந்தித்தார். சந்திப்பு முடிந்து வெளியே வரும்போது சிவாஜிலிங்கம் அங்கிருந்த ஓர் அரசியல் விமர்சகரிடம் கேட்டார்… ”இந்த வாரக் கட்டுரை இதைப் பற்றித் தானா?” என்று. அப்பொழுது அரசியல் விமர்சகர் சொன்னார், ”இல்லை இந்தச் சந்திப்பில் நான் ரிப்போர்ட்டராகக் கலந்து கொள்ளவில்லை.இது மூடிய அறைக்குள் நடந்த ஒரு சந்திப்பு. தமிழ்த் தரப்பு இவ்வாறு மூடிய அறைகளுக்குள் நடக்கும் சந்திப்புகளில் பேசப்பட்ட விடயங்களை அப்பாவித்தனமாக அல்லது உள்நோக்கத்தோடு வெளியே விடுகிறது என்று ஓர் அபிப்பிராயம் ராஜதந்திர வட்டாரங்கள் மத்தியில் உண்டு” என்று. …

  13. நாட்களை கடத்தும் ஆளும் கட்சியும் இடம் கொடுக்கும் தமிழ்க்கட்சிகளும் February 19, 2026 — கருணாகரன் — இலங்கையின் இனப்பிரச்சினைக்குத் தேசிய மக்கள் சக்தியும் தீர்வைத் தரப்போவதில்லை என்பது தெளிவாகியுள்ளது. எந்தப் பிரச்சினைக்கும் எந்தப் பதிலையும் உறுதியாகவோ வெளிப்படையாகவோ சொல்லாமல் தந்திரமாக நாட்களைக் கடத்தும் உபாயத்தைக் கையாள்கிறது NPP அரசாங்கம். இனப்பிரச்சினைக்குத் தீர்வு, மாகாணசபைகளுக்கான தேர்தல், வடக்குக்கிழக்கில் பௌத்த சிங்கள விரிவாக்கச் செயற்பாடுகள், பொருளாதார மறுசீரமைப்பு – புதிய பொருளாதார முன்னெடுப்பு, மலையக மக்களின் காணி மற்றும் வீட்டுரிமைப் பிரச்சினைகள் என எதற்கும் பொறுப்பான பதிலை ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்கவோ, பிரதமர் ஹரிணி அமரசூரியவோ சொல்வதில்லை. மட்டுமல்ல, ஒவ்வொர…

  14. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை பதிலீடு செய்வதற்கான வரைவுகளில் மேலும் கொடூரமான ஏற்பாடுகளை புகுத்துவதன் உள்நோக்கம் என்ன? February 16, 2026 — வீரகத்தி தனபாலசிங்கம் — தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் 2025 டிசம்பரில் வெளியிட்ட “பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாப்பதற்கான உத்தேச சட்ட வரைவு” (protection of State from Terrorism Act – PSTA) கடந்த 47 வருடங்களாக நடைமுறையில் இருந்து வரும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை (Prevention of Terrorism Act – PTA ) பதிலீடு செய்வதற்காக முன்னெடுக்கப்படுகின்ற மூன்றாவது முயற்சியாகும். அந்தச் சட்ட வரைவு குறித்து பெப்ரவரி 28 ஆம் திகதி வரை பொதுக் கருத்துக்களை தெரிவிப்பதற்கு அரசாங்கம் அவகாசம் வழங்கியிருக்கிறது. அண்மைய கடந்த காலத்தில் மைத்திரி – ரணில் அரச…

  15. அரசியலையே அவமதிக்கும் நடிகர் விஜயை பொதுமன்றம் கண்டிக்க வேண்டாமா? 16 Feb 2026, 7:00 AM ராஜன் குறை நடிகர் விஜய் பிற அரசியல் கட்சி தலைவர்கள் போல பத்திரிகையாளர்களை சந்திப்பதில்லை. ஊடகங்களுக்கு நேர்காணல் அளிப்பதில்லை. நாட்டில் நடக்கும் பல்வேறு நிகழ்வுகளுக்கு, மக்களைப் பாதிக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பதில்லை. தன் கருத்துக்களைக் கூறுவதில்லை. அரசியலை மல்டிபிள் சாய்ஸ் குவெஸ்டின் பேப்பர் போல எடுத்துக்கொண்டு அவ்வப்போது ஒரு சில பிரச்சினைகளைப் பற்றி மட்டும் கருத்து தெரிவிக்கிறார். பிற பிரச்சினைகளில் அவர் கருத்துக் கூறவில்லையே என்று விமர்சித்தால், நீங்கள் சொல்வதற்காகவெல்லாம் நான் பேசமுடியாது என்று சிறுபிள்ளைத்தனமாகக் கூறுகிறார். அதைவிட மிகப்பெரிய சிக்கல் அவரால் மக்களை …

  16. நிறுத்தி வைக்கப்பட்ட சந்திப்பு? - நிலாந்தன் கொழும்பில் உள்ள சுவிற்சலாந்து தூதரகம் வரும் 19ஆம் தமிழ் கட்சிகளுக்கு இடையில் ஒரு சந்திப்பை ஒழுங்குப்படுத்தியிருந்தது. இனப்பிரச்சினைக்கான தீர்வில் ஒருமித்த நிலைப்பாட்டை எட்டுவது இந்த அழைப்பின் நோக்கம் என்று கருதப்படுகிறது. எனினும் அந்தச் சந்திப்பு இடம்பெறாது என்று தெரிய வருகிறது. அதற்கு காரணம், சுமந்திரன் அதை விரும்பவில்லை என்ற பொருள்பட சிங்கள ஊடகமான TTV.Lk தகவல் வெளியிட்டுள்ளது. 19ஆம் தேதி நடக்கவிருந்த சந்திப்பு தொடர்பான செய்திகள் ஊடகங்களுக்கு கசிந்தமை தொடர்பில் சுவிற்சலாந்து தூதரகம் மகிழ்ச்சியாக இல்லை என்று தெரிகிறது. கட்சிகளுடைய வேண்டுகோளின் அடிப்படையில்தான் தூதரகம் மேற்படி சந்திப்புக்கு ஏற்பாடு செய்தது என்றும் தூதரக வட்ட…

  17. போர்க்காலத்தின் தகவல் பரிமாற்ற ஊடகமாக விளங்கிய வானொலி Courtesy: தீபச்செல்வன் ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி 13 ஆம் தேதி UNESCO அறிவித்துள்ள உலக வானொலி நாள் உலகெங்கும் வானொலியின் சமூகப் பங்களிப்பை நினைபடுத்துகிறது. தகவல் பரிமாற்றத்தின் மிக எளிய, மலிவு மற்றும் விரைவான சேவைக்காக வானொலி இன்னும் பல கோடி மக்களின் வாழ்வோடு இணைந்திருக்கிறது. தொலைதூர கிராமங்களிலிருந்து நகர மையங்கள்வரை மனிதர்களை ஒன்றிணைக்கும் ஒலிப் பாலமாக வானொலி தேசங்களையும் உலகத்தையும் இணைக்கின்றது. இலங்கைக்கு என்று தனித்துவமான வானொலிப் பாரம்பரியமுண்டு. அத்துடன் புலிகளின் குரல் என்ற தமிழர்களின் போராட்ட வானொலிப் பாரம்பரியமும் ஈழ மண்ணிற்குள்ளது. இலங்கையின் வானொலிப் பாரம்பரியம் தென்னாசியாவில் வானொலி ஒளிபரப்பின் முன்னோடிகளி…

  18. தங்களைத் தாங்களே திரட்ட முடியாத கட்சிகள் தமிழ் மக்களை எப்படித் திரட்டும்? - நிலாந்தன். - “ஐயா சிறீதரன் அவர்களைப் பற்றி நாலு வசனம் நல்லதாக எழுதினால் கட்சித் தீர்மானத்தை மீறியதாக எடுத்து கொள்வீர்களா?உங்களால் ஏன் மக்களின் மனதை வெல்ல முடியவில்லை என்பதை அமைதியாக இருக்க கூடிய நேரங்களில் யோசித்து பார்த்ததுண்டா? உண்மையில் நீங்களும் சிறீதரனும் தலைமை பதவிக்கு சண்டை பிடிக்கவில்லை என்றால் இன்று கட்சியின் நிலை எப்படி இருக்கும் என்று நினைத்து பாருங்கள்? ஒரு இனத்தின் விடுதலைக்காகவும் இருப்பிற்காகவும் பாடுபட வேண்டிய கட்சி ஒன்று தலைமைப் பதவிக்காக நீதிமன்றத்தில் நின்றால் மக்கள் உங்களை எப்படி நம்புவார்கள்? உங்களின் நாய்ச் சண்டைகளால் தெரு நாய்கள் எல்லாம் வவுனியாவில் வந்து ஊளையிட்டுச் செல்கி…

  19. தன்னைத் தானே தோற்கடிப்பது? - நிலாந்தன் நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியில் இருந்து சிறீதரன் நீக்கப்பட்டு சாணக்கியன் நியமிக்கப்பட்டிருக்கிறார். அதை ஒரு வெற்றியாக சாணக்கியனின் ஆதரவாளர்கள், சுமந்திரன் அணியைச் சேர்ந்தவர்கள் ஆங்காங்கே கொண்டாடினார்கள். உலகமே வியக்கும் வெற்றிகளைக் கொண்டாடிய தமிழ் மக்கள் இப்பொழுது இப்படிப்பட்ட அற்ப வெற்றிகளைக் கொண்டாடும் மக்களாக சிறுத்துப் போய்விட்டார்கள்? தமிழரசுக் கட்சி என்பது 75 வயதான ஒரு கட்சி. தனது உட்கட்சிப் பகையை பிரதிபலிக்கும் ஒரு வெற்றியைக் கொண்டாடக்கூடாது என்று தனது தொண்டர்களுக்குச் சொல்லும் மாண்பை அந்தக் கட்சி இழந்து விட்டதா? ஏற்கனவே மாவையின் இறுதி நாள் நிகழ்வில் சுடலை வரை மோதல் வந்தது. அண்மையில் மாவையின் முதலாம் ஆண்டு நினைவு நாளிலும…

  20. சிறிதரன்: தமிழரசில் இன்னொரு இராசதுரையா..? February 10, 2026 — அழகு குணசீலன் — தமிழ்த்தேசியக் கட்சிகளுக்கும், அமைப்புக்களுக்கும், அவர்களின் அரசியலுக்கும் மங்குசனி தொடங்கிய காலம் அது. இதனால் புலிகளின் தலைவர் பிரபாகரனால் வீட்டு சின்னத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு என்ற லேபல் புதுப்பித்து ஒட்டப்பட்டது. ஒரு வகையில் இதை “ஒப்பரேசன் தமிழரசு” என்று சொல்லமுடியும். இது முரண்பாடுகளைக்கொண்ட பலரை கூட்டமைப்பு என்ற சாக்குக்குள் போட்டு கட்டி புலிகள் அரசியல் பாடம் எடுத்த தருணம். இந்த புதிய லேபல் ஏற்படுத்திய பாராளுமன்ற பிரதிநிதித்துவ அதிகரிப்பை தமிழ்தேசிய கூட்டமைப்பால், 2009 க்கு பின்னர் தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை. இதற்கு இரா.சம்பந்தர், மாவை சேனாதிராசா ஆகியோரின் ஆளுமையற்ற…

      • Thanks
      • Haha
    • 4 replies
    • 421 views
  21. “தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்) January 26, 2026 (இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வு, அரசியலமைப்பு மாற்றம், தமிழ்ப்பிரதேசங்களின் அபிவிருத்தி, மாகாண சபைகளுக்கான தேர்தல் மற்றும் அதிகாரம், ஆட்சிலிருக்கும் தேசியமக்கள் சக்தியின் செயற்பாடுகள், தமிழரசுக் கட்சியின் எதிர்காலச் செயற்பாடுகள் எனப் பல விடயங்களையும் குறித்து இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமாகிய ஜனாதிபதி சட்டத்தரணி திரு. எம்.ஏ. சுமந்திரனுடன் உரையாடினோம். இலங்கை அரசியற்பரப்பிலும் தமிழர்களின் அரசியலிலும் சுமந்திரனின் அடையாளமும் குரலும் முதன்மையானது. என்பதால் அனைத்துத் தரப்பினரோடும் உரையாடக்கூடியவராகவும் அனைத்துத்தரப்பினரும் உரையாடும…

  22. பயங்கரவாத தடுப்புச் சட்டம் இன்னமும் எதற்கு? எம்.எஸ்.எம். ஐயூப் தாம் முன்வைத்த குடியிருப்பாளர் பாதுகாப்புச் சட்ட மூலத்தை தற்காலிக்மாக இடைநிறுத்துவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. அரசாங்கத்தின் சார்பில் அதனை தெரிவித்த பொதுமககள் பாதகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல பலர் தெரிவித்த எதிர்ப்புகளை அடுத்து சட்ட மூலத்தை மீளாய்வு செய்து மீண்டும் சமர்ப்பிப்பதற்காகவே அதனை இடைநிறுததுவதாக கூறியுள்ளார். ஆயினும் இது முதன் முதலாக தமது அரசாங்கம் முன்வைக்கும் சட்டமூலமொன்றல்ல என்றும் 2023 ஆம் ஆண்டு அப்போதைய ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் முன்வைத்த சட்டமூலமொன்றையே தமது அரசாங்கம் முன்வைத்துள்ளது என்றும் அரசாங்கத்தின் அமைச்சர்கள் கூறுகின்றனர். அதில் ஓரளவு உண்மை இருக்க…

  23. பஞ்சமா தந்திரங்கள்? - நிலாந்தன் கட்சிக்குள் சிறீதரனை மதிப்பிறக்கம் செய்வதில் சுமந்திரன் தொடர்ந்து முன்னேறி வருகிறார். முக்கால் நூற்றாண்டு கால வயதைக் கொண்ட கட்சிக்குள் முதன்முதலாக தலைவருக்காக நடந்த ஒரு தேர்தலில் தெரிவு செய்யப்பட்டவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தலைமைப் பொறுப்பை ஏற்க விடாமல் தடுக்கப்பட்டு வருகிறார். இரண்டு ஆண்டுகளாக தொடர்ச்சியான தந்திரமான புத்திசாலித்தனமான நகர்வுகளின் ஊடாக ஓரங்கட்டப்பட்டு வருகிறார். சிறீதரனை கட்சிக்குள் சுற்றிவளைக்கும் வேலையை கடந்த இரண்டு ஆண்டுகளாக சுமந்திரன் அணி செய்து வருகிறது. சிறீதரன் எவ்வாறு கட்சிக்குள் ஓரங்கட்டப்படுகிறார்? 75 ஆண்டு கால வயதை கொண்ட கட்சிக்குள் முதன்முதலாக நடந்த தலைவர் தேர்தலில் தெரிவு செய்யப்பட்டவர் செயற்பட முடியா…

  24. தையிட்டி; கிவுல் ஓயா; கரிநாள் - நிலாந்தன் கடந்த வாரம் மூன்று ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. முதலாவது ஆர்ப்பாட்டம் தையிட்டியில். அது வழமையாக நடப்பது. இரண்டாவது ஆர்ப்பாட்டம், கிவுல் ஓயா அபிவிருத்தி திட்டத்திற்கு எதிரான நெடுங்கேணிப் போராட்டம். மூன்றாவது ஆர்ப்பாட்டம், 78ஆவது சுதந்திர தினம் என்று கூறப்படுவதை கரிநாளாகப் பிரகடனப்படுத்தி யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்த பேரணி. மிகக்குறுகிய கால இடைவெளிக்குள் நடந்த இந்த மூன்று ஆர்ப்பாட்டங்களையும் தொகுத்துப் பார்ப்போம்.தையிட்டியில் கடந்த பௌர்ணமி நாளன்று மிகக்குறைந்த எண்ணிக்கையானவர்களே காணப்பட்டார்கள். அதிலும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்தவர்களே அதிகம். ஆனால் கடந்த ஆண்டின் இறுதியில் நடந்த ஆர்ப்பாட்டங்களில் அதிகளவு எண்ண…

  25. 78 ஆண்டு கால “சுதந்திரம்” ? நிலாந்தன்! இலங்கைத் தீவு பிரித்தானியரிடமிருந்து விடுபட்டு 78 ஆண்டுகள் ஆகிறது. இலங்கைத் தீவின் ஒரு பகுதி மக்கள் அதனை சுதந்திர தினம் என்று கொண்டாடுகிறார்கள். ஆனால் தமிழ் மக்களில் கணிசமானவர்கள் அதனை கரிநாள் என்று கருதுகிறார்கள். தங்களுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை என்றும் தமிழ் மக்கள் நம்புகிறார்கள். கடந்த 4 ஆம் தேதி யாழ்ப்பாணத்தில் ஒப்பீட்டளவில் அதிகம் சிங்கக் கொடிகளை காணக் கூடியதாக இருந்தது. வட மாகாண ஆளுநர் அலுவலகம் வழமையை விட வித்தியாசமாக பெருமெடுப்பில் அந்த நாளைக் கொண்டாடியது. ஆனால் அதே நாளில்,கிளிநொச்சியில்,மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டப் பேரணிகள் இடம்பெற்றன.அது சுதந்திர நாள் அல்ல கரிநாள் என்று பிரகடனப்படுத்தி யாழ்.பல்கலைக்கழக மாணவர்களும் காணாம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.