Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. செத்த வீட்டு அரசியல் - நடராஜா குருபரன் புங்குடுதீவு மாணவி வித்தியாவின் மரணம் அனைவவரையும் உலுக்கியுள்ளது. அதிர்வுகள் தொடர்கின்றன. உயிருக்கு உயிரானவளின் மரணம் தந்த வலியால் பெற்றவரும் உற்றவரும் துடிக்கின்றனர். முள்ளிவாய்க்காலில் சுமந்த வலியை நினைவு கூரும் மாதத்தில் மீண்டும் ஒரு துயர் தமிழ் மக்களை சூழ்ந்து கொள்கிறது. பாடசாலைக்கு காலை புறப்பட்ட வித்தியா மறுநாள் காலை பாழடைந்த வீட்டில் பிணமாக மீண்டாள். வித்தியாவின் கொலைக்கான காரணங்கள் இப்போ வெளிவந்துகொண்டு இருக்கின்றன. வித்தியாவின் படுகொலைக்கு காரணமானவர்கள் எனச் சந்தேகிக்கப் படுபவர்கள் மூவர் கைதாகி உள்ளனர் என இலங்கைப் பொலிசும் கூறுகிறது. வித்தியா இறுதிக் கணங்களில் எதிர்கொண்ட நரக வேதனைகள், கொடூரங்களை வைத்தியசாலையின் பிரேதபரி…

  2. தமிழ் மக்களின் கூட்டுத் துக்கமும் கூட்டுக் கோபமும் நிலாந்தன் மாற்றத்தின் விரிவைப் பரிசோதித்தல் நாளை, ஆட்சி மாற்றத்தின் பின்னரான முதலாவது மே 18 ஆகும். இறுதிக்கட்டப் போரில் கொல்லப்பட்டவர்களை நினைவு கூரும் நிகழ்வுகள் கடந்த வாரத்தில் இருந்து ஆங்காங்கே நடந்து வருகின்றன. இவற்றில் பெரும்பாலானவை குறியீட்டுத் தன்மைமிக்கவை. சிறுதொகையினரே இவற்றில் பங்கு பற்றி வருகிறார்கள். அவர்களிற் பெரும்பாலானவர்கள் அரசியல்வாதிகளே. ஆனால் இறுதிக்கட்டப் போரில் கொல்லப்பட்டதாகக் கூறப்படுவோரின் உறவினர்கள் அனைவரும் கலந்து கொள்ளும் ஒரு நிகழ்வாக ஒழுங்கமைக்கப்பட்டால் அது பல்லாயிரக்கணக்கானோர் பங்குபற்றும் ஓர் அரசியல் வணக்க நிகழ்வாகவே இருக்கும். சிறீலங்காவின் சுதந்திர தின விழாவில் பங்குபற்றிய தமிழ…

  3. போரினை நினைவுகூருதலும் அதன் அரசியல்களும் மகேந்திரன் திருவரங்கன் 2009 ஆம் ஆண்டு மே மாதத்தில், இலங்கையின் முப்பதாண்டு கால சிவில் யுத்தம் பொது மக்கள், விடுதலைப் போராளிகள், இராணுவத்தினர், அரசியற் தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் எனப் பல தரப்பட்ட, ஆயிரக்கணக்கானோரினைப் பலியெடுத்ததன் பின்னர் ஓய்ந்தது. போரின்போது கொல்லப்பட்ட அனைத்து உயிர்களும் அவர்கள் சார்ந்த குடும்பங்களுக்கும், அரசியல் ரீதியிலான சமூகங்களுக்கும் மிகவும் முக்கியமானவர்கள். மனித உயிர்கள் யாவும் பெறுமதி மிக்கவை. எனவே போர் எமது சமூகங்களிலே விட்டுச் சென்றுள்ள இழப்புக்களை நாம் உணர்வுபூர்வமாக நினைவு கூருகின்ற அதேவேளை, எமது நினைவுகூரற் செயன்முறைகள் மீளவும் ஒரு முறை இவ்வாறான இழப்புக்கள் நேராதபடி எமது சமூகங்களி…

  4. மே 18: ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர்.. யதீந்திரா ஆறு ஆண்டுகளுக்கு முன்னர், இதுபோன்றதொரு மே மாதத்தில், தமிழ்த் தேசிய அரசியல் இயங்குநிலையை மூன்று தசாப்தகாலமாக தனது இராணுவ ஆற்றலால் கட்டுக்குள் வைத்திருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் அழிவுற்றது. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆத்மா, தலைவர், முதன்மைத் தளபதி என்று, அனைத்து நிலைகளிலும் அந்த இயக்கத்தை தாங்கிநின்ற வேலுப்பிள்ளை பிரபாகரனின் இறந்த உடல் காண்பிக்கப்பட்டபோது, அதனை நம்புவதற்கு மிகவும் சொற்பமான தமிழர்களே இருந்தனர். அவர் இருக்கிறார், வருவார் என்று சொல்பவர்களின் கைகளே சொற்ப காலம் ஓங்கியிருந்தது. ஆனாலும் காலம் என்னும் ஆசானுக்கு முன்னால் அதிக காலம் பொய்கள் தாக்குப்பிடிக்க முடியவில்லை. இன்று பிரபாகரனும், அவரது கட்டள…

  5. மாற்றம் மாற்றமா? - குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக தேவ அபிரா 16 மே 2015 முள்ளிவாய்க்கால் நினைவு வாரப் வெளியீடு - 1: விடுதலைப்புலிகள் தமது கைகளில் எடுத்துக்கொண்டு நிகழ்த்திய தமிழீழ விடுதலைப்போராட்டம் அழிக்கப்பட்டு ஆறுவருடங்கள் முடிந்துவிட்டன. போரை நிகழ்த்தி வெற்றி அடைந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளது. இலங்கையின் அரசு கடந்த மூன்று தசாப்தங்களில் எதிர்கொண்ட உள்நாட்டுப் போரில் இருந்தும் பின் தொடர்ந்த ஊழல் நிறைந்த ஆட்சியில் இருந்தும் விடுபட்டுள்ளது. இலங்கையில் மாற்றம் வேண்டும் என்ற குரல் எழுச்சியுடன் மகிந்தவின் அரசாங்கம் தோற்கடிக்கப்பட்டது. மகிந்த அரசாங்கம் அது கொண்டிருந்த மோசமான ஊழல் மற்றும் சர்வாதிகாரக் குணங்களுக்காக சிங்களமக்களாலும் நான்காம் …

  6. ஜோன் கெரியின் இலங்கை விஜயம்: அறிக்கைகள் அல்ல, செயலே தேவை முத்துக்குமார் அமெரிக்க அரசுச் செயலர் ஜோன் கெரி தனது இலங்கைப் பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியிருக்கின்றார். இவர் இலங்கை வருமுன் இலங்கையின் வெளிநாட்டமைச்சருக்கும் படைத்தளபதிகளுக்கும் இந்துசமுத்திரக் கடலில் தரித்திருந்த இராட்சத விமானம் தாங்கிக் கப்பலை அமெரிக்கப் படையினர் காட்டியிருக்கின்றனர். அவரது பயணத்தின் நோக்கம் ஆட்சிமாற்றத்தைப் பாதுகாப்பதும் தமிழர் எழுச்சியைத் தடுப்பதும்தான். மோடியைப் போலவே அரசாங்கத்திற்குக் கரைச்சல் கொடுக்கவேண்டாம் எனக் கூட்டமைப்பினருக்கு புத்திமதியும் கூறிச் செல்லவும் அவர் தவறவில்லை. அமெரிக்க இராஜதந்திரிகள் அரசுமுறைப் பயணத்தின்போது கருத்துச் சொல்வதிலும் ஒரு ஒழுங்குமுறை உண்டு. தாம்…

  7. இறந்தவர்களை நினைவுகூர்தல் நிலாந்தன் சில ஆண்டுகளுக்கு முன் ஜே.வி.பி.யின் முன்னாள் மூத்த உறுப்பினர் ஒருவரோடு உரையாடும்போது அவர் சொன்னார், 'ஜே.வி.பியின் இரண்டாவது கிளர்ச்சி நசுக்கப்பட்டபின் அதில் கொல்லப்பட்டவர்களை நினைவுகூர்வது என்பது உடனடுத்து வந்த ஆண்டுகளில் மிகவும் ஆபத்தாக இருந்தது. ஆனால் சந்திரிக்காவின் வருகைக்குப் பின் நிலமை மாறத் தொடங்கியது. 90 களின் முன்கூறில் ஓரளவுக்கு இரகசியமாக இறந்தவர்களை நினைவுகூரக் கூடியதாக இருந்தது. அப்பொழுது அது மிகவும் புனிதமானதாகவும் ஒரு வழிபாடாகவும் இருந்தது. அந்த வழிபாட்டிற்கு ஓர் ஆத்மா இருந்தது. பின் வந்த ஆண்டுகளில் நிலமைகள் மேலும் இறுக்கம் குறைந்தன. இதனால் இறந்தவர்களை நினைவு கூர்வது ஆபத்தற்ற ஓர் அரசியல் நிகழ்வாக மாறியது. அந்நாட்கள…

    • 1 reply
    • 827 views
  8. அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் ஜோன் கெரியின் இலங்கை விஜயமே இந்த வாரம் பெரிய செய்தியாகிற்று. அவர் அரச தலைவர்களை மட்டுமன்றி தமிழ் அரசியல் தலைவர்கள் சிவில் சமூக பிரமுகர்கள் எனப் பலதரப்பட்டவர்களைச் சந்தித்து சென்றிருக்கின்றார். கடந்த சில வருடங்களாக ஸ்ரீலங்கா அரசின் மீது அழுத்தம் கொடுக்கக்கூடிய சக்தியாகவும், ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் அதற்கு எதிரான பிரேரணையைக்கொண்டு வருவதற்கு உதவிய சக்தியாகவும் அமெரிக்கா இயங்கியதனால் இவருடைய வருகை தமிழ் மக்கள் விசேடமாகக் கவனம் செலுத்தும் வருகையாகி விட்டது. புதிய அரசாங்கத்துடன் தனது நல்லுறவுகளைப் புதுப்பித்துக்கொண்டிருக்கும் பின்னணியில், தமிழ் மக்களின் நலன்களையொட்டி அமெரிக்கா எடுக்கப் போகும் நிலைப்பாடுகள் யாவை என்பதே கேள்வியாகும். இக்கேள்வ…

    • 1 reply
    • 348 views
  9. இணக்க அரசியல் தோல்வியடைந்துள்ளது சமூக ஆய்வாளர் நிலாந்தனுடன் ஒரு நேர்காணல் ஆட்சி மாற்றத்திற்குப் பின்னரான தென்னிலங்கை அரசியல் சூழலையும் தமிழர் அரசியல் சூழலையும் எப்படிப் பார்க்கின்றீர்கள்? தென்னிலங்கை அரசியல் சூழல் ஸ்திரமற்றதாக மாறியிருக்கின்றது. அதேநேரம் அது அதிகம் வெளிச்சக்திகளுக்குத் திறந்து விடப்பட்டதாகவும் மாறியிருக்கின்றது. ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்படும் 2009 மே மாதத்திற்கு முன் வரையிலும் இலங்கையில் தமிழ் அரசியல் ஒரு வகையில் மூடப்பட்டதாக இருந்தது. அதாவது வெளிச்சக்திகள் எளிதில் கையாள முடியாததொன்றாகவும், வெளிச்சக்திகளால் கையாளப்பட முடியாததொன்றாகவும் வெளிச்சக்திகளின் தலையீடுகளுக்கு வரையறுக்கப்பட்ட ஒரு பரப்பாகவும் காணப்பட்டது. 2009 மே மாதத்திற்குப் பின…

  10. ஹெரி - கூட்டமைப்பு சந்திப்பில் அமெரிக்கா இராஜதந்திர நடைமுறைகைளை உதாசீனம் செய்ததா? யதீந்திரா ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து இலங்கைக்கு விஜயம் செய்த முதல் முக்கிய நபர் இந்திய பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி ஆவார். அதனைத் தொடர்ந்து அண்மையில் அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் ஹெரி, இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார். அமெரிக்காவை பொறுத்தவரையில் அதன் மிக உயர் பொறுப்புக்களில் ஒன்றை பிரதிநிதித்துவம் செய்பவரின் இலங்கை விஜயமானது ஒரு குறியீட்டு அரசியல் பெறுமதியை கொண்டதாகும். தன்னுடைய தோல்விக்குப் பின்னால் இந்திய, அமெரிக்க உளவுத் துறைகளின் திரைமறைவு சதியிருப்பதாக முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச கூறிவரும் நிலையில்தான், ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து இந்திய பிரதமரின் விஜயமும், தற்போது அமெர…

    • 1 reply
    • 493 views
  11. சிறிலங்காவில் இருந்து ஓரம்கட்டப்பட்டுள்ள சீனா சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் சொந்த இடத்தில் புதிய விமான நிலையம் ஒன்றை அமைப்பதற்காக சீனா 200 மில்லியன் டொலர்களுக்கும் மேல் வழங்கியிருந்தது. இது சீன அரசாங்கத்தின் சிறந்த முதலீடுகளில் ஒன்றாகக் காணப்படவில்லை. 2013ல் மத்தல ராஜபக்ச அனைத்துலக விமான நிலையம் திறந்து வைக்கப்பட்டது. ஆனால் இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில் தற்போது இந்த விமான நிலையத்தின் ஊடாக நாளொன்றுக்கு ஒரேயொரு விமான பறப்பு மட்டுமே அதாவது டுபாய்க்கான விமான சேவை மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது. ஜனவரி மாதத்தில், ராஜபக்சவின் மீள்தேர்தல் பரப்புரையானது தோல்வியில் முடிவடைந்த பின்னர், சிறிலங்கா அரசுக்குச் சொந்தமான சிறிலங்கா எயர்லைன்ஸ் மத்தல விமான நிலைய…

  12. ஈழத்தமிழரின் விடுதலைக்கான அடிப்படை நிறுவன கட்டமைப்புக்கள் தத்தர் ஈழத்தமிழரின் வாழ்வில் பல விடயங்களை அடிப்படையிலிருந்தும் ஆரம்பத்திலிருந்தும் தொடங்க வேண்டியுள்ளன. ஈழத்தமிழரின் விடுதலைக்கான அடிப்படை நிறுவன கட்டமைப்புக்களை அவசர அவசரமாக உடனடியாக தொடங்க வேண்டியுள்ளது. உதிரியாகவும் எதிரும் புதிருமாகவும் நாம் செயற்படுவதன் மூலம் மரத்தின் கிளையில் அமர்ந்துகொண்டு அக்கிளையை வெட்டுவதுபோல் எமக்கு நாமே தீங்கை தேடிக்கொண்டிருக்கிறோம். சரியான கருத்தாக்கமும் அதனை செயற்படுத்துவதற்கான நிறுவன அமைப்புக்களும் இருக்குமேயானால் இத்தகைய தவறுகள் தோன்ற இடம் இருக்காது. எல்லாவற்றிற்கும் மேலாக எம்மிடம் சரியான கருத்து மண்டலம் இருக்கவேண்டும். அவ்வாறான கருத்து மண்டலத்தை உருவாக்குவது என்பது …

  13. சம்பூர்: மீள்குடியமர்த்தப்படுவார்களா மக்கள் – ஒரு பார்வை தற்போதைய பீல்ட் மாஸ்ரர் சரத்பொன்சேகா அவர்களுக்கு 2006 சித்திரை மாதம் கொழும்பில் தமிழீழ விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதலின் காரணமாக மறுநாள் பழிவாங்கும் வகையில் திருகோணமலை மாவட்டத்தின் சம்பூர் பகுதி நோக்கி சரமாரியான செல், பீரங்கி தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக அலறியடித்து உடுத்த உடுப்புடன் கையில் எடுத்தவற்றுடன் ஓடிய சம்பூர் மக்கள் இடம் பெயர்ந்து 10 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இம் மக்களின் மீள்குடியேற்றத்திற்கான நம்பிக்கையான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இவ்வாறான நீண்ட இடம் பெயர்வையும் அகதி வாழ்வையும் சந்தித்த இந்த மக்களின் மீள்குடியேற்றம் எவ்வகையில் நிகழப்போகின்றன எ…

  14. “இலவச கல்வி தருகிறார்கள். மகா பொல புலமை பரிசில் பணம் தருகிறார்கள். தின்னும் நிவாரண அரிசியிலிருந்து அனைத்தையும் இலவசமாக தரும் சிறிங்கா அரசாங்கத்தினை எதிர்க்கவும் புறக்கணிக்கவும் பிரசாரம் செய்துகொண்டு வெளிநாட்டிலிருக்கும் உங்களுக்கு தாயத்திலுள்ள மக்களின் யதார்த்தநிலை பற்றி என்ன தெரியும்” தாயகத்தின் நிலமை குறித்தும் தாயகத்தின் விடுதலை குறித்தும் இறுக்கமாக நடக்கும்; விவாதங்களின் நீட்சியில் புலம்பெயர்ந்துவாழும் தமிழ்மக்களின் வாயை அடைப்பதற்காக எதிர்தரப்பினால் முன்வைக்கப்படும் ஒற்றை வாக்கியம் இதுவாகும். இந்த ‘எதிர்த்தரப்பு’ அநேக தருணங்களில் தாயகத்திலிருந்து பேசும் குரலாக இருப்பதே இல்லை. மாறாக, தாயக மக்களுக்காக கரிசனைப்படுவதுபோன்ற போர்வையில் புலம்பெயர்ந்த மண்ணிலேயே இருந்துகொ…

    • 5 replies
    • 517 views
  15. குளோபல் தமிழ்ச் செய்திகளுக்காக தமிழில் கவின்:- சர்வதேச யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட இலங்கைப் படையினரின் பெயரை புனர்நிர்மானம் செய்ய சிறந்த சந்தர்ப்பமாக நேபாளத்தில் இடம்பெற்ற பூமியதிர்வினை பயன்படுத்திக் கொள்ள தூர நோக்குடன் ஜனாதிபதியும் பிரதமரும் முயற்சிக்கின்றனர். இதன் ஓர் கட்டமாக நேபாளத்தில் இடம்பெற்ற பூமியதிர்வினை பயன்படுத்திக் கொள்ள பிரதமரும் ஜனாதிபதியும் தீர்மானித்துள்ளனர். நேபாளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்கவும் மீட்புப் பணிகளை மேற்கொள்ளவும் படையினர் அனுப்பி வைக்கப்பட்டனர். உலகின் எந்தவொரு மூலையில் அனர்த்தம் ஏற்பட்டாலும் அந்த அனர்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தோள் கொடுப்பது நாகரீகமான மனித சமூகத்தின் த…

    • 0 replies
    • 225 views
  16. கதவுகளை திறக்கும் அமெரிக்கா! [ ஞாயிற்றுக்கிழமை, 03 மே 2015, 08:59.20 PM GMT ] பயணிகள் விமானங்களின் வருகை, புறப்படுகையால் எப்போதும் பரபரப்பாக இருக்கும், கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு கடந்த மாதம் 19 ஆம் திகதி, இராணுவ விமானம் ஒன்று வந்திறங்கியது. அது 26 பேர் பயணம் செய்யக் கூடிய அமெரிக்க கடற்படையின் சி-2 ரக போக்குவரத்து விமானம். அமெரிக்க கடற்படையினரின் பயன்பாட்டுக்காக மட்டுமே தயாரிக்கப்பட்ட அந்த விமானத்தில், இரண்டு விமானிகள், இரண்டு விமானப் பணியாளர்கள், மற்றும் சில அமெரிக்க கடற்படை அதிகாரிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கினர். ஆனால் அவர்கள், அதிலிருந்து இறங்கி விமான நிலையத்துக்குள் நுழையவில்லை. கட்டுநாயக்க விமான நிலையத்துடன் இணைந்ததாக உள்ள, விமானப்படைத்…

  17. தேசியக்கொடி கற்பிதமும் உண்மையும் இலங்கையின் தேசியக் கொடி பற்றிய சர்ச்சை சமகால அரசியல் அரங்கில் மேலோங்கிவிட்டிருப்பதை இந்த நாட்களில் கவனித்திருப்பீர்கள். இந்த போக்கின் பின்னால் உள்ளார்ந்திருக்கும் அரசியல் நலன்கள், பேரினவாதிகளின் பாசிச நலன்கள், அவர்களின் நீண்டகால குறுங்கால தந்திரோபாயங்கள், அவர்களின் திசைவழி என்பன குறித்து அலட்சியப்படுத்திவிட முடியாது. தேசியக் கொடி என்பது தமிழர்களைப் பொறுத்தளவில் அவ்வளவு அக்கறைக்குரிய ஒன்றாக இல்லாமல் போய் நெடுங்காலம் ஆகிவிட்டாலும் கூட அரசியல் தளத்தில் தேசியக்கொடியை சிறுபான்மை தேசிய இனங்களுக்கு எதிரான ஒரு வடிவமாக முன்னெடுக்கப்பட்டு வருவதை அலட்சியப்படுத்திவிட முடியாது. மேலும் சிங்கள பௌத்த பேரினவாதம் என்பது நிருவனமயப்பட்டது என…

    • 0 replies
    • 586 views
  18. அமெரிக்காவின் ஜனநாயம்மனித உரிமைகள் தொழிலாளர் ஆகியவற்றிற்கான உதவி இராஜாங்க செயலாளர் டொம் மலினொவ்ஸ்கி இலங்கைக்கு சமீபத்தில் விஜயம் மேற்கொண்டார்.அவரது விஜயத்தை உற்றுநோக்கும் போது அதுமிகவும் ஆக்கபூர்வமானதாக அமைந்துள்ளதாக தெரிகின்றது. இலங்கையின் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்த பாரிய மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் முல்லைதீவிற்கு அவர் விஜயம் மேற்கொண்டார். தனது இலங்கை விஜயத்தின் போது அவர் ஊடகவியலாளர்கள் மத்தியில் பகிர்ந்துகொண்ட விடயங்களை வைத்துப்பார்க்கும்போது புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் இலங்கையில் நடைபெற்றுவரும் மாற்றங்கள் குறித்து அவர் உற்சாகமடைந்திருப்பதாக புலனாகியுள்ளது. அவர் இலங்கைப் பத்திரிகை ஒன்றிற்கு எழுதிய கட்டுரையில் அவர் இன்னும் நம்பி…

    • 0 replies
    • 252 views
  19. புதிய அரசியல் சூழ்நிலையை சரியாக பயன்படுத்த வேண்டும்! - கூட்டமைப்புக்கு ஜோன் கெரி அறிவுரை!! இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நல்லதொரு அரசியல் சூழ்நிலையை தமிழ்த் தரப்பினர் சரியாகப் பயன்படுத்திக் கொள்வதன் மூலமே, சுமுகமான அரசியல் தீர்வொன்றை காணமுடியும் என அமெரிக்க இராஜாங்க அமைச்சர் ஜோன் கெரி தெரிவித்துள்ளார். சிறிலங்காவுக்கு இரண்டு நாள் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டு கொழும்பைச் சென்றடைந்த அமெரிக்க இராஜாங்க அமைச்சர் ஜோன் கெரி இன்று ஞாயிற்றுக்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை கொழும்பில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய போதே இவ்வாறு அறிவுறுத்தியுள்ளார். கொழும்பு தாஜ் சமுத்ரா நட்சத்திர விடுதியில் இன்று காலை 9.30 மணியிலிருந்து 10.15 மணிவரை இடம்பெற்ற இந்தச் சந்த…

  20. 19 ஆவது திருத்தம் தமிழ் மக்களுக்கு நன்மையானதா? நிலாந்தன் இலங்கைத் தீவின் அரசியல் அமைப்பு 19 ஆவது தடவையாகத் திருத்தப்பட்டுள்ளது. ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்தபின் செய்யப்பட்ட இரண்டாவது திருத்தம் இது. ஆட்சிமாற்றத்தை உருவாக்கிய, அதைப் பின்னிருந்து பலப்படுத்துகின்ற மேற்கு நாடுகளும் இந்தியாவும் இத்திருத்தத்தை வரவேற்றிருக்கின்றன. கூட்டமைப்பும் இத்திருத்தத்தை வரவேற்றிருக்கின்றது. ஜனநாயக அடிப்படைகளை பலப்படுத்த இத்திருத்தம் உதவும் என்று அதை ஆதரிப்பவர்கள் கூறுகிறார்கள். அரசாங்கம் தனது வாக்குறுதிகளில் ஒன்றை ஓரளவுக்கேனும் நிறைவேற்றியிருப்பதாகப் பெருமைப்பட்டுக்கொள்கின்றது. மெய்யாகவே 19 ஆவது திருத்தம் இலங்கைத் தீவின் ஜனநாயக வெளியை பலப்படுத்தியிருக்கிறதா? குறிப்பாக இனப்பிரச்சினைக்…

  21. 19ஆவது திருத்தச் சட்டம் நிறைவேறியது, அடுத்தது என்ன? - யதீந்திரா - on May 2, 2015 படம் | LANKAPUVATH சந்தேகத்துடன் எதிர்பார்க்கப்பட்ட 19ஆவது திருத்தச் சட்டம் எதிர்பார்ப்புக்களை பொய்ப்பிக்கும் வகையில் அறுதிப் பெரும்பான்மை வாக்குகளால் வெற்றி பெற்றிருக்கிறது. ஆரம்பத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறுவதே கடினமென்று எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், 212 வாக்குகளால் 19ஆவது திருத்தச் சட்டம் நிறைவேறியிருப்பது அனைவராலும் ஆச்சரியமாகப் பார்க்கக் கூடிய ஒன்றே. ஆனால், வெளியில் வியப்பாக பார்க்கப்படுவது போன்று அவ்வளவு எளிதாக மேற்படி திருத்தம் நிறைவேறிவிடவில்லை. பல்வேறு சமரசங்கள் இடம்பெற்றிருக்கின்றன. ஆனாலும், ஒரு சில முன்னேற்றகரமான விடயங்களும் மேற்படி சட்டத்திருத்தின் ம…

  22. நிலைமாற்று நீதிக்கான ஐ.நா. நிபுணரின் அறிக்கையும் தமிழரின் நீதிப் பயணமும் நிறான் அங்கிற்றல் படம் | INFOLIBRE மனித உரிமை குற்றங்களையிட்ட உண்மை, நீதி ஆகிய விடயங்களிலே ஐக்கிய நாடுகள் விசேட நிபுணர் பப்லோ டீ கிறீப் என்பவர் ஏப்ரல் முதல் வாரத்திலே இலங்கைக்கான தனது விஜயத்தை முடித்துக்கொண்டு அண்மையிலே அந்த விஜயம் தொடர்பான தனது அவதானிப்புக்களை வெளியிட்டிருந்தார். இலங்கையிலே இழைக்கப்பட்ட சர்வதேச குற்றங்களையிட்ட நீதி மீது ஆர்வம் கொண்ட ஆர்வலர்கள் அந்த அவதானிப்புக்களை உன்னிப்பாகக் கவனிக்கவேண்டும். பப்லோ டீ கிறீப் என்பவர் நிலைமாற்றுக்காலநீதியிலே பிரசித்திபெற்ற நிபுணர் என்பதால் மாத்திரமன்றி இலங்கையின் பொறுப்புக்கூறலைக் கண்காணிக்கவும், வேண்டப்படும்போது அரசுக்கும் சிவில் சமூகத்துக்…

  23. ஆயிரம் முட்டையிட்ட ஆமைகள் [ வெள்ளிக்கிழமை, 01 மே 2015, 07:11.21 AM GMT ] யாழ்ப்பாணம் கச்சேரி நல்லூர் வீதியில் முத்திரைச் சந்தைக்குக் கிட்ட அம்பலவாணர் குமாரவேலு என்பவர் காலமாகிவிட்டார். அவரை நாட்டுப்பற்றாளராக அறிவிக்கவும் " இரு வாக்கியங்களில் அரசியல்துறை நடுவர் பணியகத்துக்கு செய்தியை அனுப்பினர். ஒரு போராளி இவரது சாவு தொடர்பாக பொட்டம்மானுக்கு அறிவித்தார். சமாதானம் நிலவிய காலப்பகுதி ஆதலால் அரசியற்துறை நடுவப்பணியகம் நல்லூர் வட்டப் பொறுப்பாளரிடம் காலமானவரின் விபரங்கள்- போராட்டப் பங்களிப்பு பற்றிய அறிக்கையினை அனுப்புமாறு கோரியிருந்தது. ஏற்கனவே தனது பகுதியில் நிகழும் மரணச் சடங்கு என்ற வகையில் அங்கு போயிருந்தாலும் இம்முறை விபரங்களைப் பெறச் சென்றார் வட்டப் பொறுப்பாளர். திரும…

  24. இனவாதத் தடைச்சட்டம் தமிழர்களை ஒடுக்கும் புதிய சட்டமா? குளோபல் தமிழ் செய்திகளுக்காக அன்பழகன்:- 26 ஏப்ரல் 2015 ஈழத் தமிழ் மக்களை ஒடுக்கவும் பௌத்த சிங்களப் பேரினவாதத்தை வளர்ப்பதற்காகவுமே இலங்கையில் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. தனிச்சிங்கள சட்டம், பயங்கரவாத தடைச்சட்டம், அவசரகாலச்சட்டம் என பல சட்டங்களை இதற்கு உதாரணமாக குறிப்பிடலாம். பௌத்த சிங்களப் பேரினவாத ஒடுக்குமுறைக்கு எதிரான ஈழத் தமிழர் போராட்டத்தை ஒடுக்கும் இந்தச் சட்டங்கள் தமிழ் மக்களை கடுமையாக ஒடுக்கியுள்ளன. இதனால் தமிழ்மக்களின் இயல்பான வாழ்வு கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இயல்பான வாழ்வை பாதிக்க வைத்தலின் ஊடாக போராட்டத்தை கைவிடச் செய்வதும் இந்தச் சட்டங்களின் நோக்கங்களாகும். இனவாதம், மதவாதம் ஆகியவற்ற…

  25. சந்திரிகாவிற்கு பாவமன்னிப்பு வழங்கிய தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு முத்துக்குமார் தந்தை செல்வா ஞாபகார்த்த நினைவுப் பேருரையினை நிகழ்த்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தத் தடவை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்கவினை அழைத்திருக்கின்றது. அவர் 'யுத்ததத்தின் முடிவு சமாதானமாகாது' என்ற தலைப்பில் தனது நினைவுப் பேருரையை ஆற்றியிருக்கின்றார். தந்தை செல்வா தமிழ்த் தேசிய அரசியலின் ஒரு காலகட்டத்தை நகர்த்திய பெருமைக்குரியவர். 1949 ஆம் ஆண்டு அகில இலங்கைத் தமிழரசுக் கட்சியை தோற்றுவித்ததன் மூலம் தமிழ் இன அரசியலை தமிழ்த் தேசிய அரசியல் என்ற கட்டத்திற்கு வளர்த்துச் சென்றார். மக்களை இணைத்த வெகுஜனப் போராட்டம் என்ற அரசியல் அணுகுமுறையினை ஆரம்பித்து வைத்தார். தந்தை செல்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.