அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9213 topics in this forum
-
மோசமான பொருளாதாரம், சிரியா, ஈராக், லிபியா ஆகிய நாடுகளில் உள்நாட்டுப் போர், காசா இரத்தக் களரி, அடங்க மறுக்கும் பலஸ்த்தீனம், ஆதிக்க வெறி கொண்ட இஸ்ரேல், உக்ரேனில் வல்லரசுகளின் முறுகல் நிலை, தென் சீனக் கடலிலும் கிழக்குச் சீனக்கடலிலும் மோதல் நிலை, தொடரும் படைக்கலன்கள் பெருக்கும் போட்டி ஆகியவற்றுடன் 2014-ம் ஆண்டு முடிவடைந்தது. இவை மட்டுமல்ல இன்னும் பல பிரச்சனைகள் 2014-ம் ஆண்டில் இருந்து 2015 ஆண்டிற்கு முதிசமாகக் கிடைத்துள்ளன. ஆனாலும் ஓர் ஒளிக் கீற்றாக குறைவடைந்த எரிபொருள் விலை தோன்றியுள்ளது. உலகப் பொருளாதாரத்தில் மட்டுமல்ல உலகெங்கும் புவிசார் அரசியலிலும் 2015-ம் ஆண்டில் பெரும் மாற்றத்தை எரிபொருள் விலையே ஏற்படுத்தப் போகின்றது. 2015-ம் ஆண்டு பல நாடுகள் குடிவரவிற்கு எதிரான கடுமை…
-
- 0 replies
- 1.2k views
-
-
அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குலில் விடுதலைப்புலிகளுக்கும் சம்பந்தம்? – நிராஜ் டேவிட் by admin June 30, 2013 இந்தத் தலைப்பு எம்மில் பலருக்கு ஒரு புதிய செய்தியாக இருக்கலாம். சிலருக்கு அதிர்ச்சியான ஒரு செய்தியாகக்கூட இருக்கலாம். ஆனால் இப்படியான ஒரு செய்தி சில மேற்குலக ஊடகங்களிலும், பயங்கரவாதம் பற்றிய பல ஆய்வுக் கட்டுரைகளிலும் சில வருடங்களுக்கு முன்னர் வெளியிடப்படிட்டிருந்ததை நாம் மறுத்துவிட முடியாது. 1993ம் ஆண்டு பெப்ரவறி மாதம் 26ம் திகதி அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் இருந்த உலக வர்த்தகமையமான இரட்டைக் கோபுரத்தைக் குறிவைத்து இஸ்லாமியத் தீவிரவாதிகள் குண்டுத்தாக்குதல் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்கள். (2001 செப்டெம்பர் 11 இரட்டைக் கோபுரத்தின் மீது மேற்கொள்ளப்பட…
-
- 0 replies
- 950 views
-
-
ஜனாதிபதி தேர்தல் நிலைப்பாடு: தனித்து ஓடும் சம்பந்தன் - சுமந்திரன் கூட்டணி முத்துக்குமார் ஜனாதிபதி தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்தவித நிபந்தனையும் இல்லாமல் பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்துள்ளது. கூட்டமைப்பு மைத்திரி ஆதரவு நிலை எடுத்தமைக்கு மேற்குலகினதும் இந்தியாவினதும் அழுத்தம்தான் பிரதான காரணம். இவை ஆட்சிமாற்றத்தினை விரும்புகின்றன என்பது கடந்த சில வருடங்களாக எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். மேற்குலகத்தையும், இந்தியாவையும் பொறுத்தவரை இரண்டு வேலைத்திட்டங்கள் உள்ளன. ஒன்று ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வருவது, இரண்டாவது தனக்குச் சாதகமான ஆட்சியைப் பாதுகாப்பது. இரண்டிற்கும் முக்கியமான நிபந்தனை தமிழ்த் தேசிய அரசியல் எழுச்சியடைய விடாமல் …
-
- 3 replies
- 2.6k views
-
-
1991ம் ஆண்டு ஜுலை மாதம் 10 திகதி. சிறிலங்கா இராணுவத்திற்கு எதிராக ஒரு மிக முக்கிய தாக்குதலை விடுதலைப் புலிகள் ஆரம்பித்த தினம். சிறிலங்காவில் மிகவும் கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த சிpலங்கா ஆணையிறவுப் படைத்தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் மிகப் பெரிய இராணுவ நடவடிக்கை ஒன்றினை ஆரம்பித்திருந்தார்கள். ஒரு பிரதான இராணுவ முகாம் மற்றும் ஆறு சிறிய முகாம்களைக் கொண்ட அந்த பாரிய இராணுவத் தளத்தில், சிறிலங்கா சிங்க ரெஜமன்;ட்(Sri Lanka Sinha Regiment )இனது ஆறாவது பட்டாலியனை (6th battalion) சேர்ந்த 600 படைவீரர்கள் தங்கியிருந்தார்கள். அந்தப் பாரிய படைத்தளத்தைத்தான் விடுதலைப்புலிகள் அந்த நேரத்தில் முற்றுகையிட்டிருந்தார்கள். ஆனையிறவு சிறிலங்காப் படைத்தளம் மீதான முற்றுகைக்கு விடுதலைப் …
-
- 3 replies
- 1.4k views
-
-
நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ முடிவு வெளியாகிவிட்டது. அதாவது, எதிர்வரும் ஜனவரி 8ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில், பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிப்பதாக கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் உத்தியோகபூர்வமாக அறிவித்திருக்கின்றார். கூட்டமைப்பின் மேற்படி முடிவு சிலருக்கு ஆச்சர்யத்தையும், சிலருக்கு ஏமாற்றத்தையும், சிலருக்கோ ஆதங்கத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. கூட்டமைப்பில் அங்கத்துவம் வகித்துவரும் சில கட்சிகளின் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில், சம்பந்தனின் மேற்படி முடிவு தொடர்பில் அதிருப்திகள் இருக்கின்றபோதிலும் கூட, அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்…
-
- 0 replies
- 2.4k views
-
-
தாயகத்திலிருந்து வரும் செய்திகள் மற்றும் அறிக்கைகள் அனேகமாக அனைத்துமே மைத்திரியை ஏற்றுக்கொள்வதாகவே வருகிறது. இதை நான் ஏற்றுக்கொள்கின்றேன் எந்த முடிவாகினும் அதை அங்குள்ளவர்களே எடுக்கணும் என்றுமே நாம் அதற்கு பக்கபலமாக இருக்கணும் என்பதே எனது நிலைப்பாடு... போராடுபவனுக்கும் பிரச்சினைக்கு நேரே முகம் கொடுப்பவனுக்கும் தான் தீர்மானிக்கும் உரிமையும் பொறுப்பும் தகுதியுமுண்டு. அந்தவகையில் யாழ் பல்கலைக்கழக பீடம் வடமாகாணமுதலமைச்சர் மற்றும் கூட்டைமைப்பு ஆகியவற்றின் அறிவித்தலை ஏற்றுக்கொள்ளமுடிகிறது.. ஆனால் எனக்கு ஒருவிடயம் இடிக்கிறது இதில் எவரும் மகிந்தவுக்கு எதிராகவோ அல்லது மைத்திரிக்கு ஆதரவாகவோ தமது நிலைகளை மக்களுக்கு தெளிவாக அறிவித்தது வரவேற்கத்தக்கது. ஆ…
-
- 24 replies
- 1.6k views
-
-
தமிழ் நாட்டிலிருந்து அங்குள்ள பெண்கள் இயக்கத்தினைச் சார்ந்த பெண்ணிலைவாதியொருவர் ஜுன் மாதம் 23ம் திகதி சர்வதேச விதவைகள் தினத்தினை நினைவுகூரும் ஓர் சிறிய நிகழ்வுக்கு அழைக்கப்பட்டார். இது வவுனியா மாவட்டத்தில் நெடுங்கேணி பிரதேச செயலாளர் அலுவலகத்தில் சுமார் 30 பெண்களின் பங்கேற்றலுடன் நடந்தது. குறிப்பிடக்கூடத் தேவையில்லாத சம்பவம். ஆனால், துரதிர்~;டவசமாக வட மாகாணத் தேர்தல் இடம்பெறப்போகும் காலத்தில் இது ஏற்பாடு செய்யப்பட்டு விட்டது. அந்த நிகழ்வுக்கு வந்திருந்த புலனாய்வாளர்களினால் இது ஸ்ரீலங்கா அரசினை நிலைகுலையச் செய்ய தமிழ்நாடு செய்கின்ற சதித்திட்டம் என்று தலைமையகத்துக்கு அறிக்கையிடப்பட, ஆரம்பித்தது சதிராட்டம். பயங்கரவாத தடுப்புப் பிரிவுக்கு இந்த விடயம் கையளிக்கப்பட்டு உடனேயே கு…
-
- 4 replies
- 813 views
-
-
தமிழ் பேசும் மக்களின் சிந்தனைக்கு…! வீ. தனபாலசிங்கம் - on January 3, 2015 படம் | AFP/ Lakruwan Wanniarachchi, FCAS ஜனாதிபதித் தேர்தலில் எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெறுவாரேயானால், அவரது தலைமையில் அமையக் கூடிய புதிய அரசு தமிழ்பேசும் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைகளுக்கு தீர்வைக் காண்பதில் அக்கறைகாட்டுமென்ற எதிர்பார்ப்பில் அல்லது நம்பிக்கையில் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதற்கு முன்னதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் அவருக்கு ஆதரவளிக்க முன்வந்திருக்கின்றன என்று எவரும் கூறமாட்டார்கள். அவ்வாறு எவராவது கூறினாலும் கூட, யாருமே நம்பப் போவதுமில்லை. தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் இணக்கத் தீர்வொன்றைக் காண்பதற்கான வழிவகைகள் குறித்தோ …
-
- 0 replies
- 626 views
-
-
மைத்திரியின் இரண்டு உடன்படிக்கைகளும் தமிழ் மக்களும் முத்துக்குமார் பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன இரண்டு உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டிருக்கின்றார். ஒன்று, 33 அரசியற் கட்சிகளும், பொது அமைப்புக்களும் இணைந்து கைச்சாத்திட்ட புரிந்துணர்வு உடன்படிக்கை. இரண்டாவது ஹெல உறுமயவுக்கும் மைத்திரிபால சிறீசேனாவிற்கும் இடையேயான உடன்படிக்கை. இங்கு கவனிக்கப்படவேண்டிய முக்கியவிடயம், ஹெலஉறுமய பொது வேலைத்திட்டத்திற்கான உடன்படிக்கையில் கைச்சாத்திடவில்லை. அதேவேளை அதற்கு எதிராகப் பிரச்சாரம் செய்யவில்லை. பொது வேலைத்திட்டத்தில் உடன்பாடு இருந்தபோதும், தனது தனித்த அரசியல் இலக்குகளை அடைந்துகொள்ளும் வகையில் தனிப்பட்ட உடன்படிக்கையை மேற்கொண்டுள்ளது, அந்த இரண்டு உட…
-
- 1 reply
- 821 views
-
-
சிறிலங்காவின் அதிபர் தேர்தலும் தமிழ்மக்களின் நிலைப்பாடும். நடைபெற இருக்கும் சிறிலங்கா அதிபர் பதவிக்கான தேர்தலில் தமிழர்களின் நிலைப்பாடு என்ன?இதில் மகிந்த தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதில் தமிழர்களிடையே மாற்றுக் கருத்து எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. அதிபர் பதவிக்கான வேட்பாளர்களில் பிரதானமானவர்கள் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் மகிந்தஇராஜபக்கசவும் எதிரணி வேட்பாளராக அதே கட்சியைச் சேர்ந்த மைத்திரிபால சிறிசேனவும் ஆவர்.இது உலகில் எங்கும் நடந்திராத வேட்பாளர் தேர்வாக இருக்கிறது.2009 ஆம் ஆண்டு நடந்த பெரும் இன அழிப்பின்போது அதிபராக இருந்த மகிந்த தமிழர்களின் பெருங்கோபத்திற்கு ஆளான வேட்பாளாராய் இருந்த போதும் எதிரணியில் உள்ளவர்கள் இந்த இன அழிப்புக்கு முற்றிலும் துணைபோனவர்களே என்பதும்…
-
- 2 replies
- 489 views
-
-
ராஜபக்ஷ சகோதரர்களைத் தண்டிக்க வேண்டும் என்பதே தமிழ் பொது உளவியலின் பிரதான கூறாகக் காணப்படுகிறது. ஆனால், இதன் அர்த்தம் தமிழ் மக்கள் மைத்திரியை நம்புகின்றார்கள் என்பதல்ல. படித்த, நடுத்தர வர்க்கத் தமிழர்களைப் பொறுத்த வரை ஏதோ ஒரு மாற்றம் தேவை என்று எதிர்பார்க்கிறார்கள். ஆனால், இதன் அர்த்தம் மைத்திரி மாற்றத்தைக் கொண்டு வருவார் என்று அவர்கள் நம்புகிறார்கள் என்பதல்ல. மைத்திரி எத்தகைய மாற்றத்தைக் கொண்டு வருவார் என்ற கேள்விக்கு அவர்களில் பலரிடம் துலக்கமான பதில் இல்லை. தமிழ்ப் பொது உளவியலின் பெரும் போக்கைக் கருதிக் கூறின், தமிழ் மக்கள் அரசுக்கு எதிராக காணப்படுகிறார்கள் என்பதே சரி. இவ்விதம் அரசுக்கு எதிராக காணப்படும் வாக்குகள் அவற்றின் தவிர்க்கப்படவியலாத தர்க்கபூர்வ விளைவாக மைத்திரி…
-
- 0 replies
- 715 views
-
-
தமிழீழ விடுதலை புலிகள், மே 2009ம் ஆண்டு வரை, தமிழீழ மக்களின் ஏகபிரதிநிதிகளாக விளங்கியவர்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. சிறிலங்கா அரசிடம் கூலி பெற்ற சிலர் கடந்த சில வருடங்களாக இவ்வியக்கத்தை சின்னபின்னமாக்கியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழீழ விடுதலை புலிகளை வெற்றி கொண்டது யார் என்பதை ஆராயும் பொழுது, தேர்தல் பிரச்சார மேடைகளில், மைத்திரிபால சிறிசேனவின் சார்பணியினரான – சந்திரிக்க குமாரதுங்க, தளபதி சரத் பொன்சேகா, ரணில் விக்கிரமசிங்க, மங்கள சமரவீர போன்றோர் தமது நடவடிக்கைகளினாலே தமிழீழ விடுதலை புலிகள் தோற்கடிக்கப்பட்டார்களென வீரம் பேசுகின்றனர். மறுபுறம், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தானும் தனது சகோதரருமான பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோரே வெற்றி கொண்டத…
-
- 0 replies
- 1.4k views
-
-
2015இலங்கை ஜனாதிபதி தேர்தல் குறித்து பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் தொடரும் இந்த வேளையில் இலங்கையில் இருந்து யாதவன் நந்தகுமாரன் இந்தப் பதிவை அனுப்பி வைத்துள்ளார்.... நீங்களும் இந்த விவாதத்தை முன்கொண்டு செல்ல முடியும்... ஆரோக்கியமான முன்னர் வெளியாகாத புதிய பதிவுகளை அனுப்பிவைத்தால் பிரசுரிக்கப்படும்... ஆ.ர் அன்புடையீர் குளோபல் தமிழுக்காக எழுதப்பட்டது பிரசுரித்து உதவுக நன்றி. யாதவன் நந்தகுமாரன். இலங்கையில் சனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் தமிழ் அரசியற் பரப்பிலும் ஊடகப் பரப்பிலும் பல்வேறுபட்ட கருத்துக்கள் முன் வைக்கப்பட்டு வருகின்றன. தமிழ் அரசியற் பிரமுகர்கள் முதல் சிவில் சமூகத்தவர்கள் வரை இரு வேட்பாளர்களையும் ஒரே தராசினில் வைத்து இனவாத சிந்தனையில் தமிழர்களுக்கு எந்…
-
- 1 reply
- 675 views
-
-
மைத்திரிக்கு வாக்களிக்குமாறு எவ்வாறு கோரமுடியும்? by Maatram தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக இதுவரை வாய்திறக்காத, பொதுவேட்பாளராகியும் இன்னும் திறவாத, தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூட தமிழர் தொடர்பாக எதுவும் குறிப்பிடாத, தமிழர்களை வேண்டப்படாதவர்களாக – விரோதிகளாக எண்ணும் மைத்திரிபால சிறிசேனவுக்கு தமிழர்கள் வாக்களிக்க வேண்டும் என எவ்வாறு கோர முடியும் என கேள்வி எழுப்புகிறார் சட்டத்தரணி வி. புவிதரன். இனப்பிரச்சினைக்கான தீர்வு வழங்குவதை விடுத்து தமிழ் மக்களுக்கு குறைந்தபட்ச ஜனநாயக உரிமைகளையாவது தன்னால் வழங்க முடியும் என மைத்திரியால் உறுதியளிக்க முடியுமா என மேலும் அவர் கேள்வி எழுப்புகிறார். ‘மாற்றம்’ தளத்துக்கு வழங்கிய நேர்க்காணலின் போதே மேற்கண்டவாறு கூறினார். அ…
-
- 1 reply
- 723 views
-
-
ஈழத் தமிழர் மனசாட்சியிலும் ஐக்கிய நாடுகள் சபையிலும் குற்றவாளியாக நிறுத்தப்பட்டிருக்கும் மகிந்த ராஜபக்ச, மூன்றாவது முறையாக இலங்கையின் ஜனாதிபதியாகத் துடிக்கிறார். அதற்காக சட்டத்தையே வளைத்துவிட்டார். 'செருப்பு ஆண்ட நாடு இது, எவன் ஆண்டால் என்ன?’ என தந்தை பெரியார் ஒருமுறை கேட்டார். மக்களும் மக்களாட்சித் தத்துவமும் மரணக் குழிக்குள் தள்ளப்பட்டுவிட்ட இலங்கையில், ஜனவரி 8-ம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்கவிருப்பதை நினைக்கும் போது இதுதான் நினைவுக்கு வருகிறது. ஈழத் தமிழர் மனசாட்சியிலும் ஐக்கிய நாடுகள் சபையிலும் குற்றவாளியாக நிறுத்தப்பட்டிருக்கும் மகிந்த ராஜபக்ச, மூன்றாவது முறையாக இலங்கையின் ஜனாதிபதியாகத் துடிக்கிறார். அதற்காக சட்டத்தையே வளைத்துவிட்டார். இலங்கையின் அரசியல் அமைப்புச…
-
- 0 replies
- 586 views
-
-
எதிரணியுடன் எந்தவித ஒப்பந்தத்தையும் செய்து கொள்ளவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு சம்பந்தன் பதிலளித்தார். சம்பந்தன் எம்.பியிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அவரது பதில்களும் வருமாறு:- கேள்வி: இரு தரப்பு தேர்தல் விஞ்ஞாபனத்தையும் நீங்கள் தீவரமாக ஆய்ந்ததாக கூறினீர்கள். மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் 13 பற்றி குறிப்பிடப்படவில்லை. இது குறித்து உங்களது கருத்து என்ன? பதில்: அதன் உள்ளடக்கம் குறித்து நாம் பார்த்தோம். தேர்தல் விஞ்ஞாபனத்தில் இது விடயத்தை எதிர்பார்ப்பது சாத்தியமில்லை. கடந்த 10 வருடமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ந…
-
- 0 replies
- 541 views
-
-
ஜனாதிபதித் தேர்தல் 2015 இல் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஒரு விடயமாக ‘பொதுவேட்பாளர்’ என்ற விடயம் இருந்தது. எதிர்பார்க்கப்பட்டதைப் போலவே, அல்லது எதிர்பார்த்ததற்கும் மேலாக பிரமாண்டமான ஒரு பொதுவேட்பாளராக மைத்திரிபால சிறிசேனா களமிறக்கப்பட்டார். ஆளும் கட்சியிலிருந்தான அவரின் எதிரணித் தாவலுடன் ‘கட்சித்தாவல்’ என்ற ஒரு விடயம் இம்முறை தேர்தலில் முக்கியம் வாய்ந்ததாக மாறியிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது தொடர்பான உத்தியோகபூர்வ பிரகடனத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த 20.11.2014 அன்று கைச்சாத்திட்டார். அன்றைய தினமே வசந்த சேனநாயக்க எம்.பி. கட்சி தாவினார். கடந்த 22ஆம் திகதி அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் கட்சி தாவல் வரை அது தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. ஆளும், எதிர்த்தரப்புகளில…
-
- 0 replies
- 602 views
-
-
இந்திய அமைதிப்படையை நியாயப்படுத்தும் ஜெயமோகனிற்கு இலக்கிய தேட்ட விருது!!! ஒரு படைப்பு என்பது எப்பொழுதும் மக்களிற்கானது. மக்கள் பக்கம் இருந்து எழுதும் படைப்பாளியின் எழுத்துகள் மக்கள் விரோத கருத்துக்களை அம்பலப்படுத்தும். பொய்களை தோலுரிக்கும். நிலப்பிரபுத்துவம், முதலாளித்துவம், கத்தோலிக்க திருச்சபை என்பவற்றை எதிர்த்துப் போரிட்டன மாக்சிம் கோர்க்கியின் எழுத்துக்கள். அதனால் தான் அவரின் "தாய்" இன்றைக்கும் இலட்சக்கணக்கானவர்களால் வாசிக்கப்படுகிறது. "தாயை" படிப்பவர்களின் மனதில் புரட்சித்தீயை அவரின் கருத்துகள் ஏற்றி விடுகின்றன. "வால்காவில் இருந்து கங்கை வரை" என்று இராகுல சங்கிருத்தியன் எழுதியவைகள் புராணப்பொய்களை சின்னாபின்னமாக உடைத்து மக்கள் வரலாற்றை உண்மையின் வெளிச்…
-
- 0 replies
- 935 views
-
-
I இரு பெரும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு அப்பால் ஈழப்பிரச்சினை குறித்து நிறைய எழுதி வந்திருக்கிற, மாவோகால சீனசார்பு கொண்ட மார்க்சியரான எஸ்.வி.ராஜதுரை தொடர்ந்து இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுடையதும் ஈழம் தொடர்பான பாரா முகங்களைக் கடுமையாக விமர்சித்து வந்தவர். ஈழம் தொடர்பாக அவர் எழுதி வந்த எழுத்துக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குறித்துக் கடுமையான விமர்சனங்களையே கொண்டிருந்தன. தனித் தமிழீழத்தை அவர்கள் அங்கீகரிக்காதது குறித்து தனது கடுமையான விமர்சனங்களை ராஜதுரை தொடர்ந்து முன்வைத்து வந்திருக்கிறார். திருநாவுக்கரசு மற்றும் சேரன் போன்றோர் எழுதிய ஈழப் போராட்டம் குறித்த அரசியல் மற்றும் கவிதை நூல்களைத் தமிழகத்ததில் எஸ்.வி.ராஜதுரைதான் பதிப்பித்தார். மனித உரிமைப் பிரச்சினையினாலும் இன்னபி…
-
- 0 replies
- 784 views
-
-
1987ம் ஆண்டு அக்டோபர் மாதம் 10ம் திகதி. விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்தியா தனது இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்த தினம். ஒரு மோசமான வரலாற்றை இரத்தத்தால் எழுதுவதற்கு பாரத தேசம் தேர்ந்தெடுத்த தினம் அது. இந்தியா தனது வரலாற்றில் எடுத்த மிகவும் மோசமான ஒரு முடிவு என்று பின்நாட்களில் அரசியல் ஆய்வாளர்களினாலும், போரியல் வல்லுனர்களினாலும் குறிப்பிடப்பட்ட அந்த இராணுவ நடவடிக்கையை இந்தியா ஆரம்பித்த தினம். அன்று ஆரம்பிக்கப்பட்ட அந்த இராணுவ நடவடிக்கை சுமார் 22 வருடங்களையும் கடந்து முள்ளிவாய்கால் வரை தொடரப் போகின்றது என்று இந்தியாவின் தலைவர்களோ அல்லது விடுதலைப் புலிகளின் தலைவர்களோ கனவு கூடக் கண்டிருக்கமாட்டார்கள். அன்று காலை யாழ்பாணத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்தி…
-
- 60 replies
- 16.5k views
-
-
கொந்தளிக்கும் சமுத்திரம். ஒரு படகு. படகிலே ஒரு தாயும் மகனும் தனியே. நீண்டநாட்களாக தட்டித்தடுமாறி அந்தப்படகிலே பயணிக்கிறார்கள். இன்னமும் எவ்வளவுதூரம் ஓடவேண்டுமோ தெரியாது. தாயும் களைத்துவிட்டாள். மகனுக்கும் ஓடி ஓடிக் களைத்துப்போய்விட்டது. வந்த வழியும் தெரியவில்லை. இன்னமும் எவ்வளவுதூரம், எங்கே போகப்போகிறோம் என்கின்ற எந்த இழவும் அந்தச்சிறுவனுக்கு புரியவில்லை. நாட்கணக்குகளாகவிருந்த காத்திருப்பு, மாதங்களாகி வருடங்களாகிவிட்டன. பயணித்துக்கொண்டிருக்கிறார்கள். ஒருநாள் காலையில் படகிலே தூக்கம் கலைந்து எழுந்தபோது, தூரத்தே இரண்டு பெரும் மலைப்பாறைகளை சிறுவன் காண்கிறான். தாய் ஏற்கனவே அந்த இரண்டு பாறைகளையும் வெறித்துப் பார்த்துக்கொண்டே இருக்கிறாள். “அப்பாடி .. ஒருமாதிரி தரையைக் கண்ட…
-
- 0 replies
- 974 views
-
-
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரும் தற்போதைய சுகாதார அமைச்சருமான திஸ்ஸ அத்தநாயக்க, கடந்த 23ஆம் திகதி விசித்திரமானதோர் கண்டுபிடிப்பை வெளியிட்டார். ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவும் இரகசிய ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டு இருக்கிறார்கள் என்பதே அந்த கண்டுபிடிப்பாகும். அன்றே, அத்தநாயக்கவின் கண்டுபிடிப்பைப் பற்றி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் தேர்தல் பிரசார கூட்டமொன்றின் போது தெரிவித்தார். அவர்கள் கூறும் அந்த ஒப்பந்தத்தின் படி, வடக்கில் நிறுத்தப்பட்டுள்ள படை வீரர்களின் தொகை அரைவாசியால் குறைக்கப்படும். வடக்கில் உயர் பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்படும். போர் குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்படும். அரச…
-
- 0 replies
- 444 views
-
-
“பிள்ளையான் என்னை கொல்ல விரட்டிக்கொண்டு வந்தார்.... தமிழ் தேசிய முன்னணி மூலம் எனக்கு கொலை அச்சுறுத்தல் இருக்கிறது” இப்படி கூறியிருப்பவர் அம்பிடியே சுமனரதன தேரோ என்கிற பௌத்த பிக்கு. இவர் சமீப காலமாக சிங்கள ஊடகங்களில் ஒரு சிங்கள ஹீரோவாக ஆக்கப்பட்டுள்ளார். கடந்த 19 அன்று மட்டகளப்பில் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்திற்காக ஜனாதிபதி மகிந்த சென்றிருந்தபோது சுமனரதன தேரோ சிங்களவர்களை அழைத்துக் கொண்டு சென்று கூட்டம் நடந்த இடத்துக்கு வெளியில் பெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தினார். அந்த ஆர்ப்பாட்டத்தை கலைக்க போலீசார் எடுத்த முயற்சி இறுதியில் கைகலப்பில் முடிந்தது. ஆர்ப்பாட்டாத்தில் ஈடுபட்ட ஒருவரை கட்டுபடுத்த எடுத்த முயற்சியில் அவரது உள்ளாடைகள் களைந்தது. இவை அனைத்தையும் வீடியோ எடுக்கும்படி …
-
- 0 replies
- 666 views
-
-
அது இப்பொழுதுதான் நடந்தது போல இருக்கின்றது. 2005ம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ம் திகதி அதிகாலை 1.20 மணியளவில் கிறிஸ்மஸ் ஆராதனையின் பொழுது திரு.பரராஜசிங்கம் அவர்கள் படுகொலைசெய்யப்பட்டபொழுது மட்டக்களப்பு மரியாள் இணைப் பேராலயத்தில் நானும் இருந்தேன். திருமலை மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் வணக்கத்திற்குரிய கிங்ஸ்லி சுவாம்பிள்ளை அவர்களிடம் பலிப்பீடத்தில் தேவநற்கருனையைப் பெற்றுக்கொண்டு திரும்பிய பொழுதுதான் அவர் மீதான துப்பாக்கி வேட்டுக்கள் சரமாரியாகத் தீர்க்கப்பட்டன. அந்த இடத்திலேயே அவர் சுருண்டு வீழ்ந்தார். ஒன்பது துப்பாக்கி வேட்டுக்கள் அவர் மீது பாய்ந்திருந்தன. அவரது துணைவியாரான திருமதி சுகுணம் ஜோசப் அவர்கள் மீது நான்கு துப்பாக்கி வேட்டுக்கள் பாய்ந்திருந்தன. இரத்த வெள்ளத்தில் க…
-
- 0 replies
- 828 views
-
-
இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவது யார்? : சபா நாவலன் உலகில் எங்கெல்லாம் பாராளுமன்ற ஜனநாயகத்திற்கான தேர்தல் நடைபெறுகின்றதோ அங்கெல்லாம் புதிய உற்சாகம் ஆரம்பித்துவிடும். மாற்றத்திற்கான கனவுகளுடன் சாரிசாரியாகத் தேர்தல் கூட்டங்களுக்குச் செல்லும் மக்கள் எதிர்ப்படும் ஐந்து வருடங்களுக்கு மீண்டும் ஏமாற்றப்படுவர்கள். இத் தேர்தல் ஜனநாயகத்திற்குள் தங்களை நுளைத்துக்கொள்ள விரும்புகின்ற ஒவ்வொருவரின் பின்னாலும் பிழைப்புவாத நோக்கங்களைத் தவிர வேறு எதுவும் காணப்பட்டதில்லை. இலங்கையைப் பொறுத்தவரை மக்களின் எதிர்பார்ப்புக்கள் இன்னும் ஆழமானவை. 2005 ஆம் ஆண்டு மிகச் சிறிய தொகையான வாக்குப் வித்தியாசத்தில் மகிந்த ராஜபக்ச வெற்றிபெற்ற போது இலங்கையின் ‘மன்னனாக’ மகிந்த உருவெடுப்பார் என …
-
- 0 replies
- 2.6k views
-