அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9213 topics in this forum
-
மாவீரர் நாள்: கற்க வேண்டிய பாடங்கள் மாவீரர் நாள் முடிந்து விட்ட நிலையில், அதன் தொடர்ச்சியாக விசாரணை மிரட்டல்கள் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன. மாவீரர் நாளுக்கு முன்னதாக அரச தரப்பில் இருந்து அதற்கு எதிரான கருத்துகள் எதுவும் வெளியாகியிருக்கவில்லை. மாவீரர் நாளை அனுஷ்டித்தால், புலிகளை நினைவு கூர்ந்தால், சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்று முன்னரே எச்சரிக்கைகள் எதுவும் அரச தரப்பிலோ பொலிஸ் தரப்பிலோ வெளியிடப்படவில்லை. ஆனாலும், நிகழ்வுகள் அனைத்தும் முடிந்த பின்னர், புலிகளை நினைவு கூர்ந்தவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மிரட்டியிருக்கிறார் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன. …
-
- 0 replies
- 362 views
-
-
மாவீரர் நாள்: கேள்விகளும் பதிலும் November 17, 2025 — கருணாகரன் — ஈழப்போராட்டம் எதிர்பார்த்த விடுதலையையும் அரசியல் முன்னேற்றத்தையும் தராமல் முடிந்து விட்டது. இதுபெருந்துயரமே. ஆனால், அது உண்டாக்கிய நினைவலைகள் ஓயவில்லை. எந்தப்போராட்டத்திலும் இத்தகைய நிலையிருக்கும். அதில் ஒன்று, போராட்டத்தில் தங்கள் இன்னுயிரை ஈகம் செய்த வீரர்களின் நினைவாகும். அதைத்தமிழ் மக்கள் மாவீரர்நாளாக ஒவ்வாரு ஆண்டும் நவம்பர் 27 இல் நினைவு கூருகிறார்கள். இது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் உருவாக்கிய மரபாகும். இந்த மரபு இன்று விடுதலைப்புலிகள் இயக்கம் நடைமுறையில் இல்லாத போதும், உலகங்கும் உள்ள தமிழ் மக்களால் தொடரப்படுகிறது. இது வியப்புக்குரிய ஒன்று. ஏனென்றால், குறித்த இயக்கம் இல்லாத போதும் அந்த இயக்கத்த…
-
- 0 replies
- 209 views
-
-
மாவீரர் நினைவேந்தலுக்கான பகிரங்க வெளி மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள் சற்றுப் பகிரங்கமாகவே இம்முறை நடத்து முடிந்திருக்கின்றது. தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் விதையாக வீழ்ந்தவர்களை நினைவுகூருவதற்கான வெளியை இலங்கை அரசாங்கமும் அதன் பாதுகாப்புக் கட்டமைப்பும் கடந்த காலங்களில், குறிப்பாக போருக்குப் பின்னரான கடந்த ஏழு ஆண்டுகளில் அனுமதித்திருக்கவில்லை. இறந்தவர்களை நினைவுகூருவதற்கான மக்களின் கூட்டுரிமையையே மஹிந்த அரசாங்கம் தன்னுடைய கொடுங்கரம் கொண்டு அடக்கியிருந்தது. ஆனால், இம்முறை அந்தக் கரத்தினை முற்றாக விலக்காமல் பிடியின் இறுக்கத்தைச் சற்றுத் தளர்த்தியிருக்கின்றது. (ஆம், அப்படித்தான் கொள்ள வேண்டியிருக்கின்றது.) அதுதான், மக்களைப் பெருவாரி…
-
- 0 replies
- 254 views
-
-
மாவீரர் நினைவேந்தலும் அடையாளம் பேணலும் -புருஜோத்தமன் தங்கமயில் “சோறும் புட்டும் வடையும் சாப்பிட்டுக் கொண்டிருந்த தமிழ் மக்களுக்கு, பீட்சாவை (இத்தாலிய உணவு) சாப்பிடும் நிலையை உருவாக்கினோம்...’’ என்று யாழ். தலைமைப் பொலிஸ் பரிசோதகர் தெரிவித்திருக்கின்றார். மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு எதிராக, நீதிமன்றங்களின் ஊடாக, முற்கூட்டியே தடை உத்தரவுகளைப் பொலிஸார் பெற்று வருகிறார்கள். அது தொடர்பிலான வழக்கு விசாரணையொன்றின் போதே, யாழ். நீதவான் நீதிமன்றத்தில் சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரி, தமிழ் மக்களின் உணவுப் பழக்க வழக்கம் பற்றி, தன்னுடைய எகத்தாளமான கருத்தை முன்வைத்திருக்கிறார். இலங்கை அரச இயந்திரம், எவ்வளவு தூரம்…
-
- 1 reply
- 435 views
-
-
மாவீரர் நினைவேந்தல்: தெற்குக்கு வழங்கிய செய்தி - கே.சஞ்சயன் விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் மெளனிக்கப்பட்ட பின்னர், வடக்கில் மிகப் பெரியளவில் மாவீரர்களை நினைவுகூரும் நிகழ்வுகள் கடந்த வாரம் இடம்பெற்றிருந்தன. கடந்த ஆண்டு வடக்கு மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கத்துடன் 13 பேர் மட்டும்தான் மாவீரர் நாளை அனுஷ்டித்தனர். இந்தமுறை எத்தனை பேர் வருகிறார்கள் என்பதைத்தான் பார்த்து விடுவோம் என்று கேலியாகப் பேசிய அமைச்சர் ராஜித சேனாரத்ன போன்றவர்களும் மாவீரர்களை நினைவுகூர முடியாது; அதற்கு இடமளிக்கப்படாது என்று எச்சரித்த அமைச்சர்களும் முகத்தில் கரியைப் பூசிக்கொண்டுள்ளனர். இராணுவ அச்சுறுத்தல்களால் சில ஆண்டுகளாக அடங்கிக்…
-
- 0 replies
- 471 views
-
-
மாவீரர் வார அரசியல் தெய்வீகன் தமிழர் தாயகமெங்கும் ஆண்டுதோறும் மிகமுக்கிய வாரமாக அனுஷ்டிக்கப்படும் நவம்பர் 21 முதல் 27 ஆம் திகதி வரையான காலப்பகுதியை இப்போது மட்டுமல்ல எப்போதும் மாவீரர்களின் வாரமாகக் கடைப்பிடிப்பதற்கு அனுமதிக்கப் போவதில்லை என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். அதனை எதிர்த்து, மாவீரர் வாரத்தை அனுஷ்டிக்கப்போவதாக வட மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் அறிவித்திருக்கிறார். தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தின் ஆரம்பகால கட்டங்களில், முக்கியமாக இந்திய இராணுவக் காலகட்டங்களில்தான் ‘மாவீரர் வாரம்’ என்ற இறந்த வீரர்களை நினைவு கூரும் முறையை விடுதலைப்புலிகள் அறிமுகம் செய்தார்கள். இறந்தவர்களை நினைவு கூருவது, அ…
-
- 0 replies
- 370 views
-
-
மாவீரர்களின் சரித்திரச் சாவினை ஒன்றாக நினைவு கூறுங்கள் . “ஒரு விடுதலை வீரனின் சாவு ஒரு சாதாரண மரண நிகழ்வல்ல. அந்தச் சாவு ஒரு சரித்திர நிகழ்வு. ஒர் உன்னத இலட்சியம் உயிர் பெறும் அற்புதமான நிகழ்வு. உண்மையில் ஒரு விடுதலை வீரன் சாவதில்லை. அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்து விடுவதில்லை. அந்த இலட்சிய நெருப்பு ஒரு வரலாற்றுச் சக்தியாக மற்றவர்களைப் பற்றிக் கொள்கின்றது. ஓர் இனத்தின் தேசிய ஆன்மாவைத் தட்டியெழுப்பிவிடுகின்றது.” – என தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் மாவீரர் நாள் தொடர்பாக கூறிய இரத்தின சுருக்கமான பதிவு இது. மாவீரர்களினது வீரச்சாவு நிகழ்ந்த இடங்களும் நாட்களும் வேறுபாட்டவை. எனினும் ஒரே இலட்சியத்திற்காய் விதையாகிப்போன மாவீர…
-
- 1 reply
- 411 views
-
-
மாவீரர்களின் தியாகங்களை தமிழர்கள் மறந்து வருகின்றார்களா? – மட்டு.நகரான் November 26, 2024 தமிழர்களின் தாகம் தமிழீழ தாயகம்.தமிழர்களின் உரிமை, தனித்தும், தேசியம் என்பனவற்றினை பெறுவதற்காக கடந்த 75 வருடத்திற்கு மேலாக பல்வேறு வழிகளிலும் போராடிவருகின்றார்கள். தமிழர்கள் இந்த நாட்டில் தனித்துவமாகவும் இந்த நாட்டில் வாழும் பெரும்பான்மையினம் அனுபவிக்கும் அனைத்து உரிமைகளையும் பெற்றுவாழவேண்டும் என்பதற்காகவே பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தது.அதில் ஆயுதப் போராட்டம் பிரதான பங்கினை வகிக்கின்றது. இந்த நாட்டில் தமிழர்கள் சுயகௌர வத்துடன் வாழவேண்டும் என்பதற்காக வாழ வேண்டிய வயதில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் தங்கள் இன்னுயிரை தியாகம் செய் திருக்கின்றார்கள்.தன் இனம் தன்…
-
- 0 replies
- 262 views
-
-
மாவீரர்களுக்காய் ஒளிர்ந்த நிலம் – குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்- மாவீரர் தினத்தை வடகிழக்கில் கொண்டாட அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது இது குறித்து அரசின் நிலைப்பாடு என்ன? என்று இலங்கை அரசின் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் கேள்வி எழுப்பினார் ஒரு செய்தியாளர். அதற்குப் பதில் அளித்த ராஜித எத்தனை பேர் விளக்கேற்ற வருகிறார்கள் என்று பார்க்கதானே போகிறோம் என்று நக்கலாகப் பதில் அளித்தார். அதற்குத்தான் நவம்பர் 27 அன்று அலையாக திரண்டு பதில் அளித்துள்ளனர் தமிழ் மக்கள். இதற்கான முதல் எழுச்சியை ஏற்படுத்தியது கிளிநொச்சி துயிலும் இல்லம். இந்த நிலையில் கிளிநொச்சி மாவீரர் துயிலும் இல்லம் புனரமைக்கப்பட்டு, அங்கு மாவீரர்களுக்கு விளக்கேற்றத் தீர்மானித்த…
-
- 0 replies
- 507 views
-
-
-
- 1 reply
- 655 views
-
-
மாவை சேனாதிராஜாவின் அரசியல் வாழ்வின் மூலமான படிப்பினைகள் February 9, 2025 — வீரகத்தி தனபாலசிங்கம் — இலங்கை தமிழ் அரசியல் சமுதாயம் ஒரு குறுகிய கால இடைவெளியில் இரு மூத்த அரசியல் தலைவர்களை இழந்து விட்டது. இருவருக்கும் இடையில் சுமார் பத்து வயது வித்தியாசம் இருந்தபோதிலும், அவர்கள் ஆறு தசாப்தங்களுக்கும் அதிகமான காலத்தை இலங்கை தமிழர்களின் ஜனநாயக ரீதியான அரசியல் உரிமைப் போராட்டத்துக்காக அர்ப்பணித்தவர்கள். இராஜவரோதயம் சம்பந்தன் மரணமடைந்து ஏழு மாதங்கள் நிறைவடைவதற்கு இரு நாட்கள் இருந்த நிலையில் மாவை சேனாதிராஜா 2025 ஜனவரி 29 ஆம் திகதி புதன்கிழமை காலமானர். அவரது இறுதிக் கிரியைகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊரான மாவிட்டபுரத்தில் பெருமளவு மக்களின் ப…
-
- 0 replies
- 464 views
-
-
மாவை சேனாதிராஜாவின் பொறுக்க முடியாத சுயநலம் February 11, 2024 — டி.பி.எஸ்.ஜெயராஜ் — கடந்த பத்து வருடங்களாக இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் பதவியை வகித்துவந்த மாவை சேனாதிராஜா ஜனவரி 21 திருகோணமலை நகர மண்டபத்தில் கட்சியின் பொதுச்சபை உறுப்பினர்கள் மத்தியில் நடத்தப்பட்ட இரகசிய வாக்கெடுப்பில் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் புதிய தலைவராக தெரிவுசெய்யப்பட்ட பின்னரும் நிலைவரம் எல்லாம் ஏதோ பழைய மாதிரியே இருப்பது போன்ற நினைப்பில் இருக்கிறார். கௌரவமான முறையில் பதவியில் இருந்து இறங்காமல் அவர் தொடர்ந்தும் தொங்கிக்கொண்டிருக்கிறார். தமிழரசு கட்சி 2022 ஆம் ஆண்டு வரை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதான அங்கத்துவக் கட்சியாக இருந்தது. வட…
-
-
- 8 replies
- 1.4k views
-
-
மாவை மீதான விக்கியின் திடீர்ப் பாசம்! சுயநலவாதிகளின் நாடகம் புருஜோத்தமன் தங்கமயில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவின் தலைமையில் தமிழ்த் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து, பரந்துபட்ட கூட்டணியை அமைக்க வேண்டும் என்று, தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி விக்னேஸ்வரன் அண்மையில் தெரிவித்திருக்கின்றார். மாவையை “தலைமைத்துவ ஆளுமையற்றவர்” என்று தொடர்ச்சியாகக் கூறி வந்த விக்னேஸ்வரன், திடீரென்று மாவையின் தலைமையில் கூட்டணி அமைப்போம் என்ற அறிவித்தலை விடுக்கிறார் என்றால், அதன் பின்னணியை ஆராய வேண்டி ஏற்படுகிறது. வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக தமிழ்த் தேசிய கூட்டமைப்பால், விக்னேஸ்வரன் நேரடி அரசியலுக்கு அழைத்துவரப்பட்டு 10 ஆண்டுகளாகப் போகிறது. விக்னேஸ்வரன், …
-
- 1 reply
- 478 views
-
-
இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக மாவை கடிவாளத்தை கையில் எடுத்துள்ளார். தலையணை ஒன்று உறை வித்தியாசம் என்பது போல தமிழ்த் தேசியத்தின் கொள்கையும் கோட்பாடும் ஒன்றே. அந்த வகையில் தேசியக் கட்சிகளின் தலையும் தலைமைத்துவமும் மாறுகின்ற போது ஏற்படக்கூடிய எதிர்பார்ப்பு விடுதலை உரிமைப் போராட்டம் நடத்துகின்ற கட்சிகளுக்கு இருக்க முடியாது. இது ஒருவகை அஞ்சலோட்டம் போன்றது. தடியை மற்றவரிடம் கைமாற்றுகின்ற போது கையிலெடுத்துக் கொள்பவர் ஓட வேண்டியதுதான். வெற்றியில்லாத நீண்ட அஞ்சலோட்டமாக மாறியிருக்கும் தமிழ்த் தேசியப் போராட்டத்தில் சமகாலத்தில் தடியை கையிலெடுத்திருப்பவர் மாவை என்று கூறலாம். தனக்கு ஆப்பு வைப்பதற்கு முன்பதாக தமிழர் விடுதலைக் கூட்டணியை தம்மகப்படுத்தி காத்துக் கொண்ட ஆனந்…
-
- 0 replies
- 666 views
-
-
மாவையின் முதலமைச்சர் கனவு பலிக்குமா? புருஜோத்தமன் தங்கமயில் / 2018 ஜூன் 20 புதன்கிழமை, மு.ப. 01:14 Comments - 0 வடக்கு மாகாண சபையின் முதலமைச்சராக வர வேண்டும் என்பது மாவை சேனாதிராஜாவின் ஒரு தசாப்த காலக் கனவு. இறுதி மோதல்களுக்குப் பின்னரான, அரசியல் கள யதார்த்தங்களை உள்வாங்கி, மாகாணசபைத் தேர்தல்களில் போட்டியிடுவது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்தது முதல், முதலமைச்சர் கனவு மாவையிடம் நீடிக்கின்றது. தமிழ்த் தேசிய அரசியலில் தற்போது இயங்கிக் கொண்டிருப்பவர்களில், இரா.சம்பந்தனுக்குப் பிறகு, சிரேஷ்ட நிலையில் இருப்பவர் மாவை ஆவார். அவருக்கு, 50 ஆண்டுகளை அண்மித்த, கட்சி அரசியல் அனுபவம் உண்டு. சுமார் 20 ஆண்டுகளாக நாடாளுமன்றத்திலும் அங்கம் வகிக்க…
-
- 0 replies
- 379 views
-
-
மாவையும் மட்டக்களப்பும்….. February 2, 2025 — அழகு குணசீலன் — தமிழ்த்தேசிய சாத்வீக போராட்ட வரலாறு, ஆயுதபோராட்டமாக பரிணமித்த அரசியல் நிலைமாறு காலத்தை பதிவு செய்பவர்கள் எவரும் அன்றைய மூன்று இளம் தமிழ் தேசிய செயற்பாட்டாளர்களை மறந்தும் கடந்து செல்ல முடியாது. அவர்கள் வண்ணை ஆனந்தன், காசி ஆனந்தன், மாவை சேனாதிராஜா. இவர்களில் காசி ஆனந்தனும், மாவை சேனாதிராஜாவும் தமிழ்த்தேசிய அரசியல் களத்தில் நிலைத்து நின்றனர். அவர்களில் ஒருவரான மாவையின் மூச்சு 29.01.2025 அன்று நின்று போனதால் அவரும் ஈழப்போராட்ட வரலாற்றில் இறந்த காலமாகிவிட்டார். வடக்கின் எந்த தலைவருக்கும் இல்லாத தமிழ்த்தேசிய அரசியல் உறவு கிழக்கில் -மட்டக்களப்பில் மாவை சேனாதிராஜாவுக்கு உண்டு. 19…
-
- 0 replies
- 394 views
-
-
மிகக் கவனமாக சிந்திக்க வேண்டிய முஸ்லிம்கள் மொஹமட் பாதுஷா / 2019 ஓகஸ்ட் 16 வெள்ளிக்கிழமை, மு.ப. 06:51 ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படும் முன்னரே, ஜனாதிபதி வேட்பாளர் பற்றிய அறிவிப்புகள் வெளிவரத் தொடங்கியுள்ளன. பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக, கோட்டாபய ராஜபக்ஷ அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் யார் என்றும் சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு என்னவாக இருக்குமென்றும் அரசியல் அரங்கில், கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்று வருகின்றன. தங்களது எதிர்பார்ப்புகள் எல்லாம், நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கையில், முஸ்லிம்கள் முழுமூச்சாக நின்று, ஆட்சிபீடமேற்றிய தற்போதைய அரசாங்கமானது, அந்த எதிர்பார்ப்புகளைத் திருப்திப்படுத்தும்…
-
- 0 replies
- 996 views
-
-
மிகச்சரியான மாற்றம் – விக்டர் ஐவன் தற்போது நாட்டை ஆளும் அரசும், அதன் சமூக அரசியல் முறையும், அதன் பொருளாதாரமும் முழுமையாக முடங்கி விழுந்துள்ளது. அதுவும் வங்குரோத்து நிலை மற்றும் அராஜகத்தின் இருண்ட நிழல்கள் நாட்டை விழுங்கிக் கொண்டிருக்கின்றன. துரதிஷ்டவசமான கொவிட்-19 இன் பாதிப்பும் இந்த சந்தர்ப்பத்தில்தான் நாட்டை காவு கொண்டுள்ளது. இந்த நிலை நாட்டின் பொது மக்களது அன்றாட வாழ்க்கை ஓட்டத்துக்கு பலத்த பாதிப்பை ஏற்படுத்தியிருப்பினும் அதை பொருத்துக் கொள்ளும் நிலையில்தான் நாட்டு மக்கள் உள்ளனர். எனினும் அந்த நிலை நாளுக்கு நாள் மிக மோசமான நிலைக்கு மாற்றமடைந்து செல்வதை தவிர்க்க முடியாதுள்ளது. அதன் விகிதாசரத்துக்கேற்ப சமூகம் சிந்தனைத் திறனுடன் செயல்படும் ஆற்றலையும் இழந்துவிடும்…
-
- 0 replies
- 720 views
-
-
மிகவும் மோசமான ஊழல் நிறுவனம்.....! வீ.தனபாலசிங்கம் பிரதமர் டட்லி சேனநாயக்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி அரசாங்க காலத்தில் (1965 -- 70 ) கம்பஹா தொகுதி எம்.பி.யாக இருந்த எஸ்.டி.பண்டாரநாயக்க பாராளுமன்றத்தில் ஒரு தடவை உரையாற்றுகையில் ' இந்த பாராளுமன்றம் ஒரு கள்வர் குகை ' ( A den of thieves) என்று கூறியதற்காக சபைக்குள் இருந்து கதிரையோடு தூக்கிவெளியே போடப்பட்டதுடன் ஒரு வார காலத்துக்கு சபை நடவடிக்கைகளில் பங்கேற்கமுடியாதவாறு அன்றைய சபாநாயகரால் தடைசெய்யப்பட்டார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் பாராளுமன்றத்துக்கு தெரிவுசெய்யப்பட்டிருந்தாலும், சண்முகதாசன் தலைமையிலான சீனச்சார்பு கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்பாடுகளில் பண்டாரநாயக்க தன்னை ஈடுபடுத்தியிருந்த க…
-
- 0 replies
- 543 views
-
-
கடந்த வாரம் நானெழுதிய கட்டுரை தொடர்பில் சில நண்பர்கள் பின்வரும் கேள்விகளைக் கேட்டிருந்தார்கள். முதலாவது- கடந்த அறுபதாண்டு காலமாகத் தமிழ் வாக்காளர்கள் தெளிவாகச் சிந்தித்து முடிவெடுத்துள்ளார்கள் என்பது சரியா? அல்லது அவர்கள் கற்றிந்த பாடங்களின் அடிப்படையில் தெளிவாகச் சிந்திப்பதற்கு அரசியல்வாதிகளும், இயக்கத் தலைவர்களும் அபிப்பிராயத்தை உருவாக்கவல்ல படித்த நடுத்தர வர்க்கமும், குறிப்பாக, ஊடகங்களும், ஆய்வாளர்களும் போதியளவு உதவவில்லையா? இரண்டாவது, கடந்த அறுபதாண்டு காலத் தமிழ்த் தேசிய அரசியலாற்பெற்ற வெற்றிகள் எவையெவை? இன்றுள்ள தேக்க நிலைக்குப் பொறுப்பேற்று இறந்த காலத்தைப் பிரேத பரிசோதனை செய்யத் தமிழ்த் தலைவர்களும், ஊடகங்களும், படித்த நடுத்தர வர்க்கமும் தயாரா? மூன்றாவது, இவ்விதம் …
-
- 2 replies
- 624 views
-
-
மின்சாரக்கட்டமைப்பை இணைப்பது இலங்கைக்கு இலாபகரமான தீர்வு by யே.பெனிற்லஸ் 2022/07/12 in ஆசிரியர் தெரிவு, இலங்கை, கொழும்பு, சிறப்புக் கட்டுரைகள், முக்கிய செய்திகள் 86 1 A A 0 37 SHARES 1.2k VIEWS Share on FacebookShare on Twitter இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியின் ஒரு முக்கிய அம்சமாக நாளொன்றுக்கான முழுமையான மின்சாரத்தேவையை வழங்க முடியாத பலவீனமான நிலைமைகள் நீடித்துக்கொ…
-
- 0 replies
- 575 views
- 1 follower
-
-
மின்வெட்டும் அரசியலும் என்.கே.அஷோக்பரன் Twitter: @nkashokbharan கடந்தவாரத்தில், ஒரு நாளைக்கு ஏறத்தாழ 5 மணித்தியாலங்கள் அளவு வரை இலங்கையின் மின்துண்டிப்பு அமுல்படுத்தப்பட்டிருக்கிறது. ஏறத்தாழ இரண்டு தசாப்தங்களின் பின் பெரும் மின்சார பற்றாக்குறை நிலையை இலங்கை எதிர்கொண்டு நிற்கிறது. இந்த நிலைவரக் காரணம் என்ன? குறுங்காலக் காரணம், இலங்கையிடம் பெற்றோலிய எரிபொருள் வாங்க போதிய டொலர்கள் இல்லை. ஆகவே இந்தியா உள்ளிட்ட சில நாடுகளிடம் கடன்வசதிகளைளப் பெற்றுக்கொண்டு பெற்றோலிய எரிபொருட்கள் இறக்குமதிசெய்தி வருகிறது. கிடைக்கும் பெற்றோலிய எண்ணையை,போக்குவரத்திற்கு அதனை ஒதுக்குவதா, அல்லது பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு பெருமளவில் கடன் செலுத்தவேண்டிய நிலையிலுள்ள இலங்கை மின்சார சபைக்…
-
- 0 replies
- 334 views
-
-
மின்வெட்டும் இல்லை தேர்தலும் இல்லை? - நிலாந்தன் கடந்த 16ஆம் திகதியிலிருந்து மின்வெட்டு நிறுத்தப்பட்டு விட்டது. ஆனால் மின்கட்டணம் 66 விகிதத்தால் அதிகரித்திருக்கிறது. இதன் மூலம் அரசாங்கம் மக்களுக்கு உணர்த்த விரும்புவது எதனை? மின்வெட்டை நிறுத்துவது என்றால் நீங்கள் மின் கட்டண உயர்வை தாங்கிக் கொள்ள வேண்டும். இதை அதன் பிரயோக அர்த்தத்தில் கூறின், மின் கட்டணத்தை குறைப்பது என்றால் மின்சாரத்தை குறைவாக நுகருங்கள் என்பதுதான். இப்படி ஒர் உத்தியைத்தான் எரிபொருள் விநியோகத்திலும் அரசாங்கம் அறிமுகப்படுத்தியது. கியூஆர் கோட் முறைமை என்பது எரிபொருள் நுகர்வைக் கட்டுப்படுத்தியது. எரிபொருள் பதுக்கப்படுவதையும் தேவைக்கும் அதிகமாக நுகரப்படுவதையும் அது ஒப்பீட்டளவில் கட்டுப்படுத்தியது. அத…
-
- 0 replies
- 328 views
-
-
மியன்மாரின் மனித உரிமை விவகாரங்களில் ஜப்பானின் பங்கு Editorial / 2019 மார்ச் 27 புதன்கிழமை, பி.ப. 01:01 Comments - 0 ஜனகன் முத்துக்குமார் மியான்மாரில் பொதுமக்கள் ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்திய பின்னரான காலப்பகுதியில், நாட்டில் வர்த்தம், முதலீடு ஆகியவற்றின் மீது சுமத்தப்பட்டிருந்த மேற்கத்திய பொருளாதாரத் தடைகள் அகற்றப்பட்டன. இது முரண்பாடுகள் நிறைந்த நாட்டில் பொருளாதார முன்னேற்றத்தின் முற்போக்கான நிலை ஏற்படக் காரணமாகியது. குறிப்பாக, முக்கிய உட்கட்டமைப்பு துறைகளில் ஆற்றல் துறைகளில் வெளிநாட்டு நேரடி முதலீட்டின் பெரும் செல்வாக்குக்கு இந்நிலை வழிவகுத்தது. சீனா, ஜப்பான், ஆசியான் போன்ற பொருளாதார நிறுவனங்கள் சர்வதேச சமூகத்தால் எழுப்பப்பட்ட மனிதாபிமான அக்கறைகளைத…
-
- 0 replies
- 690 views
-
-
மியன்மாரில் சீனாவின் பொருளாதார நலன்களும் ரோஹிங்யா நெருக்கடியும் சீனா ஏனைய நாடுகளின் உள்நாட்டு நெருக்கடிகளில் நேரடியாக தலையீடு செய்யாமல் இருந்து வந்த இது கால வரையான போக்கை இப்போது கைவிட ஆரம்பித்திருக்கின்றதோ என்ற கேள்வியை மியன்மார் ரோஹிங்யா நெருக்கடிக்கு அது முன்வைத்திருக்கும் தீர்வுத் திட்டம் தவிர்க்க முடியாமல் எழுப்புகிறது. ரோஹிங்யா நெருக்கடியைத் தணிப்பதற்கு சீனா மூன்று கட்டத் திட்டம் ஒன்றை முன்வைத்தது. மியன்மாரின் ராக்கைன் மாநிலத்தில் யுத்த நிறுத்தமொன்றை கொண்டு வருவது முதலாவது கட்டம். இது அங்கு இடம் பெறுகின்ற வன்முறைகளை முடிவுக்கு கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டது. அகதிகள் பிரச்சினை தொடர்பில் …
-
- 0 replies
- 378 views
-