Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. தமிழர்களின் போராட்டத்தை புறமொதுக்கிவிட முடியாது அர­சி­யல் தீர்­வுக்­கான முயற்­சி­க­ளில் அரசு தொடர்ந்­தும் பாரா­மு­க­மாக இருக்­கு­மா­யின், வடக்­குக் கிழக்­கில் அரச நிர்­வா­கத்தை முடக்­கு­வ­தற்­கான போராட்­டம் முன்­னெ­டுக்­கப்ப ­டுமென நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும், கூட்­ட­மைப்­பின் பேச்­சா­ள­ரு­மான எம். ஏ. சுமந்­தி­ரன் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளமை அரசியல் அரங்கில் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. கூட்­ட­மைப்­புக்கு தமிழ் மக்­கள்மீது சிறி­தும் அக்­க­றை­யில்லை, அர­சு­டன் ஒட்­டி­யி­ருந்து கொண்டு சுக­போ­கத்தை அனு­ப­வித்­துக் கொண்டி­ருக்­கி­றார்­கள் என்­றெல்­லாம் கூறி­…

  2. நாங்கள் தான் கொள்கைக்கு நேர்மையாக இருக்கின்றோம்- கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

  3. கனடா விதித்திருக்கும் தடை -நிலாந்தன். தாயகத்தில் கூட்டமைப்பு உள்ளூராட்சி மன்றத் தேர்தலையொட்டிக் குலைந்து போய் நிற்கும் ஒரு காலகட்டத்தில் புலம்பெயர்ந்த தமிழ்ப் பரப்பில் கனடாவில் வாழும் தமிழர்கள் ஒரு திருப்பகரமான வெற்றியை பெற்றிருக்கிறார்கள். இலங்கைத் தீவின் இரண்டு முன்னாள் ஜனாதிபதிகளுக்கு எதிராக கனடா தடை விதித்திருக்கிறது. ஏற்கனவே அமெரிக்கா நாட்டின் தளபதிக்கு எதிராக தடை விதித்திருக்கிறது. அமெரிக்காவின் தடையோடு ஒப்பிடுகையில் கனடாவின் தடை பலமானது. அமெரிக்கா பயணத்தடை மட்டும்தான் விதித்திருக்கிறது. ஆனால் கனடா பயணத் தடையோடு சேர்த்து தடை விதிக்கப்பட்டவர்கள் கனடாவில் சொத்துக்களை வைத்திருப்பதை, முதலீடுகள் செய்வதை அல்லது கனடாவில் உள்ள முதலீட்டாளர்கள் மேற்படி முன்னாள் ஜனாதி…

  4. தமிழ் இனத்திற்கு எதிரானவர் பெரியார்

  5. அமெரிக்காவின் ஜனநாயம்மனித உரிமைகள் தொழிலாளர் ஆகியவற்றிற்கான உதவி இராஜாங்க செயலாளர் டொம் மலினொவ்ஸ்கி இலங்கைக்கு சமீபத்தில் விஜயம் மேற்கொண்டார்.அவரது விஜயத்தை உற்றுநோக்கும் போது அதுமிகவும் ஆக்கபூர்வமானதாக அமைந்துள்ளதாக தெரிகின்றது. இலங்கையின் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்த பாரிய மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் முல்லைதீவிற்கு அவர் விஜயம் மேற்கொண்டார். தனது இலங்கை விஜயத்தின் போது அவர் ஊடகவியலாளர்கள் மத்தியில் பகிர்ந்துகொண்ட விடயங்களை வைத்துப்பார்க்கும்போது புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் இலங்கையில் நடைபெற்றுவரும் மாற்றங்கள் குறித்து அவர் உற்சாகமடைந்திருப்பதாக புலனாகியுள்ளது. அவர் இலங்கைப் பத்திரிகை ஒன்றிற்கு எழுதிய கட்டுரையில் அவர் இன்னும் நம்பி…

    • 0 replies
    • 252 views
  6. நிகழ்ந்திருக்கவே கூடாத பயங்கரம் மொஹமட் பாதுஷா / 2019 ஏப்ரல் 28 ஞாயிற்றுக்கிழமை, பி.ப. 09:17 Comments - 0 இலங்கையின் பல பாகங்களிலும், இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களின் அதிர்ச்சிகளில் இருந்து, நாடும் நாட்டு மக்களும் இன்னும் முழுமையாக மீளவில்லை. கிறிஸ்தவர்கள், கத்தோலிக்கர்களின் புனித நாளான உயிர்த்த ஞாயிறு தினத்தில், தேவாலயங்கள், நட்சத்திர ஹோட்டல்களை இலக்குவைத்து, மேற்கொள்ளப்பட்ட இந்தத் திட்டமிட்ட குண்டுத்தாக்குதல்கள், வரலாற்றில் மிக மோசமான இழப்பையும் துயரஅனுபவத்தையும் தந்திருக்கின்றது. இந்த நாட்டில், இனசெளஜன்யத்தோடு வாழ்ந்து வருகின்ற முஸ்லிம்களுக்கும் கத்தோலிக்கர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையிலான உறவை, இத்தாக்குதல்கள் சிதைத்திருப்ப…

  7. கோத்தா சுற்றிவளைக்கப்படுகின்றாரா? Jun 30, 20190 யதீந்திரா இன்று, கோத்தபாய ராஜபக்ச என்னும் பெயர் அனைத்து தரப்பாலும் உற்றுநோக்கப்படுகிறது. கோத்தபாய எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக செய்திகள் வெளியான நாளிலிருந்து, அனைவரது பார்வையும் அவர் மீதே திரும்பியிருக்கிறது. ஒரு வருடத்திற்கு முன்னரேயே கோத்தபாய தனது ஆட்டத்தை ஆரம்பித்திருந்தார். தான் களமாட தயாராக இருப்பதாக கூறிவந்தார். அவர் அவ்வாறு கூறியதிலிருந்து அவரது எதிரிகளும் தங்களது பக்கத்தில் ஆட்டங்களை ஆரம்பித்தனர். இந்த இரண்டு ஆட்டங்களும் எவ்வாறு முற்றுப்பெறும் என்பது தொடர்பில் இப்போதைக்கு எவராலும் ஊகிக்க முடியாது. மகிந்த தரப்பிலுள்ள ஒரு சிலர் இதற்கு எதிர்ப்பு வெள…

  8. அமெரிக்கத் தடையும் போலியான தேசப்பற்றும் கே. சஞ்சயன் இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா, அவரது நெருங்கிய குடும்பத்தினர் அமெரிக்காவுக்குள் நுழையத் தடைவிதிக்கப்பட்டுள்ள விவகாரம், இலங்கை அரசிய‌ற் பரப்பில், கடுமையான வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் இந்த அறிவிப்புக் குறித்து, இரண்டு விதமான நோக்கு நிலைகள் அரசியல் பரப்பில் காணப்படுகின்றன. தமிழ் அரசியல் தலைவர்கள் அனைவருமே, அமெரிக்காவின் இந்த அறிவிப்பை வரவேற்றிருக்கிறார்கள். அதேவேளை, மற்றொரு புறத்தில், சிங்கள அரசியல் தலைவர்கள் மாத்திரமன்றி, மனோ கணேசன், திகாம்பரம் போன்ற தென்னிலங்கையைத் தளமாகக் கொண்ட அரசியல் தலைவர்கள், இந்த முடிவை எதிர்த்திருக்கிறார்கள் அல்லது, கேள்விக்குட்படு…

  9. உலகளவில் 736 மில்லியன் பெண்கள் மீது பாலியல் வன்முறை ; பிறப்புறுப்பு சிதைப்பினால் 230 மில்லியனுக்கும் அதிக பெண்கள், சிறுமிகள் பாதிப்பு - பால்நிலை சமத்துவ நிபுணர் வே. வீரசிங்கம் அதிர்ச்சித் தகவல் 25 Nov, 2025 | 11:23 AM உலகளவில் சுமார் மூன்று பெண்களில் ஒருவர், அல்லது 736 மில்லியன் பெண்கள், பாலியல் வன்முறையை அனுபவித்து வருகின்றனர். உலகில் 230 மில்லியனுக்கும் அதிகமான பெண்கள் மற்றும் சிறுமிகள் பெண் பிறப்புறுப்பு சிதைப்புக்கு உட்பட்டுள்ளனர் என்று சமூக செயற்பாட்டாளர் மற்றும் பால்நிலை சமத்துவ நிபுணர் வே. வீரசிங்கம் தெரிவித்துள்ளார். அத்துடன் அவர், 2023ஆம் ஆண்டின் தரவுகளின்படி, உலகளவில் சுமார் 51,100 பெண்கள் நெருங்கிய துணைவர்களாலோ அல்லது பிற குடும்ப உறுப்பினர்களாலோ வேண்டுமென்ற…

  10. கொரோனா வைரஸ் மீது போர்தொடுத்தல் -ஏகலைவா சிவில் நிர்வாகத்துக்கும் இராணுவ நிர்வாகத்துக்கும் இடையிலான வேறுபாடுகள் பாரியன. போர்க்கால அடிப்படையில் செயற்படுவதற்கும் போர் போன்று செயற்படுவதற்கும் இடையிலான வேறுபாடுகள் முக்கியமானவை. ஆனால், இவை குறித்துக் கவனம் செலுத்தும் மனநிலையில், இலங்கை இல்லை என்பதை, அண்மைய நிலைமைகள் எடுத்துக் காட்டுகின்றன. இலங்கை மிகுந்த நெருக்கடியான காலப்பகுதியிலும் சிவில் நிர்வாகத்தால் ஆளப்பட்டது. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலும் அரசாங்கத்தின் சிவில் நிர்வாகம் இயங்கியது. அது, நாடு முழுவதும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றது என்பதையும் முழு நிலப்பரப்பின் இறைமையும் இலங்கை அரசிடமே உள்ளது என்பதையும் சான்றுப்படுத்துவதற்கு …

  11. எருமை மாடு ஏரோப்பிளேன் ஓட்டிய கதை கடந்த வாரம், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இராஜவரோதம் சம்பந்தனின் நேர்காணலை, ‘தமிழ்மிரர்’ பத்திரிகையில் வாசிக்கக் கிடைத்தது. அது, ‘எருமை மாடு ஏரோப்பிளேன்’ ஓடுவதற்கான சாத்தியங்கள் குறித்து, ஆழமாக யோசிக்க வைத்தது. குறிப்பாக, மூன்று பதில்கள் இவ்வாறு யோசிக்க வைத்தன. “மக்களுக்கான தீர்வைப் பெற்றுக்கொடுக்க முடியவில்லையே என்ற குற்ற உணர்வு உண்டா” என்ற வினாவுக்கு அளிக்கப்பட்ட பதில் யாதெனில், “நல்லாட்சி அரசாங்கத்தை, நாங்கள் தான் ஆட்சியில் இருத்தினோம். தமிழ் மக்களுக்குத் தீர்வைத் தர அவர்களும் முயன்றார்கள்; அவர்களால் முடியவில்லை. ஆனால், நாங்கள் ஏமாந்து விட்டோம் என்பதை, நாம் ஏற்றுக்கொள்ளவில்லை” என்பதாகும். இது, பூவைப் பூ என்றும் ச…

  12. கிழட்டுச் சிங்கத்தின் ஈனமான கர்ஜனை! சிங்கக் கூட்டத்திலிருந்து விரட்டப்பட்ட கிழட்டு ஆண் சிங்கமொன்றை முன்னிறுத்திக் கொண்டு, சிறுநரிகளும் ஓநாய்களும், புதிய பயணமொன்றை மேற்கொள்ள முயல்கின்றன. அந்தக் கிழட்டுச் சிங்கத்தின் தொடைகளும் தாடைகளும், பெரும் வேட்டையை நடத்தும் வலுவை இழந்துவிட்டன. இப்போது, அதனால் மான்களின் வேகத்துக்கு ஓட முடியாது. ஏதாவது, மீந்துபோன இரைகள் கிடைக்குமா என்று காத்திருக்க வேண்டும். நிலைமை அப்படியிருக்க, கிழட்டுச் சிங்கம் பெரும் வேட்டையை நடத்தும், அதனூடு தாங்களும் வயிற்றை நிறைத்துக் கொள்ளலாம் என்று சிறுநரிகளும் ஓநாய்களும் கனவு காண்கின்றன. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிரணி, கண்டியிலிருந்து கொழும்பு வ…

  13. முதலாவது சிங்கள – தமிழ் இனக்கலவரமும், சிங்கள மகா சபையும் 1956: (9) – என்.சரவணன் August 3, 2020 பண்டாரநாயக்க இந்திய வம்சாவளியினரை நாடு கடத்த வேண்டும் என்று பகிரங்கமாக தெரிவித்து வந்த சூழ்நிலையில் தான் 1939ஆம் ஆண்டு நாவலப்பிட்டி கலவரம் நிகழ்ந்தது. இலங்கையின் முதலாவது தமிழ் சிங்கள இனக்கலவரமாக இதைக் கொள்வது வழக்கம். முதலாவது தமிழ் சிங்கள கலவரம் 1939ம் ஆண்டு மே 30 ஆம் திகதி நாவலப்பிட்டி நகரில் ‘முஸ்லீம் இளைஞர் சங்கம்’ (Y.M.M.A) கூட்டம் நடைபெற்ற பொது சிறப்பு விருந்தினராக ஜீ.ஜீ.பொன்னம்பலம் அழைக்கப்பட்டிருந்தார். ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் கவர்ச்சிகரமான உரையில் “சிங்களவர்கள் எல்லோரும் இனக்கலப்பின் வழித்தோன்றல் என்றும் விஜயன், காசியப்பன், பராக்கிரமபாகு உட்பட பல அ…

  14. இறுகும் இராணுவப் பிடி..! -சுபத்ரா வடக்கை மீண்டும் இராணுவப் பிடிக்குள் கொண்டு வரும் அடுத்த கட்டத்துக்குள் அரசாங்கம் நகர்ந்திருக்கிறது. 2015 ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர், வடக்கு, கிழக்கில் ஓரளவுக்கு திறக்கப்பட்ட ஜனநாயக வெளியை மீண்டும் அடைப்பதற்கான நகர்வாகவே இது அமைந்துள்ளது. தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுக்கு வடக்கு, கிழக்கில் உள்ள நீதிமன்றங்களின் மூலம் பொலிசார் தடை உத்தரவுகளைப் பெற்று, நிகழ்வுகளை முழுமையாகத் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது ஆட்சியில் உள்ள அரசாங்கத்துக்கு இதுபோன்ற இறுக்கமான கெடுபிடிகளைக் கையாளுவது ஒன்றும் புதிய விடயமில்லை. 2009இல் போர் முடிவுக்கு வந்த பின்னர், வடக்கு, கிழக்கில் விடுதலைப் புலிகளின் நினைவுச் சின்னங…

  15. மஹிந்தவை அரியணையேற்ற முனைகிறதா சீனா? சீனத் தூதுவர் யி ஷியாங் லியாங் அண்மையில் கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர்கள் சந்திப்பு ஒன்றில், இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக, குறிப்பாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவின் பெயரை விழித்து வெளியிட்ட கருத்துக்கள் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கின்றன. சீனத் தூதுவரின் கருத்து, அண்மையில் கோத்தாபய ராஜபக்ஷ சீனாவுக்கு மேற்கொண்ட பயணம், மகிந்த ராஜபக்ஷ இந்த மாதம் சீனாவுக்கு மேற்கொள்ளவுள்ள பயணம் எல்லாவற்றையும் ஒருங்கிணைத்துப் பார்க்கும் போது, ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டவையாகவே தோன்றுகின்றது. மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் ஆட்சி அதிகாரத்துக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் சீனா இறங்கியிருக்கிறதா என்ற…

  16. ஈழத்தமிழர்களிடை பொறுப்புள்ள கூட்டமைவு அவசியம் 4 Views ஈழத்தமிழர்களுக்கு நல்லாட்சி, மனித உரிமைகள், வளர்ச்சிகள் என்னும் மூன்றுமே இன்றைய சிறீலங்கா அரசாங்கத்தால் உறுதி செய்யப்படாது உள்ளது என்பது வெளிப்படையான உண்மை. நாள்தோறும் கிடைக்கும் செய்திகளும், தகவல்களும், அறிக்கைகளும், வேண்டுகோள்களும் இதனை கள ஆய்வு நிலையிலும் உறுதிப்படுத்தி வருவதை உலக நாடுகளும், அமைப்புகளும் நன்கறிவர். இந்நிலையில், ஈழமக்களின் இந்த நாளாந்த வாழ்வியலை வார்த்தைப்படுத்தி, உள்ளதை உள்ளவாறு வெளிப்படுத்தும் ஊடகத் தலைமைகளோ, அரசியல் தலைமைகளோ இல்லாதிருக்கிறது. இதனாலேயே 21ஆம் நூற்றாண்டின் உலக வரலாற்றின் மிகக் கொடிய மனித இனஅழிப்பு என்று வரலாறு பதிந்துள்ள முள்ளிவாய…

  17. அலெப்போ: சிரிய யுத்தத்தின் திருப்புமுனை - தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ ஊடகங்கள் எதைச் சொல்லுகின்றன என்பதை விட எதைச் சொல்லாமல் தவிர்க்கின்றன என்பது முக்கியமானது. சொல்லாமல் தவிர்க்கப்படுகிற விடயங்களின் அரசியல் முக்கியத்துவம் பெரிது. எமக்குச் சொல்லப்படுபவை உண்மைகளா என்பதைத் தேடியறிய வேண்டிய கட்டாயத்தில் வாழ்கிறோம் என்பதை அண்மைய நிகழ்வுகள் மீண்டுமொருமுறை நினைவூட்டியுள்ளன. தகவல்களைப் பரப்பும் வழிகள் நவீனமயமாக்கப்பட்டுள்ள சூழலில், உண்மைக்கும் பொய்க்கும் இடையிலான இடைவெளி மெதுமெதுவாக இல்லாமல் போகிறது. பொய்கள் மெய்களாகப் பரப்பப்படுகையில், மெய்யைப் பொய்யென இலகுவில் நம்ப வைக்க முடிகிறது. இது ஆபத்தானது. இதை உணர மறுக்கும் சமூகங்கள், இதன்…

  18. சமூக உணர்வுடன் வீட்டுத்தேவையைப்பூர்த்தி செய்ய அரசியல்வாதிகள் முற்பட வேண்டும் மலை­யக மக்­களின் வீட்­டுத்­தேவை தொடர்பில் தற்­போது அதி­க­மாக பேசப்­பட்டு வரு­கின்­றது. இம்­மக்­களின் வீட்­டுத்­தே­வையைப் பூர்த்தி செய்யும் நோக்கில் கடந்த காலத்தில் முன்­னெ­டுக்­கப்­பட்ட திட்­டங்கள் முழுமை பெற்­ற­தாக இல்லை. அங்­கொன்றும் இங்­கொன்­று­மாக சிற்­சில வீடுகள் அமைக்­கப்­பட்­டதே தவிர வீட­மைப்பு தேவை முழு­மை­யாக நிவர்த்தி செய்­யப்­ப­ட­வில்லை. இந்­நி­லையில் நல்­லாட்சி அர­சாங்கம் மலை­யக மக்­களின் வீட்­டுத்­தேவை தொடர்பில் கரி­ச­னை­யுடன் செயற்­ப­ட­வேண்டும் என்று வலி­யு­றுத்­தல்கள் இடம்­பெற்­றுள்­ளன. மேலும் இந்­தியா, பிரித்­தா­னியா போன்ற நாடு­க­ளுக்கும் மலை­யக மக்­க­ளுக்­கான வ…

  19. சிம்பாப்வே: ஆபிரிக்காவின் கலகக்காரன் - தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ உலக அரசியல் அரங்கில் கலகக்காரர்களுக்கு தனியான இடமுண்டு. கலகக்காரர்கள் எல்லோரும் ஓரே இயல்புடையவர்கள் அல்லர். அவர்கள் வாழ்ந்த காலம், இடம், உலகச் சூழல் என்பனவும் அவர்களின் நடத்தையுமே அனைத்தையும் தீர்மானிக்கிறது. கலகக்காரர்களே உலக அரசியல் அரங்கை உயிர்ப்புடன் வைத்திருக்கிறார்கள் என்பதைத் துணிந்து சொல்லவியலும். அவர்கள் இல்லாவிடின் ஒற்றைப் பரிமாண உலக அரசியலை சத்தமின்றி ஏற்று நடக்கும் இயல்புடனேயே உலகம் இயங்கிக் கொண்டிருக்கும். ஆனால், உலகம் இப்போது அவ்வாறு இயங்குவதில்லை. அவ்வாறு இயங்குவதையே அதிகார மையங்கள் விரும்புகின்ற போதும் அது சாத்தியமாவதில்லை. …

  20. தேனி ஆட்களைப்போல் யாழ் கள உறவுகளால் கட்டுரைகள் எழுதமுடியாதா? என்ற கள உறவொன்றின் ஆதங்கத்தைப் படித்தது நெஞ்சைத் தொட்டதில் எனது எண்ணப்பதிவுகளை இங்கு தருகிறேன். நாம் எமது நேரத்தையும் வளங்களையும் அற்பமான ஆக்கங்களிற்குப் பதில் எழுதுவதில் வீணடிக்காமல் ஆணித்தரமான செயற்பாடுகளினால் அவர்களைத் திணறடிப்பதே மேலானதென எண்ணுகிறேன். செய்தது, செய்துகொண்டிருப்பது, செய்யவேண்டியது எங்கள் ஒவ்வொருவரது வீட்டையும் இழவுவீடாக்கிய அந்தக் கொடிய வைகாசி 17...... பல்லாயிரம் எம்மவர் இன்னுயிர்களையும், எமது கனவு, எமது இலட்சியம் எமது ஏக்கம், எமது கொள்கை, எமது அமைப்பு, எமது தலைமை என அனைத்தையுமே அநியாயமாக் காவுகொண்ட அந்த இருரண்ட வைகாசி 17 கடந…

    • 0 replies
    • 625 views
  21. யுத்தத்துக்குப் பின்னரான வடக்கில், காணி இழப்பும் காணி இன்மையும் சிவப்பு குறிப்புகள் - அகிலன் கதிர்காமர் காணிப் போராட்டம் யுத்தம் முடிந்த பின்னரான ஒடுக்கு முறைக் காலத்தில் சிறு நெருப்பாக இருந்த காணிப் போராட்டம் இப்போது வடக்கு அரசியலில் பெருநெருப்பாக எரிகின்றது. இந்தப் போராட்டங்களுக்கு ஆட்சி மாற்றத்துடன் வந்த ஜனநாயக காற்று, ஒட்சிசன் வழங்க, யுத்தத்தில் சீரழிந்துபோன மக்களை வாட்டும் கிராமிய பொருளாதார நெருக்கடி, விவசாயத்துக்கான காணியையும் மீன்பிடிப்புக்கான இறங்கு துறைகளையும் மீட்டெடுப்பதற்கான அவசர முயற்சிகளைத் தூண்டிவிட்டுள்ளது. இந்த மக்களைப் பொறுத்தவரையில் காணி என்பது வீடு கட்டுவதற்கான …

  22. நிலைத்திருக்குமா? ஆப்கானிஸ்தானை இரண்டு தசாப்தங்களுக்குப் பின்னர் தலிபான்கள் கடந்த வாரம் கைப்பற்றியிருந்தனர். இந்நிலையில், கடந்த 1996ஆம் ஆண்டிலிருந்து 2001ஆம் ஆண்டு வரையில் ஆப்கானிஸ்தானில் நிலவிய தலிபான்களின் ஆட்சியானது திரும்பவிருக்கின்றது. அந்தவகையில், குறித்த தலிபான் ஆட்சியில் மக்களின் அடிப்படை உரிமைகள் குறிப்பாக பெண்களின் உரிமைகள் மறுக்கப்பட்டிருந்த நிலையிலேயே தற்போது பறக்கும் விமானத்திலாவது தொங்கிக் கொண்டு சென்று தப்பித்து விட மாட்டோமா என ஆப்கானிஸ்தானியர்கள் அஞ்சி உயிரிழக்க காரணமாகின்றது. நடப்புலகியில் போரின் கொடிய காட்சிகளாக இவை பதிவாகின்றன. இவற்றுக்கு மத்தியிலேயே தலிபான்கள் தங்களது முகத்தை மிகக் கவனமாக கட்டமைக்க முயல்கின்…

    • 0 replies
    • 928 views
  23. அமெரிக்காவின் அழைப்பும் இந்தியாவின் அழைப்பும்! நிலாந்தன். December 12, 2021 இக்கட்டுரை இன்று நடக்கும் கொழும்புச் சந்திப்புக்கு முன் எழுதப்பட்டது. அமெரிக்காவும் கூட்டமைப்பை அழைத்தது.இந்தியாவும் கூட்டமைப்பை அழைத்திருக்கிறது. இந்த இரண்டு அமைப்புகளிலும் வித்தியாசங்கள் உண்டு. இந்த இரண்டு அழைப்புகள் தொடர்பான செய்திகள் மிகக் குறுகிய கால இடைவெளிக்குள் வெளிவந்திருக்கின்றன.இந்த இரண்டு அழைப்புகளையும் சற்று ஆழமாகப் பார்க்கலாம். ஒரு பிராந்திய பேரரசும் உலக பேரரசும் தமிழ் தரப்பு பிரதிநிதிகள் அழைக்கின்றன என்று சொன்னால் இரண்டு பேரரசுகளுக்கும் தமிழ் மக்களை ஏதோ ஒரு விதத்தில் எதற்காகவோ கையாள வேண்டிய ஒரு தேவை வந்து விட்டது என்…

  24. தமிழ்க் கட்சிகளின் கவனத்திற்கு – நிலாந்தன்! April 24, 2022 புத்தாண்டு பிறந்த அடுத்த நாள் வெள்ளிக்கிழமை காலை கிளிநொச்சிக்கு போகும்பொழுது எல்லா எரிபொருள் நிரப்பு நிலையங்களும் திறந்திருந்தன. சிறிய மற்றும் பெரிய வரிசைகளில் நின்று எரிபொருளை நிரப்பக் கூடியதாக இருந்தது. ஆனால் மதியமளவில் ஒரு செய்தி வெளிவந்தது. மோட்டார் சைக்கிளுக்கு ஆயிரம் ரூபாய் வரையிலும் மோட்டார் கார்களுக்கு 1500 ரூபாய் வரையிலும் தான் பெட்ரோல் நிரப்பலாம் என்று அச்செய்தி தெரிவித்தது. அதன்பின் பிற்பகல் 3 மணியளவில் கிளிநொச்சியிலிருந்து புறப்பட்டேன். கிளிநொச்சியில் தொடங்கி யாழ்ப்பாணம் வரையிலும் பெரும்பாலும் எல்லா எரிபொருள் நிரப்பு நிலையங்களும் ஒன்றில் மூடப்பட்டிருந்தன. அல்லது பெட்ர…

  25. ஈழத் தமிழர்களுடைய வரலாற்றின் அத்தனை பக்கங்களுமே இரத்தத்தால் எழுதப்பட்டவை. அதிலும் குறிப்பாக ஏப்ரல், மே, யூன், யூலை போன்ற மாதங்களைக் கறுப்பு மாதங்களாக பிரகடனப்படுத்துகின்ற அளவிற்குக் கறைபடிந்தவை. கிள்ளுக்கீரையாக்கப்படும் தமிழர்கள் காலனியாதிக்கத்திலிருந்து இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன்பும் சரி பின்பும் சரி தமிழர்கள் கிள்ளுக்கீரையாகவே பார்க்கப்பட்டிருக்கிறார்கள். பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள். சிங்கள பெரும்பான்மை தலைமைகள் தமிழர் தரப்பை தம்முடைய சுயலாபத்திற்கும் தேவைகளுக்கும் சாதகமாகப் பயன்படுத்துவதற்கு மட்டும் விரும்பினார்களே தவிர, தமிழர்களின் சுதேசிய மரபைகளையும், உரிமைகளையும் மதித்து நடக்க கிஞ்சித்தும் விரும்பவில்லை. இத்தீவின் பெரும்பான்மையினப் புத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.