அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9272 topics in this forum
-
உள்ளூராட்சி தேர்தல்களும் மக்களின் மனநிலையும் Veeragathy Thanabalasingham on April 29, 2025 Photo, @anuradisanayake உள்ளூராட்சி தேர்தல்களுக்கு இன்னமும் எட்டு தினங்கள் இருக்கின்றன. ஏழு மாதகால இடைவெளியில் மூன்றாவது தேர்தலை எதிர்கொள்வதனால் போலும் மக்கள் மத்தியில் பெரிய உற்சாகத்தைக் காணமுடியவில்லை. கடந்த வருடத்தைய ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பில் கலந்துகொண்டவர்களை விடவும் குறைவான தொகையினரே நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்தார்கள். உள்ளூராட்சி தேர்தல்களில் மேலும் குறைவான எண்ணிக்கையில் மக்கள் வாக்களிப்பில் கலந்துகொள்ளக்கூடிய சாத்தியமே இருக்கிறது. மக்களின் மனநிலைக்கு அப்பால் நாடடின் தற்போதைய மிகவும் கடுமையான வெப்பநிலையும் கூட இதற்கு பெருமளவில் பங்களிப்புச் செய்யக்கூடும். ஆளும் தேசி…
-
- 0 replies
- 299 views
-
-
78 ஆண்டு கால “சுதந்திரம்” ? நிலாந்தன்! இலங்கைத் தீவு பிரித்தானியரிடமிருந்து விடுபட்டு 78 ஆண்டுகள் ஆகிறது. இலங்கைத் தீவின் ஒரு பகுதி மக்கள் அதனை சுதந்திர தினம் என்று கொண்டாடுகிறார்கள். ஆனால் தமிழ் மக்களில் கணிசமானவர்கள் அதனை கரிநாள் என்று கருதுகிறார்கள். தங்களுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை என்றும் தமிழ் மக்கள் நம்புகிறார்கள். கடந்த 4 ஆம் தேதி யாழ்ப்பாணத்தில் ஒப்பீட்டளவில் அதிகம் சிங்கக் கொடிகளை காணக் கூடியதாக இருந்தது. வட மாகாண ஆளுநர் அலுவலகம் வழமையை விட வித்தியாசமாக பெருமெடுப்பில் அந்த நாளைக் கொண்டாடியது. ஆனால் அதே நாளில்,கிளிநொச்சியில்,மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டப் பேரணிகள் இடம்பெற்றன.அது சுதந்திர நாள் அல்ல கரிநாள் என்று பிரகடனப்படுத்தி யாழ்.பல்கலைக்கழக மாணவர்களும் காணாம…
-
- 0 replies
- 120 views
-
-
வைத்திய கலாநிதி இ.சிவசங்கர் அவர்கள் கைது செய்யப்பட்ட விடயம் தமிழ் மருத்துவர் களை அதிர்ச்சிக்கு உட்படுத்தியுள்ளது. இலங்கையில் மருத்துவப் பட்டத்தை நிறைவு செய்கின்ற தமிழ் வைத்தியர்கள் இந்த மண்ணில் இருந்து சேவையாற்றுவதற்கு விருப்பமில்லாது நாட்டைவிட்டு வெளியேறி இருக்கின்ற சூழமைவில், ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையான தமிழ் மருத்துவர்களே தாம் பிறந்த மண்ணிற்கு சேவையாற்ற வேண்டும் என்ற பெருவிருப்போடு பணிபுரிந்து வருகின்ற இவ்வேளையில், தமிழ் மருத்துவர்களை நோக்கிய படைத் தரப்பின் சந்தேக பார்வை, மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை இந்த நாட்டின் ஒட்டுமொத்த சமூகமும் புரிந்து கொள்வது அவசியம். வட மாகாணம் முழுவதிலும் மருத்துவர்களின் எண்ணிக்கை பற்றாக்குறையாக இருக்கின்ற போது, மருத்துவர்கள்…
-
- 0 replies
- 846 views
-
-
இலங்கையை பல்லின சமூக ஜனநாயகமாக மறுசீரமைப்புச் செய்வது சாத்தியமானதா ? இலங்கை வெளியுறவு அமைச்சின் ஆலோசகராக இருக்கும் ஹரிம் பீரிஸ் அண்மையில் ‘ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினதும் ‘ஐக்கிய தேசியக்கட்சியினதும் மகாநாடுகளும் தேசிய அரசாங்கக் கோட்பாடும்’ (The SLFP and UNP Conventions and ideology of National government) என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையொன்று கொழும்பு ஆங்கிலப் பத்திரிகையொன்றில் வெளியாகியிருந்தது. அதில் அவர் தற்போது முன்னாள் ஜனாதிபதி திருமதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையில் இயங்கும் ஜனாதிபதியின் தேசிய ஐக்கியம் மற்றும் நல்லிணக்க அலுவலகத்தின் (President’s office of National unity and Reconciliation) உறுப்பினர்களில் ஒருவராக இருக்கும் கலா…
-
- 0 replies
- 457 views
-
-
ஜெயிக்கப் போவது யார்? எதிர்வரும் 4 வருட காலத்திற்கு அமெரிக்காவின் தலைவிதியை மட்டுமல்லாது உலகின் தலைவிதியையே தீர்மானிக்கப் போகும் முக்கியத்துவம் மிக்க தேர்தலில் வாக்களிக்க அமெரிக்க வாக்காளர்கள் தயாராகியுள்ளனர். அமெரிக்காவின் 58 ஆவது ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகின்றது. அமெரிக்காவினதும் உலகினதும் தலைவிதி வாக்காளர்களின் தோளில் முள் முனையில் நிற்பது போன்று ஊசலாடிக் கொண்டிருக்கிறது என இந்தத் தேர்தல் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்திருந்த கருத்து நிதர்சனமானது என்பது கண்கூடு. நேரத்துக்கு நேரம் தனது கருத்துகளை மாற்றி சலசலப்பை ஏற்ப…
-
- 0 replies
- 582 views
-
-
அதிகாரப்பகிர்வுக்கு வந்துள்ள அச்சுறுத்தல் -என்.கண்ணன் ‘அதிகாரப் பகிர்வை சவாலுக்குட்படுத்தி விட்டு, சாதிய முரண்பாட்டைக் கிளறி, தப்பித்துக் கொள்ளும், அளவுக்கு யாழ்ப்பாணத்து அரசியல் சென்றிருக்கிறது’ மாகாண சபைகளை ஒழித்து விட்டு உள்ளூராட்சி சபைகளின் அதிகாரங்களை வலுப்படுத்த வேண்டும் என்ற கருத்து, தற்போதைய அரசாங்கத்திடம் வலுவாக உள்ள நிலையில், இதே அரசாங்கம் தான், உள்ளூராட்சி சபைகளின் அதிகாரங்களையும் பறித்தெடுக்கும் காரியத்தில் இறங்கியிருக்கிறது. உள்ளூராட்சி சபைகளின் அதிகாரங்களை மதிக்காமல், செயற்படும் மத்திய அரசின் நிர்வாக அமைப்புகள், இதற்கு சவால் விடும் உள்ளூராட்சி சபைகளின் நிர்வாகத்தை அச்சுறுத்தும் வகையிலும் செயற்பட ஆரம்பித்துள்ளன. வலிகாமம் கிழக்கு பிர…
-
- 0 replies
- 348 views
-
-
ஜெனிவா பட்டிமன்றம்...! (ஆர்-ராம்) முள்ளிவாய்க்கால் பேரவலத்துடனான முடிவு தமிழர்களின் உரிமைகளை பெற்றெடுப்பதற்கானதொரு ‘பெரு’ வாயிலை அகலமாக திறந்து விட்டிருந்தது. இலங்கையில் அன்று ஆட்சியில் அமர்ந்திருந்த ராஜபக்ஷ தரப்பின் சீனா தழுவிய பிரதிபலிப்புக்களால், அயல்நாடான இந்தியா மற்றும் சர்வதேசத்திற்கு தமது நலன்கள் சார்ந்த அச்சங்களும் ஐயங்களும் வெகுவாக வலுத்திருந்தன. இந்த தருணத்தில் தான் முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்கான தமிழர்களின் நீதிக்கோரிக்கை இந்திய, சர்வதேச தரப்புக்களை முழுமையாக மையப்படுத்திச் சென்றது. தமிழர்கள் விடயத்தினைப் பயன்படுத்தி இலங்கை அரசாங்கத்தினை தமது ‘பிடிக்குள்’ வைத்திருக்கும் மூலோபய தளமாக ஜெனிவை அத்தரப்புக்கள் மாற்றியமைத்துக்கொண்டன. அதன…
-
- 0 replies
- 531 views
-
-
ஒன்று பட்ட இலங்கைக்குள் தீர்வு என தமிழர்கள் மீது இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் 13வது சட்டத் திருத்தத்தினை திணிக்கும் இந்திய அரசின் சதியை முறியடிப்போம். ஒன்று திரள்வோம். 13வது சட்டத்திருத்தம் இலங்கையின் இறையாண்மையை காக்கும் தீர்மானமே. இனியொருவரதராஜப்பெருமாளை தமிழீழம் ஏற்காது எனச் சொல்வோம். இந்திய இலங்கை ஒப்பந்தம் ஊடாக தமிழர்களை சிங்களத்தின் அடிமையாக மாற்றத் துடித்த சதியை தமிழீழ விடுதலைப் போராளிகள் தங்கள் இன்னுயிரைக் கொடுத்து வென்றார்கள். மாவீரன் திலீபன் தியாகம் செய்து அம்பலப்படுத்திய இந்தியச் சதியை மீண்டும் நிறைவேற்ற இந்தியா துடிக்கிறது. இந்த துரோகத்தினை இனிமேலும் பார்க்க முடியுமா?. அன்று அவர்கள் சொல்லிய சென்ற சமரசமற்ற அரசியல் புரிதலோடு போராட்டத்தினை தமிழகத்தில் முன்னெடு…
-
- 0 replies
- 552 views
-
-
மீண்டும் சர்வதேசத்தை நோக்கி.... தமிழ் மக்கள் தங்களால் முடிந்தவரை பொறுமையாக இருந்து விட்டார்கள். இனியும் அவர்களால் பொறுமையாக இருக்க முடியாது” என்று, கடந்தவாரம் கொழும்புக்கான பயணத்தை மேற்கொண்டிருந்த இலங்கைக்கான சுவீடன் தூதுவர் ஹரோல்ட் சான்ட்பேர்க்கிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறியிருந்தார். இலங்கை, இந்தியா, மாலைதீவு, நேபாளம், பூட்டான் ஆகிய நாடுகளுக்கு சுவீடனின் தூதுவராக இருப்பவர்தான், ஹரோல்ட் சான்ட்பேர்க். புதுடெல்லியில் இருந்து கொண்டு அவ்வப்போது, இலங்கை உள்ளிட்ட ஏனைய நாடுகளுக்கு வந்து, தமது இராஜதந்திரப் பணியைக் கவனிப்பவர். ஸ்கன்டினேவிய நாடான சுவீடன், 2002 ஆம் ஆண்டு, அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்க…
-
- 0 replies
- 677 views
-
-
20 ஆம் திகதி நடந்தது என்ன ? அரசியலில் பல்வேறு காய்நகர்த்தல்களும் நகர்வுகளும் மிகவும் சூட்சுமமான முறையில் இடம்பெற்றுக்கொண்டிருப்பதை அவதானிக்க முடிகிறது. அரசியல் கட்சிகள் தமது எதிர்கால அரசியல் செயற்பாடுகள் தொடர்பில் காய்நகர்த்தல்களை முன்னெடுத்து வருகின்றன. தமது அரசியல் வெற்றியை நோக்கி கட்சிகள் காய்களை நகர்த்துகின்ற நிலையில் ஒருசில செயற்பாடுகள் அவ்வப்போது சூடுபிடிக்கின்றன. அவ்வப்போது சூடு பிடிப்பது மட்டுமன்றி அவை சில மக்கள் பிரிவினரை அநீதிக்கு உட்படுத்துவதாகவும் அமைந்துவிடுகின்றன. அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டமூலம் கடந்த செப்டெம்பர் மாதம் 20 ஆம் திகதி நிறைவேற்றப்ப…
-
- 0 replies
- 509 views
-
-
மாவீரர் தினத்தை முன்னிறுத்திய தரப்படுத்தலும் கருத்தியலும் மேடைப் பேச்சுகளும் கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, இம்முறை மாவீரர் துயிலும் இல்லங்களை நோக்கிப் பெருவாரியாக மக்கள் திரண்டார்கள். வடக்கு - கிழக்கிலுள்ள 30க்கும் அதிகமான மாவீரர் துயிலும் இல்லங்களில், அஞ்சலிச் சுடர் ஏற்றப்பட்டது. கடந்த காலத்தில் மாவீரர் துயிலும் இல்லங்களை இராணுவம் உருத்தெரியாமல் இடித்து, அழித்த போதும், அந்தச் சிதைவுகளை ஒன்றாக்கி, மாவீரர்களின் அர்ப்பணிப்பை, ஆகுதியின் பெரும் வடிவமாக மக்கள் மாற்றிக் காட்டினார்கள். அலுவலகங்களுக்குள் மட்டும், மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்திய, அரசியல் கட்சியினரும் அமைப்புகளும் கூட, மக்களோடு மக்கள…
-
- 0 replies
- 315 views
-
-
போட்டி களமாக மாறும் இலங்கை!! தமிழ் தரப்புகளின் நிலை என்னவாகும்??
-
- 0 replies
- 336 views
-
-
கிழக்கு: அரசியலை தூக்கி எறிந்துவிட்டு... சீனாவால் அமைக்கப்பட்டுவரும் கொழும்புத் துறைமுக நகரத்தையும் சேர்த்த கொழும்பின் புதிய வரைபடம் வெளியிடப்பட்டிருக்கிறது. நில அளவையாளர் நாயகம் பி.எம்.பி. உதயகாந்த இதை வெளியிட்டு வைத்ததுடன், இலங்கையின் புதிய வரைபடத்திலும் பல மாற்றங்கள் இடம் பெற்றிருக்கின்றன. ஆனால், கிழக்கின் அரசியல் வரைபடத்தில் மாற்றங்களை யார் கொண்டு வருவது என்பதுதான் இப்போதுள்ள கேள்வியாகும். அரசியலை வெறுக்காதவர்கள், அடி மட்டம் முதல் உயர்நிலை வரையில் இருக்கத்தான் செய்கிறார்கள். இருந்தாலும் அரசியலைத் தூக்கி எறிந்து விட்டு, எதைத்தான் செய்துவிட முடியும். ‘அரசியலும் மண்ணாங்கட்டியும்’ என்று இப்போது இருந்…
-
- 0 replies
- 719 views
-
-
அரச தலைவர் தேர்தலும் -சிறுபான்மையின மக்களும்!! எதிர்வரவுள்ள அரச தலைவர் தேர்தலில் இம்முறை சிறு பான்மையின மக்கள் அக்கறை காட்டுவார்களென எதிர்பார்க்கமுடியாது. கடந்த தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வுககு ஆதரவாக வாக்களித்து அவரை வெற்றிப் பாதைக்கு இட்டுச் சென்றவர்கள் சிறுபான்மையின மக்களே என்பதை எவருமே மறந்திருக்க மாட்டார்கள். ஆனால் இம்முறை அவ்வாறானதொரு நிலை காணப்படவில்லை. அடுத்த அரச தலைவர் தேர்தல் வேட்பாளர்கள் குறித்து இதுவரை முடிவு இல்லை மகிந்த அணியைப் பொறுத்…
-
- 0 replies
- 401 views
-
-
குள்ள மனிதன் கிறீஸ் மனிதனின் தம்பியா? - நிலாந்தன் 05/08/2018 வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அராலி, வட்டுக்கோட்டை ஆகிய பகுதிகளில் அண்மை நாட்களாகப் பதட்டம் நிலவுகிறது. இது தொடர்பில் நேற்று அராலியில் காலையும் பின்னேரமும் இரு சந்திப்புக்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. நாளை அப்பகுதி பிரதேச சபையினர் யாழ் அரச உயரதிகாரிகளை சந்திக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது. நேற்றுக் காலை அராலி அம்மன் கோவிலடியில் நடந்த சந்திப்பில் பெருந்தொகையான குடும்பத்தலைவிகள் கூடியிருக்கிறார்கள். இன்று நடக்கவிருக்கும் புலமைப் பரிசில் பரீட்ற்சைக்குத் தோற்றும் மாணவர்களால் நிம்மதியாகப் படிக்க முடியவில்லை என்று அவர்கள் முறைப்பாடு செய்திருக்கிறார்கள்.அப்பகுதி பிதேச சபை தவிசாளர் தரும் தகவலின் ப…
-
- 0 replies
- 407 views
-
-
சீன கடன்பொறியும், நவ காலனித்துவமும் ஒரு ஊர். அதிலொரு செல்வந்தர். தமது சுய முயற்சியில் சமீபத்தில் பணக்காரரான செல்வந்தர். இந்த செல்வந்தர் ஊரின் ஒரு கோடியில் வசிக்கிறார். ஆற்றைத் தாண்டி மறுகோடியில் சில வறிய குடும்பங்கள். வறிய குடும்பங்களுக்கு செல்வந்தர் வாரி வழங்குகிறார். அந்தக் குடும்பங்களின் தேவைகளை நிறைவேற்றுகிறார்.நான் வளர்ந்து விட்டேன். உங்களிடம் குறைகள் இருக்கின்றன. நான் உதவி செய்து உங்கள் குறைகள் தீர்ந்தால், நாம் வளரலாம். ஊரும் பயன் பெறலாம் என்கிறார், செல்வந்தர். செல்வந்தரின் வார்த்தைகளை வறிய குடும்பங்கள் நம்புகின்றன. அவரிடம் இருந்து வாங்குகின்றன. தமக்குத் தரப்படுவதை த…
-
- 0 replies
- 1k views
-
-
அலசல்: இலங்கையில் என்ன நடக்கிறது? - தமிழ் மிரரின் விவரணப் பிரிவு Editorial / 2018 நவம்பர் 01 வியாழக்கிழமை, மு.ப. 09:03 Comments - 0 இலங்கையில், கடந்த வெள்ளிக்கிழமை (26) மாலை ஏற்படுத்தப்பட்ட அரசியல் மாற்றம், பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இலங்கையில் அரசியல் குழப்ப நிலை அல்லது அரசியல் நெருக்கடி இருப்பதை அநேகர் உணர்ந்தாலும் ஏற்றுக் கொண்டாலும், அதைத் தாண்டிய பல்வேறு கேள்விகளும் சந்தேகங்களும், பலரிடத்தில் இருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. எனவே, இலங்கையின் அரசியல் நெருக்கடி நிலைமை தொடர்பாக, கடந்த சில நாள்களில் ஏற்பட்ட மாற்றங்கள் தொடர்பாக, இப்பகுதி ஆராய்கிறது. என்ன நடந்தது? இலங்கையின் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவை,…
-
- 0 replies
- 518 views
-
-
அமெரிக்க அரசியல் கட்சிகளின், சின்னமாக... யானை, கழுதை வந்தது எப்படி? அமெரிக்க அதிபர் டெனால்டு ட்ரம்பின் ஆட்சிக் காலத்தின் மீதான வாக்கெடுப்பாக கருதப்படும் இடைத்தேர்தல் அந்நாட்டில் நடைபெற்றுள்ளது. 435 மொத்த உறுப்பினர்களைக்கொண்ட செனட்டில் காலியாக இருந்த 35 இடங்களுக்கு இடைத்தேர்தல் 6 ஆம் தேதி நடந்துள்ளது. இரு சபையிலும் மைனாரிட்டியாக இருக்கும் ஜனநாயகக் கட்சி இந்த தேர்தலில் சில இடங்களை ஜெயிக்கும் என கருதுகிறது. குடியரசுக்கட்சி ஏன் யானை சின்னத்திலும், ஜனநாயக்கட்சி ஏன் கழுதை சின்னத்திலும் போட்டியிட்டுவருகின்றனர் எனத் தெரியுமா? இதில் ஒரு சுவாரஸ்யம் உள்ளது.1874 ஆம் ஆண்டு அமெரிக்காவின் கார்ட்டூன்களின் தந்தை என வர்ணிக்கப்படும் தாமஸ் நஸ்ட் குடியரசு கட்சியின் 3வது முறை வெற்றி…
-
- 0 replies
- 593 views
-
-
இன உருவாக்கமும் தமிழர் சின்னமும் Editorial / 2018 டிசெம்பர் 25 செவ்வாய்க்கிழமை, மு.ப. 04:11 - ஜெரா உலகில் வாழ்கின்ற ஒவ்வொரு மனித இனமும், தன்னை அடையாளப்படுத்துகின்ற சின்னங்களையும் குறியீடுகளையும் வைத்திருக்கிறது. அவ்வாறானதொரு சின்னம் அல்லது குறியீடு தெரிவுசெய்யப்படும்போது, அந்த இனத்தவரின் கூட்டு ஆன்மாவும் உளமும் அதில் தாக்கம் செலுத்தக்கூடியவகையில் பார்த்துக்கொள்ளப்படுகின்றது. அதற்குள், குறித்த இனத்தின் வரலாற்று, பண்பாட்டு, ஐதீக நடைமுறைகள் இரண்டறக் கலந்தனவாக இருக்கின்றன. இந்தியர்களுக்கு அசோகச் சக்கரமொன்றும், அமெரிக்கர்களுக்கு ஒரு கழுகும், சீனர்களுக்கு அனல்கக்கும் பறவையும், சிங்களவர்களுக்குச் சிங்கமும், இந்தப் பின்னணியிலேயே நிலைபெற்றுவிட்டன. இந்த…
-
- 0 replies
- 818 views
-
-
சம்பந்தனுக்குப் பின்னரான தலைமைத்துவ வெற்றிடம் புருஜோத்தமன் தங்கமயில் / 2019 பெப்ரவரி 06 புதன்கிழமை, மு.ப. 02:12 Comments - 0 இரா. சம்பந்தனின் 86ஆவது பிறந்த தினம் நேற்று (பெப்ரவரி 05) கொண்டாடப்பட்டது. அரை நூற்றாண்டு காலத்துக்கும் மேலாக, அரசியல்வாதியாக இருக்கும் அவர், விடுதலைப் புலிகளுக்குப் பின்னரான கடந்த பத்து ஆண்டுகளை, தமிழ்த் தேசிய அரசியலில் முடிவுகளை எடுக்கும் தலைவராகக் கடந்திருக்கின்றார். அவர் தலைமையில் எடுக்கப்பட்ட முடிவுகளில், நல்லது, கெட்டது சார்ந்து, பொறுப்புக்கூற வேண்டிய கடப்பாடோடும் இருக்கின்றார். இன்னொரு பக்கத்தில், சம்பந்தனால் அரசியலுக்கு அழைத்துவரப்பட்ட சி.வி. விக்னேஸ்வரன், கடந்த வருடம் தன்னுடைய 79ஆவது பிறந்த தினத்தில், புதிய கட…
-
- 0 replies
- 598 views
-
-
இலங்கையை சிங்கள நாடாக மாற்ற, தமிழர்களின் மீதமிருக்கும் கலாச்சார அடையாளங்களையும் அழிக்க முயற்சி வீக்கெண்ட் லீடர் பத்திரிக்கை Vol 2 Issue 31 வடக்கு இலங்கையில் தமிழ் பிரதேசங்களில் பயணம் செய்யும்போது, எவ்வாறு அந்த நிலத்தின் மக்கள்தொகை மாற்றம் நடந்திருக்கிறது என்பதை பார்க்கும்போது அதிர்ச்சியே மிஞ்சும். முழுக்க முழுக்க தமிழர்கள் வாழ்ந்த பிரதேசமாக இருந்து, தமிழ் கலாச்சாரம் பாரம்பரியத்தை சொல்லி வந்த நிலம் இன்று சிங்கள ஆக்கிரமிப்பில் புத்த சிலைகள் எங்கும் தென்படும் நிலமாக மாறிவருகின்றன. இங்கு புத்தசிலைகள், விகாரங்கள், ஸ்தூபங்களும் காணப்படும் அதே வேளையில் ஆங்காங்கே உடைந்த தமிழ் வீடுகளும், தமிழ் அகதிகள் தங்கும் புதியதாக கட்டப்பட்ட சேரிகளும் காணப்படுகின்றன. சிங்களமும், ச…
-
- 0 replies
- 317 views
-
-
புங்குடுதீவுச் சம்பவம் தொடர்பில் கடந்த வாரத்திற்கு முதல் வாரம் நான் எழுதிய கட்டுரை குறித்து ஒரு செயற்பாட்டாளர் உரையாடினார். 'வடமாகாணசபையின் முதலமைச்சர் இத்தகைய பிரச்சினைகளுக்கெல்லாம் காரணம் படைமயப்பட்ட ஒரு சமூகச் சூழலே என்று கூறுகிறார். போதையூட்டும் பொருட்கள் இளைய தலைமுறையினர் மத்தியில் திட்டமிட்டுப் பரப்பப்படுவதாகவும் இது குற்றச் செயல்களை ஊக்குவிப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார். அவர் கூறுவதன் அடிப்படையில் யோசித்தால் தமிழ் பகுதிகளில் படைமய நீக்கம் செய்வதே இப் பிரச்சினைகளுக்கெல்லாம் இறுதித்தீர்வாக அமைய முடியும் என்று தெரிகின்றது. அதே சமயம் நீங்கள் உங்களுடைய கட்டுரையில் தமிழ் மக்கள் தங்கள் மத்தியில் கீழிருந்து மேல் நோக்கிக் கட்டி எழுப்பப்படும் உள்ளூர் தலைமைத்துவங்களைப் ப…
-
- 0 replies
- 206 views
-
-
ஜெனீவா 2019 – நிலாந்தன்… March 31, 2019 ‘மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை நடைமுறைப்படுத்து வதற்கான எந்த அதிகாரமும் அந்தச் சபைக்கு இல்லை. இஸ்ரேலுக்கும் எதிராக 70 வரையான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால் ஒன்றுகூட நடைமுறைப்படுத்தப்படவில்லை. ஆனால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஏற்றுக்கொண்டு அந்த முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதற்கு முயற்சி எடுக்கும் ஒரேயொரு நாடு இலங்கையாகும்.’ இவ்வாறு கூறியிருப்பவர் கலாநிதி பாலித்த கோகன்ன. வியத்மக அமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பொன்று கடந்த சனிக்கு முதற்சனிக்கிழமை கொழும்பில் நடைபெற்றது. அதில் பேசும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியிருக்கிறார். கலாநிதி பாலித்த கோகன்ன ஒரு புத்திஜீவி. முன்னாள் ராஜதந்த…
-
- 0 replies
- 641 views
-
-
வெசாக் தினத்தில் வௌிப்பட்ட நல்லிணக்கம் சி.சி.என் இம்முறை வெசாக் தினம் மிகவும் அமைதியான முறையில் அனுஷ்டிக்கப்பட்டது. பெரும்பான்மையினர் செறிந்து வாழ்ந்து வரும் பிரதேசங்களில் வெசாக் தோரணங்கள்,வர்ண அலங்காரங்கள் , மின்குமிழ் வேலைப்பாடுகளுக்கு குறைவிருக்கவில்லை. எனினும் முதன் முறையாக தொரண என்ற அலங்கார அமைப்பு இல்லாத ஒரு வெசாக் தினமாகவும் பெரியளவான உணவு தன்சல் இல்லாததாகவும் இது அனுஷ்டிக்கப்பட்டமை ஒரு குறையாகவே தெரிந்தது. இந்த குறையை இல்லாதாக்குவது போன்று இம்முறை அனைவரையும் ஆச்சரியப்பட வைத்த சம்பவம் பல முஸ்லிம்கள் தமது மார்க்க கட்டுப்பாடுகளையும் தளர்த்தி வெசாக் பந்தல் அமைத்தல், தன்சல் செயற்பாடுகளில் ஈடுபடல் ஏன் விகாரைகளுக்கு செல்லல் போன்ற விடயங்களில் ஈடுபட…
-
- 0 replies
- 985 views
-
-
பட மூலாதாரம்,SRI LANKA NAVY படக்குறிப்பு, ஐஎன்எஸ் மும்பை கப்பல் கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக 31 ஆகஸ்ட் 2024, 13:00 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் சீன போர் கப்பல்களும், இந்திய போர் கப்பலொன்றும் ஒரே நேரத்தில் இலங்கைக்கு வருகை தந்து, மீண்டும் தத்தமது நாடுகளை நோக்கி பயணித்துள்ளன. இந்த இரண்டு நாட்டு கப்பல்களும் கடந்த 26ஆம் தேதி இலங்கை சென்றன. கடந்த வியாழக்கிழமை (ஆகஸ்ட் 29) இலங்கையை விட்டு புறப்பட்டுச் சென்றன. இலங்கையில் இந்திய, சீன போர்க் கப்பல்கள் என்ன செய்தன? சீன போர்க் கப்பல்கள் இலங்கை வருகை சீனாவிற்கு சொந்…
-
- 0 replies
- 225 views
- 1 follower
-