அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9211 topics in this forum
-
பௌத்த சிங்களப் பேரினவாதத்தின் இறுக்கமான நிலைப்பாட்டைப் புரிந்து கொள்ளவேண்டுமாயின் , அது தனது பலமென்று கருதும் சர்வதேச சக்திகளின் போக்குகளைத் தெரிந்து கொள்ள வேண்டும் . அந்தவகையில் சிங்களத்தின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாத , நிபந்தனையற்ற ஆதரவினை வழங்கும் சீனாவைப் புரிந்து கொண்டாலே போதும். ஆதலால்,முதலில்ஆசியாவை நோக்கி நகரும் புவிசார் அரசியலின் தவிர்க்கமுடியாத பார்வை, தென்சீனக் கடலிலும், இந்துசமுத்திரப் பிராந்தியத்திலும் ஆழமாகப் பதிவதை கவனிக்க வேண்டும். இலங்கை தேசிய இனப் பிரச்சினையில், மேற்குலகின் வகிபாகம் காத்திரமான பங்கினை வகிக்கப்போகிறது என்பதனை ஏற்றுக்கொண்டு ,அதனடிப்படையில் அரசியல் வேலைத்திட்டங்களை முன்னெடுப்போர், ஆசியாவில் ஏற்படும் மாற்றங்களை உன்னிப்பாக அவதானிக்க…
-
- 0 replies
- 651 views
-
-
Wednesday, January 16, 2013 ஒபாமாவும் சித்திரவதையும் Obama and torture ஒபாமா நிர்வாகம் அதன் தாராளவாத மற்றும் “இடது” ஆதரவாளர்களின் முற்போக்கான நடவடிக்கைகளுக்கான சாத்தியப்பாடுகள் பற்றிய ஊகங்களுடன் தன் இரண்டாம் பதவிக்காலத்தினை ஆரம்பிக்க தயாரிக்கையில், மீண்டும் ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி தனக்கு முன் பதவியில் இருந்தவருடைய குற்றங்களைத் தொடர்வதுடன் தீவிரப்படுத்துவதையும் நிகழ்வுகள் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. முதல் நான்கு ஆண்டுகள் பதவிக்காலத்தில் ஒபாமாவும் அவருடைய தலைமை அரசாங்க வழக்குத்தொடுனருமான எரிக் ஹோல்டரும் “பயங்கரவாதத்தின் மீதான போர்” என்ற பெயரில் CIA ஆல் நடாத்தப்பட்ட சித்திரவதை மற்றும் பிற குற்றங்கள் நடத்தப்பட்டவற்றை குறித்த அனைத்து விசாரணைகளையும்…
-
- 0 replies
- 474 views
-
-
பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க விவகாரத்தில், மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் எதைச் செய்ய நினைத்ததோ, அதைச் செய்துவிட்டது. பிரதம நீதியரசர் பதவியில் இருந்து தூக்கி வீசப்பட்ட ஷிராணி பண்டாரநாயக்கவுக்குப் பதிலாக, முன்னாள் சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். ஷிராணி பண்டாரநாயக்கவைப் பதவி நீக்குவதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கைகள் ஆரம்பமானபோதே, அது எங்குபோய் முடியும் என்பது அனைவருக்கும் தெரிந்திருந்தது. ஏனென்றால், மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைக் கொண்ட ஓர் அரசாங்கத்துக்கு முன்னால்- ஆண் ஒருவரைப் பெண் ஆக்குவதைத் தவிர மற்றெல்லாவற்றையும் தனது நிறைவேற்று அதிகாரத்தின் மூலம் செய்ய முடியும் என்று கூறிய ஜே.ஆர்.ஜெயவர்த்தனவை விடவும், மிகையான அதிகார…
-
- 1 reply
- 693 views
-
-
'அரசியல் இல்லாமல் எதுவுமில்லை. அதிகாரம் இல்லாமல் எதுவும் இல்லை' என்ற நிலைமை எம் அனைவரையும் ஆட்டிப்படைத்துக்கொண்டு இருக்கும் இன்றைய சூழ்நிலையில், அந்த அதிகாரமும் அரசியலும் அதனோடு இணைந்து தொழிற்படும் அறிவு அல்லது மார்க்கமும் யாருக்காக? எந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கிறது என்பதை வைத்துத்தான் நாம் அதிகாரத்தில் அல்லது உயர் பதவிகளில் இருப்பவர்களைப் பற்றி புரிந்துகொள்ள முடிகிறது. ரிசானா என்ற சிறுமி, கொல்லப்படுவதற்காக விமானம் ஏறி சவூதி அரேபியாவுக்குச் செல்லவில்லை. தன்னுடைய வறுமையைப் போக்கத்தான் அவள் சென்றாள். சென்ற இடத்தில் அவளை அறியாமல் ஏற்பட்ட ஒரு சம்பவம்... அதற்கு கிடைத்த தண்டனை மரணம். 'சட்டமியற்றும் அதிகாரம் என்பது இஸ்லாமிய இறையில் நம்பிக்கையின் படி அல்லா…
-
- 4 replies
- 689 views
-
-
ஈழப்படுகொலை ஓர் ஊடகவியலாளரின் சாட்சியம் ஃபிரான்ஸிஸ் ஹாரிசன் தமிழில்: என்.கே. மகாலிங்கம் அதிபயங்கரமான படுகொலைகள் நடந்த அந்தப் பொன்னிற மணல் பிரதேசத்திலிருந்து தப்பி வருகிறார் லோகீசன். ஆறு அடி உயரம். மழிக்கப்படாத தாடி. நீண்ட குழம்பிய தலைமுடி. இருபத்தேழு வயது. தன் தந்தையை ஒரு குழந்தையைப் போல் தூக்கி வருகிறார். தன் தலைக்கு மேலாகப் பறந்துகொண்டிருக்கும் துப்பாக்கிக் குண்டுகளை அவர் கவனிக்கவில்லை. காலடியில் கிடக்கும் செத்த உடல்களைக் கவனிக்கவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக அவருக்கு இப்போது தண்ணீர்த் தாகம். பயங்கரமான தண்ணீர்த் தாகம். அது மட்டுந்தான் அவருக்கு இப்போது நினைவிலிருக்கிறது. அது 2009ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம். கொடுமையான வெயில் எரிக்கும் பின் மதியம். …
-
- 8 replies
- 1.9k views
-
-
மறதியின்மேல் கட்டமைக்கப்படும் பிம்பங்கள் மு. புஷ்பராஜன் நோர்வேயின் முன்னாள் அமைச்சர் எரிக் சொல்ஹெம், பிபிசி தமிழோசைக்கு வழங்கிய நேர்காணலில் பின்வருமாறு குறிப்பிட்டார். “இலங்கையின் சமாதான முயற்சிகளில் பங்குவகித்த நாடுகளான அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், யப்பான், நோர்வே ஆகிய நாடுகள் இணைந்து ஒரு சமாதான முயற்சியை 2009 ஜனவரி மாதத்தில் மேற்கொண்டதாகவும் அதன்படி சர்வதேச அமைப்பு அல்லது அமெரிக்கா, இந்தியா அல்லது வேறொரு நாடு, இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதிகளுக்கு ஒரு கப்பலை அனுப்புவதென்றும் போரில் எஞ்சியிருந்த பொதுமக்கள், விடுதலைப்புலிகள் அனைவரையும் புகைப்படத்துடன் பதிவுசெய்து கொழும்புக்குக் கொண்டுசெல்வதாகவும், பிரபாகரன், பொட்டு அம்மான் தவிர்த்து அ…
-
- 1 reply
- 504 views
-
-
கொள்கை நோக்கும் விட்டுக்கொடுப்பும் கூட்டுச்சேர்வும் வெற்றிக்கான அடிப்படைகள் தத்தர் 'நெருப்பில் பூத்த மலர்கள் வெய்யிலில் வாடுவதில்லை'. ஈழத்தமிழர் நெருப்பில் பூத்த மலர்கள். அவர்களின் தியாகங்கள் அளப்பெரியவை. இழப்புக்கள் மிகப்பெரியவை. அவர்களின் துயரங்கள் மிகப்பெரியவை. வலியும் வேதனையும் அப்படியே அளப்பெரியவை. கனவிலும் நனவிலும் யுத்தத்தின் வடுக்களைச் சுமந்திருப்பவர்கள். உறங்காத கண்களும் ஆறாத மனமுமாய் துயர்தோய்ந்த வாழ்க்கைச் சங்கிலியில் தொங்கிக்கொண்டிருப்பவர்கள். ஈழத்தமிழர் அரசற்ற தேசிய இன மக்கள் மட்டுமல்ல அவர்களுக்காகக் குரல்கொடுக்க உலகில் எந்தவொரு அரசும் இல்லாத மக்களும்கூட. சர்வதேச உறவென்று ஒன்று அரசியல் அகராதியில் சொல்லப்படுகின்றதே ஆயினும், நடைமுறையில் சர்வ அரசுகளு…
-
- 1 reply
- 447 views
-
-
காட்டாற்றை தடுக்கவென அதன் குறுக்கே வீழ்ந்ததாம் ஒரு மரம். ஆனாலும் அதனையும் அடித்துதள்ளிக்கொண்டே எதுவுமே நிகழாதது போல தன் பாதையில் வேகமெடுத்துப் பாய்ந்துகொண்டேயிருந்தது அந்தக்காட்டாறு. ஊடகங்களும் காட்டாறு போன்றவைதான். அவை சவால்களையும், தடைகளையும், வலிகளையும் சந்தித்தாலும் கூட தம் பயணத்தில் தடம் மாறுவதில்லை. (சூழ்நிலையின் மாறுதல்களுக்கேற்ப தம் குரல்களின் தொனியையும் மாற்றும் பச்சோந்திகளும் இருக்கத்தான் செய்கின்றன. எனினும் அவற்றை ஊடகங்கள் என்று அடையாளப்படுத்துவது, நேர்மையான ஊடகங்களை அவமானப்படுத்துவது போலாகிவிடும். வேண்டுமானால் ஊது குழல்கள் என்று சொல்லலாம்.) இலங்கையில் அதிக வன்முறைகளை எதிர்கொண்ட ஊடகமான உதயன் மீது இன்னொரு கோழைத்தனமான தாக்குதல் வடமராட்சியில் அரங்க…
-
- 0 replies
- 581 views
-
-
ஒபாமாவின் இரண்டாவது தவணையில் இலங்கை எத்தகைய முக்கியத்துவத்தை பெறக்கூடும்? - யதீந்திரா ஜோன் கெரி வெளிவிவகாரச் செயலராக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மேலும் அமெரிக்காவின் மிக உயர்ந்த இரண்டு பதவிநிலைகளான பாதுகாப்புச் செயலர் மற்றும் மத்திய புலனாய்வு முகவரகத்தின் (CIA) பணிப்பாளர் ஆகியவற்றுக்கான புதிய பெயர்களை அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா அறிவித்திருக்கின்றார். இதனடிப்படையில், புதிய பாதுகாப்புச் செயலராக சக் ஹெகல் (Chuck Hagel) மற்றும் சி.ஐ.ஏயின் பணிப்பாளராக ஜோன் பிரனன் (John Brennan) ஆகியோர் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். முன்னாள் அமெரிக்க செனட்டரான ஹெகல், அமெரிக்க வட்டாரங்களில் இஸ்ரேலிய எதிர்ப்பாளர் என்னும் விமர்சனத்தை பெற்றிருப்பவர். சில விமர்சனங்களுக்கு மத்தியிலேயே இவரது பெ…
-
- 1 reply
- 746 views
-
-
Ranjan and AHRC blame govt for Rizana execution [Friday, 2013-01-11 09:58:36] Opposition Member Ranjan Ramanayake who was among those campaigning for the release of Rizana Nafeek blamed the governemnt for failing to prevent the exeuction. Mr Ramanayake told a press conference held at the Opposition Leaders Office that if it acted seven years ago and proved that the mistake was on the hands of the people who sent this underage girl she would still be alive. "Rizana has paid for this ordeal with her life which the real culprits who sent her (the fake agency) are not punished," he said. MP Ramanayake said that the government took seven years to tra…
-
- 0 replies
- 344 views
-
-
ஸ்ரீலங்காவின் அரசதலைமையினாலும் அதன் பாராளுமன்றின் மூன்றில் இரண்டிலும் அதிகமான பெரும்பான்மை பலமான பௌத்த சிங்கள பாசிச வெறியர்களாலும் , அந்நாட்டின் அதி உயர் கட்டமைப்புகளில் மிக முக்கியமானதாக உள்ள நீதித்துறையே முற்றுமுழுதாக சீர்குலைக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு ஜனநாயகத்தை ஆழக்குழி தோண்டிப்புதைத்துவிட்டு காட்டாச்சியை முழுமையாக உறுதிப்படுத்துவதான சர்வாதிகாரத்தை தன் தலையில் வைத்தாடுகிறார் மஹிந்த. இதன் மூலமாக அவர் ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் சர்வதேசத்துக்கும் பல செய்தியைகளை உரக்கக்கூறி உள்ளார். இதில், தமிழர்களுக்கு எதிரான வன்முறையை அல்லது குறிப்பாகக் கூறுவதாயின் தமிழர்களை தவணை முறையில் அழித்தொழிப்பதற்கான வலுவினை சிங்கள அரசு உறுதிப்படுத்தி விட்டது என்பதுவே முக்கியமான செய்த…
-
- 2 replies
- 664 views
-
-
மத அடிப்படைவாதமும் ஏகாதிபத்தியமும் : மோகனராஜன் இன்றைய உலகில் மக்களை பிளவுபடுத்தி ஏமாற்றி சுரண்டி, துன்படுத்தி இலாபம் சேர்க்கும் இரண்டு அரசியல் கருத்தேற்புகளாக மத அடிப்படைவாதமும் ஏகாதிபத்தியமும் காணப்படுகின்றன. இவை ஒன்றை ஒன்று பயன்படுத்திக் கொண்டு ஒன்றின் மேல் மற்றொன்று பயணிக்கின்றன. இவை மக்களை அடையவும், மக்களுடைய புரட்சிகரமான எண்ணத்தை மழுங்கடிக்கவும் உலகமயமாதல் நவ-தாராண்மைவாதம், பின்நவீனத்துவம் எனும் மாயைகளின் ஊடாக மக்களை தம்வசப்படுத்தல், அடிமைத்தனமான எண்ணங்களையும் சுயநலத்தினையும் கொண்ட பண்பாட்டு சீரழிவான சமூகத்தை கட்டியெழுப்புதல் என்பவற்றில் வெற்றி பெற்றுள்ளன என்றே கூற வேண்டும். மதம் எங்கு சமூகத்திற்கு எதிராக செயற்பட தொடங்குகின்றதோ அங்கு மத அடிப்படைவாதம…
-
- 2 replies
- 1.9k views
-
-
சவுதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட சகோதரி ரிசானாவுக்கு முதலில் அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். இலங்கையிலிருந்து பணிப்பெண்ணாகச் சென்ற ஒரு ஏழைப் பெண்பிள்ளைக்கு மரண தண்டனை விதித்து அதனை நிறைவேற்றிய கொடுஞ்செயல் கேட்டு உலகம் முழுவதும் நெக் குருகிப் போயுள்ளது. ரிசானாவின் மரணதண்டனையை நிறை வேற்ற வேண்டாம் என சவூதி அரசிடம் பலரும் கருணை மனுக்களை அனுப்பியிருந்த நேரத்தில், ரிசானா மூதுரில் உள்ள தனது வீட்டுக்கு விரைவில் திரும்புவார் என்று நம்பியிருந்த வேளையில், கழுத்துவெட்டி அவருக்கான மரண தண் டனை நிறைவேற்றப்பட்ட செய்தி கேட்டு கண்ணீர் வடிக்காத உள்ளங்கள் இருக்க முடியாது. என்ன செய்வது! ரிசானா ஒரு ஏழை பிள்ளை. தன் வறுமையை போக்குவதற்காக தன் குறைந்த வயதிலும் வீட்டுப் பணிப்பெண்…
-
- 1 reply
- 719 views
-
-
பல்கலைக்கழக மாணவர் புரட்சி: விடுதலையை வென்றெடுக்கும் தந்திரங்களும் தோற்கடிக்கும் தந்திரங்களும் - பிரம்மாதவன் யாழ் பல்கலைக் கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டு ஒரு மாதம் கடந்தும் விடுதலை செய்யப்படவில்லை என்று வானொலியில் வாசிக்கப்பட்ட செய்தியைக் கேட்டது முதல் மனம் உள்ளுக்குள் குமுறத் தொடங்கியது. அதுவே இப்பத்தியின் ஆரம்பமாயும் ஒரு விடயத்தை பகிரங்கமாக இச்சந்தர்ப்பத்தில் சொல்லிவிடவும் வழிகோலியது. ஒரு போராடும் இனத்தில் புரட்சியின் வித்துக்கள் மட்டுமே கருவறையிலும் பள்ளிக்கூட அறைகளிலும் கல்லறைகளிலும் என எல்லாச் சூழலிலும் ஆரோக்கியமாகவே இருக்கவல்லன. பள்ளிக்கூட அறைகளில் மட்டுமே அது துளிர்விட ஏதுவான சாதகச்சூழுல் நிரம்பிக் காணப்படுகின்றது. என்னைப் பொறுத்தவரையில யாழ் பல்கலைக் க…
-
- 3 replies
- 721 views
-
-
நீதி தேவதை சிலுவையில் அறையப்படலாம். அவள் அந்த நேரத்தில் பரம பிதாவே இவர்கள் தாம் செய்வது இன்னதென்று தெரியாமல் செய்கிறார்கள். இவர்களை மன்னித்தருளும் எனக் கூறமாட்டாள். அவள் உயிர்த் தெழும் போது பெரு நெருப்பாகக் கொழுந்து விட்டெரிந்து தீமைகளை அழிப்பாள் என்பது மட்டும் நிச்சயம். 1966 1967 காலப்பகுதியில் யாழ்ப்பாணத்திலிருந்து தீப்பொறி என்ற ஒரு பத்திரிகை வெளிவந்தது. இந்தப் பத்திரிகை சமூகத்தையும் சமூகத்தில் இடம்பெறும் அநியாயங்களையும் துணிச்சலுடன் அழகு தமிழில் அடுக்கு மொழியில் காரசாரமாக விமர்சித்த காரணத்தால் இது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. இது அதிகமாக விற்பனையாகும் வார இதழாக இருந்தது மட்டுமன்றி இது எப்போது வரும் என மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்குமள…
-
- 0 replies
- 635 views
-
-
-கே.சஞ்சயன் நீதிமன்றத் தீர்ப்பை விமர்சனம் செய்வது தண்டனைக்குரிய குற்றமாக கருதப்பட்டு வந்த நாட்டில், நீதித்துறை இப்போது செல்லாக்காசு போன்று மதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை வாசம் அனுபவித்த அமைச்சர் எஸ்.பி.திசநாயக்க அங்கம் வகிக்கின்ற அரசாங்கத்தில் உள்ள அவரது அமைச்சரவை சகாக்களே, பகிரங்கமாக நீதிமன்றங்களை, நீதிபதிகளை, நீதிமன்றத் தீர்ப்புகளை விமர்சிக்கின்ற நிலை காணப்படுகிறது. அதுவும், உயர்நீதிமன்றம், மேல்முறையீட்டு நீதிமன்றங்களின் தீர்ப்புகள், கருத்துகள் எல்லாம் கண்டபடி விமர்சிக்கப்படுகின்றன. அரச ஊடகங்களிலேயே, இத்தகைய விமர்சனங்கள் தாராளமாக வெளியாகின்றன. நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் பேசியதற்காக முக்கிய அரசியல்வாதி ஒ…
-
- 4 replies
- 1.1k views
-
-
பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான குற்றப் பிரேரணை விடயத்தில் உயர் நீதிமன்றத்தினால் அனுப்பப்பட்டு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் கடந்த வியாழக்கிழமை வெளியிடப்பட்ட சட்ட வியாக்கியானமானது சட்ட வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அதேவேளை அது இதுவரை நீதித்துறைக்கும் நிறைவேற்றுத்துறை மற்றும் சட்டமியற்றும் துறைக்கும் இடையில் நிலவி வந்த பிணக்கை அரசியல் நெருக்கடியாக மாற்றிவிட்டது என்றே தெரிகிறது. நாடாளுமன்ற நிலையியல் கட்டளைகளானது சட்டங்கள் அல்லவென்றும் எனவே அவற்றின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக் குழுவுக்கு நீதியரசர் ஒருவருக்கு எதிராக நீதி விசாரணை செய்யும் அதிகாரம் இல்லை என்றும் உயர் நீதிமன்றம் வியாக்க…
-
- 0 replies
- 525 views
-
-
தமிழ் மக்களுக்கு இருக்கக்கூடிய நெருக்கடிகள் தொடர்ச்சியாகவே பெரும்பான்மைச் சமூகத்தினரால் பேணப்பட்டு வருகின்றது. தமிழ் மக்கள் தமது சுயநிர்ணய உரிமையைப் பெற்றுக்கொள்வதற்கு எந்த வகையில் முயற்சி எடுத்தாலும் அதனைத் தடுத்து நிறுத்துவதற்கும் தலையிட்டுச் சீர்குலைப்பதற்கும் அரசு பின் நிற்பதில்லை. இராணுவமயமாக்கப்பட்ட வடக்குக் கிழக்குப் பகுதியில் தமிழ் மக்கள் எப்போதும் அடக்கப்பட்டவர்களாக வாழ வேண்டும் என்பதில் அரசு குறியாக இருக்கிறது. அவர்களது நாளாந்தக் கடமைகளில் இராணுவத் தலையீடுகளும் நெருக்கடிகளும் இன்னமும் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன. ஏதோ ஒரு வகையில் சாட்டுப்போக்குச் சொல்லி அரசு தமிழ் மக்கள் மீதான கெடுபிடியைத் தொடராகக் கைக்கொண்டு வருகிறது. அதன்மூலம் அவர்களது எழுச்சி, உணர்வ…
-
- 1 reply
- 1.1k views
-
-
ஒரு வழக்கறிஞர் என்ற ரீதியில் நீதிமன்றத்தின் கௌரவம் குறித்தும் நாட்டின் தலைவர் என்ற ரீதியில் சட்டத்தின் ஆதிபத்தியம் குறித்தும் தமது மனச்சாட்சிக்குத் தாம் பொறுப்புக் கூற வேண்டியுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் தெரிவித்திருந்தார். பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றவியல் பிரேரணை குறித்து விசாரணை மேற்கொண்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் முடிவை மறுபரிசீலனைக்கு உட்படுத்த அவர் முடிவு செய்தமை இதனாலேயே ஆகும். ஒரு நாட்டின் தலைவரது செயற்பாடுகள் மட்டுமே அவரது கருணையை வெளிப்படுத்துவதாக அமைய வேண்டுமேயல்லாது, அவர் வெளிப்படுத்தும் கருத்துக்கள் அல்ல என்பது சொல்லித் தெரிய வேண்டிய ஒன்றல்ல. அதேசமயம் ஒரு சாதாரண பொதுமகனது மனதில் உருவாகும் கருணை போன்றல்லாது, ஓர் அரச தலைவரது நெஞ்சத்த…
-
- 0 replies
- 720 views
-
-
ஜோன் ஹெரியின் வருகை, இலங்கையின் மீதான அமெரிக்க அணுகுமுறையில் மாற்றத்தை ஏற்படுத்துமா? - யதீந்திரா அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, தனது இரண்டாவது தவணைக்கான வெளிவிவகாரச் செயலராக (Secretary of State) ஜோன் ஹெரியை நியமித்திருக்கின்றார். ஒபாமாவின் முதலாவது தவணைக் காலத்தில் வெளிவிவகாரச் செயலராகவிருந்த கிலாரி கிளின்ரன் அப்பதவியில் தொடர்ந்தும் நீடிப்பதை விரும்பாத நிலையிலேயே, அவரது இடத்தை நிரப்பும் பொறுப்பு தற்போது ஜோன் ஹெரிக்கு வழங்கப்பட்டுள்ளது. ஒபாமாவின் முதலாவது தெரிவு ஹெரி அல்ல. ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க தூதுர் சூசன் ரைஸே (Ms. Susan Rice) இப்பொறுப்பிற்கு நியமிக்கப்படுவாரென்று முன்னர் எதிர்பார்க்கப்பட்டிருந்தது. எனினும் கடந்த செப்டம்பர் பெங்காசியில் அமெரிக்க தூதுவராலயத…
-
- 0 replies
- 611 views
-
-
வைத்திய கலாநிதி இ.சிவசங்கர் அவர்கள் கைது செய்யப்பட்ட விடயம் தமிழ் மருத்துவர் களை அதிர்ச்சிக்கு உட்படுத்தியுள்ளது. இலங்கையில் மருத்துவப் பட்டத்தை நிறைவு செய்கின்ற தமிழ் வைத்தியர்கள் இந்த மண்ணில் இருந்து சேவையாற்றுவதற்கு விருப்பமில்லாது நாட்டைவிட்டு வெளியேறி இருக்கின்ற சூழமைவில், ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையான தமிழ் மருத்துவர்களே தாம் பிறந்த மண்ணிற்கு சேவையாற்ற வேண்டும் என்ற பெருவிருப்போடு பணிபுரிந்து வருகின்ற இவ்வேளையில், தமிழ் மருத்துவர்களை நோக்கிய படைத் தரப்பின் சந்தேக பார்வை, மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை இந்த நாட்டின் ஒட்டுமொத்த சமூகமும் புரிந்து கொள்வது அவசியம். வட மாகாணம் முழுவதிலும் மருத்துவர்களின் எண்ணிக்கை பற்றாக்குறையாக இருக்கின்ற போது, மருத்துவர்கள்…
-
- 0 replies
- 844 views
-
-
தமிழ் அரசியலில் ஒரு முக்கிய ஆண்டாக 2013 இருக்கும் - அ.சுமந்திரன் சந்திப்பு: ரூபன் சிவராஜா நோர்வே கற்கை மையத்தினால் ஒழுங்குசெய்யப்பட்ட 'தமிழர் தேசியப் பிரச்சினையைக் கையாளல்' தொடர்பான கருத்தரங்கொன்றில் கலந்துகொள்வதற்காக ஒஸ்லோ வந்திருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அ.சுமந்திரன் அவர்களை பொங்குதமிழுக்காக சந்தித்து உரையாடினோம். கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் சிறிலங்கா நாடாளுமன்றத்திலே நிகழ்த்திய சர்ச்சைக்குரிய உரையின் தாக்கம் அடங்குதவற்கு முன்னர் இடம்பெற்ற இச்சந்திப்பில் சம்பந்தன் அவர்களின் உரைகுறித்தும் தற்போதைய அரசியல் நிலைகுறித்தும் எதிர்கால அரசியல் திட்டங்கள் குறித்தும் சுமந்திரன் அவர்களுடன் விரிவாகப் பேசியதிலிருந்து... …
-
- 0 replies
- 762 views
-
-
இலங்கைத்தீவில் இந்தியாவும் சீனாவும் - ஏமாற்றப்படும் ஈழத்தமிழர்களும் [ செவ்வாய்க்கிழமை, 01 சனவரி 2013, 08:21 GMT ] [ புதினப் பணிமனை ] இலங்கைத்தீவு என்பது சீனாவுக்கு ஒரு தரிப்பிடம் மட்டுமே. சீனாவைத் திருப்திப்படுத்தக்கூடியளவுக்கு இலங்கைத்தீவில் வளங்களோ அல்லது நுகர்வோரின் எண்ணிக்கைப்பலமோ இல்லை. 'புதினப்பலகை'க்காக ம.செல்வின் சிறீலங்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் இறுகிவரும் பொருளாதார மற்றும் பாதுகாப்பு உறவுகள் இந்தியாவின் பிராந்திய மேலாதிக்கநிலைக்கும் தேசிய பாதுகாப்புக்கும் பாரிய சவாலாக உருவாகி வளர்ந்து வருகின்றது என்பதனை புதுடெல்லியில் உள்ள அதிகாரக்கட்டமைப்பு தொடக்கம் சாதாரண இந்தியக் குடிமகன்வரை அனைவரும் புரிந்துள்ளனர். …
-
- 1 reply
- 766 views
-
-
"மாதர் தம்மை இழிவு செய்யும் மூடர்களை அழித்திடுவோம்" என உணர்ச்சி பொங்கப் பாடிய பாரதியாரின் பாரத தேசத்தில் இன்று வீதிகளில் வைத்தே பெண்கள் காட்டுமிராட்டித்தனமாகப் பாலியல் பலாத்காரம் செய்யப்படும் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன பாருங்கோ... டில்லியில் ஓடும் பஸ்ஸில் பல்கலைக்கழக மாணவி ஒருத்தி மிக வக்கிரக் குணம் கொண்ட காமுகர்களால் படுபயங்கரமாக பாலியல் வல்லுறவு செய்யப்பட்டமை இந்திய நாட்டில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்குப் பாருங்கோ... ஓடும் பஸ்ஸில் நடத்தப்பட்ட மிருகத்தனமான இக்கொடூர வன்புணர்ச்சி அந்த நாட்டிலுள்ள ஒட்டு மொத்த மக்களையும் கதிகலங்க வைத்துள்ளது. இந்தியாவின் உள்நாட்டுச் சட்ட திட்டங்களின் இருப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளது. உள்ளூர் சட்ட திட்டங்களில் அதிகார …
-
- 0 replies
- 662 views
-
-
இலங்கைக்கு உள்நாட்டு வெளிநாட்டு அழுத்தங்கள் வரும்போதேல்லம் தம்மோடு இணைந்திருக்கும் தமிழர் ஒருவரை பலி கொடுத்து புலிகள் மீது பழியைப் போட்டுவிட்டு அதிலிருந்து தப்பிக் கொள்வதுதான் வழக்கம். கடந்த காலங்களில் மகிந்த அரசின் இந்தத் திட்டம் வெகு கச்சிதமாக மிகப் புத்திசாலித்தனமாக நிறைவேற்றப்பட்டுள்ளதை பல ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளார்கள். இதுவே தமிழீழ விடுதலைப் புலிகள் களத்தை அழிப்பதற்கு சிங்கள அரசு கையாண்ட மிகப் பெரிய தந்திரம். சிங்கள அரசிற்கு மிகுந்த நம்பிக்கையுடன் உழைத்த முன்னாள் வெளிநாட்டமைச்சர் கதிர்காமர், நீலன் திருச்செல்வம் ஆகியோரை கொலை செய்தது சிங்கள அரசு. ஆனால் அவற்றை புலிகள்தான் செய்தார்கள் என்பதை மிகத்திறமான பரப்புரையின் மூலம் உலகை நம்ப வைத்தது சிங்கள அரசு. அந்…
-
- 5 replies
- 921 views
-