அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9329 topics in this forum
-
தேசிய அடையாளமின்றி அரசியல் விபரீதங்களை சந்திக்கும் “இந்தியத் தமிழர்கள்” - மு.சிவலிங்கம் இந்திய வம்சாவளித் தமிழ் மக்களின் 2011 ம் ஆண்டு குடிசனத் தொகை மதிப்பீடு பற்றி விமர்சிக்கப்பட்ட இரண்டு ஆய்வு கட்டுரைகளை கடந்த சில வாரங்களில் வெளியான தேசிய பத்திரிக்கைகளில் வாசிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அவை பற்றிய எனது கருத்துக்கள் சிலவற்றைப் பகிர்ந்து கொள்வதற்கு இக் கட்டுரையை எழுதுகின்றேன். ஓன்று, ஜனவரி மாதம் 13 ம் திகதி வெளிவந்த “சன்டே லீடர் பத்திரிக்கையில் “Up country Tamils, The Vanishing people?” என்ற கட்டுரையாகும். இந்த கட்டுரை புது டெல்லியில் செயற்படும் Observer Research Foundation (ORF) என்ற நிறுவனத்தின் பணிப்பாளர் என்.சத்தியமூர்த்தி அவர்களால் எழுதப்பட்டுள்ளது. இக் கட்டு…
-
- 0 replies
- 692 views
-
-
தற்போது ஜெனிவா நகரில் நடைபெற்றுவரும் ஐ.நா மனித உரிமை பேரவையின் 22ஆவது அமர்வு - தமிழ் ஊடகங்களுக்கு செய்தி ஊற்றாகியுள்ளது. ஆனால் சிங்கள ஊடகங்கள் அதனை அவ்வளவாக பொருட்படுத்தியதாக தெரியவில்லை. சில தமிழ் பத்திரிகைகளில் இந்தக் கூட்டத் தொடரைப் பற்றி ஒரே நாளில் பத்துக்கு மேற்பட்ட செய்திகளும் முழுப்பக்க கட்டுரைகள் உட்பட பல கட்டுரைகளும் பிரசுரிக்கப்படுகின்றன. குறிப்பாக சகல தமிழ் பத்திரிகைகளிலும் முன் பக்கத்தில் அநேகமாக அரைவாசி அல்லது அதற்கு மேல் மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரைப் பற்றிய செய்திகளாகத் தான் காணப்படுகின்றன. ஆனால், சிங்கள் பத்திரிகைகளில் நாளொன்றுக்கு இந்தக் கூட்டத் தொடரைப் பற்றி ஒரு செய்தி அல்லது இரண்டு தான் பிரசுரிக்கப்படுகின்றன. கட்டுரைகளைப் பொறுத்தவரை சிங…
-
- 1 reply
- 552 views
-
-
பன்றித்தொழுவத்தில் கொல்லப்பட்டவர்களின் இரத்தவாடையும் வரலாற்றுத் துரோகமும் இலங்கையில் இனப்படுகொலைக்கும் இனச் சுத்திகரிப்பிற்கும் யார்யாரெல்லாம் உதவினார்கள் என்று பட்டியல் போட்டால் அவர்களில் பெரும்பாலனவர்கள் ஒன்று கூடியதை இன்று பிரித்தானியப் பாராளுமன்றத்தில் பார்த்திருக்கலாம். பாராளுமன்றம் பன்றித்தொழுவம் என்பார்கள். பன்றித்தொழுவத்தில் கொல்லப்பட்ட ஈழத்தமிழர்களின் இரத்தவாடை வீசியது. உலகத் தமிழர் பேரவை என்று அழைக்கப்படும் அன்னிய நிதியில் இயங்கும் முன்னைநாள் புலிகளின் நேரடி ஆளுமைக்கு உட்பட்ட அமைப்பு ஒழுங்கு செய்திருந்த கூட்டம் பிரித்தானிய பாராளுமன்ற கட்டடத்துள் நடைபெற்றது. இன்று(27.02.2013) காலை பத்துமணிக்கு ஆரம்பமன இந்தக் கூட்டத்தில், இலங்கை அரசிற்கு இன அழி…
-
- 2 replies
- 736 views
-
-
ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 22ஆவது கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கும் நிலையில், இலங்கை அரசபடைகள் மீதான போர்க்குற்ற, மனிதஉரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் ஒளிப்படச் சர்ச்சை ஓய்வதற்குள், புலிகளின் தகவல்களை அறிவதற்கு பாலியல் வல்லுறவை அரசபடைகள் ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தியதாக குற்றம்சாட்டும் அறிக்கை ஒன்றை மனிதஉரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ளது. 141 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கையில், பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்ட 75 பேரின் சாட்சியங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த இரண்டு குற்றச்சாட்டுகளையும் இலங்கை இராணுவம் நிராகரித்துள்ள போதிலும், அது பெரிதாக எடுப்படவில்லை. …
-
- 2 replies
- 932 views
-
-
பிரிட்டனின் திட்டம்.-யூதர்களின் நம்பிக்கை துரோகம். பிரிட்டனின் திட்டம். நிலமெல்லாம். ரத்தம் - பா. ராகவன். பாலஸ்தீன் யாருடையது? யூதர்களுக்கும் அரேபிய முஸ்லிம்களுக்கும் சொந்தமான பூமி அது. நல்லது. பாலஸ்தீனில் யார் பெரும்பான்மையானோர்? இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் யூதர்கள் பெரும்பான்மையானோராகவும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கிட்டத்தட்ட இரு தரப்பினரும் சம அளவினராகவும், நவீன காலத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையானோராகவும் அங்கே இருந்திருக்கிறார்கள். இதனை இந்தத் தொடரின் பல்வேறு அத்தியாயங்களில் இடையிடையே பார்த்திருக்கிறோம். இப்போது மீண்டும் நினைவுபடுத்திக்கொள்ளவேண்டியது அவசியமாகிறது. காரணம், இந்தக் குழப்பத்தால்தான் பாலஸ்தீனை எப்படிப் பிரிப்பது என்று பிரிட…
-
- 0 replies
- 1.1k views
-
-
http://www.naanmuslim.com நன்றி : NELLAI POPULAR FRONT 1 நன்றி :http://asiananban.blogspot.sg/2013/01/exclusive-report.html http://vanjoor-vanjoor.blogspot.ca/2013/02/exclusive-report.html
-
- 0 replies
- 1.7k views
-
-
911 இன் இரகசிய வரலாறு http://www.youtube.com/watch?v=mhtzWcaZx5A http://www.youtube.com/watch?v=s1ZHUl_PT2M
-
- 0 replies
- 820 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தகைசார் பெரியவர்களுக்கு அன்பு வணக்கம். கடந்த முறை ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராகத் தீர்மானம் கொண்டுவந்தவேளை, ஜெனிவாவுக்குத் தாம் செல்வதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்திருந்தது. இத்தீர்மானத்தின் சொந்தக்காரராக இரா. சம்பந்தன் ஐயா இருந்தார். சம்பந்தனின் தீர்மா னத்தை கூட்டமைப்பில் இருக்கக்கூடிய யாதார்த்த நிலை உணர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர், எதிர்த்தனராயினும் அந்த எதிர்ப்புகள் பலிதமாகவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜெனிவாவுக் குச் சென்று தமிழ் மக்களின் நிலைமைகளை வெளிநாட்டுப் பிரதிநிதிகளுக்கு எடுத்தியம்ப வேண்டும் என பல தடவைகள் வலம்புரி இவ் விடத்தில் கருத்தியம்பியது. என்னசெய்வது! ஒளியைக் கண்டு பயம் கொள்கின்ற பெர…
-
- 0 replies
- 636 views
-
-
ஜெனிவாவும் இலங்கைத்தீவின் வெளியுறவுக் கொள்கையும் - நிலாந்தன் 25 பெப்ரவரி 2013 சேர். ஐவர் ஜென்னிஸ் ஒரு முறை இலங்கை மக்களைப் பற்றி பின்வரும் தொனிப்படக் கூறியிருந்தார். ''இலங்கை மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வானது. எழுத்தறிவு உயர்வானது. சமூகச் சூழல் ரம்மியமானது. ஆனால், எப்பொழுதும் இந்தியா பொறுத்து ஒரு பனிப் பாறை உருகி தங்கள் மீது கவீழ்ந்துவிடுமோ என்ற அச்சத்துடன் வாழ்கின்றார்கள்' அவர் இலங்கையர்கள் என்று குறிப்பாகக் கருதியது சிங்கள மக்களைத்தான். பனிப்பாறை பற்றிய அச்சத்தின் மீது கட்டியெழுப்பட்டதே இலங்கைத் தீவின் நவீன வெளியுறவுக் கொள்கையாகும். அதாவது, வெளி அச்சுறுத்தல்களுக்கு எதிராகத் தன்னை வெற்றிகரமாக நிலை நிறுத்திக் கொள்ள முற்படும் அல்லது தகவமைத்துக்கொள்ள முற்படும் ஒரு…
-
- 9 replies
- 912 views
-
-
கிழக்கிலங்கை சமுதாய முரண்பாடுகளும் மூலகாரணங்களும் சுல்பிகா இஸ்மாயில் ஆயுதசார் இயக்கங்களின் எழுச்சிக்குப்பின், இக்கசப்புநிலைகள் பல இனமோதல்களுக்கும், பழிவாங்கல்களுக்கும், பல்லாயிரக்கணக்கான சொத்துக்கள், உடமைகள், உயிர்ச்சேதங்களுக்கும் காரணமாயின. இரு தரப்பினரும் ஒருவரை ஒருவரை அழிப்பதற்கும் அழிவதற்கும் காரணமாயினர். அடிப்படை சமுதாய சமாதானத்; தீர்வுக்கான முன்னெடுப்புக்கள், இக்காரணங்களை இனங்கண்டு அதற்கு பரிகாரமளிப்பதிலிருந்து ஆரம்பிக்கப்பட வேண்டியுள்ளது. இதன் முதற்படியாக, இரு சமூகமும், ‘பக்கச்சார்பற்று, நேர்மையாக விடயங்களை வெளிப்படுத்துதல்’ இணக்கப்பாட்டுக்கான எந்த முன்னெடுப்புக்குமுரிய வித்தாக அமையும். கிழக்கிலங்கையின் இனத்துவ முரண்பாடுகள் பற்றிய ஒரு முக்கியமமான கட்டு…
-
- 1 reply
- 1.1k views
-
-
விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் பங்கரில் பிடித்து வைக்கப்பட்டுப் பின் கொல்லப்பட்டது தொடர்பாகச் சமீபத்தில் "சனல் 4' வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன. அனைத்துத் தரப்பினரும் இதைக் கண்டித்துள்ளனர். ஹிட்லரின் நாசி அழித்தொழிப்புகளுடன் இதை ஒப்பிட்ட முதலமைச்சர் ஜெயலலிதா, இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட வேண்டும் என்கிற சட்ட மன்றத் தீர்மானத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்."சனல் 4' வெளியிட்டுள்ள இப்படங்கள் குறித்து மத்திய அரசு மௌனம் காப்பதைக் கருணாநிதி கண்டித்துள்ளார். இந்தியாவின் முக்கிய நாளிதழான"இந்து' வில் என்.ராம் ஆசிரியராக இருந்தவரை ராஜபக்ஷக்களின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு…
-
- 0 replies
- 970 views
-
-
சர்வதேசப் பெருந்தெருவில் தமிழீழத்திற்கான குறுக்குத்தெரு தத்தர் 'சர்வதேச நியமனங்களின்படி இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சனையில் இந்தியா தலையிட முடியாது' என்று ஒரு தரப்புக் கூறுகின்றது. 'இலங்கையின் இனப்பிரச்சினை ஓர் உள்நாட்டுப் பிரச்சனையே. அதில் வேறெந்தொரு நாடும் தலையிடக்கூடாது. அதை இலங்கை அரசே தீர்த்துக் கொள்ளட்டும்' என்று இன்னொரு தரப்பினரும் கூறுகின்றனர். 'இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு வழங்கப்பட வேண்டும் என்றும், இலங்கை அரசின் மீதும் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்' என்று மேலும் இன்னொரு தரப்பினரும் கூறிவருகின்றனர். இங்கு ஒவ்வொரு அரசினதும் அல்லது அரசு சார்ந்த நிறுவனங்களினதும் அரச நலன்சார் கொள்கைகளின் கீழ் மேற்படி கருத்துக்கள் முன்வைக்க…
-
- 0 replies
- 805 views
-
-
தமிழர் தாயகத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சியை அழைத்துவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முத்துக்குமார் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மீண்டும் தமிழர் தாயகத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சியை அழைத்துச் சென்றுள்ளது. சென்ற தடவை சிங்கக் கொடியேற்றி சிங்கள அரசியலுக்குள் தமிழ்த் தேசிய அரசியலைக் கரைக்கத் தயார் என்பதை பகிரங்கமாக வெளிப்படுத்த அழைத்துச் சென்றனர். சம்பந்தன் ரணிலுடன் சேர்ந்து சிங்கக்கொடியேற்றி கரைக்கும் கைங்கரியத்தை வெளிப்படுத்தினார். இந்தத் தடவை தமிழ் மக்களின் துயரங்களுக்கெல்லாம் ஒரு மீட்பராக ஐக்கிய தேசியக் கட்சியை அழைத்துச் சென்றனர். இங்கு ஐக்கிய தேசியக் கட்சி தானாகச் செல்லவில்லை. கூட்டமைப்பின் அழைப்பின் பேரிலேயே சென்றது. சம்பந்தன் எதிர்க்கட்சிகளின் கூட்டில் கையொப்பமி…
-
- 0 replies
- 457 views
-
-
போர் நடந்தபோது ஏழு நாட்டு இராணுவமும் இலங்கைக்கு உதவி செய்தது. இதில் அமெரிக்கா கடந்த ஆண்டு ஐ.நா.வில் தீர்மானம் நிறைவேற்றியது. இந்தியாவும் பல் பிடுங்கப்பட்ட தீர்மானத்தை ஆதரித்தது. கொலைக்காரனே போர்குற்றத்தை விசாரித்து தண்டனை கொடுக்கவேண்டும் என்று உலகத்திலேயே ஒரு வினோதமான அறிவுரையை ஐ.நா.வும் உலக நாடுகளும் இலங்கைக்கு வழங்கியது. "இனப்படுகொலை" என்று சொல்லாமல் "போர்குற்றம்" என்று சொல்கிறது. "சுதந்திர ஈழத்தை" பற்றி பேசாமல் "சரிகட்டுதல்"-ஐ பற்றி பேசுகிறார்கள். ஐ.நா.வில் தீர்மானம் நிறைவேற்றியவுடன் நாமெல்லாம் அப்பாடா என்று மகிழ்ச்சியடைந்தோம். இந்தியா ஆதரித்தவுடன் நமது மக்கள் ஏதோ இனி அவர்கள் வாழ்வில் விடியல் ஏற்பட்டுவிடும் என்று சிந்தனை இழந்தோம். நடக்கும் அரசியலை, இராஜதந்திரத்…
-
- 2 replies
- 1.3k views
-
-
இந்தியாவின் மானம், காற்றில் பறக்கிறது என்று சொன்னால் அது உண்மை, முழு உண்மை, உண்மையைத் தவிர வேறில்லை. அன்று பீரங்கி, இன்று ஹெலிகாப்டர். அன்று பிரதமருக்குப் பின்னால் இத்தாலி; இன்று பிரதமருக்கு மேலே இத்தாலி. முக்கியப் பிரமுகர்களுக்கு ஹெலிகாப்டர்கள் வாங்குவது, மத்திய அரசின் வேலை. அது சரிதான். அதற்கான தொழில் நுட்பக் கூறுகளை நிர்ணயிப்பதும், விலை பேரம் பேசுவதும், விமானப்படைத் துறை சம்பந்தப்பட்டது; அதுவும் சரிதான். ஆனால், இவற்றில் அன்றும் இத்தாலி, இன்றும் இத்தாலி என்றால்... அந்த நாட்டுக்கு உதவுவது யார்? இந்த ஊழல் விவகாரங்கள் வெளிப்பட்டது, இந்திய நிறுவனங்கள் மூலம் அல்ல. அன்று, ஸ்வீடன், போபர்ஸ் பீரங்கி விவகார ஊழலை வெளிப்படுத்தியது; இத்தாலி இன்று, ஹெலிகாப்டர், விவகார ஊழலைக் கிளற…
-
- 1 reply
- 604 views
-
-
பாலச்சந்திரன் படுகொலை இந்தியாவில் ஏற்படுத்திவரும் அதிர்வுகள் எஸ். கோபாலகிருஷ்ணன் இலண்டனில் இயங்கும் சானல் 4 என்ற தொலைக்காட்சி நிறுவனம் 2009இல் நடந்த இலங்கை இறுதிப் போரில் சிங்கள் இராணுவத்தால் நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்களையும் இன்ன பிற அட்டூழியங்களையும் அம்பலப்படுத்தி வருகிறது. அந்தத் தொலைக்காட்சியில் இது தொடர்பாக கால்லும் மெக்கரே என்பவர் இயக்கிய 'இலங்கையில் கொலைக்களம்' என்ற ஆவணப்படத்தின் முதல் இரண்டு பகுதிகள் சானல் 4ஆல் கடந்த ஆண்டு ஒளிபரப்பப்பட்டன. அந்தப் படத்தின் மூன்றாவது பகுதி விரைவில் வெளியாவதற்கு முன்னோட்டமாக ஒரு சில புகைப்படங்கள் வெளியிடப்பட்டன. அந்தப் புகைப்படங்களைப் பார்த்த உலகத் தமிழர்களும் மனித உரிமை ஆர்வலர்களும் உருக்குலைந்து போயிருக்கின்றனர். விடு…
-
- 6 replies
- 1.2k views
-
-
அனர்த்தத்தின் அடையாளமும், ஜெனிவா யோசனையும் - குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக சுனந்த தேசப்பிரிய 23 பெப்ரவரி 2013 மனித உரிமை பேரவையின் யோசனைக்கு பதிலளிப்பதற்கு பதில் அரசாங்கம் மண்பாணை கடைக்குள் புகுந்த மாடு போல் நாலாபுறமும் முட்டி மோதியது. நல்லிணக்கம் என்பது ராஜபக்ஷ நிர்வாகத்திற்கு பாம்புக்கு நாகதாளி போன்றது. கடந்த ஆகஸ்ட் மாதம் ஜெனிவாவுக்கான இலங்கையின் புதிய தூதுவர் ஒருவர் நியமிக்கப்பட்டார். ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பெல்ஜியத்திற்கான இலங்கையின் தூதுவராக பணியாற்றிய ரவிநாத ஆரியசிங்க, ஜெனிவாவுக்கான இலங்கையின் புதிய தூதுவராக நியமிக்கப்பட்டார். ஜெனிவாவுக்கான இலங்கையின் தூதுவராக நியமிக்கப்பட்ட ஆரியசிங்க, ஏகாதிபத்தியவாதிகளின் கைபாவைகள் என இலங்கை அரசாங்…
-
- 0 replies
- 386 views
-
-
ஆரிய பவுத்த சிங்கள பேரின வாதமும் தீர்வும் ராஜசங்கர் வெகு நாட்களாக என் மனதை அரித்த கேள்விகளான ஏன் ஒரு சாதாரண மனிதர்கள் கொடும் கொடூரச்செயலில் ஈடுபடவேண்டும் என்பதற்கான விடையை இக்கட்டுரை மூலம் தேடுகின்றேன். இலங்கையின் போர்க்குற்ற காணொளிகள் காட்டும் கொடூர காட்சிகள் மனதை பதற வைக்கும் இந்நேரத்தில் ஏன் அந்த சாதாரண சிங்கள் சிப்பாய்கள் இந்த கொடூரங்களில் ஈடுபடவேண்டும்? அவர்கள் வெறுமனே உத்தரவுகளை நிறைவேற்றினார்களா? அப்படி கொன்று சுகம் காண ஏது காரணம்? வெறுமனே சிங்களவர்கள் அனைவரும் காடையர்கள், இனவெறி கொண்ட மிருகங்கள் என்று ஒரு வரியில் பதில் சொல்லி தாண்டிப்போக என்னால் முடியவில்லை. மூன்றுவேளை உணவுக்கு உழைக்கும் சிப்பாய்களிடம் என்ன காரணம் இருந்துவிட முடியும்? அந்த காரணம் ஆரிய பவுத்…
-
- 5 replies
- 1.7k views
-
-
செய்தித்தாள்களிலும் - ஊடகங்களிலும் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் இரண்டாவது மகன் பாலச்சந்திரன் பற்றிய துயரச் செய்திகள் வெளியாகி கண்களைக் குளமாக்கி, மனதை ரணமாக்கிவிட்டது. சிறுவர்கள் பாதுகாக்கப்பட வேண்டுமென்ற ஐ.நா. மற்றும் மேலை நாடுகளின் கோரிக்கைக்கு இணங்க, அவர் 2009-ஆம் ஆண்டு மே 19-ஆம் நாள் காலை 7.30 மணி அளவில் ஐந்து மெய்க்காப்பாளர்களோடு சென்று ராணுவத்திடம் சரணடைந்துள்ளார். பாலகன் பாலச்சந்திரனுடன் சென்ற ஐந்து பாதுகாப்பாளர்களையும் தனித்தனியே சுட்டுக்கொன்ற இலங்கை ராணுவத்தின் "53-ஆவது படையணி' இறுதியாக, 12 வயதே ஆன பாலச்சந்திரனையும் விட்டு வைக்கவில்லை. அவ்விதம் சரணடைந்த பாலச்சந்திரனுக்கு பிஸ்கட் உண்ணக் கொடுத்துவிட்டு, நிதானமாகத் தமது உயர் அதிகாரிகளோடு தொடர்ப…
-
- 5 replies
- 835 views
-
-
இனியும் ஏன் தயக்கம்? By ஆசிரியர் First Published : 22 February 2013 01:03 AM IST தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பன்னிரண்டு வயது மகன் பாலச்சந்திரன் கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ள ஆவணப் படங்கள், இங்கிலாந்தின் "சேனல்-4' தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி, அவை பத்திரிகைகளிலும் பிரசுரமாகி, உலகமெங்கும் தமிழர் மனங்களில் அதிர்ச்சி, வேதனை, கோபம் என உணர்ச்சிக் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பன்னிரண்டு வயதுச் சிறுவன், கைதொடும் தொலைவில் துப்பாக்கியால் சுடப்படுவதை, "தாக்குதலுக்கு இடையே சிக்கி' இறந்ததாக யாராலும் சொல்ல முடியாது. ஆனாலும் இலங்கை அரசு இதை மறுக்கிறது. இலங்கை அரசின் இந்தியத் தூதரக அதிகாரி கரியவாசம், "இந்தப் படங்கள் கணினித் திரிபு படங்கள…
-
- 0 replies
- 623 views
-
-
அடுத்த மாதம் அமெரிக்காவின் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை விடயத்தில் கொண்டுவரவிருக்கும் பிரேரணை - கடந்த வருடம் அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட பிரேரணையைப் பார்க்கிலும் சற்று காரமானதாக அமையும்போல் தான் தெரிகிறது. இதுவரை ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையும் ஐ.நா.வின் தீர்மானங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும் வெளியிட்டு வரும் கருத்துக்களால் இது புலனாகிறது. தாம் இலங்கை தொடர்பாக இந்த வருடமும் ஐ.நா. மனித உரிமை பேரவையில் பிரேரணையொன்றை முன்மொழியவிருப்பதாக அமெரிக்கா இவ்வாரம் மீண்டும் வலியுறுத்தியிருந்தது. அத்தோடு அண்மையில் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை - இலங்கை தொடர்பாக வெளியி…
-
- 1 reply
- 597 views
-
-
முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா. யாழ்ப்பாணத்தில் முதலைகள் அவ்வளவாக இல்லாவிட்டாலும் மூர்க்கர்களுக்குப் பஞ்சமில்லை. அவர்கள் திசைக்கொன்றாக முளைத்துக்கொண்டே இருக்கிறார்கள். அதுவும் தமது அடிப்படை உரிமைக்காக ஜனநாயக ரீதியில் போராட முனையும் மக்களின் குரல் வளையைக் கடித்து துப்புவதென்று கங்கணம் கட்டிக்கொண்டு திரியும் மூர்க்கர்கள் அதிகம் தான். சொந்த மண்ணிலேயே "பிறத்தியார்' போன்று எல்லாவற்றுக்கும் தீண்டத்தகாதவர்களாக ஒதுக்கப்பட்டதால் அரசியல் ரீதியாக தமிழர்கள் போராட முனைந்தனர். காகிதங்களில் நிறையக் கையெழுத்துக்களோடு ஒப்பந்தங்கள் உருவாகி கடைசியில் அவை குப்பைக்கூடைகளை நிறைக்கவே உதவின. எந்தவொரு ஒப்பந்தமும் ஒருபோதும் ஒப்பேறவில்லை. அந்த வேளையில், நம்பிக்கைகள் வற்றிக்கொண்ட தருணத்தில்…
-
- 1 reply
- 732 views
-
-
ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 22ஆவது அமர்வு ஆரம்பமாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இலங்கை விவகாரம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெனிவா கூட்டத்தொடர் தொடங்குவதற்கான நாட்கள் நெருங்க நெருங்க, இலங்கை அரசாங்கம் மீதான அழுத்தங்களும் அதிகரித்து வருகின்றன. வரும் திங்கட்கிழமை - 25ஆம் திகதி - தொடங்கும் இந்தக் கூட்டத்தொடர் அடுத்தமாதம், 22ஆம் திகதி வரை தொடர்ந்து இடம்பெறப் போகிறது. இந்தக் கூட்டத்தொடரில், இலங்கைக்கு நெருக்கடி ஏற்படும் என்பது ஓர் ஆண்டுக்கு முன்னரே தெரிந்த விடயம் தான். அதாவது, நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு, இலங்கை அரசாங்கத்துக்கு மறைமுகமாக ஓர் ஆண்டு கால அவகாசம் கொடுத்து, கடந்த ஆண்டு மார்ச் மாதம், தீ…
-
- 5 replies
- 906 views
-
-
ஒரு நாட்டின் அதிபர் தனது ஆளுகைக்குட்பட்ட ஒரு பிரதேசத்துக்கு பயணம் செய்யும்போது அந்தப் பகுதி மக்களிடையே பலவிதமான எதிர்பார்ப்புக்கள் எழுவதுண்டு. அவர்கள் தாம் முகம் கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாகத் தீர்வுத் திட்டங்கள் முன்வைக்கப்படுமெனவும் தமது நலன்கள் தொடர்பான ஏதாவது புதிய வேலைமுறைகள் முன்வைக்கப்படும் எனவும் கற்பனைகள் செய்வதுண்டு. அவ்வகையில் அண்மையில் இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு பயணம் செய்தபோது அவரின் வரவு தொடர்பாகச் சில ஆரூடங்கள் கூறப்பட்டன. அவரின் பயணத்தின்போது வழமை போலவே திறப்பு விழாக்கள், அபிவிருத்தி தொடர்பான கருத்தரங்குகள் எனச் சம்பிரதாயபூர்வமான சடங்குகள் நிறைவேற்றப்பட்டன. ஆனால் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாகவோ …
-
- 1 reply
- 617 views
-
-
ராஜபக்சவின் தமிழ் நண்பர்கள் : சபா நாவலன் காலனியத்தின் இறுதிக்காலப்பகுதியில் பிரித்தானிய ஆட்சியாளர்களால் திட்டமிட்டு வளர்த்தெடுக்கப்பட்ட சிங்கள பௌத்த பேரினவாத அடையாளம் நந்திக்கடலில் இரத்தமும் சதையுமாக மிதந்ததைக் கண்டிருக்கிறோம். எண்ணுக்கணக்கற்ற அப்பாவி உயிர்களை விரல் எண்ணிக்கையில் அடங்கிவிடும் நாட்களில் பறிகொடுத்த எந்தக் குற்ற உணர்ச்சியும் இன்றி அதே முகங்கள் அதே கோர வெறியோடு அரசியல் காய்களை நகர்த்துகிறார்கள். தவறுகளில் இருந்து கற்றுக்கொள்ளவோ அவற்றைத் தயவின்றி விமர்சித்து புதிய அரசியலை முன்வைக்கவோ கோரமாகக் கேட்கும் எந்த அரசியல் குரல்களுக்கும் தன்னம்பிக்கை இல்லை. ஆண்ட பரம்பரையின் புகழையே பேசிப் பழக்கப்பட்டுப்போன பாழடைந்த பழமைவாத சமூகத்தையும் அது தோற்றுவித்த …
-
- 1 reply
- 879 views
-