அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9268 topics in this forum
-
கடந்த பல மாதங்களாக எதிர்பார்க்கப்பட்டு வந்த அமைச்சரவை மாற்றம் கடந்த வாரம் நடந்தேறியுள்ளது. அமைச்சர்கள் மட்டத்தில் இடம்பெறத்தக்க இலாகா மாற்றங்கள் தொடர்பாக பலவித எதிர்வு கூறல்களும் முன்னர் வெளியிடப்பட்டு வந்துள்ளன. ஆனால் இடம்பெற்ற அமைச்சரவை மாற்றத்தில் பதவிப் பொறுப்புக்களில் குறிப்பிடத்தக்க மாற்றமெதுவும் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை. உலகிலேயே பெரிய அமைச்சரவை என்ற சாதனை புதிதாக உருவாக்கப்பட்ட ஏழு அமைச்சுக்களுடன், தற்போது அமைச்சரவையில் அமைச்சர்களின் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளது. ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரும் அமைச்சுப் பொறுப்புக்களை வகிப்பதால் அந்த தொகை 67 ஆக அதிகரிக்கிறது. பிரதி அமைச்சர்கள் 28 பேர் மற்றும் திட்ட அமைச்சர்கள் இருவர் என அமைச்சர்களது முழு …
-
- 0 replies
- 631 views
-
-
விடுதலைப்புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்டு ஏறக்குறைய மூன்றே முக்கால் ஆண்டுகளாகிவிட்டன. எனினும் ஈழத் தமிழர்கள் தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாட்டில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய திருப்பகரமான மாற்றங்கள் எதையும் அவதானிக்க முடியவில்லை. அண்மையில் இந்திய ஊடகம் ஒன்றுக்கு பேட்டி வழங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் இதைச் சுட்டிக்காட்டியிருந்தார். விடுதலைப்புலிகள் இல்லாத இன்றைய அரசியல் சூழலில் இந்தியா தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள்விடுத்திருந்தார். இந்தியாவின் மாறாத இந்நிலைப்பாட்டிற்கு காரணம் என்ன? விடுதலைப்புலிகள் தான் காரணம் என்றால் அவர்கள் அரங்கிலிருந்து அகற்றப்பட்ட பின் இந்தியா தன் நிலைப்பாட்டை மாற்றியிருந்திருக்க வேண்டும். எ…
-
- 10 replies
- 1.1k views
-
-
ஜெனிவாத் திருவிழாவுக்கான ஏற்பாடுகள் களைகட்டத் தொடங்கியுள்ளன. திருவிழாவின் பிரதான உபயகாரர் தன்னுடைய திக்குப் பாலகர்களை இலங்கைக்கு அனுப்பத் தொடங்கிவிட்டார். ஏற்கனவே சொன்னபடி திருவிழாவுக்கு ஏற்ற ஆயத்தங்களை இலங்கை செய்து முடித்திருக்கிறதா அல்லது முருங்கை மரத்திலிருந்து இன்னமும் இறங்காமல் ஒட்டிக்கொண்டிருக்கிறதா என்பதை அறியவேண்டியது உபயகாரரின் கடமை. இல்லாவிட்டால் திருவிழா நடத்தியும் பயனில்லை. ஒருவேளை இன்னமும் முருங்கை மரமே தஞ்சமென்று இலங்கை வேதாளக் குணங்களோடு இருந்தால், திருவிழா மங்கலகரமாக இருக்காது. மாறாக பேயோட்டும் சடங்காக மாறிவிடும். திக்குப் பாலகர்களின் கவனத்தை வேறு பக்கம் திருப்பி, தாம் குடிகொண்டிருக்கும் முருங்கை மரம் பற்றிய கணிப்புகளைக் கலைக்க இலங்கையில் மணிமுட…
-
- 1 reply
- 686 views
-
-
சர்வதேசத்தின் அழுங்குப் பிடிக்குள் இஸ்ரேல் விரைவில் சிறீலங்கா.. சிறீலங்கா 1948 ற்கு பின் நடாத்திய அத்தனை ஆக்கிரமிப்பில் இருந்தும் வெளியேற வேண்டிய நிலை.. இஸ்ரேலுக்கு எதிராக ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கை இலங்கைத் தீவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு தூரத்து விளக்கு போல வெளிச்சம் காட்டியுள்ளது. நேற்று முன்தினம் ஐ.நா வெளியிட்டுள்ள புதிய அறிக்கை பாலஸ்தீன பகுதியில் நடாத்தியுள்ள அனைத்து ஆக்கிரமிப்புக்களையும் கைவிடும் முடிவுக்கு, இஸ்ரேல் உடனடியாக வந்தாக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. பாலஸ்தீன வட்டகையில் இஸ்ரேல் புரியும் நில ஆக்கிரமிப்பு சர்வதேசத்தின் கடும் கோபத்திற்குள்ளாகியிருப்பது சாதாரண விடயமல்ல, சிறீலங்காவிற்கும் பலத்த எச்சரிக்கையாக இறங்கியுள்ளது. மேற்குக் …
-
- 4 replies
- 3.5k views
-
-
ராகுல் காந்தியால் காங்கிரசைக் காப்பாற்ற முடியுமா? மக்களவை தேர்தலுக்கு இன்னும் சுமார் 18 மாதங்கள் இருக்கும் நிலையில் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் ராகுல் காந்தியால் இப்போது பெரும் நெருக்கடியில் இருக்கும் காங்கிரசை வரும் ஒன்றரை ஆண்டுகளுக்குள் வலிமைப்படுத்திக் காப்பாற்றமுடியுமா?காங்கிரஸ் கட்சியே காப்பாற்றப் படவேண்டுமா என்ற கேள்வியை சிலர் கேட்கலாம். இந்தியாவில் தேர்தல் பாராளுமன்ற ஜனநாயக முறையில் எத்தனையோ சிக்கல்கள் இருந்தாலும் அதை விட சிறந்த மாற்றாக எதையும் பார்க்க இயலாத நிலையில் இன்னமும் அதன் மீதே நம்பிக்கை வைத்திருப்பவன் என்ற முறையிலேயே இந்த விஷயத்தை நான் அணுக விரும்புகிறேன். இதில் இயங்கும் கட்சிகளில் இடதுசாரி கட்சிகள் பரவலாக பலம் பெறாத சூழலி…
-
- 0 replies
- 607 views
-
-
அரசியற் கட்சிகளிடையே பொது உடன்பாடு: சிவில் சமூகத்தின் முயற்சிகளும் தமிழரசுக் கட்சியின் நேரமின்மையும் முத்துக்குமார் அண்மைக்காலமாக தமிழ் அரசியலில் மூன்று முக்கிய விடயங்கள் பேசுபொருளாகியுள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தென்னாபிரிக்க விஜயம், தமிழ் சிவில் சமூகத்தின் தமிழ் அரசியற் கட்சிகளுடனான பேச்சுவார்த்தை முயற்சிகள். பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் அலுவலகத்தில் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்பட்டமை என்பனவே அம் மூன்றுமாகும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தென்னாபிரிக்க விஜயம் தற்போது உறுதியாகிவிட்டது. ஜனவரி 29ம் திகதி அவர்கள் செல்லவிருப்பதாக செய்திகள் வருகின்றன. அரசாங்கத்திற்கு ஜெனிவா நெருக்கடிகள் வருகின்ற போதெல்லாம் சம்பந்தன் ஓடிச்சென்று அரசாங்கத்தைப…
-
- 0 replies
- 577 views
-
-
இலங்கை இனப்படுகொலை தொடர்பில் ஐ.நா.வின் நடவடிக்கைகள் குறித்து ஒரு உள்ளக ஆய்வறிக்கையை சார்லஸ் பெட்ரி என்கிற ஐ.நா. அதிகாரி தலைமையிலான குழு நவம்பர் மாதம் வெளியிட்டது. இது ஐ.நா. உயர் அதிகாரிகளின் இலங்கை தொடர்பான நிலைப்பாட்டினையும், செயல்பாட்டினையும் வெளிப்படுத்துகிறது. இதில் ஐ.நா.வின் உயர் அதிகாரிகள் இலங்கை அரசிற்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் உதவி இருப்பது பதியப்பட்டுள்ளது. 120 பக்கங்களுக்கு மேலான தகவல்களைக் கொண்ட இந்த அறிக்கை பல உள்தகவல்களை நமக்கு வழங்குகிறது. ஐ.நா.வின் நிபுணர் குழு அறிக்கை, போர்குற்றம் என்பதாக மட்டுமே நின்றுவிட்டதையும், அரசியல் தீர்வினை நோக்கி தீர்மானகரமாக நகர இயலாதவாறு, முட்டுச்சந்தினை நோக்கிய நகர்வினை செய்ததற்கு பின்புல காரணங்களை இந்த அறிக்கை வெளிச்சத…
-
- 0 replies
- 594 views
-
-
மீண்டும் ஒருமுறை ஜெனிவாவை நோக்கி, பலரது கவனமும் திரும்பத் தொடங்கியுள்ளது. அடுத்த மாதம் 22ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 22ஆவது கூட்டத்தொடர், இலங்கைக்கு சவால்மிக்கதாகவே இருக்கும் என்ற கருத்து, பல மாதங்களாகவே அடிபட்டு வந்தது தான். இப்போது, எதிர்பார்க்கப்பட்டதை விட இன்னமும் கடினமான – இறுக்கமான சூழல் இருக்கும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. 19ஆவது கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை, இலங்கை மதித்து நடந்து கொண்டதா, அதை நிறைவேற்றியதா என்பதை விளக்கும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் அறிக்கை தான், இறுக்கம் நிறைந்ததாக இருக்கும் என்று முன்னர் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இப்போது அதற்கும் மேலாக, இன்னொரு புதிய தீர்மானத்தை எ…
-
- 7 replies
- 661 views
-
-
அடுத்த அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி? ஒரு பார்வை ஒபாமாவின் இரண்டாவது ஆட்சிக்காலத்தை வரும் அதை மாதம் பதவி ஏற்பார். அப்பொழுது தனது அமைச்சரவையில் பல மாற்றங்களை விரும்பியும் விரும்பாமலும் செய்தே ஆகவேண்டும். தற்போதைய இராஜாங்க செயலாளர் ஹிலரி கிளிண்டன் நான்கு வருடங்கள் இந்த பதவியை வகித்தவர். இப்பொழுது ஒபாமாவின் பின்னராக தன்னை சனாதிபதி தேர்தலில் நிறுத்த தயாராகி அதற்கு பலம்சேர்க்க இந்த தடவை தான் இந்த பதவியை வகிக்கமாட்டேன் என முற்கூட்டியே அறிவித்துள்ளார். அமெரிக்காவின் தற்போதைய ஐ.நா. தூதுவரான சூசன் ரைசும் மாசசூசட்ஸ் மாநில ஜனநாயக கட்சி செனட்டருமான ஜோன் கெரியும் கிலரியை மாற்றீடு செய்யக்கூடியவர்களாக கணிக்கப்பட்டது. இதில் சூசன் ரைஸ் தென் சூடான் ஐ.நா. வாக்கெடுப…
-
- 3 replies
- 1.1k views
-
-
எமது உறவிலும் ஒரு புதிய பாதை உலக உறவிலும் ஒரு புதிய பாதை தத்தர் வீழ்ந்தோம் ஆயினும் வெல்வோம் வீழ்ச்சியின் அளவையும் தன்மையையும் விளங்கிக் கொண்டால். நாம்பட்ட இன்னலாலும் எமக்கு ஏற்பட்ட அளப்பெரும் தோல்வியாலும், துயரத்தாலும் எம்மை ஒட்டி இணைக்க முடியவில்லை என்றால் வளம் பொருந்திய எமது பண்பாட்டின் அர்த்தந்தான் என்ன? இந்து மாகடலை செந்நீராக்கிய இரத்தத்தாலும் எம் இதயத்தை கழுவமுடியாது போனதா? ஆறாய்ப் பெருகிய கண்ணீராலும் எம் வேறுபாடுகளைக் கழுவிச் சுத்தம் செய்ய முடியாது போனதா? வரலாறு எழுப்பும் இக் கேள்விகளுக்கு நாம் பதிலளிக்க வேண்டும். வீழ்ச்சியிலிருந்து நாம் மீழ்ச்சி பெறப் போவது எப்போ என்ற கேள்விக்கான பதில் மிகவும் இலகுவானது. எப்போது நாம் எம் வேறுபாடுகளைக் கடந்து துயரப்…
-
- 0 replies
- 687 views
-
-
மனிதஉரிமை மீறல் குற்றச்சாட்டுகளை அடிப்படையாகக் கொண்டு, இலங்கை இராணுவத்தினருக்குப் பயிற்சி அளிக்க அமெரிக்கா மறுத்தால், சீனாவிடம் போய் உதவி கேட்போம் என்று கடந்தவாரம் ஒரு மிரட்டலை விடுத்திருந்தார் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச. மனிதஉரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அரசாங்கம் போதிய கவனம் எடுத்து, விசாரணைகளை நடத்தாத நிலையில், இலங்கை மீதான அமெரிக்காவின் அழுத்தங்கள் அதிகரித்துள்ளன. இத்தகைய பின்னணியில், அமெரிக்காவில் மேலதிகப் பயிற்சிக்காக இலங்கை இராணுவத் தலைமையகத்தால், தெரிவு செய்யப்பட்ட மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்கவுக்கு, அமெரிக்கா வீசா வழங்க மறுத்து விட்டது. 53வது டிவிசனின் தளபதியாகப் பணியாற்றினார் என்பதற்காகவே, அவரை பயிற்சித் திட்டத்தில் சேர்த்துக் கொள்ள அமெரிக்க…
-
- 0 replies
- 586 views
-
-
அண்மையில் முன்னாள் பிரதம நீதியரசர் திருமதி ஷிராணி பண்டாரநாயக்க அவர்களை பதவியிலிருந்து நீக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் தொடர்பாக அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் தனது வன்மையான அதிருப்தியை வெளியிட்டது. அப்போது ஊடகவியலாளர்களால் இலங்கைக்கு வழங்கப்படும் அமெரிக்க உதவிகள் பற்றிக் கேள்வி எழுப்பப்பட்ட போது 2012 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட நிதியுதவிகள் தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டது. 2013 ஆம் ஆண்டுக்கான நிதியுதவி தொடர்பாக அவ்விடயம் தற்சமயம் பரிசீலனையில் இருப்பதாகவும், அது தொடர்பாக இச்சமயத்தில் பதிலளிக்க முடியாதெனவும் தெரிவிக்கப்பட்டது. இச்செய்தி வெளிவந்ததை அடுத்து இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ அவர்கள் அமெரிக்கா இலங்கைக்கான உதவிகளை நிறுத்தினால் தங்களுக்கு சீனா உதவ…
-
- 2 replies
- 492 views
-
-
றிஷானாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளமை குறித்து மரணமடைந்த குழந்தையின் தாய்க்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்தக் கல் நெஞ்சக்காரி சற்றும் மனக்கவலை கொள்ளாது அதனைத் தானும் பார்வையிட வேண்டுமெனக் கூறி சிறைச்சாலைக்கு வந்துள்ளாள். அவளின் முன்பாகவே ரிஸானாவின் உயிர் பிரிந்தது. மூதூர் றிஷானா நபீக்குக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு விட்டது. இதுதொடர்பில் சாதக பாதக கருத்துக்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. றிஷானாவை மீட்பதில் இலங்கை அரசு போதுமான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. இறுதிக் கட்டத்தில் காத்திரமான பங்களிப்புக்களை அரசு மேற்கொள்ளவில்லை என்று கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. இன்றைய சூழ் நிலையில், இலங்கையின் முஸ்லிம் அரசியல் வாதிகள் இந்த விடயத்தில் நடந்து கொண்ட அசிரத்த…
-
- 1 reply
- 727 views
-
-
மீண்டும் வீர வசனங்களை அள்ளி வீச ஆரம்பித்துள்ளார் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத்தலைவர் இரா.சம்பந்தன். அதாவது, தமிழ் தேசிய இனத்தின் இருப்பை இல்லாதொழிக்க சிங்களம் முயற்சிப்பதாகவும், தமிழ் மக்களின் பிறப்புரிமையை பறிக்க எவரையும் அனுமதிக்க முடியாதெனவும் சம்பந்தன் கூறிய வீர வசனங்கள் ஊடகங்களில் பரவலாக இடம் பிடித்திருந்தது. அதுமட்டுமல்லாது, எதிர்வரும் மாதங்களில் சாதகமான மாற்றங்கள் ஏற்படலாமென்றும் அவர் எதிர்வு கூறியுள்ளார். அமெரிக்காவின் வசந்த அழைப்பும், தென்னாபிரிக்கா பயணமும், மார்ச் மனித உரிமைப் பேரவையில் சிங்களத்திற்கு எதிரான தீர்மானங்கள் நிறைவேறும் என்கிற எதிர்பார்ப்பும் இணைந்து ,சாதகமான மாற்றங்களைக் கொண்டுவரும் என்பதுதான் சம்பந்தனின் கணிப்பு. இவ்வகைய…
-
- 0 replies
- 580 views
-
-
மகிந்த ராசபக்ச தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இப்போது மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் இருக்கிறது என்பது உண்மைதான். ஆனால் அந்த பெரும்பான்மை மக்கள் வழங்கிய வாக்கின் மூலம் கிடைத்ததல்ல, ஏனைய கட்சிகளை உடைத்து பலவீனப்படுத்தி பணம் கொடுத்து வாங்கி பெற்றுக்கொண்ட பெரும்பான்மை தான் என்பது பலருக்கும் தெரிந்த விடயம் தான். மகிந்த ராசபக்ச தலைமையிலான ஆளும் கட்சி பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சியிலிருந்த பலரை வாங்கிக்கொண்டது மட்டுமன்றி அக்கட்சியை மிக மோசமாக பலவீனப்படுத்தி இருக்கிறது. பலவீனமான எதிர்க்கட்சி தலைவராக இன்று ரணில் விக்கிரமசிங்க உள்ளார். ஜே.வி.பியை ஒன்றல்ல மூன்றாக உடைத்து பலவீனப்படுத்தி சிலரை தன் பக்கம் மகிந்த அரசு இழுத்துக்கொண்டது. அரசாங்கத்து…
-
- 1 reply
- 671 views
-
-
மார்ச் மாதத்தை நோக்கிய எதிர்பார்ப்புக்கள் ஆரம்பித்திருக்கின்றன. ஐ.நாவில் தொடங்கவுள்ள கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான தீர்மானங்கள் வலுவாக மேற்கொள்ளப்படும் என்ற எதிர்பார்ப்புகளும்,கோரிக்கைகளும் பல தளங்களிலும் மேற்கொள்ளப்படுகின்றன. இலங்கையும் அதனைக் கருத்தில் கொண்டு ராஜதந்திர நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியிருக்கின்றது. முதற்கட்டமாக இந்தியா இலக்குவைக்கப்பட்டிருக்கின்றது. கடந்த வார இறுதிப் பகுதியில் இந்தியா சென்ற இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இந்தியா அமைதியாக இருந்து கொண்டால் மட்டும் போதும் என்று கூறிவந்திருக்கின்றார். சர்வதேசத்தை கவனிக்கத் தங்களுக்குத் தெரியும் எனவும் சொல்லியிருக்கின்றார். இந்த நிலையில் ஜி.எல். பீரிஸ் குறிப்பிட்டது போல இம்முறை இலங்…
-
- 0 replies
- 479 views
-
-
அந்த ஒரு லட்சம் பேர் எங்கே? இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் உணர்ச்சி வசப்பட்டு இயங்குபவனும், அறிவு பூர்வமாகப் பேசுபவனும் ஒரே ஆளாக இருக்க வாய்ப்பில்லை என்பது நீண்ட நெடுங்கால நம்பிக்கை. உணர்ச்சி வசப்படுபவன் அறிவு பூர்வமாகப் பேச முடியாது என்றோ அறிவு பூர்வமாகப் பேசுபவன் உணர்ச்சி வசப்பட மாட்டான் என்றோ இதற்குப் பொருள். ஒரே ஆள் இரண்டாகவும் இருக்க முடியும் என்பதை ஒரு நூறாண்டுகளுக்கு முன் நிரூபித்தவன், எட்டயபுரத்துக் கவிஞன் சுப்பிரமணிய பாரதி. நூறு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அதை நிரூபித்தவன், வீரத்தமிழ்மகன் முத்துக்குமார்! தன்னுடைய அபரிதமான கவிதைத் திறத்தாலும், கட்டுரை வன்மையாலும் ஒரு மகாகவியாக நிமிர்ந்து நின்றதோடு நின்றுவிடவில்லை பாரதி, “என்றெமது அன்னை கை விலங்குகள் போகும்…
-
- 0 replies
- 813 views
-
-
http://www.aljazeera.com/programmes/aljazeeraworld/2012/12/2012124114036244389.html Filmmakers: Alexandre Trudeau and Jonathan Pedneault On one side, there is the US in decline. On the other, there is an emerging China. In the middle, there are the maritime routes crucial for the export of oil, such as the Strait of Hormuz in the Arabian Gulf. Ocean-borne trade is the foundation of the global economy, and the Middle East is a hub for world shipping. The sea lanes in this region narrow into what are called choke points, which are keys to regional control. "After the war [World War II], the US was in a position essentially to work out ways to organi…
-
- 2 replies
- 734 views
-
-
ஆசியாவின் வல்லமை மிக்க கடற்படைகள் என்று பார்க்கும் போது சீனா ஐந்தாம் இடத்திலும் தென் கொரியா முதலாம் இடத்திலும் இருக்கிறது என்பது பலருக்கு ஆச்சரியமளிக்கும். ஆனால் இதைச் சொல்பவர் James Holmes என்பவர். James Holmes is professor of strategy at the Naval War College and senior fellow at the University of Georgia School of Public and International Affairs. James Holmesஇன் ஆசியக் கடல் வலிமை வரிசை 1. தென் கொரியா. 2 ஜப்பான். 3. ஐக்கிய அமெரிக்கா. 4. இந்தியா. 5. சீனா. உலகத்திலேயே ஒப்பில்லாத கடற்படை வலிமையைக் கொண்ட அமெரிக்காவின் கடற்படைப் பலம் ஆசியப் பிராந்தியத்தில் சீனாவினது கடற்படைப் பலத்திலும் வலிமை மிக்கது. கடற்படைகளின் செயற்படு திறனை வைத்துக் கொண்டு பேராசிரியர் James Holmes …
-
- 2 replies
- 1k views
-
-
உயர் நீதிமன்றத்தினால் பிழையானதாக தீர்ப்பளிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக் குழுவின் முடிவை அடிப்படையாகக் கொண்டு பிரதம நீதியரசர் நீக்கப்பட்டு புதிய ஒருவர் நியமிக்கப்பட்டால் அவரை ஏற்க நீதித் துறையினருக்கு சட்டம் இடம் கொடுக்குமா என்ற கேள்வி எழுகிறது என்று நாம் கடந்த வாரம் கூறினோம். ஆனால் அவ்வாறு கேள்வி எதையும் எழுப்பாமலே சட்டத்துறை, புதிய பிரதம நீதியரசராக மொஹான் பீரிஸை ஏற்றுக்கொண்டது. புதிதாக பிரதம நீதியரசர் ஒருவர் நியமிக்கப்பட்டால் அவரை ஏற்றுக்கொள்ளக் கூடாது என முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாக்க பதவி நீக்கம் செய்யப்படுமுன் சட்டத்தரணிகள் பலரும் நீதிபதிகளும் கூறி வந்தனர். நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்புக்களின் அடிப்படையில் அது சரி தான். ஆனால் புதிய பிரதம ந…
-
- 0 replies
- 426 views
-
-
ஓபாமாவின் இரண்டாவது பதவிக் காலம் இலங்கைத் தீவிற்கு நல்லதா? கெட்டதா? - நிலாந்தன் 20 ஜனவரி 2013 பொதுவாக அமெரிக்க ஜனாதிபதிகள் தமது முதலாவது பதவிக் காலத்தின்போது இரண்டாவது பதவிக் காலத்தைக் குறிவைத்தே எதையும் செய்வார்கள். இரண்டாவது தடவையும் பதவிக்கு வரும் வரை ஆகக்கூடிய பட்சம் நிதானமாகவும், சர்ச்சைகளுக்குள் சிக்காமலும் நிலைமைகளைக் கையாள்வார்கள். ஆனால், இரண்டாவது பதவிக் காலத்தின்போது அவர்கள் அவ்வாறு நடந்துகொள்வதில்லை. ஏனெனில் மூன்றாவது பதவிக் காலம் அவர்களுக்கில்லை. ஒரு அமெரிக்கர் அடையக் கூடிய அதியுச்ச பதவி அது. அதற்கு மேல் ஒரு பதவி கிடைப்பதற்கில்லை. எனவே, இரண்டாவது பதவிக் காலத்தின்போது வரலாற்றில் தமது பெயரைப்பொறிக்கத்தக்க சாதனை எதையாவது செய்ய முயற்சிப்பா…
-
- 2 replies
- 624 views
-
-
21ம் நூற்றாண்டுக்கான உலகத்தின் புதிய அச்சு உருவாக ஆரம்பித்துவிட்டது. ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்வது குறித்து பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரோன் பேசிய உரைக்கு அவருடைய கட்சிக்குள்ளேயே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதாக இன்றைய காலைச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பேரம் பேசல்களை ஆரம்பித்து, எதிர்வரும் 2015 ற்கு பிறகு ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்வதா இல்லையா என்பதற்கான சர்வஜன வாக்கெடுப்பை நடாத்தலாம் என்று கமரோன் நேற்று பிரிட்டன் பாராளுமன்றத்தில் பேசியிருந்தார். ஆனால் அதற்கு பதிலுரைத்த லிபரல் டெமக்கிரட்டி கட்சித் தலைவர் பிரிட்டன் மக்கள் பிரதமர் கருதுவது போல ஐரோப்பிய ஒன்றியத்தில் பங்கேற்பது குறித்து யாதொரு ஆர்வமும் கொண்டிருக்கவில்லை என்று தெரிவித்துள்ளா…
-
- 2 replies
- 698 views
-
-
அமெரிக்காவின் மூலோபாய அக்கறை யாரை மையப்படுத்தியது? - யதீந்திரா கடந்த பத்தியில் 2009 டிசம்பர் மாதம் வெளியிடப்பட்ட, இலங்கை: யுத்தத்திற்கு பின்னரான அமெரிக்க மூலோபாயத்தை மீள்சட்டகப்படுத்துதல் (SRI LANKA: RECHARTING U.S. STRATEGY AFTER THE WAR) என்னும் அறிக்கை குறித்து பார்த்திருந்தோம். இப்பத்தியில் அது குறித்து மேலும் சில விடயங்களை பார்ப்போம். அமெரிக்க வெளிவிவகாரக் கொள்கையில் சுமார் 27 வருடங்களாக ஈடுபட்டுவரும் ஜோன் கெரி தற்போது அமெரிக்காவின் வெளிவிவகாரச் செயலராக நியமிக்கப்பட்டிருக்கின்ற நிலையில், இப்பத்தி அவர் இலங்கை தொடர்பாக எத்தகைய அவதானத்தைக் கொண்டிருக்கின்றார் என்பதை விளங்கிக்கொள்ள முயல்கிறது. இலங்கையின் புவியியல் இட அமைவானது ஐரோப்பிய நாடுகள், மத்திய கிழக்கு மற்றும் ச…
-
- 1 reply
- 560 views
-
-
“இலங்கை தொடர்பான கொள்கையை இந்தியா மாற்றிக்கொள்ள வேண்டும், அவ்வாறு மாற்றினால் தான், இலங்கையின் கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்” என்று, கடந்த திங்கட்கிழமை ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருந்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன். எட்டாவது இந்திய - இலங்கை கூட்டுக்குழுக் கூட்டத்துக்காக, வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கடந்த திங்கட்கிழமை, புதுடெல்லிக்குப் புறப்பட்ட சமயத்தில் தான், இந்தப் பேட்டி ஊடகங்களில் பரபரப்பாக வெளியானது. மிக முக்கியமான தருணமொன்றில் தான், சுரேஷ் பிரேமச்சந்திரனின் இந்தக் கருத்து வெளியானது. பிரதமநீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க பதவிநீக்கம் செய்யப்பட்ட பின்னணி, அதுபற்றி இந…
-
- 0 replies
- 752 views
-
-
சிறீலங்காவில் பல ஆண்டுகளாக தீர்க்கப்படாத ஒரு பிரச்சனையாக இவ் இனப்பிரச்சனை இருந்து வருகின்றது. காலத்திற்கு காலம் ஆட்சி பீடம் ஏறும் அரசுகளும் இனப்பிரச்சனைக்கான ஒரு தீர்வை பெற்றுத்தருவோம் என்ற பகடையை உருட்டியே அரசியல் சிம்மாசனத்தில் அமர்ந்து பேச்சுவார்த்தைகள், சமாதான ஒப்பந்தங்கள், தெரிவுக்குழுக்கள் என பலவற்றை நிறுவி பல வருடங்களாக உலக நாடுகளையும் பேச்சுக்குச் சென்ற தமிழ் தலைவர்களையும் தமிழக்களையும் ஏமாற்றி வருகின்றமை உலகறிந்த உண்மை. இதனை உலக நாடுகளும் தமிழர்களும் நன்கு உணர்ந்துள்ளனர். ஆனால் நீண்ட காலமாக தமிழர்களின் குருதி படிந்துள்ள இனப்பிரச்சனை தீர்க்கப்படாமல் காலங்கள் வீணடிக்கப்பட்டு, வளர்ந்து வரும் இளைய சமுதாயங்களின் உரிமைகள் ஒடுக்கப்பட்டு, சமுதாயத்தில் இனரீதியான ஒரு ஒ…
-
- 0 replies
- 449 views
-