அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9211 topics in this forum
-
இலங்கை அரசியலில் சமஷ்டியை ஆதரிக்காதவர்கள் இல்லை கடந்த மூன்று தசாப்த காலத்தில் அரசமைப்பு மாற்றம் பற்றிய கலந்துரையாடல்கள் நடைபெற்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், அரசின் தன்மையே முக்கியமான விடயமாகவும் சர்ச்சைக்குரிய விடயமாகவும் அரசியல் அரங்கில் பேசுபொருளாகவும் மாறியது. அந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், தமிழர்கள் தமக்கு, சமஷ்டி முறையே வேண்டும் என வலியுறுத்தி வந்துள்ளதோடு, சிங்களவர்கள் ஒற்றை ஆட்சி முறையே நாட்டில் இருக்க வேண்டும் எனப் பிடிவாதமாக இருந்துள்ளனர். இனப்பிரச்சினை, சாத்வீக போராட்டங்களில் இருந்து, ஆயுதப் போராட்டமாக மாறி, அதுவும் முடிவுற்று, தற்போது மீண்டும் போராட்டம் அரசியல் களத்தில் நடைபெற்று வருகிறது. …
-
- 0 replies
- 440 views
-
-
ராஜபக்சர்கள் நடத்திய ஒப்பரேசன் PRIME MINISTER/ Kuna kaviyalahan/ Srilanka Government/01.06.22
-
- 0 replies
- 325 views
-
-
அதிர வைக்கப்போகும் அரசியல் பூகம்பங்கள் வலுவடைகின்றன ஐக்கிய தேசிய கட்சிக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான முரண்பாடுகள் நம்பிக்கையில்லா பிரேரணை.... ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்ததன் பின்னர் கடந்த மூன்று வருட காலங்களில் அடிக்கடி உச்சரிக்கப்படும் வார்த்தைப் பிரயோகமாக இந்த நம்பிக்கையில்லா பிரேரணை என்ற வார்த்தையே காணப்படுகின்றது. அரசாங்கம் ஒன்று பதவியில் இருக்கும்போது நெருக்கடிகளும் சவால்களும் ஏற்படுவது இயல்பானதுதான். அதில் ஒன்றும் ஆ…
-
- 0 replies
- 553 views
-
-
இன்று போய் நாளை வா! Atha Gila Heta Enda! வடக்குக் கிழக்கினைச் சிங்கள தேரவாத பௌத்தத்திற்கு உரிமைகோரும் Ven. Ellawala Medhananda Thera The Sinhala Buddhist Heritage in The East and The North of Shri Lanka என்ற நுல் பற்றிய விமர்சனம் சாணக்கியன் 07.01.2005, சனி. இலங்கையில் அன்று, முடிவுகளைத் தாமாகவும், சரியாகவும் எடுக்கும் பக்குவ நிலையை அடையாத சிறுவர்கள, தேரவாத பௌத்த பிக்குகளாக ஆக்கப்பட்டும், கத்தோலிக்க பாதிமார்களாக ஆக்கப்பட்டும் வந்துள்ளனர். ஆனால், இன்று, எந்தவித முடிவுகளையும் தாமாகச் சிந்தித்து எடுக்க முடியாத நிலையில் இருக்கும் சிறுவர்களுக்கு இவை தொடரும் அதே வேளையில், தென்னிலங்கையில் 40,000 இற்கு மேற்பட்ட சிறுவர்கள் பாலியல் களியாட்டங்களுக்குப் பயன்படுத்தப்பட்…
-
- 0 replies
- 1.5k views
-
-
மைத்திரி முன்னெடுத்த இன்னொரு ஒப்பரேசன் சுப்த்ரா “பௌதிக ரீதியாக பயங்கரவாதிகளைத் தோற்கடித்த போதிலும், அவர்களின் கொள்கையைத் தோற்கடிக்க முடியாது போயுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக, சர்வதேச ஒத்துழைப்புடன் அந்தக் கொள்கையைத் தோற்கடிப்பதற்கே முயன்று வந்தேன்“ கடந்த 8ஆம் திகதி பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து, கொள்கை விளக்க உரை நிகழ்த்திய போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு கூறியிருந்தார். இதற்கு முன்னரும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட பலரும், போரில் விடுதலைப் புலிகளைத் தோற்கடித்த போதிலும், அவர்களின் சித்தாந்தத்தை தோற்கடிக…
-
- 0 replies
- 491 views
-
-
ஒன்பது வருடங்கள் கடந்தும் கண்ணீருடன் பாதிக்கப்பட்டோர் நாட்டில் நிலவிவந்த 30 வருடகால யுத்தம் முடிவடைந்து ஒன்பது வருடங்கள் நிறைவடைந்துவிட்டன. தென்னிலங்கை யுத்த வெற்றியை கொண்டாட வேண்டுமென வலியுறுத்தி வருகின்ற நிலையில் வடக்கு–கிழக்கில் பாதிக்கப்பட்ட மக்கள் தமது துன்ப–துயரங்களை வெளிப்படுத்த முடியாமல் தவித்துக்கொண்டிருக்கின்றனர். யுத்தம் முடிவடைந்து ஒன்பது வருடங்கள் கடந்து விட்ட நிலையிலும் இதுவரை பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி நிலைநாட்டப்படவில்லை. மக்கள் தமக்கு நீதியை நிலைநாட்டுமாறு கோரிப் போராடி வருகின்ற போதிலும் பதவியிலிருக்கின்ற அரசாங்கமானது அதனை தமது அரசியல் இருப்புக்களுக்கு ஒரு ச…
-
- 0 replies
- 342 views
-
-
ஒரு பொது நினைவுச்சின்னத்தை ஏன் உருவாக்க முடியாது? நிலாந்தன். adminJune 4, 2023 சுதந்திரப் பூங்கா-Freedom Park- தென்னாபிரிக்கா போரில் உயிர்நீத்த அனைவருக்குமாக ஒரு பொதுவான நினைவுச் சின்னத்தை உருவாக்கப் போவதாக அரசாங்கம் அறிவித்திருக்கிறது. தமிழ்க் கட்சிகளில் சில அதை எதிர்க்கின்றன; சில அதை ஆதரிப்பதாகத் தெரிகின்றது. போரில் உயிர் நீத்த எல்லாருக்குமான நினைவுச் சின்னம் என்பது உலகில் ஏற்கனவே பல நாடுகளில் உண்டு. குறிப்பிட்ட நாட்டில் அல்லது குறிப்பிட்ட பிரதேசத்தில் போரில் உயிர்நீத்த அனைவருக்குமானதாக அது அமையும். அதற்கு முகம் இருக்காது. ஆளடையாளம் இருக்காது. அது போர் வெற்றியையும் பிரதிபலிக்காது; தோல்வியையும் பிரதிபலிக்காது. குறிப்பாக, நிலைமாறுகால நீதியின் ஒ…
-
- 0 replies
- 413 views
-
-
தமிழகம் ஈழ விடுதலை போராட்டத்தை எவ்வாறு பார்க்கின்றது
-
- 0 replies
- 616 views
-
-
இலங்கை அரசுக்கான நெருக்கடிகள் - யாருடைய நலன்களுக்காக? - சஞ்சீவன் ஜெயக்குமார் விடுதலைப் புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்படுவதற்கு முன்பு இலங்கை அரசுக்கு உள்நாட்டு நெருக்கடி என்பது, சமாளிக்கவே முடியாத மிகப் பெரிய சவால். ஆனால், அப்போது வெளியுலகத்தின் ஆதரவுத்தளம் பலமாக இருந்தது. அல்லது சாதகமாக இருந்தது. இப்போது உள்நாட்டில் இலங்கை அரசாங்கம் மிகப் பலமாக உள்ளது. பதிலாக வெளியுலக நெருக்கடி மிகப் பெரிய சவாலாக உள்ளது. எதிர்நிலை அம்சங்கள் அதிகரித்துள்ளன. புலிகள் இல்லை என்றாலும் புலிகளின் பேராலான புலிகளுடனான யுத்தத்தின் போது நடந்த - யுத்தக் குற்ற விவகாரங்கள் தொடர்பாகவே இன்றைய நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. இலங்கை அரசாங்கம் இந்த மாதிரியான நிலைமைகளை முன்னரும் …
-
- 0 replies
- 623 views
-
-
சிங்கள பாடப் புத்தகங்களில் தமிழர்கள் இந்தியாவிலிருந்து வந்ததாகவும் சிறுபான்மை இனம் என்றால் கீழ்சாதி என்றும் பெரும்பான்மை இனம் என்றால் மேல்சாதி என்றும் சிங்களத்தில் சொல்கிறார்கள். நடந்து முடிந்த தேர்தல் அடுத்துவரும் தேர்தல் என்று பலதையும் தொட்டுச் செல்கிறார்கள்.
-
- 0 replies
- 427 views
- 1 follower
-
-
(புருஜோத்தமன் தங்கமயில்) இளையோருக்கும் பெண்களுக்குமான அரசியல் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்கிற குரல்கள் தேர்தல் காலங்களில் அதிகமாக கேட்பதுண்டு. இம்முறையும் வேட்புமனுத் தாக்கல் முடியும் நாள் வரையில், அந்தக் குரல்கள் பலமாகவே கேட்டன. அதிலும் கவனிக்கப்பட வேண்டிய விடயம் என்னவென்றால், இளையோருக்கும் பெண்களுக்குமான இடத்தை பிடித்து வைத்துக் கொண்டு, பெருந்தடையாக இருக்கும் மூத்த அரசியல்வாதிகளும்கூட அந்தக் குரல்களை எழுப்பினர்கள் என்பதுதான் வேடிக்கையானது. வழக்கமாக மூத்த – பழுத்த அரசியல்வாதிகளினால் நிறையும் இலங்கையின் தேர்தல் களம், ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் வெற்றியோடு இளையோர், புதியவர்களுக்கான களமாக இம்முறை மாறியிருக்கின்றது. அதன் பிரதிப…
-
- 0 replies
- 231 views
- 1 follower
-
-
பாழ்நரகத்தில் தீர்மானிக்கப்படும் சில கூட்டணிகள் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் செயற்பாட்டால், கடந்த வாரம் ஐந்து தமிழ்க் கட்சிகள் இணைந்து செயற்பட உடன்பட்டனர். ஆறு கட்சிகளுடன் தொடங்கிய பேச்சுவார்த்தை, இறுதியில் ஐந்து கட்சிகள் உடன்பட்ட ஆவணம் ஒன்றில் கையொப்பமிடுவதுடன் நிறைவுற்றது. இந்த இணைவு எதைச் சாதிக்கப்போகிறது என்ற கேள்வி ஒருபக்கம் எழுந்தாலும் இதை ஒரு நல்ல தொடக்கமாகக் கருதியோரும் உண்டு. தமிழ்க்கட்சிகள் இணைந்து செயற்படுவதற்கான வாய்ப்பை உருவாக்கியுள்ளன என்று மகிழ்ந்தோரும் உண்டு. இந்த மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் அதிககாலம் நிலைக்கவில்லை. கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியான ‘சண்டே டைம்ஸ்’ பத்திரிகை, கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினரும…
-
- 0 replies
- 577 views
-
-
நீதி தேவதை சிலுவையில் அறையப்படலாம். அவள் அந்த நேரத்தில் பரம பிதாவே இவர்கள் தாம் செய்வது இன்னதென்று தெரியாமல் செய்கிறார்கள். இவர்களை மன்னித்தருளும் எனக் கூறமாட்டாள். அவள் உயிர்த் தெழும் போது பெரு நெருப்பாகக் கொழுந்து விட்டெரிந்து தீமைகளை அழிப்பாள் என்பது மட்டும் நிச்சயம். 1966 1967 காலப்பகுதியில் யாழ்ப்பாணத்திலிருந்து தீப்பொறி என்ற ஒரு பத்திரிகை வெளிவந்தது. இந்தப் பத்திரிகை சமூகத்தையும் சமூகத்தில் இடம்பெறும் அநியாயங்களையும் துணிச்சலுடன் அழகு தமிழில் அடுக்கு மொழியில் காரசாரமாக விமர்சித்த காரணத்தால் இது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. இது அதிகமாக விற்பனையாகும் வார இதழாக இருந்தது மட்டுமன்றி இது எப்போது வரும் என மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்குமள…
-
- 0 replies
- 634 views
-
-
தமிழ்த் தேசிய தளத்தை பாதுகாப்பதற்கான உபாயம் என்ன? - யதீந்திரா அரசாங்கம் அதன் சிங்கள அடிப்படைவாத வேலைத்திட்டங்களை மிகவும் வேகமாக முன்னெடுத்துவருகின்றது. ஒரு புறம் ராஐபக்சக்கள் தொடர்ச்சியாக அதிகாரத்திலிருக்கக் கூடிய வகையிலான ஏற்பாடுகளை செய்வது, மறுபுறமாக வடக்கு கிழக்கில் தமிழ்த் தேசிய அரசியல் தளத்தை பலவீனப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது. மேற்படி இரண்டு வேலைத்திட்டங்களிலும், எந்தவொரு சமரசமுமின்றி அரசாங்கம் துரிதமாக நகர்ந்துகொண்டிருக்கின்றது. சிங்கள அடிப்படைவாதத்தின் குறீடாக எழுச்சியுற்றிருக்கும் ஒரு அரசாங்கத்திடமிருந்து இதற்கு மேல் வேறு எதனையும் எதிர்பார்க்கவும் முடியாது. எனவே இப்போது தமிழ்த் தேசியத் தரப்புக்கள் அதாவது தங்களது கட்சிகளின் பெயர்களில் தேசியத்…
-
- 0 replies
- 519 views
-
-
களச்சவால்கள் - மொஹமட் பாதுஷா ஒரு சமூகம் இனத்துவ நெருக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டுக் கொண்டிருப்பதைக் காட்டிலும், அதனை அச்சமூகத்தின் அரசியல்வாதிகள் உணராமல் இருப்பதும், அரசியல்வாதிகளின் கையாலாகாத்தனத்தை மக்கள் உணராமல் இருப்பதுமே மிகப் பெரிய கைச்சேதமும் உயிரோட்டமுள்ள சமூகத்துக்கான அபசகுணமும் ஆகும். முஸ்லிம்கள் இன்னும் ‘தேநீர்க்கடை அரசியலை’த்தான் நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். தேநீர் குடித்து முடிக்கும் வரை பேசுகின்றார்கள், பின்னர் மறந்து விடுகின்றார்கள். ஒரு பிரச்சினை ஏற்பட்டால் அதை அலசுவது, அதைப் பற்றி விவாதிப்பது; பிறகு இன்னுமொரு பிரச்சினை வந்தால் பழையதை மறந்து விட்டுப் புதிய பிரச்சினையை தலையில் …
-
- 0 replies
- 355 views
-
-
அமெரிக்காவிடம் கடும் நிபந்தணை – சிங்களப் புத்திஜீவிகள் பரிந்துரை ஜே பைடன் நிர்வாகம் ஜெனீவா மனித உரிமைச் சபையில் மீளவும் இணைந்து இலங்கைக்குக் கடும் அழுத்தம் கொடுக்கும் என்றோ, குறைந்தபட்சம் போர்க்குற்றம் குறித்த சர்வதேச விசாரணை நடக்கும் என்றோ எதிர்ப்பார்க்க முடியாது. ஆனால் ஐ.நா பாதுகாப்புச் சபையின் தீர்மானம் ஒன்றுக்கான முன்மொழிவுக்கு ஈழத்தமிழர்கள் தயாராகி, இலங்கை மேற்கொண்ட குற்றங்கள் அனைத்தினதும் குற்றங்களுக்கான சர்வதேச நீதியைக் கோரத் தலைப்பட வேண்டும். 0 அ.நிக்ஸன் மகிந்த ராஜபக்சவின் ஆட்சியைக் கவிழ்த்து 2015ஆம் ஆண்டு மைத்திரி- ரணில் அரசாங்கத்தை அமைப்பதற்குப் பாடுபட்டிருந்த பொது அமைப்புகளில் ஒன்றான தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்ற…
-
- 0 replies
- 627 views
-
-
புதிய ஐ.நா தீர்மானத்தில் தமிழ் மக்கள் எதிர்பார்ப்பது என்ன? வேல்ஸ் இல் இருந்து அருஸ் 87 Views எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 46 ஆவது கூட்டத்தொடர் தொடர்பில் பல நகர்வுகளை சிறீலங்காவும், தமிழர் தரப்புக்களும் முன்னெடுத்துவரும் நிலையில், இந்தியாவும் தனது கவனத்தை திருப்பியுள்ளது. கடந்த நவம்பர் மாதம் இந்தியாவின் பாதுகாப்புச் செயலாளர் சிறீலங்கா வந்து சென்ற பின்னர், தற்போது இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் இந்த வாரம் சிறீலங்காவுக்கு 3 நாள் பயணமாக வந்து சென்றுள்ளார். அமெரிக்காவை எதிர்க்கும் நில…
-
- 0 replies
- 348 views
-
-
தூபியை ஏன் இடித்தார்கள்? மீண்டும் ஏன் கட்டுகிறார்கள்? எம்.எஸ்.எம். ஐயூப் இலங்கை அரசாங்கம், சிறுபான்மை மக்களைச் சீண்டிக் கொண்டே இருக்கும் நிலையில், இந்த நாட்டில் நிலையான சமாதானம் எப்போதும் உருவாகாது என்ற நிலைப்பாட்டுக்கு ஒருவர் வந்தாலும், அது நியாயமற்ற முடிவு எனக் கூற முடியாது. பதவிக்கு வந்தவுடன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பெரும்பான்மை மக்களின் விருப்பத்துக்கு மாறாக, எதையும் செய்ய முடியாது என்று கூறினார். அதற்கு அடுத்து, அர்த்தமுள்ள அதிகாரப் பரவலாக்கல் முறையொன்று வேண்டும் எனத் தமிழ்த் தலைவர்கள் கோரிக்கை விடுக்கும் நிலையில், மாகாண சபைகளை இரத்துச் செய்ய வேண்டும் என, மாகாண சபைகளுக்குப் பொறுப்பான இராஜாங்க அமைச்சர் கூறித் திரிந்தார். பின்னர், கொவிட்- 19 நோ…
-
- 0 replies
- 694 views
-
-
இலங்கையில் வலுவடையும் இந்தியாவின் ஆதிக்கம் இந்தியன் ஒயில் நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்கப்பட்ட சீனக்குடா எரிபொருள் தாங்கிகள் சிலவற்றை மீளப் பெறும் விடயத்தில் இலங்கை அரசாங்கம் நெருக்கடிகளைச் சந்தித்துக் கொண்டிருக்கும் நிலையில், திருகோணமலைத் துறைமுகத்தை, அபிவிருத்தி செய்யும் பொறுப்பை இந்தியாவிடம் ஒப்படைக்கவுள்ளதாக பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தகவல் வெளியிட்டிருக்கிறார். திருகோணமலை துறைமுக அபிவிருத்தி தொடர்பாக இந்திய - இலங்கை அரசாங்கங்களுக்கு இடையில் பேச்சுக்கள் நடந்து கொண்டிருக்கின்றன. விரைவில் இது தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படும் என்று, புது…
-
- 0 replies
- 596 views
-
-
தமிழினம் கலங்கி நிற்க, தென்னிலங்கையில் விழா கொண்டாடியதை இன்றும் மறக்க முடியவில்லை – பா.அரியநேத்திரன் 12 Views முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தையொட்டிய எமது சிறப்பிதழில் வெளிவந்த அனுபவப் பகிர்வுக் கட்டுரை முள்ளிவாய்க்காலில் இலங்கை அரசு மேற்கொண்ட இன அழிப்புப் போரின் இறுதி நாட்களில் தமிழ் மக்களின் பிரதிநிதிகளான தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மற்றும் தாயகத்திலும் உலகம் எங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களும் நாதியற்று கலங்கி நின்ற போது, தென்னிலங்கையும், அதன் ஆதரவு சக்திகளும் பல பத்தாயிரம் மக்களை படுகொலை செய்து நிறைவுக்கு கொண்டு வந்த போரின் மூலம் ஒரு இனத்தை அடிமைப்படுத்தியதை எவ்வாறு கொண்டாடினார்கள் என்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பி…
-
- 0 replies
- 364 views
-
-
நிலைமாறுகால நீதியை நிலைநாட்டுவதிலுள்ள சவால்கள் ! 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்ததையடுத்து, யுத்த காலத்தில் இடம்பெற்ற விடயங்கள் சம்பந்தமாக வகைப்பொறுப்பு கூறுவதற்கும் அத்துடன் நல்லிணக்கத்தை தோற்றுவிப்பதற்கும் ஏற்புடைய பிரச்சினைகளை இலங்கைக்குள்ளேயே தீர்க்குமாறு இலங்கை உந்தப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு இலங்கையின் இணை அனுசரணையுடன் கொண்டுவரப்பட்ட ஜெனிவா பிரேரணையானது உண்மை, நீதி, இழப்பீடு செய்தல் மற்றும் மீள் நிகழாமை போன்றவற்றை நோக்கிய அர்த்தபுஷ்டி மிக்க முதலாவது படிமுறையை தோற்றுவித்தது. இந்தப்பிரேரணையின் கீழ், உண்மை மற்றும் நல்லிணக்கம் பற்றிய ஆணைக்குழு, காணாமற் போன ஆட்களைப்…
-
- 0 replies
- 1.5k views
-
-
சிங்கள தேசம் இனியாவது தந்தை செல்வாவை புரிந்துகொள்ளுமா? இன்றைக்கு தந்தை செல்வாவின் நினைவுநாள். தந்தை செல்வா காலமாகி முப்பத்தொன்பது வருடங்கள் ஆகிவிட்டது. 1977 ஏப்ரல் 26 அன்று தந்தை செல்வா காலமானார். இன்னும் ஒரு வருடத்தில் அவர் இறந்து நான்கு தசாப்தங்கள். தந்தை செல்வா என்று ஈழத் தமிழ் மக்களால் அழைக்கப்படும் சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் ஒரு அரசியல்வாதி மாத்திரமல்ல. அவர் பிரசித்தமான ஒரு வழக்கறிஞரும் ஆவார். யாழ்ப்பாணம் தொல்புரத்தை பூர்வீகமாகக் கொண்ட செல்வநாயகத்தின் தந்தை ஒரு ஆசிரியராக இருந்து பின்னர் மலேசியாவுக்கு புலம்பெயர்ந்த காலத்தில் தந்தை செல்வா மலேசியாவின் ஈப்போ நகரில் பிறந்தார். அகில இலங்கை காங்கி…
-
- 0 replies
- 478 views
-
-
அரசியலமைப்புச் சீர்திருத்தக் குளறுபடி http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-04-30#page-11
-
- 0 replies
- 300 views
-
-
பூத்துச் சிரிக்கின்றது வறட்சி காலமை ஆறு மணிக்குத் தண்ணி வரும். எட்டு மணி வரைக்கும் ஓடும். அதுக்குள்ள இந்த பைப்புக்குரிய அம்பது, அறுவது குடும்பங்களும் தங்களுக்குத் தங்களுக்குத் தண்ணி எடுத்திர வேணும். ஆளாளுக்கு நம்பர் படிதான் தண்ணி. ஒண்டிரெண்டு பெரிய குடும்பகாரர், கூட்டுக்குடும்பகாரருக்கு ரெண்டு, நம்பர் இருக்கு. மிச்ச முழுப் பேருக்கும் ஒரு நம்பர்தான்… இண்டைக்கு இரு பத்தஞ்சாம் நம்பர்காரர் வரைக்கும் தண்ணி ஓடிச்சென்டால், நாளைக்கு இருபத்தாறாம் நம்பரிலயிருந்து எடுப்பினம். மழை பெய்ஞ்ச கொஞ்சக் காலத்துக்கு எல்லாரும் எடுக்கிற அளவுக்கு வேகமா ஓடுற தண்ணி, வெயில் காலம் வந்தால் குறையுறது வழமைதான்… ஆனா இந்த முறை என்னடா எண்டால் தண்…
-
- 0 replies
- 484 views
-
-
யுத்தவெற்றியைச் சாப்பிட முடியாது? நிலாந்தன். January 9, 2022 புதிய ஆண்டு பிறந்த பொழுது நாட்டில் ஏழைகளின் வீடுகளில் பால் தேநீர் இருக்கவில்லை. இனி தேனீர்க் கடைகளில் பால் தேனீரை விற்க முடியாது என்று தேநீர்க் கடைகளின் சங்கத் தலைவர் அண்மையில் தெரிவித்திருந்தார். சாதாரண தேநீர் கடைகளில் மட்டுமில்லை நட்சத்திர அந்தஸ்துள்ள உல்லாச விடுதிகளிலும் பால் தேநீர் தட்டுப்பாடாக இருப்பதாக தெரிகிறது. ஒரு சிறிய அங்கர் பெட்டி வாங்குவது என்றால் அதோடு சேர்த்து நான்கு அல்லது ஆறு அங்கர் யோக்கட்களையும் வாங்குமாறு வர்த்தககர்கள் வற்புறுத்துகிறார்கள். அங்கர் கொம்பனிதான் அவ்வாறு விற்குமாறு அறிவுறுத்தல் வழங்கியதாக அவர்கள் கூறுகிறார்கள். ஒரு பெட்டி அங்கருக்காக எந்த வ…
-
- 0 replies
- 519 views
-