அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9211 topics in this forum
-
தடைகளை தாண்டுமா ’21’? | அகிலன் June 1, 2022 அரசியலமைப்புக்கான 21 ஆவது திருத்தம் அமைச்சரவையில் கடந்த திங்கட்கிழமை முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அதனை நிறைவேற்றிக் கொள்வதற்கும் அதற்குத் தேவையான நகர்வுகளை முன்னெடுப்பதற்கும் அமைச்சரவை பிரதமருக்கு அனுமதி வழங்கியிருக்கின்றது. வெள்ளிக்கிழமை இதனை அனைத்துக்கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் முன்வைத்து அவர்களுடைய ஆலோசனையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கேட்டிருந்தார். அமைச்சரவையின் அங்கீகாரம் இதற்குக் கிடைத்திருந்தாலும், அது தாண்டிச்செல்ல வேண்டிய தடைகள் பல உள்ளன. குறிப்பாக பாராளுமன்றத்தில் அதிக ஆசனங்களைத் தம்வசம் வைத்துள்ள பொதுஜன பெரமுன இதனை ஆதரிக்குமா என்பது முக்கிய கேள்வியாக உள்ளது. காரணம் 21 ஆவது திருத்தம…
-
- 0 replies
- 258 views
-
-
தமிழரசுக் கட்சி: 75 ஆண்டுகள் ? – நிலாந்தன் adminDecember 22, 2024 தமிழரசுக் கட்சிக்கு 75 வயது. கடந்த புதன்கிழமை அதை விமரிசையாகக் கொண்டாட முடியவில்லை என்று அதன் தொண்டர்கள் சிலர் கவலைப்பட்டுக் கொண்டார்கள். ஏன் கொண்டாட முடியவில்லை? 75 ஆண்டுகள் எனப்படுவது ஒரு மனிதனின் முழு அயுளுக்குக் கிட்டவரும். இந்த 75ஆண்டு காலப்பகுதிக்குள் தமிழரசுக் கட்சி சாதித்தவை எவை? சாதிக்காதவை எவை ? இப்பொழுதுள்ள தமிழ்த்தேசியக் கட்சிகளில் பெரிய கட்சி அது. நாடாளுமன்றத்தில் அதிக ஆசனங்களை வென்றிருக்கும் கட்சியும் அது. ஒரு விதத்தில் தாங்களே தலைமை சக்தி என்ற பொருள்பட சுமந்திரன் கூறிக்கொள்வார். கடந்த 15 ஆண்டுகளாக தமிழ்மக்களின் அரசியல் தலைவிதியை தீர்மானிக்கும் முடிவுகளை எடுக்கும் பொறு…
-
- 0 replies
- 257 views
-
-
காஸாவின் குழந்தைகள் sudumanal Thanks: Aljazeera கடந்த சில மாதங்களாக எனது கைபேசித் திரையை பார்த்துக் கொண்டிருக்கிறேன். அந்தக் காட்சிகள் எனது வாழ்நாளின் எல்லைவரை என்னை துரத்தித் துரத்தி வேட்டையாடிக் கொண்டே இருக்கப் போகின்றன. காஸாவின் சிறிசுகள், பச்சைக் குழந்தைகள் திரையில் வரும் காட்சிகளைத்தான் குறிப்பிடுகிறேன். மரணித்தவர்கள், காயம்பட்டவர்கள், பசியால் உயிர்பிரிந்து கொண்டிருப்பவர்கள் என்பதான காட்சிகள் அவை. காயம்பட்ட குழந்தைகள் வலியால் கதறுகிறார்கள். தமக்கு பாதுகாப்பாயிருக்கிற தமது அப்பாக்களுக்காக அம்மாக்களுக்காக சகோதரங்களுக்காக என தமது குடும்ப உறவுகளுக்காகவும் சேர்த்து அவர்கள் அச்சப்படுகிறார்கள். குண்டு வீசும் விமானத்தின் பயங்கரம் ஒரு சிறுவனை அதிர்ச்சியில் உறைய வைக்கிறது. வ…
-
- 0 replies
- 257 views
-
-
இந்து சமுத்திரத்தில் ஒரு கண்ணீர் துளி! ___________________ ஞானேஷ்வர் தயாள் ___________________ இலங்கை பல வருடங்களாக ஒரு நெருக்கடியிலிருந்து மற்றொரு பெருந்தோல்வி நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது. அனைவரையும் உள்ளீர்த்துக்கொள்ளாத அதன் சித்தாந்தமே இதற்குக் காரணம் . சரியான நேரத்தில் இந்தியா பாடம் கற்பது நல்லது. இலங்கையின் துயரங்கள் தமிழர்களை அந்நியப்படுத்தவும் அவர்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கவும் தொடங்கியதிலிருந்து ஆரம்பித்தது. 26 ஆண்டுகால உள்நாட்டுப் போரில் சிங்கள அரசு விடுதலைப் புலிகளை தோற்கடித்தது. அப்பட்டமான போர்க்குற்றங்களால் தமிழ் மக்கள…
-
- 0 replies
- 257 views
-
-
அநுரகுமார முன்னிலையில் 13 வது திருத்தம் பற்றி பேசாமல் மோடி இலங்கை தமிழர்களுக்கு கூறிய செய்தி? December 23, 2024 — வீரகத்தி தனபாலசிங்கம் — ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்க கடந்த வாரம் இந்தியாவுக்கு மேற்கொண்ட விஜயம் கடந்த வருடம் அன்றைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்ட இந்திய விஜயத்தில் இருந்து எந்த அடிப்படையில் வேறுபடுகிறது? இலங்கையின் ஜனாதிபதிகள் பதவியேற்ற பிறகு தங்களது முதலாவது உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயமாக புதுடில்லிக்கு செல்வது ஒரு சம்பிரதாயமாக இருந்துவருகிறது. அதன் பிரகாரம் திசாநாயக்கவும் இந்தியாவுக்கு சென்று வந்திருக்கிறார். மூன்றாவது தடைவையாக இந்தியாவின் பிரதமர் பதவியை வகிக்கும் நரேந்திர மோடி இரு நாடுகளுக்கும் இடையிலான உ…
-
- 0 replies
- 257 views
-
-
ஏமாற்றி விட்டதா அமெரிக்கா?Aug 30, 2015 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகியதும், ஜெனிவா களம் குறித்த கலக்கத்துடன் காத்திருந்த இலங்கை அரசாங்கத்துக்கு, ஆறுதல் அளிக்கும் செய்தியோடு வந்திறங்கியிருந்தார் தெற்கு, மத்திய ஆசியாவுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால். இந்த ஆண்டில் – இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர், அவர் மேற்கொண்ட மூன்றாவது பயணம் இது. கடந்த ஜனவரியில் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி தேர்தலில் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து, பெப்ரவரி 2ஆம் திகதி கொழும்பு வந்திருந்தார் நிஷா பிஸ்வால். அந்தப் பயணத்தின் போது, அவர் கொழும்புக்கு ஒரு புதிய சமிக்ஞையைக் காட்டி விட்டுச் சென்றிருந்தார். மார்ச் மாதம் நடந்த ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 29ஆவது அமர்வ…
-
- 0 replies
- 257 views
-
-
புத்தாண்டில் இலங்கைக்கு மனமாற்றம் தேவை மக்கள் இன்று மௌனமாக இருக்கலாம் ஆனால் அவர்கள் அறியாதவர்கள் அல்ல மேலும் பல பேரரசுகளும் (மற்றும் அரசாங்கங்களும்) தண்டனைவிலக்கீடும் ஊழலும் எல்லை மீறிச்செல்லும்போது வீழ்ச்சியடைந்துள்ளன. 00000000000 எரிவாயு சிலிண்டர்கள் வெடித்துச் சிதறும் விவகாரத்தை சாதாரணமாக பார்ப்பது தண்டனைவிலக்கீட்டிற்கு மற்றொரு உதாரணம். கடந்த சில மாதங்களில் மக்கள் தங்கள் சமையல் தேவைக்காக பயன்படுத்திய 800 எரிவாயு சிலிண்டர்கள் வெடித்து சிதறியுள்ளன. மூன்று சிறு பிள்ளைகளின் தாய் உட்பட குறைந்தது ஏழு பேர் பலியாகியுள்ளனர் 000000000000000000 ஜெஹான் பெரேரா 00000000000000000 நாட்டை சீரமைப்பதற்கு சில வருடங்கள் இலங்கை இராணுவத்தினர் தேசத்தை …
-
- 0 replies
- 256 views
-
-
ஏன் மீண்டும் 13வது திருத்தச்சட்டம் பேசுபொருளானது? - யதீந்திரா 13வது திருத்தச்சட்டம் தொடர்பில் பேசுவது தொடர்பில் பலவாறான அபிப்பிராயங்கள் கூறப்படுகின்றது. இன்றைய அரசியல் நிலைமைகளை புரிந்துகொண்டவர்கள் இதனை சரியென்று கூறுகின்றனர். தொடர்ந்தும் இப்படியே சென்றால் நிலைமைகள் மோசமடைந்துவிடும் – எனவே ஏதாவதொரு புள்ளியில் நாம் சந்திக்க வேண்டும். ஆனால், நிலைமைகளை புரிந்துகொள்ள மறுப்பவர்களோ அல்லது, புரிந்து கொள்ள விரும்பாதவர்களோ வேறு விதமாக பேசுகின்றனர். இவர்கள் இந்தியாவின் நிகழ்சிநிரலை முன்னெடுக்க விரும்புகின்றனர் – இது ஒரு சாராரின் கருத்து. இவர்கள் தமிழ் மக்களின் சமஸ்டிக் கோரிக்கையை திட்டமிட்டு பலவீனப்படுத்துகின…
-
- 0 replies
- 256 views
-
-
வட–கிழக்கில் தமிழர்களை ஒடுக்கும் வகையான இராணுவ கட்டமைப்புகள் கலைக்கப்பட வேண்டும் – கஜேந்திரகுமார் இன்றைய நெருக்கடியிலிருந்து மீள இராணுவச் செலவினங்கள் குறைக்கப்பட்டேயாக வேண்டும். இதனை ஓர் முன்நிபந்தனையாக வைக்குமாறு சர்வதேச நாணய நிதியத்திடம் நாம் வேண்டுகோள் விடுப்போம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைவா் கஜேந்திரகுமார் எம்.பி. தெரிவித்தார். வடக்கு – கிழக்கில் வாழும் தமிழர்களின் மீதான ஒடுக்குமுறையாளராகச் செயற்படும் இராணுவக் கட்டமைப்புகள் கலைக்கப்பட வேண்டும். தமிழர்களினதும், முஸ்லிம்களினதும் அச்சத்தை நீக்குவதற்கு ஆட்சியாளர்கள் முயல்வார்களேயானால் நிச்சயமாக பாதுகாப்புச் …
-
- 0 replies
- 256 views
-
-
மனிதாபிமானத்தின் எழுச்சியும்திசை திருப்பும் முயற்சியும் -செல்வரட்னம் சிறிதரன் யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் அநீதியான முறையில் யாழ் பல்கலைக்கழக மாணவர்களான சுலக்ஷனும், கஜனும் கொலை செய்யப்பட்டிருக்கின்றனர். இதன் காரணமாகத்தான் இந்தப் படுகொலையைப் பலரும் கண்டித்திருக்கின்றனர். அது மட்டுமல்லாமல், இன, மத, அந்தஸ்து, பிரதேச பேதமின்றி நாடெங்கிலும் மாணவர் சமூகம் கிளர்ந்தெழுந்து நீதி கோரி குரல் எழுப்பியிருக்கின்றது. அநீதிக்கு எதிரான இந்த ஆவேசம் வரவேற்கத்தக்கது. ஊக்குவிக்கப்பட வேண்டியதாகும். இப்போதுதான் முதன் முறையாக இத்தகைய எழுச்சி ஏற்பட்டிருக்…
-
- 0 replies
- 256 views
-
-
இலங்கைக்கு தேவை ஒரு ஒபாமாவோ சுனாக்கோ அல்ல! Veeragathy Thanabalasingham on November 9, 2022 Photo, GROUNDVIEWS எப்போதுமே பாரம்பரிய நடைமுறைகளைப் பற்றிப்பிடித்துக்கொண்டிருக்கின்ற பிரிட்டனில் பழமைவாத சிந்தனைகளைக் கொண்டதாகக் கருதப்படும் கன்சர்வேட்டிவ் கட்சி இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனாக்கை பிரதமராக தெரிவுசெய்தமை புதிய காற்றைச் சுவாசிப்பது போன்று இருப்பதாகவும் ஒவ்வொரு குடிமகனும் சமத்துவமான உரிமைகளைக் கொண்டிருப்பதற்கும் இனம், நிறம் மற்றும் மதம் எல்லாவற்றையும் கடந்து அரசியல் உயர் பதவிகளுக்கு வருவதற்கு சமத்துவமான வாய்ப்புக்களைக் கொண்டிருப்பதற்கும் ஏனைய உலக நாடுகளுக்கு இது ஒரு பிரகாசமான உதாரணமாக இருப்பதாகவும் அரசிய…
-
- 1 reply
- 256 views
-
-
கோட்டாபயவின் வருகையும் ராஜபக்சாக்களின் எதிர்கால அரசியலும் September 10, 2022 —- ஸ்பார்ட்டகஸ் —- இலங்கையின் வரலாறு காணாத மக்கள் கிளர்ச்சிக்கு மத்தியில் கடந்த ஜூலை 13 நாட்டைவிட்டு தப்பியோடிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சரியாக 50 நாட்களுக்கு பிறகு கடந்த வெள்ளிக்கிழமை (செப்.2) இரவு திரும்பிவந்திருக்கிறார். தவறான ஆட்சியைச் செய்த அவரை மக்கள் ‘வீட்டுக்கு போ’ என்றுதான் கேட்டார்கள்; நாட்டைவிட்டு போகுமாறு கேட்கவில்லை. ஆனால், போருக்கு முடிவுகட்டி மக்களை பாதுகாப்பாக வாழ வழிவகுத்ததாக எப்போதும் பெருமையுடன் உரிமை கோரும் அவர் நாட்டில் இருப்பது தனக்கு பாதுகாப்பு இல்லையென்று உணர்ந்து நாட்டில் இருந்து வெளியேறினார். முதலில் மாலைதீவுக்கும் பிறகு சிங…
-
- 0 replies
- 256 views
-
-
-
Courtesy: தீபச்செல்வன் ஜேவிபி (JVP) எனப்படும் மக்கள் விடுதலை முன்னணி தற்போது இங்கையின் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலின் வாயிலாக அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) வெற்றி பெற்றுள்ளார். இந்த நிலையில் மக்கள் விடுதலை முன்னணி வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைக்கு உருப்படியான தீர்வு ஒன்றை முன்வைக்குமா? என்ற பேச்சுகள் ஒருபுறத்தில் எழுந்துள்ளன. அதேவேளை மக்கள் விடுதலை முன்னணி தற்போது தேசிய மக்கள் சக்தி என்ற கட்சியின் பெயரில் செயற்பட்டு வருகின்றது. எனினும் அது பெயரளவிலான மாற்றம் மாத்திரமே என்பதை மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ள கருத்து தெளிவுபடுத்தி நிற்கிறது. இந்த நிலையில் இந்த நாள் (16.10…
-
- 0 replies
- 256 views
- 1 follower
-
-
கறுப்பு ஜூலையை விடவும் பெரிய வெட்கக்கேடு! July 23, 2025 — வீரகத்தி தனபாலசிங்கம் — இலங்கையில் இனங்களுக்கு இடையிலான உறவுகளைப் பொறுத்தவரை, ஒரு எல்லைக்கோடாக அமைந்த 1983 ஜூலை இனவன்செயல்களுக்கு பிறகு சரியாக 42 வருடங்கள் உருண்டோடி விட்டன. ஒரு வாரத்துக்கு மேலாக தலை விரித்தாடிய வன்செயல்களின் கொடூரம், அதனால் நேர்ந்த உயிரிழப்புகள், சொத்து அழிவுகளுக்கு அப்பால் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட வேதனை அதிர்ச்சியும் உளவியல் தாக்கமும் கணிப்பிடமுடியாதவை. 1983 ஜூலை 22 வெள்ளிக்கிழமை இரவு யாழ்ப்பாணக் குடாநாட்டில் திருநெல்வேலியில் விடுதலை புலிகள் நடத்திய கெரில்லாத் தாக்குதலில் 13 இலங்கை இராணுவத்தினர் பலியான சம்பவம் அன்றைய ஜெயவர்தன அரசாங்கத்திற்குள் ஆதிக்கம் செலுத்திய சிங்கள இனவாதச் சக்திக…
-
- 1 reply
- 256 views
- 1 follower
-
-
இம்முறையும் ஏமாற்றிவிடவேண்டாம் ரொபட் அன்டனி புதிய அரசியலமைப்பு விவகாரத்தில் தற்போது ஏற்பட்டுள்ள முரண்பாட்டு நிலை மையை காரணம் காட்டி தமிழ் பேசும் மக் களுக்கான தீர்வுத் திட்டத்தை குழப்பியடித்து விடக்கூடாது. மக்களுக்கான நீதி மற்றும் ஏனைய பிரச்சினைகள் ஒருபுறம் இருக்கையில் நீண்ட கால விவகாரமான அரசியல் தீர்வு செயற் பாட்டில் அனைத்து தரப்பினரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். சுய அரசியல் இலாபங்களை நோக்காக கொண்டு புதிய அரசியலமைப்பு விடயத்திலும் தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வு விடயத்திலும் எந்தவொரு தரப்பும் செயற்பட்டு விடக்கூடாது நாட்டின் அரசியல் நகர்வுகள் மற்றும் அரசியல் கட்ச…
-
- 0 replies
- 256 views
-
-
– நவீனன் (சிறிலங்காவில் இனப் பிரச்சினைக்கு அடிப்படை காரணம் மொழி வெறி என்பது தான் அடிப்படைக் காரணம் என்றாலும், தற்போது ஆளும் அனுர அரசும் சிங்கள மொழிக்கே தொடர்ந்தும் முன்னுரிமை கொடுத்து வருகிறது) தமிழர் தாயகத்தில் உள்ள நிர்வாக கட்டமைப்புகளை மிக மிக தீவிரமாக தற்போதய அனுர அரசும் திட்டமிட்டு சிங்கள மயப்படுத்தி வருகின்றது. அதன் ஒரு வெளிப்பாடாகவே இந்தியப் பிரதமர் மோடியின் வருகையின் போது தமிழ் மொழி முழுமையாக புறக்கணிக்கப்பட்டது.1956 ம் ஆண்டில் எஸ்.டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கவின் தனிச்சிங்கள சட்டமே ஈழத்தில் நீண்ட காலமாக நடக்கும் இனப் போராட்டத்தின் மூல காரணி என்பதை இந்த அரசும் மறந்து போய்விட்டது போல தோன்றுகிறது. மோடிக்கு தமிழில் வரவேற்பு இல்லை: இந்தியப் பிரதமர் இலங்கைக்கு ஏப்ரல்…
-
- 0 replies
- 255 views
- 1 follower
-
-
வடக்கு, கிழக்கில் முதலீடுகளின் அவசியத்தை வலியுறுத்திய சம்பந்தன் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கையின் பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்புவதன் அவசியம் குறித்து தற்போது வலியுறுத்தப்பட்டு வருகின்றது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் சர்வதேசத்தின் ஒத்துழைப்புடன் இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். இந்த நிலையில் யுத்தத்தினால் முற்றுமுழுதாக அழிவடைந்த வடக்கு, கிழக்கில் முதலீடுகளை அதிகரிக்கவேண்டியதன் அவசியம் குறித்து எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் இலங்கை வந்திருந்த சிங்கப்பூர் ப…
-
- 0 replies
- 255 views
-
-
சர்வதேச உறவுகளில் செல்வாக்கு செலுத்தும் பயங்கரவாத, குற்றவியல் செயல்பாடுகள் பயங்கரவாத அமைப்புகளின் செயல்பாடுகள் கொள்கை வகுப்பாளர்களுக்கும் ஒட்டுமொத்த சர்வதேச சமூகத்திற்கும் தொடர்ந்து தடைகளை முன்வைக்கின்றன. 2001 ஆம் ஆண்டு 9/11 தாக்குதல்கள், சர்வதேச பாதுகாப்பு மற்றும் உலகளாவிய, பிராந்திய மற்றும் உள்ளூர் அரசியல் ஒழுங்குகளை மறுவடிவமைக்க விரும்பும் அரசு சாரா செயல்பாட்டாளர்களின் திறன் மற்றும் அணுகல் பற்றிய சொற்பொழிவுகள் நாடுகடந்த மற்றும் இஸ்லாமிய பயங்கரவாதத்தை முன்னணியில் வைத்தது. பயங்கரவாத உத்திகள், உந்துதல்கள் மற்றும் நிதியளிப்பு வழிமுறைகள் காலப்போக்கில் மாறி, மோதல் சூழல்களில் வேறுபடுகின்றன. பனிப்போரின் விளைவாக மொஸ்கோ மற்றும் வோஷிங்டன் இரண்டும் மற்ற வல்லரசுகளை…
-
- 0 replies
- 255 views
-
-
சமாதானம் உருவாகுமா? sudumanal மாறிவரும் பூகோள அரசியல் THanks for image: Aljazeera தான் ஆட்சிக்கு வந்து 24 மணி நேரத்திற்குள் உக்ரைன்-ரசியா போரை சமாதானம் மூலம் முடிவுக்கு கொண்டுவருவேன் என ட்றம்ப் தேர்தலுக்கு முன் கூறிவந்தார். அது அவளவு இலகுவில் முடியாமல் போனது. ஏன், இப்போதும் அது சாத்தியமற்றது என்பதிலிருந்து சாத்தியமானது என்ற எல்லைக்கள் வந்தபாடில்லை. அமெரிக்காவுக்கும் ரசியாவுக்கும் இடையிலான நிழல்யுத்தம் என பலரும் நினைத்திருந்தார்கள். அது உண்மையில் நேற்றோவுக்கும் ரசியாவுக்கும் இடையிலான நிழல்யுத்தம் என்ற வியாபகத்தைக் கொண்டது. அதிலும் குறிப்பாக அமெரிக்காவுக்கான அச்சுறுத்தலாக ரசியா இருக்கிறது என அமெரிக்காவால் ஒருபோதும் பர்க்கப்படவில்லை. மாறாக ஐரோப்பாவிற்கான பாதுகாப்பு அச்சுறுத…
-
- 0 replies
- 255 views
-
-
ஊழல், இலஞ்ச முறைகேடுகளை அகற்றுவதில் தேசிய மக்கள் சக்தியால் எவ்வளவு தூரம் செல்ல முடியும்? கந்தையா அருந்தவபாலன் ஊழல், இலஞ்சம் போன்ற சொற்களை நாம் கருத்து வேறுபாடின்றி பொதுவாகப் பயன்படுத்தினாலும் இரண்டும் ஒன்றல்ல. ஒருவரின் தீர்மானம் அல்லது செயல் மீது செல்வாக்குச் செலுத்தும் வகையில் சட்டமுரணாக அல்லது நெறிபிறழ்வாக ஏதாவது பெறுமதியொன்றை வழங்குதல் அல்லது பெறுதல் ஊழல் எனப்படும். உதாரணமாக ஒப்பந்தம் ஒன்றைப் பெறுவதற்காக அதனைத் தீர்மானிப்பவருக்கு பணம் கொடுப்பது ஊழல் எனப்படும். ஆனால் இலஞ்சம் என்பது சட்டமுரணாக அல்லது நெறிபிறழ்வாக ஒருவர் தனது பதவியை அல்லது அதிகாரத்தைப் பயன்படுத்தி பெறுவது அல்லது தனிப்பட்ட ரீதியில் நன்மையடைவதாகும். உதாரணமாக ஒரு பணியாளரை நியமிப்பதற்கு அல்லது இ…
-
- 0 replies
- 255 views
-
-
ராஜபக்சாக்களுக்கு அதிகாரம் தேவை ; மக்களுக்கு ராஜபக்சாக்கள் தேவையா ? 13 OCT, 2022 | 07:20 AM ராஜபக்ச குடும்பத்துக்கு இலங்கை மக்களின் குறிப்பாக சிங்கள மக்களின் வேறு எந்த குணாதிசயத்தை விடவும் அவர்களது மறதியில் மிகவும் கூடுதல் நம்பிக்கை இருக்கிறது போலும். சுதந்திர இலங்கையின் வரலாறு காணாத படுமோசமான பொருளாதார நெருக்கடிக்கு காரணமான தவறான ஆட்சிமுறைக்கு எதிராக கிளர்ந்தெழுந்த மக்கள் தங்களை ஆட்சியதிகாரத்தில் இருந்து விரட்டியடித்தார்கள் என்பதையெல்லாம் பற்றி கொஞ்சமேனும் சிந்திக்காமல் ராஜபக்சாக்கள் மீண்டும் அரசியலில் செல்வாக்கான நிலைக்கு வரமுடியும் என்ற நம்பிக்கைகொண்டவர்களாக தங்களை மீள அணிதிரட்டிக்கொண்டு மக்கள் முன்னிலையில் வர ஆரம்பித்…
-
- 0 replies
- 255 views
- 1 follower
-
-
ஏகேடிக்கு செம்மணி குறித்து ஒரு வார்த்தை; செவிமடுக்கவும் செயற்படவும் துணிச்சல் உள்ள ஒருவருக்காக நிலத்திற்கடியில் குரல்கள் காத்திருக்கின்றன Published By: RAJEEBAN 04 JUL, 2025 | 03:09 PM யாழ்ப்பாணம் செம்மணியில் பள்ளிக்கு பெற்றோர்களுடன் சென்ற சிறுவர் சிறுமிகள் கொலைசெய்து புதைக்கப்பட்ட மனித புதைகுழி(அதிக அளவில் புதைக்கப்பட்ட சடலங்கள்) சம்பவம் வெளிவந்த சில நாட்களுக்குப் பிறகு கெஸ்பேவவில் உள்ள அவரது வீட்டில் காமினி லொக்குகே இயற்கை மரணமடைந்தார். குற்றவாளிகளை தண்டிக்கும் சட்ட அமைப்பை அமல்படுத்த முடியாமல் போன நாம் வாழும் இந்த சிங்கள பௌத்த சமூகம் காமினி லொக்குகே தலைமையிலான செம்மணி மனிதபுதைகுழிக்கு முன்பும் பிறகும் வடக்கிலும் தெற்கிலும் காணப்படும் மனித புதைகுழிகளிற்கு காரணமானவர்க…
-
- 0 replies
- 255 views
- 1 follower
-
-
எதிர்காலத்தை உள்ளூராட்சி தேர்தல்களுக்கு பணயம் வைத்திருக்கும் தமிழ் அரசியல் கட்சிகள் April 20, 2025 — வீரகத்தி தனபாலசிங்கம் — இலங்கை அரசியல் வரலாற்றில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சகல தமிழ் அரசியல் கட்சிகளும் முன்னென்றும் இல்லாத வகையில் அவற்றின் எதிர்காலத்தை உறுதி செய்வதற்காக சிங்கள தலைமைத்துவத்தைக் கொண்ட தேசிய கட்சி ஒன்றுக்கு எதிராக மிகவும் உக்கிரமான பிரச்சாரங்களை முன்னெடுக்கின்ற ஒரு தேர்தலாக எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தல்கள் அமைந்திருக்கின்றன. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சில வாரங்களுக்கு முன்னர் ‘தி இந்து’ பத்திரிகையின் கொழும்பு செய்தியாளர் மீரா ஸ்ரீனிவாசனுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்த கருத்துக்களின…
-
- 0 replies
- 255 views
-
-
சர்வதேச விசாரணையைத் தடுக்கவே தேசிய அரசு அமைக்கப்பட்டுள்ளது ரணிலின் நரி மூளையும் மைத்திரியின் யானை மூளையும் சேர்ந்து இலங்கையில் தேசிய அரசை நிறுவியுள்ளது. தேசிய அரசு அமைக்கப்பட்டதும் அதனை முதலில் வரவேற்றவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக் என்பதை இங்கு நோக்குதல் அவசியம். தேசிய அரசை அமைத்ததன் மூலம் மகிந்த ராஜபக்வின் நெருங்கிய ஆதரவாளர்களாக இருந்த முன்னாள் அமைச்சர்களுக்கு அமைச்சுப் பதவி கிடைத்துள்ளது. அதேநேரம் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருக்கிறார். ஆக, மைத்திரி ஜனாதிபதி; ரணில் பிரதமர்; ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சார்ந்தவர்கள் அமைச்சர்கள் என்ற வகையில் எதிர்க் கட்சி இல்லை என்பதாகப் பாராளுமன்ற நிலைமை மாற்றப்பட்டுள்ள…
-
- 0 replies
- 255 views
-