அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9210 topics in this forum
-
http://www.youtube.com/watch?v=1lGR-vbNXCk&feature=player_embedded#at=480
-
- 3 replies
- 1.6k views
- 1 follower
-
-
தமிழ்நாடு தேர்தல் முடிவு ஈழத்தமிழருக்கு சாதகமாக அமையுமா? தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான போது, பெரும்பாலானவர்களை அது ஆச்சரியப்பட வைத்ததா அல்லது அதிர்ச்சியடைய வைத்ததா என்று கூறமுடியாது. அந்தளவுக்கு கணிப்புகளையும் எதிர்பார்ப்புகளையும் பொய்யாக்கியுள்ளது தேர்தல் முடிவு. தமிழ்நாட்டை ஆட்சி செய்த கருணாநிதி தலைமையிலான திமுகவுக்கு இப்படியொரு தோல்வியை எவரும் எதிர்பார்க்கவும் இல்லை. அதிமுகவுக்கு இப்படியொரு வெற்றி கிடைக்கும் என்று எவரும் எதிர்பார்க்கவும் இல்லை. உண்மையில் சொல்லப் போனால் இந்த வெற்றியை ஜெயலலிதா கூட எதிர்பார்த்திருக்கமாட்டார். அதுபோல கருணாநிதி இதுபோன்ற தோல்வியையும் எதிர்பார்த்திருக்கமாட்டார். அந்தளவுக்கு இது எதிர்பாராத முடிவைத் தந்துள்ளது. அதி…
-
- 0 replies
- 779 views
-
-
அமெரிக்காவினால் தேடப்பட்டுவந்த அல்-கொய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்கா உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. யார் இந்த ஒசாமா? பிறப்பு: 1957,சவுதி அரேபிய கட்டிட நிர்மாணியின் மகன் குடும்பத்தில் 57 பிள்ளைகள். அதில் ஒசாமா பின்லேடன் 17 ஆவது பிள்ளை. பதின்மூன்றாவது வயதில் அவரது தந்தையை இழந்தார். 17ஆவது வயதில் சிரியன் கெசினை மணந்தார். 1979 -சோவியத் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு மற்றும் ஆப்கான் தலைவர்களை பாகிஸ்தானில் வைத்து சந்தித்தார், பின்னர் ஆப்கானுக்காக நிதித் திரட்டும் பொருட்டு சவூதி அரேபியாவுக்குச் சென்றார். 1984 -தனது உல்லாச விடுதியை அமைத்து, (பாகிஸ்தான் எல்லை) அங்கிருந்து தன் கண்காணிப்புகளை ஆரம்பித்தார். ஆப்கானில் தனது முகாம்கள…
-
- 0 replies
- 1.2k views
-
-
அந்தப் புகைப்படங்களை பார்த்தபோது மனது நொருங்கிப்போவது உண்மைதான். அந்த சதுப்பு நிலத்தின் ஆழம் குறைந்த நீருக்குள்ளாக எமக்காக போராடிய வீரர்களின் உயிரற்ற உடல்களின் கால்களை பிடித்து சிங்களராணுவத்தினர் இழுத்து வரும் காட்சியை புகைப்படத்தில் காணும்போது இதயம் சுக்குநூறாக வெடிப்பது போலவே இருக்கிறது. கண்கள் திறந்தபடியும், குத்திட்டபடியும் நிலைத்த பார்வையுடன் எமது விடுதலைப் போராளிகளின் உடல்கள் அந்தப் புகைப்படத் தொகுப்பில் நிறைந்து கிடந்தன. அந்தக் காட்சிகள் எளிதில் மனதைவிட்டு போகப்போவதில்லை. இன்னும் மிக நீண்டகாலத்துக்கு எப்படி.. ஏன்.. யாரால்… இப்படி நிகழ்ந்தேறியது என்ற கேள்வி அந்தப் புகைப்படங்களை பார்ப்பவர்களின் மனதை போட்டு பிசைந்து பிசைந்து மன உறுதியை உடைத்தெறிந்து தூளாக்கிவிடு…
-
- 0 replies
- 1.1k views
-
-
வரலாற்றுப் பிழையை திருத்துமா இந்தியா ? 2009-ம் ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெற்ற ஈழப்படுகொலைகளுக்குப் பின்னர் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல், மே மாதங்கள் கொடுங்கனவுகளைத் தரும் மாதங்களாக மாறிப் போய்விட்டன. மனிதாபிமானம் கொண்ட, ஈர மனம் கொண்ட எவரது நினைவுகளும் அந்த ரத்தத்தில் தோய்ந்துதான் போயிருக்கும். ஈழத்து மகளிரும், குழந்தைகளும், பதுங்கு குழிகளும்தான் கனவுகளின் உருவங்கள். ஈழத்துப்போரில் இந்தியா நடந்து கொண்ட விதமும், மனிதாபிமானமற்ற முறையில் அமைதி காத்த விதமும் நமக்கு எரிச்சலை மட்டுமல்ல, கடுங்கோபத்தையும் ஏற்படுத்தியது. அசோகரின் தர்மச்சக்கரம் பொறிக்கப்பட்ட தேசியக் கொடியை ஏற்றவோ, கொண்டாடவோ நமது ஆட்சியாளர்களுக்கு எவ்வித உரிமையும், அருகதையும் கிடையாது. பிரபாகரனை பழிவாங்குகி…
-
- 1 reply
- 1.1k views
-
-
ஈழத்தமிழராகிய நாம் பல சந்தர்ப்பங்களை தவறவிட்டுள்ளோம். அதாவது நமது அரசியல், சமூக, பொருளாதார விடுதலைக்கான போராட்டம் பலவாய்ப்புக்களினை அறுவடைசெய்யாமலேயே நகர்ந்து வந்திருக்கின்றது. தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் முதிர்ந்த தமிழ் அரசியலாளருமான திரு.இராசம்பந்தன் அவர்களும் எமது இணையத்தளத்திற்கு அண்மையில் வழங்கிய செவ்வியில் இவ்வொத்தகருத்தினையே தெரிவித்திருந்தார். இந்நிலையில், எமது அரசியல் நகர்வுகள் முன்னோக்கியதாக இருக்கின்றதா அல்லது வட்டப்பாதையில் சுற்றிச் சுழன்று கொண்டிருக்கின்றதா என்னும் கேள்விக்கு ஈழத்தமிழ்மக்கள் இன்று வந்தடைந்துள்ள சூழமைவே விடைதருகின்றது. அதாவது குளிர் வலைய தெருக்களில் பனிச் சேற்றில் கால்புதைய, பதாகைகள் தாங்கிய கைகள் கனத்தி…
-
- 2 replies
- 887 views
-
-
காத்திருந்து, காத்திருந்து கடைசியில் இலங்கையின் போர்குற்ற ஐ. நா. மூவர் குழு அறிக்கை முழுதாய் வெளியாகிவிட்டது. ஏதோ புதுப்பட Trailer போல் Isaland பத்திரிக்கை அறிக்கையின் ஓர் பகுதியை கொஞ்சமாய் வெளியிட்டது. இப்போ முழுதாய் பக்கம், பக்கமாய் உயிரை பதறவைக்கிறது. எங்குமே, Bloggers தொடக்கம் சர்வதேச ஊடகங்கள் வரை அலசப்படுகிறது. இந்த அலசல் எல்லாம் துண்டு, துண்டாய் அறிக்கை வெளியானபோதே முடிந்துவிட்டது. ஆனாலும், பயங்கரவாதத்தை வன்மையாக, மிதமாக கண்டிப்பவர்கள் எல்லோருமே ('Counterinsurgency Writers') அல்லது எனது மொழியில் நடுநிலமையாளர்கள் என்று கொள்ளலாமா தெரியவில்லை, அவர்கள் அரசும் புலிகளும் போர்க்குற்றங்கள் செய்ததாக அறிக்கையின் துணை கொண்டு பக்கம், பக்கமாய் விளக்கியுள்ளார்கள். இந்த …
-
- 1 reply
- 1k views
-
-
தமிழீழ விடுதலைப்புலிகளை அழிக்க எடுக்கப்பட்ட இலங்கை அரசின் மிகப் பாரிய ராணுவ நடவடிக்கையில் இருசாராருமே சர்வதேச மனித உரிமை சட்டங்களை மீறியதாகவும், மனிதத்திற்கு எதிரான குற்றங்களை இழைத்ததாகவும் ஐ. நாவின் அறிக்கை சொல்கிறது என்பது தான் கடந்த ஒரு வார காலமாக என் போன்றவர்களின் கவனத்தை, கருத்தை ஈர்த்து வைத்திருக்கிறது. ஒரு விதத்தில் சர்வதேச ஊடகங்கள் கூட இது பற்றி பேசுவது அந்த அறிக்கையை முழுமையாக 196 பக்கங்களையும் வெளியிட வேண்டிய கட்டாயத்தை ஐ. நாவின் செயலர் பாங்கி மூனுக்கு உருவாக்கும் என்பதில் சந்தேகமில்லை. அந்த வகையில் பிரித்தானியாவின் Channel 4 இன் ஈழம் குறித்த செய்திகள் பாராட்டப்பட வேண்டியவையே. எப்போதுமே மாற்றுக்கருத்தை தேடிப்படிப்பதில் ஓர் ஆர்வமும், சுவாரசியமும் இருப்பவ…
-
- 2 replies
- 1.3k views
-
-
அன்புள்ள மகிந்தா மாமாவுக்கு, நான் கடிக்க மிளகாய் எழுதிக்கொள்வது, அவசர அலுவலாக வெளியூர் சென்றிருந்தததால் சில மாதங்களாக அரசியல் அலசல்களில் கலந்துகொள்ள முடியவில்லை. எனினும் தற்போதைய உங்களின் நிலை குறித்து வேதனையடைந்த நான் சில ஆலோசனைகளை கூறிவிடலாம் என நினைக்கின்றேன். எனது ஆலோசனை என்பது உங்களை சுற்றி இருப்பவர்கள் கூறுவதுபோல குரங்குவால் போல் நீண்டு செல்லாது. இந்த பத்தியின் முடிவில் ஒரு வரியில் எனது ஆலோசனை இருக்கும். அதனை பார்த்து உங்கள் எதிர்காலத்தை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள். ஐக்கிய நாடுகள் சபையின் போர்க்குற்ற ஆலோசனைக்குழு சமர்ப்பித்துள்ள அறிக்கையால் நீங்களும், உங்களை சுற்றியுள்ளவர்களும் வெகுவாக ஆடிப்போய்விட்டிர்கள் என்பதை உங்களின் நடவடிக்கைகளில் இருந்து அறிந்…
-
- 2 replies
- 1.7k views
-
-
ஐ.நாவின் நிபுணர் குழுவின் அறிக்கை பற்றிய ஒரு ஆய்வு source:gtn
-
- 0 replies
- 989 views
-
-
அண்மைக்காலங்களில் நிறையவே உள்ளூர் உலக அரசியல் மாற்றங்கள் தடுக்கவோ, தவிர்க்கவோ முடியாததாய் அரங்கேறிக்கொண்டு இருக்கின்றன. மீண்டுமொரு உலகளாவிய பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து மக்கள் கிளர்ச்சி, சர்வாதிகார ஆட்சி கவிழ்ப்பு, ஜனநாயகத்தேர்தல்கள் என்று அநேகமான நாடுகளில் என்னென்னவோ நெருக்கடிகள். எல்லாமே ஏதோவொரு மாற்றத்தை, தீர்வை, விடிவை நோக்கிய நகர்வுகளாய் நிறையவே எதிர்பார்ப்புகளோடு. எல்லோருக்கும் எங்கேயோ இருந்து ஓர் வலுவான ஆதரவும், அதன் முடிவு நோக்கிய பயணமும் தொடர்கிறது. ஈழத்தமிழர்களுக்கும் ஓர் முக்கிய நிகழ்வாக கடந்த 2009 May மாதம் இடம்பெற்றதாக கருத்தப்படும் முள்ளிவாய்க்கால் படுகொலைகள் குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான்-கி-மூன் அமைத்த மூன்று பேர் கொண்ட குழுவின் அறிக்கை …
-
- 2 replies
- 1.6k views
- 1 follower
-
-
முன் அறிவிப்பு: இப் பதிவு பிடிக்காதவர்கள் தயவு செய்து இதனைப் படிக்க வேண்டாம். ஒரு ஈழத் தமிழனாக இருந்து, மனம் விட்டு மன்னிப்புக் கேட்டாலும் இந்தச் செயல்களை ஆற்றுப்படுத்த முடியாது என்ற காரணத்தினால் நான் எங்கள் இழி நிலைகளைப் பதிவாக்க முனைகின்றேன். ஈழத் தமிழன் எனும் அடையாளத்துடன் இப் பதிவினை எழுதுவதால், தமிழக உள்ளங்களிடமிருந்து எதிர்ப்பலைகள் கிளம்பலாம், ஆனாலும் பதிவில் நான் என் கருத்துக்கள் எதனையும் முன் வைக்காது, எங்கள் மக்களின் அனுபவ ரீதியான கருத்துக்களை மட்டுமே முன் வைக்கவுள்ளேன்! உறவுகளே, இப் பதிவில் வரும் விடயங்கள் உங்களைக் காயப்படுத்தலாம், இவை தமிழக உறவுகள் மத்தியில் பல முரண்பாடுகளை உருவாக்கலாம். ஆனாலும் இப் பதிவில் வரும் விடயங்கள் உங்கள் மன எண்ணங்களைச் சிதைப…
-
- 8 replies
- 1.7k views
-
-
இன்று இலங்கை மிகவும் குறிப்பான வரலாற்றுப் பகுதியைக் கடந்து சென்றுகொண்டிருக்கின்றது. தெற்காசியாவில் போராட்டங்களுக்கான காலமாகக் கருதப்படும் நமது அரசியல் சமகாலம் இலங்கையில் சிறுபான்மை தேசிய இனங்களின் போராட்டத்திற்கான அவசியத்தைத் தவிர்க்கமுடியாத ஒன்றாக மாற்றியுள்ளது. அறுபது ஆண்டுகால திட்டமிட்ட தமிழ்த் தேசிய இனங்களின் மீதான அடக்குமுறை என்பது இன்று மேலும் ஒரு புதிய வடிவை எடுத்துள்ளது. இன்று சிங்கள பௌத்த மேலாதிக்க வாதச் சிந்தனைக்கு எதிரானதும், குறுந்தேசியவாத கோட்ப்பாடிற்கு எதிரானதுமான தத்துவார்த்தத் தளத்திலான போராட்டங்கள் அவசியமாகிறது.சிங்கள பௌத்த மேலாதிக்கத்தின் பண்பியல்புகள் குறித்த புரிதல்களின் ஊடாகவே அதனை எதிர்கொள்வது குறித்த முடிபுகளுக்கு முன்வர முடியும். சிங்கள பௌத்தம…
-
- 2 replies
- 1k views
- 1 follower
-
-
மற்றுமொரு ஆபிரிக்க நாட்டின் சர்வாதிகார ஆட்சியின் நாட்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருந்கின்றன. 21 மில்லியன் மக்கள் தெகையை கொண்ட ஐவோரி கோஸ்ட் இன் அதிபர் லோறன்ட் கபாகோவை பாதுகாப்பதற்காக அவரின் படையினர் அவரை அரச தலைவர் மாளிகையின் பதுங்குகுழியில் வைத்து பாதுகாத்துவருகின்றனர். கடந்த இரு வாரங்களாக நடைபெறும் சமரினை தொடர்ந்து எதிர்தரப்பு படையினர் தலைநகரத்தினுள் புகுந்துள்ளனர். அரச தலைவருக்கு ஆதரவான படையினருக்கும், எதிரணியின் தலைவரான அலாசனே ஒற்றராறாவின் படையினருக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்றுவருகின்றன. ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையில் இரு தரப்பினருக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுக்கள் முறிவடைந்துவிட்டதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது. தற்போதைய அதிபர் தனது பதவி விலகும் நாளை …
-
- 0 replies
- 1k views
-
-
சிறிலங்காவில் கடந்த பல ஆண்டுகளாக மோதல்கள் இடம்பெற்றுவந்த நிலையில் சிறிலங்காவினது வடக்குப் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு அனுமதிக்கப்படவில்லை. இதன் விளைவாக பாக்கு நீரிணைப் பகுதியில் இந்திய மீனவர்கள் ஏகோபோகத்தினை அனுபவித்தார்கள் எனலாம். ஆனால் தற்போது போர் முடிவுக்குவந்துவிட்ட நிலையில் சிறிலங்காவினது மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்தினை மீண்டும் கட்டியெழுப்பும் வகையில் கடலுக்குத் திரும்பியபோது தங்களது வாழ்வாதாரத்திற்கு இந்திய மீனவர்கள் அச்சுறுத்தலாக அமைவதைக் கண்டுகொண்டனர். கடந்த மாதம் தங்களது கடற்பிராந்தியத்திற்கும் அத்துமீறிய மீன்பிடியில் ஈடுபட்டமைக்காக 136 இந்திய மீனவர்களைச் சிறிலங்காவினது அதிகாரிகள் தடுத்துவைத்தனர். இரு நாடுகளுக்கும…
-
- 0 replies
- 997 views
-
-
முன்னொரு காலத்தில் வட இந்தியாவில் ஒரு அபூர்வ சம்பவம் (விஞ்ஞான ரீதியில் விளக்க முடியாத பெரும் சம்பவம்) நிகழ்ந்தது. அதில் சுப்பாதேவி என்ற ஒரு மனிதப் பெண்ணை ஆண் சிங்கம் ஒன்று கற்பழிக்க.. அவளுக்கு இரண்டு மனிதக் குழந்தைகள் பிறந்தன. அதில் ஒன்று ஆண் மற்றது பெண். அவற்றில் ஒன்று தான் சிங்கபாகு. அவன் தன் சிங்கத் தந்தையைக் கொன்று விட்டு பின் தன் சொந்த சகோதரியையே மணம் முடித்தும் கொண்டான். அவர்களின் பிள்ளையே விஜயன். அதாவது சிங்கத்தின் இரண்டாம் தலைமுறை குழந்தையான விஜயன் ஒரு கொடியவன். அவனின் கொடுஞ்செயல் கண்டு அவனையும் அவனின் கொடுமைக்கார கூட்டாளிகளையும் கடலில் விட்டனர். அவர்கள் போக்கிடமின்றி அலைந்து காற்றின் திசையில் வந்து சேர்ந்த இடம் தற்போதைய சிறீலங்கா. முந்தைய தம்பபரணி. அதன் பின…
-
- 9 replies
- 3.4k views
- 1 follower
-
-
அடக்கு முறையும் சுதந்திரமும் உழுத்துப் போன மன்னராட்சியின் கீழும் வெவ்வேறு பெயர்களில் அடக்குமுறை இராணுவ ஆட்சியின் கீழும் சமய சட்டங்கள் என்ற வேரில் இன்னொருவகை ஆதிக்கத்தின் கீழும் சுதந்திரத்தைப்பறிகொடுத்து நிற்கும் மக்கள் கூட்டத்தினரின் போராட்ட அலைதான் பெரும் சுவாலையாக அரபு நாடுகளை இன்று சூழ்ந்துள்ளது. மேற்கத்தைய வல்லரசுச் சக்திகளுக்குச் சமமாக நிற்க வேண்டிய சாம்ராஜ்யங்களின் பரிதாபமான கதை இது. "மனிதன் சுதந்திரமாகப் பிறக்கிறான்' என்ற ரூஸோவின் வார்த்தைகளுக்கு உலகம் இன்றும் தீர்வுகளைத் தேடிவருகிறது. ஏனெனில் இந்த வாசகம் இன்னொரு பகுதியையும் உள்ளடக்கி உள்ளது. அவன் எல்லா இடங்களிலும் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டுள்ளான். மனித சுதந்திரத்தைக் புனிதப்படுத்திய ரூஸோவின் மகாவாக்கியம் இது…
-
- 0 replies
- 1.3k views
-
-
லண்டன் வன்முறைச் சம்பவம் : மக்களை விழிப்பாக இருக்குமாறு தகவல்துறை அமைச்சகம் வேண்டுகோள் புலம்பெயர் நாடுளில் தமிழர்கள் மத்தியில் இடம்பெற்றுவருகின்ற வன்முறைச் சம்பவங்களை, தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை பலவீனப்படுத்துகின்ற ஓர் ஆயுதமாக பயன்படுத்துகின்ற சிறிலங்கா அரசின் பிரசாரங்களுக்கு, வலுவூட்டுகின்ற வகையில் தமிழர்களின் செயற்பாடுகள் அமையக்கூடாதென, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தகவல்துறை துணை அமைச்சர் சுதர்சன் சிவகுருநாதன் நாதம் ஊடக சேவையூடாக தெரிவித்துள்ளார். விடுதலைக்கான செயற்பாட்டுத் தளத்தில், லண்டனில் நீண்டகாலமாக இயங்கி வந்துள்ள திரு.தனம் என அழைக்கப்படும் சூசைப்பிள்ளை மீது நடாத்தப்பட்ட வன்முறைச் சம்பவம் குறித்து நாதம் ஊடக சேவைக்கு கருத்துரைத்த பொழுதே இதனை தெரிவ…
-
- 1 reply
- 964 views
-
-
நாளை கழிச்சி முதலமைச்சர் ஆகப்போகிறேன் என்று சொல்லிக்கிட்டு திரியறான் ஒருத்தன்; என்நேரமும் தண்ணிய போட்டுக்கிட்டு. அட மூதேவி நீ தண்ணியப்போடு. ஆனா முதலமைச்சர் ஆகப்போறேன்னு சொல்லாத. முதலமைச்சர் சீட்டு என்ன மியூசிக்கல் சேரா? அந்த சீட்டு என்ன சாதாரண சீட்டா? தண்ணியப்போட்டா என்ன வேணும்னாலும் பேசிட வேண்டியதா? ஒருத்தன் கேட்டான் என்னய.....அவர எதிர்த்து நிக்கப்போறீங்கன்னு சொன்னீங்களே எதிர்த்து நிற்கப்போறீங்களான்னு. ஒரு மேடையில ஏறுனாலே ஸ்டடியா நிக்க முடியல.. ( ஆடிக்காட்டுகிறார்) இந்த ஆள எதிர்த்து நின்னா எனக்குத்தாங்க கேவலம். அதனால நான் ரிஜக்ட் பண்ணிட்டு மொத்த டீமையும் காலி செய்வதுதான் என் வேலை. அய்யா மன்னிசிக்குங்க என்று கலைஞரை பார்த்து ச…
-
- 2 replies
- 1.7k views
-
-
டட்லியின் தேசிய அரசில் தமிழரசுக் கட்சியும் மூன்று அமைச்சர் பதவிகளையேனும் ஏற்கும்படி வற்புறுத்தப்பட்ட போதும் கட்சியின் கொள்கைப்படி அக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. மாவட்ட சபைகளுக்கான ஒப்பந்தம் சிங்களக் குடியேற்றங்களைத் தவிர்ப்பதில் பிராந்திய சபைகளுக்கான "பண்டாசெல்வா' உடன்படிக்கையிலும் வாய்ப்பானதாகக் கருதப்பட்டது. மாவட்ட சபைகளுக்கான சட்டவலுவைத் தயாரிப்பதற்குப் பொறுப்புடையதான உள்ளூராட்சி அமைச்சர் பதவியையேனும் ஏற்கும்படி வலியுறுத்தப்பட்டபோது, தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளைத் தவிர்த்து வெளியார் ஒருவரான அமரர் மு.திருச்செல்வம் மேலவை உறுப்பினராக நியமிக்கப்பட்டு அப்பதவியை ஏற்றுக் கொள்ள நேர்ந்தது. ஆயினும் பதவியை ஏற்பதற்குச் சென்ற சமயம் திருச்செல்வம் தமது மோட்டார் வண்டியில் தமிழரசுக…
-
- 1 reply
- 2.2k views
-
-
அனைத்துலக ரீதியில் காணப்படும் முதன்மையான 100 படைத்தளபாட உற்பத்தி நிறுவனங்களில் வருடாந்த ஆயுத விற்பனையில் 247 பில்லியன் டொலர் விற்பனையினை அமெரிக்க நிறுவனங்களே மேற்கொள்கின்றன. இது மொத்த ஆயுத விற்பனைத் தொகையில் 61.5 சதவீதமாகும். இவ்வாறு Inter Press Service - IPS இணைய ஊடகத்தில் அதன் ஆசிரியபீடத்தை சேர்ந்த Thalif Deen எழுதியுள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் தி.வண்ணமதி. அதன் முழுவிபரமாவது, அனைத்துலக ரீதியிலான படைத்தளபாட உற்பத்தியாளர்களை எடுத்துக்கொண்டால் ஐக்கிய அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பாவினைச் சேர்ந்த நிறுவனங்களே உலக சந்தையில் அதிக இடத்தினைப் பிடித்திருக்கின்றன. அதேநேரம் சீனா, இந்தியா, யப்பான், சிங்கப்பூர், தென்கொரியா, இஸ்ரேல், துருக்கி ம…
-
- 1 reply
- 1.3k views
-
-
நேட்டோ படைகளின் சீறும் போர்க்கப்பல்கள் மத்தியதரைக் கடலின் நீரைக் கொதிநிலைக்குக் கொண்டு சென்றிருக்கின்றன. உலக ரவுடியாக தன்னைத் தானே நியமித்துக் கொண்டிருக்கும் அமெரிக்காவின் தலைமையில் நேட்டோ படைகள் லிபியாவின் தலைநகர் திரிப்போலியின் மேல் குண்டு வீச்சு நடத்தி வருகின்றன. அதில் வழக்கம் போல அப்பாவி மக்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த நாற்பத்தியிரண்டு வருடங்களாக லிபியாவின் சர்வாதிகாரியாய் இருந்து வரும் முவாம்மர் கடாஃபியை எதிர்த்து ஜனநாயகத்துக்காகப் போராடி வரும் ஜனநாயக வீரர்களுக்கு உதவும் பொருட்டு ‘மனிதாபமானத்தின்’ அடிப்படையில் தான் தாங்கள் இந்தத் தாக்குதலைத் துவங்கியதாக நேட்டோ நாடுகள் அறிவித்துள்ளன. அமெரிக்க மனிதாபிமானத்தின் கந்தக நெடியை லிபியர்களுக்குப் பரிசளிக்…
-
- 1 reply
- 1.2k views
-
-
ஜஸ்டின் கேட்ட சில கேள்விகளுக்கு ஓடி ஒழிக்காமல் பதில் அழிக்கவேண்டுமாயின் சில உலக அரசியல் உண்மைகளை விளங்கிக்கொள்ளவேண்டும்.உலக அரசியலுக்கு மட்டுமல்ல அரசியல் செய்யும் எவருக்குமே அது பொருந்தும்.எமது இயக்கங்களும் அதற்கு விதிவிலக்கல்ல.எமது மக்களை,போராளிகளை கூட அதற்கு பலி கொடுப்பதற்கு தயங்கவில்லை.ஒன்றுமே செய்யாத உத்தமர்களில்லை நாம்.அதேபோல் எப்போதும் உண்மைகளை மட்டும் சொன்ன அரிச்சந்திரர்களுமல்ல.இவைகள் எல்லாமே எமது விடுதலை என்ற பெயரில் நடாத்தப்பட்டவேள்விகள்.இலங்கை அரசும்,இந்திய அரசும் எமக்கு செய்தது,செய்வது மகாதுரோகம்.ஆனால் அவற்றை மிகைப்படுத்தி உலகிற்கு விற்க முனைப்பட்டோம்.மக்களையும் அதுதான் உண்மையெனெ நம்ப பெரிய பிராயத்தனம் எடுத்தோம். அப்படியெனில் உண்மையில் நடந்தவைகள் தான் என்ன? அ…
-
- 7 replies
- 1.7k views
-
-
பரிசுபெற்ற இராணுவக் கேள்வியும் சிறீலங்கா இராணுவ போக்கும்.. டென்மார்க்கில் இருந்து வெளிவரும் வரலாறு என்ற டேனிஸ் சஞ்சிகை ஒவ்வொரு மாதமும் சிறந்த வரலாற்றுக் கேள்விக்கு பரிசளித்து வருகிறது. அந்தவகையில் இந்த மாதம் கேட்கப்பட்ட கேள்வியும், பதிலும் இராணுவ சக்தியை தப்பாக பயன்படுத்தும் நாடுகளுக்கு பயன்படக் கூடிய வகையில் எழுதப்பட்டுள்ளது. இதோ அந்தக் கேள்வியும் பதிலும் : கேள்வி : இரண்டாம் உலக யுத்தம் நடைபெற்றபோது ஜேர்மனிய சர்வாதிகாரி ஹிட்லர் பிரான்சை கைப்பற்றினான். 1940 ம் ஆண்டு கோடைகாலத்தில் பிரான்ஸ் முழுவதுமே அவனால் வெற்றி கொள்ளப்பட்டு, கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது. ஆனால் பிரான்சை முழுமையாகக் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதை ஹிட்லர் விரும்பவில்லை. அதற்கான காரணத்தை சொல்லாமல…
-
- 1 reply
- 1.1k views
-
-
அமெரிக்க போர்களும் விளைவுகளும்: கடந்த பத்தாண்டு- ஒரு பார்வை: ராஜன் சடகோபன் உலக வல்லரசான அமெரிக்கா, கடந்த 10 ஆண்டுகளில் தன்னை காப்பாற்றி கொள்ள போர் என்ற ஆயுதத்தை எப்படி எல்லாம் பயன்படுத்தியது, அந்த போரால் ஏற்பட்ட விளைவுகள் என்ன என்பதை சுருக்கமாக விளக்குகிறது இக்கட்டுரை அமெரிக்க வரலாற்றில், போர் என்பது ஒரு தொடர் கதை. அந்த நாடு உருவாகும் முன்பு, அங்கிருந்த செவ்விந்தியர்களை அழித்ததில் துவங்கிய அந்தப் போர், நிலத்துக்காக, அடிமைகளுக்காக, வர்த்தக உரிமைகளுக்காக, துறைமுகப் பகுதிகளுக்காக, இயற்கை வளங்களுக்காக இன்று வரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இரண்டாவது உலகப் போருக்கு பின், வல்லரசாக தன்னை நிலைநிறுத்திக் கொண்ட அமெரிக்கா, ரஷ்யா மீதான பனிப்போர், கொரியா, வியட்நாம், …
-
- 5 replies
- 1.8k views
-