Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. ஜே.ஆர் முதல் மஹிந்த வரை நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்களின் அறிக்கை? by A.Nixon படம் | ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ டுவிட்டர் தளம் ஜெனீவா மனித உரிமை பேரவை ஆணையாளரின் அறிக்கையை இலங்கை அரசு நிராகரித்துள்ள நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் அடுத்தக் கட்ட நடவடிக்கை என்ன என்ற கேள்வி எழுந்தது. ஆனால், இரண்டு தினங்களில் அமெரிக்கா சமர்ப்பித்த இலங்கை தொடர்பான பிரேரணையை பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராட்டியதுடன் அந்தத் தீர்மானத்திற்கு அணுசரனையாளராக செயற்படவுள்ளதாகவும் கூறியுள்ளார். அதுமட்டுமல்ல அமைச்சர்கள் கூட அமெரிக்கத் தீர்மானத்தை பாராட்டியுள்ளதுடன் தமக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்றும் கூறியுள்ளனர். தமிழர் நிலை என்ன? ஆக, மனித உரிமைப் பேரவை ஆணையாளரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்…

  2. கற்பனையில் தமிழ்ச்சமூகம்! August 11, 2025 — கருணாகரன் — தமிழ்த்தேசியவாத அரசியல் இன்று இரு கூறாக உள்ளது. (இன்று மட்டுமல்ல, முன்பும் அப்படித்தான். ஆனால் இப்பொழுது அது மிகத் துல்லியமாக முன்வைக்கப்படுகிறது) 1. “மாகாணசபை முறையைத் தீர்வுக்கு ஆரம்பமாக எடுத்துக் கொள்வது. அதுதான் சாத்தியமானது. அதற்கே இந்தியாவின் அனுசரணை அல்லது ஆதரவு இருக்கும். இந்தியாவின் ஆதரவைப் பெற்று, இலங்கைக்கு அழுத்தத்தைக் கொடுத்து, மாகாணசபையின் அதிகாரத்தை முழுமைப்படுத்துவது. குறிப்பாக 13 திருத்தத்தை முழுமையான அமுல்படுத்துவது. அதிலிருந்து படிப்படியாக மேலதிக அதிகாரத்தை – தீர்வை நோக்கிப் பயணிப்பது. இதொரு அரசியற்தொடர் செயற்பாடாகும்..“ என்று வாதிடுவது. 2. “மாகாணசபை என்பதே சூதான ஒரு பொறி. அதனால்தான் விடுதலை…

  3. புயல் அனுராசங்கத்தைப் பலப்படுத்தியிருக்கிறதா ? - நிலாந்தன் புயல் அனுராசங்கத்தைப் பலப்படுத்தியிருக்கிறது. அனைத்துலக அளவிலும் உள்நாட்டிலும் அரசாங்கத்தைப் பலப்படுத்தத் தேவையான ஒரு மனிதாபிமானச் சூழல் உருவாகியிருக்கிறது. இந்த மனிதாபிமான அரசியல் சூழல் அல்லது நிவாரண அரசியல் சூழல் எனப்படுவது அதன் தர்க்கபூர்வ விளைவாக அரசாங்கத்தைப் பலப்படுத்தும். அனைத்துலக அளவில் பெரும்பாலான நாடுகள் வரிசைகட்டி நின்று உதவி செய்கின்றன. குறிப்பாக முதலில் உதவியதும் இந்தியா. அதிகம் உதவியதும் இந்தியாதான். தவிர வெளிநாட்டில் வாழும் இலங்கையர்களும் உதவுகிறார்கள். சில புலம்பெயர்ந்த தமிழர்களும் அரசாங்கத்துக்கு நிதி சேர்த்துக் கொடுக்கிறார்கள். அல்லது தாம் சேர்த்த நிதியை தாம் வாழும் நாட்டின் அரசாங்கத்துக்கு ஊட…

  4. அபத்தமான அமைதி திட்டத்திற்கு நோபல் பரிசு கேட்கும் டிரம்ப்! -ச.அருணாசலம் நோபல் விருது பெறும் கனவிலுள்ள அதிபர் டிரம்ப் காசா போரை முடிவுக்கு கொண்டு வர தந்துள்ளது அமைதி திட்டமா? டிரம்பின் அமைதி திட்டம் காசாவை கபளீகரம் செய்யும் சூழ்ச்சியா? அமைதி நாயகன் வேடம் டிரம்புக்கு பொருந்துகிறதா? தீராப் பழியிலிருந்து நேதன்யாகு விடுபடும் முயற்சி பலிக்குமா? ஒரு அலசல்; அமைதி திட்டத்தின் முக்கிய கூறுகள் என்ன? # தாக்குதலை நிறுத்துதல். ஹமாஸ் இஸ்ரேல் இரு தரப்பும் பிணைக்கைதிகளை விடுவித்தல். ஆனால், காசா பகுதியில் இருந்து இஸ்ரேலிய படைகள் பின் வாங்கப்படாதாம். # மேற்படிக்கு ஒத்துக் கொண்டால் மனிதாபிமான உதவிகளை இஸ்ரேல் அனுமதிக்குமாம். # அமைதிக்கான சர்வதேசக் குழுமத்தை (International Board of Pea…

  5. தனபாலசிங்கத்தின் “தமிழ்த்தேசியவாத அரசியலின் எதிர்காலம்” November 9, 2025 — கருணாகரன் — தமிழ்த் தேசியவாத அரசியலுக்கு எதிராக NPP யின் எழுச்சி உருவாக்கியிருக்கும் நெருக்கடிச் சூழலில் ‘தமிழ்த்தேசியவாத அரசியலின் எதிர்காலம்’ என்ற நூலினை ‘தினக்குரல்’ பத்திரிகையின் ஆசிரியப் பொறுப்பு உட்பட ஊடகத்துறையின் முக்கிய பொறுப்பிலிருந்த மூத்த பத்திரிகையாளர் திரு. வீரகத்தி தனபாலசிங்கம் எழுதியிருக்கிறார். இந்த நூலில் எட்டுக் கட்டுரைகள் உள்ளன. இந்த எட்டுக் கட்டுரைகளில் ஏழு கட்டுரைகளும் தமிழ்த்தேசியவாத அரசியலின் இருப்பு, அதனுடைய எதிர்காலம் குறித்த கேள்விகளை ஆதாரமாக முன்வைத்துப் பேசினாலும் இலங்கைத்தீவின் இனப்பிரச்சினை, கடந்த கால ஆட்சியாளர்களின் தவறுகள், தமிழ்த் தலைமைகளின் தீர்க்கதரிசனமற்ற அரச…

  6. காலங்கடந்த ஒற்றுமையின் பயன்? லக்ஸ்மன் நாட்டின் தென் பகுதியிலும், வடக்கு கிழக்கிலும் காலங்கடந்த ஒற்றுமை குறித்த விவாதங்கள் இப்போது பிரபலமாகப் பேசப்படுபவையாக இருக்கின்றன. இவை பயனுடையவைதானா? ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர்களின் ஈகோ போர்களைத் தாண்டி, கொழும்பு மேயர் பதவிக்காக ஒன்றிணைவது பற்றிய செய்தி வந்தபோது, இரு கட்சிகளின் ஆதரவாளர்களும் அதை ‘மிக மிகக் கால தாமதமானது” என்றுதான் வரவேற்றனர். நாட்டையே ஆட்சி செய்யும் வாய்ப்பிருந்த போதிலும் அதனை நழுவவிட்டு தற்போது கொழும்பு மேயர் பதவியைத் தக்கவைப்பதற்காக ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய இணைந்து போராடுகின்றன. இக் கூட்டணி வேட்பாளர் வெற்றி பெற்றால், சஜித்தும் ரணிலும் ஒற்றுமையின் சக்தியை உ…

  7. புதிய எதிர்பார்ப்பு By VISHNU 16 SEP, 2022 | 01:58 PM ஆர்.ராம் இலங்கை, இந்திய மீனவர்கள் பரஸ்பரம் கடல் எல்லைகளை அத்துமீறுவதால் தொடரும் அவலங்களுக்கு தற்போது வரையில் முற்றுப்புள்ளி வைக்கப்படவில்லை. குறிப்பாக, வடமாகாண மீனவர்களும், தமிழக மீனவர்களும் அத்துமீறல் விவகாரத்தின் பிரதான இரு பங்காளிகளாக உள்ளார்கள். இந்நிலையில் கடல் எல்லைகளை அத்துமீறும் மீனவர்கள் அந்தந்த நாடுகளின் கடற்படைகளால் கைது செய்யப்படுவதும் நீதிமன்றங்களில் முன்னிலைப்படுத்தப்படுவதும் தொடர்கதையாகிறது. எனினும், அவர்கள் இலங்கை, இந்திய அரசுக்களுக்கு இடையிலான புரிந்துணர்வின் காரணமாகவும், இராஜதந்திரத் தரப்பினரின் தலையீடுகள் காரணமாகவும் பரஸ்ப…

  8. விஜய்யின் அரசியல் யாருக்கானது? யாருடைய வாக்குகளைக் குறிவைத்தது? 12 Oct 2025, 7:00 AM பாஸ்கர் செல்வராஜ் கரூரில் நடைபெற்ற விஜய் அரசியல் பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி மக்கள் உயிரிழந்தது எதிர்பாராத விபத்தா? அந்தக் கூட்டத்தைக் கூட்டியவர்களின் பொறுப்பற்ற அரசியல் நோக்கம் செய்த கொலையா? என்றுதான் அந்த விவாதம் சென்று இருக்க வேண்டும். அப்படியான விவாதம் கூட்டத்தை நடத்திய விஜய்யைக் குற்றவாளி ஆக்கி அவரது அரசியலை முடிவுக்குக் கொண்டு வந்து இருக்கும். அதனைத் தவிர்க்க அரசியல் சமூக ஊடக வலிமையைக் கொண்டு அரசின் முன்னெச்சரிக்கைப் பாதுகாப்பு நடவடிக்கை குறைபாடுகளால் தான் இந்த உயிரிழப்பு ஏற்பட்டது என்பதாக விவாதத்தைத் திசைதிருப்பி திமுக அரசைப் பொறுப்பாக்கி முதன்மைக் குற்றவாளி…

  9. காற்றாலைகளை எதிர்க்கும் ஒரு தீவு - நிலாந்தன் Pix by Nimalsiri Edirisinghe மன்னாரில் குறிப்பாக மன்னார்த் தீவுப் பகுதியில் காற்றாலைகள் நிறுவப்படுவதற்கு எதிராக அங்குள்ள திருச்சபையினரும் பொதுமக்களும் கடுமையாக எதிர்ப்பைக் காட்டி வருகிறார்கள். கடந்த திங்கட்கிழமை அங்கே கடை முடக்கமும் ஆர்ப்பாட்டமும் இடம்பெற்றன. சில வாரங்களுக்கு முன்பு கத்தோலிக்க திருச்சபையின் மறை மாவட்ட ஆயர் ஜனாதிபதியைச் சந்தித்திருந்தார். சந்திப்பின்போது அவர் மன்னாரில் நிகழும் கனிமவள அகழ்வு மற்றும் காற்றாலைத் திட்டங்கள் போன்றவற்றைக் குறித்துப் பேசியதாக அறிய முடிகிறது. அதன்பின் ஆயர் ஐரோப்பாவில் சுற்றிப் பயணத்தை மேற்கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில்,ஜனாதிபதி அனுரகுமாரவும் வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொண்டிருந்த அதே கால…

  10. 18 Sep, 2025 | 09:13 AM பெரும் எண்ணிக்கையில் மீன்பிடிப் படகுகள் ஒரு தொகுதியாக எல்லைமீறி பிரவேசித்து எமது மீனை, இறாலை, கணவாயை, நண்டுகளை பிடிப்பது என்பது இந்த இந்திய ஊடுருவலின் ஒரு அம்சம் மாத்திரமே. அத்தகைய நடவடிக்கைகளின் மூலமாக கட்டுப்பாடற்ற முறையில் ஒரு நிரந்தரமான முறையில் அழிவுகளை ஏற்படுத்துவது மற்றைய மிகவும் ஆபத்தான அம்சமாகும். பெரும்பாலான இந்திய மீன்பிடிப் படகுகள் இழுவை மீன்பிடியில் ஈடுபடும் படகுகளாகும் (Bottom trawlers). இழுவைப்படகுகள் மீனையும் கூனி இறால்களையும் இலக்கு வைப்பதற்கு மேலதிகமாக , கடற்படுக்கையில் இருந்து மீன்முட்டைகள், சிறிய மீன்வகைகள், கடல் தாவரங்கள் என்று சகலதையும் வாரி அள்ளக்கூடிய மிகப் பெரிய வலைகளைக் கொண்டவையாகும். மேலும் வாசிக்க https://www.virakesar…

  11. தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் இல்லை முருகானந்தன் தவம் இலங்கை வரலாற்றில் 1983 ஜூலை 23ஆம் திகதி தமிழர்களை அழித்தொழிக்கும் அரச பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிட்ட நாள். இலங்கையின் தலைநகர் கொழும்பு உட்பட நாட்டில் சிங்களவர்களுடன் தமிழர்கள் இணைந்து வாழ்ந்த பகுதிகள் எங்கும் ஓடிய தமிழர்களின் குருதியும் பறிக்கப்பட்ட உயிர்களும் கொளுந்து விட்டெறிந்த தமிழர் சொத்துக்களும், இதயங்களை உறைய வைத்த கொடூர தாக்குதல்களும் உயிருடன் கொளுத்தப்பட்டவர்களின் கதறலும், காடைக் கும்பல்களால் கூட்டாக வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட தமிழ் பெண்களின் அபயக் குரல்களும் இலங்கை தலைநகர் வீதிகளை நிறைத்த அந்த நாளை எப்படி மறக்க முடியும்? வருடத்தின் 12 மாதங்களில் ‘கறுப்பு ஜூலை’யாக தமிழர்…

  12. செம்மணி விடயத்தில் அனுர உறுதியாக இருப்பாரா? ஏம்.எஸ்.எம்.ஐயூப் பல தமிழ் இயக்கங்கள் அரச படைகளுக்கு எதிராகப் போராடி வந்த 1980களில் இருந்தே வடக்கு, கிழக்கில் கூட்டுக் கொலைகள் இடம்பெற்று வந்துள்ளன. 1984 செப்டெம்பர் மாதம் 20 ஆம் திகதி தமிழ் ஈழ விடுதலை அமைப்பினர் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தைத் தாக்கி பெரும் சேதத்தை விளைவித்ததை அடுத்து யாழ். நகரில் நூற்றுக் கணக்கான சாதாரண மக்கள் கொல்லப்பட்டனர். ஆனால், அந்நாட்களில் செய்தித் தணிக்கை கடுமையாக அமுலில் இருந்ததால் இவ்விபரங்கள் வெளியே வரவில்லை. அக்காலத்தில் பத்திரிகைகளும் அரச வானொலியும் மட்டுமே ஊடகங்களாக இருந்தன. தொலைக்காட்சி சேவை ஒன்று ஆரம்பிக்கப்பட்டு இருந்த போதிலும், அது தென் பகுதியை மையமாகக்கொண்டு இயங்கியது. இணையத்தளங்கள் இருக்கவில்ல…

  13. “ஜனாதிபதி தமிழர் முகங்களில் கரிபூசியுள்ளார்” முருகானந்தன் தவம் கடந்த 1ஆம் திகதி ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வடக்கிற்கு இரு நாள் விஜயம் செய்து யாழ்ப்பாணம் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்தின் 3ஆவது கட்டத்தின் பணிகள், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் யாழ். பிரதேச அலுவலகத் திறப்பு ,யாழ்ப்பாணம், மண்டை தீவு பகுதியில் நிர்மாணிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ள நவீன கிரிக்கெட் மைதானத்தின் பணிகள் ,உலக தென்னை தினத்தை முன்னிட்டு புதுகுடியிருப்பில் ‘கப்துரு சவிய’ தேசிய வேலைத்திட்டம், முல்லைத்தீவு, வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணிகள் போன்ற அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைத்துள்ளதுடன் சர்ச்சைக்குரிய கச்சத்தீவுக்கும் அதிரடி விஜயம் செய்து அங்குச் சென்ற முதல் ஜனாதிபதி என்ற…

  14. “இன விடுதலை“ – சர்வதேச சட்டங்களும் ஐ.நா நியமங்களும் August 22, 2025 5:09 am -அ.நிக்ஸன் இன விடுதலை கோரும் சமூகம் ஒன்றின் அரசியல் நியாயப்பாடுகளை கருவறுக்க அரசுகள் கையாண்ட உத்திகள் – எடுத்துக் கொண்டிருக்கும் முயற்சிகள் பற்றி எல்லாம் ஆராய்ந்து, அறிந்து இராஜதந்திரமாக காய் நகர்த்த வேண்டிய பொறுப்பு என்பது அரசு அற்ற இனம் ஒன்றின் அரசியல் பிரதிநிதிகளின் பிரதான கடமை. செம்மணி புதைகுழி விவகாரம் மற்றும் கனேடிய அரசாங்கத்தின் தமிழ் இன அழிப்பு பற்றிய செயற்பாடுகளின் பின்னரான சூழலில் விடுதலைப் புலிகளின் ”பயங்கரவாத செயற்பாடுகள்” – ”பாசிசம்” என்ற கோசங்கள் மீண்டும் சிங்கள ஆய்வாளர்களினால் முன்வைக்கப்படுகின்றன. இன அழிப்பு என்பதை கனடாவின் பிரதான தேசிய கட்சிகள் ஏற்றுக் கொண்டாலும், கனேடிய அரசு என்…

  15. 02 Oct, 2025 | 06:19 PM அ. அச்சுதன் உலகிலேயே மிக அழகான தீவுகளின் 2025ஆம் ஆண்டுக்கான பட்டியலில் இலங்கை முதலிடத்தைப் பிடித்துள்ள நிலையில், அதே இலங்கையின் வட பகுதியில் உள்ள செம்மணியில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் அகழ்வாராய்ச்சியில் இதுவரை குழந்தைகள் உட்பட 235 ற்கும் மேற்பட்டவர்களின் மனித எலும்புக்கூடுகள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. இது, அழகிய இலங்கைத் தீவின் பின்னால் மறைந்துள்ள மனிதாபிமானமற்ற கடந்த கால கொடூரங்களை வெளிக்கொணர்வதாக உள்ளன. செம்மணி மனிதப் புதைகுழியில் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் ஆழத்தைக் கருத்தில் கொள்ளும்போது, அங்கு சட்டவிரோதப் படுகொலைகள் நடைபெற்று, அந்த உடல்கள் இரகசியமாகப் புதைக்கப்பட்டிருக்கலாம் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள…

  16. துயிலுமில்லங்களும் என்பிபியும் – நிலாந்தன். கார்த்திகை மாதம்.மாவீரர் நாளைப் போன தடவை அரசாங்கம் ஒப்பீட்டளவில் அனுமதித்தது. ஆங்காங்கே போலீசார் சில தடைகளை ஏற்படுத்தினாலும் மாவீரர் நாள் அமைதியாக அனுஷ்டிக்கப்பட்டது. கடந்த முறை தாயகத்திலும் புலம்பெயர்ந்த பரப்பிலும் ஒப்பீட்டளவில் அதிக தொகை மக்கள் கூடிய நிகழ்வுகளாக இரண்டைக் குறிப்பிடலாம். ஒன்று தாயகத்தில், கிளிநொச்சியில். மற்றது,கனடாவில்.தாயகத்துக்கு வெளியே அதிகதொகை மக்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடாக கனடா காணப்படுகிறது. எனவே அங்கே ஒப்பீட்டளவில் மிகப்பெரிய அளவில் மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்பட்டது. கடந்த வாரம் அமைச்சர் சந்திரசேகரன் பேசும்போது அரச படைகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் துயிலும் இல்லங்கள் விடுவிக்கப்படும் என்று தெரிவித்த…

  17. இலங்கையின் அரசியல் அரங்கு களை கட்டிவிட்டது. அரங்காடிகள் எந்த அரங்கில் இணைந்து ஆடி, நடித்து மக்களைக் கவருவதென்பது இம்மாத மத்தியில் தெரிந்துவிடும். ஜனநாயகம் என்ற பெயரில் நடைபெறும் அரசியல் இன்று வியாபாரமாக மட்டுமல்ல விபசாரமாகவும் காணப்படுவதாக உய்த்துணர்ந்தோர் கூறுகின்றனர். அந்த அளவு அரசியலரங்கு அசிங்கப்பட்டுள்ளது. நேற்றுவரை நீ யாரோ, நான் யாரோ என்றிருந்தவர்கள் பதவிகளைப் பெற ஒட்டியுறவாடவும் இணைந்து அரங்காடவும் கட்டியணைக்கவும் தயங்காத நிலையைக் காணலாம் . பொதுமக்களை, வாக்காளர்களை எப்படியாவது ஏமாற்றி தமக்குச் சார்பாக புள்ளடியைப் பெற்று அதன் மூலம் பதவிகளைப் பெற்று வளம் பெற்று வாழ எத்தனிப்போரை அரசியல்வாதிகள் என்கின்றோம். இவர்கள் இணைந்த கூட்டை அரசியல் கட்சிகளென்கின்றோம். கடந்தகால அ…

    • 0 replies
    • 170 views
  18. 2024 குடித்தொகை மதிப்பீடு: மலையக மக்களை மையப்படுத்தி ஒரு சில அவதானிப்புகள் Photo, THE HINDU மலையகத் தமிழர்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 ஆண்டுகள் நிறைவுற்ற (மலையகம் 200) வரலாற்று நிகழ்வின் பின்னர், அவர்களின் இருப்பு ஒரு பாரிய சனத்தொகைப் புதிரை (Population Puzzle) எதிர்கொண்டுள்ளது. 2012ஆம் ஆண்டு குடித்தொகைக் கணிப்பீட்டுடன் ஒப்பிடும்போது, 2024ஆம் ஆண்டு சனத்தொகைக் கணக்கெடுப்புத் தரவுகளின்படி, மலையக மக்களின் குடித்தொகை, தீவிரமாக வீழ்ச்சியடைந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் இக்கட்டுரையானது குடித்தொகை வீழ்ச்சிக்கான காரணங்களையும், அது மலையகத் தமிழ்ச் சமூகத்தின் தேசிய அடையாள கட்டுமானம், அரசியல் பேரம் பேசும் சக்தி மற்றும் அரசியல் பிரதிநிதித்துவம் ஆகியவற்றின் மீது…

  19. திருமலையில் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை கூட்டமைப்பால் வெற்றிகொள்ள முடியுமா? படம் | AFP Photo, ARAB NEWS திருகோணமலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரங்கள் ஓரளவு சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றன. எனினும், தமிழ் மக்கள் மத்தியில் தேர்தல் குறித்து பெரியளவில் ஆர்வம் ஏற்பட்டதாக தெரியவில்லை. இனிவரப் போகும் இரண்டு வாரங்கள்தான் கூட்டமைப்பின் பிரச்சாரங்கள் ஓரளவு தீவிரமடையக் கூடும். ஆட்சி மாற்றம் தமிழ் மக்கள் எதிர்பார்த்தது போன்று பெரியளவில் மாற்றங்களை ஏற்படுத்தவில்லை என்னும் ஆதங்கம் மக்கள் மத்தியில் காணப்படுகிறது. இதன் காரணமாக கூட்டமைப்பின் வேட்பாளர்களால் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியளவில் தாக்கமுள்ள பிரச்சாரங்கள் எதனையும் மக்கள் மத்தியில் மேற்கொள்ள முடியவி…

  20. இலங்கையின் கடன்மீள்செலுத்துகையை உடன் இடைநிறுத்துங்கள்: நிலையான தீர்வை வழங்கக்கூடிய புதிய கடன்மறுசீரமைப்புக்குச் செல்லுங்கள் - உலகநாடுகளைச் சேர்ந்த பிரபல பொருளியலாளர்கள், துறைசார் நிபுணர்கள் 121 பேர் கூட்டாக வலியுறுத்தல் Published By: Vishnu 23 Dec, 2025 | 02:25 AM (நா.தனுஜா) சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிவசதிச் செயற்திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்டு, தற்போது நடைமுறையில் உள்ள கடன்மறுசீரமைப்பு ஒப்பந்தமானது இலங்கையின் கடன்நெருக்கடிக்கு நிலையான தீர்வை வழங்கத் தவறியிருக்கின்றது. ஆகவே இலங்கையின் வெளியகக்கடன் மீள்செலுத்துகையை உடனடியாக இடைநிறுத்துவதுடன், அதன் கடன் ஸ்திரத்தன்மையை மீளுறுதிப்படுத்தக்கூடியவாறான புதிய கடன்மறுசீரமைப்பு செயன்முறைக்குச் செல்லுங்கள் என நோபல…

  21. தமிழ்நெற் ஆசிரியரும் மூத்த ஊடகவியலாளருமான கோபிநாத் ஜெயச்சந்திரனுடனான செவ்வி.

  22. தமிழர்களின் யதார்த்தமான கோரிக்கைகளை NPP மதிக்க வேண்டும் October 20, 2024 — கருணாகரன் — யாராலும் கையாள முடியாத – எவருடைய கட்டுப்பாட்டுக்குள்ளும் நிற்காத ஒரு நிலையை எட்டியுள்ளது தமிழ் அரசியல். அரசியலில் தமிழ் அரசியல் – சிங்கள அரசியல் – முஸ்லிம் அரசியல் எல்லாம் உண்டா என்று அரசியல் அறிஞர்கள் கேட்கலாம். உண்மையான அர்த்தத்தில் அப்படிச் சொல்ல முடியாதுதான். என்றாலும் பிரயோக நிலையில் அப்படிக் குறித்த சமூகங்கள் தங்களுடைய அரசியலை வரையறுத்து வந்திருப்பதால் இலங்கையின் அரசியலில் இத்தகைய அடையாளம் உருவாகி விட்டது. தமிழ்நாட்டில் திராவிட அரசியல், தலித் அரசியல், இந்தியத் தேசிய அரசியல் அல்லது காங்கிரஸ் அரசியல், காவி அரசியல் எனப்படும் பா.ஜ.க அரசியல் போன்றவற…

  23. 25 SEP, 2024 | 11:00 AM "மாலைதீவு விவகாரத்தில் கடைப்பிடித்ததை போன்று இலங்கை விவகாரத்திலும் இந்தியா பொறுத்திருந்து பார்க்கும் அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும்." "நெருக்கடியான நேரங்களில் முதலில் உதவிக்கு ஓடிவருகின்ற நட்பிணக்கமும் அன்பாதரவும் கொண்ட ஒரு பிராந்திய வல்லரசு இந்தியா என்பதை இலங்கையின் புதிய ஜனாதிபதி அநுராகுமார திசாநாயக்க புரிந்துகொள்வதற்கு புதுடில்லி கால அவகாசத்தை வழங்கவேண்டும்." "தற்போது ஆட்சியதிகாரத்துக்கு வந்துவிட்ட ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி. ) அதன் பிரத்தியேகமான சிங்கள தேசியவாதத்தைக் கைவிட்டு சிறுபான்மைச் சமூகங்களின் குறிப்பாக தமிழர்களின் அக்கறைகளை கையாளுவதற்கு சகல சமூகங்களையும் அரவணைக்கும் அணுகுமுறையைக் கடை…

  24. அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுடன் அரசியல் தீர்வு காணப்படவேண்டும்; சுமந்திரன் இலங்கையில் தேசிய இனப்பிரச்சினைக்கு அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுடன் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்று ஜெனிவா மாநாட்டில் இந்தியா வலியுறுத்தியுள்ளது. இந்தியாவின் இந்த நிலைப்பாட்டை – கருத்தை நாம் வரவேற்கின்றோம். நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். இலங்கையில் அமுலில் உள்ள பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். பயங்கரவாதத் …

    • 0 replies
    • 166 views
  25. காணாமலாக்கப்பட்ட 158 பேர் பற்றிய உண்மைக்கான நம்பிக்கை ஒளி Photo, TAMILGUARDIAN சரியாக ஒரு மாதத்திற்கு முன்பு நான் செம்மணியில் நின்று அகழ்வாராய்ச்சியை பார்த்துக் கொண்டிருந்தேன். உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டு, லேபிள் ஒட்டப்பட்டு மேலதிக செயல்முறைகளுக்காக பொதி செய்யப்பட்டிருந்தன. மிகவும் கடினமான மற்றும் சிரமமான பணி. என்னைச் சுற்றி நீதிபதிகள், சட்டத்தரணிகள், மனித உரிமை குழுக்கள், பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் சமூக ஆர்வலர்கள், பொலிஸார், பாதுகாப்பு அதிகாரிகள், நிபுணர்கள் மற்றும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் அந்த இடத்தில் கூடியிருந்தார்கள். அவர்கள் அனைவரும், “இங்கு புதைக்கப்பட்டவர்கள் யார், அவர்களைப் புதைத்தவர்கள் யார்?” என்ற புதிரைத் தீர்க்க முயற்சிப்பதை…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.