அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9267 topics in this forum
-
தமிழர்களின் யதார்த்தமான கோரிக்கைகளை NPP மதிக்க வேண்டும் October 20, 2024 — கருணாகரன் — யாராலும் கையாள முடியாத – எவருடைய கட்டுப்பாட்டுக்குள்ளும் நிற்காத ஒரு நிலையை எட்டியுள்ளது தமிழ் அரசியல். அரசியலில் தமிழ் அரசியல் – சிங்கள அரசியல் – முஸ்லிம் அரசியல் எல்லாம் உண்டா என்று அரசியல் அறிஞர்கள் கேட்கலாம். உண்மையான அர்த்தத்தில் அப்படிச் சொல்ல முடியாதுதான். என்றாலும் பிரயோக நிலையில் அப்படிக் குறித்த சமூகங்கள் தங்களுடைய அரசியலை வரையறுத்து வந்திருப்பதால் இலங்கையின் அரசியலில் இத்தகைய அடையாளம் உருவாகி விட்டது. தமிழ்நாட்டில் திராவிட அரசியல், தலித் அரசியல், இந்தியத் தேசிய அரசியல் அல்லது காங்கிரஸ் அரசியல், காவி அரசியல் எனப்படும் பா.ஜ.க அரசியல் போன்றவற…
-
- 0 replies
- 177 views
-
-
கொள்கைகளுக்காக அஞ்சலிப்போம் லக்ஸ்மன் “எமது நாட்டு மக்களின் நீண்ட கால கனவாகக் காணப்பட்ட தேசிய ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. அரசியல் ரீதியாக எமக்கு பல நிலைப்பாடுகள் இருக்கலாம். ஆனால், இனி இந்த நாட்டில் இனவாத அரசியலுக்கு இடமில்லை. எந்த விதத்திலும் மதவாதச் செயற்பாடுகள் எழுச்சி பெறுவதற்கும் இடமளியோம். நாம் போதுமென்ற அளவில் இனவாதத்தினால் பாதிப்பைக் கண்டிருக்கிறோம். ஆறுகள் நிறைய கண்ணீரை கண்டிருக்கிறோம். இன்று நாட்டில் ஒவ்வொருவர் இடையிலும் குரோதமும் சந்தேகமும் அதிகளவில் வலுப்பெற்றுள்ளது. பொருளாதாரம், ஜனநாயகம் என்று பல வகையில் இருக்கலாம். ஆனால், இனி எவரும் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக இனவாத, மதவாத போராட்டங்களை முன்னெடுக்க இடமளியோம் என்று உறுதியளிக்க…
-
- 0 replies
- 176 views
-
-
மீண்டும் உருவாகும் தமிழீழ அச்சம் லக்ஸ்மன் அரசாங்கம் நாட்டுக்குள் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது பற்றிப் பேசிக்கொண்டு அதற்கான எதனையும் செய்யாமல் பாராமுகமாக இருந்து வருகின்றது. இருந்தாலும், தங்களது திட்டமிட்ட செயற்பாடுகளை நகர்த்துகிறது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் ஏற்படுத்தப்பட்ட தீர்மானத்தின் பின்னர் தமிழீழத்தைப் பற்றியும் பிரிவினை பற்றியும் தமிழர்களைவிடவும் சிங்களத் தரப்பினரே பேசிவருகின்றன. கடந்த வாரத்தில், ஐ.நாவில் இலங்கை இராணுவத்தினருக்கு எதிரான பழிவாங்கல் தொடர்பாக ஒரு நிகழ்வு கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில் பேசிய முன்னாள் கடற்படை அதிகாரி ஓய்வு பெற்ற ரியர் அத்மிரல் டி.கே.பி.தசநாயக்க, இலங்கையில் அரசியலமைப்பின் 13 ஆவது தி…
-
- 0 replies
- 176 views
-
-
Published By: RAJEEBAN 09 AUG, 2025 | 12:38 PM மன்னார் மாவட்டம் அண்மைய நாட்களில் பேசு பொருளாக மாறி இருக்கின்றது. மன்னாரில் மேற்கொள்ள இருக்கின்ற பல்வேறு செயற்பாடுகள் மன்னார் மக்கள் மத்தியில் கொதிநிலையை ஏற்படுத்தியிருக்கின்றது. ஏற்கனவே சில பகுதிகளில் அமைக்கப்பட்டு மீளவும் சில இடங்களில் அமைக்கப்பட இருக்கின்ற காற்றாலை மின்சார திட்டமும் எதிர்காலத்தில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு இருக்கின்ற கனியமணல் அகழ்வுச் செயற்பாடும் மன்னார் மாவட்ட மக்களிடையே மிகப்பெரிய பீதியை ஏற்படுத்தியிருக்கின்றது. இலங்கையினுடைய ஏனைய பிரதேசங்களோடு ஒப்பிடுகின்ற பொழுது மன்னார் தீவு தனித்துவமான புவியியல் அமைப்பை கொண்டிருக்கின்ற பிரதேசமாகும். இதிகாச அடிப்படையில் இராமாயணத்தில் கூறப்படுகின்ற ராமர் பாலத்…
-
- 0 replies
- 175 views
- 1 follower
-
-
ஐநாவைக் கையாள்வது ? - நிலாந்தன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தயாரித்த கூட்டுக் கடிதத்தில் தமிழரசுக் கட்சி கைகழுத்திடவில்லை. அதனால் அக்கூட்டுக் கடிதத்தில் முன்னணியும் அதன் தோழமைக் கட்சிகளும் சிவில் சமூகங்களும் கையெழுத்திட்டு அனுப்பி உள்ளன. தமிழரசுக் கட்சியின் கையெழுத்து இல்லை என்பது அடிப்படையில் ஒரு பலவீனம். அதேசமயம் கடிதத்தில் கையெழுத்திடப் போவதில்லை என்ற முடிவை அறிவித்த பொழுது சுமந்திரன் தெரிவித்த கருத்துக்களின்படி தமிழரசுக் கட்சியானது மனித உரிமைகள் பேரவையோடு தனிக் கட்சியாக என்கேஜ் பண்ணப் போகிறது என்று தெரிகிறது. இந்த நிலைப்பாடு, தன்னை ஒரு பெரிய அண்ணனாகக் கருதும் மனோ நிலையில் இருந்துதான் தோன்றுகிறது. கடந்த 16 ஆண்டுகளாக தமிழரசுக் கட்சி அவ்வாறான மூத்த அண்ணன் மனோநிலையைத்…
-
- 0 replies
- 175 views
-
-
03 Aug, 2025 | 11:44 AM ஆர்.ராம் இந்திய எதிர்ப்புவாதத்துக்கு முன்னதாக ஜே.வி.பி. தமிழ் மக்களின் சுயாட்சி, அதிகாரப்பகிர்வு உள்ளிட்ட விடயங்களை முழுமையாக நிராகரித்துள்ளதோடு அதனை தொடர்ச்சியாகவும் பின்பற்றி வருகின்றனர் என்று குறிப்பட்ட இராஜதந்திரியான கலாநிதி. தயான் ஜயத்திலக்க கடந்தகால ஜனாதிபதிகளை விடவும் பிற்போக்குத்தனமாக உள்ளது என்றும் சுட்டிக்காட்டினார். தமிழ்த் தேசிய பிரச்சினைக்கான தீர்வு, மற்றும் மாகாண சபைகளுக்கான தேர்தல் சம்பந்தமாக கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், அதன்பின்னர் 1983ஜுலைக்குப் பின்னர் தெற்கு நிலப்பரப்பில் ஆதிக்கம் செலுத்திய ஒன்றோடொன்று இணைந்த ஆனால் வேறுபடுத்தக்கூடிய இரண்டு அரசியல் நிகழ்வுகள் இருந்தன. ஆதிலொன்ற…
-
- 0 replies
- 175 views
- 1 follower
-
-
நீங்கள் உடல்களை புதைக்கலாம், ஆனால் உங்களால் உண்மையை புதைக்க முடியாது புதைக்கப்பட்ட எலும்புக்கூடுகள் நிலத்தை கிழித்துக்கொண்டு உண்மையை சொல்ல வெளிவருகின்றன - சட்டத்தரணி ரனிதா ஞானராஜா Published By: RAJEEBAN 15 AUG, 2025 | 04:17 PM நீங்கள் உடல்களை புதைக்கலாம், ஆனால் உங்களால் உண்மையை புதைக்க முடியாது, புதைக்கப்பட்ட எலும்புக்கூடுகள் நிலத்தை கிழித்துக்கொண்டு வெளியேவந்து உலகத்திற்கும் மக்களிற்கும் எங்களை உரிய முறையில் புதைக்கவில்லை, எங்களிற்கு நீதி வழங்கப்படவில்லை என தெரிவிக்க வருகின்றன என சட்டத்தரணி ரனிதா ஞானராஜா தெரிவித்துள்ளார். தரிந்து ஜெயவர்த்தன, தரிந்து உடுவரகெதர, எம்எப்எம் பசீர் ஆகியோர் இணைந்து எழுதிய செம்மணி எனும் நூலின் வெளியீடு வியாழக்கிழமை கொழும்பில் இடம்பெற்றவேளை அந…
-
- 0 replies
- 174 views
- 1 follower
-
-
இலங்கையின் அரசியல் அரங்கு களை கட்டிவிட்டது. அரங்காடிகள் எந்த அரங்கில் இணைந்து ஆடி, நடித்து மக்களைக் கவருவதென்பது இம்மாத மத்தியில் தெரிந்துவிடும். ஜனநாயகம் என்ற பெயரில் நடைபெறும் அரசியல் இன்று வியாபாரமாக மட்டுமல்ல விபசாரமாகவும் காணப்படுவதாக உய்த்துணர்ந்தோர் கூறுகின்றனர். அந்த அளவு அரசியலரங்கு அசிங்கப்பட்டுள்ளது. நேற்றுவரை நீ யாரோ, நான் யாரோ என்றிருந்தவர்கள் பதவிகளைப் பெற ஒட்டியுறவாடவும் இணைந்து அரங்காடவும் கட்டியணைக்கவும் தயங்காத நிலையைக் காணலாம் . பொதுமக்களை, வாக்காளர்களை எப்படியாவது ஏமாற்றி தமக்குச் சார்பாக புள்ளடியைப் பெற்று அதன் மூலம் பதவிகளைப் பெற்று வளம் பெற்று வாழ எத்தனிப்போரை அரசியல்வாதிகள் என்கின்றோம். இவர்கள் இணைந்த கூட்டை அரசியல் கட்சிகளென்கின்றோம். கடந்தகால அ…
-
- 0 replies
- 174 views
-
-
திருமலையில் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை கூட்டமைப்பால் வெற்றிகொள்ள முடியுமா? படம் | AFP Photo, ARAB NEWS திருகோணமலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரங்கள் ஓரளவு சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றன. எனினும், தமிழ் மக்கள் மத்தியில் தேர்தல் குறித்து பெரியளவில் ஆர்வம் ஏற்பட்டதாக தெரியவில்லை. இனிவரப் போகும் இரண்டு வாரங்கள்தான் கூட்டமைப்பின் பிரச்சாரங்கள் ஓரளவு தீவிரமடையக் கூடும். ஆட்சி மாற்றம் தமிழ் மக்கள் எதிர்பார்த்தது போன்று பெரியளவில் மாற்றங்களை ஏற்படுத்தவில்லை என்னும் ஆதங்கம் மக்கள் மத்தியில் காணப்படுகிறது. இதன் காரணமாக கூட்டமைப்பின் வேட்பாளர்களால் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியளவில் தாக்கமுள்ள பிரச்சாரங்கள் எதனையும் மக்கள் மத்தியில் மேற்கொள்ள முடியவி…
-
- 0 replies
- 174 views
-
-
இந்தியாவுக்கு பாக்கு நீரிணை நிரந்தர எதிரி. சிங்கள பௌத்த அரசுக்கு பாக்கு நீரிணை நிரந்தர நண்பன், அது வரமும் சாபமும் கலந்த நண்பன் அல்லது அமிர்தமும் நஞ்சும் நிறைந்த நண்பன் அல்லது அமுதமும் நஞ்சும் கலந்த நண்பன். ஈழத் தமிழருக்கு பாக்கு நீரிணை அரை நண்பன். அமிர்தம் என்பது தேவர்கள் அருந்துவதாக கூறப்படும் ஒரு புராண உணவு. அமுதம் என்பது ஈயத்தை தங்கமாக மாற்றும் அழியாமையைக் தரும் ஒரு கற்பனைத் திரவம். இங்கு நஞ்சை கழைந்து அமிர்தத்தை கடைந்தெடுக்கும் அரசியல் வித்தை சிங்கள தலைவர்களுக்கு தெரியும். இந்திய அரசுக்கு பாக்கு நீரிணை எப்போதும் அதன் முழு எதிரியாய் உள்ளது. ஆதலாற்தான் தனுஷ்கோடி -- தலைமன்னார் தரைப்பாலத்தை அமைப்பதன் வாயிலாக அந்தப் பாக்கு நீரிணையை தனது நண்பனாக்க இந்தியா முயல்கிறது. சிங்கள…
-
- 0 replies
- 173 views
- 1 follower
-
-
நொவம்பர் மாதத்தில் வரும் இரண்டு நினைவு நாட்கள் - நிலாந்தன் வெள்ளம்,மழை,புயல் எச்சரிக்கை… எல்லாவற்றையும் மீறி மாவீரர் நாள் பரந்த அளவில்,பெரியளவில் அனுஷ்டிக்கப்பட்டிருக்கிறது. ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்த பின்னரான 17ஆவது மாவீரர் நாள் இது. நொவம்பர் மாதத்தில் வரும் இரண்டாவது தியாகிகளின் நினைவு நாள் இது. இம்மாதம் 13ஆம் திகதி,ஜேவிபி அதனுடைய தியாகிகளின் நாளை அனுஷ்டித்தது. அதே மாதத்தில் மாவீரர் நாளும் அனுஷ்டிக்கப்படுவது ஒரு நூதனமான ஒற்றுமை. இச்சிறிய தீவில் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்த இரண்டு பெரிய அமைப்புகளின் தியாகிகள் தினம் இவ்வாறு ஒரே மாதத்தில் வருவது ஒரு நூதனமான ஒற்றுமைதான். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதலாவது மாவீரர் தன் உயிரைத் தியாகம் செய்த நாள் மாவீரர் நாளாக அ…
-
- 0 replies
- 173 views
-
-
புதைகுழி அரசியலிருந்து விடுபடுதல் July 6, 2025 — கருணாகரன் — சில மாதங்களுக்கு முன்பு, நிலங்க அலெக்ஸாண்டர் என்ற சிங்கள எழுத்தாளரின் கதைகளுக்கு முன்னுரை எழுத நேர்ந்தது. அவருடைய கதைகளில் ஒன்று, “கொலை நிலத்தில் ஓலமிடும் உள்ளங்கள்” என்பது. முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய்ப் பகுதியில் அண்மையில் (2024)கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழிகளைப்பற்றிய – மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளைப் பற்றிய கதை. சரியாகச் சொன்னால், அந்தப் புதைகுழிகளை – எலும்புக்கூடுகளை – பகுப்பாய்வு செய்வதற்கு நியமிக்கப்பட்ட துறைசார்ந்த பேராசிரியரின் அரசியல் – உளவியல் பற்றிய கதை. நிலந்த அந்தக் கதையை எழுத்தாளருக்குரிய (மனிதருக்குரிய) நேர்மையான முறையில் எழுதியிருந்தார். அந்தக் கதையில் இடம்பெறுகின்ற பேராசிரியர் பண்டுக என்ற ப…
-
- 0 replies
- 173 views
-
-
Published By: Vishnu 08 Sep, 2025 | 01:02 AM (நா.தனுஜா) இலங்கையில் மனிதகுலத்துக்கு எதிராக சக மனிதன் நிகழ்த்திய அட்டூழியங்கள் பற்றிய உண்மைகள் வெளிப்படுத்தப்பட்டு, நீதி நிலைநாட்டப்படும் எனக் காத்திருந்த காலமும், அந்த அட்டூழியங்களின் சாட்சியாக அமைதிகாத்து நின்ற நிலமும், நீளும் காத்திருப்பின் வலி தாழாமல் இன்று தம் அமைதி கலைத்துப் பேச ஆரம்பித்திருக்கின்றன. இப்போது செம்மணி நிலம் உரத்துச் சொல்லிக்கொண்டிருக்கும் மனிதப்பேரவலக்கதை உலகின் மனசாட்சியை உலுக்க ஆரம்பித்திருக்கிறது. இலங்கையில் இனவழிப்போ, போர்க்குற்றங்களோ இடம்பெறவில்லை எனக் காலம் காலமாக மறுத்து வந்தவர்களை வாயடைக்கச்செய்திருக்கிறது. கிருஷாந்தி குமாரசுவாமி கொல்லப்பட்டு 29 ஆண்டுகள் நாமறிந்த செம்மணி நிலத்தின் கதை கிருஷாந்தி…
-
- 0 replies
- 172 views
- 2 followers
-
-
இலங்கையில் புதிய அரசியலமைப்பு முயற்சிகள் துரிதப்படுத்தப்படுவதாக ஸ்ராலினுக்கு யார் சொன்னது? January 20, 2026 — வீரகத்தி தனபாலசிங்கம் — பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் தமிழ் தேசியப் பேரவை தூதுக் குழுவினர் தன்னைச் சந்தித்த ஒரு மாத காலத்திற்குள், தமிழ்நாடு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்ராலின் “இலங்கை தமிழர்களின் மனக்குறைகளை நிவர்த்தி செய்யக்கூடிய அரசியலமைப்புச் செயன்முறையை முன்னெடுக்குமாறு இலங்கை அரசாங்கத்துக்கு நெருக்குதலைக் கொடுப்பதற்கு இராஜதந்திர ரீதியான நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும்” என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். தன்னை சந்தித்த இலங்கை தமிழ் அரசியல் தலைவர்கள் தற்போது தங்களது நாட்…
-
- 0 replies
- 171 views
-
-
அநுரவின் ஐ.நா உரையும் சர்வதேச அரசியல் பின்னணியும் – இலங்கை இராணுவத்துக்கு ஐநா பயிற்சி! September 28, 2025 12:09 am *சர்வதேச போர்க்குற்ற விசாரணை என்று கூறப்படும் நிலையில், அநுரவுடன் கைகோர்க்கும் ஐநா… *தமிழ்த் தரப்பில் ஒருமித்த குரல் செயற்பாடுகள் அற்ற தன்மையை சாதகமாக பயன்படுத்தும் சர்வதேசம்… *கனடா அரசின் இராணுவ நிபுணர் கொழும்பில் பயிற்சி வழங்கியுள்ளார். அ.நிக்ஸன்- — — — ஜெனீவா மனித உரிமைச் சபையில் இலங்கைத்தீவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் பற்றிய சர்வதேச விசாரணை என்று தொடர்ச்சியாகப் பேசப்பட்டு வரும் பின்னணில், ‘இலங்கை அரசு’ என்ற கட்டமைப்பை காப்பாற்றும் முயற்சியிலேயே மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகள் தீவிரமாக ஈடுபடுகின்றன. அத்துடன், 1920 இல் ஆரம்பித்த சிங்கள – தமிழ் முரண்பாட…
-
- 1 reply
- 171 views
-
-
நாட்டில் காணப்படும் பொருளாதாரச் சிக்கல்கள் காரணமாக கடந்த இரு ஆண்டுகளில் 25 இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர். இவர்களில் 24 வீதமானோர் வேலை வாய்ப்புகளுக்காக வெளிநாடுகளுக்குப் பயணமாகியுள்ள நிலையில், ஏனையோர் வேறு நோக்கங்களுடன் நாட்டை விட்டு வெளியேறியிருக்கின்றனர் என்று இலங்கை மத்திய வங்கி கூறியிருக்கின்றது. இவற்றுக்கு மேலதிகமாக சட்டவிரோதமாக நாட்டை விட்டு வெளியேறுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கின்றது. 2022ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதாரப் பின்னடைவு இலங்கையை பல்வேறு நெருக்கடிகளுக்குள் தள்ளியிருக்கின்றது. அந்த நெருக்கடிகளின் தாக்கங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் நாட்டு மக்களுக்கு அழுத்தங்களை ஏற்படுத்தியிருக்கின்றன. இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதா…
-
- 0 replies
- 171 views
-
-
செயற்திட்டம் இல்லாமல் வெறுமனே கோரிக்கைகளை முன்வைக்கும் தமிழ்த் தேசியவாத அரசியல் பாரம்பரியம் (நூல் விமர்சனத்தின் வழியாக ஒரு அரசியல் பார்வை) January 14, 2026 — ஷோபாசக்தி — மகாகவி பாரதியின் ‘ஊருக்கு நல்லது சொல்வேன்’ என்ற கவிதை வரியைத் தலைப்பாகக் கொண்டு, மூத்த பத்திரிகையாளர் வீரகத்தி தனபாலசிங்கம் பல வருடங்களுக்கு முன்பு தனது ஆசிரிய தலையங்கங்களின் தொகுப்பு நூல் ஒன்றை வெளியிட்டார். அந்த கவிதையின் அடுத்த வரி ‘எனக்குண்மை தெரிந்தது சொல்வேன்’. இந்த வரிக்குப் பொருத்தமாகத் அவர் எழுதி அண்மையில் வெளிவந்திருக்கும் கட்டுரைத் தொகுப்பே ‘தமிழ்த் தேசியவாத அரசியலின் எதிர்காலம்’. இலங்கையிலுள்ள ‘மார்க்ஸியக் கற்கைகளுக்கான சண்முகதாசன் நிலையத்தின்’ வெளியீடாக வந்திருக்கும் இந்த நூலில் எட்ட…
-
- 0 replies
- 171 views
-
-
அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுடன் அரசியல் தீர்வு காணப்படவேண்டும்; சுமந்திரன் இலங்கையில் தேசிய இனப்பிரச்சினைக்கு அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுடன் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்று ஜெனிவா மாநாட்டில் இந்தியா வலியுறுத்தியுள்ளது. இந்தியாவின் இந்த நிலைப்பாட்டை – கருத்தை நாம் வரவேற்கின்றோம். நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். இலங்கையில் அமுலில் உள்ள பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். பயங்கரவாதத் …
-
- 0 replies
- 170 views
-
-
மறையாத ஜூலைக் கலவர வடு லக்ஸ்மன் இலங்கையில் இனப் படுகொலைக்கான ஏதுக்கள் பிரித்தானியரிடமிருந்து சுதந்திரம் கிடைத்தது முதல் காணப்பட்டிருந்ததாகக் கருத்துக்கள் வெளியிடப்படுகின்றன. அதற்கான ஆதாரங்களாக சுதந்திரத்துக்குப் பின்னர் நடைபெற்ற 1956 கலவரம், 1983 கறுப்பு ஜூலைக் கலவரம், தொடர்ச்சியாக நடைபெற்ற யுத்த கால வன்முறைகள், படுகொலைகள் மற்றும் வடக்குக் கிழக்கு பிரதேசங்களில் நடைபெற்ற திட்டமிட்ட குடியேற்றங்கள் போன்ற ஆதாரங்கள் பட்டியலிடப்படுகின்றன. தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட திட்டமிடப்பட்ட இனப்படுகொலையின் வரலாற்றுப் பூர்வ சாட்சிகள் காணப்பட்டாலும் அவற்றினை எந்தவித பொறுப்புக்கூறலுமின்றி, கடந்து செல்கின்ற நிலைப்பாட்டினையே இலங்கை நாட்டின் அரசாங்கங்கள் கொண்டிருக்கின்றன. இதில் மாற்றத்தினை…
-
- 0 replies
- 170 views
-
-
நடு இரவில் வந்து நாலு பேருக்கு தெரியாமல் வெனிசுலாவை வெருட்டி விட்டு அந்த நாட்டின் ஜனாதிபதியை கைது செய்து கொண்டு போய் இருக்கிறது ஏகாதிபத்தியம்( Imperialism) . அமெரிக்காவின் இந்தச் செயல் பெரும் சர்வாதிகார நிலையை சொல்லி இருக்கிறது. அமெரிக்காவின் எதிரியான வெனிசுவேலா ஜனாதிபதி Maduro வின் அரசியல் கொள்கைக்கு எதிராக செயல்ப்பட்ட வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவருமான மரியா கொரினா மச்சாடோவுக்கு சமாதான பரிசை கொடுத்ததன் மூலம் வெனிசுவேலாவுக்குள் அமெரிக்க நலன்சார் நகர்வுகளுக்கு இது உதவியிருக்கிறதா என்றும் எண்ணத் தோண்றுகிறது. இந்த நோபல் பரிசை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுவதாக மரியா கொரினா மச்சாடோ குறிப்பிட்டார். அமெரிக்காவின் இந்த நடவடிக்கை சர்வதேசரீதியிலான ஒ…
-
- 0 replies
- 169 views
-
-
தமிழரசுக்கட்சி கூட்டுக் கடிதத்தில் கையெழுத்திடாது? நிலாந்தன். செம்மணிப் புதைகுழிக்குள் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களை அடையாளம் காண்பதற்கு நீதிமன்றம் மக்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.இம்மாதம் ஐந்தாம் திகதி குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் மக்கள் பொருட்களை அடையாளம் காட்டலாம்.அது ஒரு நீதிமன்றத்தில் ஆளுகைக்கு உட்பட்ட நடவடிக்கை என்ற காரணத்தால் அதற்குரிய ஒழுங்குகளையும் நீதிமன்றம் அறிவித்துள்ளது. அரசாங்கம் இந்த விடயத்தில் சீரியஸாக இருக்கிறது, உண்மையாக இருக்கிறது என்று கூறுபவர்களுக்கு இது உற்சாகமூட்டக்கூடியது.குறிப்பாக அடுத்த ஜெனீவா கூட்டத்தொடரை நோக்கி அரசாங்கம் உழைத்து வருவதை இது காட்டுகிறது. ஊழல்களுக்கு எதிராக அரசாங்கம் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஆர்…
-
- 0 replies
- 169 views
-
-
நுகேகொடை கூட்டம் எதிர்க்கட்சியினருக்கு கை கொடுக்குமா எம்.எஸ்.எம்.ஐயூப் சில எதிர்க்கட்சிகள் இம் மாதம் 21 ஆம் திகதி நுகேகொடையில் நடத்தவிருக்கும் அரச எதிர்ப்பு கூட்டத்தின் நோக்கத்தை மாற்றிக்கொண்டுள்ளதாக தெரிகிறது. ஆரம்பத்தில் அக்கட்சிகள் அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக தாம் இந்தக் கூட்டத்தை நடத்துவதாக தெரிவித்தன. அரசாங்கம் அரசியலமைப்பு ரீதியான சர்வாதிகார ஆட்சியை நடத்தி வருவதாகவும் தனிக்கட்சி ஆட்சியை நிறுவ முயல்வதாகவும் குற்றஞ்சாட்டின. பொதுப் பணத்தில் பிரித்தானியாவுக்கு தனிப்பட்ட பயணம் ஒன்றை மேற்கொண்டதாக குற்றஞ்சாட்டி பொலிஸார் கடந்த ஓகஸ்ட் மாதம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை கைது செய்தனர். இதனை அடுத்து முன்னாள் ஜனாதிபதிகளினதும் அவர்களின் விதவைகளினதும் சிறப்புரிமை…
-
- 0 replies
- 169 views
-
-
தமிழக தேர்தல் களம்: சில கருத்துகள் January 30, 2026 — கருணாகரன் — சென்னைப் புத்தகக் காட்சிக்குச்சென்று திரும்பியவுடன் இலங்கையில் சந்தித்த ஊடகத்துறை நண்பர்கள் கேட்ட முதற்கேள்வி, “தமிழ் நாட்டின் அரசியல் நிலவரம் எப்படி உள்ளது? வரப்போகின்ற சட்டமன்றத் தேர்தலில் யாருக்கு அல்லது எந்தத் தரப்புக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்?” என்பதே. தமிழ்நாட்டுக்குச்சென்று வந்த ஒருவருடன் பேசுவது, அங்குள்ள களநிலவரத்தை அறிவதற்குக் கூடுதலாக உதவக் கூடும் என்பது அவர்களுடைய எதிர்பார்ப்பு. நான் சென்றது புத்தகக்காட்சிக்காக. அங்கே என்னுடைய நான்கு நூல்களின் வெளியீடு. சக எழுத்தாளர்களின் நூல் வெளியீடுகளிலும் உரையாடல் அரங்குகளிலும் கலந்து கொண்டேன். இவை முடிய இலக்கிய, பதிப்புத் துறையைச் சேர்ந்த சில நண்பர்களைச்…
-
- 0 replies
- 168 views
-
-
வரதரின்(2025) புதிய முயற்சிகள் July 19, 2025 — கருணாகரன் — ஈ.பி.ஆர்.எல்.எவ் வின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரனும் வடக்குக் கிழக்கு இணைந்த மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாளும் கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். இருவரும் ஒரு காலத்தில் பத்மநாபா தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எவ் என்ற ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி இயக்கத்தில் பொறுப்பான பதவிகளில் செயற்பட்டவர்கள். 1988 இல் வடகிழக்கு இணைந்த மாகாணசபையில் கூட முதன்மைப் பொறுப்புகளில் இருந்தவர்கள். பின்னாளில் வெவ்வேறு நிலைப்பாடுகளால் இருவேறு அணிகளாகியிருந்தனர். இப்போது கூட வெவ்வேறு அணிகளாக இருந்தாலும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். இந்தச் சந்திப்பு தனிப்பட்டதல்ல. அ…
-
- 0 replies
- 168 views
-
-
22 ஆவது திருத்தத்தை சாத்தியமாக்கிய இரு தரப்பு இணக்கப்பாடு நீடிக்க வேண்டும் 25 OCT, 2022 | 07:43 AM கலாநிதி ஜெகான் பெரேரா அரசியலமைப்புக்கான 22 வது திருத்த நிறைவேற்றம் ஒரு அதிர்ச்சி போன்று வந்தது.முதலில் இந்த திருத்தம் மீதான பாராளுமன்ற விவாதத்தை பின்போடுவதற்கு தீர்மானிக்கப்பட்டபோது அண்மைய எதிர்காலத்தில் அது மீண்டும் விவாதத்துக்கு எடுக்கப்படாது அல்லது எடுக்கப்பட்டாலும் நிறைவேற்றப்படாது என்றே தோன்றியது. அரசாங்க உறுப்பினர்களுக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையே இரு சர்ச்சைக்குரிய வாடயங்களில் கருத்து வேற்றுகை இருந்தது.கட்சிகளுக்கு இடையில் மாத்திரமல்ல கட்சிகளுக்குள்ளும் கருத்துவேறுபாடுகள் நிலவின. முதலா…
-
- 0 replies
- 168 views
- 1 follower
-