அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9267 topics in this forum
-
Published By: DIGITAL DESK 2 27 JUL, 2025 | 12:41 PM (லியோ நிரோஷ தர்ஷன்) தாய்வானில் போர் ஏற்பட்டால் அது இந்தியப் பெருங்கடலில் பாதிப்பை ஏற்படுத்தாது. ஏனெனில் இந்தியப் பெருங்கடல் பிராந்தியம் அமைதிக்கான பிராந்தியம் என்பதை புவிசார் அரசியல் போட்டியாளர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். பிராந்தியத்தின் மூலோபாய முக்கியத்துவத்தையும், இங்கு ஸ்திரத்தன்மையை நிலைநாட்டுவதன் அவசியத்தையும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார். புவிசார் அரசியல் பதட்டங்கள் மற்றும் அவற்றால் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்திற்கு ஏற்படக்கூடிய சாத்தியமான தாக்கங்கள் குறித்து, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கொழும்பில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தினார். இலங்…
-
- 0 replies
- 167 views
- 1 follower
-
-
எரிபொருள் வரிசையில் நின்ற மக்களும் தொங்கு சபைகளும் - நிலாந்தன் கடந்த திங்கட்கிழமை யாழ்ப்பாணம் திருநெல்வேலிச் சந்தையில்,இஞ்சி வாங்கினேன். ஒரு கிலோ 3000 ரூபாய். ஏன் அவ்வளவு விலை என்று கேட்டேன். “இஸ்ரேலும் ஈரானும் மோதத் தொடங்கி விட்டன. அதனால் விலையை ஏற்றி விட்டார்கள்” என்று வியாபாரி சொன்னார். “மேற்காசியாவில் இருந்தா எங்களுக்கு இஞ்சி வருகிறது?” என்று கேட்டேன். ”எங்கிருந்து வருகிறதோ தெரியாது. ஆனால் சண்டை தொடங்கியதால் விலை கூடிவிட்டது என்று மொத்த வியாபாரிகள் கூறுகிறார்கள்” என்று அவர் சொன்னார். அதே நாளில் யாழ்ப்பாணத்தில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன் நீண்ட வரிசைகளில் மக்கள் காத்து நின்றார்கள். மேற்காசியாவில் போர் தொடங்கியதால் எரிபொருள் தட்டுப்பாடு வரலாம் என்ற ஊகம்;பயம்…
-
- 0 replies
- 167 views
-
-
விஜய்;கமல்;போராளிகள்;தேர்தல்? - நிலாந்தன் நடிகர் விஜய் தொடங்கியிருக்கும் கட்சி தொடர்பாக அண்மையில் நடிகர் கமலஹாசன் ஒரு கருத்துத் தெரிவித்திருந்தார். கூட்டத்துக்கு வருபவர்கள் எல்லாரும் வாக்குப் போட மாட்டார்கள் என்ற பொருள்பட அக்கருத்து அமைந்திருந்தது. அது விஜய்க்கு மட்டுமல்ல தனக்கும் பொருந்தும் என்று கமலஹாசன் கூறியிருக்கிறார். சமூகத்தில் வெவ்வேறு துறைகளின்மூலம் தாங்கள் பெற்ற பிரபல்யத்தை,செல்வாக்கை தேர்தலில் முதலீடு செய்வது என்பது தேர்தல்மைய அரசியலில் ஒரு பிரதான போக்கு. ஆனால் அதற்காக ரசிகர்கள் எல்லாருமே வாக்களிப்பார்கள் என்று இல்லை. மாணவர்கள் எல்லாருமே ஆசிரியருக்கு வாக்கு போடுவார்கள் என்று இல்லை. சமூகத்துக்காக தியாகம் செய்தவர்கள் எல்லாரும் தேர்தலில் வெல்வார்கள் என்று இல்லை.…
-
- 0 replies
- 167 views
-
-
கலாநிதி ஜெகான் பெரேரா நாட்டை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் ஊழலுக்கு முடிவுகட்ட வேண்டும் என்பதே ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் முக்கியமான வாக்குறுதிகளில் ஒன்றாக இருந்தது. அந்த கட்சி மீது மக்களுக்கு பெரும் கவர்ச்சி ஏற்படுவதற்கும் அதுவே பிரதான காரணமாகவும் இருந்தது. உயர் மட்டத்தில் இருந்து அடிமட்டம் வரை தலைவிரித்தாடும் ஊழல் 1970 களின் பிற்பகுதியில் திறந்த பொருளாதாரம் அறிமுகப்படுத்தப்பட்டதை தொடர்ந்து அரசாங்கத்துறையையும் தனியார்துறையையும் தழுவியதாக வழமைானதாக்கப்பட்டுவிட்டது. பாரிய அபிவிருத்தி திட்டங்களும் வெளிநாட்டு உதவிகளும் அதிகாரப் பதவிநிலைகளில் இருந்தவர்கள் ஊழலில் ஈடுபடுவதற்கான வாய்ப்பை வழங்கின. 2022 பொருளாதார வீழ்ச்சியும் அதன் விளைவாக மக்க…
-
- 0 replies
- 166 views
- 1 follower
-
-
‘மிஸ்டர் கிளீன்’ இமேஜை சிதைக்கும் சதி முருகானந்தன் தவம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது இலங்கை அரசியலில் கொதி நிலையை உருவாக்கியுள்ளதுடன் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான ஜே .வி.பி.-என்.பி.பி. அரசாங்கத்திற்கு கடும் நெருக்கடிகளையும் அழுத்தங்களையும் ஏற்படுத்தி விட்டுள்ளது. அதுமட்டுமன்றி ஜே .வி.பி.-என்.பி.பி. அரசாங்கத்தின் ஆளுமைத்திறனையும் அரசியல் அனுபவத்தையும் மக்கள் நம்பிக்கையையும் கேள்விக்குட்படுத்தி அரசியல் பழிவாங்கலில் ஈடுபடும் ஒரு சாதாரண அரசாங்கமாகவே அருவருப்புடன் பார்க்க வைத்துள்ளது. “சட்டம் அனைவருக்கும் சமம்.முன்னாள் ஜனாதிபதியாகவிருந்தாலும் தவறு செய்திருந்தால் சட்டம் பாயும்’’என ஜே .வி.பி.-என்.பி.பி.அரசாங்கம் பீற்றிக்கொண்டாலும் அவ்வாறு பீற…
-
- 0 replies
- 166 views
-
-
எதிர்க்கட்சிகளின் ஒன்றிணையும் முயற்சி அரசாங்கத்துக்கு சவாலாக அமையுமா? Veeragathy Thanabalasingham on November 4, 2025 Photo, GETTY IMAGES மிகப் பெரிய வாக்கு வங்கியைக் கொண்ட தனியொரு அரசியல் கட்சி என்ற வகையில் ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக மற்றைய கட்சிகள் குறிப்பாக, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் இடதுசாரிக் கட்சிகளும் கூட்டணி அமைத்து தேர்தல்களில் போட்டியிட்ட காலம் ஒன்று இருந்தது. எஸ்.டபிள்யூ. ஆர்.டி. பண்டாரநாயக்க தொடக்கம் அவரது மனைவி சிறிமாவோ பண்டாரநாயக்க, மகள் சந்திரிகா குமாரதுங்க மற்றும் மகிந்த ராஜபக்ஷ ஆகியோர் தலைமையில் சுதந்திர கட்சி இருந்த வரை ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிரான இந்தக் கூட்டணி அரசியல் தொடர்ந்தது. கடந்த நூற்றாண்டில் சுதந்திர கட்சி தலைமையிலான கூட்டணிகள் வெற்றி …
-
- 0 replies
- 166 views
-
-
தேவையற்ற விவகாரங்களில் தமிழர்களின் கவனம் திசை திருப்பப்படுகிறது. --- --- --- *1970 களில் விடுதலை இயக்கங்களை உருவாக்கிய காரணங்கள், 2009 இற்குப் பின்னர், எவ்வித தடைகளும் இன்றி, அரசாங்கத்தால் தொடரப்படுகிறதே! பண்டாரநாயக்கா, ஜேஆர் - இன்றைய அநுர வரை... *புவிசார் அரசியல் போட்டிகளை நன்கு பயன்படுத்தும் இலங்கை.. *இந்திய நிதியுதவி எங்கு பயன்படுத்தப்படும்? --- --- --- இலங்கை அரசாங்கம் குறிப்பாக, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், மிகவும் நுட்பமாக காய்நகர்த்தி, பொருளாதாரத்தை முன்னேற்ற பல திட்டங்களை வகுத்துள்ளது. சமகால புவிசார் அரசியல் போட்டிகளை கன கச்சிதமாக பயன்படுத்தி இந்தியாவிடம் இருந்து பெருமளவு நிதிகளையும் - நன்கொடைகளையும், அபிவிருத்தித் திட்டங்கள் ஊடாக இலங்கை பெறுகிறது. வெளிநாட்டு…
-
- 0 replies
- 165 views
- 1 follower
-
-
அசிங்க அரசியலும் அடாவடி அரசியலும் முருகானந்தன் தவம் தியாகி திலீபனின் 38ஆவது ஆண்டு நினைவு தினம் அரசின் ,நீதிமன்றங்களின், படைகளின் தடைகள், அடக்கு முறைகள், அடாவடிகள் எதுவுமின்றி அண்மையில் நடந்து முடிந்துள்ளது. இம்முறை இவ்வாறாக அரச தரப்புக்களின் அடக்கு முறைகள் அடாவடிகள் இல்லாதபோதும் தமிழ்த் தேசியம் பேசும் அரசியல் கட்சியான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரின் அடாவடிகள், அடக்கு முறைகளுடன் நடந்து முடிந்துள்ளதுதான் தமிழ் மக்களை விசனப்படுத்தியுள்ளது. செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வு இடத்திற்கு அஞ்சலி செலுத்த வந்த தேசிய மக்கள் சக்தி அரசின் அமைச்சர் சந்திரசேகர் தலைமையிலான எம்.பிக்கள் குழுவினர் விரட்டியடிக்கப்பட்டமை தொடர்பில் தமிழ் மக்கள் மத்தியில் எழுந்த எதிர்ப்புக்கள், கண்டனங்கள், கவல…
-
- 0 replies
- 164 views
-
-
நினைவேந்தல் நிகழ்வுகளும் தமிழர் அரசியலும் December 2, 2025 — வீரகத்தி தனபாலசிங்கம் — இலங்கை முழுவதும் இயற்கையின் சீற்றத்தினால் பேரிடருக்கு உள்ளாகியிருக்கின்ற நிலைவரத்துக்கு மத்தியிலும் கடந்த வாரம் வடக்கு, கிழக்கில் மாவீரர் வாரம் முன்னென்றுமில்லாத வகையில் ஆயிரக்கணக்கான மக்களின் பங்கேற்புடன் உணர்வெழுச்சியுடன் கொண்டாடப்பட்டிருக்கிறது. இறுதி நாளான நவம்பர் 27 ஆம் திகதி இடம்பெற்ற பிரதான நினைவேந்தல் நிகழ்வுகளில் பெருமளவில் மக்கள் அணிதிரண்டது குறித்து செய்திகளை வெளியிட்ட சில ஊடகங்கள் விடுதலை புலிகளின் காலத்தில் கூட இந்தளவுக்கு பிரமாண்டமானதாக மாவீரர்தின நிகழ்வை காணக்கூடியதாக இருந்ததில்லை என்று கூறியிருந்தன.. விடுதலை புலிகள் இயக்கம் தொடர்ந்தும் தடைசெய்யப்பட்டிருக்கின்ற போதிலு…
-
- 0 replies
- 164 views
-
-
மனிதாபிமானத்தின் தராசில் இனவழிப்பும் இனச் சுத்திகரிப்பும்: எது கனமானது? Photo, THE ECONOMIST இனவழிப்பு (Genocide) – இன சுத்திகரிப்பு (Ethnic Cleansing) இரு வார்த்தைகளில் உள்ள நுண்ணரசியல் குறித்து விளங்கிக்கொள்ள வேண்டியதொரு புள்ளியில் இன்று நாம் இருப்பதாகத் தோன்றுகின்றது. ஓர் இன, மத அல்லது சமூகக்குழுவை முழுமையாக அழித்துவிடும் நோக்கத்துடன் திட்டமிட்டு செய்யப்படும் கொலைகள் இனவழிப்பு எனப்படுகின்றது. இது பல்வேறு முறைகளில் முன்னெடுக்கப்படலாம். கொலைகள், பாலியல் வன்முறைகள், மொழி மற்றும் கலாசார ஒழிப்புக்கள் இதனுள் உள்ளடங்கும். இது சர்வதேச சட்டத்தின் கீழ் (1948 UN Genocide Convention) தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளதொரு குற்றமாகும். இதன் ஒரே நோக்கு குறிப்பிட்ட குழுமத்தினை அழிப்பது மட…
-
- 0 replies
- 164 views
-
-
அனுர எதைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்? – நிலாந்தன். ரணில் ஒரு “வலிய சீவன்” என்று பல ஆண்டுகளுக்கு முன்பு நான் ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். ஒர் அமீபாவைப் போல எல்லா நெருக்கடிகளுக்குள்ளும் தன்னை சுதாகரித்துக் கொண்டு,சுழித்துக் கொண்டு,வளைந்து நெளிந்து விட்டுக்கொடுத்து,தன்னைத் தற்காத்துக் கொள்ளும் வல்லமை அவருக்கு உண்டு என்ற பொருளில் அவ்வாறு கூறியிருந்தேன்.ஆனால் அண்மையில் நீதிமன்றத்தில் அவருடைய வழக்கறிஞர்கள் அவரைப் பிணை எடுப்பதற்காக சுட்டிக்காட்டிய நோய்களின் அடிப்படையில் சிந்தித்தால், அவர் எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபடுவாரா என்ற சந்தேகம் ஏற்படுகிறது.அவருடைய சட்டத்தரணிகள் தெரிவித்திருக்கும் அத்தனை நோய்களும் அவரைப் பாதிக்குமாக இருந்தால் அவர் ஓர் ஆரோக்கியமான ஆளாக இருக்க முடியாத…
-
- 0 replies
- 164 views
-
-
எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழ் மக்கள் தமக்குரிய பிரதிநிதித்துவங்களைப் பெற்றுக் கொள்வார்களா? இழந்தவற்றை மீட்டுக்கொள்வார்களா அல்லது இருந்தவற்றையும் இழந்துவிடுவார்களா என்ற ஆதங்கம் தமிழ் மக்கள் மத்தியிலே உருவாகியுள்ளது. பெரும்பான்மையினத்தவர்கள் ஆட்சியைக் கைப்பற்ற வரிந்துகட்டிக்கொண்டு தேர்தலில் களமிறங்கியுள்ள நிலையில், தமிழ் மக்கள் தமது இருப்பை உறுதிப்படுத்தவும் வெளிப்படுத்தவும் வேண்டிய நிலையில் பொதுத்தேர்தலை எதிர்நோக்கியுள்ளனர். ஆனால் வழமைபோன்று தனக்கு மூக்குப் போனாலும் பரவாயில்லை தன்னினத்திற்கு சகுனப் பிழையாக வேண்டும். தனக்குக் கிட்டாத மக்கள் பிரதிநிதித்துவம் என்ற பாராளுமன்ற உறுப்பினர் பதவி இன்னுமொரு தமிழனுக்குக் கிட்டக்கூடாது என்ற சிந்தனையுடனும் தேர்தல் களமாடப் பல தம…
-
- 0 replies
- 164 views
-
-
அரசினை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டம் (PSTA): தேசிய மக்கள் சக்தி வழிதவறிச் செல்கிறதா? Photo, Anura Kumara Dissanayake fb page வரலாறு மீண்டும் மீண்டும் எடுத்துக் காட்டியுள்ளபடி, பிரஜைகளின் நடத்தைகளைக் கட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் அடக்குமுறை நடவடிக்கைகள், அரசியல் ரீதியான சட்டபூர்வத்தன்மையை வலுவிழக்கச் செய்து, அரசாங்கத்திற்கு எதிரான உணர்வுகளைத் தூண்டிவிடுகின்றன. சோவியத் ஒன்றியம் இதற்கு ஒரு சிறந்த உதாரணமாகும். அடக்குமுறையானது பெரும்பாலும் கருத்து வேறுபாடுகளை ஒடுக்குவதை விட, சமூக இயக்கங்களையும் அரசியல் பங்கேற்பையும் ஊக்குவிக்கவே செய்கின்றது. ஜனநாயகம் வெற்றியடையவும், நிலையான ஆட்சி வேரூன்றவும் வேண்டுமானால், அரசாங்க மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் பிரஜைகளை உள்வாங்கப்பட…
-
- 0 replies
- 163 views
-
-
-ஐ.வி.மகாசேனன்- மக்கள் போராட்டங்களை சீராக மதிப்பீடு செய்வதன் மூலமே எதிர்கால அரசியல் இலக்குகளை திட்டமிட்டு பயணிக்கக்கூடியதாக அமைகின்றது. ஈழத்தமிழ் அரசியலில் மிக சமீபத்திய மக்களின் தன்னெழுச்சியான போராட்டமாக அமைவது ‘அணையா விளக்கு’ போராட்டமாகும். செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் சர்வதேச கண்காணிப்பை வலியுறுத்தி, ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் கவனத்தை ஈர்க்கும் நோக்கோடு முன்னெடுக்கப்பட்டது. மக்கள் செயல் என்ற தன்னார்வ இளைஞர் கட்டமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த போராட்டத்தில் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள், மதத் தலைவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள், அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். ஜூன் 23 – 25 ஆம் திகதிகளில் நடைபெற்ற இப்போராட…
-
- 0 replies
- 162 views
- 1 follower
-
-
நினைவுகூர்தலுக்கான ஒரு பொது ஏற்பாட்டுக்குழு எதிர்காலத்தில் சாத்தியமா? நிலாந்தன்! கடந்த வாரம் திலீபன் தொடர்பான எனது கட்டுரையில் திலீபனின் படம் ஒன்று காணப்பட்டதனால் முகநூல் நிர்வாகம் எனது முகநூல் கணக்கை 24 மணித்தியாலங்களுக்கு கட்டுப்படுத்தி வைத்திருந்தது.எனது நண்பர்கள் பலரும் அவ்வாறு தமது முகநூல் கணக்கு முடக்கப்பட்டதாக தெரிவிக்கிறார்கள். குறிப்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தன்னுடைய கணக்கு முடக்கப்பட்டதாக நாடாளுமன்றத்தில் பேசியிருக்கிறார்.உலகம் முழுவதும் வியாபித்திருக்கும் ஒரு சமூக வலைத்தளமானது திலீபனின் படத்தை தனது சமூகத் தராதரங்களை மீறும் ஒன்றாகக் கருதுகின்றது.இவ்வாறு உலகளாவிய சமூகவலைத்தளம் ஒன்றினால் தடை செய்யப்பட்ட ஒரு படத்துக்குரியவரை தமிழ் மக்கள் எப்படி அஞ்சலித…
-
- 0 replies
- 162 views
-
-
Published By: RAJEEBAN 01 AUG, 2025 | 04:01 PM ஜூலை மாத நடுப்பகுதியில் பொதுமக்களை போராளிகளுடன் வித்தியாசப்படுத்தி பார்க்காத காசாவின் சுகாதார அமைச்சு யுத்தத்தின் போது கொல்லப்பட்டவர்களின் பெயர்களையும் வயதினையும் வெளியிட்டது. காசாவின் சுகாதார அமைச்சின் பட்டியல் மாத்திரமே கொல்லப்பட்டவர்கள் குறித்த உத்தியோகபூர்வமான ஆவணம். மிக நீண்ட இந்த ஆவணத்தில் சிறுவர்களின் பெயர்கள் தொடர்ந்து வந்துகொண்டிருந்தன. 900க்கும் அதிகமானவர்கள் தங்கள் முதலாவது பிறந்த நாளிற்கு முன்னர் கொல்லப்பட்டவர்கள். இஸ்ரேல் பொதுமக்களின் உயிரிழப்பினை குறைக்க முயல்வதாக தெரிவிக்கின்றது. ஹமாசின் உறுப்பினர்கள் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் செயற்படுகின்றனர் என இஸ்ரேல் தெரிவிக்கின்றது, மருத்துவமனைகள், வீடுகள், பாடசாலை…
-
- 1 reply
- 162 views
- 1 follower
-
-
புதிய அரசியலமைப்பின் நோக்கம்? August 4, 2025 — வீரகத்தி தனபாலசிங்கம் — புதிய அரசியலமைப்பை கொண்டுவரப்போவதாக கடந்த வருடம் தேசிய தேர்தல்களில் இலங்கை மக்களுக்கு வாக்குறுதியளித்த தேசிய மக்கள் சக்தி பதவிக்கு வந்த பிறகு அதற்கான செயன்முறை மூன்று வருடங்களுக்கு பின்னரே முன்னெடுக்கப்படும் என்று அறிவித்தபோது அரசாங்கம் அதன் பதவிக்காலத்தின் பிற்பகுதியில் அவ்வாறு செய்வதில் எழக்கூடிய பிரச்சினைகளை அரசியலமைப்பு நிபுணர்களும் அரசியல் ஆய்வாளர்களும் சுட்டிக்காட்டியிருந்தனர். அரசியலமைப்பை மாற்றும் செயன்முறைகளை பொதுவில் அரசாங்கங்கள் அவற்றின் பதவிக் காலத்தின் ஆரம்பக் கட்டங்களில் செய்வதே வழமை. சுதந்திர இலங்கையில் இரு குடியரசு அரசியலமைப்புகளும் அரசாங்கங்களின் பதவிக்காலங்களின் முற்பகுதியிலேயே…
-
- 0 replies
- 162 views
-
-
வெறுப்புணர்வின் வெளிப்பாடு லக்ஸ்மன் அனுராதபுரம் ஸ்ரீ மகா போதியைக் கடந்து வழிபாட்டிற்காக யாழ்ப்பாணத்திற்கு வருவது 'வெறுப்பு' காரணமாகவே, ஒவ்வொரு 'போயா' தினத்திலும் யாழ்ப்பாணத்தின் ஓரிடத்தில் கூடிக் காணி கேட்டுப் போராடுவதும் வெறுப்புணர்வினாலேயே, இவ்வாறு போராடுபவர்களுக்கு அந்த இடத்தில் உண்மையில் காணிகள் இருக்கிறதா என்று ஆராயுமாறு புலனாய்வுப் பிரிவினருக்குத் பணிப்புரை விடுத்துள்ளேன் என்று ஜனாதிபதி அனுர யாழ்ப்பாணத்தில் கூறியிருந்தார். இதிலுள்ள மூன்று விடயத்தையும் ஒன்றாகவும் பார்க்கலாம். வெவ்வேறாகவும் விளக்கத்துக்குட்படுத்தலாம். ஆனால் இது தையிட்டி விகாரையை மையப்படுத்தியதாக மட்டுமே நகர்த்தப்பட்டு வருகிறது என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கொழும்பி…
-
- 0 replies
- 162 views
-
-
போர்க்காலத்தின் தகவல் பரிமாற்ற ஊடகமாக விளங்கிய வானொலி Courtesy: தீபச்செல்வன் ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி 13 ஆம் தேதி UNESCO அறிவித்துள்ள உலக வானொலி நாள் உலகெங்கும் வானொலியின் சமூகப் பங்களிப்பை நினைபடுத்துகிறது. தகவல் பரிமாற்றத்தின் மிக எளிய, மலிவு மற்றும் விரைவான சேவைக்காக வானொலி இன்னும் பல கோடி மக்களின் வாழ்வோடு இணைந்திருக்கிறது. தொலைதூர கிராமங்களிலிருந்து நகர மையங்கள்வரை மனிதர்களை ஒன்றிணைக்கும் ஒலிப் பாலமாக வானொலி தேசங்களையும் உலகத்தையும் இணைக்கின்றது. இலங்கைக்கு என்று தனித்துவமான வானொலிப் பாரம்பரியமுண்டு. அத்துடன் புலிகளின் குரல் என்ற தமிழர்களின் போராட்ட வானொலிப் பாரம்பரியமும் ஈழ மண்ணிற்குள்ளது. இலங்கையின் வானொலிப் பாரம்பரியம் தென்னாசியாவில் வானொலி ஒளிபரப்பின் முன்னோடிகளி…
-
- 0 replies
- 161 views
- 1 follower
-
-
இலங்கை இராணுவத்தால் வடக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் மக்களின் நிலங்கள் அபகரிக்கப்பட்டுள்ளமை தொடக்கம் தமிழ் அரசியற் கைதிகள் தொடர்ச்சியாக தடுத்து வைக்கப்பட்டுள்ளமை வரையான அனைத்து விவகாரங்களையும் இலங்கை அரசாங்கம் கையாளும் போது மட்டுமே மக்கள் சந்தித்துள்ள போர் வடுக்களைக் குணப்படுத்த முடியும். இவ்வாறு The diplomat ஊடகத்தில் Taylor Dibbert எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் சிறைகளில் வாடும் 200 இற்கும் மேற்பட்ட தமிழ் அரசியற் கைதிகள் தம்மை விடுதலை செய்யுமாறு கோரி அண்மையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டமானது ஒரு வார காலம் வரை தொடரப்பட்டு தற்போது முடிவிற்கு வந்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக நவம்பர் 7 ஆம் திகதிக்குள் தீர்வு காண்பதாக ஜனாதிபதி ம…
-
- 0 replies
- 160 views
-
-
ஜனாதிபதி அநுரவின் கச்சதீவு விஜயம் September 7, 2025 — வீரகத்தி தனபாலசிங்கம் — இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் தகராறுக்குரிய ஒரு பிராந்தியமாக கச்சதீவு இருந்திருந்தால் கடந்த வாரம் (செப்டெம்பர் 1) ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க தரிசு நிலமாகக் கிடக்கும் அந்த தீவுக்கு மேற்கொண்ட முன்கூட்டியே அறிவிக்கப்படாத விஜயம் சர்ச்சை ஒன்று மூளுவதற்கு காரணமாக இருந்திருக்க முடியும். ஆனால், இலங்கைக்கு சொந்தமான ஒரு நிலப்பரப்புக்கு அதன் ஜனாதிபதி செய்த விஜயம் அரசியல் மற்றும் இராஜதந்திர உரையாடல்களில் ஒரு பேசுபொருளாக கச்சதீவை மாற்றியிருக்கிறது. இந்திய அரசாங்கம் திசநாயக்கவின் கச்சதீவு விஜயம் குறித்து இதுவரையில் எந்தவிதமான பிரதிபலிப்பையும் வெளிக்காட்டவில்லை. ஆனால், இந்திய அரசியல் அரங்கி…
-
- 0 replies
- 160 views
-
-
எதிர்க்கட்சிகளின் பலவீனமும் அரசாங்கத்தின் அணுகுமுறையும்! *தமிழ்த்தேசியக் கட்சிகளை தவிர்த்து, தமிழர் தரப்பில் வேறு பிரதிநிதிகளுடன் பேசும் திட்டம் வகுக்கப்படுகிறதா? *எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு போராட்டம் பிசுபிசுத்தால், அநுரவின் நகர்வு மேலோங்கும் *ரணில் – மகிந்த ஊழல் - மக்கள் போராட்ட முன்னணியின் கருத்து நியாயமானது... ------ ----- அநுர அரசாங்கத்துக்கு எதிராக கருத்திட்டு வரும் பிரதான எதிர்க்கட்சிகள் பலவீனம் அடைந்துள்ளன. எதிர்வரும் நவம்பர் மாதம் 21 ஆம் திகதி கொழும்பு நுகேகொடை நகரில் நடைபெறவுள்ளது. இந்த எதிர்ப்பு போராட்டத்தில் சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி பங்கெடுக்காது என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா அறிவித்திருந்தார். அதேபோன்று -- மக்கள் போராட்ட முன்னணியும் …
-
- 0 replies
- 160 views
- 1 follower
-
-
போரும் சமாதானமும்-பா.உதயன் யுத்த அழிவுகளினால் போரும் மனித அவலங்களும் மரணங்களுமாக உலகம் இன்று அமைதி இழந்து ஒரு இருள் சூள்தபடி சுழல்கிறது. ஆக்கிரமிப்பும், அதிகாரமும், சுயநலன்களுமாக நாடுகளுடன் நாடுகளும் மனிதனுக்கு மனிதன் எதிரியாகவும் இருக்கிறான். மனிதனை மனிதன் கொல்லாமல், நாடுகளை நாடுகள் அடிமைப் படுத்தி சுய நலன் கருதி சுரண்டாமல் மனிதன் வாழ கற்றுக் கொள்வானா. தங்கள் தங்கள் தேசிய நலன்களோடும் அதன் நலன் சார்ந்த அணிகளோடும் பயணிக்கும் நாடுகளின் பூகோள அரசியல் ( Geo political strategy ) காய் நகர்தல்களினாலும் விஸ்தரிப்புகளினாலும் மாற்றங்களினாலும் இன்று உலகம் மனிதம் மனிதாபிமானம் அனைத்தையும் மறந்து யுத்தமும் அழிவுகளுமாக பயணித்து வருகிறது. உலக சமாதானம் என்பது இன்று எட்ட முடியாமல் இருப்ப…
-
- 0 replies
- 160 views
-
-
நோக்கம் திசை மாறாமல் இருக்கட்டும் லக்ஸ்மன் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 80ஆவது அமர்வில் கடந்த 25ஆம் திகதி உரையாற்றிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, தன்னுடைய தேர்தல் விஞ்ஞாபனத்தை உலகத் தலைவர்களுக்கு ஒப்புவித்ததாகவே நோக்க முடிகிறது. இலங்கையில் எந்தவிதமான பிரச்சினையும் இல்லை.போதைப்பொருள் பிரச்சினையும், ஊழல், பொருளாதாரப் பிரச்சினைகளே இருக்கிறது. வேறு ஒன்றுமில்லை. அதற்காக அனைத்து நாடுகளும் ஒத்துழையுங்கள், ஐக்கிய நாடுகள் சபை ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பதுபோன்ற தொனியில் தன்னுடைய உரையினை நிகழ்த்திவிட்டு, ஜப்பானுக்குப் பயணமாகியிருக்கிறார். அங்கு ஜப்பானின் ஒசாகாவில் நடைபெறுகின்ற ‘எக்ஸ்போ 2025’ கண்காட்சியில் பங்கேற்றார். ஜப்பான் விஜயத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பினார். ஜனாத…
-
- 0 replies
- 159 views
-
-
https://www.ezhunaonline.com/1949-1968-national-political-transformation-and-resistance-struggles-of-eelam-tamils-part-4/?fbclid=IwY2xjawMlZMVleHRuA2FlbQIxMABicmlkETB0MElRM2M2V0VxY3ZnUUF2AR7uFU-uioeOd-SHnslD1sRgljbk-gk2XoWrXqWLWL3xJApN6QDb5LDnaJlJkg_aem_azGvcdRkWsVOtS2coOUB3w 1949 – 1968: ஈழத்தமிழரின் தேசிய அரசியல் உருமாற்றமும் எதிர்ப்புப் போராட்டங்களும் – பகுதி 4 September 3, 2025 | Ezhuna 1833 முதல் 1921 வரை நீடித்த ஈழத்தமிழர் அரசியல் வரலாற்றின் முதலாவது காலகட்டத்தில், தமிழர்கள் அரசியல்ரீதியில் ‘இலங்கையர்’ என்றும், பண்பாட்டுரீதியில் ‘தமிழர்’ என்றும் அடையாளம் கொண்டிருந்தனர். 1921 ஆகஸ்ட் 15 அன்று சேர்.பொன். அருணாசலம் தேசிய காங்கிரஸில் இருந்து விலகி தமிழர் மகாசபையைத் தொடங்…
-
- 0 replies
- 158 views
- 1 follower
-