அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9232 topics in this forum
-
கொஞ்சம் கொஞ்சமாக மாறும் கொடூரமான முகம் முருகானந்தம் தவம் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகரவுக்கு எதிராகப் பிரதான எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஏற்க முடியாதென சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன நிராகரித்ததன் மூலமும், அதன் பின்னர் சபையில் அரச தரப்பினர் நடந்து கொண்ட முறை மூலமும் நாட்டின் உயர் பீடமும் சட்டவாக்க சபையுமான பாராளுமன்றத்தில் ஜே.வி.பி. -தேசிய மக்கள் சக்தி அரசின் சர்வாதிகாரத்தனம் தலைவிரித்தாடுகின்றதா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன. முன்னர் ஆட்சி புரிந்த அரசுகள் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளுக்குள்ள உரிமைகளை அங்கீகரித்தன. எதிர்க்கட்சி தலைவர்களுக்கான கௌரவத்தை வழங்கின. எதிர்க்கட்சிகளின் கருத்துக்களைச் செவிமடுத்தன. பேச்சு, கருத்து சுதந்…
-
- 1 reply
- 368 views
-
-
வீணடிக்கப்படும் மாகாண நிர்வாகம் September 21, 2025 — கருணாகரன் — “மாகாணசபைகளுக்கான தேர்தலை அரசாங்கம் நடத்தாமல் பின்னடிப்பது ஏன்? விரைவில் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த வேண்டும். தேர்தலை நடத்தி, மக்களால் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகளிடம் அதிகாரம் கையளிக்கப்பட வேண்டும். அவ்வாறில்லாதபோது ஆளுநர்கள் எழுந்தமானமாகச் செயற்படுகிறார்கள். கண்டபாட்டுக்கு நிதியைச் செலவு செய்கிறார்கள்..” என்று ஒரு நீண்ட குற்றச்சாட்டுப் பட்டியலை எதிர்க்கட்சிகளும் மக்கள் அமைப்புகளும் சுமத்தியுள்ளன. அதிகாரத்திலிருக்கும் NPP ஆட்சிக்கு வர முன்பே மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தாமல் முந்திய ஆட்சியாளர்கள் காலத்தைக் கடத்தி வந்தனர். 2017 க்குப் பிறகு மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்படவேயில்லை. அப்போதும் மா…
-
- 0 replies
- 169 views
-
-
திலீபன் வானிலிருந்து பார்த்துக் கொண்டிருப்பது எதனை? - நிலாந்தன் திலீபனின் நாட்களில் யுத்த களத்தில் வெற்றிகள் கிட்டும் என்ற ஒரு நம்பிக்கை ஆயுதப் போராட்டம் நிகழ்ந்த காலங்களில் இருந்தது. அவருடைய நினைவு நாள் ஒன்றில் யாழ் கோட்டை வெற்றி கொள்ளப்பட்டதிலிருந்து அந்த நம்பிக்கை தோன்றியது. திலீபனின் பசிக்கும் தாகத்துக்கும் அவ்வாறு அபரிதமான சக்தி உண்டு என்ற ஒரு நம்பிக்கை. ஆனால் 2009க்கு பின்னர் திலீபனின் நாட்களில் திலீபன் யாருக்கு சொந்தம்? அல்லது திலீபனை யார் யார் நினைவு கூரலாம்? என்று கேட்டு மோதும் நிலைமை காணப்படுகிறது. கடந்த 16 ஆண்டுகளிலும் நினைவு கூர்தலை அரசாங்கம் தடுக்கும் போதெல்லாம் தமிழ்க் கட்சிகள் ஏதோ ஒரு விதத்தில் ஒன்றுபட்டு அவற்றை அனுஷ்டிப்பதுண்டு. சில ஆண்டுகளுக்கு முன்பு …
-
- 0 replies
- 206 views
-
-
ஐநாவில் தமிழ்த் தரப்பு பலமாக உள்ளதா? நிலாந்தன். அண்மையில் நோர்வேயில் அந்த நாட்டின் துணை வெளி விவகார அமைச்சர் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஒரு பகுதினரோடு உரையாடியுள்ளார். இதன்போது அவர் இரண்டு விடயங்களைச் சுட்டிக்காட்டியுள்ளார். முதலாவது, இலங்கைதீவின் நல்லிணக்க முயற்சிகள் இப்பொழுது நோர்வே நாட்டின் முன்னுரிமை பட்டியலுக்குள் உள்ளன என்பது. இரண்டாவது, தமிழ் மக்கள் ஒருமுகமாக உலக சமூகத்தை அணுகுவதில்லை என்பது. இதில் இரண்டாவது விடயம்,அதாவது தமிழ் ஐக்கியத்தைப் பற்றிய விடயம்.அதனை நோர்வே மட்டுமல்ல, இந்தியா மட்டுமல்ல, ஐரோப்பிய சமூகம் மட்டுமல்ல,உலகில் பெரும்பாலான நாடுகளின் பிரதிநிதிகள் தமிழ் மக்களின் பிரதிநிதிகளைச் சந்திக்கும் பொழுது அல்லது தமிழ்ச் சிவில் சமூகங்களைச் …
-
- 0 replies
- 139 views
-
-
18 Sep, 2025 | 09:13 AM பெரும் எண்ணிக்கையில் மீன்பிடிப் படகுகள் ஒரு தொகுதியாக எல்லைமீறி பிரவேசித்து எமது மீனை, இறாலை, கணவாயை, நண்டுகளை பிடிப்பது என்பது இந்த இந்திய ஊடுருவலின் ஒரு அம்சம் மாத்திரமே. அத்தகைய நடவடிக்கைகளின் மூலமாக கட்டுப்பாடற்ற முறையில் ஒரு நிரந்தரமான முறையில் அழிவுகளை ஏற்படுத்துவது மற்றைய மிகவும் ஆபத்தான அம்சமாகும். பெரும்பாலான இந்திய மீன்பிடிப் படகுகள் இழுவை மீன்பிடியில் ஈடுபடும் படகுகளாகும் (Bottom trawlers). இழுவைப்படகுகள் மீனையும் கூனி இறால்களையும் இலக்கு வைப்பதற்கு மேலதிகமாக , கடற்படுக்கையில் இருந்து மீன்முட்டைகள், சிறிய மீன்வகைகள், கடல் தாவரங்கள் என்று சகலதையும் வாரி அள்ளக்கூடிய மிகப் பெரிய வலைகளைக் கொண்டவையாகும். மேலும் வாசிக்க https://www.virakesar…
-
- 0 replies
- 180 views
- 1 follower
-
-
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, 1982ம் ஆண்டில் பிரபாகரன் முதலும் கடைசியுமாக அப்போதைய மெட்ராஸுக்கு வந்தார் கட்டுரை தகவல் ரெஹான் ஃபசல் பிபிசி ஹிந்தி 2 மணி நேரங்களுக்கு முன்னர் எச்சரிக்கை: இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள சில விவரிப்புகள் உங்களுக்கு சங்கடம் தரலாம். 2009ஆம் ஆண்டு மே மாதம் இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தில் புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்டு விட்டதாக இலங்கை அரசு அறிவித்தது. அந்த இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டதாகவும் அறிவிக்கப்பட்டது. ஆனால், விடுதலைப் புலிகள் ஆதரவாளர்களில் ஒருபிரிவினர் இன்றும் அதனை ஏற்க மறுக்கின்றனர். இப்படியான சூழலில், பிரபாகரனின் கடைசி தருணங்கள் குறித்து இந்த கட்டுரை அலசுகிறது. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் த…
-
-
- 25 replies
- 1.8k views
- 2 followers
-
-
மூன்று வருட இடைவெளியில் மூன்று ஆட்சியாளர்களை விரட்டிய தெற்காசிய மக்கள் கிளர்ச்சிகள் Veeragathy Thanabalasingham September 16, 2025 Photo, NY TIMES தெற்காசியாவில் மூன்று வருடங்களில் மூன்று அரசாங்கங்களை மக்கள் கிளர்ச்சிகள் பதவி கவிழ்த்திருக்கின்றன. முதலாவதாக, 2022ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இலங்கையின் ‘அறகலய’ மக்கள் கிளர்ச்சி ராஜபக்ச ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தது. இரண்டாவதாக, 2024 ஆகஸ்டில் பங்களாதேஷ் மக்கள் கிளர்ச்சி பிரதமர் ஷேய்க் ஹசீனாவின் அரசாங்கத்தை கவிழ்த்தது. மூன்றாவதாக, கடந்த வாரம் அதேபோன்ற மக்கள் கிளர்ச்சி நேபாளத்தில் பிரதமர் கே.பி. சர்மா ஒலியின் அரசாங்கத்தை வீழ்த்தியிருக்கிறது. இலங்கையினதும் பங்களாதேஷினதும் கிளர்ச்சிகளின்போது ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவும் ஷேய்…
-
- 0 replies
- 228 views
-
-
நேபாளத்தில் சமூக ஊடகங்கள் தடை செய்யப்பட்டதற்கு எதிராக இளைஞர்களின் ஆர்ப்பாட்டங்கள். கட்டுரை தகவல் சந்தன் குமார் ஜஜ்வாரே பிபிசி செய்தியாளர் 9 மணி நேரங்களுக்கு முன்னர் நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் சமூக ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் குறைந்தது 17 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் இந்த எண்ணிக்கை 19 ஆக உயர்ந்தது. கடந்த வாரம் நேபாள அரசு 26 சமூக ஊடக தளங்களுக்குத் தடை விதித்தது. ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் போன்ற பிரபலமான சமூக ஊடக மற்றும் மெசேஜிங் தளங்களும் இதில் அடங்கும். சமூக ஊடகங்களுக்குத் தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து இளைஞர்கள் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன…
-
-
- 7 replies
- 645 views
- 2 followers
-
-
ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் : பெறோர்கள் எழுதும் பரீட்சை ? - நிலாந்தன் கடந்த வாரத்துக்கு முதல் வாரம் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் வெளிவந்தன. பெற்றோரும் உறவினர்களும் தங்களுடைய பிள்ளைகளின் பரீட்சைப் பெறுபேறுகளை முகநூலில் பகிர்ந்து கொண்டாடினார்கள். இந்த இடத்தில் எனது நண்பர் ஒருவர் கூறிய உரையாடல் ஒன்று எனக்கு நினைவுக்கு வந்தது. அந்த உரையாடல் நடந்த இடம் யாழ்ப்பாணத்தின் மிகப் பிரபல்யமான தனியார் கல்வி நிறுவனம் ஒன்றின் வாசலில். புலமைப் பரிசில் பரீட்சை எழுதும் தங்கள் பிள்ளைகளுடைய வகுப்பு முடியும் வரையிலும் தனியார் கல்வி நிறுவனத்தின் வாசலில் காத்துக் கொண்டிருந்த பெற்றோருக்கு இடையிலான உரையாடல் அது. இந்த உரையாடலை அருகில் இருந்து கேட்டுக் கொண்டிருந்த எனது நண்பரு…
-
- 0 replies
- 212 views
-
-
மண்டைதீவு சர்வதேச கிரிக்கெட் விளையாட்டு மைதானம் 76 வருட ஆட்சியின் "அபிவிருத்தி" என்ற பழைய அணுகுமுறை மீணடும் சாத்தியக்கூற்று - சுற்றுப்புறச் சூழல் அறிக்கைகள் எதுவும் இல்லாத அரசியல் நிகழ்ச்சி பதிப்பு: 2025 செப். 13 19:14 யாழ்ப்பாணம் மண்டைதீவு பிரதேசத்தில் சர்வதேச கிரிக்கெட் (Cricket) விளையாட்டு மைதானம் ஒன்றை அமைப்பதற்கு அநுர அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ள பின்னணியில், யாழ்ப்பாணத்தின் தீவுப் பிரதேசங்கள் பற்றிய கரிசனை குறிப்பாக அங்கு வாழும் மக்களின் அடிப்படை வசதிகள், தொழில் முயற்சிகளில் கவனம் செலுத்தப்பட்டதா என்பது தொடர்பான சந்தேகங்கள் எழுகின்றன. சாத்தியக்கூற்று அறிக்கைகள் (Feasibility Report) சுற்றுப்புறச் சூழல் அறிக்கைகள் (Environmental Report) எதுவும் இன்றி வடக்கு கிழக்கில் …
-
- 0 replies
- 234 views
-
-
ஊடகவியலாளர் நிமலராஜன் படுகொலை வழக்கு: ஓர் அலசல் Photo, ITJP ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன், இலங்கையின் உள்நாட்டுப் போரின் உச்சக்கட்டத்தில் உண்மையை உரக்கச் சொன்ன ஒரு துணிச்சலான குரல். பிபிசி (BBC) மற்றும் பல முன்னணி ஊடகங்களுக்காக யாழ்ப்பாணத்தில் இருந்து அவர் ஆற்றிய பணி, போரின் கொடூரங்களையும், அரசியல் ஊழல்களையும், அரச ஆதரவு துணை இராணுவக் குழுக்களின் வன்முறைகளையும் அச்சமின்றி வெளிக்கொணர்ந்தது. இதன் விளைவாக, அக்டோபர் 19, 2000 அன்று, யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில், அவரது குடும்பத்தினர் கண்முன்னே அவர் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டார். இந்தப் படுகொலை, தமிழ் ஊடகவியலாளர் ஒருவரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட ஆரம்பகால தாக்குதல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. மேலும், இது இலங்க…
-
- 0 replies
- 172 views
-
-
காணாமலாக்கப்பட்ட 158 பேர் பற்றிய உண்மைக்கான நம்பிக்கை ஒளி Photo, TAMILGUARDIAN சரியாக ஒரு மாதத்திற்கு முன்பு நான் செம்மணியில் நின்று அகழ்வாராய்ச்சியை பார்த்துக் கொண்டிருந்தேன். உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டு, லேபிள் ஒட்டப்பட்டு மேலதிக செயல்முறைகளுக்காக பொதி செய்யப்பட்டிருந்தன. மிகவும் கடினமான மற்றும் சிரமமான பணி. என்னைச் சுற்றி நீதிபதிகள், சட்டத்தரணிகள், மனித உரிமை குழுக்கள், பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் சமூக ஆர்வலர்கள், பொலிஸார், பாதுகாப்பு அதிகாரிகள், நிபுணர்கள் மற்றும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் அந்த இடத்தில் கூடியிருந்தார்கள். அவர்கள் அனைவரும், “இங்கு புதைக்கப்பட்டவர்கள் யார், அவர்களைப் புதைத்தவர்கள் யார்?” என்ற புதிரைத் தீர்க்க முயற்சிப்பதை…
-
- 0 replies
- 181 views
-
-
சிறிதரன்: தவறுகளும் மீளலும் September 11, 2025 — கருணாகரன் — தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனைப் பற்றிய ‘படங்காட்டுதல் அல்லது சுத்துமாத்துப் பண்ணுதல்‘ என்ற கட்டுரை, அவரைத் தனிப்பட்ட ரீதியில் தாக்குவதாக அமைந்திருக்கிறது என்று சிலர் குற்றம் சாட்டினர். அவர்களுடைய கேள்விகளில் முக்கியமானவை – 1. சிறிதரன் மட்டும்தான் இப்படி (கட்டுரையில் குறிப்பிட்டவாறு கல்வி, மருத்துவம், விவசாயம், சூழல் விருத்தி, கடற்றொழில், பனை தென்னை வளத் தொழில், பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான ஆதாரம், மாற்றுத் திறனாளிகளின் எதிர்காலத்துக்கு, முன்னாள் போராளிகளின் வாழ்க்கைக்கு – பிரதேசங்களின் அபிவிருத்திக்கு, இளைய தலைமுறையினரின் திறன் விருத்திக்கு, தொழில் வாய்ப்புகளுக்கு, பண்பாட…
-
- 0 replies
- 216 views
-
-
“ஜனாதிபதி தமிழர் முகங்களில் கரிபூசியுள்ளார்” முருகானந்தன் தவம் கடந்த 1ஆம் திகதி ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வடக்கிற்கு இரு நாள் விஜயம் செய்து யாழ்ப்பாணம் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்தின் 3ஆவது கட்டத்தின் பணிகள், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் யாழ். பிரதேச அலுவலகத் திறப்பு ,யாழ்ப்பாணம், மண்டை தீவு பகுதியில் நிர்மாணிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ள நவீன கிரிக்கெட் மைதானத்தின் பணிகள் ,உலக தென்னை தினத்தை முன்னிட்டு புதுகுடியிருப்பில் ‘கப்துரு சவிய’ தேசிய வேலைத்திட்டம், முல்லைத்தீவு, வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணிகள் போன்ற அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைத்துள்ளதுடன் சர்ச்சைக்குரிய கச்சத்தீவுக்கும் அதிரடி விஜயம் செய்து அங்குச் சென்ற முதல் ஜனாதிபதி என்ற…
-
- 0 replies
- 175 views
-
-
அஷ்ரபின் மரணம் தூசு தட்டப்படுமா? மொஹமட் பாதுஷா ‘அஷ்ரபின் படுகொலை மரணம், 43 வருடங்களுக்கு முன்னர் அமெரிக்க சி.ஐ.ஏயினால் கொலை செய்யப்பட்ட சிலியின் மக்கள் தலைவன் சில்வர்டோர் அலேண்டேயின் அரசியல் படுகொலையுடன் ஒப்பிடக் கூடியது. அஷ்ரபின் மரணம் வெறுமனே ஒரு உள்ளூர் திட்டமிடல் அல்ல. இதன் பின்னால் சர்வதேச அரசியலின் ஒரு நிகழ்ச்சி நிரல் இருந்திருக்கின்றது என நான் உறுதியாக நம்புகின்றேன். அதற்கு ஏவப்பட்ட ஒரு கருவியே விடுதலைப் புலிகள். இதன் பின்னால் நோர்வே மற்றும் இலங்கை அரசாங்கத்தின் ஒரு பகுதியினர் இருந்துள்ளனர் சர்ஜூன் ஜமால்தீன் எழுதிய ‘எம்.எச்.எம்.அஷ்ரபின் மரணம்’ நூலுக்கு அஷ்ரபோடு நீண்டகாலம் மிக நெருக்கமாக இருந்தவரும் அரசியல், சமூக ஆய்வாளருமான எம்.பௌஸர் எழுதியுள்ள முன்னுரையில் குறிப்ப…
-
-
- 2 replies
- 339 views
-
-
உலக அரங்கில் பெரியார்; ஆக்ஸ்ஃபோர்டு கருத்தரங்கமும், முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த பெரியாரின் திருவுருவப் படமும் 8 Sep 2025, 7:12 AM ராஜன் குறை தொன்மையான தமிழ் பண்பாடு உலக சிந்தனைக்கு அளித்த எத்தனையோ கொடைகளில் இரண்டினை முதன்மைப்படுத்திச் சொல்ல வேண்டும் என்றால் அது ஐயன் திருவள்ளுவரின் திருக்குறளும், பெரியாரின் சிந்தனைகளும் எனலாம். திருவள்ளுவர் தொடர்ந்து மொழியாக்கம் செய்யப்பட்டு வந்திருக்கிறார். லண்டனில் முதல்வர் ஸ்டாலின், திருக்குறளை 1886-ஆம் ஆண்டே மொழியாக்கம் செய்த ஜி.யு.போப் அவர்களின் கல்லறைக்கு சென்று மரியாதை செலுத்தியுள்ளார். அதனால் திருக்குறள் உலகில் பரவலாக அறியப்பட்டது. பெரியாரைப் பொறுத்தவரை அவர் தன் சிந்தனைகளைத் தொகுத்து நூலாக எழுதவில்லை. ஒரு சில பிரசுரங்கள் அவ…
-
-
- 3 replies
- 427 views
- 1 follower
-
-
Published By: Vishnu 08 Sep, 2025 | 01:02 AM (நா.தனுஜா) இலங்கையில் மனிதகுலத்துக்கு எதிராக சக மனிதன் நிகழ்த்திய அட்டூழியங்கள் பற்றிய உண்மைகள் வெளிப்படுத்தப்பட்டு, நீதி நிலைநாட்டப்படும் எனக் காத்திருந்த காலமும், அந்த அட்டூழியங்களின் சாட்சியாக அமைதிகாத்து நின்ற நிலமும், நீளும் காத்திருப்பின் வலி தாழாமல் இன்று தம் அமைதி கலைத்துப் பேச ஆரம்பித்திருக்கின்றன. இப்போது செம்மணி நிலம் உரத்துச் சொல்லிக்கொண்டிருக்கும் மனிதப்பேரவலக்கதை உலகின் மனசாட்சியை உலுக்க ஆரம்பித்திருக்கிறது. இலங்கையில் இனவழிப்போ, போர்க்குற்றங்களோ இடம்பெறவில்லை எனக் காலம் காலமாக மறுத்து வந்தவர்களை வாயடைக்கச்செய்திருக்கிறது. கிருஷாந்தி குமாரசுவாமி கொல்லப்பட்டு 29 ஆண்டுகள் நாமறிந்த செம்மணி நிலத்தின் கதை கிருஷாந்தி…
-
- 0 replies
- 165 views
- 2 followers
-
-
ஜனாதிபதி அநுரவின் கச்சதீவு விஜயம் September 7, 2025 — வீரகத்தி தனபாலசிங்கம் — இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் தகராறுக்குரிய ஒரு பிராந்தியமாக கச்சதீவு இருந்திருந்தால் கடந்த வாரம் (செப்டெம்பர் 1) ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க தரிசு நிலமாகக் கிடக்கும் அந்த தீவுக்கு மேற்கொண்ட முன்கூட்டியே அறிவிக்கப்படாத விஜயம் சர்ச்சை ஒன்று மூளுவதற்கு காரணமாக இருந்திருக்க முடியும். ஆனால், இலங்கைக்கு சொந்தமான ஒரு நிலப்பரப்புக்கு அதன் ஜனாதிபதி செய்த விஜயம் அரசியல் மற்றும் இராஜதந்திர உரையாடல்களில் ஒரு பேசுபொருளாக கச்சதீவை மாற்றியிருக்கிறது. இந்திய அரசாங்கம் திசநாயக்கவின் கச்சதீவு விஜயம் குறித்து இதுவரையில் எந்தவிதமான பிரதிபலிப்பையும் வெளிக்காட்டவில்லை. ஆனால், இந்திய அரசியல் அரங்கி…
-
- 0 replies
- 144 views
-
-
தையிட்டி; மயிலிட்டி; கச்சதீவு ; செம்மணி - நிலாந்தன் “நாங்கள் கேட்டது சர்வதேச விசாரணையை. அனுர தருவது சர்வதேச விளையாட்டு மைதானத்தை”. என்று முகநூலில் ஒரு பதிவு காணப்பட்டது. தமிழ் மக்கள் அனைத்துலக விசாரணைப் பொறிமுறை ஒன்றைக் கேட்டுக் கொண்டிருக்கும் ஒரு பின்னணியில் அரசாங்கமோ “இதோ உங்களுக்கு விளையாட்டு மைதானம்; இதோ உங்களுக்கு மயிலிட்டித் துறைமுகம்; இதோ உங்களுக்கு வட்டுவாகல் பாலம்” என்றிவ்வாறாக அபிவிருத்தித் திட்டங்களை முன்வைக்கின்றது. அனுர அரசுத் தலைவராக தெரிவு செய்யப்பட்டு இந்த மாதத்தோடு ஒராண்டு முடிகிறது. பதவியேற்ற ஓராண்டு காலப் பகுதிக்குள் வடக்கிற்கு அதிக தடவைகள் வருகை தந்த ஒரே ஜனாதிபதியாக அவர் காணப்படுகிறார். கடந்த கிழமை அவர் வடக்கில் பல அபிவிருத்தி திட்டங்களையும் தொடக்கி …
-
- 1 reply
- 186 views
- 1 follower
-
-
செம்மணியின் பின்னணியில் ஐநா கூட்டத் தொடர் – நிலாந்தன். ஐநாவின் அறுபதாவது கூட்டத்தொடர் இம்மாதம் எட்டாம் தேதி அதாவது நாளை ஆரம்பமாகிறது. இக்கூட்டத் தொடரில் அதிசயங்கள் அற்புதங்கள் நிகழ்வதற்கு இடமில்லை.ஏனென்றால் ஈழத் தமிழர்களின் நோக்கு நிலையில் இருந்து பார்த்தால் ஐநா அதிசயங்களும் அற்புதங்களும் நிகழ்வதற்குரிய ஒரு களம் அல்ல.போராடும் மக்கள் மத்தியில்தான் அதிசயங்களும் அற்புதங்களும் நிகழும். எனினும், எல்லாவிதமான வரையறைகளோடும், தமிழ் மக்களுக்கு என்று கடந்த 16 ஆண்டுகளாக திறந்து வைக்கப்பட்டிருக்கும் ஒரே அனைத்துலக அரங்கு மனித உரிமைகள் பேரவைதான். அந்த மனித உரிமைகள் பேரவைக்குள் காலை ஊன்றிக் கொண்டுதான் தமிழ் மக்கள் அடுத்த கட்டத்திற்கு பாயலாம். ஐநாவுக்கு கூட்டுக் கடிதம் எழுதும் ஒரு சந்திப்…
-
- 0 replies
- 120 views
-
-
சிறிதரன் எம்.பியின் கருத்து:முஸ்லிம்கள் ஒரு தேசிய இனம் இல்லையா? மொஹமட் பாதுஷா இலங்கையில் உண்மையிலேயே எத்தனை தேசிய இனங்கள் வாழ்கின்றன? முஸ்லிம்களும்; மலையக மக்களும் தனித்தனியான தேசிய இனங்கள் இல்லையா என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது. தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் அண்மையில் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையைத் தொடர்ந்தே இந்த கேள்விக்கான விடையைத் தேட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. சபையில் உரையாற்றிய சிறிதரன் எம்.பி. ‘சபாநாயகர் அவர்களே, இந்த நாட்டில் இரு தேசிய இனங்கள் உள்ளன. ஒன்று தமிழ் பேசும் மக்கள் தமிழ்த் தேசிய இனம் மற்றையது சிங்கள தேசிய தினம் ஆகியவையாகும்’ என்று கூறி, தொடர்ச்சியாக உரையாற்றினார். பெருந்தேசிய அரசியலில் தற்போதைய ஜனாதிபதியான அனுரகுமார திச…
-
-
- 5 replies
- 473 views
-
-
1833 – 1921 வரையான காலகட்டம்: தமிழ்த் தலைவர்களும் இலங்கை தேசிய காங்கிரசும் April 18, 2025 | Ezhuna 1833 முதல் 1921 வரை நீடித்த ஈழத்தமிழர் அரசியல் வரலாற்றின் முதலாவது காலகட்டத்தில், தமிழர்கள் அரசியல்ரீதியில் ‘இலங்கையர்’ என்றும், பண்பாட்டுரீதியில் ‘தமிழர்’ என்றும் அடையாளம் கொண்டிருந்தனர். 1921 ஆகஸ்ட் 15 அன்று சேர்.பொன். அருணாசலம் தேசிய காங்கிரஸில் இருந்து விலகி தமிழர் மகாசபையைத் தொடங்கியதுடன், இரண்டாவது காலகட்டம் ஆரம்பமானது. இது 1949 டிசம்பரில் தந்தை செல்வா அகில இலங்கை தமிழரசுக் கட்சியைத் தொடங்கும் வரை நீடித்தது. 1949 முதல் 1968 வரை நீடித்த மூன்றாவது காலகட்டத்தில், வடக்கு – கிழக்கு தமிழர் தாயகம் என வரையறுக்கப்பட்டு, சமஷ்டிக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. 1968 இல் ஈழத்தமிழர் இ…
-
- 5 replies
- 295 views
-
-
https://www.ezhunaonline.com/1949-1968-national-political-transformation-and-resistance-struggles-of-eelam-tamils-part-4/?fbclid=IwY2xjawMlZMVleHRuA2FlbQIxMABicmlkETB0MElRM2M2V0VxY3ZnUUF2AR7uFU-uioeOd-SHnslD1sRgljbk-gk2XoWrXqWLWL3xJApN6QDb5LDnaJlJkg_aem_azGvcdRkWsVOtS2coOUB3w 1949 – 1968: ஈழத்தமிழரின் தேசிய அரசியல் உருமாற்றமும் எதிர்ப்புப் போராட்டங்களும் – பகுதி 4 September 3, 2025 | Ezhuna 1833 முதல் 1921 வரை நீடித்த ஈழத்தமிழர் அரசியல் வரலாற்றின் முதலாவது காலகட்டத்தில், தமிழர்கள் அரசியல்ரீதியில் ‘இலங்கையர்’ என்றும், பண்பாட்டுரீதியில் ‘தமிழர்’ என்றும் அடையாளம் கொண்டிருந்தனர். 1921 ஆகஸ்ட் 15 அன்று சேர்.பொன். அருணாசலம் தேசிய காங்கிரஸில் இருந்து விலகி தமிழர் மகாசபையைத் தொடங்…
-
- 0 replies
- 133 views
- 1 follower
-
-
ரணில் எதிர்க்கட்சிகளை ஐக்கியப்படுத்தக்கூடிய வல்லமையைப் பெற்றுவிட்டாரா? Veeragathy Thanabalasingham on September 1, 2025 Photo, Social Media முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் அரசியல் வரலாற்றில் பல முதலாவது ‘சாதனைகளுக்கு’ சொந்தக்காரர். இந்த நாட்டின் மிகவும் பழைமை வாய்ந்த அரசியல் கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக விக்கிரமசிங்கவை போன்று வேறு எந்த அரசியல் தலைவரும் நீண்டகாலம் பதவி வகித்ததில்லை. மூன்று தசாப்தங்களுக்கும் அதிகமான காலமாக தனது கட்சியின் தலைவராக இருந்து வரும் அவரே மிகவும் நீண்டகாலம் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகித்த அரசியல் தலைவர். இலங்கையின் அரசியல் வரலாற்றில் முதல் தடவையாக நாடாளுமன்றத்தில் தேர்தல் மூலமாக நிறைவேற்று அதிகார ஜனா…
-
- 0 replies
- 131 views
-
-
பட மூலாதாரம், PMD SRI LANKA படக்குறிப்பு, ரணில் விக்ரமசிங்க கட்டுரை தகவல் ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 28 ஆகஸ்ட் 2025 புதுப்பிக்கப்பட்டது 29 ஆகஸ்ட் 2025 இலங்கையின் மூத்த அரசியல்வாதியும், 6 தடவை பிரதமர் பதவியை வகித்தவரும், ஒரு தடவை ஜனாதிபதியாக பதவி வகித்தவருமான ரணில் விக்ரமசிங்க அவ்வப்போது சர்ச்சைகளை எதிர்நோக்கி வருவதை கடந்த பல பத்தாண்டுகளாகவே காணக்கூடியதாக இருந்தது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தை தன்வசம் கொண்டுள்ள ரணில் விக்ரமசிங்க, கட்சியின் உள்ளக பிரச்னைகள் முதல் தேசிய அரசியலில் பிரச்னை வரை அவ்வப்போது பல்வேறு சவால்மிகுந்த பிரச்னைகளை எதிர்நோக்கி வந்துள்ளார். தனது கட்சியின் உள்ளக பிரச்னைகள், கூட்டணி கட்சிகளின் பிரச்னைகள் என சந்தித்து வந்த ரணில் விக்ரமசி…
-
- 0 replies
- 300 views
- 1 follower
-