அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9222 topics in this forum
-
ஈழத்தமிழரின் அமைதிக்கான பாதுகாப்பு அவர்கள் மனதிலேயே கட்டியெழுப்பப்படல் வேண்டும் 12 Views “போர் மனித மனதிலேயே கட்டமைக்கப்படுவதால், அமைதிக்கான பாதுகாப்பும் மனித மனதிலேயே கட்டியெழுப்பப்படல் வேண்டும்” என்பது ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி அறிவியல் பண்பாட்டு அமைப்பின் பிரகடனம். இந்த அமைதிக்கான பண்பாட்டை உருவாக்கத் தூண்டும் பிரகடனத்தில் அமைதி என்பது வெறுமனே போர் அற்ற நிலை மட்டுமல்ல நேரான அணுகுமுறையில் இயங்கியல் தன்மையான செயல் முறைகள் மூலமான, உரையாடல்கள் வழி, சிக்கலை ஓருவரை ஒருவர் புரிந்து கொள்ளுதல் ஊடாக விளங்கி, அதனைத் தீர்ப்பதற்கான கூட்டுறவுகளை வளர்க்கும் மனோநிலையை உருவாக்குதல் எனத் …
-
- 0 replies
- 281 views
-
-
ஒரு அரசியல் கட்சியின் தலைவராக இருக்கவேண்டுமென்று நான் அரசியலுக்கு வரவில்லை சூரியன் FMன் விழுதுகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட எம். ஏ. சுமந்திரன் கோவிட்-19 பரவல் காரணமாக நாடு முடக்கப்பட்டமை, குருந்தூர்மலை விகாரை விவகாரம், துறைமுக நகர சட்டவரைபு மற்றும், இனப்பிரச்சியை தீர்ப்பதை பொருட்டு பௌத்த பீடங்களுடன் தமிழ்த் தலைவர்கள் உறவை பேணுவது குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்திருந்தார். மேலும், ஐ. நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான பிரேரணையின் அமுலாக்கம் மற்றும் சாட்சியங்கள் சேகரிப்பதற்கான அடுத்தகட்ட செயற்பாடுகள் தொடர்பிலும், இப் பிரேரணையையொட்டி தமிழ் அரசியல் தலைவர்களால் ஐ. நா.விற்கு ஜனவரி மாதம் அனுப்பப்பட்டிருந்த கடிதம் குறித்து எழுந்திருந்த சில சர்…
-
- 0 replies
- 568 views
-
-
இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை? ஈழத் தமிழர்களை சீனாவின் கால்களில் விழத் தூண்டுகிறது? – நிலவன் 66 Views இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை தொடர்ந்தும் ஈழத் தமிழர்களை வேறு வழியின்றி சீனாவின் கால்களில் விழத் தூண்டுகிறதா? என்ற கேள்வி எழுகிறது. இன்று இலங்கையில் நடக்கும் சம்பவங்களை பார்த்தால், இந்தியாவுக்கு ஆதரவாக இருக்கும் ஈழத் தமிழர்களையும் சீனாவை நோக்கி செல்லும் நிலைக்கு தள்ளி விட்டுள்ளது. கடந்த எழுபது ஆண்டுகளுக்கு மேலாக ஈழத் தமிழர்களின் உரிமைகளை பெற்றுக் கொடுப்பதில் இந்திய தேசம் இரட்டை வேடம் போட்டு வந்த நிலையில், ஈழத் தமிழர்கள் சீனாவை ஆதரிக்கும் போக்கு காணப்படுகிறது. குறிப்பாக யாழ்ப்பாண மக்கள் சீன நிறுவனங்களி…
-
- 8 replies
- 1.1k views
-
-
-
கொரோனாவால் தடுமாறும் அரசாங்கம்: அச்சுறுத்தலுக்குள் மக்கள் -புருஜோத்தமன் தங்கமயில் கொரோனா வைரஸ் தொற்றால் முழு உலகமும் ஓர் அசாதாரண சூழ்நிலைக்குள் சிக்கிக் கொண்டிருக்கின்றது. கடந்த ஒன்றரை ஆண்டுகளில், கொரோனா வைரஸ் தொற்றின் ‘மூன்றாவது அலை’ பரவல் கட்டத்தை அடைந்திருக்கின்றது. ஒவ்வொரு கட்டமும் ஏற்கெனவே ஏற்படுத்திய பாதிப்புகளைவிட, இன்னும் அதிகமான பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது. கொரோனா வைரஸ் என்ற கிருமியால் உருவாக்கப்படும் ‘கொவிட்-19’ என்ற பெருந்தொற்றுநோய், ஒவ்வொரு பிராந்தியத்திலும் ஒவ்வொரு வடிவம் எடுக்கின்றது; திரிபடைந்த வீரியமான கொரோனா வைரஸ்களாக மக்களுடன் கலக்கின்றது. இந்த அச்சுறுத்தல் கட்டத்தை எதிர்கொள்வதில், இலங்கை அரசாங்கம் பாரிய த…
-
- 0 replies
- 445 views
-
-
இலங்கை தமிழர்களுக்கானதா சீமானின் அரசியல்? புருஜோத்தமன் தங்கமயில் தமிழக சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்றிருக்கின்றது. கலைஞர் மு. கருணாநிதியின் மறைவுக்குப் பின்னர், தி.மு.கவின் தலைவராக மு.க. ஸ்டாலின் எதிர்கொண்ட, முதலாவது சட்டமன்றத் தேர்தலிலேயே அவர், அறுதிப் பெரும்பான்மையுள்ள வெற்றியைப் பெற்றிருக்கின்றார். தொடர்ச்சியாக இரண்டு தடவைகள், ஆட்சியில் அமர்ந்திருந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், இம்முறை ஆட்சியை இழந்திருக்கின்றது. முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவின் மறைவை அடுத்து, கட்சிக்குள் ஏற்பட்ட குழப்பங்கள், பிளவுகளைத் தாண்டி, அ.தி.மு.க தன்னுடைய வாக்கு வங்கியை, பாரிய வீழ்ச்சிகள் ஏதுமின்றித் தக்க வைத்துள்ளது. இதன்மூலம், தம…
-
- 72 replies
- 6.4k views
-
-
-
- 0 replies
- 902 views
-
-
இருண்ட யுகத்தை நோக்கி நகரும் ஊடக சுதந்திரமும், கருத்து வெளிப்பாட்டு உரிமையும் – பி.மாணிக்கவாசகம் 89 Views ஊடக சுதந்திரம் என்பது ஜனநாயகத்தின் அடிப்படை உரிமை. அது ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்றாகும். எங்கு ஊடக சுதந்திரம் ஒடுக்கப்படுகின்றதோ அங்கு அராஜகம் தலைதூக்கும்; அநியாயங்களே கோலோச்சும். இதற்கு உலக வரலாறுகள் அழிக்க முடியாத சான்றுகளாகத் திகழ்கின்றன. ஜனநாயகம் நிலவுவதாகக் கூறப்படுகின்ற நாடுகளில் தொடர்ச்சியாக அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காக அரசியல்வாதிகள் அடிப்படை உரிமைகளையும், மனித உரிமைகளையும், ஜனநாயக உரிமைகளையும் மதிப்பதில்லை. அவற்றைப் பேணுவதில் உரிய கவனம் செலுத்துவதுமில்லை. ஆனால் ஊடகவியலாளர்களையும், …
-
- 0 replies
- 606 views
-
-
சீனாவும் இந்தியாவும் இலங்கையும் -என்.கே. அஷோக்பரன் ஆசியாவின் பூகோள அரசியலில், இலங்கைத் தீவுக்கு எப்போதுமே ஒரு முக்கிய இடம் இருந்துகொண்டுதான் இருக்கிறது. இயற்கை இலங்கைங்கு அளித்துள்ள வரமும், சாபமும் அதன் பூகோளத்தந்திரோபாய இடவமைவுதான் (geostrategic location). இலங்கை, ஒரு மிகப்பெரிய உபகண்டத்தின் தெற்கில் அமைந்துள்ள, கடலால் பிரிந்துள்ள நாடு. பட்டுப்பாதை உள்ளிட்ட கடற்பாதைகளின் முக்கிய தொடுபுள்ளி. இந்த அமைவிடம்தான், பல்வேறு நாடுகளும் இலங்கையில் ஆர்வம் கொள்ள முக்கிய காரணம். சர்வதேச அளவிலான அதிகாரம், செல்வாக்கு என்பவை, இன்று மாற்றத்துக்கு ஒ உள்ளாகி வருவது அனைவரும் உணரக்கூடிய ஒன்றாக இருக்கிறது. பனிப்போரில் அமெரிக்கா வென்றபோது, சர்வதேச அரங்கின் அதிகாரத்தின் ம…
-
- 0 replies
- 909 views
-
-
கச்சத்தீவு : புலிகள் இருக்கும்வரை இலங்கை பயந்தது | வரதராஜன் Ex Police Officer https://m.youtube.com/watch?v=2AYuQtm63bU
-
- 0 replies
- 743 views
-
-
ஈழத் தமிழர் பிரச்சினையில் ஸ்டாலின் செய்யப்போவது என்ன? – அகிலன் 96 Views தமிழகத்தில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம், ஈழத் தமிழர் பிரச்சினையில் சாதகமான மாற்றங்கள் எதனையாவது ஏற்படுத்துமா? கடந்த ஒருவார காலமாக எழுப்பப்படும் பிரதான கேள்விகளில் ஒன்றாக இது இருக்கின்ற போதிலும், இவ்விடயத்தில் நம்பிக்கையை ஏற்படுத்தக்கூடிய சமிஞ்ஞைகள் எதனையும் இதுவரையில் காண முடியவில்லை. உலகத் தமிழர்கள் அனைவரும் கடந்த வாரத்தில் நுணுக்கமாக அவதானித்த விடயமாக இருந்தது, தமிழகத்தில் இடம்பெற்ற ஆட்சி மாற்றம்தான். ஜெயலலிதாவில் தொடங்கி எடப்பாடியில் முடிவடைந்த அ.தி.மு.க. ஆட்சி பத்து வருடங்களை நிறைவு செய்திருக்கும் நிலையில், ஆட்சிமாற்றம் எதிர் பார்க்கப்பட்ட ஒன்…
-
- 1 reply
- 326 views
-
-
அரசியலில் பொய்கள் -யதீந்திரா அண்மையில் எம்.ஏ.சுமந்திரன் ஒரு கருத்தை தெரிவித்திருந்தார். அந்தக் கருத்து கண்ணில் பட்டபோதே இவ்வாறானதொரு கட்டுரை எழுத வேண்டுமென்னும் எண்ணம் ஏற்பட்டது. அதாவது, நான் எந்த இடத்திலும் எந்தப் பொய்யையும், ஒரு தடவை கூட சொன்னதில்லை. மக்களுக்கு உண்மை நிலையை கூறுவதால்தான், என்னை பலருக்கும் பிடிப்பதில்லை. நான் எனது சட்டத்தரணி தொழிலிலேயே பொய் சொல்லாதவன் என பெயர் எடுத்தவன். சுமந்திரன் அவரது சட்டத்தரணி வாழ்வில் பொய்களை கூறுகின்றாரா அல்லது இல்லையா என்பது பற்றி கருத்துக் கூறும் ஆற்றல் எனக்கில்லை ஏனெனில் நான் சட்டத்துறை சார்ந்த நபரல்ல ஆனால், அரசியல் வாழ்வில் சுமந்திரன் போன்றவர்கள் பொய்களை கூறுகின்றனரா அல்லது இல்லையா என்பதை – இந்தக் கட…
-
- 0 replies
- 669 views
-
-
முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழின அழிப்புக்கான நீதி இன்றைய உலக அமைதிக்கான தேவை 111 Views நேற்று, 08.05.2021 கிட்லரின் இன அழிப்பு ஆட்சிக்கு பிரித்தானியாவின் இணைவுடன் நேச நாடுகளின் படையணிகள் அன்றைய யேர்மனியைச் சரணடைய வைத்த, ஐரோப்பா மேலான வெற்றி நாள் (VE Day), 76ஆவது ஆண்டாக மேற்குலகில் கொண்டாடப்பட்டது. ஆயினும் யப்பானின் ஹிரோசிமா மேல் 1945 ஆகஸ்ட் 6ஆம் திகதியும், நாகசாக்கி மேல் ஆகஸ்ட் 9ஆம் திகதியும் அமெரிக்கா அணுக் குண்டுகளை வீசி, யப்பானை 14ஆம் திகதி சரணடைய வைத்ததை ஆகஸ்ட் 15 இல் யப்பான் மேலான வெற்றி நாளாக (VJ Day) மேற்குலகு கொண்டாடுகிறது. இரண்டு நாட்களிலும் இந்த யுத்தங்களில் பங்குபற்றிய போர் வீரர்களையும், உயிரிழந்த மக்களையும் போற்றி வணங்…
-
- 0 replies
- 320 views
-
-
இனப்படுகொலையா? இல்லையா? நிலாந்தன்! May 9, 2021 கடந்த வியாழக்கிழமை ஆறாந்திகதி கனடாவின் ஒன்ராறியோ நாடாளுமன்றம் ஈழத்தமிழ் இனப்படுகொலை அறிவூட்டல் வாரத்தைப் பிரகடனப்படுத்தியிருக்கிறது. அதாவது நடந்தது இனப்படுகொலை என்று கூறுகிறது. கடந்த மாதம் 24ஆம் திகதி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆர்மீனிய இனப்படுகொலை குறித்து ஓர் அறிக்கையை வெளியிட்டிருந்தார். 1915ஆம்ஆண்டு ஏப்ரல்24இலிருந்து தொடக்கி சுமார் பதினைந்து இலட்சம் ஆர்மீனியர்கள் துருக்கிய ஒட்டோமன் பேரரசால் கொல்லப்பட்டார்கள், அல்லது பலவந்தமாக நாடுகடத்தப்பட்டார்கள். சுமார் ஒரு நூற்றாண்டின் பின் அமெரிக்கா அதை ஓர் இனப்படுகொலை என்று இப்பொழுது அறிவித்திருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன் ஜேர்மனி அவ்வாறு அறிவித்திருந்தத…
-
- 0 replies
- 531 views
-
-
-
- 1 reply
- 762 views
-
-
நினைவுத்திற வெளியின் வெறுமையும், கூட்டழிவினதும் அடக்குமுறை எதிர்ப்பினதும் பொதுப்படிம அவசியமும் – எழில் May 8, 2021 139 Views வடக்கு கிழக்கில் நினைவுத்திற வெளியின் வெறுமையின் தோற்றம், நினைவுச் சின்னங்களைப் பற்றிச் சிந்திக்கின்ற போது எழுவது நியாயமானது. ஈழத் தமிழ்த் தன்மையை அடையாளப்படுத்திப் பிரதிபலிக்கக் கூடிய வரலாற்றுச் சின்னங்கள் என்று சொல்லக் கூடிய அளவிற்கு தமிழ் மன்னர்களின் சிலைகளைத் தவிர வேறு எதையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாதுள்ளது. நினைவுத்திற வெளியின் வெறுமைத் தன்மை திட்டமிட்டு தக்க வைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றதை யாரும் அறியாமல் இல்லை. முள்ளிவாய்க்காலில் உள்ள உருவச் சிலையும் ஒரு கூட்டு அழிவின் படிவமாக உள்வாங்கப்படவில்லை. இனப் படுகொலைச் சொல…
-
- 0 replies
- 274 views
-
-
மனித குல வரலாற்றில் மிகப் பெரிய துரோகி யார் ? BY SAVUKKU · 17/11/2009 ப்ரூட்டஸ்: ஜுலியஸ் சீசரின் ரோமானிய சாம்ராஜ்யத்தில், அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த, சீசரின் நெருங்கிய உறவினர் ப்ரூட்டஸ் செய்த துரோகம், வரலாற்றில் மிகவும் புகழ் பெற்றது. அகில சக்திகளையும் ஒருங்கே கொண்டிருந்த சீசரை, ப்ரூட்ஸ் அவரது மனைவி தடுத்தும் கேட்காமல் கொன்றார். வாங் ஜிங் வேய்: 1921ம் ஆண்டு பிறந்த சீனரான இவர், நெருக்கடியான நேரத்தில், தன் தாய் நாட்டுக்கு எதிராக ஜப்பானியர்களோடு அணி சேர்ந்ததற்காக இவரும் மிகப் பெரிய துரோகி என்று வரலாற்றில் இடம் பெறுகிறார். ரோசன்பர்க் …
-
- 78 replies
- 8.7k views
-
-
ஆர்ப்பாட்டம் ஒரு ஜனநாயக உரிமை என்.கே. அஷோக்பரன் இலங்கையில், ஐக்கிய தேசிய கட்சி ஆட்சி செய்து கொண்டிருந்த 1992ஆம் ஆண்டு காலப்பகுதி. 1977 இலிருந்தே ஐக்கிய தேசிய கட்சிதான் தொடர்ந்து ஆட்சியிலிருந்தது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தில் இருந்தது. எப்படியாவது ஆட்சியை மீண்டும் பிடித்துவிட, அவர்கள் பகீரதப் பிரயத்தனத்தை முன்னெடுத்த காலகட்டம் அது. இதன் ஒரு படியாக, அதிகரித்து வரும் விலைவாசி, ஊழல், தனியார்மயமாக்கல், அதிகரிக்கும் கடத்தல்கள், படுகொலைகள் உள்ளிட்ட காரணங்கள் தொடர்பிலான அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஒரு புதுவிதமான ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தது. அதுதான் ‘ஜன கோஷா’. அரசாங்கத்துக்கு தன…
-
- 0 replies
- 718 views
-
-
வத்திராயனில் ட்ராகன் - நிலாந்தன் இந்தவாரம் சீனப் பாதுகாப்பு மந்திரி இலங்கைக்கு விஜயம் செய்த அதே காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் வடமராட்சியில் வத்திராயனில் ஒரு சிறுவர் பூங்காக்கட்டடம் சீனத்துக் கட்டடக் கலைச்சாயலோடு கட்டித் திறக்கப்படுகிறது. கட்டிடத்தின் உச்சியில் சீனத்து டிராகன் சிலை ஒன்றும் வைக்கப்பட்டிருக்கிறது. கட்டடத்தில் சீன எழுத்துக்களும் வரையப்பட்டிருக்கின்றன.இவை அனைத்தையும் செய்தவர் ஒரு புலம்பெயர்ந்த தமிழர். ஊருக்கு நல்லது செய்ய விரும்பிய அவர் அந்த கட்டடம் கட்டுவதற்கான நிதி உதவிகளை வழங்கியிருக்கிறார். அவரே கட்டிடத்துக்கான வரைபடத்தையும் தீர்மானித்திருக்கிறார்.அது அவருடைய ரசனைத் தெரிவு. அதில் அரசியல் எதுவும் கிடையாது என்று சொல்லப்படுகிறது.அவருக்கோ அதை…
-
- 0 replies
- 910 views
-
-
நினைவு கூர்தலுக்கான வெளி-2021 ? நிலாந்தன்! May 1, 2021 கடந்த வாரம் கத்தோலிக்க திருச்சபையின் யாழ் மறை மாவட்ட குருமுதல்வர் ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தார். தமிழ்மக்கள் இறந்தவர்களை நினைவு கூர்வதற்கு அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் என்பதே அது. கத்தோலிக்க திருச்சபையின் உயர்நிலைக் குருவானவர் ஒருவர் அவ்வாறு தெரிவித்திருப்பது முக்கியமானது. அதுவும் மே பதினெட்டை நினைவு கூர்வதற்கு சில கிழமைகளுக்கு முன் அவர் அதைக் கூறியிருந்தார். ஈஸ்டர் குண்டுவெடிப்பை நினைவு கூர்ந்த ஒரு காலகட்டத்தில் அவர் அதைக் கூறியிருந்தார். எனவே அது கூறப்பட்ட காலம் கூறியது யார் என்பவற்றை தொகுத்துப் பார்த்தால் அக்கூற்றுக்கு முக்கியத்துவம் உண்டு. ஏனெனில் கடந்த ஆண்டும் நினைவு கூர்தலை எப்படி ம…
-
- 0 replies
- 705 views
-
-
அதிகாரப் பகிர்வுப் பாதையில் முன்னேற கடந்தகால அநுபவங்கள் பாடங்களாக வேண்டும் அ. வரதராஜா பெருமாள் இலங்கையில் மாகாண சபை முறைமையை உருவாக்குவதற்கும் அதற்குரிய சட்டவாக்க மற்றும் நிறைவேற்றதிகாரங்களை வழங்குவதற்கும் தேவையான அரசியல் யாப்பு ஏற்பாடுகள் இலங்கையின் அரசியல்யாப்பில் 13வது தடவையாக மேற்கொள்ளப்பட்ட திருத்தம் மூலமாகவே மேற்கொள்ளப்பட்டன. வரலாற்று அநுபவங்களைத் அறிந்து கொள்வது அவசியமாகும். இந்த 13வது திருத்தத்தின் மூலமாக வழங்கப்பட்ட அதிகாரங்கள் பெரும் குறைபாடுகளையும் குழப்பங்களையும் கொண்டதாக அமைந்ததற்கும், மேலும், அதில் வழங்கப்பட்ட அதிகாரங்கள் தொடர்ந்து வந்த அரசாங்கங்களால் மிகச் சுலபமாக கரைக்கப்பட்டு இன்று அது கோதிருக்க சுழை விழுங்கப்பட்டதொரு பழம் போல ஆகி…
-
- 0 replies
- 623 views
-
-
கல்முனை வடக்கு பிரதேச செயலக தரமுயர்த்தல் குறித்த கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் தீர்வு யோசனை May 1, 2021 தம்பியப்பா கோபாலக்கிருஸ்ணன் தலைவர், கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு 1989ஆம் ஆண்டு உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு வெளியிட்ட பிரகடனத்தின் அடிப்படையில்தான் தீர்வு இருக்க வேண்டும். எனினும் சுமார் முப்பது ஆண்டுகளின் பின்னர் மாற்றமடைந்துள்ள தற்போதைய களநிலை கருதி ஒரு சில மாற்றங்களைச் செய்யவேண்டும். 1989ஆம் ஆண்டில் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு விடுத்த பிரகடனத்தில், கல்முனை தமிழ்ப்பிரிவு என அழைக்கப்படும் கல்முனை வடக்குப் பிரிவில் பத்து கிராம சேவகர் பிரிவுகள் அடக்கப்பட்டன. அவையாவன கல்முனை 1, கல்முனை 2, கல்முனை 3, பாண்டிருப்பு 1, பாண்டிருப்பு 2, பெரியநீலாவணை…
-
- 0 replies
- 529 views
-
-
நெருக்கடிக்குள்ளாகும் சர்வதேச உறவுகளும், புதிய உலக ஒழுங்கும் 39 Views பனிப்போரின் முடிவில் இருந்து நிலவிய ஐக்கிய அமெரிக்காவின் தலமையிலான ஒரு துருவ உலக ஒழுங்கின் (unipolar world order) ஒப்பீட்டு உறுதித்தன்மை (stability) மற்றும் பொருளாதார வளர்ச்சியானது, இன்று உறுதி அற்ற ஒழுங்கு நிலை குலைந்த பல்துருவ உலக ஒழுங்கிற்கு (multi polar world) மாற்றம் பெற்று வருகின்றது. முன்னாள் ஐக்கிய அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் வெளியுறவுக் கொள்கை, அமெரிக்க-சீனா புவிசார் அரசியல் மோதல், சீனா மற்றும் ரஷ்யாவின் வளர்ந்து வரும் நெருக்கம், உள்ளக நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்கும் ஐரோப்பா மற்றும் பிரெக்ஸிட் (Brexit) என்று அழைக்கப்படும் ஐரோப்பிய ஒன்…
-
- 0 replies
- 560 views
-
-
மே தினம் யாருக்கு? சடங்காதலும் சங்கடங்களும் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ ஆண்டுதோறும் மே தினம் வந்துபோகிறது. அந்நாள் ஒரு விடுமுறை நாள்; அரசியல் கட்சிகளின் கூட்டங்கள் என்ற படிமங்களே, இலங்கையர் மனதில் ஆழப்பதிந்துள்ளது. மே தினத்துக்கு என்று உன்னதமான வரலாறு உண்டு. உலகெங்கும் உழைக்கும் மக்களின் ஒரே தினம், மே தினம் மட்டுமே என்ற உண்மை, எம்மில் பலருக்கு உறைப்பதில்லை. உலகளாவிய ரீதியில், உழைக்கும் மக்கள் போராடிப் பெற்ற சுதந்திரமே, மே தினமெனப்படுகின்ற சர்வதேச தொழிலாளர் தினமாகும். நீண்ட போராட்டங்களின் பின்னரே, உழைக்கும் மக்கள் தங்களைக் கொண்டாடுதற்கும் தங்கள் உரிமைகளுக்கான குரலை எழுப்புவதற்குமான தினமாக, இது அங்கிகரிக்கப்பட்டது. எனினும், பல நாடுகளில் மே தின…
-
- 0 replies
- 714 views
-
-
துறைமுக நகர்: ராஜபக்ஷர்கள் வைத்த தீ புருஜோத்தமன் தங்கமயில் தென் இலங்கையின் பௌத்த சிங்கள அடிப்படைவாத சக்திகள், ‘எதைத் தின்றால் பித்தம் தெளியும்’ என்கிற இக்கட்டான கட்டத்துக்கு வந்திருக்கின்றன. இனவாதத்தையும் மதவாதத்தையும் மூலதனமாக்கி, நாட்டின் ஆபத்பாண்டவர்கள் ‘ராஜபக்ஷர்களே’ என்று முழங்கி, 69 இலட்சம் வாக்குகளைப் பெற்றுக்கொடுத்து, அவர்களை மீண்டும் ஆட்சிக் கட்டிலில், இந்தச் சக்திகள் ஏற்றின. ஆனால், அடிப்படைவாத சக்திகளின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பையும் தவிடுபொடியாக்கி, சீனாவின் செல்லப்பிள்ளைகளாக நடப்பதை, ராஜபக்ஷர்கள் தமது தலையாய கடமையாக இன்றைக்கு வரிந்து கொண்டிருக்கிறார்கள். இதனால்தான், ராஜபக்ஷர்களுக்கும் தென் இலங்கையின் அடிப்படைவாத சக்திகளுக்கும் இட…
-
- 0 replies
- 617 views
-