நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4196 topics in this forum
-
மட்டக்களப்பு மாவட்டத்தின் நிர்வாகக் கட்டமைப்பை தனிச் சிங்கள மயமாக்கும் நடவடிக்கையில் கொழும்பு மகிந்த அரசாங்கம் ஈடுபட்டுள்ளதால் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தில் போர் நடைபெற்ற காலங்களை விடவும், சமாதானம் ஏற்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளதாக கொழும்பு அரசாங்கம் தெரிவித்த பின்னர்தான், மிகக் கூடுதலானளவு தமிழர்களின் பூர்விகக் காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளன. கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மாவட்டத்தில் சிங்களம் அத்துமீறிய நில அபகரிப்பு இடம்பெறும் நிலையில், அம்பாறை மட்டக்களப்பு மாவட்டங்களில் முஸ்லீம் - சிங்களம் இணைந்து தமிழர் காணிகளை கபளீகரம் செய்கின்றனர். இதற்கு மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று ஆரை…
-
- 0 replies
- 373 views
-
-
வடக்கில் வன்முறையாகும் தேர்தல் தொடர்பாகக் கடந்தவாரம் இப்பகுதியில் பார்த்தோம். தொடர்ந்து தேர்தல் தொடர்பான வன்முறைகள் அங்காங்கே இடம்பெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. இதற்கு சிறீலங்கா இராணுவத்திற்குத் துணைபோகும் அடிவருடிகள் முன்னுதாரணமாகச் செயற்பட்டுவருகின்றமை கொடுமை. அதாவது யாழ். தீவகப் பகுதியான நெடுந்தீவில் கூட்டமைப்பு ஆதரவாளர்களின் வீடுகளுக்குள்ளே சிறீலங்கா இராணுவத்தினரின் கைக்கூலிகளான ஈ.பி.டி.பி குண்டர்கள் புகுந்து அட்டகாசம் செய்ததில் பெண் உட்பட மூவர் படுகாயம் அடைந்துள்ளனர். குறித்த மூவரும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதல் சம்பவமானது கடந்தவாரம் இரவுவேளை, நெடுந்தீவு மேற்கிலுள்ள ஒற்றைப்பனையடியில் இடம்பெற்றுள்ளது. நெடுந்தீவில்…
-
- 0 replies
- 511 views
-
-
2009 ஈழ போரில்,இலங்கை ராணுவத்துக்கு,போர் பயிறிச்சியும்,நுணுக்கங்களையும் காங்கிரஸ் கட்சி சொன்னதன் பேரில் கற்று கொடுத்தவரும்,இன்றைய அதே காங்கிரஸ் கட்சிக்கு சிம்ம சொப்பானமாக விளங்கும் ,முன்னால் தளபதி,சோனியா காந்தியை எதிர்த்து போட்டி இட முடிவு எடுத்து இருப்பதாக செய்திகள் வருகின்றன. நாம் என்ன செய்ய வேண்டும்; அவரை வைத்து ஈழ பிரச்சனையில் 2009 யில் என்ன நடந்தது என்பதும்,காங்கிரஸ் கட்சியின் சூழ்ச்சியும் அவர் வாயால் கொண்டு வருவதற்கும்,அதே சமயத்தில் ஈழ பிரச்சனையை இந்திய மக்களிடமும் கொண்டு செல்வதற்கும் நாம் இவரை பயன் படுத்தி கொள்ள வேண்டும், முடியுமா ? தமிழர்கள் முன் வருவார்களா ? Gen VK Singh to join hands with BJP, to take on Sonia Gandhi in Lok Sabha polls Will it…
-
- 0 replies
- 426 views
-
-
தமிழரின் நீண்ட சோக வரலாற்றில் `2006 ஆகஸ்ட் 14′ ஈனர் படைகளின் ஈவிரக்கமற்ற தாக்குதல்களால் பரிதாபகரமாகக் கொல்லப்பட்ட 61 பிஞ்சுகளின் குருதியால் எழுதப்பட்டுள்ளது. நான்கு மாத பச்சிளம் குழந்தையை கண்முன்னே துடிதுடிக்க சுட்டுக்கொல்லும் வெறிபிடித்த சிங்கள ஆக்கிரமிப்பாளர்களுக்கு இதுவொரு பொருட்டாக இல்லாது போனாலும் அழுது… அழுது… ஆறமுடியாமல் அகதிகளாய் அலையும் தமிழினத்தால் இதைத் தாங்கிக் கொள்ளும் சக்தியில்லையென்றே கூறவேண்டும். முல்லைத்தீவு மாவட்டம் வல்லிபுனத்தில் `செஞ்சோலை’ சிறுமிகள் இல்லத்தின் வளாகமே 2006 ஆண்டு ஆகஸ்ட் 14 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 7 மணியளவில் கண்மூடித்தனமான வான் தாக்குதல்களுக்கு இலக்காகியது. பேரினவாத அரச படைகளின் நான்கு அதிவேக யுத்த விமானங்கள் மிலேச்சத்தனமாக வீசிய …
-
- 0 replies
- 273 views
-
-
ராஜிவ் வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் பெயரில் இணைய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் தம் மீதான வழக்குகள் பற்றி தொடர்ந்து கட்டுரைகளையும் செய்திகளையும் பதிவு செய்யப் போவதாக வேலூர் சிறையில் இருந்து அனுப்பிய கடிதத்தில் பேரறிவாளன் தெரிவித்துள்ளார். ராஜிவ் வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இவர்களது கருணை மனுவும் நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில் தற்போது பேரறிவாளன் பெயரில் http://www.perarivalan.com/ புதிய இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இணையம் வழியே உங்கள் இதயம் நுழைகிறேன்.. வாசல் திறவுங்கள்!- வேலூர் சிறையில் இருந்து பேரறிவாளன் இந்த …
-
- 0 replies
- 480 views
-
-
புலிகளின் தலைமையின் கையெழுத்துடன் வெளியான புத்தகத்தால் ஆச்சரியம்??? மாமனிதர் குமார் பொன்னம்பலம் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டமையைக் கண்டித்து தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் வெளியிட்ட இரங்கல் செய்தியைத் தாங்கியதாக குமார் பொன்னம்பலத்தின் நினைவு மலர் வெளியிடப்பட்டுள்ளது. சிங்களக் காடையர்களால் கடந்த 2000 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஐந்தாம் திகதி சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட அமரர் மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 75 ஆவது பிறந்த தின நினைவு நிகழ்வுகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் திருமறைக் கலாமன்றத்திலுள்ள கலைத்தூது கலையகத்தில் நடைபெற்றது. இங்கு அவரின் நினைவுகளைத் தாங்கிய நினைவு மலர் ஒன்றும் வெளியிடப்பட்டது. இந்த நினைவு மலர், குமார் பொன்னம்பலத்தின் படுகொலைக்கு இரங்கல…
-
- 0 replies
- 579 views
-
-
-
- 9 replies
- 1.3k views
-
-
தமிழர்களுக்கு எதிரான ‘மெட்ராஸ் கபே’ திரைப்ப படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம் என தமிழக அமைப்புகளும், கட்சிகளும் தமது எதிர்ப்பை காட்டமாக வெளியிட்டுள்ளன. இந்தியாவில் எடுக்கப்பட்ட மெட்ராஸ் கபே என்ற திரைப்படம் தமிழீழ விடுதலை போராட்டத்தை கொச்சைப்படுத்துவதாக எடுக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டிய தமிழக உணர்வாளர்களும் தமிழ் அமைப்புகளும், அப்படம் வெளியிடப்படுவதற்கு முன்னர் தங்களுக்குப் போட்டுக்காட்ட வேண்டும் என வலியுறுத்தியதுடன், இது தொடர்பாக தமிழக காவல்துறை ஆணையாளரிடம் மனு ஒன்றையும் கொடுத்திருந்தனர். இதைத் தொடர்ந்து சென்னையில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பதில் அளித்த படத்தை இயக்கி, நடித்த ஜோன் ஆபிரகாம், தமிழ் அமைப்புகள் விரும்பினால் நாங்கள் படத்தை முன்கூட்டியே காட்டுவோம் என…
-
- 22 replies
- 1.4k views
-
-
மாநரகரசபையும் பரிஸ் 10 பகுதியின் வர்த்தகர்களும் கலந்து கொண்ட ஒரு கருத்தரங்கில் பரிஸ் 10 மாநகரசபையிடம் வர்த்தகர்கள் தமது வர்த்க நிலையங்களின் பாதுகாப்புப் பற்றிய அச்சத்தினை வெளிப்படுத்தி அதற்கான பொறுப்பை மாநகரசபையும் காவற்துறையினரும் ஏற்றுக்கொள்ளும்படியும் கேட்டுக் கொண்டார்கள். அதற்குரிய நடவடிக்கைகளைத் தாம் எடுப்பதாக உறுதி கூறிய மாநகரசபை முதல்வர் வர்த்கர்கள் சட்ட ஓழுங்குகளிற்கு அமைய தமது நடவடிக்கைகளை ஒழுங்கமைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். பாரிய சட்ட விதி மீறல்களைப் பலர் செய்வதாகவும் அவை உடனடியாக ஒழுங்கிற்குள் கொண்டு வரப்படல் வேண்டும் எனவும் தெரிவித்தார். இந்தச் சட்டபூர்வமான நடவடிக்கைகளைப் பரிஸ் 10 இன் வர்த்கர்களிடம் கேட்டுக் கொண்டாலும் அது அனைத்துப் பகுதி வர்த்கர்…
-
- 0 replies
- 630 views
-
-
இலங்கையில் மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தல் இன்னும் சரியாக ஒரு மாதத்தில், வரும் செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ளது. எனினும், வடமாகாண சபைத் தேர்தல் நடவடிக்கைகள் இன்னும் வேகம் பெறாத நிலைமையே பொதுவாகக் காணப்படுகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒரு கூட்டம் இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்ற முக்கிய கட்சியாகிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உட்பட எந்தக் கட்சியும் இன்னும் தமது கொள்கைகளை வெளிப்படுத்துகின்ற தேர்தல் அறிக்கையை வெளியிடவில்லை. ஆயினும் வேட்பாளர்களும், கட்சி முக்கியஸ்தர்களும் கிராமங்களில் சிறிய அளவில் பொதுமக்களைச் சந்தித்து அவர்களின் ஆதரவைத் தேடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கின்றார்கள். இந்த நிலையில் வடமாகாணத்தின் பல பகுதிகளிலும் உள்ள மக்கள் இந்தத் தேர்தல…
-
- 0 replies
- 366 views
-
-
கேள்வி:- போனவாரம் இந்தியா தனது முதலாவது விமானந்தாங்கி கப்பலை கொச்சி துறைமுகத்தில் வெள்ளோட்டம் விட்டுள்ளதாக செய்தி வந்துள்ளதே. இதன் பின்னணி ஏதாவது...? தர்மா, நோர்வே பதில்:- இதன் பதிலுக்கு போவதற்கு முன்னர், இந்த செய்தி சம்பந்தமாக ‘ரிவிட்டரில்’ வந்த ஒரு வசனம் இதன் பின்ணணியை அழகாக காட்டும் என்று நினைக்கிறேன். ‘கப்பல் செஞ்சோம்னு சொல்லுங்க... அது என்ன போர்க்கப்பல்..? ரெண்டு மாசத்துக்கு ஒருமுறை எடுத்து தொடைச்சு ‘செட்ல’ நிறுத்தப்போறீங்களா..’ என்று அந்த ‘ரிவிட்டரில்’ எழுதி இருந்தது. ராமேஸ்வரத்துக்கு மேலுள்ள கடலில் தினமும் சிங்களக் கடற்படையால் தமிழக மீனவர்கள் கொடூரமாக கொல்லப்பட்டும் சிறைபிடிக்கப்பட்டும் கொண்டு செல்லப்படுவதை தடுக்கமுடியாத இந்தியக் கடற்படைக்கு விமானந்தாங்கி கப்பல…
-
- 1 reply
- 1.2k views
-
-
http://irruppu.com/?p=34035
-
- 0 replies
- 324 views
-
-
செந்தமிழ் பிரபாகரன் பற்றிய -25 குறிப்புகள்.. நிச்சயம் படிப்பவரைச் சிலிர்க்கச் செய்திருக்கும். !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! மனதுக்குப் பிடித்த ஒரு புத்தகத்தை எத்தனை முறை வாசித்தாலும் மனம் புதிய உணர்வைப் பெறுவதைப் போலத்தான், பிரபாகரன் பற்றிய நிகழ்வுகளைப் படிப்பதும். தமிழனுக்கு வீரத்தின் அர்த்தத்தை தனது வாழ்க்கை மூலம் எடுத்துக் காட்டியவர் அல்லவா... தம்பி எனத் தமிழர்களால் அழைக்கப்படும் அண்ணன். 30 ஆண்டு காலம் இலங்கை அரசுக்குக் கிலியூட்டி வரும் புலிப் படைத் தலைவர். வீரத்தின் விளைநிலமாக தமிழ் ஈழத்தை மாற்றிக்காட்டிய மனிதர்! 01.அரிகரன் - இதுதான் அப்பா வேலுப்பிள்ளை முதலில்வைத்த பெயர். ஒரு அண்ணன், இரண்டு அக்காக்களுக்க…
-
- 0 replies
- 2.7k views
-
-
கடும் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின்னர் நேற்று நெடுந்தீவுக்குச் சென்று வடக்கு மாகாணசபைக்கான பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். சிறிலங்கா அரசாங்கத்தின் ஒட்டுக்குழுவான ஈ.பி.டி.பி யினர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நெடுந்தீவு பகுதியில் வடக்கு மாகாணசபைத் தேர்தலுக்காக பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மீது தாக்குதல் நடத்தியிருந்தனர். இந்நிலையில் நேற்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தலமையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் நெடுந்தீவிற்குச் சென்றுள்ளனர். இதன் போது ஒட்டுக்குழுவின் அடக்குமுறைகளையும் மீறி தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு மக்கள் பெரும் ஆதரவினை தெரிவித்திருந்ததோட…
-
- 6 replies
- 894 views
-
-
பிரான்ஸ் : வரலாற்றில் முதன்முறையாக ஈழத்து கலைஞர்களின் முழுநீளத் திரைப்படங்களின் பெருவிழா யாழ்பாணத்தில் உருவாக்கப்பட்ட திரைப்படமொன்றும் பங்கெடுப்பு !! புலம்பெயர் தமிழ்ச் சூழலில் முதன்முறையாக ஈழத்து திரைக்கலைஞர்களின் முயற்ச்சியில் உருவாகிய முழுநீளத் திரைப்படங்களின் பெருவிழாவொன்று பிரென்சு மண்ணில் இடம்பெறுகின்றது. பரிஸ் தமிழ்த்திரை விழா எனும் முழக்கத்துடன் தலைநகர் பாரிசில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் யாழ்ப்பாணத்தில் உருவாக்கப்பட்ட திரைப்படமொன்றும் பங்கெடுத்துக் கொள்கின்றமை சிறப்பான விடயமாக அமைகின்றது. புலம்பெயர் தேசங்களில் வளர்ந்து வரும் இளங்கலைஞர்களினால் உருவாக்கப்பட்டு வெளிவந்து கொண்டிருக்கும் குறும்படங்கள் பலவுமi; புகலிட சினிமாவுக்கான நம்பிக்கையினை கவனத்தினையும் சமீபத்திய…
-
- 3 replies
- 410 views
-
-
மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 75 ஆவது பிறந்த தின நினைவுப் பேருரை நிகழ்வு இன்று ஞாயிற்றுக் கிழமை மாலை 4 மணிக்கு திருமறைக்கலா மன்ற கலைத்தூது மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வினை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குமார் பொன்னம்பலத்தின் உருவப் படத்திற்கு விளக்கேற்றி, மாலை அணிவித்து அஞ்சலி செய்து ஆரம்பித்து வைத்தார். மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் ஞாபகார்த்தக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் “தற்கால சர்வதேச சட்ட மற்றும் அரசியல் ஒழுங்கில் போருக்குப் பின்னரான தமிழர்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டம்” என்னும் தலைப்பில் யாழ்.பல்கலைக்கழக சட்டத்துறை விரிவுரையாளர் குமாரவடிவேல் குருபரன் உரையாற்றினார். மேலும் இந்நிகழ்வில் யாழ்.பல…
-
- 1 reply
- 281 views
-
-
அவன்தான் தமிழன் ============= இந்த நிகழ்ச்சிகள் நடக்கின்றபோது ஒரு நடனக் காட்சியை அமைத்து இருந் தார்கள். இந்த நடனக் காட்சி என்பது பாரதியார் சொல்லுவார். ‘எங்களிடமா இசை இல்லை? எங்கள் சுண்ணம் இடிக்கிற பெண்களின் இசைக்கு நிகர் உல கில் எங்கே இருக்கிறது? என்று சொன்னார் பாரதியார். அதுதான் திருப்பொற் சுண்ணம். அங்கே சுண்ணம் இடிக்கிறார்கள். சுண்ணம் இடிக்கிறபோது, உலக் கையை எடுத்து இங்கே நங்கைகள் இடித்துப் பாடினார்கள். பொற்சுண்ணம் என்பது அதுதான். உலக்கையைக் குத்துகிறபோது, சத்தத்தோடு அந்தப் பாடல் வெளி வரும். “முத்தணி கொங்கைகள் ஆட ஆட மொய்குழல் வண்டினம் ஆட ஆடச் சித்தஞ் சிவனெடும் ஆட ஆடச் செங்கயற் கண்பனி ஆட ஆடப் பித்தெம் பிரானொடும் ஆட ஆடப் பிறவி பிறரொடும் ஆட ஆட அத்தன் கர…
-
- 8 replies
- 2.3k views
-
-
நான் ஈழத்தில் பிறந்திருந்தால் உலக அளவில் புகழ் பெற்றிருப்பேன்: மூலிகை பெட்ரோல் ராமர்பிள்ளை பேட்டி! பெட்ரோலுக்கு மாற்று எரிபொருள் கண்டுபிடிக்க வேண்டும் என்று பேச்சு எழும் பொழுதெல்லாம் இவர் குறித்த பேச்சு எழாமல் இல்லை. ராமர் பிள்ளை உலகையே தனது மூலிகை பெட்ரோலின் மூலம் திரும்பி பார்க்க வைத்தவர். இப்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறார் என்ற கேள்விக்கு. அவர் திசைகாட்டி இணையத்திற்கு வழங்கிய நேர்க்காணல். வணக்கம் அய்யா உங்களது ஆராய்ச்சியின் மீதான ஆர்வம் எங்கிருந்து தொடங்கியது. எது உங்களுக்கு ஊக்க சக்தியாக இருந்தது? காரணம் என்று சொல்லவேண்டும் என்றால் நம்முடைய இலக்கியங்கள் தான் என்று சொல்லவேண்டும். நான் என் பள்ளியில் சுற்றுலாவிற்கு சென்றிருந்த பொழுது. ஒரு இடத்தில் நாங்களெல…
-
- 4 replies
- 2.7k views
-
-
(கடந்த மார்ச் மாதம், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் குழுவின் முன்பு இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா முன் வைத்த தீர்மானத்தை குறித்து மும்பையை சேர்ந்த ரிசர்ச் யூனிட் ஃபார் பொலிடிக்கல் எகானமி (R.U.P.E) என்ற பொருளாதார ஆய்வு அமைப்பின் வலைப்பதிவில் வெளியான கட்டுரையின் சுருக்கமான மொழிபெயர்ப்பு.) எந்தவொரு அரசியல் கோரிக்கையும் குறிப்பிட்ட அந்த நாடு மற்றும் உலக நாடுகளின் அரசியல் பொருளாதாரத்திலிருந்து விலக்கப்பட்டது அல்ல. மனித உரிமைகள் சார்ந்த கோரிக்கையையும் அது போன்றே பார்க்க முடியும். அந்த கோரிக்கையை யார் எழுப்புகிறார்கள்; எந்த கோணத்தில் எழுப்புகிறார்கள்; உலகப் படிநிலையில் அவர்கள் வகிக்கும் இடம் என்ன என்றெல்லாம் பார்க்க வேண்டியுள்ளது. ஏனெனில், அது மக்களின் வாழ்க்கையோடு சம்…
-
- 1 reply
- 836 views
-
-
93 வயது முதியவர் அவர். தன் வாழ்நாள் முழுவதும் பொறியியல் துறையில் வேலை செய்து இப்போது குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவரது வேலையான துப்பாக்கி வடிவமைப்பு பரிசோதனைகளின் போது தொடர்ந்து உரத்த சத்தங்களைக் கேட்டுக் கொண்டிருந்ததால் காது செவிடாகி விட்டிருக்கிறது. கடந்த 25 ஆண்டுகளாக அவரது நாட்டில் ஏற்பட்டு வரும் பொருளாதார மாற்றங்கள் அவரைப் பெரிதாக ஏதும் பாதித்திருக்கவில்லை. அவர்தான் 1947-ம் ஆண்டு ஏகே 47 என்ற துப்பாக்கியை வடிவமைத்தவர். அவரது வடிவமைப்பில் உருவான துப்பாக்கி பின்னர் அவரது பெயராலேயே ஏகே 47 (அவ்டோமாட் கலாஷ்னிகோவ் மாடல் 1947) என்று அழைக்கப்படுகிறது. அவர் பழைய சோவியத் யூனியனைச் சேர்ந்த மிகயில் கலாஷ்னிகோவ். இப்போது சோவியத் யூனியனின் போலி சோசலிச குடியரசுகள் வீழ்த்தப்பட்…
-
- 0 replies
- 486 views
-
-
பல மில்லியன்கள் வருடங்களில் இருந்து பத்தாயிரம் வருடங்களுக்கு முன்பு வரை, ஐரோப்பாவெங்கும் ஐஸ் பரவியிருந்தது. கண்ணை உயர்த்தி பார்க்கும் இடமெல்லாம் வெள்ளைப்போர் வையாக ஐஸ். மனித நாகரீகக் காலப்பிரிவுகளில், இந்தக் காலங்களை ‘ஐஸ் காலம்‘ என்று அழைப்பார்கள். மிகச் சமீபத்தில், அதாவது இன்றிலிருந்து பத்தாயிரம் ஆண்டு அளவுகளில் தான், இந்த ஐஸ் கட்டிகள் படிப்படியாகக் கரைந்து, துருவம் வரை சென்று, அங்கே சங்கமம் ஆகியது. இந்த ஐஸ் காலத்தில், ‘மம்மோத்’ என்னும் யானை போன்ற மிகப் பெரிய விலங்குகள், உலகில் பல இடங்களிலும் வாழ்ந்து வந்தன. இப்போது யானைகள் ஆப்பிரிக்காவிலும், ஆசியாவிலும் மட்டுமே காணப்படுகின்றன. ஆனால் இப்போதுள்ள யானைகளின் முப்பாட்டனான ‘மம்மோத்’ உலகமெங்கும் பரவி வாழ்ந்து வந்தன. இந்த மம…
-
- 1 reply
- 965 views
-
-
லிங்கேஸ்வரன் விஸ்வா தொடர்ந்து தமிழக ஊடகங்கள் தமிழர்களின் பிரச்சனைகளை மூடிமறைத்தும், அவற்றைத் திசைதிருப்பியும் வருகின்றன. தமிழகத்தில் உள்ள திருடர்களின் ஊடகங்கள் சிபிஐக்குப் பயந்து இயங்குகின்றன. அதனைப் போன்று வடவர்களின் அடிவருடிகளின் ஊடகங்களும் இயங்குகின்றன. இவை தொடர்ந்து பாகிஸ்தான் அல்லது சீனாவைப் பற்றித் தான் அதிகம் பேசிக்கொண்டே இருக்கின்றன. இவை பாகிஸ்தான், சீனாவின் அட்டூழியங்களுக்கு முடிவுகட்டப்படவேண்டும் என்று விவாதங்களை நடத்தி உரக்கக் குரல் எழுப்பி வருகின்றன. வடவர் அடிவருடிகளே, திருடர்களே தமிழர்களுக்கும் தமிழினத்திற்கும் எதிராக தினமும் அட்டூழியங்களை மேற்கொள்ளும் சக்திகளைப் பற்றி ஏனடா வாய் திறக்க மறுக்கிறீங்க? தமிழக மீனவர்களுக்கு தமிழக கடல் எல்லையில் சிங்கள அ…
-
- 1 reply
- 648 views
-
-
தமிழன்( Tamilan ) சமூகம் · 13,281 விருப்பங்கள் கருணாநிதி குடும்பத்து சொத்து மதிப்பு - மயக்கமே வருகிறது..! இதயம் பலகீனமாக உள்ளவர்கள் மற்றும் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் தயவுசெய்து இதை படிக்கவேண்டாம்.. கீழ்கண்ட செய்திகள் ஜூனியர் விகடன் 10 ஆகஸ்ட் 2011 இதழில் வெளியிடப்பட்டுள்ளது. கருணாநிதியின் குடும்பத்துக்கு இருக்கும் சொத்துப் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது, டெல்லியில் இருந்து வெளிவரும் 'த அதர் சைடு’ என்ற ஆங்கில மாத இதழ். இது ஏதோ, கருணாநிதிக்கு வேண்டாத அரசியல் எதிரிகள் நடத்தும் பத்திரிகை இல்லை. 'எனது நண்பர்... எமர்ஜென்ஸி கொடுமைகளை ஒன்றாகச் சேர்ந்தே எதிர்த்தோம்!’ என்று கருணாநிதியால் வாஞ்சையாகப் புகழப்படும் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸை ஆசிரியர் குழுத் தலைவராகக்கொண்டு இ…
-
- 1 reply
- 3.1k views
-
-
அறிவரசன்:- ஒரு முறை செய்திவாசிப்பாளராக இருந்த இசைப்பிரியா என்ற போராளியை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அப்போது அவர்களிடத்தில் சொன்னேன், ‘எல்லோரும் தமிழ்ப் பெயர் வைக்கவேண்டும் என தலைவர் அறிவித்துள்ளார் என அறிகிறேன். ஆனால் உங்களது பெயர் தமிழில் இல்லையே, இசை என்பது மட்டும்தானே தமிழ், பிரியா என்பது தமிழ் இல்லையே’ என்று நான் கேட்டபோது, அவர்கள் சொன்னார்கள் ‘எனது பெயர் இசைஅருவி என்பதுதான்’ என. ‘இசைஅருவி ஒரு சிறந்த தமிழ்ப் பெயர் ஆச்சே. அப்படி ஒரு சிறந்த தமிழ்ப் பெயரை வைத்துக்கொண்டு, ஏன் உங்களை இசைப்பிரியா என்று அழைத்துக்கொள்கின்றீர்கள்?’ என்று சொன்னபோது, ‘தோழிகள் எல்லாம் அப்படி அழைத்தார்கள். அதனால் இசைப்பிரியாவாக என்னை மாற்றிக்கொண்டுள்ளேன்’ என்றார்கள். ‘இதனைத் தலைவரும் ஏ…
-
- 1 reply
- 1.4k views
-
-
13ஆம் சட்டத்திருத்தத்தையும் மாகாணத் தேர்தலையும் தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும்'மே பதினேழு இயக்க ஆர்ப்பாட்டத்தில் த.தே.பொ.க. பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார். ஒன்றுபட்ட இலங்கையை வலியுறுத்தும் 13ஆவது சட்டத் திருத்தத்தையும்இ வடகிழக்கு மாகாண சபைத் தேர்தலையும் தமிழீழத் தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும்' என சென்னையில் இன்று(17.08.2013) மே பதினேழு இயக்கம் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் பேசினார். இலங்கை அரசமைப்பின் 13ஆவது சட்டத்திருத்தம் – மாகாணசபைத் தேர்தல் எனும் போலிகளைப் புறக்கணிக்கக் கோரியும் காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக் கூடாதென வலியுறுத்தியும் இலங்கையில் தொட…
-
- 3 replies
- 477 views
-