நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4197 topics in this forum
-
பிரித்தானியக் குடியேற்றத்தின் பின்னான காலம் நெடுகிலும் தனது தேசிய அடையாளத்திற்காக மரணத்துள் வாழ நிர்பந்திக்கப்பட்ட மக்கள் கூட்டம் தான் இலங்கைத் தமிழ்ப் பேசும் சிறுபான்மையினர். 1956 இல் தான் முதல் படுகொலையைச் எதிர்கொண்டனர். 1952 ஆம் ஆண்டு இலங்கையின் முதல் பிரதமரான டி,எஸ்.சேனாநாயக்கவினால் 7.2 மில்லியன் டொலர் செலவில் ஆரம்பித்து வைக்கப்பட்ட கல்லோயத் திட்டத்தின் பின்னணியில் கிழக்கு மாகாணத்தில் தமிழ்ப் பேசும் மக்களின் செறிவைச் சீர்குலைப்பதற்கான பேரினவாத நோக்கமே அடிப்படையாக அமைந்தது. திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்திற்கான முதல் பரீட்சாத்த முயற்சியாக இது கருதப்படலாம். பட்டிப்பளை ஆறு என்ற தமிழ்ப் பெயர் கல் ஓயா என்று சிங்களத்தில் மாற்றப்படிருந்தது. 150 குடும்பங்களைக் குடியேற்று…
-
- 0 replies
- 563 views
-
-
கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகக்கடுமையான வீழ்ச்சியை இந்த வாரம் இலங்கையின் பங்குச் சந்தை எதிர்கொண்டுள்ளது. 2011 நவம்பரிலிருந்து இற்றைவரை 17.5 சதவீதம் தனது ரூபாய் நாணயத்தின் பெறுமதியை இலங்கை இழந்துள்ளது. இறக்குமதியாகும் அத்தியாவசிய எரிபொருளான மசகு எண்ணெய்க்கு செலுத்த வேண்டிய டொலர் நாணயப் பற்றாக்குறையால் அனைத்துலக நாணய நிதியத்திடமிருந்து 500 மில்லியன் டொலர்களை கடன் வாங்க வேண்டிய நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது பி.பீ.ஜெயசுந்தராவின் திறைசேரி. மகிந்தர் பெருமைப்டும் 7.2 சதவீத பொருளாதார வளர்ச்சி வெளிநாட்டு நேரடி முதலீடுகளைக் கொண்டு வர இயலாத நிலையில் ஊடகங்களில் சொல்லப்படும் சுயதம்பட்டங்கள் போலியானவை என்பதை தெரிந்து கொள்வது சுலபம். அத்தியாவசியப் பொருட்களின் செயற…
-
- 2 replies
- 717 views
-
-
எமது தமிழ் இனம் தமது பூர்வீக நிலங்களில் தமது வரலாற்றை சிதைக்கின்ற வகையிலேஇனி வரலாறு எழுதுகின்ற போது தமிழன் பூர்வீகமாக வாழ்ந்த வரலாறு இல்லை என்று சொல்லக்கூடிய வகையிலே சதித்திட்டத்தோடு எங்களுடைய தமிழ் பேசும் இனத்தை அழிப்பதற்காண திட்டங்களை தீட்டி அதன் அடிப்படையிலே உருவாக்கப்பட்ட விடையம் தான் இந்த நில அபகரிப்பு என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். மன்னார் மாவட்டத்தில் இடம் பெற்று வரும் காணி அபகரிப்பு மற்றும் மீனவர்களுக்காண பாஸ் நடைமுறைகளுக்கு எதிராக தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த சாத்வீக போராட்டம் நேற்று சனிக்கிழமை காலை மன்னார் சிறுவர் பூங்கா மைதானத்தில் இடம் பெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றிய போத…
-
- 0 replies
- 398 views
-
-
ஒரு நாட்டை 'ரேட்டிங்' ஏஜென்சிகள் எப்படி மதிப்பிடுகின்றன!? இன்றைக்கு மீடியாவில் அடிக்கடி பார்க்கும் ஒரு விஷயம் ஒரு நாட்டைப் பற்றிய ரேட்டிங். என்ன அது? எதற்காக இந்த ரேட்டிங்? விவரமாகப் பார்ப்போம்... ஒரு மனிதனுக்கு கடன் கொடுக்கலாமா... அவனால் அதைத் தாங்க முடியுமா.. திருப்பி செலுததும் திறன் இருக்கிறதா... என்பதை அலசுவதைப் போலத்தான், ஒரு நாட்டைப் பற்றியும் அலசி பட்டியலிடுகிறார்கள். புள்ளிகள் தருகிறார்கள். நல்ல ரேட்டிங்கில் உள்ள நாடு அல்லது நிறுவனத்துக்கு எவ்வளவு வேண்டுமானாலும் கடன் தர உலக நிதி அமைப்புகள் முன்வரும். அந்த நாட்டில் முதலீடு செய்ய வெளி முதலீட்டாளர்களுக்கு தயக்கமிருக்காது. ரேட்டிங்கில் குறைந்துவிட்டால், எல்லாமே தலைகீழ்தான். கடன் தர முன்வரமாட்டா…
-
- 9 replies
- 819 views
-
-
[size=3][size=4]நான் பணிபுரியும் வின்சர் பல்கலைக் கழகத்தின் சமூகவியல் மானுடவியல் துறைகளின் ஆசிரியர்களுக்கிடையே சில மாதங்களுக்கு முன்பாகப் பலத்த வாக்குவாதங்கள் ஏற்பட்டன. சமூகவியல், மானுடவியல்துறை என்று வழங்கப்பட்டு வந்த எங்கள் துறையின் பெயரோடு குற்றவியல் (Criminology) என்பதையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் தீர்மானத்தைச் சில பேராசிரியர்கள் முன்வைத்திருந்தார்கள். குற்றவியலின் சட்ட, நீதி, நியாயப் பரிமாணங்களைதக் கற்பிக்கச் சட்ட பீடம், சட்டமும் சமூகமும் போன்ற துறைகள் இருந்தாலும் குற்றவியலின் சமூகவியல் பரிமாணங்களை ஆய்வு செய்வதும் கற்பிப்பதும்தான் குற்றவியல் துறையின் மையமாக இருந்தது. எமது துறைகளிலும் பல பேராசிரியர்கள் குற்றவியலைத்தான் தமது விருப்புக்குரிய சிறப்புத்துறையாகப்…
-
- 0 replies
- 458 views
-
-
இலங்கைத் தமிழ் அகதிகள் தொடர்பிலான பல்வேறு தகவல்கள் நாளாந்தம் உலக ஊடகங்களை ஆக்கிரமித்து வருகின்றன. நாளுக்கு நாள் புலத்தில் தஞ்சம் அடைவதற்காக பயணிப்பவர்களும் கைது செய்யப்படுபவர்களும் என நீண்டு செல்லும் பட்டியலுக்குள் இன்னமும் ஈழத்தமிழர்களின் அவலம் தொடர் கதையாக மாறியிருக்கின்றது. மே 18 இன் பின்னர் இன்றுவரையில் குறைவடையா தொடர் அவலத்தினை தமிழினம் சந்தித்துவருகின்றது என்பதற்கு புலத்தில் தஞ்சம் கோரும் எம்மவர்களின் எண்ணிக்கை எடுத்துக்காட்டுவதாகத் தோற்றங்காட்டினாலும் அதனால் ஏற்பட்டு வருகின்ற பாதக நிலைமை தொடர்பிலும் கவனம் செலுத்தவேண்டிய தேவை உணரப் பட்டிருக்கின்றது. தமிழ்த் தேசியப் போராட்டத்திற்கு அறிந்தோ அறியாமலோ பங்கெடுத்தவர்கள் நாட்டில் வாழ்வியலை முன்னெடுப்பதில் நெருக்கடிகளை…
-
- 0 replies
- 474 views
-
-
சிறீலங்காப் பேரினவாத சிங்கள கொடுங்கோல் ஆட்சியாளர்களால் தமிழர் தாயகப் பூமி சூறையாடப்படுவது தொடர்பாக இப்பகுதியில் பல தடவை குறிப்பிட்டிருந்தோம். தற்போது தமிழ் மக்களை கடுமையாக சிந்தித்து கொதித்தெழும் நிலைமைக்கு ஆளாக்கும் அளவிற்கு சூறையாடால்கள் அங்கு மேலும் மேலும் உச்சம் பெற்றுள்ளன. தமிழர் தாயகப் பகுதிகளில் தமிழ் மக்களின் எண்ணிக்கையையும் குடிப்பரம்பலையும் நன்கு குறைத்து, அங்கு சிங்களவர்களைக் குடியமர்த்தி இலங்கை பூராகவும் சிங்களவர்களுக்கே உரித்தானதாக ஆக்கும் நடவடிக்கையிலேயே சிங்களம் தனது முழு நேரத்தையும் செலவிட்டு வருகின்றது. தமிழ் மக்களின் வழிபாட்டுத் தலங்களை அழித்து பௌத்த ஆலயங்களை அமைக்கும் நடவடிக்கையிலும் ஒரு ஆக்கிரமிப்புக் குழு செயற்பட்டு வருகின்றது. இதற்கு தமிழ் அரச உத…
-
- 0 replies
- 382 views
-
-
[size=3][size=4]கிரெடிட் கார்டு வேண்டும் என்று ஆசைப்பட்டு வாங்கிய பலரும் இன்றைக்கு அதை தலையை சுற்றி தூரப்போடும் வேலையை செய்து வருகின்றனர். கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் ஏதோ சூனியத் தகட்டினை வாங்கிவிட்டோமோ என்று அஞ்சும் சூழ்நிலைக்கு வந்து விட்டனர். ஆனால் எந்த ஒரு பொருளையுமே நமக்கு ஏற்றதாக பயன்படுத்தினால் அச்சப்படத் தேவையில்லை என்று கூறும் நிபுணர்கள் கிரெடிட் கார்டில் உள்ள நன்மை, தீமைகளை பட்டியலிட்டுள்ளனர்.[/size] [size=4]கிரெடிட் கார்டு ஜாக்கிரதை[/size] [size=4]கிரெடிட் கார்டு கடனுக்கான வட்டி வீட்டுக் கடனைப்போல சுமார் நான்கு மடங்கும், பெர்சனல் லோனைப்போல சுமார் 2 மடங்கும் அதிகம். அதாவது கிட்டத்தட்ட 35 முதல் 40 சதவிகிதம் என்கிற அளவில் இருக்கும்.[/size] [size=4]கிரெ…
-
- 13 replies
- 2.3k views
-
-
தமிழ் மக்களின் உரிமைப் போராட்டங்களை எப்படி யாவது அடக்கி ஒடுக்க வேண்டுமென்பதில் சிங்கள அரசு உறுதியாக இருக்கிறது. சிறீலங்கா என்பது தனிச்சிங்களத் தீவென்றும் இங்கு தமிழர்கள் என்ற இனம் வந்தேறு குடிகளென்றும் காலத்திற்குக் காலம் கூறிவருகின்ற சிங்கள அரசியல்வாதிகள் தற்போது அதனை நிலை நிறுத்தும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழீழ விடுதலைப் புலிகளுக்குப் பின்னர் சிறீலங்காவில் தமிழ் மக்கள் தொடர்பாகக் கேள்வி கேட்கக்கூடிய சக்திகள் எதுவுமே இல்லை. முப்படைகளுடன் கூடிய பலம் பொருந்திய இராணுவக் கட்டமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகளை சர்வதேச நாடுகளின் உதவியுடன் இனவெறி அரசு சிதைத்துள்ளது. விடுதலைப் புலிகளின் சக்தி இல்லாதொழிக்கப்பட்டதைத் தொடர்ந்து தற்போது முற்று முழுதான வெறுமையை நோக்கி …
-
- 0 replies
- 544 views
-
-
சிறீலங்காவின் தமிழின அழிப்பை மௌனமாக வேடிக்கை பார்த்த உலகம், இப்போது கண்டன அறிக்கைகளுடன் காலத்தைக் கழிக்கின்றது. விடுதலைப் புலிகளை அழித்துவிட்டால், தமிழர்களுக்கு தங்கத் தாம்பாளத்தில் வைத்து சிங்களம் தீர்வை வழங்கிவிடும் என்று எதிர்பார்த்த உலகம், இருந்த நிலத்தையும் இழக்கும் நிலையில் தமிழர்கள் தள்ளப்பட்டுள்ளதையும் இப்போது வேடிக்கையே பார்த்துக் கொண்டிருக்கின்றது. மீட்பர்கள் இல்லாமையால் நாளுக்கு நாள் பறிபோகும் தமிழரின் நிலங்களும், உரிமைகளும் மீண்டும் கிடைக்காதோ என்ற ஏக்கமே தமிழர்களைச் சூழ்ந்துள்ளது. தமிழ் மக்கள் ஐனநாயக வழியில் போராட முனைந்தால் கிறீஸ் பூதங்களை அனுப்பிய சிங்களம், இப்போது கழிவு எண்ணைகளை ஊற்றியும், புலனாய்வாளர்களை அனுப்பியும் தமிழர்களின் குரல்வளைகளையும் ஒடுக்க மு…
-
- 0 replies
- 527 views
-
-
உறுதி என்ற பதத்திற்கு இரும்பை ஒப்பிடுவார்கள். ஆனால் அதன் புரிதலில் நம்மவரில் பலருக்குச் சரியான விளக்கம் இன்றிய நிலையிருக்கும் என்றால் அதில் மிகையில்லை. ஏனெனில் எவ்வகை இரும்பானாலும் சில காலம் அது ஒரே இடத்தில் இருப்புக்கொள்ளுமாயின் அது துருப்பிடித்து மண்ணோடு மண்ணாகி விடும் என்பதே காலம் சொல்லும் கதை. அவ்வாறிருக்கையில் எவ்வாறு உறுதியை இரும்புக்கு ஒப்பிடுவது என்ற கேள்வி நம்மனத்தைக் குடையாமல் இல்லை.உண்மை என்னவெனில்; இரும்பு; ஒருபோதும் அதன் கனத்திற்காக உறுதியோடு ஒப்பிடப்படுவதில்லை. இரும்பானது, துருப்பிடித்து மக்கிப் போகும் இறுதிக்கணம் வரையிலும் அது இரும்பாகவே இருந்து அழிந்துபோகும், வேறு எந்தப்பொருளும் இறுதிவரை இரும்பைப்போல வாழ்வதில்லை என்பதாலேயே, இரும்பை ஒத்த மனவுறுதி வ…
-
- 0 replies
- 711 views
-
-
வாரன் ஆண்டர்சன் மிக்க நல்லவரு - போபால் மக்கள் ரொம்ப கெட்டவர்கள் - அமெரிக்காவின் தீர்ப்பு..?! ஈழதேசம் செய்தி...! [size=3] போபால் ஆலையைச் சுற்றியுள்ள நிலங்கள் மற்றும் குடிநீர் ஆதாரங்கள் அனைத்தும் விசமாக மாறி உள்ளன. ஏன் அவ்வாறு மாறின..? 1984 - ம் ஆண்டு மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் இயங்கிய யூனியன் கார்பைடு நிறுவனம் பூச்சிக் கொல்லி மருந்தை தயாரித்துக் கொண்டிருந்தன. இந்திய விவசாயிகளுக்காக இந்தியாவில் அமெரிக்காவின் முதலாளிகளால் இயங்கும் ஆலை இது. அமெரிக்காவில் இந்த ஆலை தனது உற்பத்தியை துவங்குவதற்கு இன்று வரை தடை உள்ளது. இந்த ஆலையில் இரவு நேரத்தில் விபத்து ஏற்பட்டு மீதேல் ஐசோ சயனைட் என்ற வாயு கசிந்து சுமார் ஒரு ஆயிரம் பேரின் உயிர்களை காவு கொண்டது. பல பத்தாயிரங்…
-
- 1 reply
- 705 views
-
-
மனித மலங்களை ஊற்றி கொடுமை செய்யும் இலங்கைப் படைகளின் அதி உட்ச அராஜகம்:-அரசியல் கைதியின் வாக்குமூலம் 28 ஜூன் 2012 globaltamilnews.net மற்றும் GTBC FM ற்கு சிறையில் இருந்து வழங்கிய வாய்மூல சாட்சியம்:- குளோபல் தமிழ்ச் செய்திகள் மற்றும் ற்கு சிறையில் இருந்து வழங்கிய வாய்மூல சசாட்சியம்:- வவுணியா சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகளின் அவலம்:- நீதிமன்றங்களின் உத்தரவுகளை உதாசீனம் செய்து அடாவடித்தனம் புரியும் பாதுகாப்பு அமைச்சு:- அரசியல் கைதி சரவணபவன் எங்கே? ஆவரை எம் முன் நிறுத்தும் வரை எமது அகிம்சைப் போராட்டம் தொடரும் என்கின்றனர் கைதிகள்:- வவுனியா சிறைச்சாலையில் 31 அரசியல் கைதிகள் இருக்கின்றோம். பத்திரிகைகளில் வந்த செய்திகள் மக்களுக்கு க…
-
- 0 replies
- 628 views
-
-
“குவயட் டிப்லோமசி” என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் மௌன இராஜதந்திரத்தை இராணுவ வலிமை குறைந்த நாடுகள் மற்றும் அனைத்துத் தரப்பினருடனும் நல்லுறவரை பேண விரும்பும் நாடுகள் பரவலாக கடைப்பிடித்தே வருகின்றன. இராணுவ மற்றும் பொருளாதார போட்டியில் ஈடுபடும் நாடுகள் தமது குரலை அழுத்தமாக ஒலிக்கச் செய்வதன் மூலமாகவே தமது வளர்ச்சியைப் பெருக்கலாம் என்கிறதனால் மௌன இராஜதந்திரத்தை பேணுவதில்லை. சிறிலங்கா விடயத்தில் கடந்த இரண்டு தசாப்தங்களாக மௌன இராஜதந்திரத்தையே இந்தியா கடைப்பிடித்து வருகிறது. இக்கொள்கை இனியாவது மாறுமா என்பதே தற்போது எழும் கேள்வி. தமிழ்நாட்டின் அழுத்தங்கள் அதிகரித்த காரணத்தினால் மறைமுகமாக சிறிலங்கா அரசுக்கு பலவழிகளிலும் உதவிய இந்திய நடுவன் அரசு, தற்போது பல கசப்பான சம்பவங்களை …
-
- 4 replies
- 693 views
-
-
நேற்று நூறு முள்ளிவாய்க்கால் ...! இன்று பெரும் பேரழிவு - சம்பிக்க ரணவக்க...! நாளை கூண்டோடு இலங்கைத் தமிழர்கள் கொல்லப்படுவார்களோ..? - ஈழதேசம். [size=3] ஜாதிக ஹெல உறுமிய கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் இலங்கை அமைச்சருமான சம்பிக்க ரணவக்க அவர்கள் த.தே.கூ.வின் தலைவர் திரு.சம்பந்தன் அவர்கள் பேசிய, வடக்கு கிழக்கு தமிழர்களின் ஒருங்கிணைந்த பகுதிதான் என்றும், தமிழர்களின் ஒரே கோரிக்கை அரசியல் உரிமை தான் வேண்டும் என்று கூறியதற்கு இந்த சம்பிக்க ரணவக்க தான், தமிழர்களின் உரிமை, வடக்கு கிழக்கு என்றெல்லாம் சம்பந்தன் பேசி, மீண்டும் ஒரு முள்ளிவாய்க்கால் படுகொலைகள் அல்ல, நூறு முள்ளிவாய்க்கால் படுகொலைகளை ஏற்படுத்த முனைகிறார் என்று கூறினார். முள்ளிவாய்க்கால் ஒரு படுகொலை தான் …
-
- 0 replies
- 645 views
-
-
[size=3] [/size][size=3] தமிழர் தாயகப் பகுதிகளில் தமிழ் மக்களை வலிந்து சண்டைக்கு அழைப்பது போல் அதிகரித்து வரும் சிங்கள இனவாதத்தின் நில ஆக்கிரமிப்புக்களையும் சிங்களப் படையினரின் தமிழ் மக்கள் மீதான கொடுமைகளையும் கண்டு தமிழ் மக்கள் கொதித்துப்போயுள்ள நிலையில், வேறு வழியின்றி தமிழ் மக்கள், சிங்களப் படையினரை எதிர்க்கவும் துணிந்துவிட்டனர். தம்மைச் சந்திக்க வரும் வெளிநாட்டவர்களிடமும் தமது நிலை பற்றியும் படையினரால் தமக்கு நேரும் அவலம் பற்றியும் எடுத்துரைக்க ஆரம்பித்துள்ளனர். படையினரின் நில ஆக்கிரமிப்புக்கு எதிராகப் பல இடங்களில் மக்கள் வழக்குத் தாக்கல் செய்யவும் முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. தமிழர் தாயகப் பகுதிகளில் தொடரும் நில ஆக்கிரமிப்பை கண்டித்து நேற்று தி…
-
- 0 replies
- 531 views
-
-
சிங்கள தேசம் தமிழர் தாயகப் பகுதியில் தமிழர்களின் பூர்விகக் காணிகளை கடந்த அறுபது ஆண்டு காலத்திற்கு மேலாக அபகரிப்புக்கள் மேற்கொள்ளப்படுவதுடன், அந்த பகுதியில் காலம் காலமாக வாழ்ந்த மக்கள் விரட்டியடிக்கப்பட்டார்கள் என்பதுதான் வரலாறு. கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தில் 1957 ஆம் ஆண்டு கல்லோயா நீர்ப்பாசனத் திட்டம் மேற்கொள்ளப்பட்ட போது சிங்களக் குடியேற்றத் திட்டமும் முன்னெடுக்கப்பட்டது. அந்த காலப் பகுதியில் அங்கு வாழ்ந்த தமிழர்கள் துரத்தப்பட்டு மலையோரப் பகுதிகளிலும், பாலங்களுக்கு கீழும் வாழும் அவல நிலை ஏற்பட்டது. அக்காலப் பகுதியில் விரல்விட்டு எண்ணக் கூடியளவில் காணப்பட்ட சிங்களக் குடும்பங்கள், பின்னர் அம்பாறை மாவட்டம் சிங்களவர்களின் பூர்விகமான பகுதி என்ற கருத்துத்தை சிங…
-
- 0 replies
- 557 views
-
-
நீண்ட பாதையின் ஊடான ஆர்ப்பாட்ட ஊர்வலங்களிலும், பேரணிகளிலும் போராட்டங்களிலும் ஒன்றை கவனிக்கக் கிடைக்கிறது. நடை சோர்ந்து களைப்பு மிகும்போதெல்லாம் அந்த மனிதனின் பெயரை யாரோ ஒருவர், ஒரு துரத்து மலையின் எதிரொலி போல ஓங்கி ஒலிக்கும்போது எங்கிருந்துதான் உற்சாகம் அனைவரையும் தொற்றிக் கொள்கிறதோ, அப்படி ஒரு உறுதியும் பெரும் உற்சாகமும் நுரைபுரண்டு ஓடும். அண்மையில்கூட இலண்டனில் மகிந்தர் பொதுநலவாய நாடுகளின் பொருளாதாரப் பேரவையில் உரையாற்றுவதை தடுப்பதற்கான பேரணியிலும் ஆர்ப்பாட்டத்திலும் இதனையே பலதடவை பார்க்கவும் கேட்கவும் முடிந்தது. எங்கள் தலைவன் என்று ஒரு குரல் தொடங்கியதும் ‘பிரபாகரன்’ என்று அனைத்து குரல்களும் எந்தவொரு பிசிறும் இன்றி சொல்வது வெறும் கோசமாகவும் கூட்டத்தில் கூவுதலுமா…
-
- 0 replies
- 560 views
-
-
ஜூலை மாதம் ஆறாம் திகதி( 06/07/2012) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி பதின் நான்காம் திகதி(14/07/2012) தேர்த்திருவிழாவும் பதினைந்தாம் திகதி (15/07/2012)தீர்த திருவிழாவும் நடைபெறவுள்ளது.திருவிழா விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும். Temple hours Monday through Sunday: 9AM � 1.30PM and 6PM � 10PM Timings may change during special days Daily Services Pooja at 9.30AM 12 Noon and 8PM Jala Abiskeam for all deities at 11am Archana: During the Temple hours � as per requirement of deities Special Pujas Pradhosham: 6.15PM on Pradhosham days [size=5] http://www.ottawasiv...e.com/index.php [/size] …
-
- 2 replies
- 818 views
-
-
[size=3]ஆமா....! அழுதுறுவேன்... பொறுமைக்கும் எல்லை உண்டு - மு.க....?1[/size] [size=3] அ தி.மு.க.,அரசு தி.மு.க.வினரை தொடர்ந்து பழிவாங்கிக் கொண்டே இருக்கிறது, பொறுமைக்கும் எல்லை உண்டு என்று தி.மு.க.தலைவர் மு.க.,அவர்கள் காட்டமாக கூறியுள்ளார். " குட்டக் குட்ட குனிவது முட்டாள்தனம் ", குனியக் குனியக் குட்டுவது அதைவிட முட்டாள்தனம் என்று கிராமங்களில் சொல்வார்களே, அதைப் போல இன்றைய ஆட்சியினர் குட்டிக் குட்டிக் குனிய வைத்திட நினைக்கிறார்கள். பொறுமைக்கும் எல்லை உண்டு என்றார். அ.தி.மு.க., அரசும் என்ன நினைக்கிறார்கள் என்றால் எவ்வளவு அடித்தாலும் தாங்குகிறாண்டா இவன், ஆனால் வசனத்தை மட்டும் நிப்பாட்ட மாட்டேங்குறான், இது ஒன்று தான் இவனிடம் உள்ள கெட்ட பழக்க வழக்கம். என்று குனிய வைத்து …
-
- 0 replies
- 801 views
-
-
அப்படிச் சொன்னவர்கள் இப்போது வாயே திறக்கவில்லை - மு.க...! திராவிட பிழைப்புவாத லாவணி அரசியலின் உச்சம் - ஈழதேசம்..! [size=3] தி.மு.க., தலைவரின் கேள்வி பதில் அறிக்கை..? அதென்ன..உலகத்தில் எங்குமே இல்லாத கேள்வி பதில் அறிக்கை..? ஒன்று பத்திரிக்கையாளர்களை கூப்பிட்டு பேட்டி கொடுப்பார்கள். அல்லது பத்திரிக்கை செய்தி என்று சில பேப்பர்களை அந்தந்த மீடியாவிடம் கொடுப்பார்கள். இவ்வாறு யாராவது கேள்வி பதில் பத்திரிக்கை செய்தி என்று எங்கேயாவது கொடுதிருக்கிரார்களா..?அதுதான்...திராவிட இனமான மு.க.வின் தனி பாணி. வழக்கமாக கேள்விகளை மீடியாக்காரர்கள் கேட்பார்கள், பதில்களை சம்மந்தப்பட்ட அரசியல்வாதிகள் அல்லது நபர்கள் அளிப்பார்கள். கேள்வியும் நானே பதிலும் நானே என்று ஒரு பத்திரிக்கை ச…
-
- 0 replies
- 608 views
-
-
நல்ல முடிவு தான்...கேப்டன்...! ஜனாதிபதி தேர்தலை புறக்கணிப்பது...?! ஈழதேசம் செய்தி..! [size=3] தமிழ் நாட்டில் இனிமேல் அரசியல் செய்வது அவ்வளவு ஒன்றும் எளிதான காரியம் அல்ல..மறுபடியும் முதலில் இருந்து வர வேண்டும். ஆனால் திராவிட சாத்தான்கள் செய்தது போல் அல்ல, உண்மையிலேயே தமிழ் மக்களின் உணர்வுகள், தமிழர்களின் தேவைகள், தமிழ் நாட்டின் இறையாண்மை என்றெல்லாம் முதலில் இருந்து தொடங்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன தமிழக அரசியல் கட்சிகள். இதற்கு நல்ல உதாரணம் சமீபத்திய பாட்டாளி மக்கள் கட்சியின் அறிக்கைகளும் பேச்சுக்களும். ஆனாலும் பாட்டாளி மக்கள் கட்சியின் மருத்துவர் பேசுவது, ' பொக்கை வாய் உள்ளவன் பொறி கடலை தின்பதைப் போல ' காலம் கடந்தது தான் என்றாலும் பேசாமல் இருக்க முட…
-
- 0 replies
- 2.5k views
-
-
ஒட்டுமொத்த சிங்கள மக்களையும் இனவாதிகளென்று கூறிவிட முடியாது. கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன போன்ற சிங்கள தேசம் தந்த மகான்கள் தமிழர்கள் பலியெடுக்கப்பட்ட காலங்களிலும் சரி பின்னரும் கூட தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினைக்காக குரல் கொடுத்தே வந்தார்கள். மனிதாபிமானம் என்பது அனைத்து இன மக்களுக்குள்ளும் இருக்கிறது என்பதனையே இது எடுத்துக்காட்டுகிறது. கருணாரட்னாவின் சமீபத்தில் வெளிவந்த கருத்துக்களை விரிவுபடுத்தி எழுதுவதே இக்கட்டுரையின் நோக்கம். தற்கால வடக்கு மாகாணத்தில் நிலவும் சிறிலங்கா அரசின் திட்டமிட்ட இனச் சுத்திகரிப்பு வேலைகளை வன்மையாக கண்டித்து நவசமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளரும், தெஹிவளை கல்கிஸை மாநகரசபை உறுப்பினருமான விக்கிரமபாகு கருணாரட்ன நீண்டதொரு பட்டியலை வெளியிட்…
-
- 0 replies
- 760 views
-
-
பிரித்தானியாவில் தமிழ் மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பை இரண்டாவது தடவையாக மகிந்த பரிவாரங்கள் சந்தித்து மூக்கு உடைபட்டுக்கொண்டு திரும்பியுள்ள நிலையில், தமிழ் மக்களின் மீதான சிங்களத்தின் கெடுபிடிகள் தமிழர் தாயகம் உள்ளிட்ட பகுதிகளில் உச்சமடையலாம் என அவதானிகள் கருத்துவெளியிட்டுள்ள நிலையில், சிங்களத்தின் தமிழ் மக்கள் மீதான கோரத்தாண்டவம் தொடர்கின்றது. இந்நிலையில் யாழ்.குடாவின் மாதகல் பகுதியில், சிறிலங்கா கடற்படையினரின் அடாவடிகள் தொடர்பாக இப்பகுதியில் ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தோம். சிறிலங்கா கடற்படையினர் மேற்கொண்டுவரும் அராஜக நடவடிக்கைகளால் இந்தப் பகுதி மக்கள் மேலும் மேலும் பெரும் துன்பத்தை எதிர்நோக்கி வருகின்றனர். மாதகல் மேற்குப் பகுதியில் கடற்படையினர் யாத்திரிகர் விடுதி ஒன்…
-
- 0 replies
- 392 views
-
-
இலங்கையிலும் நாம் வாழும் அனைத்து புலம்பெயர் நாடுகளிலும் போலிச் சாமியார் நித்தியானந்தாவின் பல அமைப்புகளும் தியானம் பழக்கும் (என்ற போர்வையில்) மண்டபங்களும் இருக்கின்றன. இவர்கள் விசக் காளான்கள். குடும்பத்தில் ஒருவர் இவரது பக்தராக இருந்தாலும் பீடித்து செல்லும் புற்று நோய் போன்று வளர்ந்து முழுக் குடும்பத்தையே நிர்மூலமாக்க வாய்ப்புகள் இருக்கு; கவனம் படங்களின் மூலம் : ஜூனியர் விகடன்
-
- 33 replies
- 5.1k views
-