நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4197 topics in this forum
-
கிறைஸ்ட்சேர்ச் தாக்குதல்: பாசிசத்தின் இன்னொரு பலிபீடம் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2019 மார்ச் 21 வியாழக்கிழமை, மு.ப. 11:36Comments - 0 உலகில் பாதுகாப்பான இடம் என்று எதுவுமில்லை என்பதை, கடந்தவாரம் இடம்பெற்ற நிகழ்வுகள், மீண்டும் உறுதிப்படுத்திச் சென்றுள்ளன. இனவாதமும் தீவிர வலதுசாரி நிலைப்பாடுகளும் கடந்த ஒரு தசாப்த காலமாக, அறுவடை செய்த பாசிசத்தின் இன்னொரு பலிபீடமாக, நியூசிலாந்து நாட்டில் இடம்பெற்ற நிகழ்வுகளை நோக்க வேண்டியுள்ளது. இதை எவ்வாறு புரிந்து கொள்வது? உலகில் பாதுகாப்பான நாடு என்று எந்த நாட்டைச் சொல்ல இயலும்? நேற்று கிறைஸ்ட்சேர்ச்சில் நடந்தது, நாளை இன்னோர் இடத்தில் நடக்காது என்ற உத்தரவாதத்தை, யாரால் தரவியலுவும்? நிச்சயமின்மைகளே, நிச்சயமான காலப்…
-
- 0 replies
- 351 views
-
-
ஐ.நா. ஊடாக தமிழருக்கு தீர்வு கிட்டும் என்ற நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது: கனடா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினூடாக தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்கும் என்பதில் நம்பிக்கை இழந்துள்ளதாக கனடா தெரிவித்துள்ளது. கனடாவை பிரதிநிதித்துவப்படுத்தி ஜெனீவா கூட்டத்தொடரில் கலந்துக் கொண்டிருந்த ஹரி சங்கரி ஆதவன் செய்தி சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே இதனை குறிப்பிட்டார். இலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்குவதால் காலம் வீணடிப்பு மாத்திரமே ஏற்படுவதாக ஒரு பகுதி மக்கள் கூறிவருகின்றனர். இந்நிலையில், இது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது குறித்து மேலும் தெரிவித்த அவர், ”மனித உரிமைகள் பேரவையின் செயற்பாடுகளை குழப்ப கூட…
-
- 0 replies
- 219 views
-
-
வளைவுகள் வளையலாம் வளை வழுக்கலாமா? காரை துர்க்கா / 2019 மார்ச் 20 புதன்கிழமை, பி.ப. 05:02 Comments - 0 உலகில் பிறந்த அனைத்து மனிதர்களுமே எப்போதும் மகிழ்ச்சியை விரும்புகின்றார்கள். ஆனாலும் மகிழ்ச்சியிலேயே உயர்ந்த மகிழ்ச்சி மற்றவர்களை மகிழ்வித்து, அதனூடாகத் தானும் மகிழ்தல் ஆகும். இதற்காகவே மனிதர்கள் கடவுளின் குடியிருப்புக்கு (கோவில்) செல்கின்றார்கள். ஆனால், மறுவளமாகப் பார்க்கில், கடவுள் எல்லா உயிரிலும் குடிகொண்டிருக்கின்றார். இவ்வாறாக ஆன்மிகமே நம் பண்புகளை உயர்வு நோக்கிக் கொண்டு செல்கின்றது. உலக சுகாதார நிறுவனத்தின் வரைவிலக்கணத்தின் பிரகாரம், ஆரோக்கியம் என்பது உடல், உளம், சமூகம், ஆன்மீகம் ஆகிய நான்கு தளங்களில் உள்ள உயர்வான நிலை என விளக்கம் பகிர்கின்ற…
-
- 0 replies
- 563 views
-
-
மனித உரிமைகள் பேரவையில்இலங்கை தொடர்பான அறிக்கை ATBC வெளிச்சம் நிகழ்ச்சியில் (15/03/2019 9.30PM) மனித உரிமைகள் பேரவையில்இலங்கை தொடர்பான அறிக்கை சம்பந்தமாக கலந்துரையாட பிரான்சை தளமாகக் கொண்ட மனித உரிமை செயற்பாட்டாளர் திரு கிருபாகரன், தாயகத்தில் இருந்து அரசியல் ஆய்வாளர்கள் திரு கருணாகரன் , திரு நிலாந்தன், மனித உரிமைகள் சட்டத்தரணி திரு கிருஷ்ணா ஆகியோர் கலந்து கொள்ளுகின்றனர் தொகுத்து வழங்குவது அருள் பொன்னையா மற்றும் பூபால் சின்னப்பா
-
- 0 replies
- 418 views
-
-
குற்றவியல் நீதிமன்றக் கோரிக்கையை கைவிடுமாறு மேற்குலகம் அழுத்தம் : ஜெனீவாவலிருந்து கஜேந்திரகுமார் பிரத்தியேக செவ்வி இலங்கை அரசாங்கத்தினை பொறுப்புக்கூறலைச் செய்வதற்காக பாதுகாப்புச் சபை ஊடாக சர்வதேச குற்றவியல்நீதிமன்றத்திற்கு அல்லது சர்வதேச தீர்ப்பாயத்திற்கு கொண்டுசெல்ல வேண்டும் என்ற எமது கோரிக்கையை கைவிடுமாறு மேற்குல நாடுகள் அழுத்தமளிக்கின்றன என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஜெனீவாவில் இருந்தவாறே வீரகேசரிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அச்சவ்வியின் முழுவடிவம் வருமாறு, கேள்வி:- ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 40ஆவது கூட்டத்தொடரில் தாங்கள் பங்கேற்றுள்ள நிலையில் இலங்கை தொடர்பில் சர்வதே…
-
- 0 replies
- 419 views
-
-
இன அழிப்பு ஆதாரங்களால் சர்வதேசம் அதிர்ச்சி ; ஜெனீவாவிலிருந்து தமிழர் மரபுரிமைகள் பேரவையின் இணைத்தலைவர் நவநீதன் பிரத்தியே செவ்வி பொறுப்புக்கூறலுக்காக கால அவகாசம் வழங்குதால் இலங்கை அரசாங்கம் சர்வதேசத்தினையும் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையும் ஏமாற்றி அதனை தட்டிக்கழிப்பதற்கே வழி வகுக்கும் என தமிழர் மரபுரிமைகள் பேரவையின் இணைத்தலைவர் வி.நவநீதன் ஜெனீவாவிலிருந்து வீரகேசரிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.அச்செவ்வியின் முழு வடிவம் வருமாறு, கேள்வி:- ஐ.நா.மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் தமிழர் மரபுரிமைகள் பேரவை பங்கேற்பதற்கு தீர்மானித்தமைக்கான காரணம் என்ன? பதில்:- தமிழர் மரபுரிமைகள் பேரவையானது, கடந்த வருடம் ஆவணி 28ஆம் திகதி சிங்களக்குடியே…
-
- 0 replies
- 284 views
-
-
இந்திய - இலங்கை அரசுகள் தமிழர்கள் பக்கம் நிற்காது - சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் விசேட செவ்வி இனப்பகை அரசியலை முன்னெடுக்கும் இந்திய இலங்கை அரசுகள் ஒருபோதும் தமிழர்கள் பக்கம் நிற்கப்போவதில்லை புரிந்து கொள்வதுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க கூடாது என்பதற்காகவே கால அவகாசம் வழங்கப்படுகின்றதென நடிகர் சங்கத்துணைத்தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக ஜெனீவா புறப்படுவதற்கு முன்னர் வீரகேசரிக்கு வழங்கிய விசேடசெவ்வி செவ்வியின்போது தெரிவித்தார். அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு, கேள்வி:- இலங்கைக்கு வருகைதந்து ஈழத்தமிழர்களின் விடயங்களை நேரில் அவதானித்துச் ச…
-
- 0 replies
- 463 views
-
-
முற்றிய மனநோயாளிகள்! லக்ஷ்மி சரவணகுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னால் திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு விசாரணைக்கு வருகிறது. குற்றம் சாட்டப்பட்டவர் தொடர்ந்து பொது இடங்களில் பெண்களின் மீது பாலியல் அத்துமீறல் செய்த வழக்கில் கைதானவர். வழக்கை விசாரித்த நீதிபதி குற்றவாளியின் மனநிலையைப் புரிந்து கொள்கிறார். அவரது தீர்ப்பில் இப்படி ஒரு விஷயத்தைக் குறிப்பிடுகிறார். ‘பெண்கள் குறித்தான எந்தவித அடிப்படை புரிதல்களும் இல்லாமல் நீங்கள் வளர்க்கப்பட்டிருக்கிறீர்கள், உங்களுக்கு குறைந்தபட்சம் பெண்களை எவ்வாறு எதிர்கொள்வது என்பதே சிக்கலாய் உள்ளது. பதினைந்து நாட்களுக்கு கொடைக்கானல் மதர் தெரஸா பெண்கள் கல்லூரி வளாகத்தில் அவர்களோடு தங்கி நன்னடத்தை கடிதம் பெற்று வரவேண்டுமென.’…
-
- 0 replies
- 465 views
-
-
பாதீட்டுக்குள் பலி கொடுக்கப்பட்ட பிரதேச செயலகம் Editorial / 2019 மார்ச் 14 வியாழக்கிழமை, பி.ப. 12:30 Comments - 0 -இலட்சுமணன் சாமி வரம் கொடுத்தாலும், பூசாரி கொடுக்க மறுக்கும் கதைதான் நமது நாட்டின் அநேக விடயங்களில் இடம்பெற்று வருகின்றது. இதற்கு கல்முனை தமிழ்ப்பிரிவு பிரதேச செயலகமும் நல்லதோர் உதாரணமாகும். 2019ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் இரண்டாவது வாசிப்பு, 43 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றத்தில் (மார்ச் 12) நிறைவேற்றப்பட்டது. ஆதரவாக 119 வாக்குகளும், எதிராக 76 வாக்குகளும் கிடைத்திருந்தன. இந்தப் பாதீட்டுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்கக்கூடாது என்ற வகையிலான கருத்துகள் பொதுவௌியில் முன்வைக்கப்பட்டிருந்தன. இருந்தாலும், கிழக்கைப் பொறுத்தவரையில் வேறு…
-
- 0 replies
- 643 views
-
-
தமிழ் மக்கள் கேட்க வேண்டிய கேள்விகள் Editorial / 2019 மார்ச் 14 வியாழக்கிழமை, மு.ப. 09:53 ஜெனீவாத் திருவிழா, கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளது. இதே பத்தியில் சில காலத்துக்கு முன்னர் சொன்னது போல, ‘அடுத்தது என்ன’ என்ற கேள்விக்கு ‘அடுத்த ஜெனீவா’ பதிலாகக் கிடைத்துள்ளது. சர்வதேசத்தின் பெயரால், இன்னமும் எவ்வளவு காலத்துக்குத் தமிழ் மக்கள் ஏமாற்றப்படுவார்கள் என்பதற்கு, காலம்தான் பதில் சொல்ல வேண்டும். முழு மேற்குலகும், தமிழ் மக்களின் பக்கத்தில் நிற்கிறது என்று, கடந்த பத்தாண்டுகளாக எமக்குச் சொல்லப்பட்டு வந்திருக்கிறது. ஆனால், மேற்குலகு இதுவரை தமிழ் மக்கள்தொடர்பில், எவ்வாறு நடந்து வந்துள்ளது? குறிப்பாக, 2015 ஆட்சி மாற்றத்தின் பின்னர், என்று வ…
-
- 2 replies
- 733 views
-
-
வடக்கில் தொடரும் உயிரிழப்புகளும் அதிகாரிகளின் அசமந்தமும்! நாட்டில் அன்றாடம் அதிகரிக்கும் ரயில் விபத்துக்கள் தொடர்பாக தொடர்ச்சியாக கவனஞ்செலுத்தி வருகின்றோம். கவனயீனங்களால் அதிகரிக்கும் விபத்துக்கள் ஒருபுறம் இருக்க பல பிரதேசங்களில் பாதுகாப்பற்ற ரயில் கடவைகளால் பல்வேறு விபத்துக்கள் இடம்பெறுகின்றன. இதுகுறித்து இன்றைய ஆதவனின் அவதானம் (13.03.2019) கவனஞ்செலுத்துகிறது. வடக்கிற்கான ரயில் மார்க்கம் அமைக்கப்பட்டு 6 ஆண்டுகளிற்கு மேல் கடந்துள்ள போதிலும், வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் வரையான பகுதிகளில் இவ்வாறு பாதுகாப்பற்ற ரயில் கடவைகள் காணப்படுகின்றன. கிளிநொச்சி மாவட்டத்தில் முறிகண்டி முதல் பளை வரை மக்கள் பயன்படுத்தும் முக்கிய வீதிகளில் இவ்வாறான பாதுகாப்பற்ற கட…
-
- 0 replies
- 596 views
-
-
மறக்கவும் மன்னிக்கவும் பொருத்தமான புறச்சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும் இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் பலதரப்பட்டவர்களும் இன்று கருத்துக்களை முன்வைத்துவருகின்றனர். அதாவது அண்மையில் யாழ்ப்பாணத்திற்குச் சென்றிருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், அமைச்சர் சம்பிக்க ரணவக்கவும் தமது உரைகளில் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற போர்க்குற்றங்களையும், மனித உரிமை மீறல்களையும் ‘மறப்போம் மன்னிப்போம்’ என்று கூறியிருந்தார்கள். ‘மறப்போம் மன்னிப்போம்’ என்ற வார்த்தை மனித குலத்தின் ஐக்கியத்திற்கும், சமாதானத்திற்கும் அடித்தளமாக அமைகின்ற மிகப்பெரிய வார்த்தையாகும். மனிதன் தனக்கும், தன்னைச் சுற்றியும் நடைபெற்ற பல சம்பவங்களை மறக்கவும், அதனோடு தொடர்புபட்டவர்களை மன்…
-
- 0 replies
- 309 views
-
-
கல்முனை: நீளும் கயிறிழுப்பு முகம்மது தம்பி மரைக்கார் / 2019 மார்ச் 13 புதன்கிழமை, மு.ப. 09:51 Comments - 0 பிச்சைக்காரனுக்கு புண்ணும் அரசியல்வாதிகளுக்கு ஆகக்குறைந்தது ஒரு சர்ச்சையும், தத்தமது தொழில்களை வெற்றிகரமாகச் செய்துகொள்வதற்கு அநேகமான தருணங்களில் தேவையாக இருக்கின்றன. சர்ச்சைகள் இல்லாதபோது, அரசியல்வாதிகளே அவற்றை ஏதோவொரு வழியில் தொடக்கிவைத்தும் விடுகின்றனர். அரசியலரங்கைச் சூடேற்றி, அதனூடாக வாக்குகளை அறுவடை செய்வதற்கு, இந்தச் சர்ச்சைகள் உதவுமென, பெரும்பாலான அரசியல்வாதிகள் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். பொதுத் தேர்தலொன்று விரைவில் வரலாமென்கிற கதைகள் வந்துவிட்டால், அம்பாறை மாவட்டத்தில், சர்ச்சைக்குரிய சில விடயங்கள் குறித்த பேச்சுகள் எழுந்துவிடும். த…
-
- 0 replies
- 756 views
-
-
பொள்ளாச்சியை மையம் கொள்ளும் அரசியல் புயல்! பொள்ளாச்சி பாலியல் கொடூரம் தொடர்பான விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அரசியல் கட்சியினரும், அமைப்புகளும் போராட்டத்தில் குதித்துள்ளன. பொள்ளாச்சியில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவிகளிடம் நட்பாகப் பழகி அவர்களை ஒரு கும்பல் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியிருக்கும் கொடூர செய்தி தமிழகத்தையே அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. இதுதொடர்பாக திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று தமிழகம் முழுவதும் இன்று காலை முதல் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. இந்த விவக…
-
- 0 replies
- 802 views
-
-
காலனித்துவத்தில், சிங்கள நடுத்தர வர்க்கத்தின் எழுச்சியும், தமிழ் நடுத்தர (கொழும்பு தமிழ்) வர்க்கத்தின் எழுச்சியும். வர்க்கம், சாதி பிரிவினைகள் இந்த எழுச்சியில் செல்வாக்கு செலுத்திய விதமும். எல்லா பதிவுகளையும் பார்த்தல் புரியும், ஏன் மவுண்ட் பட்டன் சிங்களத்திடம் ஆட்சியை கொடுத்தார் என்று. நூல் வடிவில்: from Nobody’s to Somebody’s by Prof. Kumar Jayawardena.
-
- 0 replies
- 435 views
-
-
பயங்கரவாத தடைச்சட்டத்தினையும் முழுமையாக அகற்ற வேண்டும் – கலாநிதி தீபிகா உடகம March 10, 2019 பயங்கரவாத தடைச்சட்டத்தினை முழுமையாக அகற்ற வேண்டும் என்றும் சர்வதேச அழுத்ததால் நிலையான பொறுப்புக்கூறலை ஏற்படுத்த முடியாது, இலங்கையில் சித்திரவதைகள் இன்னமும் தெடர்கின்றன என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தவிசாளர் கலாநிதி தீபிகா உடகம தெரிவித்தார். இதேவேளை, மனித உரிமைகளை அமுலாக்குவதற்கு அந்த விடயங்களை அரசியலாக்குவதே பிரதான தடையாக உள்ளதாகவும் கலாநிதி தீபிகா உடகம மேலும் தெரிவித்தார். பொறுப்புக்கூறல், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விவகாரம், அரசியல் கைதிகளின் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கொழ…
-
- 0 replies
- 405 views
-
-
இலங்கை முஸ்லிம்களின் வரலாற்று ஆதாரங்களுக்கான ஆதார, மையங்களாக, #மீஸான்களும், #சியாறங்களுமே மிஞ்சி உள்ளன, அந்த வகையில் எலும்புக்கூடுகளும், புதைகுழிகளும் கூட வரலாற்றை ஒரே நாளில் புரட்டிப் போடக்கூடிய பலமான ஆதாரங்களாக உள்ளன, அத்த வகையில்,அண்மைக்காலமாக மன்னார் #சதொச பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள எலும்புக் கூடுகள் தொடர்பாக பல ஊகக் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன, ஆனாலும் அவை தொடர்பான காலப்பகுதி ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டாலும், சம்பவம் பற்றிய,உறுதியான வரலாற்று ஆதாரங்கள் முன்வைக்கப்பட வில்லை,ஆனால் அவை முஸ்லிம்களுக்குரியதாக உள்ளன என்பதை நிரூபிப்பதற்கான ஊக ஆதாரங்களை முன்வைக்கும் பதிவே இதுவாகும், #மன்னார்_மாவட்டம், மன்னார் மாவட்டம் இலங்கை…
-
- 4 replies
- 1.1k views
-
-
’மஹிந்தவை காப்பாற்ற நானே வருவேன்’ - கோட்டாபய ராஜபக்ஷ Editorial / 2019 மார்ச் 08 வெள்ளிக்கிழமை, மு.ப. 11:39 Comments - 0 * அதிகாரப் பகிர்வு தேவையில்லை * சர்வதேசத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு இடமில்லை * 11 இளைஞர்கள் விவகாரம்: விசாரணை நடத்தவே உத்தரவிட்டிருந்தேன் * சுமார் 17,500 முன்னாள் போராளிகளை விடுவித்துள்ளோம் * பொருளாதார ரீதியிலான அபிவிருத்தியே, தமிழ் மக்களுக்கான விடிவு நேர்காணல்: மேனகா மூக்காண்டி படப்பிடிப்பு: ஆகில் அஹமட் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமிருந்தும் அழைப்பு கிடைக்கின்றது. அதனால் அதை, பொறுப்புணர்வுடன் ஏற்றுக்கொண்டு நிறைவேற்றும் கடமை எனக்க…
-
- 0 replies
- 920 views
-
-
மதஞ்சார் அறமும் மதச் சகிப்பின்மையும் Editorial / 2019 மார்ச் 07 வியாழக்கிழமை, பி.ப. 05:50 Comments - 0 மதங்களை முன்னிறுத்தி, அண்மைக்காலமாக இலங்கையெங்கும் நடந்தேறும் நிகழ்வுகள் அச்சமூட்டுவன. அவை, இயல்பான மனஎழுச்சியின் விளைவுகள் என்று கொள்ளவியலாதவாறு திட்டமிட்டு நடந்துள்ளன. இவை சில முக்கியமான கேள்விகளை எழுப்புகின்றன. எல்லா மதங்களும் ஒன்றையே போதிக்கின்றன என்று தொடர்ந்து சொல்லப்பட்டு வருகிறது. அப்படியாயின் மதங்களுக்குள் முரண்பாடுகள் ஏன் தோற்றம் பெறுகின்றன என்ற வினா முதன்மையானது. போருக்குப் பிந்தைய இலங்கைச் சூழலில், ‘பொது எதிரி உருவாக்கம்’ என்பது தோற்றம்பெறவில்லை. களத்தில் விடுதலைப் புலிகளின் முழுமையான முடிவு, இலக்கு வைப்பதற்கு எதிரியற்ற நெருக்கட…
-
- 0 replies
- 300 views
-
-
சைவத்தை தமிழோடு இணைத்து போராட்ட நியாயங்களை சர்வதேச சமூத்திடம் எடுத்துச் சென்று சேவை செய்தவர்களே ஆயர்கள் அ.நிக்ஸன் மன்னார் திருக்கேதீஸ்வரம் வளைவு விவகாரத்தில் குறித்த அந்த அருட்தந்தையின் செயற்பாடு ஏற்புடையதல்ல- அவருடைய பேச்சைக் கேட்டு வளைவை புடுங்கி எறிந்த சிலரின் நடவடிக்கையும் நியாயமானதல்ல. கத்தோலிக்க திருச்சபை கட்டுப்பாடுடையது. அருட்தந்தையர்கள் தமது மறை மாவட்டங்களுக்குரிய ஆயர் இல்லங்களுக்குரிய அனுமதியின்றி எந்தப் பணிகளையும் செய்ய முடியாது- அவ்வாறு செய்தாலும் அது பற்றி ஆயர் இலத்திற்கு உடனடியாகத் தெரியப்படுத்த வேண்டும். ஆகவே இந்த விவகாரத்தில் குறிப்பிட்ட அந்த அருட்தந்தை எவ்வாறு சுயமாகச் செயற்பட்டார் என்பது குறித்து மன்னார் ஆயர் இல்லம் உள்ளக ரீதிய…
-
- 0 replies
- 399 views
-
-
– மல்லியப்புசந்தி திலகர் இலங்கை வாழ் மலையகத் தமிழ் மக்களை ‘இந்திய வம்சாவளி தமிழர்’ என அழைத்துக்கொள்வது கூட ஒரு கற்பிதம்தான். ஏனெனில் இலங்கையின் சட்டத்தின் பார்வையில் அதாவது சனத்தொகைக் கணிப்பீடுகளின்போது இவர்கள் ‘இந்தியத் தமிழர்’ (இந்தியானு தெமல) என்றே பதிவு செய்யப்படுகின்றனர், அழைக்கப்படுகின்றனர். பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் இந்தியாவில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு இந்தியர்கள் அவர்களின் உழைப்பைப் பெறும் நோக்கத்தோடு அழைத்துச்செல்ல ப்பட்டபோது தமிழர்களும் அடங்கினர்.அவர்கள் மலேசியா (சிங்கப்பூர் சேர்ந்த), கயானா உள்ளிட்ட மேற்கிந்தியத் தீவுகள், தென் ஆபிரிக்கா, பர்மா, பிஜித்தீவுகள், மடகஸ்கர், மொறீஷியஸ், பர்மா, கம்போடியா போன்ற பல நாடுகளுக்கு சென்று நிலைகொண்ட பின்ன…
-
- 1 reply
- 1k views
-
-
யாழ்.பல்கலையில் தொடரும் பகிடிவதை – பட்டப்படிப்பை இடைநிறுத்திக்கொள்ளும் மாணவன் March 6, 2019 யாழ்.பல்கலைகழகத்தில் தொடரும் பகிடிவதைக்கு எதிராக பல்கலைகழக நிர்வாகமோ , கோப்பாய் காவல்துறையினரோ உரிய நடவடிக்கைகளை எடுக்க தவறியமையால் மாணவன் ஒருவன் தனது பட்டப்படிப்பை இடைநிறுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளார். யாழ்.பல்கலைகழகத்தில் கல்வி கற்கும் முதலாம் வருட மாணவனான ப. சுஜீவன் எனும் மாணவன் கடந்த மாதம் 7ஆம் திகதி பல்கலைகழகத்தினுள் வைத்து பகிடிவதை என 4ஆம் வருட சிரேஸ்ட மாணவர்களால் தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் இரண்டு நாட்கள் தங்கி சிகிச்சை பெற்றார். தன் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் கோப்பாய் காவல் நிலையத்திலும் , பல…
-
- 1 reply
- 795 views
-
-
-
- 9 replies
- 998 views
- 1 follower
-
-
பாதீட்டில் வருமா நிவாரணம்? Editorial / 2019 மார்ச் 05 செவ்வாய்க்கிழமை, மு.ப. 01:57 Comments - 0 -தொ. இளந்திரையன் இலங்கையின் நடப்பு ஆண்டுக்கான பாதீடு (வரவு - செலவுத் திட்டம்), இன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது. இவ்வாண்டில் இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னரான பாதீடாக இருப்பதால், பலத்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தும் ஒன்றாக இது காணப்படுகிறது. கடந்த இரு ஜனாதிபதித் தேர்தல்களைப் போலல்லாது, இம்முறை ஜனாதிபதித் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சி தனித்தே போட்டியிடுமென எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும், 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில், தாம் கொண்டுவந்த வேட்பாளரான மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதியாக மாறிய பின்னர், கட்சிக்கு எதிராக மாறிவிட்டார் என்ற கோபம், ஐ.தே.க…
-
- 0 replies
- 399 views
-
-
சிறப்புமுகாம் தோழர் பாலன் 03.03.2019 லண்டன் வணக்கம் நண்பர்களே! நான் ஒரு ஈழத் தமிழன். அதுமட்டுமல்ல 1991ம் ஆண்டு முதல் 1999 வரை எட்டுவருடங்கள் தமிழக சிறை மற்றும் சிறப்பு முகாம்களில் அடைத்துவைக்கப்பட்டிருக்கிறேன். சிறப்புமுகாம் கொடுமைகள் பற்றி கூறுவதற்கு இந்ததகுதி போதும் என கருதுகின்றேன். முதன் முதலில் கலைஞர் கருணாநிதியின் ஆட்சிக்காலத்தில் வேலூர்கோட்டையில் 1990ம் ஆண்டு சிறப்புமுகாம் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் ஜெயாஅம்மையாரின் ஆட்சிக்காலத்தில் 1991ம் அண்டு தமிழகத்தில் பல கிளைச்சிறைகள் சிறப்புமுகாம்களாக மாற்றப்பட்டு பல அப்பாவி அகதிகள் அவற்றில்அடைக்கப்பட்டனர். தற்போது திருச்சியில் மட்டும் இச் சிறப்புமுகாம் இருக்கிறது. அதில் 17 அகதிகள்அடைத்து வைக்கப்பட…
-
- 0 replies
- 1.2k views
- 1 follower
-