Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. பெண்கள் அருந்தும் பியரும் ஆண்களின் ‘கவலையும்’ கனகலிங்கம் கோபிகிருஷ்ணா உலகின் அனேகமான நாடுகளில், பெண்களுக்கான உரிமைகள், ஓரளவு கிடைத்திருக்கின்றன. 50 ஆண்டுகளுக்கு முன்னரிருந்த நிலைமையோடு ஒப்பிடும் போது, இப்போது ஏற்பட்டுள்ள முன்னேற்றம், மிக முக்கியமானது. முன்பை விட அதிகளவிலான பெண்கள், நிர்வாகப் பணிகளில் ஈடுபடுகிறார்கள். முன்பை விட அதிகளவிலான பெண்கள், நாட்டின் தலைமைத்துவத்தில் இருக்கிறார்கள். ஐக்கிய இராச்சியத்தின் தெரேசா மே, ஜேர்மனியின் அங்கெலா மேர்க்கெல், நோர்வேயின் ஏர்னா சோல்பேர்க், மியான்மாரின் ஆங் சாங் சூகி என்று நீளும் இந்தப் பட்டியலில், ஐக்கிய அமெரிக்காவின் ஜனாதிபதியாக ஹிலாரி கிளின்டனும் இணைந்துகொள்வார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. …

  2. அரசியலென்றால் பதவி ஆசை மட்டும் தானா? கடந்த 4ஆம் திகதி, குருநாகலில் நடைபெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 65ஆவது மாநாடும் கடந்த 10 ஆம் திகதி சனிக்கிழமை, கொழும்பு கெம்பல் பார்க்கில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் 70 ஆவது மாநாடும், இதற்கு முன்னர் கடந்த ஆறு தசாப்தங்களில் நடைபெற்ற அக்கட்சிகளின் மாநாடுகளைப் பார்க்கிலும் வித்தியாசமானவையாக இருந்தன. இதற்கு முன்னர், இவ்விரு கட்சிகளில் ஒரு கட்சியின் மாநாட்டில் மற்றைய கட்சியின் தலைவர்கள் கலந்து கொள்ளவில்லை. ஒரு கட்சியின் மாநாடு மற்றைய கட்சியைத் திட்டித் தீர்க்கும் தளமாகவே இருந்தது. ஆனால் இம்முறை, ஒரு கட்சியின் மாநாட்டில் மற்றைய கட்சியின் தலைவர்கள் கலந்து கொண்டனர். குறிப்பாக, ஐ.தே.க மாநாட்டில் முன்னாள்…

  3. உடுவில் மகளிர் கல்லூரி அதிபர் சிரானி மில்ஸ் ஐ அதிபர் பதவியிலிருந்து விலகுமாறு தென்னிந்தியத் திருச்சபை குருமுதல்வர் உட்பட நிர்வாகத்தினரால் பணிக்கப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த கிழமை அக்கல்லூரி மாணவிகள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் அப்பாடசாலையின் சில ஆசிரியர்களை பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகள் மீது கோபம் கொள்ளச் செய்தது. பிரச்சனையின் உண்மையான காரணம் என ரெலிகிராப் ஆராய்கிறது, உடுவில் மகளிர் கல்லூரியானது தென்னிந்தியத் திருச்சபையின் கீழ் இயங்கும் யாழ்ப்பாணக் குருமுதல்வருக்குக் கீழ் இயங்கி வருகின்றது. இந்தப் பாடசாலையானது நீண்டகாலமாக கிறிஸ்தவ பாரம்பரியத்தைக்…

  4.  மீள்குடியேற்றம்: அடுத்தது என்ன? 'மீள்குடியேற்றம்', இந்த வார்த்தைதான் 2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் அதிகமாக பேசப்பட்டு வரும் முக்கிய வார்த்தையாக இருக்கும். 3 தசாப்த காலமாக வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் வாழ்க்கையை புரட்டிப்போட்ட அல்லது தடம்மாற்றிய இடப்பெயர்வுகள் எண்ணிலடங்காதவை. வடக்கு, கிழக்கில் தலைதூக்கியிருந்த விடுதலைப் புலிகளை அழிக்க வேண்டும் என அரசாங்கமும் தனிநாட்டைப் பெற்று, உரிமைகளை வென்றெடுக்க வேண்டும் என்ற முனைப்புடன் புலிகளும் சண்டையிட்டுக் கொண்டிருந்த காலத்தில், இருதரப்புக்கும் இடையில் சிக்கிக்கொண்டு தமது பூர்வீக மண்ணையும் சொத்துக்களையும் சொந்தங்களையும் விட்டு உயிரை மட்டுமே காப்பாற்றிக்கொள்ள வ…

  5. பாவமன்னிப்பா? பரிகாரமா? -கருணாகரன் செந்தில் என்று அழைக்கப்படும் முருகுப்பிள்ளை ரவீந்திரராஜா விடுதலைப்புலிகள் அமைப்பில் ஒரு காலம் செயற்பட்ட போராளி. அம்பாறை மாவட்டத்திலுள்ள கல்முனையிலிருந்து மிக இளைய வயதில் புலிகளோடு இணைந்தவர். இராணுவத்தினருடனான போர்க்களமொன்றில் செந்தில் ஒரு காலை இழந்தார். அதற்குப்பிறகு அவர் கல்முனைக்குச் செல்லவில்லை. பொதுமக்களுக்கான பணிகளையே செய்தார். பழகுவதற்கு இனிய செந்தில், அமைதியான சுபாவமுடையவர். அதனால் மக்களின் மத்தியில் செல்வாக்கைப் பெற்றிருந்தார். இறுதி ஈழப்போரில் புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்ட பிறகு, படையினரின் புனர்வாழ்வு முகாமுக்கு (தடுப்புக்கு) சென்று மீண்டார். இப்பொழுது கிளிநொச்சி நகருக்கு அண்மையில் குடும்…

  6. உயர்ஸ்தானிகர் மீதான தாக்குதல் ஊடாக இலங்கையில் இனவாதத்தைக் கக்கிக்கொண்டிருக் கின்றவர்களுக்கே பாரியவாய்ப்பு கிடைத்திருக்கின்றது என்பதனை தமிழர் பிரச்சினையுடன் சம் பந்தப்பட்ட அனைவரும் உணரவேண்டும். ஒரு நாட்டுக்கான தூதுவர் அல்லது உயர்ஸ்தானிகர் என்பவர் மதிப்புக்குரியவர். அதனால்தான் அவர் ""அதி மேன்மை தாங்கிய"" என்று அழைக்கப்படுகின்றார். அவருக்கு உரிய பாதுகாப்பும் கௌரவமும் அளிக்கப்படவேண்டும் ஞாயிற்றுக்கிழமை மாலை கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையம் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. மலேஷியாவில் நடைபெற்ற ஆசிய அரசியல் கட்சிகளின் மாநாட்டில் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் கலந்துகொண்டிருந்த அமைச்சர் தயாகமகே நாடு திரும்பும் நோக்கில் க…

  7. ஐ.நா.செய­லாளர் நாயகம் பான் கீ மூன் இரண்­டா­வது தட­வை­யாக இலங்­கைக்கு மேற்­கொண்­டி­ருந்த விஜயம் முக்­கிய விட­யங்கள் பல­வற்றைச் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்­றது. அர­சாங்­கத்­தினால் 2009 ஆம் ஆண்டு விடு­த­லைப்­பு­லிகள் ஆயுத ரீதி­யாகத் தோற்­க­டிக்­கப்­பட்­டி­ருந்த சூட்­டோடு, அவ­ரு­டைய முத­லா­வது விஜயம் அமைந்­தி­ருந்­தது. முள்­ளி­வாய்க்கால் என்ற கட­லோரப் பிர­தே­சத்தில் ஒரு சிறிய நிலப்­ப­கு­திக்குள் முற்­று­கை­யி­டப்­பட்­டி­ருந்த விடு­த­லைப்­பு­லிகள் மீது மோச­மான தாக்­கு­தல்கள் தொடுக்­கப்­பட்­டி­ருந்­தன. அவர்­களும் அந்தத் தாக்­கு­தலை எதிர்த்து மூர்க்­க­மாகப் போரிட்­டி­ருந்­தார்கள். இந்த மோதல்­க­ளுக்­கி­டையில் மூன்று லட்­சத்­துக்கும் அதி­க­மான பொது­மக்கள் சிக்கி சின்­னா­ப…

  8. ஐ.நாவின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் விஜயத்தின் போது “இராணுவத்தை குறையுங்கள் காணிகளை விடுவியுங்கள் என்ற கருத்தை பகிரங்கமாக தெரிவித்திருந்தார். ஜனாதிபதி மைத்திரி அதனை செய்ய சற்று கால அவகாசம் தேவை என தகவல்கள் வெளியிட்டிருந்தார். இவை நாட்டில் நிலையான சமாதானம் .நல்லிணக்க ஏற்பாட்டிற்கு மிகமுக்கியமானவையாகவுள்ளன. என்ற அடிப்படையிலேயே இக் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் இது ஒரு நல்ல சமிஞ்சை தானே, ஏன் நாம் ஆத்திரப்படுவான் என்ற தொனியில் சிலர் பேசுவதும் பலரது காதுகளில் விழுகின்றது. ஜனாதிபதியின் கருத்துக்கள் பலர் செவிமெடுக்காதமையினால் “கால அவகாசம்” என்பது விட்ட காணிகளை பிடிக்கவா? என்று தமிழ் மக்கள் சார்பிலும் புத்திஜீவிகள்…

  9. கபாலி படத்திற்கு பாலாபிஷேகம் செய்யும் இன்றைய தலைமுறையினரிடம் ஈழ பிரச்சனையில் இன உணர்வு இல்லை - கொங்கு பேரவை தலைவர் உ. தனியரசு பேச்சு ....

  10. நேற்று முன்தினம் ஐநா செயலர் பான்கி மூன் யாழ்ப்பாணத்திற்கு பயணம் செய்திருந்தார். பான்கிமூனின் யாழ்ப்பாண வருகையையொட்டி யாழ்ப்பாணத்தில் காணாமல் போனோரின் உறவினர்கள், இதுவரைகாலமும் மீள் குடியேற்றம் செய்யப்படாது முகாம்களில் வசிக்கும் மக்கள் எனப் பெருமளவானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது எமது மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளுக்கு மக்கள் கொடுத்த மரியாதையை இந்தக் காணொளிமூலம் நீங்களும் அறிந்துகொள்ளுங்கள். http://thuliyam.com/?p=40139

  11. பான் கீ மூனின் விஜயம்: மற்றொரு பிணையெடுத்தல்! ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், இலங்கைக்கான தனது இரண்டாவது உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு, இன்று புதன்கிழமை மாலை வருகிறார். முள்ளிவாய்க்காலுக்குள் வைத்து ஆயுத மோதல்கள் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதாக இலங்கை அரசாங்கம் அறிவித்து நான்கு நாட்கள் மாத்திரமே ஆன நிலையில் - அதாவது மே 23, 2009இல் - அவர் முதற்தடவையாக இலங்கை வந்திருந்தார். பான் கீ மூன், இலங்கை வந்த முதலாவது சந்தர்ப்பத்தில் நாடு, இரு விதமான பிரதிபலிப்புக்களைக் கொண்டிருந்தது. தெற்கும் அது சார் தளங்களும், பெரும் போர் வெற்றி மனநிலையில் திளைத்துக் கொண்டிருந்தன. அப்போது, அனைத்து விடயங்களும் போர் வெற்றி வாதம் என்கிற ஏக…

  12. காணாமல் போனாரா பிரபாகரன்? தமிழ் அரசியல்வாதிகள் தம்மைப் பற்றிய செய்திகள் பரபரப்பாக உலாவ வேண்டும் என்பதற்காக, அவ்வப்போது விடுதலைப் புலிகளையும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனையும் முன்னாள் போராளிகளையும் பயன்படுத்திக் கொள்கின்றனர் என்ற குற்றச்சாட்டு அண்மைக் காலமாக வலுப்பெற்று வருகிறது. போரின் முடிவில் படையினரிடம் சரணடைந்து, புனர்வாழ்வு அளிக்கப்பட்டு, விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு தடுப்புக்காவலில் இருந்த போது, விசஊசி ஏற்றப்பட்டதான ஒரு பரபரப்புக் குற்றச்சாட்டை முன்னிறுத்தி, தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் அண்மையில் அறிக்கைப் போர்களை நடத்தியிருந்தனர். இந்த விவகாரத்தை அணுக வேண்டிய முறையில் அணுகாமல், சரியான முறையில் கை…

  13. ஒன்­றி­ணைந்து ஜன­நா­ய­கத்தை வலுப்­ப­டுத்­து­வ­தற்­கான வாய்ப்பு ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சிக்­குள்ளும் அதன் உள்ளூர் அமைப்­பு­க­ளுக்­குள்ளும் கொள்கை விவ­கா­ரங்­க­ளிலும் ஆழ­மா­ன­தொரு நெருக்­கடி தோன்­றி­யி­ருக்­கின்ற ஒரு நேரத்தில் அதன் 65ஆவது வரு­டாந்த மா­நாடு நடை­பெ­று­கின்­றது. சீனப்­பா­ரம்­ப­ரி­யத்­தின்­படி நெருக்­கடி என்­பது ஒரு கெட்­ட­வி­ட­ய­மாக இருக்க வேண்­டு­மென்று அவ­சி­ய­மில்லை. நல்­ல­துக்கோ கெட்­ட­துக்கோ ஒரு நெருக்­கடி ஒரு திருப்பு முனை­யாகக் கூட இருக்­கலாம். சுதந்­தி­ரக்­கட்­சியைப் பொறுத்­த­வரை, கணி­ச­மான பிரச்­சி­னைகள் இருக்­கவே செய்­கின்­றன. ஆனால், அதே­வேளை அந்தப் ப…

  14. ஐக்­கிய நாடு­களின் செய­லாளர் நாயகம் பான் கீ மூன் அவர்­களின் இலங்­கைக்­கான விஜயம் நேற்­றைய தினம் வெள்­ளிக்­கி­ழ­மை­யுடன் முடிவு பெற்­றாலும் அவரின் வரு­கை­யா­னது ஏதா­வது தரப்­பி­ன­ருக்கு அனு­கூலம் தரும் விஜ­ய­மாக இருந்­துள்­ளதா என்­பது அவரின் விஜ­யத்­தை­யொட்­டிய பாரிய கேள்­வி­யாக மாறி­யுள்­ளது. இங்கு தரப்­பினர் என்று பிரித்­து­க்காட்ட முனை­வது அர­சாங்கம், தமிழ் மக்கள், முஸ்லிம் சமூகம், பேரி­ன­வா­திகள் என்ற எல்­லைப்­ப­டுத்­தப்­பட்ட கூட்­டத்­தி­ன­ரையேயாகும்.செய­லாளர் நாய­கத்­தி­னு­டைய இலங்­கைக்­கான இரண்­டா­வது உத்­தி­யோ­க­பூர்வ விஜ­ய­மா­னது ராஜ­தந்­திர ரீதியில் முக்­கியம் கொண்­ட­தாக கரு­தப்­பட்­டாலும் அல்­லது கணிக்­கப்­பட்­டாலும் அவரின் வரு­கையின் பெறு­மா­ன­மா­னது உள்ளூ…

  15. விஷ ஊசி விவகாரம் : மரணித்த போராளிகளின் விபரங்களும் பொய்களும் பொதுவான மக்களின் பிரச்சனைகளிலிருந்தும், உண்மைகளிலிருந்தும் மக்களைத் திசைதிருப்புவதற்காக உண்மைக்குப் புறம்பான தகவல்களை கட்டவிழ்த்துவிடுவதென்பது ஆளும்வர்க்கங்களின் தந்திரோபாயங்களில் ஒன்று. அவ்வாறான தகவல்கள் வியாபாரமயபடுத்தப்பட்ட சமூகப் பிரக்ஞையற்ற ஊடகங்களால் மக்கள் மத்தியில் எந்தக் குறிப்பான ஆதாரங்களுமின்றி பரப்பப்படும். அதன் பின்னணியில் காணப்படும் அரசியல் என்பது ஆபத்தான பின் விழைவுகளை ஏற்படுத்தும். அவ்வாறானவற்றுள் ஒன்றே விஷ ஊசி ஏற்றப்பட்டதாக முதலில் சந்தேகத்திற்குரிய அரசியல்வாதிகளாலும், அவற்றின் ஊதுகுழல் ஊடகங்களாலும் பரவவிடப்பட்ட வதந்தி. இலங்கையின் தேசிய இன ஒடுக்குமுறை வரலாற்றில் இன்றைய இலங்கை அரசு மிகவு…

  16. இரகசியங்களை ஜனாதிபதி வெளியிடாமல் இருக்கலாமா? எப்போதும் தமது எதிரிகளுக்கு ஆயுதம் வழங்காது பேசுவதில் மிகவும் கவனமாக நடந்து கொள்ளும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த 19ஆம் திகதி மாத்தறையில் ஐக்கிய தேசியக் கட்சியினதும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினதும் கூட்டரசாங்கத்துக்கு ஒரு வருடம் பூர்த்தியாவதையொட்டி நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போது வசமாக மாட்டிக் கொண்டார். கூட்டு எதிர்க்கட்சி எனத் தம்மை அழைத்துக் கொள்ளும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்களை நேரடியாகக் குறிப்பிடாமல் அங்கு கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, சிலர் புதிய கட்சியொன்றை ஆரம்பிக்கப் போவதாகக் கூறியிருப்பதாகவும் அவ்வாறு அவர்கள் புதிய கட்சியொன்றை ஆரம்ப…

  17. கேபி. க்கு எதி­ராக ஏன் குற்றஞ் சுமத்­தப்­ப­ட­வில்லை? அரசியல் கைதிகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சித்தலைவர் சம்பந்தன் ஆற்றிய உரை ஆயுதப் போராட்டம் முடி­வுக்கு வந்து இப்­போது ஏழு வரு­டங்கள் ஆகி­விட்­டன. பெரு­ம­ளவு காலம் கடந்­து­விட்­ட­போ­திலும் தடுப்புக் காவ­லி­லுள்ள இந்தத் தமிழ் கைதி­களின் பிரச்­சி­னைக்கு இன்னும் ஒரு முடிவு ஏற்­ப­ட­வில்லை என்­ப­தோடு, பலர் நீண்ட காலம் தடுப்­புக்­கா­வலில் உள்­ளனர். இக் கைதிகள் தமது விடு­த­லை­யைக்­கோரி காலத்­திற்குக் காலம் பல்­வேறு எதிர்ப்­பு­க­ளையும் ஆர்ப்­பாட்­டங்­க­ளையும் நடத்­தி­யுள்­ளனர். அதை­விடத் தீவிர குற்­றங்­க­ளுக்­காக குற்­றச்­சாட்­டு­களை எதிர்­நோக்­கி­யி­ருக…

  18. 20 பொதுமக்களைப் பலி கொண்டு தொடங்கிய சம்பூர் சமர்! கிழக்கில் யுத்தம் வெடித்த நாட்கள்!! ஓகஸ்ட் 28. 2016, கிழக்கில் யுத்தம் மூண்ட நாட்கள். 20 பொதுமக்களை பலிகொண்டபடி சம்பூர் மீது இலங்கை அரச படைகள் தாக்குதல்களை தொடங்கின. விடுதலைப் புலிகளின் நிர்வாகத்தில் உள்ள சம்பூரைக் கைப்பற்றும் நோக்கில் முப்படைகளுடன் மும்முனையில் பாரிய அளவிலான இராணுவ நடவடிக்கையை இலங்கை இராணுவத்தினர் தொடங்கினர். ஆட்டிலெறி, பீரங்கிக்குண்டுகள், பல்குழல் ரொக்கட் குண்டுகள், மோட்டர் எறிகணைகளை செறிவாக வீசிக்கொண்டு கிபீர்-மிக் விமானங்கள் குண்டுத்தாக்குதல்களை நடத்தியவாறு ஓகஸ்ட் 28 அன்று திங்கட்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு நகர்வு முயற்சியினை இலங்கை இராணுவத்தினர் மேற்கொண்டனர். டாங்கி…

  19. துப்பாக்கி ரவைகள், பெல்லட் குண்டுகள் என அடக்குமுறைகளாலோ, தேர்தல், வளர்ச்சி என்ற மாய்மாலங்களாலோ காஷ்மீரி மக்களை இந்திய அரசால் வெல்லமுடியாது என்பது மீண்டும் நிரூபணமாகியிருக்கிறது. காஷ்மீரில் இந்திய அரசுக்கு எதிராக ஆயுதப் போராட்டம் நடத்தி வரும் ஹிஸ்புல் முஜாஹிதீன் எனும் அமைப்பைச் சேர்ந்த தளபதிகளுள் ஒருவரான புர்ஹான் வானி, ரம்ஜான் பண்டிகை முடிந்த மறுநாளே – ஜூலை 8 அன்று இரவில் அரசுப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். 22 வயதான, காஷ்மீர் இளைஞர்களிடையே செல்வாக்கு கொண்ட புர்ஹான் வானியைக் கொன்றதைப் பெரும் வெற்றியாக அறிவித்த மோடி அரசு, அக்கொலையையடுத்து காஷ்மீரில் வெடித்துக் கிளம்பிய மக்களின் போராட்டங்களை அடக்கமுடியாமல் தோற்றுப் போய் நிற்கிறது. புர்ஹான் வானியின…

  20. விச ஊசியும் முன்னாள் போராளிகள் மீதான அழுத்தமும் முன்னாள் போராளிகளின் தொடர் மரணங்கள் தமிழ் மக்களை உலுக்கி விட்டிருக்கின்றன. அரச புனர்வாழ்வு முகாம்களிலிருந்து விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகளில் இதுவரை 108 பேர் புற்றுநோய், காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்களினால் மரணித்திருக்கின்றார்கள். சிலரின் மரணத்துக்கான காரணங்கள் அறிவிக்கப்பட்டிருக்கவில்லை என்று உறவினர்கள் கூறுகின்றார்கள். சுமார் பத்தாயிரம் என்கிற அளவில் புனர்வாழ்வு பெற்று விடுதலையான முன்னாள் போராளிகளில், 108 என்பது கணிசனமான எண்ணிக்கையாகும். அப்படியான நிலையில், இந்த மரணங்கள் தொடர்பில் சந்தேகங்கள் எழுவது இயல்பானவை. குறிப்பாக, புனர்வாழ்வு முகாம்களில் இருந்த போது முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்…

  21. கடந்த வாரத்தில் வடக்கை மையப்படுத்தி அமெரிக்காவில் இரண்டு முக்கிய செயற்பாடுகள் இடம்பெற்றிருந்தன. ஒன்று அமெரிக்க தூதுவர் அத்துல் கெசாப் யாழ்ப்பாணத்துக்கு பயணம் மேற்கொண்டு பல்வேறு சந்திப்புகளை நிகழ்த்தியமை. இரண்டாவது அமெரிக்க விமானப்படையின் சி-130 போக்குவரத்து விமானத்தில் வந்த அமெரிக்கப் படையினர் யாழ்ப்பாணத்தில் மேற்கொண்ட ஐந்து நாள் மருத்துவ முகாம் மற்றும் உதவிப் பணிகள். தற்போதைய நிலையில் அமெரிக்காவின் இந்த இரண்டு நகர்வுகளையும் சாதாரண விடயமாகக் கருதிவிட முடியாது. அமெரிக்காவின் பசுபிக் கட்டளைப் பீடம் தனது பரப்புக்குள் உள்ள நாடுகளில் ஆண்டு தோறும் நான்கு பெரியளவிலான மனிதாபிமான மருத்துவ உதவிப் பணிகளை மேற்கொள்வது வழக்கம். ஒப்பரேசன் பசுபிக் ஏஞசல் என்ற பெயரில் இ…

  22. சிரியா போரில் பாதிக்கப்பட்ட சிறுவன் முகத்தில் ரத்தக் காயங்களுடன் இருக்கையில் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிரியாவில் உள்நாட்டு போர் தொடங்கியுள்ள நிலையில் இதுவரை லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் அங்கிருந்து மக்கள் அதிக அளவில் வெளியேறி அகதிகளாக வேறு நாட்டுக்கு சென்ற வண்ணம் உள்ளனர். இந்நிலையில் அலெப்போ நகரில் விமானத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட சிறுவன் ஒருவன் முகத்தில் ரத்தம் வடிய இருக்கையில் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. தற்போது அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நன்றி: CNN …

  23. யாழ்ப்பாண நூலகத்துக்கு நூல்களைத் திரட்டி அனுப்பும் பணியில் ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை ஈடுபட்டுள்ளது. இதேபோன்ற பணியில் சில தமிழ் அமைப்புகளும் ஈடுபட்டுள்ளன. மக்களிடம் புத்தகங்களைப் பெற்று, இலங்கை அரசின் அனுமதி யுடன் யாழ்ப்பாண நூலகத்துக்கு அவை அனுப்பி வைக்கப்படவுள்ளன. இதற்கு தமிழர்களின் ஆதரவு பெருமளவு இருப்பதும் நிறைய புத்தகங்கள் கிடைத்துள்ளதும் மிகவும் மகிழ்ச்சிக்குரியது. இத்தகைய பணி பாராட்டுக்குரியதே என்றாலும், யாழ்ப்பாண நூலகத்தின் தேவை என்ன என்பதை உணர்வுபூர்வமாகவும், வரலாற்றுப்பூர்வமாகவும் புரிதல் இல்லாமல் புத்தகங்களை சேகரித்து அனுப்புவதால் மெய்யான பலன் கிடைக்காது. யாழ் நூலகத்துக்கான புத்தகங்கள் தேவை என்று வேண்டுகோள் விடுத்தால், கிடைக்கப்பெறும் நூல்களின் …

    • 0 replies
    • 539 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.