Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குசேலன்மலை குழந்தைகளுக்கு கல்வியுதவி செய்யுங்கள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குசேலன்மலை குழந்தைகளுக்கு கல்வியுதவி செய்யுங்கள்.

 

மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கரடியனாறு கிராம உத்தியோகத்தர் பிரிவு கரடியன்குளம் குசேலன்மலை எனப்படும் கிராமத்தில் 27குடும்பங்கள் மட்டுமே வாழ்கின்றனர். இங்கு கல்வி கற்கும் வயதில் 62பிள்ளைகள் உள்ளனர்.

602705_464666176924122_1921074222_zpsb95

இப்பகுதியில் இதுவரையில் மின்சார வசதியோ அல்லது சரியான கல்விக்கான வசதிகளோ இல்லை. விவசாயத்துக்கு ஏற்ற வளமும் வசதியும் உள்ள இந்தக் கிராமம் இதுவரையில் எந்த அரசியல் தலைவர்களாலும் கவனிக்கப்படாதிருக்கிறது.

 

மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள கரடியன்குளம் குசேலன்மலை வாழ் மாணவர்களின் அடைவுமட்டம் குறைந்த நிலையில் இருக்கும் கல்விகற்கும் வயதில் உள்ள சிறுவர்களுக்கான முன்பள்ளிக் கற்பித்தலுக்கான வசதியும் மாணவர்களுக்கான பாடசாலைக்கல்வியை மேம்படுத்தும் வகையிலான ஆசிரியர்களுக்கான ஒழுங்கினையும் செய்யத் திட்டமிட்டுள்ளோம்.

DSCF4129_zpsa59de9d0.jpg

வாரஇறுதி நாட்களான வெள்ளி முதல் ஞாயிற்றுக்கிழமை வரையில் பிரத்தியேகமாக தெரிவுசெய்யப்பட்ட ஆசிரியர்கள் இக்கிராமத்திற்குச் சென்று பிள்ளைகளுடன் தங்கியிருந்து கற்பித்தல் , விளையாட்டு , உளவள விருத்தியை மேம்படுத்தும் வகையிலான செயற்படுத்தல்களை முன்னெடுக்கவுள்ளனர் .

 

இன்று உலகம் கணணிக்குள் வட்டமிட குசேலன்மலையில் 6ம் வகுப்பிற்குச் செல்ல வேண்டிய சிறுவன் ஒருவன் கையொப்பம் வைக்கத் தெரியாத நிலமையில் இருப்பதை நமது அனர்த்தக் குழுவினர் எமது கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளனர். அச்சிறுவனுக்கான கல்வியையும் அதேபோல அக்கிராமத்திலுள்ள அனைத்துப் பிள்ளைகளுக்குமான கல்வியையும் வழங்கும் திட்டத்தையும் தயரரித்து வழங்கியுள்ளனர்.

DSCF4153_zps4ae76879.jpg

விடுதலைக்காகப் போராடி எங்கள் இனத்தின் வரலாறுகளையும் இந்த ஊர் மௌனமாகத் தாங்கி நிற்கிறது. அடிப்படை வசதிகள் சுகாதாரம் மின்சாரம் எதுவுமற்று வாழ்கிற இந்த மக்களுக்கான நல்வாழ்வைக் கொடுக்க கருணையாளர்களை அழைக்கிறோம். குசேலன்மலை போன்ற மேலும் பல கிராமங்களைத் தேடிய எங்களது குழுவினரின் செயற்பாட்டிற்கு புலம்பெயர்ந்து வாழ்கிற அனைவரும் ஆதரவு வழங்குமாறு வேண்டுகிறோம்.

எங்கள் கனவுகளின் இருப்பும் விதையும் இத்தகைய கிராமங்களிலேயே இன்னும் சாகாமல் வாழ்கிறது.

 

கவனிக்கப்படாத பிரதேசங்களாக கைவிடப்பட்ட தமிழர் பிரதேசங்களின் கல்வி பொருளாதார முன்னேற்றத்தை மேம்படுத்த இன்றே உங்கள் உழைப்பில் ஒருதுளியை சேமித்து வழங்குங்கள்.

 

மாதமொன்றுக்கு இக்கிராமத்திற்கு 25ஆயிரம் ரூபா (அண்ணளவாக 155€) தேவைப்படுகிறது. ஆசிரியர் கொடுப்பனவு போக்குவரத்து பிள்ளைகளுக்கான உணவு கல்பித்தல் உபகரணங்கள் யாவையும் வழங்க மேற்படி உதவி தேவைப்படுகிறது.

DSCF4172_zps4fd360c0.jpg

DSCF4175_zps83948c21.jpg

DSCF4176_zps44226045.jpg

DSCF4177_zps82cab1f5.jpg

DSCF4172_zpsd84084e0.jpg

DSCF4163_zpsb1623bfe.jpg

DSCF4170_zps91128070.jpg

“எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் “இந்தக் குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்க உதவுங்கள்.

 

குசேலன்மலை கிராமவாசியொருவரின் கருத்து ஒளிப்பதிவு :-

http://youtu.be/AeFr_mUYAW8

 

தொடர்பு கொள்ளுங்கள் :-

Nesakkaram e.V.
Hauptstrasse 210
55743 Idar-Oberstein
Germany

 

Telephone: +49 (0)6781 70723 /Mobile – 0049 (0) 1628037418

 

nesakkaram@gmail.com
Skype – Shanthyramesh

www.nesakkaram.org

 

http://nesakkaram.org/ta/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/

 

Edited by shanthy

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நேசக்கரம் இலவச கணணிப்பயிற்சி நிலையத்தை நிறுவி மாணவர்களுக்கு கணணியறிவை கற்பிக்க உதவிய திரு.தவேந்திரராசா ஐயா அவர்கள் குசேலன்மலை மாணவர்கள் குடும்பங்களுக்கான முழுமையான உதவியை வழங்க முன்வந்துள்ளார். 08.06.2013 அன்று முதலாவது கற்பித்தல் ஆரம்பமாகவுள்ளது.

 

முகமறியாத உறவே தவேந்திரராசா ஐயா உங்களுக்கு என்றென்றும் நன்றிகள். எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். குசேலன்மலை குழந்தைகளுக்கும் எங்களுக்கும் கல்வி தந்த கடவுள் நீங்கள்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.