Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊரிக்கிராமச் சிறுமிகள் மீதான வன்புணர்வு- பாலியல் வன்கொடுமை சட்டத்தை அமுல்படுத வேண்டாம்

Featured Replies

மகிந்த உத்தரவிட்டார் - தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்:- ( லங்கா ஈ நியூஸ் ஆசிரியர் குளோபல் தமிழ்ச் செய்திகளுடன் தகவல்களை பரிமாறிக்கொண்டார்)

Jayantha_Perera_Chike_Thaththi_J_CI.jpg

(தனது இரண்டு பெண் பிள்ளைகள் மனைவி சகிதம்  புதிய கடற்படைத் தளபதியாக Jayantha_Perera பொறுப்பேற்ற போது)

முதற் பதிவேற்றம் - 20-07-2014 - 12:09-

யாழ்ப்பாணத்தில் 11 வயது மற்றும் 9 வயது சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய கடற்படை வீரர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத வேண்டாம் என நாட்டின் ஜனாதிபதியும் முப்படைகளினதும் சேனாதிபதியுமான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளதாக லங்கா ஈ நியூஸ் இணைய தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதியின் உத்தரவிற்கு அமைய அவரது பாராளுமன்ற விவகார இணைப்புச் செயலாளர்களில் ஒருவரான குமாரசிறி ஹெட்டிகே, காவல்துறையினருக்கு இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

கடற்படை வீரர்கள் கைது செய்யப்பட்டதன் பின்னர் இரண்டு தடவைகள் குமாரசிறி ஹெட்டிகெ நெடுந்தீவு காவல் நிலையத்திற்கு தொலைபேசி அழைப்புக்களை எடுத்துள்ளார்.

குறித்த கடற்படை வீரர்களை விளக்க மறியலில் வைத்தால் படையினரின் மனோ திடத்திற்கு களங்கம் ஏற்படக் கூடுமெனத் தெரிவித்து அவர்களை விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.

யாழ்ப்பாண பிராந்தியத்திற்கு பொறுப்பான காவல்துறை அத்தியட்சகர் ஆர்.டி.பீ. விமலசேன மற்றம் நெடுந்தீவிற்குப் பொறுப்பான கவால்துறை அத்தியட்சகர் எஸ்.பீ.சேனாநாயக்க ஆகியோருக்கும் இது தொடர்பில் உத்தரவிட்டுள்ளார்.

காவல்துறை அத்தியட்சகர்களின் உத்தரவிற்கு அமைய நெடுந்தீவு காவல்நிலையத்தின் குற்றப் பிரிவு பொறுப்பாளர் ஆர்.கே.பீ. சேனாரட்ன குறித்த கடற்படை வீரர்கள் ஏழு பேரையும் விடுதலை செய்துள்ளார்.

2014ம் ஆண்டு ஜூலை மாதம் 18ம் திகதி 18-2014 என்ற முறைப்பாட்டு இலக்கத்தில் சம்பவம் தொடர்பில் நெடுந்தீவு காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

“சிறுமியைக் கடத்திச் சென்று, கூட்டாக பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தினர்” என முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறான சம்பவங்களின் போது சிறுமியை வைத்தியசாலைக்கு அனுப்பி சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கை பெற்றுக் கொள்ள வேண்டியது அவசியமானது என்ற போதிலும் அவ்வாறான அறிக்கை எதுவும் பெற்றுக்கொள்ளப்படவில்லை.

11 வயது சிறுமியை பாலியல் ரீதியாக வன்கொடுமைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட ஏழு கடற்படை உத்தியோகத்தர்களும் காரைநகா கடற்படை முகாமைச் சேர்ந்தவர்களாகும்.

1.   அஜித் குமார

2.   ருபசிங்க ஆராச்சிலாகே சாமர இந்திக்க

3.   நதீர தில்சான் ரத்நாயக்க

4.   குடாபாலகே ஜயவீர

5.   இந்திக்க குமார விதானாரச்சி

6.   ரணசிங்க சுமித் சுபாஸ்

7.   விகும் சேனாக பியசிறி திசாநாயக்க ஆகியோருக்கு எதிராகவே குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக சிறுமி செய்த முறைப்பாட்டை கருத்திற் கொண்டு சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றில் ஆஜர் செய்வதாக நெடுந்தீவு காவல் நிலையத்தின் குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி சேனாரட்ன நீதிமன்றிற்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளார். பீ-64-2014 என்ற இலக்கத்தைக் கொண்ட அறிக்கையே இவ்வாறு சமர்ப்பிக்க்பபட்டுள்ளது,

சிறுமியின் வாக்கு மூலத்தைக் கருத்திற் கொண்டு சந்தேகத்தின் பேரில் கடற்படை வீரர்களை கைது செய்வதாக பொறுப்பதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

குறித்த கடற்படை வீரர்களை இலகுவில் விடுதலை செய்யும் நோக்கில் இவ்வாறு முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட கடற்படை வீரர்களின் தலைகளை மறைத்து, சீருடை அணிந்த நிலையில் அடையாள அணிவகுப்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளனர்,

இவ்வாறான ஓர் நிலையில் சிறுமியினால் குற்றவாளிகளை அடையாளம் காண முடியவில்லை.

குறித்த சிறுமி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த அச்சுறுத்தல் காரணமாகவும் சிறுமி எவரையும் அடையாளம் காட்டவில்லை.

படையினரை யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்ற இவ்வாறான பொய் குற்றச்சாட்டு சுமத்தப்படுவதாக படையினர் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறெனினும், சந்தேக நபர்களை பிரதான நீதவான் விளக்க மறியலில் வைக்க உத்தரவிட்ட போதிலும், பதில் நீதவான் ஒருவரின் ஊடாக பிணை வழங்கப்பட்டுள்ளது.

சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய பாரதூரமான குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட கடற் படைவீரர்களுக்கு வெறும் 250 ரூபா ரொக்கப் பிணையிலும், 5000 ரூபா சரீரப் பிணை அடிப்படையில் பிணை வழங்கப்பட்டுள்ளது.

11 வயதான சிறுமியின் பாலியல் வன்கொடுமை தொடர்பில் ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டது என்ற போதிலும் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இவ்வாறான குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட படைவீரர்களின் பணி விசாரைணகள் முடிவடையும் வரையில் இடைநிறுத்தப்படுவது வழமையானது என்ற போதிலும், தமது பிள்ளைகளை அருகில் வைத்துக் கொண்டு அண்மையில் கடற்படைத் தளபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட வைஸ்ட் அட்மிரால் ஜந்த பெரேரா, இந்த சந்தேக நபர்களை காலி கடற்படை முகாமிற்கு இடமாற்றம் செய்துள்ளார்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/109627/language/ta-IN/article.aspx

 
 
ஊரிக் கிராமத்துக் குழந்தையே! 
 
Minor-girl-rape_CI.jpg

 

 

 

ஊரிக் கிராமத்துக் குழந்தையே! 

 

 

கடற்படையினரால் சூழப்பட்ட  காரைநகரின்  ஊரிக் கிராமத்தின் ஒரு மூலையில்   ஒடுங்கி  வாழ்ந்த குடும்பத்தில் பிறந்த குழந்தையே! உடல் நடுக்கத்தில் உழலும் உன் தந்தைக்கு வேலையில்லை. தாயின் கூலித் தொழிலை நம்பிவாழும் குடும்பம். வறுமையின் பிடியில் வாழ்வைநகர்த்திய  குடும்பத்தில் கடைசிப்பிள்ளை நீ. பதினொரு வயதேயான சிறு மொட்டு. ஆடிப்பாடி விளையாடிக் கற்க வேண்டிய சிறுமி. ஆளரவமற்ற பற்றைக் காடுகளூடும் முள்ளிக் காடுகளூடும்  தினமும் பாடசாலை செல்லும்  உன்னை ஒருநாள் இலக்கு வைத்து கடற்படைச் சிப்பாய்கள் தூக்கிச் சென்றனர். அவர்கள் உன்னைத் தமது காமப் பசிக்கு இரையாக்க முற்பட்ட போது நீ அலறியிருக்கிறாய்... எதிர்த்திருக்கிறாய்... மறுத்திருக்கிறாய்.. அவர்கள் உன்னை விடவில்லை.. கத்தியைக் காட்டி மிரட்டிக் கொல்வோம் என்று மிரட்டியிருக்கின்றனர்.. உன் அலறல் சத்தம் கேட்டு அவ் வழியால் சென்ற ஒரு வயோதிபர் அந்தச் சிறுமியை விடுங்களேன்.. என்ன செய்கிறீர்கள் எனக் கேட்டு இருக்கிறார்.. சிப்பாய்கள் அவரை மிரட்டியதும் அவர் பயந்து சென்று விட்டார்.

 

உன்மீது பாய்ந்தது மிருகம். இப்படி ஒரு மிருகத்தை முன்னொரு போதும் கண்டிருக்க மாட்டாய். வீணி வடியும் வாயொடு உன்னைக்குதறிய மிருகத்தை நீ ஒவ்வொரு நாளும் சுமந்து கொண்டு இருந்திருந்திருக்கிறாய்.

 

உன் அக்காவின் ஒன்பது வயது மகளையும் இந்தக்காமுகர்கள் விட்டு வைக்க வில்லை என்கிறார்கள் அயலவர்கள்.

 

குடும்பத்தின் பாரத்தை சுமக்கும்  உன் அம்மா  உன் கண்ணும் மனமும் தினமும் கூறிய வலிகளை உணர முடியாது தன்கூலித் தொழிலிலே மூழ்கடிக்கப்படிருந்தாள். ஒரு நாளுடன் முடியவில்லை உன்மீதான பாலியல் கொடுமைமறுநாளும்பாடசாலை நேரம் காத்திருக்கிறான் அந்தக் கடற்படைக்காமுகன்உன்னை அன்றும் அழைத்துச் செல்கிறான்பாடசாலைமுடியும் நேரம் நீ விடுவிக்கப்படுகிறாய். உன்னைத் தன்வக்கிரத்தின் வடிகாலாக்கியவன் அதனைத் தன் வழக்கமாகியும்கொண்டான் .

 

உனக்கு நடந்த கொடுமைகளைச் சொல்ல நீ உனரவில்லை. அச்சத்துக்குள்ளும் மௌனத்துக்குள்ளும் உன் குழந்தைமை விழுந்து விட்டிருந்தது. பாடசாலை செல்வது கூட உனக்குப் பிடிப்பில்லாது போகிறதுபாடசாலைச் சீருடைக்கு மேலாக  சாதாரண ஆடையை அணிந்து செல்லத் தொடங்கியிருக்கிறாய்.

 

உன்னைக் காணாத பாடசாலை நிர்வாகம் உரியநடைமுறையின் படி சிறுவர் நன்னடத்தை அதிகாரிகளுக்குஅறிவிக்கிறதுஇதற்கிடையில் ஒருநாள் பாடசாலை விடும்நேரத்திற்கு முன்னதாகவே நீ வீடு திரும்பியிருக்கிறாய்.வேலையில் இருந்து இடையில் வீடு திரும்பிய அம்மா  ஏன்பாடசாலை முடியமுன்னம் வந்திருக்கிறாய்.. என்று உன்னைக் கேட்கிறார்.. பாடசாலை முன்னதாகவே விட்டுவிட்டது எனச்சொல்கிறாய்.. வா அதிபரைக் கேட்போம் என்கிறாள் அம்மா நீ அதற்கும் உடன்படுகிறாய்..

 

இறுதியாக உனக்கு நடந்த கொடுமைகள் வெளிவரத்தொடங்குகின்றன. உண்மைகள்  வெளி வரத்தொடங்குகின்றன தொடர்ச்சியாக 11 நாட்கள் பாலியல்வன்புணர்வுகளுக்கு உள்ளானதால் உண்டான இரத்தப்பெருக்கையும் உன் அம்மா கண்ணுற்று இருக்கிறார்நீவைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகிறாய்விடயம்ஊடகங்களுக்கு  தெரியவருகிறது. கடற்படையினரும்அவர்களை வழமைபோல் பாதுகாக்கும் கோத்தாபயரெஜிமன்ட்டும் உசாராகிறார்கள்..

 

உன் குடும்பத்திற்கு உன் மூத்த அக்காவுக்கும் மிரட்டல்விடுகிறார்கள்.. விடயத்தை பெரிதாக்க வேண்டாம் என்கிறார்கள்நிம்மதியாக வாழ வேண்டும் என்றால் இதனைஅப்படியே விட்டு விடுமாறு  மிரட்டுகிறார்கள்.

 

வழமைபோல் தீவகத்தில் படையினருக்கு கூஜாதூக்குபவர்களில் ஒருவரான றஜனி என்பவர்கடற்படையினருக்குத் தரகராக வந்து பிரச்சனையை விட்டுவிடும்படியும் அதற்காக பணம் தருவதாகவும் உங்கள்குடும்பத்தை கேட்கிறார்.

 

யாழ் வைத்தியசாலைத் தரப்பும்சுகாதாரத் துறையும் ஆளும்அரசாங்கத்தின் உத்தரவுகளுக்கு அடிபணிந்து சம்பவம்தொடர்பாக மௌனித்திருக்கின்றனர்உன்னை வந்து எவரும்சந்திக்கக் கூடாது என்பதிலும் கவனமாக இருக்கின்றனர்.

 

தொடரும் அழுத்தங்களால்  வரும் அச்சத்தினாலும் இயலாமையினாலும்   “ பாரியளவு பாதிப்பு எதுவும்ஏற்படவில்லைத் தானே... என்ன செய்யிறது? ” என்று உன் அம்மா கையைப் பிசைகிறாள்.

 

வறுமையில் உழலும் குடும்பத்திற்கு கஞ்சி வடிப்பதற்கே கஸ்டப்படும் அவரால் யாரை எப்படி எதிர்த்துப் போராடமுடியும்? கண்ணை அசைப்பதற்கும் கையை ஆட்டுவதற்கும் காசு கேட்கும் சட்டத்தரணிகளுக்கு பணம்இறைத்து அவரால் நீதிமன்றம் சென்று உனக்கான நீதியை கேட்க முடியாதே. அப்படித்தான் கேட்டாலும் கிடைப்பதற்கு நீதி வாழும் நாடா இது?

 

சிறுவர் நீதிமன்றம் பிணை வழங்க மறுத்தது. விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டது. ஆனால்  வேறு ஒரு பிரத்தியேக நீதிபதி முன்னிலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களை  ஆஜர்படுத்தி விடுவிப்பை பெற்றிருக்கிறார்கள் கடற்படையினர்.  உன்னைப் பாலியல்வன்புணர்வு செய்த கடற்படைக் காமுகர்கள்  அவர்களின் சீருடையில் உன் முன் நிறுத்தப்பட்டபோது.  உன்னால் அடையாளம் காட்ட முடியவில்லை என்று கூறப்பட்டிருக்கிறது.

 

அவர்களை அடையாளம் காட்ட எப்படித் நீ துணிவாய்?. மோசமான மிரட்டல்களால் ஒடுங்கிப்போயிருக்கும் உன் குடும்பம் “இவர்களைப் பகைத்துப்  போராடும் வலும்எம்மிடம்  இல்லையம்மா” என்று உன்னிடம் சொன்ன பின்பும் நீஅடையாளம் காட்டத் துணிவாயா குழந்தை.

 

எளிமையான டீ என் ஏ(D.N.A) பரிசோதனை  ஒன்றின் மூலம் குற்றவாளியை அடையாளம் காணும்  வசதி இலங்கையிடம்இல்லையா? ஆச்சரியம். அவ்வசதி இருந்தாலும் கூட குற்றவாளி அடையாளம் காணப்பட்டு உனக்கு நீதி கிடைக்கும் என்று நான் நினைக்கவில்லை.

 

நீ சிறுமி என்றும் பாராது உன்னைக் குற்றவாளிகளைஅடையாளம் காட்டக் கோரும் அடையாள அணிவகுப்பை நடாத்தியிருக்கிறது  மகிந்த ராஜபக்ஸவின் காட்டாட்சி.

 

வறுமையில் பிறந்து வறுமையில் தவழும் உனக்குமுள்ளிவாய்க்காலுக்கு பின்னான 5 வருடத்தில் அரசாங்கத்தைஆதரித்து நல்லிணக்கம் பேசும் மாமாக்கள் பற்றித் தெரியாது பிள்ளை.  அந்த மாமாக்கள் யுத்தம் ஒன்று நிகழ்ந்த நாட்டில் இதுவெல்லாம் சகஜம்  என்கிறார்கள். இம்மாதிரியான விடையங்கள் படிப்படியாகத் தான் சரிவரும் என்கிறார்கள்.

 

குழந்தாய் உன்னையும் உன்னைப் போன்ற ஏராளம்குழந்தைகளையும் சிங்கள இராணுவத்துக்கு இணங்கிப் போகும்படி  அவர்கள் சொல்லாமல் சொல்லுகிறார்கள். வறுமையிலும் பட்டினியிலும் உழலும் உன் போன்ற குழந்தைகளைப் பலிக்கடாக்கள் ஆக்குவது இலகு என்று அவர்களுக்கு தெரியும். ஆனால் தங்களின் குழந்தைகளைப் பாதுகாப்பதில் அவர்கள் கவனமாகவும் இருக்கிறார்கள்.

 

ஒரு ஆக்கிரமிப்புப் படை சிறுவர்களைப் பாலியல்துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்துகிறது. பெண்களின் மீது பாலியல் வன்முறைகளைப் பிரயோகிக்கிறது. இதைப்பற்றி வாய் திறக்கிறார்கள் இல்லை நல்லிணக்க மாமாக்கள்.

 

அண்மையில் பிரித்தானிய நீதி மன்றம் ஆசிரியை ஒருவருக்கு 16வயது நிரம்பிய மாணவனுடன் உடல் உறவு கொண்டமைக்காக கடுமையான தண்டனையை வழங்கியதுகுறித்த மாணவன்தானாக முன்வந்து நீதிமன்றில் தனது  முழுமையானவிருப்பின் அடிப்படையிலேயே ஆசிரியையுடன் உறவு கொண்டதாகத் தெரிவித்த பின்பும் நீதிமன்றம் ஆசிரியருக்கு கடுமையான தண்டையையே வழங்கியது. உரிய வயதை அடையாத சிறுவனின் உணர்வு பூர்வமான  சம்மதத்தை அறிவுடைய வளர்ந்த அதுவும் ஆசிரியர் ஒருவர் துஸ்பிரயோகம் செய்தமை பாரிய குற்றம் என்பதாகவே பிரித்தானிய நீதிமன்றம் அதனை வியாக்கியானம் செய்தது

 

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை செயற்படுத்தும் 24மணிநேரச் சிறுவர் அவசர அழைப்பான 1929  தரம் உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகஅதன் தலைவர்  அனோமா திஸநாயக்க அறிவித்திருக்கிறார்.இதன் மூலம் ஒரே நேரத்தில் அதிகமான அழைப்புக்களைகவனிக்கும் வகையில் இச்சேவை தரமுயர்த்தப் படவுள்ளதாகஅவர் கூறுகிறார்மேற்படி இலக்கத்திற்கு அழைப்பைஏற்படுத்துவதற்கு தற்போது நான்கு தொலைபேசிகள் மட்டுமேஉள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இதனைப் பத்துதொலைபேசிகளாக அதிகரிக்கவுள்ளதாகவும் அவசர அழைப்புபிரிவு அமைக்கப்பட்டு 4 வருடங்கள் பூர்த்தியாகும் நிலையில்இந்த கூடுதல் வசதி ஏற்படுத்தப்படவுள்ளதாகவும் கூறுகிறார்.

 

கடந்த நான்கு வருடங்களில் அவசர தொலைபேசி சேவைக்கு210,314 அழைப்புகள் கிடைக்கப்பெற்றன என்கின்றனர். இந்தவருடம் இதுவரை 40404 அழைப்புகள் கிடைத்துள்ளன என்கின்றனர்.இவற்றில் கொழும்பு மாவட்டத்திலிருந்து மட்டும்790 அழைப்புகள் கிடைக்கப்பெற்றுள்ளனஎன்கிறார் அனோமா.

 

சிறுவர் நீதிமன்றம் பிணை வழங்க முடியாது எனக்கூறியதையும்  மீறி இலங்கையின் அதி உத்தம மகிந்த சகோதரஆட்சி சிப்பாய்களை விடுவித்து விட்டது.  வடக்கிலும்கிழக்கிலும் நாளாந்தம் வறுமையில் வாடும் இளம் பெண்கள்சிறுமிகள் மற்றும் முதிய பெண்களை தமது காமப் பசிக்குஇரையாக்கும் கோத்தாபய படையணிகளுக்கு எதிராக  இந்த அவசர அழைப்புகளால் என்னதான் செய்ய முடியும்?

 

மன்னாரில் ஒரு வயல் வெளியில் குடிசையில் தனித்திருந்தஇளம் தமிழ்ப் பெண்ணைத் துஸ்பிரயோகம் செய்து கொண்டிருந்த படைவீரர் ஒருவர் பிரபலமானவர்கள் சிலரைக் கண்டதும் விட்டுவிட்டு ஓடியுள்ளார். கண்ணுற்றவர்கள்  இந்தவிடயத்தை ஆத்திரத்துடன் அணுக முற்பட்ட போதுஅக்கிராமத்தின் பெரியவர் ஒருவர் “ இது உங்களுக்குஅதிசயமாக இருக்கிறது... ஆனால் இவை எங்களுக்குபழகிப்போனதொன்றாககண்ணை மூடி ஏற்றுக்கொள்ளவேண்டியதொன்றாக மாறிப் போச்சு ” என்று கூறியுள்ளார்.

 

யுத்தம் முடிந்து  சிலவருடங்களே கழிந்ததிருந்த  கட்டத்தில்பூநகரியைச் சேர்ந்த ஒரு குடும்பஸ்த்தர்  பின் வருமாறு கூறினார் : “ நாங்கள் படையினர் சூழ உள்ள பகுதியில் ஒருகுடிசையில்   வாழும் ஏழைக் குடும்பம்இரவில் ஒரு படைச்சிப்பாய் வந்து  எம் அருகே தூங்குவார்.காலையில் எழுந்துசெல்வார் எங்களுக்கு இரண்டு வழிகள் தானுண்டு.  ஒன்றுநானும் என் மனைவியும் குழந்தைகளும் தற்கொலை செய்து கொள்ளலாம் அல்லது எங்களது இரண்டு குழந்தைகளுக்காக சிப்பாயின் ஆக்கிரமிப்பை ஏற்றுக் கொள்வது .இரண்டாவதையே செய்கிறோம்

 

இதைத்தானா இணங்கி வாழ்வதென்பது?

 

குழந்தை உன் உடற்காயங்கள் ஆறிவிடும் ஆனால் உன்னுள் நுழைந்த அந்த மிருகத்தின் வாசமும் கோரமும் உன்னை விட்டுப்போக பல வருடங்கள் ஆகப்போகிறது. அதற்கான சரியான உள வழிப்படுத்தலையாவது வடக்கு கிழக்கின் சிறுவர் உளநலவியலாளர்கள்  வழங்குவார்கள் என நம்புகிறேன்.

 

நாங்கள் ஒரு பெரும் மிருகத்தின் முன்பு காயப்பட்ட உள்ளத்துடன் நிர்வாணமாக்கப்பட்டு நிற்கிறோம்.

 

எல்லாவற்றையும் பார்க்கும் போது வெட்ட வெளியில் நின்று ஓவென்று குரலெடுத்துக் கதறி அழவேண்டும் போலுள்ளது ஆனால் எங்களுக்கென்றுதான் ஒரு வெளியும் இல்லையே! 

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/109566/language/ta-IN/article.aspx

girl_CI.jpg

 

காரைநகர் ஊரி எனும் ஊரில்

பள்ளிசெல்லும் சிவப்புப்பொட்டுக்காரி

பாதை மருங்கிருக்கும் ஓநாய்கள்

உன் நெற்றிப் பொட்டழித்தாரே!

நீ வரும்வரை பார்த்திருந்த அன்னை

உனக்காகத் துயருற்ற உன்னருமைத் தந்தை

அன்னை தந்தை சொல் கேட்டவளே, தங்கையே!

தென்னிலங்கை உணருமா, உனது துன்ப கங்கையை?

ஆயிதமேந்திய விலங்குகள்

எல்லா இடங்களிலும் நிற்கும்

சங்கமித்தையைக் காணத்தெரியா கண்களவை,

நெற்றித் திலகத்தை மட்டுமே காணும்!

வேடம் தரித்த மிருகங்கள் இவை - அதனால்

உன் சகோதரிகளை நீ காத்துக்கொள் தங்காய்!

- சிங்களத்தில்: லஹிரு மதுசங்க்க லியனாரச்சி-

தமிழில்: லறீனா அப்துல் ஹக்

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/109607/language/ta-IN/article.aspx

Edited by Athavan CH

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.