Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான சுதந்திர சர்வதேச விசாரணைக்கு UK ஆதரவு அளிக்க வேண்டும்:-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான சுதந்திர சர்வதேச விசாரணைக்கு UK ஆதரவு அளிக்க வேண்டும்:-

17 பெப்ரவரி 2011

41 UK பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை:- விசேட தமிழாக்கம் GTN

இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான சுதந்திர சர்வதேச விசாரணைக்கு UK ஆதரவு அளிக்க வேண்டும்:-

இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான சுதந்திரமான சர்வதேச விசாரணைக்கு UK ஆதரவளிப்பதாகத் தெரிவிக்க வேண்டும்:-

இலங்கையின் 25 வருட உள்நாட்டு யுத்தத்தில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பான சுதந்திரமான சர்வதேச விசாரணை ஒன்றுக்கு பிரிட்டன் ஆதரவளி;ப்பதாகத் தெரிவிக்க வேண்டும் என பிரிட்டன் பிரதமர் டேவிட் கமருனிடம் கோரி மூன்று முக்கியமான கட்சிகளைச் சேர்ந்த 41 பிரித்தானியப் பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டு அறிக்கை ஒன்றைக் கையளித்துள்ளார்கள்.

போர்க்குற்றங்கள் நடைபெற்றதாகக் கூறப்படும் இலங்கையில் ஐக்கிய அமெரிக்காவின் ராஜாங்கத் திணைக்களம், ஐரோப்பிய ஆணைக்குழு, சர்வதேச நெருக்கடிகள் தொடர்பான குழு, மற்றும் சட்டவிரோத படுகொலைகள், சட்டத்திற்குப் புறம்பான தண்டனைகள் குறித்த ஐநாவுக்கான விசேட பிரதிநிதி ஆகியோர் முன்வைத்த நம்பத்தகு சாட்சியங்கள் பிரித்தானியப் பாராளுமன்ற உறுப்பினர்களின் கவனத்தைக் கோரும் முக்கியமான ஆவணங்களாக உள்ளன.

பாரபட்சமற்ற முறையிலும் ஆரோக்கியமான வகையிலும் இக்குற்றச்சாட்டுக்கள ;குறித்த விசாரணைகளை மேற்கொள்வது சமாதானம் உருவாவதற்கும் நல்லிணக்கம் ஏற்படுவதற்கும் அத்தியாவசியமானது என இந்தப் பாராளுமன்ற உறுப்பினர்கள் கருதுகிறார்கள்.

இந்தக் கடிதம் வெளிவரும் நேரம் மிக முக்கியமானது. ஐநா செயலாளர் நாயகம் பன் கீ முனினால் தனக்கு இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பாக ஆலோசனை வழங்கப்பட்ட ஐநா ஆலோசனைக் குழுவின் அறிக்கையை சர்வதேச சமூகம் எதிர்பார்த:துக் கொண்டிருக்கும் நேரத்தில் இக்கடிதம் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கௌரவமிக்க டேவிட் கமரூன் பா.உ

பிரதமமந்திரி

10 டவுணிங் வீதி

லண்டன்

பெப்ரவரி 2011

அன்புமிக்க பிரதமர் அவர்களுக்கு

இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரிக்க சுதந்திரமான சர்வதேச விசாரiணை ஒன்று அவசியம்

இலங்கையின் கடந்த 25 வருட உள்நாட்டு யுத்தத்தின் போது இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பில் சுதந்திரமான சர்வதேச விசாரணை ஒன்றை மேற்கொள்ள தாங்கள் தமது எல்லா அதிகாரத்தையும் பயன்படுத்தி வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனக் கோரியே இக்கடிதத்தை எழுதுகின்றோம்.

ஐக்கிய அமெரிக்காவின் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஏற்கெனவே இது தொடர்பில் ராஜாங்கச் செயலாளருக்கு அவ்வாறான விசாரணை ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் கோரி கடிதம் எழுதியுள்ளதை தாங்கள் அறிந்திருப்பீர்கள். அதனைப் பலப்படுத்தும் வகையில் பிரித்தானிய அரசாங்கமும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்.

2009 ஒக்ரோபரில் போரின் போது இலங்கையின் மனித உரிமைகள் குறித்து ஐரோப்பிய மனித உரிமை ஆணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அவ்வறிக்கை பொலிஸாராலும், அரசாங்கத்தில் உள்ள பொறுப்பு வாய்ந்த நபர்களாலும் பாதுகாப்புப் படையினராலும் மேற்கொள்ளப்பட்ட சட்டத்துக்குப் புறம்பான படுகொலைகள் அதி உச்சத்திலிருந்ததை சுட்டிக்காட்டியது. அரசியல் படுகொலைகள் உட்பட சட்டத்துக்குப் புறம்பான படுகொலைகள் பரந்தளவில் நடைபெறுவதை அது எடுத்துக் கூறியது. அது அரசியல் மற்றும் குடியியல் உரிமைகளை ஒடுக்கியது. படையினரால் திட்டமிடப்பட்ட சட்டத்திறகுப் புறம்பான படுகொலைகள் அரசாங்கத்துடன் தொடர்புடைய இராணுவத் துணைக்குழுக்கள் பொலிஸார் போன்றவர்களால் மேற்கொள்ளப்படும் படுகொலைகள் குறித்தும் அது வெளிப்படுத்தியது.

அதே மாதத்தில் ஐக்கிய அமெரிக்காவின் ராஜாங்கத் திணைக்களமும் ஓர் அறிக்கையை வெளியிட்டது. அதில் விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டியிரந்த ஏராளமான குற்றங்கள் பட்டியலிடப்பட்டிருந்தன. பொதுமக்கள் மற்றும் மனித உரிமை அமைப்புக்களின் நிறுவனங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட திட்டமிடப்பட்ட குண்டுத் தாக்குதல்கள்குழந்தைப் போராளிகளைப பயன்படுத்துதல், ஆயுதந் தாங்காத பொது மக்களiயும் முன்னாள் போராளிகளையும் சட்டத்துக்குப் புறம்பாகத் தடுத்து வைத்தல், துஷ்பிரயோகம் செய்தல், கைது செய்யப்பட்டவர்கள் அல்லது சரணடைந்தவர்களைப் படுகொலை செய்தல், மற்றும் தனிப்பட்ட காணாமல் போதல்கள் எனபவை குறித்தும் அது அறிக்கையிட்டிருந்தது.

ஆகவே போரின் இறுதிக் கட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் குறித்து போதுமானளவு ஆதாரங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. இப்போது நாங்கள் நம்புகிறோம் இது குறித்த விசாரணைகள் சுதந்திரமாக மேற்கொள்ளப்பட வேண்டும் என.

உலகம் முழுவதும் உள்ள நமது நண்பர்கள் நம்புவது போலவே சுதந்திரமான விசாரணை ஒன்று தான் நம்பிக்கையையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்ப உதவும் என்று நாங்கள் நம்புகிறோம்.

இலங்கையின் மனித உரிமை துஷ்பிரயோகம் குறித்த கடந்த கால விசாரணைகள் வெற்றியளிக்கவில்லை. நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை. இதனால் தான் உலகம் முழுவதுமுள்ள அமைப்புக்கள் சர்வதேச விசாரணையை வேண்டி நிற்கின்றன.

உள்நாட்டில் விசாரணை நீதியான முறையில நடாத்தப்படாத போது அரசியல் வலு நியாயமானதாக இல்லாத போது குற்றம் சாட்டப்பட்ட விடயங்கள் குறித்து விசாரிக்க சர்வதேச விசாரணை ஒன்று அவசியம். இல்லாத போது உள்நாட்டு மோதல்களுக்கு இலங்கையின் மாதிரியை ஏனைய நாடுகளும் பின்பற்ற முனையும் என சர்வதேச நெருக்கடிகளுக்கான குழு சுட்டிக்காட்டியுள்ளது.

மனித உரிமைகள் குறித்து விசாரிக்கவும், காணாமல் போனவர்கள் குறித:து விசாரிக்கவும் என 1991இலிருந்து ஏற்கெனவே இவ்வாறான ஒன்பது விசாரணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டன. அரசாங்கத்தின் தலையீடு, தாமதமான விசாரணை, நற்பெயரை இழந்தமை போன்ற பல்வேறு காரணங்களால் ஆணைக்குழு உறுப்பினர்கள் பலர் தாமாகவே பதவி விலகினர் என சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.

இலங்கையின் விசாரணைக்குழு ஏற்புடையதல்ல என்று மூத்Nதூர் அவையைச் சேர்ந்த டெஸ்மன்ட் டுட்டுவும், லக்தார் பிரகிமியும் தெரிவித:துள்ளனர். அதன்காரணமாக சர்வதேச விசாரணை ஒன்று அவசியம் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

காங்கிரஸின் உறுப்பினர்கள் இது தொடர்பில் ராஜாங்கத் திணைக்களத்திற்கு எழுதியுள்ளமையானது சர்வதேச சமூகத்தின் விருப்பத்தை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. அது தான் பிரித்தானியாவினதும் பெரும் ஈடுபாடாக இருக்க முடியும். நீண்டகால இனப்பிரச்சினைக்கும் ஒரு நிரந்தரத் தீர்வைத் தரக் கூடியதாக இருக்கும். எவ்வாறாயினும் முழு உண்மைகளையும் தெரிந்தும் புரிந்தும் கொண்டாலே சமாதானத்தை எட்டலாம் என நாம் நம்புகிறோம்.

இத்தகைய காரணங்கள் பலவற்றாலும் பாரபட்சமற்ற முறையிலும் ஆரோக்கியமான வகையிலும் சுதந்திரமான சர்வதேச விசாரணை ஒன்று நடாத்தப்பட்டு அதனூடாக போரின் போது என்னநடைபெற்றது என்ற முழு உண்மையும் வெளிக்கொணரப்பட வேண்டும். அது தான் இலங்கையின் நிரந்தரமான சமாதானத்திற்கு ஆதரவாக அமையும்.எனவே அவ்வாறான விசாரணை ஒன்றுக்கு பிரிட்டன் ஆதரவளிக்க வேண்டும் என்று கெட:டக் கொள்கிறோம்.

உங்கள் உண்மையுள்ள

41 பாராளுமன்ற உறுப்பினரும் ஒப்பமிட்டுள்ளனர்.

Yours sincerely,

Lee Scott (Chair)

Virendra Sharma (Vice Chair)

Siobhain McDonagh (Vice Chair)

Simon Hughes (Vice Chair)

Heidi Alexander

Ian Austin

Hazel Blears

Peter Bottomley

Russell Brown

David Cairns

Martin Caton

Katy Clark

Jeremy Corbyn

Stella Creasy

Jon Cruddas

Jim Cunningham

John Cryer

Jim Dowd

Clive Efford

Mike Gapes

Barry Gardiner

Mary Glindon

Robert Halfon

Tom Harris

Margaret Hodge

Sharon Hodgson

George Howarth

David Lammy

Andy Love

John Mann

Stephen McCabe

John McDonnell

Teresa Pearce

Steve Pound

Nick Raynsford

Chris Ruane

Joan Ruddock

Stephen Timms

Emily Thornberry

Gareth Thomas

Keith Vaz

(Press Release from the All Party Parliamentary Group for Tamils)

gtn

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.