Jump to content

karu

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    2069
  • Joined

  • Last visited

  • Days Won

    1

Everything posted by karu

  1. இந்தப் பாராளுமன்ற உறுப்பினர் சில வருடங்களுக்குமுன்னர் லிவர்ப்பூல் பகுதியில் இருந்தார். பின்னர் இலங்கை சென்று பா உ ஆனார். இவரின் தம்பியொருவரும் லண்டனில் வாழ்ந்திருக்கின்றார் எனத் தெரிய வருகின்றது.
  2. உதென்ன இமயமலைப் பிரகடனம்? ஏதோ கரிக்குருவி கைலாசம் போன கதைமாதிரித் தெரியுது.
  3. பேச்சு வார்த்தையில் என்ன பேசப் போகின்றார்கள்என்பது வெளிப்படையாக்கப் படவேண்டும். அதற்கு அரசாங்கமும் பேசப்போகின்றவர்களும் ஒரு கூட்டறிக்கையை வெளிவிடுவது சிறப்பு. அதில் முதலாவதாக இலங்கையில் முதலீடுசெய்யப் போகும் தமிழர்களுக்கு என்ன அரசியல் சார்ந்த உரிமைகள் வழங்கப்படும், அதற்காக வழங்கப்படவுள்ள மாநில சுயாட்சி அமைப்பு எப்படியமையும்? அதிலுள்ள சட்டரீதியான சுதந்திரங்களென்ன என்பனபோன்ற விபரங்கள் அடக்கப்பட வேண்டும். அதில் தமிழ்மக்களின் எதிர்பார்ப்புகள் உள்ளடக்கப்பட்டால் அதனை தமிழர் தரப்பு ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், இரண்டாம் கட்டத்தை நோக்கி நகரலாம். ஆரம்பத்திலேயே பேய்க்காட்டும் தன்மை இருக்குமாயின் வந்து போன செலவைத் தரவேண்டுமென்ற முன்நிபந்தனையுடன் சிங்கள அரசுக்கு குட் பை சொல்ல வழிவகைகள் இருக்க வேண்டும். எதற்கும் விஸாவையும் றிட்டர்ண் ரிக்கற்றையும் முன்கூட்டியே வாங்கிக்கொள்வது நல்லது.
  4. அக்காலத்தில் மிகப் பிரபலமாக இருந்த அந்த அறிஞர் ஓர் அமெரிக்க யூதர். 100 வயதுவரை வாழ்ந்து மறைந்திருக்கிறார். அவர் ஆன்மா சாந்தி பெறட்டும்.
  5. மண் வீழ்ந்த எம் மறத்திகளுக்காக…. தங்கையர்கள் தாருஜா, போன்றோரின் ஞாபகார்த்தமாக லண்டன் ஐபிசி தமிழில் வாசிக்கப்பட்ட இக்கவிதையை மாவீரர் நாளுக்காக இங்கு பதிகிறேன் அன்னை மண்மீட்புக்காய் அணிவகுத்த தங்கையரே இன்னுயிரை ஈந்தீர் எமக்காய் உம் வாழ்வளித்தீர் பொல்லாப் பகையின் புறங்காணப் போரிட்ட மெல்லியலார் நீங்கள் விதிமாற்றப் பாடுபட்டீர் உங்கள் நினைவெம்மை ஒரு போதும் நீங்காது செங்களத்தில் ஆடிய உம் தீரம் மறக்காது நெஞ்சை நிமிர்த்தி நேர் வந்த குண்டேந்த அஞ்சாது நின்றீர் அக்காலம் போனதுவே! எம்மினத்து மாதர் இரும்பொத்த நெஞ்சினர் ஓர் இம்மியளவும் இதயம் பயமறியா வீரத்தாய்மார்கள் விடுதலையைக் காதலித்து ஆரத்தழுவிய எம் அக்காமார் தங்கையர்கள் வாழ்ந்தார்கள் என்ற வரலாறெமக்குண்டு தாழ்ந்தாலும் அன்று தமிழீழத் தாய்மண்ணில் வெற்றிக் கொடிநாட்டி விரட்டிப் பகைதன்னை கொற்றவைகளாகக் குலங்காத்தார் எம் பெண்கள் என்று பெருமிதத்தோ டியம்புதற்குச் செய்திட்ட நன்றி மறக்காது நமக்கும் எம் சந்ததிக்கும். இந்த உலகினிலே ஈழத் தமிழ் பெண்கள் சொந்த மண் மீட்க தூக்கினர் தம் ஆயுதத்தை அந்த மறம் போல அகிலம் முழுவதிலும் எந்த இனப் பெண்ணிடமும் இருக்கவில்லை நெஞ்சிலுரம் என்றடித்துக் கூற எமக்குண்டு யோக்கியதை தங்கை தமிழினியே தாருஜாச் சோதரியே உங்கள் இறப்பெமது உள்ளத்தைத் தாக்கிடினும் பெண்மைக்குதாரணமாய் பெருவீரம் காட்டிய உம் வன்மையும் நெஞ்சுரமும் வரலாற்றில் நிலை நிற்கும் ஆதலினால் எங்கள் அகம் நிறைந்து வாழ்ந்திடுவீர் சாதலுக்கு அஞ்சா உம் சரித்திரத்தை நாம் மறவோம். தோற்று மனஞ்சோர்ந்து துயரடைந்து வீழ்ந்ததெல்லாம் நேற்று, இனியும் நெடுங்காலம் நமக்குண்டு ஆற்றலுண்டு மேலும் அறிவுண்டு வளமுண்டு காற்றிலொன்றும் இன்னும் கரைந்தழிந்து போகவில்லை எங்கள் தாய் மண்ணை ஈழத்தமிழகத்தை பொங்கி யெழுந்து புதுப்பித்துப் போரழித்த நாட்டை நமதாக்கி நமதுயிராம் தாயகத்தை ஆட்டிப்படைக்கும் அயலார்கள் வாய்மூட வெற்றிக் கொடி நாட்டும் வேளை வந்தே தீரும் எவன் என்ன சொன்னாலும் ஈழத்தாய் மண்ணதனை மீட்கும் வரை தமிழன் விழி மூடப்போவதில்லை இன்றில்லா விட்டாலும் என்றோ ஒரு நாளில் எங்கள் தமிழீழம் இனிதே உருவாகும் அந்த நாள் தன்னில் தம் ஆருயிரை ஈந்திட்ட சொந்தங்காள் உம்மைக்கை தூக்கி வணங்குதற்காய் ஆலயங்கள் கட்டி அதிலும்மைப் பூஜித்து தெய்வங்களாக்கி சிரம் தாழ்த்தி நாம்பணிவோம் இன்றுமது கல்லறைகள் இடித்துடைக்கப் பட்டாலும் என்றும் எம் நெஞ்சில் இருப்பீர் எம் தேவதைகாள் என்றுரைத்திவ் அஞ்சலியை இனிதே முடிக்கின்றேன் நன்றே நடக்கும் நமக்கு.
  6. நண்பரே! இன்றுவரை சீமானே தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்துச் செல்லும் ஒப்பற்ற தலைவன் என்பதை ஏற்கிறேன். அவருக்காகக்கவிதை பாடியும் அவரைச் சென்று சந்தித்தும் வந்திருக்கிறேன். ஆனால் தேசியத் தலைவர் விடயத்தில் அவரது நிலைப்பாட்டை ஏற்கமுடியவில்லை. தேசியத்தலைவரின் தியாக வாழ்வை அவரது மகன் பாலச்சந்திரனை முன்னிறுத்தி குறைத்து மதிப்பிடும் சீமானின் கருத்து நியாயமற்றது. அவர் ஒருபாலச்சந்திரனுக்காக மட்டும் வாழவில்லை. முழுத்தமிழ்த் தேசிய இனத்திற்காகவும் வாழ்ந்தார். இயக்கத்தைக் கைவிட்டும் தமிழினத்தை நட்டாற்றில்விட்டும் அவர் போயிருந்தால் அது தியாக வாழ்வாகாது. முதுகில் வேல்பாய்ந்து என்மகன் இறந்திருந்தால் அவனுக்குப் பால்கொடுத்த எனது முலைகளை அறுத்தெறிவேன் என்று வீரச்சபதமெடுத்துப் போர்க்களத்தில் இறந்து கிடந்த தனது மகனைப் பார்க்கச்சென்ற வீராத்தாயின் இனத்தில் பிறந்த தேசியத்தலைவன் ஒருநாளும் தன் இனத்தைக் கைவிட்டுத் தன் உயிரைப் போக்கியிருக்கமாட்டான். எதுவரினும் இயக்கம் அழியாதிருக்க வேண்டுமென்ற ஓர்மம் அவனுக்கு இல்லாமற் போயிருக்காது. ஆனைக்கும் அடிசறுக்கும் என்பதைப்போல சீமானுக்கும் சற்று நாக்குப் பிசகிவிட்டது. அதனைச்சரிசெய்து சுதாரித்துக்கொண்டு சீமான் தமிழின விடுதலையை நோக்கித் தன் தம்பிகளுடன் தொடரட்டும். செல்வி துவாரகா வந்ததும் இணைந்து செயலாற்றட்டும். வைகோ, திருமுருகன் காந்தி போன்ற தமிழ்த்தேசிய ஆர்வலர்களும் இணைவார்கள். காலம் நல்ல வழி காட்டும்.
  7. தலைவரின் இருப்பையோ அவரது புதல்வி துவாரகா மற்றும் மனைவியார் மதிவதனி, பொட்டம்மான் போன்றோரின் இருப்பையோ கேள்விக்குள்ளாக்கி அவர்களின் இருப்பை நம்புபவர்களை நகைப்புக்கிடமாக்குபவர்கள் இவ்வளவு காலமும் எங்கேயிருந்தார்கள் என்று தெரியவில்லை. எங்கள் கண்முன்னால் அவர்கள் மரணித்து வீழ்ந்ததை நிதர்சனமாகக் கண்டோமென்று யாராவது கூறி நானறியவில்லை. அன்றிலிருந்து இன்றுவரை தலைவர் இருக்கிறாரென்று கூறியவர்கள் அதனை உண்மையென்று நம்பி விரைவில் அவர் வெளிப்படுவார் என்கிறார்கள். தலைவருக்கு ஏதோ ஒருநாடு புகலிடமளித்திருக்கிறது என்று கூறுவது எப்படிப் பொறுப்பற்ற செயலாகும். அன்றிலிருந்து இன்றுவரை நான் சீமானை ஆதரிக்கிறேன் ஆனால் சீமான் சொல்வது போல அவர் பாலச்சந்திரனை விட்டுவிட்டுக் கோழையாகப் போயிருக்கமாட்டார் என்பதை ஏற்க முடியாது. ஏனெனினில் தலைவர் தன் குடும்பத்துக்காக மட்டும் உயிர் வாழவில்லை. அவர் முழுத் தமிழ்த் தேசிய இனத்திற்காகவும் வாழ்ந்தார். அனைவரையும் கைவிட்டுத் தன்னுயிரையும் அவர் நீத்திருந்தால் அதுவே பொறுப்பற்ற தன்மை. உயிர் தப்பியிருந்தால் மட்டுமே தமிழினத்தின் மகத்தான தலைவன். காலம் மிகவிரைவில் பதில்சொல்லப் போகிறது. தலைவர் தனது வாரிசையவது விட்டுச் சென்றாரென்ற மதிப்பில் அந்த வாரிசைப் பின்தொடர்வோம். வாழ்க மாவீரர் புகழ்.
  8. எமக்காக வாழ்ந்து எமது நாட்டுக்காகப் போரிட்டுத் தம் இன்னுயிர்களையீந்த மாவீரர்களுக்கு எமது தலைதாழ்ந்த அஞ்சலிகளைத் தெரிவிக்கிறோம். தேசியத்தலைவரும் அவரது எஞ்சிய குடும்பத்தினரும் இவ்வளவு காலமும் ஏன் தங்களை வெளிப்படுத்தவில்லையென்ற கேள்வியைப் பலரும் கேட்கிறார்கள். ஒருவர் அடைக்கலம் தேடி நாடொன்றில் தஞ்சம் புகுந்தால் அதற்கான பெறுபேறுகள் கிடைக்க பத்திலிருந்து பதினைந்து வருடங்கள் எடுக்கலாம். அதிலும் தேசியத்தலைவரைப் போன்றவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் இந்தக்கால வரையறை அதிலும் அதிகமாகவேயிருக்கும். 1951 ஜெனிவா ஒப்பந்தப் பிரகாரம் கையெழுத்திட்ட அகதி அந்தஸ்தை வழங்கும் நாடுகள் இந்த விவகாரங்களை எந்தவொரு நாட்டிடமோஅல்லது ஏஜென்சிகளிடமோ வெளிப்படுத்தாது மிகவும் இரகசியமாகவே பேணிப் பாதுகாக்கும். தேசியத்தவைரும் இதற்கு விதிவிலக்கல்ல அந்த வகையில் அவரும் அவரது குடும்பமும் அவர்கள் தஞ்சமடைந்த நாட்டின் குடியுரிமை விதிகளுக்குட்பட்டுத் தற்போதுதான் வெளிப்பட முடிந்திருக்கின்றது. தாமதத்திற்கான முக்கிய காரணிகளில் இது மிகப்பிரதானமானதாகும். அதைக் கருத்திலெடுத்து நோக்கும் போது இந்தத் தாமதம் நியாயமானதாகவே படுகின்றது. இதுபற்றிய விளக்கங்கள் இன்னும் சில நாட்களில் முழுதாகத் தெரியவரலாம் அதுவரை மக்கள் அதீத அவசரம் காட்டாது இவ்விடயத்தில் பொறுமையோடிருப்பதே சிறந்தது.
  9. புரட்சியாளன் ரோகண விஜேவீராவுக்கு ஏற்பட்ட இறுதி முடிவு மனத்தை நெருடுகின்றது. தமிழர்களையும் சேர்த்துக்கொண்டு அவர் தனது புரட்சியை நகர்த்த முயன்றார் ஆனால் இலங்கையிலிருந்த இனவன்முறைகளும் மக்களிடமிருந்த குரோதவுணர்வும் அத்தகைய ஒரு செம்புரட்சியை வலுப்படுத்த அனுமதிக்கவில்லை. என்ன செய்வது இது இலங்கையின் தலைவிதி. தகவலைப் பதிவிட்ட நுணாவிலானுக்கு நன்றி.
  10. சேமிக்கப்படும் பொருட்களை போலீஸாரோ இராணுவமோ அழித்து எரித்துவிடக் கூடும், பொறுப்போடு அவற்றைப் பாதுகாத்து வைத்து மாவீரர் நாளன்று பயன்படுத்த என்ன வழிமுறைகள் உள்ளனவோ தெரியாது.
  11. தேசியத் தலைவர் அல்லது அவரது புதல்வி அல்லது இருவரும் உயிரோடு இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையில் நானெழுதிய மாவீரர் தின வாழ்த்துச் செய்தியை நகைப்புக்கிடமானதாகக் கருதித் தாங்கள் போட்டுள்ள குறியீட்டுப் பதிவைப் பார்த்தேன்.   இன்னும் சிலநாட்கள்தானுள்ளன, முடிந்தால் உங்கள் கருத்தை விளக்கமாக எழுதுங்கள்.  நகைப்பு கருத்தாகாது.  திடமான நம்பிக்கையிருந்தால் அதனைப் பதிவது சிறப்பு. 

  12. ‘ ஙைஙைஙை ஙைனா ஞைஞைஞை ஞைனா மைமைமைமை மைனா.... ஙேய்...‘ அகத்தியர் நாடி சாஸ்திரம் இதைத் தெளிவாகவும் உறுதியாகவும் மேற்கண்டவாறு எடுத்துரைக்கிறது. 2024 இல் நாமெல்லாம் அம்பேல் தான்.
  13. எமது உயிரினுமினிய தமிழ்த்தேசியத்தை தேசியத்தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களுக்குப்பிறகு இன்று முன்னெடுத்துச் செல்லும் தம்பி சீமான் அவர்களின் பிறந்தநாளுக்கு எமது வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன். வாழ்க தமிழ் வளர்க தமிழ்த்தேசிய வுணர்வு. வெல்க நாம் தமிழர் கட்சிக் கோட்பாடுகள்.
  14. வடகிழக்கில் மழை பெய்து ஊரெங்கும் ஈரலிப்பு ஈரலிப்புக் கூடி பலருக்கும் மூக்கடைப்பு மூக்கடைப்பு அவதிக்குள் அங்கு வேறு கடையடைப்பு.
  15. https://www.facebook.com/photo/?fbid=10161088302041950&set=a.10151018148611950
  16. இலங்கையில் பாலியல் தொழில் அங்கீகரிக்கப் படவில்லை, அதனால் சமூக ஒழுங்கைச் சீர்குலைக்கும் நடவடிக்கையாகவே பாலியல் தொழில் கருதப்படுகின்றது. பாலியல் தொழிலைச் சட்டபூர்வமானதாக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு மும்பாய் போன்ற நகரங்களில் உள்ளதுபோன்று சிவப்பு விளக்குப் பிரதேசங்களில் இத்தொழிலுக்கு அனுமதி வழங்கப்பட்டால் இத்தொழிலை மேற்கொள்பவர்கள் நிம்மதியாகத் தம் வாழ்க்கையை நகர்த்த முடியும். ஆனால் இம்முயற்சியில் ஈடுபட்டுப் பூனைக்கு மணிகட்டுபவர்கள் யார் என்பதே இன்றுள்ள கேள்வி. அதற்கு ஆரம்பப் படியாக கீழ்வரும் கவிதையொன்றைத் தருகிறேன் ”மானம் ஒழுக்கம் எனும் இவையாவையும் மாயப்பதங்களடி - அவை ஊனம்வளர்க்க ஒருபிடியற்றவர்க் குண்மையில் ஏதுக்கடி ஈனத் தொழில்விப சாரமென்போர் பசித் தீயை அடக்குவரோ - அவர் ஞானத்தைத் தூக்கித் தெருவினில் வீசி நலமுற வாழ்ந்திடடி. உண்ண உணவில்லையென்றிடும் போதினில் பெண்மையிங்கேதுக்கடி -கொடு உன்மத்தருள்ள வரையில் உனக்கு உயர்விலை தேறுமடி மண்ணினுட் சென்று மட்காகுமுடலை மடையரெடுக்கட்டுமே -அந்த மன்மதக் குஞ்சுகளின் பணமுந்தன் மடியை நிறைக்கட்டுமே.... ”போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும்.”
  17. இவ்வாறு வன்முறையைத் தூண்டும் சொல்லாடல்களைப் பிரயோகிப்பவர்கள்மீது சட்ட நடவடிக்கை எடுக்க முயலாமல் தமிழ் பாஉ க்கள் என்ன புடுங்குகிறார்கள்? அவர்கள்தான் பெரிய சட்டத்தரணிகளாயிற்றே. ஒருவருக்கு வாய்ப்பூட்டுப் போட்டால் எல்லாம் தானாக நின்றுவிடாதா?
  18. மிக்க நன்றி நிலாமதி. காலம் கடந்துவிட்டது, உலகம் எங்கோ போய்விட்டது ஆனாலும் பிராந்திய வல்லரசு தன்னைச் சுதாரித்துக் கொண்டது.
  19. https://www.google.co.uk/imgres?imgurl=https%3A%2F%2Fresize.indiatvnews.com%2Fen%2Fresize%2Fnewbucket%2F1200_-%2F2023%2F08%2Fchandrayaan-3-5-1691547437.jpg&tbnid=cJLSHrbC4Cr1ZM&vet=12ahUKEwi-lLWblvaAAxXIrycCHQuxAj4QMygKegUIARCUAQ..i&imgrefurl=https%3A%2F%2Fwww.indiatvnews.com%2Fnews%2Findia%2Fchandrayaan-3-update-isro-spacecraft-performes-significant-manoeuvre-closer-to-moon-lunar-surface-2023-08-14-886607&docid=WRXkMNPWYsENMM&w=1200&h=696&q=chandrayaan-3&ved=2ahUKEwi-lLWblvaAAxXIrycCHQuxAj4QMygKegUIARCUAQ சந்திரயானின் வெற்றி மேலைத் திசையினன் அம்புலி சென்று விரைந்து திரும்புகையில் - இங்கு பாலைக்கறந்ததைக் கல்லினில் வார்த்துப் பரமனைத் தேடிநின்றோம் காலங் கடந்தின்று காட்டும் விஞ்ஞானம் கவர்ந்திடப் புத்துயிர்த்தோம்- எம் வாலைப் பருவம் முடிந்தது வாயினும் வான்மதி தாவுகிறோம் எல்லையிலாப் பிரபஞ்ச இலக்கணம் என்னென்று தேடுகையில் - நாம் கல்லில் அபிசேகம் செய்து கண்காணாக் கடவுளைத் தேடிநின்றோம் தொல்லையிலாது சுகமுற வாழத் துறைபல காண்கையிலே -நாம் செல்லக் கதிர்காம யாத்திரை வாயில் செடில்தனைப் பூட்டிநின்றோம் இன்று உதித்த மெய்ஞானத்தினால் எமதிந்திய நாகரிகம்-தான் அன்று புரிந்த சனாதனப் பொய்மைகள் அத்தனையும் உணர்ந்தே வென்றது வான்மதிதன்னையந்தப் பெரு வெற்றியைப் போற்றிடுவோம் நின்று நிமிர்ந்தது தர்மம் மதவெறி நீங்கிடப் பாடிடுவோம் வாழ்க அறிவியல் வாழ்க சமத்துவம் வாழிய வாழியவே வீழ்க மதவெறி வீணர்தம் தீச்செயல் வேற்றுமை நீங்குகவே சூழ்க இவ்வையகமெங்கணும் அன்பு சுடர்க தமிழ் மொழியே தொல்லையகன்று சுதந்திரம் கண்டு சுகிக்க தமிழினமே.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.