Everything posted by karu
-
மாவீரர்கள் திலீபனும் அன்னை பூபதியும்
இன்று தமிழீழத்தின் வீரமங்கை அன்னை பூபதி பாரதத்தின் அலட்சியப் போக்கைக் கண்டித்து உண்ணவிரதமிருந்து தன் வாழ்வை உகுத்த நாள் மாவீரன் திலிபன் உண்ணா நோன்பிருந்து தன வாழ்வை உகுத்து சில மாதங்களுள் அன்னை பூபதியும் காந்தீய அறவழியில் தன் சாத்வீகப் போரைத்தொடர்ந்து ஒரு பயனும் கிட்டாமல் இறந்தார்.அவர்களிருவருக்காகவும் எழுதப்பட்ட கவிதை கீழே. (குறிப்பு- இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் தமிழ்ப் பிரதேசங்களில் அரசின் உதவியோடு வேற்றினத்தவர்கள் குடியேற்றப்பட்டதைத் தடுக்குமாறு கூறியே உண்ணவிரதம் பிரதானமாகச் செய்யப்பட்டது). திலீபனின் உண்ணா விரதம் தீயிலுடலை எரிக்கவா - கொடுந் தேளெனைக் கொட்டச் சிரிக்கவா காயும் வயிற்றில் மரிக்கவா - என்றன் கண்களைக் குத்திக் கெடுக்கவா - ஈழத் தாயுன்றன் வேதனை தீர்க்கவே - எதும் தாங்குவன் நானெனக் கூறியே பாயும் புலி எம் திலீபனும் - பெரும் பட்டினிப் போரைத் தொடங்கவே இந்தியச் சோதரர் இஃதினை எதிர்பார்த்திருக்காத நிலைமையால் - தங்கள் முந்தைய வாக்குறுதி தனை - விட்டு மோசங்கள் செய்யத் தொடங்கினர் சிந்தி இரத்தத்தினால் செய்த - எங்கள் தேச விடுதலைப் போரினைத் - தங்கள் சொந்த நலன்களைப் பேணவே சொதப்பிடலாமென எண்ணினர் நாட்கள் கடந்தனவாயினும் - எங்கள் நன்மைகளுக் கொரு காப்பிலை ஆட்களைக் கொண்டு வந்தெம் நிலம் - தனில் ஆயிரமாய்க் குடியேற்றலும் சாக்குச் சமாதானம் கூறலும் சரிவரும் யாவுமென்றெத்தலும் - எனப் போக்கினர் காலம் திலீபனோ - தன்றன் பொன்னுடல் தேயத் தொடங்கினான் மாய்வதொன்றே தன் கடன் இனி - என்று மன்னவன் மண்ணின் விடுதலைத் தீயை விழுங்கிக் கிடந்தனன் - ஈழ தேசம் அழுது துடித்தனள் பாயும் புலி பசும் புல்லினை - தன்றன் பட்டினி போக்கப் புசிக்குமோ - அட வாயில் வயிற்றில் விடுதலைப் பசி வாட்டத் துடித்தது அவனுயிர் காந்தி பிறந்த பெருநிலம் - புத்தன் கருணை உரைத்த உயர் நிலம் - பச் சோந்திகளின் புதரானதால் - எங்கள் சோகத்தை யாரும் மதித்திலர் ஏந்தல் திலீபன் இறந்திடில் - எமக்(கு) என்ன எனத் திமிர் கொண்டுமே சேர்ந்து இலங்கை அரசுடன் - சதி செய்தனர் எம்மை ஒடுக்கவே நீருமருந்த மறுத்துமே - கொடு நீசர்கள் நெஞ்சிலுறுத்தவே - இந்தப் பாரினில் பட்டினிப் போர் செய்த - எங்கள் பாலகன் தன்னுயிர் நீத்தனன் ஊரெங்கும் வேதனை சூழ்ந்தது - கொடி யோரின் சொரூபம் தெரிந்தது - நெஞ்சில் ஈரமில்லாதவரோடினிக் - கதை ஏதென ஈழம் தெளிந்தனள் அன்னை பூபதி இன்னுயிர் ஈந்த திலீபனின் - பின் எதற்கினி வாழ்வெனக் கென்றுமே தன்னுயிர் நீத்திடு நோக்குடன் - ஒரு தாய் எழுந்தாள் அந்த நாளிலே அன்னை அவள் பெயர் பூபதி - தன் ஐம்பத்தியாறு வயதிலே உன்னி விடுதலைக் காகவே - தன் உணவை மறுத்தனள் சாகவே பூபதி வாழ்வும் முடிந்தது - ஈழ பூமியிற் சோகம் கவிந்தது சேய் பதினாயிரம் சேர்ந்திட - மறச் சேனை பெருகிச் சிறந்தது வாபதில் சொல்கிறோம் என்று - நின்றிட்ட வானர சேனையிற் பாய்ந்தது தாயவள் காளி விழித்தனள் - இந்தத் தாரணி ஆடச் சிரித்தனள்
-
தணலை மூட்டிய தமிழ்க் கவி வாணன்
ஈழ மண்ணினதும் மக்களினதும் விடுதலைக்காகக் களத்தில் நின்று புரட்சிக்கனல் கக்கிய புதுவையை முகநூலில் சிலர் இன்று நினைவு கூர்ந்ததால் அவரைப் பற்றி முன்பொருகால் நானெழுதிய இந்தக் கவிதையைப் பதிவிட்டேன். அதனை யாழிலும் பதிலிடுகிறேன். தணலை மூட்டிய தமிழ்க் கவி வாணன் புதுவையென்னும் புகழுக்குரியவன் புனிதவேள்விக் கவிகளியற்றுவோன் எதுகை மோனை இலக்கணச் சாத்திரம் எதிலுங் கட்டுப் படாதவன் ஆயினும் வதுவை செய்து கவிமகள் தன்னையே வாழ்வு முற்றும் அவட்கென வாழ்ந்தவன் மதுவைத் தன்றன் தமிழிற் கலந்தனன் மாந்தி வீழ்ந்து மயங்கினர் ஆயிரம். அகவை ஐம்பது ஆனது அவன் கவிக்(கு) ஆயினும் பதினாறின் இளமையாள் தகைமையால் தமிழ் ஈழமறவரின் தழலெரிந்திடு நெஞ்சினை மூட்டினாள் பகைமை தோற்றது பாயும் மறவரின் படை நடந்தது பாரதம் சோர்ந்தது இகமெலாம் தமிழ் வீரம் தெரிந்தது ஈழதேசம் உயிர்த்து எழுந்தது. நீரிலே நெருப்பேற்றிய எங்களின் நேரிலாத் தலைவன் ஒளிர் சூரியன் போரிலேற்றிய வெற்றிச் சுடர்களைப் பொன்னெழுத்திற் புதுவை பொறித்ததால் தேரிலேறிய தீந்தமிழாளவள் திலகமாகத் திகழ அவன் கவி பாரிலே தமிழீழப் பரணியைப் பாட வேண்டியதில்லை யென்றானது. காற்றையே கயிறாக முறுக்கியும் கனலை நெஞ்சில் அடக்கியும் தங்களின் ஆற்றல் யாவும் விடுதலைக்கேயெனும் அணி வகுத்த மறவரின் நெஞ்சிலே ஏற்றி ஏற்றி உணர்வினை ஊட்டிய இரத்தினத்துரை எம் கவி வாணனைப் போற்ற நாவிற் புகழ்மொழி ஆயிரம் பொய்யிலாதவர் நெஞ்சிலுதிக்குமாம். வாழ்வு வேறு கவிக்களம் வேறெனும் வகை பிரித்த நடிப்புச் சுதேசியாய் தாழ்பிடித்து உயர்ந்திடத் தன்னிலை சாகஸங்கள் நடாத்த அறிந்திலான் கூழ் குடித்து அரைவயிற்றோடுதன் குடும்ப மோடினும் ஈழவிடுதலை நாளை நோக்கி நலிந்தவப் பெற்றியான் நமது தேசக் கவிதனைப் போற்றுவோம்! வேறு: புதுவைக் கவி எம் ரத்தினமே புகழ்மிக்குயர் நட் சத்திரமே எதுகைக்கொரு வெண் நித்திலமே எழுசப்த சுரத்தின் நிலமே வெல்லற்கரிய தமிழினிமை மேவக் கவியால் தளையிடையே அல்லல் படுமெம் நிலையுரைத்த சொல்லேருழவா சீராளா எழுத்தாம் அம்பை மழையாக்கி எறியும் வில்லை நாவாக்கி ஒளித் தூறல்களால் மானுடத்தின் உயர்விற் குறிவைத்துரமூட்டி புழுத்தே வழியும் சமுதாயப் பொல்லா நாற்றச் சிணிபோக்கி முழுத் தாரணியும் கழுவுண்ண முழுக்காட்டினை நின் கவியாலே! என்றும் நின்றன் இனியகவி ஈழமண்ணில் நிலை நின்றே நின்று மறவர்க்(கு) உரம் ஊட்டும் நின்றன் புகழைப் பறைசாற்றும். முற்றும்.
-
உங்கள் பிள்ளைகளை ஆயுதம் ஏந்தும் போர்க்களத்திற்கு அனுமதிப்பீர்களா? புலிகளின் தலைவருடன்
இத்தகைய தியாக வாழ்வு வாழ்ந்து இலட்சியத் தீயில் தன்னையும் தனது மொத்தக் குடும்பத்தையும் ஆகுதியாக்கிய தேசியத்தலைவனின் நினைவுசுமந்து எமது சந்ததி தொடர்ந்து எம் இலட்சியத்தை முன்கொண்டு செல்ல யார்யார் பாடுபடுகிறார்களோ அவர்களின் கைகளைப் பலப்படுத்த வேண்டும்.
-
மாவீரர் தினம் 2015 நினைவுகளும், நிகழ்வுகளும்
கடந்த மாவீரர் தினத்தின்போது ஐபிசி தமிழ் ரிவியில் ஒளிபரப்பான ‘மாவீரம் போகவில்லை‘ என்ற தலைப்பிலான கவியரங்க ஒளிப்பதிவு இருந்தால் யாராவது தயவு செய்து போட முடியுமா?
- மண் வீழ்ந்த எம் மறத்திகளுக்காக….
-
மண் வீழ்ந்த எம் மறத்திகளுக்காக….
மண் வீழ்ந்த எம் மறத்திகளுக்காக…. அன்னை மண்மீட்புக்காய் அணிவகுத்த தங்கையரே இன்னுயிரை ஈந்தீர் எமக்காய் உம் வாழ்வளித்தீர் பொல்லாப் பகையின் புறங்காணப் போரிட்ட மெல்லியலார் நீங்கள் விதிமாற்றப் பாடுபட்டீர் உங்கள் நினைவெம்மை ஒரு போதும் நீங்காது செங்களத்தில் ஆடிய உம் தீரம் மறக்காது நெஞ்சை நிமிர்த்தி நேர் வந்த குண்டேந்த அஞ்சாது நின்றீர் அக்காலம் போனதுவே! எம்மினத்து மாதர் இரும்பொத்த நெஞ்சினர் ஓர் இம்மியளவும் இதயம் பயமறியா வீரத்தாய்மார்கள் விடுதலையைக் காதலித்து ஆரத்தழுவிய எம் அக்காமார் தங்கையர்கள் வாழ்ந்தார்கள் ஓர்கால் வரலாறெமக்குண்டு தாழ்ந்தாலும் அன்று தமிழீழத் தாய்மண்ணில் வெற்றிக் கொடிநாட்டி விரட்டிப் பகைதன்னை கொற்றவைகளாகக் குலங்காத்தார் எம் பெண்கள் என்று பெருமிதத்தோ டியம்புதற்குச் செய்திட்ட நன்றி மறக்காது நமக்கும் எம் சந்ததிக்கும் இந்த உலகினிலே ஈழத் தமிழ் பெண்கள் சொந்த மண் மீட்க தூக்கினர் தம் ஆயுதத்தை அந்த மறம் போல அகிலம் முழுவதிலும் எந்த இனப் பெண்ணிடமும் இருக்கவில்லை நெஞ்சிலுரம் என்றடித்துக் கூற எமக்குண்டு யோக்கியதை தங்கை தமிழினியே தாருஜாச் சோதரியே உங்கள் இறப்பெமது உள்ளத்தைத் தாக்கிடினும் பெண்மைக்குதாரணமாய் பெருவீரம் காட்டிய உம் வன்மையும் நெஞ்சுரமும் வரலாற்றில் நிலை நிற்கும் ஆதலினால் எங்கள் அகம் நிறைந்து வாழ்ந்திடுவீர் சாதலுக்கு அஞ்சா உம் சரித்திரத்தை நாம் மறவோம். தோற்று மனஞ்சோர்ந்து துயரடைந்து வீழ்ந்ததெல்லாம் நேற்று, இனியும் நெடுங்காலம் நமக்குண்டு ஆற்றலுண்டு மேலும் அறிவுண்டு வளமுண்டு காற்றிலொன்றும் இன்னும் கரைந்தழிந்து போகவில்லை எங்கள் தாய் மண்ணை ஈழத்தமிழகத்தை பொங்கி யெழுந்து புதுப்பித்துப் போரழித்த நாட்டை நமதாக்கி நமதுயிராம் தாயகத்தை ஆட்டிப்படைக்கும் அயல்நாட்டான் வாய்மூட வெற்றிக் கொடி நாட்டும் வேளை வந்தே தீரும் எவன் என்ன சொன்னாலும் ஈழத்தாய் மண்ணதனை மீட்கும் வரை தமிழன் விழி மூடப்போவதில்லை இன்றில்லா விட்டாலும் என்றோ ஒரு நாளில் எங்கள் தமிழீழம் இனிதே உருவாகும் அந்த நாள் தன்னில் தம் ஆருயிரை ஈந்திட்ட சொந்தங்காள் உம்மைக் கை தூக்கி வணங்குதற்காய் ஆலயங்கள் கட்டி அதிலும்மைப் பூஜித்து தெய்வங்களாக்கி சிரம் தாழ்த்தி நாம்பணிவோம் இன்றுமது கல்லறைகள் இடித்துடைக்கப் பட்டாலும் என்றும் எம் நெஞ்சில் இருப்பீர் எம் தேவதைகாள் என்றுரைத்திவ் அஞ்சலியை இனிதே முடிக்கின்றேன் நன்றே நடக்கும் நமக்கு.
-
வீரம் பிறந்ததடா....
வீரம் பிறந்ததடா.... வீரம் பிறந்ததடா தமிழ் ஈழமண் மீதினிலே - வரி வேங்கை எழுந்ததடா வல் வெட்டித் துறையினிலே ஆரத்தில் ஆல விடத்தினைக் கட்டிய ஆண்மைக் குமரனடா - பெரும் ஆபத்தையே பனியாக மதித்திட்ட ஆதித்ய சோதியடா சீலத்தில் வாய்மையில் போர்ப்படை கட்டிய சிந்தனையாளனடா - எங்கள் செந்தமிழன் பிரபாகரன் என்கின்ற செல்வக் குமரனடா இந்தியச் சூதினை எட்டியுதைத்திட்ட எங்கள் தலைவனடா - தமிழ் விந்தியந் தொட்டுக் குமரி வரையெனும் விதியை மறுத்தவன் டா செந்தமிழ் ஈழ மணித்திரு நாட்டைச் செதுக்கிய சிற்பியடா - ரத்தம் சிந்திச் சிந்தித் தமிழ் மானத்தைக் காத்திடச் சீறிய வேங்கையடா. குட்டக் குனிந்த தமிழன் நிமிர்ந்து குதறிட வைத்தவன் டா - அட எட்டுத்திசையிலும் ஈடிணையற்ற - எம் ஈழத்தலைமகன் டா துட்டகெமுனு தொடக்கிவைத்திட்ட துயரை ஒழித்தவன் டா - நாம் பட்டது போதுமென்றார்த்து எதிரியில் பாய்ந்திட்ட வேங்கையடா ஆயிரமாயிரம் வேங்கைகள் சேர்த்து அணிநடை செய்தவன் டா - உயிர் மாய்வதெம் மண்ணினுக்காய் என வாழும் மறவர் தலைவனடா பேய்களுலாவிடு காடதுவாக்கிய பேரின வாதிகளின் - தலை சாய எம் மண்ணினில் வீர பராக்ரம சாகசம் செய்தன் டா எத்தனை கோடி துயர் வந்தபோதும் இடிந்து விடாதவன் டா - தன்னை மொய்த்த பகைதனை ஈயெனவோர் பெரு மூச்சிற் கலைத்தவன் டா இத்தரை மீதிற் கரந்தடி வித்தையில் ஈடிணையற்றவன் டா - எங்கள் சொத்தென தாயக ஈழமண் தன்னிற் சுதந்திரம் கேட்டவன் டா சேய்கள் பல்லாயிரம் சேர்ந்தனர் - சூழ்ந்திட்ட தீமையழிந்தடா - அவர் வாய்மையில் வீர வழிமுறையில்-தமிழ் மாண்பு சிறந்ததடா ஆயதங்கையில் அறவழி நெஞ்சிலென்(று) ஆர்த்த மறவர்களால் - துயர் போயின போயின என்று தமிழ் மகள் துள்ளி நிமிர்ந்தாளடா இன்று தளர்;ந்தது ஈழ நிலம் அதை என்னென்று சொல்வோமடா – தன் கன்றுகள் வீழ்ந்தன என்று தமிழ்மகள் கண்ணீரில் தோய்ந்தாளடா என்று எம் தாழ்நிலை நீங்குமென்றே துடித்(து) ஏங்கிடும் வாழ்வினிலே – ஒளி ஏற்றிடும் நாள் வெகு தூரமிலை என எண்ணி நிமிர்வோமடா. - யுகசாரதி -
-
சிந்தனைக்கு சில படங்கள்...
- சிந்தனைக்கு சில படங்கள்...
https://www.facebook.com/lankasri/photos/a.551134808245322.141565.176642042361269/994362327255899/?type=1- சிந்தனைக்கு சில படங்கள்...
அது கழுதையில்லை கங்காரு- சரித்திர நாயகன் தியாகதீபம் திலீபன்
திலீபனின் உண்ணா விரதம் (யுகசாரதியின் ஈழத்தாய் சபதத்திலிருந்து) தீயிலுடலை எரிக்கவா - கொடுந் தேளெனைக் கொட்டச் சிரிக்கவா காயும் வயிற்றில் மரிக்கவா - என்றன் கண்களைக் குத்திக் கெடுக்கவா தாயுன்றன் வேதனை தீர்க்கவே - எதும் தாங்குவன் நானெனக் கூறியே பாயும் புலி எம் திலீபனும் - பெரும் பட்டினிப் போரைத் தொடங்கவே இந்தியச் சூதர்கள் இஃதினை எதிர்பார்த்திருக்காத நிலைமையால் - தங்கள்; முந்தைய வாக்குறுதி தனை - விட்டு மோசங்கள் செய்யத் தொடங்கினர் சிந்தி இரத்தத்தினால் செய்த - எங்கள் தேச விடுதலைப் போரினைத் - தங்கள் சொந்த நலன்களைப் பேணவே சொதப்பிடலாமென எண்ணினர் நாட்கள் கடந்தனவாயினும் - எங்கள் நன்மைகளுக் கொரு காப்பிலை ஆட்களைக் கொண்டு வந்தெம் நிலம் - தனில் ஆயிரமாய்க் குடியேற்றலும் சாக்குச் சமாதானம் கூறலும் சரிவரும் யாவுமென்றெத்தலும் - எனப் போக்கினர் காலம் திலீபனோ - தன்றன் பொன்னுடல் தேயத் தொடங்கினான் மாய்வதொன்றே தன் கடன் இனி - என்று மன்னவன் மண்ணின் விடுதலைத் தீயை விழுங்கிக் கிடந்தனன் - ஈழ தேசம் அழுது துடித்தனள் பாயும் புலி பசும் புல்லினை - தன்றன் பட்டினி போக்கப் புசிக்குமோ - அட வாயில் வயிற்றில் விடுதலைப் பசி வாட்டத் துடித்தது அவனுயிர் காந்தி பிறந்த பெருநிலம் - புத்தன் கருணை உரைத்த உயர் நிலம் - பச் சோந்திகளின் புதரானதால் - எங்கள் சோகத்தை யாரும் மதித்திலர் ஏந்தல் திலீபன் இறந்திடில் - எமக்(கு) என்ன எனத் திமிர் கொண்டுமே சேர்ந்து இலங்கை அரசுடன் - சதி செய்தனர் எம்மை ஒடுக்கவே நீருமருந்த மறுத்துமே - கொடு நீசர்கள் நெஞ்சிலுறுத்தவே - இந்தப் பாரினில் பட்டினிப் போர் செய்த - எங்கள் பாலகன் தன்னுயிர் நீத்தனன் ஊரெங்கும் வேதனை சூழ்ந்தது - கொடி யோரின் சொரூபம் தெரிந்தது - நெஞ்சில் ஈரமில்லாதவரோடினிக் - கதை ஏதென ஈழம் தெளிந்தனள அன்னை பூபதி இன்னுயிர் ஈந்த திலீபனின் - பின் எதற்கினி வாழ்வெனக் கென்றுமே தன்னுயிர் நீத்திடு நோக்குடன் - ஒரு தாய் எழுந்தாள் அந்த நாளிலே அன்னை அவள் பெயர் பூபதி - தன் ஐம்பத்தியாறு வயதிலே உன்னி விடுதலைக் காகவே - தன் உணவை மறுத்தனள் சாகவே பூபதி வாழ்வும் முடிந்தது - ஈழ பூமியிற் சோகம் கவிந்தது சேய் பதினாயிரம் சேர்ந்திட - புலிச் சேனை பெருகிச் சிறந்தது வாபதில் சொல்கிறோம் என்று - இந்திய வானர சேனையிற் பாய்ந்தது தாயவள் காளி விழித்தனள் - இந்தத் தாரணி ஆடச் சிரித்தனள்- உங்களுக்கு தெரியுமா?
இது நல்ல தொரு பகுதி ஆனால் கூடியவரை சுருக்கமாகத் தாருங்கள். அதிகம் வாசிக்கப் போனால் அலுப்படிக்கிறது.- இந்தியப் படை வருகையும் பனிரண்டு புலித்தலைவர்களின் மறைவும்.
இந்தியப் படை வருகை துட்டக்குரங்கினைச் சிட்டுக்குருவிக்குக் கட்டிவைத்தே பெரும் சாதனையை எட்டிவிட்டோமுயர் நோபல் பரிசெமக்(கு) ஏற்புடைத்தாமென எண்ணினரால் வெட்டிப் பிடுங்கிய வீறாப்பில் எங்களை வீழ்த்திடலாமென்ற நோக்குடனே துட்டப் படைகளை ஏவினர் ஈழம் துயரடைந்தாள் எனில் சோர்வடையாள் பாரதச் சூதர்கள் வானரசேனை படுத்திய பாடுகள் ஒன்றிரண்டோ நேரெதிர் கொண்ட வியாக்கிர சேனை நிகழ்த்திய சாதனை ஒன்றிரண்டோ ஆதரவற்ற தமிழினம் மீது அமைதிப் படையெனும் போர்வையிலே காதகர் செய்த பழிகளை மீட்பதில் காண்பதென்ன அதை விட்டிடுவோம் பன்னிரண்டு புலித்தலைவர்களின் மறைவு (வேறு) ஆயுதந் தனைக்கொடுத்தே - அந்த அமைதியைக் கெடுத்திடு;ம் படைகளிடம் சேய்கள் தம் பணி முடித்தார் - சிலர் திருமணம் புரிந்து தம் வாழ்வமைத்தார் ஆயினும் இழி மனத்தோர் - அந்த அருந்தவப் புதல்வரை பழி முடிக்க ஆயிரம் சதி புரிந்தார் - அதில் ஆறிரு வேங்கைகள் உயிர் கொடுத்தார் வங்கத்துக் கடற் பரப்பில் - அந்த வரிப்புலிக் குருளைகள்வருகையிலே சிங்களக் கடற்படையைத் - தம் சினேகிதரென நினைந்தருகில் வர இங்கிதம் சிறிதுமிலார் - அந்த இழி குணத்தோர் தங்கள் பழி முடிக்க தங்கங்கள் தனைப் பிடித்தார் - தாய் தமிழவள் கலங்கிட விலங்குமிட்டார் காடையர் தலைவனவன் - எங்கள் கண்மணிகள் தனைக் கடத்தித் தன்றன் நாடதன் தலை நகரில் வதை நடத்திடு நான்காம் மாடியெனும் கூடத்தில் கொடுமை செய்ய மனம் குறித்து விட்டான் இதைக் குறிப்பறிந்தே தேடினுங் கிடைக்காத - எங்கள் தேயத்துப் பன்னிரு வன்னியரும் மாய்வதில் உறுதிகொண்டார் - நச்சு மருந்தினை அருந்தித்தம் உயிர் துறந்தார் சேய்களை இழந்து நின்றாள் - அன்னை திரும்பவும் தலைமுடி அவிழ்த்து நின்றாள் நாய்தனை நிச்சயித்துத் - தன்றன் நலன் நிறைவாழ்வுக்குத் தீங்கு செய்த பேயெனப் பாரதத்தை - அந்தப் பேதை தன் மனதினில் நினைந்தழுதாள் ஈழத்தாய் குமுறல் (வேறு) பாதகியே துர்க்குணத்துப் பார் அதம் செய் நச்சு முலைப் பூதகியே நீ திரும்பிப்போ - நிலை ஏதுமற்று வாடுமெமை ஏய்த்து விட வந்திருக்கும் காதகியே நீ திரும்பிப் போ ஆதரவற்றே யுலகில் அன்னையென்று உன்னையெண்ண தீது செய்தாய் நீ திரும்பிப்போ - உயர் நீதி செய்வாயென்றிருக்க நீசரோடு கட்டிவைக்கச் சூது செய்தாய் நீ திரும்பிப்போ (வேறு) உள்ளங் குமுறுதடா - மக்காள் உடன் செயல் படுவீர் கள்ளனைக் கட்டு என்றே - என்னைக் கண்டித்துச் சொல்லுகிறார் துள்ளித் திரிந்தெனது - மக்காள் சுதந்திர வாழ்வை அள்ளி அனுபவிக்க - இவர் அனுமதியாராம் கால் கட்டுப் போடுகிறார் - என்றன் கன்னியழிப் பேனோ ஆர் கெட்டுப் போனாலும் - நான் அசைந்திடுவேனோ சீர் கெட்டு வாழ்விழந்த - அந்தச் சிறுக்கி மூத்தவள் போல் பேர் கெட்டுப் போவேனோ - என் பெற்றி மறப்பேனோ அப்பன் எனக்களித்த - என்றன் அரிய சொத்துக்களை குப்பையில் போடுவனோ - பெருங் குழியில் வீழ்வேனோ துப்பிட ஊர் உலகம் - தன்றன் தூய்மையைத் தானிழந்தே - அவள் வைப்பாட்டியானது போல் என்றன் வாழ்வை இழப்பேனோ துடித்து வாழுகிறார் - என்றன் சுவாலைக் கண்மணிகள் நடித்து வாழுகிறார் - அந்த நர்த்தகியின் புதல்வர் இடித்து எம்மரபை - அவர் இங்கிலீஸ் பேசுகிறார் படித்தும் என் புதல்வர் - தங்கள் பாசை மறக்கவில்லை மண்ணை இழந்து விட்டால் - சுய மாண்பெனக் குண்டாமோ கண்ணைக் கெடுத்து விட்டே - நான் காட்சி வரைவதுவோ பெண்ணைக் கொடுத்து விட்டால் - தம் பிரச்சினை தீர்ந்ததென்றே எண்ணினரோ மக்காள் - நாம் இளித்த வாயர்களோ என்று துடித்ததடா - நம் ஈழத்து அன்னையின் வாய் கன்றெனத் துள்ளி வந்தான் - அந்தக் கன்னித் தமிழ்ப் புதல்வன் கொன்றிடும் போர் முனைப்பே - அன்னை கொள்கையென்றே நினைந்தோர் அன்று உணர்ந்தனராம் - அவள் அகிம்சைத்தத்துவத்தை திலீபனின் உண்ணா விரதம் (வேறு) தீயிலுடலை எரிக்கவா - கொடுந் தேளெனைக் கொட்டச் சிரிக்கவா காயும் வயிற்றில் மரிக்கவா - என்றன் கண்களைக் குத்திக் கெடுக்கவா தாயுன்றன் வேதனை தீர்க்கவே - எதும் தாங்குவன் நானெனக் கூறியே பாயும் புலி எம் திலீபனும் - பெரும் பட்டினிப் போரைத் தொடங்கவே இந்தியச் சூதர்கள் இஃதினை எதிர்பார்த்திருக்காத நிலைமையால் - தங்கள்; முந்தைய வாக்குறுதி தனை - விட்டு மோசங்கள் செய்யத் தொடங்கினர் சிந்தி இரத்தத்தினால் செய்த - எங்கள் தேச விடுதலைப் போரினைத் - தங்கள் சொந்த நலன்களைப் பேணவே சொதப்பிடலாமென எண்ணினர் நாட்கள் கடந்தனவாயினும் - எங்கள் நன்மைகளுக் கொரு காப்பிலை ஆட்களைக் கொண்டு வந்தெம் நிலம் - தனில் ஆயிரமாய்க் குடியேற்றலும் சாக்குச் சமாதானம் கூறலும் சரிவரும் யாவுமென்றெத்தலும் - எனப் போக்கினர் காலம் திலீபனோ - தன்றன் பொன்னுடல் தேயத் தொடங்கினான் மாய்வதொன்றே தன் கடன் இனி - என்று மன்னவன் மண்ணின் விடுதலைத் தீயை விழுங்கிக் கிடந்தனன் - ஈழ தேசம் அழுது துடித்தனள் பாயும் புலி பசும் புல்லினை - தன்றன் பட்டினி போக்கப் புசிக்குமோ - அட வாயில் வயிற்றில் விடுதலைப் பசி வாட்டத் துடித்தது அவனுயிர் காந்தி பிறந்த பெருநிலம் - புத்தன் கருணை உரைத்த உயர் நிலம் - பச் சோந்திகளின் புதரானதால் - எங்கள் சோகத்தை யாரும் மதித்திலர் ஏந்தல் திலீபன் இறந்திடில் - எமக்(கு) என்ன எனத் திமிர் கொண்டுமே சேர்ந்து இலங்கை அரசுடன் - சதி செய்தனர் எம்மை ஒடுக்கவே நீருமருந்த மறுத்துமே - கொடு நீசர்கள் நெஞ்சிலுறுத்தவே - இந்தப் பாரினில் பட்டினிப் போர் செய்த - எங்கள் பாலகன் தன்னுயிர் நீத்தனன் ஊரெங்கும் வேதனை சூழ்ந்தது - கொடி யோரின் சொரூபம் தெரிந்தது - நெஞ்சில் ஈரமில்லாதவரோடினிக் - கதை ஏதென ஈழம் தெளிந்தனள் அன்னை பூபதி இன்னுயிர் ஈந்த திலீபனின் - பின் எதற்கினி வாழ்வெனக் கென்றுமே தன்னுயிர் நீத்திடு நோக்குடன் - ஒரு தாய் எழுந்தாள் அந்த நாளிலே அன்னை அவள் பெயர் பூபதி - தன் ஐம்பத்தியாறு வயதிலே உன்னி விடுதலைக் காகவே - தன் உணவை மறுத்தனள் சாகவே பூபதி வாழ்வும் முடிந்தது - ஈழ பூமியிற் சோகம் கவிந்தது சேய் பதினாயிரம் சேர்ந்திட - புலிச் சேனை பெருகிச் சிறந்தது வாபதில் சொல்கிறோம் என்று - இந்திய வானர சேனையிற் பாய்ந்தது தாயவள் காளி விழித்தனள் - இந்தத் தாரணி ஆடச் சிரித்தனள்.- பன்னிரு வேங்கைகளின் 25ம் ஆண்டு நினைவு நாள்
[size=5]பன்னிரு வேங்கைகளின் மறைவு[/size] ஆயுதந்தனைக்கொடுத்தே -அந்த அமைதியைக் கெடுத்திடும் படைகளிடம் சேய்கள் தம் பணி முடித்தார் – சிலர் திருமணம் புரிந்து தம் வாழ்வமைத்தார் ஆயினும் இழி மனத்தோர் – அந்த அருந்தவப் புதல்வரைப் பழிமுடிக்க ஆயிரம் சதி புரிந்தார் – அதில் ஆறிரு வேங்கைகள் உயிர் கொடுத்தார். வங்கத்துக் கடற் பரப்பில் - அந்த வரிப்புலிக் குருளைகள் வருகையிலே சிங்களக் கடற்படையை – தம் சினேகிதரென நினைந்தருகில் வர இங்கிதம் சிறதுமிலார் – அந்த இழிகுணத்தோர் தங்கள் பழிமுடிக்க தங்கங்கள் தனைப் பிடித்தார் – தாய் தமிழவள் கலங்கிட விலங்குமிட்டார். காடையர் தலைவனவன் - எங்கள் கண்மணிகள் தனைக் கடத்தித் தன்றன் நாடதன் தலைநகரில் - வதை நடத்திடு நான்காம் மாடியெனும் கூடத்தில் கொடுமை செய்ய – மனம் குறித்து விட்டான் அதைக் குறிப்பறிந்தே தேடினுங் கிடைக்காத - எங்கள் தேயத்துப் பன்னிரு வன்னியரும் மாய்வதில் உறுதி கொண்டார் – நச்சு மருந்தினை அருந்தித்தம் உயிர் துறந்தார் சேய்களை இழந்து நின்றாள் - அன்னை திரும்பவும் தலைமுடி அவிழ்த்து நின்றாள் நாய்தனை நிச்சயித்துத் - தன்றன் நலன் நிறை வாழ்வுக்குத் தீங்கு செய்த பேயெனப் பாரதத்தை அந்தப் பேதை தன் மனதினில் நினைந்தழுதாள் -யுகசாரதியின் ஈழத்தாய் சபதத்திலிருந்து- http://www.thamilarivu.com- இன்று ஆடிப்பிறப்பு
- மிக் 27 தமிழீழ விமானப்படையினரால் சுட்டுவீழ்த்தப்பட்டது
இங்கு பத்தி பத்தியாக எழுதுகிறவர்கள் ஏன் அந்தப் பரபரப்புப் பத்திரிகையில உள்ள விசயத்தைச் சுருக்கமாகத்தரக்கூடர்து. இதிலிருந்தே தெரியுது இதுக்குள்ள ஏதோ பிசினஸ் நோக்ம் இருக்குதெண்டு. பேப்பரை வாங்கிப் பார்க்கட்டுமெண்டு விட்டிடடினம்.- மிக் 27 தமிழீழ விமானப்படையினரால் சுட்டுவீழ்த்தப்பட்டது
உதென்ன? தாங்கள் வேணுமெண்டு விழுத்தயில்ல ஓட்டோமெற்றிக் டிற்ரெக்ரெர்ஸ் அடிச்சு விழுத்திப்போட்டுது எண்டு சொல்லியினம். ஏதாவது ஒப்பந்தத்த இன்னும் நாங்கள் மீறயில்ல எல்லைகக்குள்ள வந்தது உங்கட பிழை எண்டமாதிரித் தொனிக்குது. உந்த விலகிப் போன மந்திரிமார் சொல்லுறதெல்லாம் சரிதானோ?- மிக் 27 தமிழீழ விமானப்படையினரால் சுட்டுவீழ்த்தப்பட்டது
நான் கொஞ்ச நாளாப் பெரும் விரகதியிலி இருந்த நான். கப்பலையெல்லாம தாட்கிறாங்கள் எண்டவுடனே. ஏதோ வரவேண்டியது வந்து சேர்ந்திற்றுது போல கிடக்குது. கிழக்கைப் பிடிச்ச பெருமைபேசினவையளுக்கு இனித்தான் ஓடிவெளிக்கப் போகுது. விசயம் வேற எங்கேயோ இருந்திருக்கு எண்டிறது. ஏதோ இண்டைய நியூஸ் உண்மையா இருந்தால்தான் கடவுள் கருணைகாட்டிறார் எண்டிறது அர்த்தம். - சிந்தனைக்கு சில படங்கள்...
Important Information
By using this site, you agree to our Terms of Use.