Everything posted by Athavan CH
- ஊர் நினைவுகள்
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
யாழ் இணயத்தின் வேகம் மிகவும் மந்தமாக இருக்கின்றது........, பக்கங்கள் திறக்க அதிக நேரம் எடுக்கிறது, ஒரு பக்கத்தினை வாசித்து விட்டு அடுத்த பக்கத்திற்கு செல்லவோ, back செல்லவோ நீண்ட நேரம் எடுக்கிறது. நீண்ட நாட்களாக முகப்பு இல்லை, வாசகர் வரத்து மிக மிகக் குறைவு, ஊர்ப் புதினத்தில் ஒரு செய்தியை 100 தடவைக்கு மேல் பார்ப்பது மிகவும் அரிதாகவே நிகழ்கிறது........, இந்த மூனறந்தர இணையங்கள் எல்லாம் எந்த பிரச்சனையுமின்றி இயங்கும் போது, ஈழத் தமிழரின் கருதுப் பரிமாற்றத்திற்கென இருக்கும் ஒரேயொரு தரமான தளமான யாழ் இனையத்திற்கு மட்டும் பிரச்சனைகள் ஏனோ?
-
பழைய திரைப்பட,நிழற் படங்கள்
உருண்டோடும் உலக வாழ்வில் எத்தனையோ விஷயங்கள் கால வெள்ளத்தில் கரைந்து போகின்றன...! சோபன்பாபுவுடன் ஜெயலலிதாவுக்கு இருந்த உறவு எப்படிப்பட்டது? அப்போது – ‘குமுதம்’ வார இதழுக்கு அளித்த பேட்டி ஒன்றில் ஜெயலலிதாவே, “ நானும் அவரும் கணவன் மனைவியாக குடித்தனம் நடத்துகிறோம்” – என்று பதிலளித்தார். அப்படியானால் – “ உங்கள் இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டதா?”- என்று ‘குமுதம்’ நிருபர் கேட்டார். ’’திருமணம் செய்துகொண்டால்தான் கணவன் – மனைவி என்றாகும் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளவில்லை. எனினும் இணைந்து ஒன்றாகவே வாழ்கிறோம்” – என்றார் ஜெயலலிதா. ’குமுதம்’ நிருபர் அத்தோடு திருப்தியடைந்துவிடாமல், இன்னொரு கேள்வி கேட்டார். “ சோபன் பாபுவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி – மனைவியும் இரண்டு குழந்தைகளும் இருப்பது உங்களுக்கு தெரியுமா?” இது கேள்வி.
- ஊர் நினைவுகள் - யாழ்ப்பாணம்
- ஊர் நினைவுகள் - மட்டக்களப்பு
- ஊர் நினைவுகள்
- ஊர் நினைவுகள்
-
சென்னை மெட்ரோ ரயில்...
சென்னைக்கு மெட்ரோ ரயில் வந்ததற்கு நாங்கதான் காரணம் என்று சொந்தம் கொண்டாடி திமுகவினர் ஒட்டியுள்ள போஸ்டர். http://www.dinamalar.com/photogallery_detail.asp?id=833&nid=25877&cat=Album#.VZkGvhvtmkp
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
ஆமாம் எனக்கும் இது பெரிய பிரச்சனையாக உள்ளது, பதிவுகளின் தலையங்கங்களை சற்று பெரிய எழுத்தில் போட முடியவில்லை
-
சென்னை மெட்ரோ ரயில்...
மெட்ரோ ரயில்: பாடத்தை மறக்காதீர்கள் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் பொதுமக்களின் வசதியையே குறிக்கோளாகக் கொள்ள வேண்டும். இப்போதாவது வந்ததே என்றுதான் நாம் திருப்திப்பட்டுக்கொள்ள வேண்டும். ஜூன் 29-ம் தேதியன்று தொடங்கப்பட்ட சென்னை ஆலந்தூருக்கும் கோயம்பேட்டுக்கும் இடையேயான மெட்ரோ ரயில் திட்டம், சரியாக 115 ஆண்டுகள் தாமதமாகத்தான் நமக்கு வந்துள்ளது. ஆம், பாரிஸ் நகருக்கு மெட்ரோ ரயில் வந்தது 1900-ம் ஆண்டு. உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான மக்கள் பயன்படுத்தும் ஒருசில மெட்ரோக்களில் பாரிஸும் ஒன்று. 214 கிலோ மீட்டர்களில் 303 ஸ்டேஷன்களை இணைக்கிறது பாரிஸ் மெட்ரோ. நான் பாரிஸ் செல்லும்போதெல்லாம் என்னுடைய தீராத சுவாரசியம் இந்த மெட்ரோ ரயில்களில் பயணம் செய்வதுதான். பூமிக்குக் கீழே ஐந்து அடுக்குகளில் ரயில்கள் போய்க்கொண்டும் வந்துகொண்டும் இருக்கின்றன. ஐந்தாவது அடுக்கில், ஓட்டுநர் இல்லாமல் தானே இயங்கும் ரயில். மொத்தம் 700 ரயில்கள். சென்னையின் மக்கள் தொகையைவிட பாரிஸின் மக்கள் தொகை பாதிதான். சென்னை 44 லட்சம். பாரிஸ் 22 லட்சம். ஆனால், ஒரு நாளில் பாரிஸ் மெட்ரோவைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 42 லட்சம்! இதுபற்றி என் பாரிஸ் நண்பர்கள் நகைச்சுவையாகச் சொல்வதுண்டு, ‘இந்த நகரின் மக்கள்தொகையைவிட இரண்டு மடங்கு மக்கள் மெட்ரோவில் பயணிக்கிறார்கள்’ என்று. புறநகரில் வசிக்கும் மக்களும் பெருமளவில் மெட்ரோவைப் பயன்படுத்துகிறார்கள். அதனால்தான் இந்தக் கணக்கு. இதுபற்றி இன்னொரு நகைச்சுவையும் உண்டு. பாரிஸ் நகரின் மக்கள்தொகையைவிட இரண்டு மடங்கு மக்கள் பூமிக்குள் இருக்கிறார்கள்! காரணம், அங்கே மெட்ரோ ரயில்கள் அநேகமாக பூமிக்குள்தான் ஓடுகின்றன. எல்லாமே பூமிக்குள்தான் பொதுவாகவே, மேற்கு ஐரோப்பிய நாடுகள் பூமிக்கு உள்ளே உள்ள நிலப் பகுதியை மிகுதியும் பயன்படுத்துகிறார்கள். ஒவ்வொரு வீட்டுக்குமான தண்ணீர், சமையல் எரிவாயு, மின்சாரம் போன்றவை எல்லாமே பூமியின் உள்பகுதி வழியாகத்தான் விநியோகிக்கப்படுகின்றன. ஆனால், நம் நாட்டில் இன்னமும் கழிவு நீரை வெளியேற்றுவதற்கான பாதாள சாக்கடைகூட நாடு முழுவதும் கட்டமைக்கப்படவில்லை. தஞ்சாவூர் நகரில் இன்னமும் மராட்டிய மன்னர்கள் கட்டிய திறந்த சாக்கடையைத்தான் பார்க்க முடிகிறது. ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அந்த நகரின் அத்தனை மக்களுடைய மலஜலக் கழிவுகள் செல்வதைப் பார்ப்பது எப்பேர்ப்பட்ட கொடூரமான காட்சி தெரியுமா? அது போக, தமிழக நகரங்களில் மெட்ரோ வாட்டர், மின்சாரம், சாலை நிர்மாணம் ஆகிய மூன்று துறையினரும் ஒருவருக்கொருவர் எந்தத் தொடர்பும் இல்லாமல் மாற்றி மாற்றிச் செய்துகொண்டிருக்கும் ‘பணி’களைப் பற்றி ஆச்சரியப்படாத சராசரி மனிதனே கிடையாது. ஒரு வருடமாகச் சாலை போடப்படாமல் சரளைக் கற்களாகக் கிடக்கும் சாலையைப் போட்ட அடுத்த நாளே, மின்சார வாரியப் பணியாளர்கள் வந்து அந்தச் சாலையைத் தோண்டிக்கொண்டிருக்கும் காட்சியை என்னவென்று சொல்ல! இந்த நிலையில் அண்டர் கிரவுண்ட் மூலமே சமையல் எரிவாயு விநியோகத்தையும் செய்தால் என்ன ஆகும் என்று யோசிக்கவே பயமாக உள்ளது. மேற்கு ஐரோப்பிய நாடுகளில் பூமிக்கு மேலே மின்கம்பிகளையும் பார்க்க முடியவில்லை. விளக்குக் கம்பங்கள் மட்டுமே பூமிக்கு மேலே ஒளியைப் பரப்பிக்கொண்டிருக்கின்றன. நம் நாட்டுச் சாலைகளில் தாறுமாறாகப் பிய்ந்தபடி இருக்கும் மின்கம்பிகளை அந்த நாடுகளில் பார்க்கவே முடியவில்லை. எல்லாமே பூமிக்குக் கீழேதான். அதைப் போலவேதான் ரயில்களும் அங்கே பூமிக்குக் கீழே ஓடுகின்றன. நள்ளிரவிலிருந்து அதிகாலை வரை நான்கு மணி நேரம் மட்டுமே ரயில்களுக்கு ஓய்வு. பாரிஸ் மெட்ரோவின் ஆச்சரியம் பாரிஸ் மெட்ரோ ரயில் திட்டத்தின் இன்னொரு பெரிய ஆச்சரியம் என்னவென்றால், ஒரு ஸ்டேஷனுக்கும் இன்னொரு ஸ்டேஷனுக்குமான தூரம் 600 மீட்டரிலிருந்து ஒரு கிலோ மீட்டர். அதாவது, கிட்டத்தட்ட அரை கிலோமீட்டருக்கு ஒரு ஸ்டேஷன் என்று சொல்லலாம். பொதுமக்களின் வசதிக்காகவே மெட்ரோ ரயில் திட்டம் அமைக்கப்பட்டிருப்பதால் இந்த சவுகரியத்தை அரசாங்கம் அமைத்துக் கொடுத்திருக்கிறது. இதெல்லாம் எனக்குக் கடந்த திங்களன்று ஆலந்தூர் டு கோயம்பேடு மெட்ரோ ரயிலில் பயணம் செய்தபோது ஞாபகம் வந்தது. இப்போதாவது வந்ததே என்ற சந்தோஷம் ஏற்படுகின்ற அதே வேளையில், இதுகுறித்த வேறு சில எண்ணங்களும் என்னை ஆட்கொண்டன. தோல்விக்கான காரணங்கள் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்ட பறக்கும் ரயில் சேவை மக்களுக்கு முழுமையாக உபயோகமில்லாமல் இருக்கிறது. ஒரே காரணம்தான். நகரிலேயே மிகவும் புறக்கணிக்கப்பட்ட இடங்கள் என்றால், அந்தப் பறக்கும் ரயில் நிலையங்கள்தான். உதாரணமாக, மந்தைவெளி, கலங்கரை விளக்க ரயில் நிலையங்கள். இந்த இடங்களில் ஒருவர் பகலில் செல்வதற்கே அஞ்சும் நிலைமை உள்ளது. ஆள் நடமாட்டமே கிடையாது. பிச்சைக்காரர்களும், குடிகாரர்களும், சமூக விரோதிகளும் பொழுதைப் போக்கும் இடங்களாகவே அவை உள்ளன. மாலை ஆறு மணிக்கு மேல் அங்கே செல்பவரை உயிருக்குத் துணிந்தவர் என்றே சொல்ல வேண்டும். சில ஆண்டுகளுக்கு முன்பு மந்தைவெளி ரயில் நிலையத்தில் மாலை ஏழு மணி அளவில் சல்லாபித்துக்கொண்டிருந்த ஒரு காதல் ஜோடியைப் பிரித்து, அந்த இளைஞனைக் கொலை செய்தார் ஒரு நபர். பறக்கும் ரயில் திட்டத்தின் படுதோல்விக்கு இன்னொரு காரணம், அந்த ரயில் நிலையங்களுக்குச் செல்லவே ஒரு கிலோ மீட்டருக்கும் மேல் நடக்க வேண்டியிருக்கிறது. அப்படி நடந்து சென்றுவிட்டால் ஆகாயத்தின் அருகே தெரியும் நடைமேடைக்கு எத்தனையோ படிகளை ஏறிக் கடக்க வேண்டும். 30 வயதுக்கு உட்பட்டவர்களால்தான் அது சாத்தியம். அப்படியே ஏறிப்போனால் மேலே குடிப்பதற்குத் தண்ணீரோ, தேநீரோ கிடைக்காது. ஓய்வறை, கழிவறை வசதிகளும் கிடையாது. பாடம் கற்க வேண்டும் 115 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நல்ல விஷயம் நடந்திருக்கும்போது இதையெல்லாம் ஏன் இங்கே பிரஸ்தாபிக்கிறேன் என்றால், இந்தத் தவறுகளிலிருந்து அதிகாரிகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான். பாடம் கற்றுக்கொண்டுவருகிறார்கள் என்றே தெரிகிறது. ஆலந்தூர் - கோயம்பேடு இடையே உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் எஸ்கலேட்டர் இருந்தது; தண்ணீரும் கிடைத்தது. இந்தச் சேவைகள் தொடர வேண்டும். உலகின் பல நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டங்கள் வெற்றிகரமாக நிர்மாணிக்கப்பட்டுள்ளன. மேற்கு ஐரோப்பிய நாடுகள் மட்டும் அல்ல; மூன்றாம் உலக நாடுகள்கூட இந்த விஷயத்தில் அவற்றோடு போட்டி போடுகின்றன. சிலி நாட்டின் சான்டியாகோ நகரின் மெட்ரோவில் நின்றால், பாரிஸ் மெட்ரோவுக்கும் அதற்கும் உங்களுக்கு வித்தியாசமே தெரியாது. ஐந்து லைன்களில் 108 ஸ்டேஷன்களை இணைக்கிறது சான்டியாகோ மெட்ரோ ரயில் திட்டம். பாரிஸில் சிக்கனம்; சென்னையில்… ஒரு முக்கியமான விஷயம், பாரிஸில் கார் வைத்திருப் பவர்கள்கூட காரில் செல்ல இஷ்டப்படுவதில்லை. காரில் செல்வதைவிட மெட்ரோவில் செல்வது வசதியாகவும், சிக்கனமாகவும் இருக்கிறது என்கிறார்கள் பாரிஸ்வாசிகள். அப்படிப்பட்ட நிலையைத்தான் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் குறிக்கோளாகக் கொள்ள வேண்டும். அதற்கு இடையூறாக இருக்கக்கூடிய ஒரு பிரச்சினையை இங்கே சுட்டிக் காட்டுகிறேன். ஆலந்தூரிலிருந்து கோயம்பேட்டுக்கு ஒருவழி டிக்கட் 40 ரூபாய். இது 25 ரூபாயாகக் குறைக்கப்பட வேண்டும். மெட்ரோ ரயில் திட்டம் மேட்டுக்குடி மக்களுக்கு மட்டும்தான் என்று அரசு முடிவெடுத்துவிட்டால் இதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. மீட்டர் போடாமல் இருநூறு, முன்னூறு என்று கேட்கும் ஆட்டோவைவிட மெட்ரோ ரயில் பயணம் மலிவுதான். - சாரு நிவேதிதா, எழுத்தாளர், http://tamil.thehindu.com/opinion/columns/மெட்ரோ-ரயில்-பாடத்தை-மறக்காதீர்கள்/article7377843.ece?ref=relatedNews
-
சிந்தனைக்கு சில படங்கள்...
Leonardo Pereira und Victoria Nader haben ein gefährliches Hobby. Das zeigen die spektakulären Bilder von den Klippen über Rio de Janeiro. http://www.20min.ch/panorama/news/story/Die-beiden-lieben-den-Cliffhanger-26236190
-
சென்னை மெட்ரோ ரயில்...
- சென்னை மெட்ரோ ரயில்...
முதல் ரயிலை ஓட்டிய பிரீத்தி : குவிகின்றன வாழ்த்துக்கள்! சென்னையில் முதல் மெட்ரோ ரயிலை இயக்கிய பெண் பிரீத்தி, 28. 'இந்த இடத்தில் தான் வேலை செய்வேன். அதிலும் இந்த பணியை தான் மேற்கொள்வேன்' என, பிடிவாதமாக, மெட்ரோ ரயில் பணிக்கு வந்த பெண். பிரீத்தி, மெட்ரோ ரயில் ஓட்டுனர் பணிக்கு வந்தது குறித்து, அவரது தாய் சாந்தி கூறியதாவது: நாங்கள் சென்னை சைதாப்பேட்டையில் வசிக்கிறோம். சின்ன வயதில் இருந்தே, வாகனத்தை ஓட்டுவதில் அலாதி பிரியம் கொண்டவள் பிரீத்தி. சைக்கி ளில் சுற்றிக் கொண்டே இருப்பாள். இதை பார்க்கும் எங்களது குடும்ப நண்பர், பிரீத்தியை 'சைக்கிள் ராணி' என்று தான் அழைப்பார். பின், இருசக்கர வாகனம், ஆட்டோ என, பிற வாகனங்களை இயக்க கற்றுக் கொண்டார். சென்னை அடையாறில் உள்ள தனியார் பாலிடெக்னிக்கில், எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன் முடித்தார். 'எலக்ட்ரிக் மேக்னடிக் வேவ்ஸ் ரிசர்ச் சென்டர்' என்ற மத்திய அரசு நிறுவனத்தில், தற்காலிகமாக பணியில் சேர்ந்தார். இதற்கிடையே, மெட்ரோ ரயில் பணியில், ஜூனியர் இன்ஜினியராக சேர வாய்ப்பு கிடைத்தும், ரயில் ஓட்டுனராகத் தான் பணிபுரிவதாகவும், இல்லையென்றால் தான் சேர விரும்பவில்லை எனவும் கூறினார். அவர் நினைத்தபடியே, ரயில் ஓட்டுனராக தேர்வு செய்யப்பட்டார். டில்லியில், நான்கு மாதங்கள் பயிற்சி முடித்து விட்டு, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, சென்னை மெட்ரோ ரயிலை ஓட்டும் பயிற்சி பணியில் இருந்தார். தற்போது, மெட்ரோ ரயிலை சாவகாசமாக இயக்குகிறார். இவ்வாறு, சாந்தி தெரிவித்தார். சமூகவலை தளங்களில், பிரீத்திக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. http://www.dinamalar.com/news_detail.asp?id=1285689- சென்னை மெட்ரோ ரயில்...
மெட்ரோ ரயில்: சிறப்பு அம்சங்கள் என்ன? மெட்ரோ ரயில் உள்புறத் தோற்றம் சென்னை ஆலந்தூர் - கோயம்பேடு இடையே மெட்ரோ ரயில் சேவை இன்று (திங்கள்கிழமை) தொடங்குகிறது. * மெட்ரோ ரயில் உயர்நிலைப் பாதை மற்றும் சுரங்கம் வாயிலாகச் செல்வதால் ரயில் பெட்டிகள் முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டிருக்கும். * தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டுள்ளதால், நடைமேடையை அடைந்தபின் ரயில் முழுவதும் நின்ற பிறகே கதவு திறக்கும், மூடும். எனவே, ரயில்களில் படியில் நின்று பயணம் செய்வது முற்றிலும் தடுக்கப்படும். * பயணத்தின்போது ஏதேனும் சேவைக் குறைபாடுகள் ஏற்பட்டால், ரயில் பெட்டியில் அமைக்கப்பட்டுள்ள தொலைபேசி மூலம் வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்புகொண்டு புகார்களை பதிவு செய்யலாம். * பொருட்களை வைக்க தனியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வசதி பெங்களூர் மற்றும் கொல்கத்தா மெட்ரோ ரயில்களில் இல்லை. * ஒவ்வொரு பெட்டியிலும் தலா 4 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. * அவசர காலத்தின்போது ஓட்டுநர்களுக்கு தகவல் தர சிறப்பு பொத்தான்கள் அமைக்கப்பட்டுள்ளன. * தீ விபத்து குறித்து எச்சரிக்கும் கருவிகள், தீயணைப்பு கருவிகள் வைக்கப்பட்டுள்ளன. ரயிலின் செயல்பாட்டை தமது அறையில் இருந்தபடியே ஓட்டுநர் கண்காணிக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது. * ரயில்கள் தடம் புரளாமல் இருக்க ரயில் பாதைகளில் தரமான சிறிய தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால், 90 சதவீதம் மெட்ரோ ரயில்கள் தடம்புரள வாய்ப்புகளே இல்லை. பெண்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு வசதி * மெட்ரோ ரயில் பெட்டிகளில் பெண்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அனைத்து பயணிகளுக்கும் அதிநவீன பாதுகாப்பு மற்றும் வசதிகள் அளிக்கும் வகையில் பெட்டிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. மெட்ரோ ரயில் செல்லும் வழித்தடங்களின் வரைபடம் அனைத்து பெட்டியிலும் இருக்கும். * ஒரு மெட்ரோ ரயிலில் 4 பெட்டிகள் இருக்கும். ஒவ்வொரு பெட்டியிலும் சுமார் 350 பேர் வீதம் ஒரு ரயிலில் 1,400 பேர் பயணம் செய்ய முடியும். முதல்கட்டமாக சராசரியாக 35 கி.மீ வேகத்தில் ரயில் இயக்கப்படும். * கோயம்பேடு - ஆலந்தூர் இடையே பயணம் நேரம் 19 நிமிடங்களாக இருக்கும். ஆரம்பத்தில் 10 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படும். பின்னர், மக்கள் தேவைக்கு ஏற்றவாறு 5 நிமிடத்துக்கு ஒரு ரயில் இயக்கப்படும். * அதிகபட்சமாக 2.5 நிமிடத்துக்கு ஒரு ரயிலை இயக்க முடியும். கட்டண விவரம்: மெட்ரோ ரயிலில் பயணிக்க குறைந்தபட்சமாக ரூ.10-ம் அதிகபட்சமாக ரூ.40-ம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சிறப்பு வகுப்பில் பயணிக்க நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தில் இருமடங்கு செலுத்த வேண்டும். *ஆலந்தூர் - ஈக்காட்டுதாங்கல்: ரூ10 *ஆலந்தூர் - அசோக்நகர்: ரூ.20 *ஆலந்தூர் - வடபழநி: ரூ.30 *ஆலந்தூர் - அரும்பாக்கம்: ரூ.40 *ஆலந்தூர் - சிஎம்பிடி புறநகர் பேருந்து நிலையம்: ரூ.40 *ஆலந்தூர் - கோயம்பேடு: ரூ.40 ரயில் பயண கால அட்டவணை: *கோயம்பேடு - ஆலந்தூர் இடையே முதல் மெட்ரோ ரயில் தினசரி காலை 6 மணிக்கு புறப்படும். *கோயம்பேடு - ஆலந்தூர் இடையே கடைசி மெட்ரோ ரயில் தினசரி இரவு 10.40 மணிக்கு இயக்கப்படும். *ஆலந்தூர் - கோயம்பேடு இடையேயான முதல் மெட்ரோ ரயில் தினசரி காலை 6.03 மணிக்கு புறப்படும். *ஆலந்தூர் - கோயம்பேடு இடையேயான கடைசி மெட்ரோ ரயில் தினசரி இரவு 10.03 மணிக்கு இயக்கப்படும். எத்தனை ரயில்கள்? *தினசரி கோயம்பேடு - ஆலந்தூர் இடையே 95 ரயில்கள் இயக்கப்படும். *அதேபோல் ஆலந்தூர் - கோயம்பேடு இடையே 97 ரயில்கள் இயக்கப்படும். *நாளொன்றுக்கு மொத்தம் 192 ரயில்கள் இயக்கப்படும். *ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் ரயில் இயக்கப்படும். *அதிகபட்சமாக மணிக்கு 72 கி.மீ. வேகத்தில் பயணிக்கும். இருமார்க்கத்திலும் இலக்கை 19 நிமிடங்களில் சென்றடையும். *ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் 35 விநாடிகள் ரயில் நின்று செல்லும். இவ்வாறு மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. http://tamil.thehindu.com/tamilnadu/மெட்ரோ-ரயில்-சிறப்பு-அம்சங்கள்-என்ன/article7366245.ece?widget-art=four-rel- சென்னை மெட்ரோ ரயில்...
ஆலந்தூர் - கோயம்பேடு இடையே தொடங்கியது சென்னை மெட்ரோ ரயில் சேவை அலங்கரிக்கப்பட்ட மெட்ரோ ரயில்கள். | படம்: சுனிதா சேகர் ஆலந்தூரில் இருந்து கோயம்பேடு வரையிலான மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி மூலம் இன்று (திங்கள்கிழமை) பகல் 12.10 மணியளவில் தொடங்கிவைத்தார். முதல்வர் கொடியசைத்து வைக்க ஆலந்தூரில் இருந்து கோயம்பேட்டுக்கு மெட்ரோ ரயில் தனது முதல் பயணத்தை தொடங்கியது. மேலும், கோயம்பேடு, புறநகர் பேருந்து நிலையம் (சிஎம்பிடி), அரும்பாக்கம், வடபழனி, அசோக் நகர், ஈக்காட்டுதாங்கல், ஆலந்தூர் ஆகிய 7 மெட்ரோ ரயில் நிலையங்களையும் கோயம் பேட்டில் உள்ள மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பணிமனையையும் முதல்வர் திறந்துவைத்தார். தொடக்க விழாவையொட்டி மெட்ரோ ரயில் நிலையங்கள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. மெட்ரோ ரயில் முதல் பயணத்தை காண ரயில் நிலையத்தில் பொதுமக்கள் ஆர்வத்துடன் குவிந்திருந்தினர். மெட்ரோ ரயிலில் பயணிக்க குறைந்தபட்சமாக ரூ.10-ம் அதிகபட்சமாக ரூ.40-ம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சிறப்பு வகுப்பில் பயணிக்க நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தில் இருமடங்கு செலுத்த வேண்டும். http://tamil.thehindu.com/tamilnadu/ஆலந்தூர்-கோயம்பேடு-இடையே-தொடங்கியது-சென்னை-மெட்ரோ-ரயில்-சேவை/article7366725.ece?homepage=true- சிந்தனைக்கு சில படங்கள்...
குஜராத் அம்ரேலி வனப்பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய தனது குட்டியை வாயில் கவ்வியபடி பாதுகாப்பான இடம் தேடி ஓடிய சிங்கம் | படம்: பிடிஐ- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தமிழ் சூரியனுக்கும் சாந்தி அக்காவிற்கும் இனிய பிறந்த தின வாழ்த்துக்கள்- சிந்தனைக்கு சில படங்கள்...
Kali Gandaki Gorge in Nepal: The deepest gorge in the world: 19,685 feet! This gorge is between Annapurna (26,545') and Dhaulagiri (26,795'). Hold on tight!- சிந்தனைக்கு சில படங்கள்...
யானை எடுத்த எல்ஃபீ.- சிந்தனைக்கு சில படங்கள்...
greece- சென்னை மெட்ரோ ரயில்...
மத்திய அரசின் புதிய சட்டத் திருத்தத்தால் சென்னை மெட்ரோ ரயில் சேவை விரைவில் தொடங்க வாய்ப்பு மெட்ரோ ரயில் பொது சட்டம், 2013-ல் மத்திய அரசு மேற்கொண்டுள்ள புதிய திருத்தம் காரணமாக கோயம் பேடு-ஆலந்தூர் இடையேயான மெட்ரோ ரயில் சேவை விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. டெல்லியில் உள்ள மாண்டி ஹவுஸ் - ஐடிஒ இடையே மெட்ரோ ரயில் சேவைக்காக பாதை அமைக் கப்பட்டுள்ளது. ஆனால், இது ஒரு வழிப் பாதையாக இருப்பதால் மெட்ரோ ரயில் பொதுச் சட்டம், 2013-ன் படி அவ்வழித்தடத்தில் ரயில் களை இயக்க பாதுகாப்பு ஆணை யர் அனுமதி வழங்கவில்லை. இதனால் கடந்த ஜனவரியில் பணி பூர்த்தி அடைந்த பிறகும் இதுநாள் வரை அவ்வழித் தடத்தில் ரயில்களை இயக்க முடியாத நிலை இருந்து வருகிறது. இந்நிலையில், மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு ரயில்வே பாதுகாப்பு துறை ஆணை யர், மெட்ரோ ரயில் பாதுகாப்பு ஆணையர், டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் ஆகியவற்றுடன் தொடர் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து, ஒரு வழிப் பாதை யிலும் மெட்ரோ ரயில்களை இயக்கு வது என முடிவு செய்யப்பட்டது. இதன்படி, மெட்ரோ ரயில் பொதுச் சட்டம், 2013-ல் திருத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இந் நிலையில், தற்போது கோயம்பேடு-ஆலந்தூர் இடையேயான மெட்ரோ ரயில் பாதையில் அசோக்நகர்-ஆலந்தூர் இடையே ரயில்கள் திரும்பி வருவதற்கு இருவழிப் பாதைகளையும் இணைக்க இணைப்புப் பாதை அமைக்கப்படாததால் ஒரு வழிப் பாதையில் ரயில்களை இயக்க பாதுகாப்பு ஆணையரின் அனுமதி கிடைப்பதில் சிக்கல் நீடித்து வந்தது. தற்போது மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டத் திருத்தம் காரணமாக, இனி அசோக்நகர்-ஆலந்தூர் இடையே ஒருவழிப் பாதையில் ரயில்களை இயக்க முடியும். இதன் காரணமாக, விரைவில் கோயம்பேடு-ஆலந்தூர் இடையேயான மெட்ரோ ரயில் சேவை விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article7226276.ece?ref=sliderNews- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. சுவி அண்ணா- சிந்தனைக்கு சில படங்கள்...
- சென்னை மெட்ரோ ரயில்...
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.