S. Karunanandarajah
கருத்துக்கள உறவுகள்-
Posts
15 -
Joined
-
Last visited
Recent Profile Visitors
The recent visitors block is disabled and is not being shown to other users.
S. Karunanandarajah's Achievements
-
மேற்கு நாடுகளுக்கு புடின் அணு ஆயுதத் தாக்குதல் எச்சரிக்கை!
S. Karunanandarajah replied to தமிழ் சிறி's topic in உலக நடப்பு
நான் வாழ்வது இங்கிலாந்தின் கிழக்குக் கரையோரம். ரஷ்யாவுக்கு இலகுவாகத் தாக்குவதற்கேற்ற பிரதேசம். நினைத்தால் வயிற்றைக்கலக்குகிறது. அடித்தால் கூண்டோடு - குடும்பததோடு அழிய வேண்டியதுதான். -
ஈழத்தமிழர்கள்மீது இலங்கை இராணுவத்தினராலும், இஸ்லாமிய மதவெறியர்களாலும் நிகழ்த்தப்பட்ட இனவன்முறைகளை ஆவணப்படுத்தும் திரு நன்னிச் சோழன் அவர்களின் செயற்பாட்டுக்கு மிகுந்த நன்றிகளை நானும் தெரிவிக்கிறேன். தொடர்க உங்கள் பணி. வரலாற்றிலிருந்து நீக்கப்படமுடியாத, மன்னிக்கப்பட முடியாத கொடியவர்களின் வன்மத்துக்கு என்ன பிராயச்சித்தமுள்ளது. என்றும் இவர்கள் எதிரிகளே.
- 165 replies
-
- 1
-
- முஸ்லிம்கள்
- சோனகர்
-
(and 59 more)
Tagged with:
- முஸ்லிம்கள்
- சோனகர்
- படுகொலைகள்
- வன்புணர்ச்சி
- கொலை
- குற்றம்
- இனவழிப்பு
- இனப்படுகொலை
- முஸ்லிம் ஊர்காவல் படை
- இஸ்லாமியர்
- ஜிஹாத்
- ஜிகாத்
- தமிழர்
- தமிழீழம்
- ஈழம்
- விடுதலைப் புலிகள்
- சிறிலங்கா
- அதிரடிப்படை
- காத்தான்குடி
- திருகோணமலை
- மட்டக்களப்பு
- அம்பாறை
- முஸ்லிம் படுகொலை
- காத்தான்குடி படுகொலை
- பள்ளிவாசல்
- மசூதி
- தமிழ் இனப்படுகொலை
- சிறிலங்கா இராணுவம்
- இராணுவம்
- ஊர்காவல்படை
- முஸ்லிம்களால் ஈழத் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள்
- இஸ்லாமியர்களால் ஈழத் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள்
- முஸ்லிம் படுகொலைகள்
- முஸ்லீம்கள் செய்த படுகொலைகள்
- நிகழ்த்திய
- முசுலிம்
- அழிவுகள்
- கொலைகள்
- வீரமுனை படுகொலை
- ஊர்காவல் படை
- காடையர்கள்
- muslim
- massacres
- tamils
- sri lanka
- tamil eelam
- இலங்கை
- இலங்கை முஸ்லிம்களின் வரலாறு
- முஸ்லிம் தாக்குதல்
- பள்ளிவாசல் தாக்குதல்
- இஸ்லாமியர் மீதான கொலை
- வன்முறை
- கற்பழிப்பு
- அடிதடி
- படுகொலை
- கொள்ளை
- தமிழர் படுகொலை
- தாக்குதல்
- முஸ்லிம்கள் படுகொலை
- காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலை
- ஏறாவூர் படுகொலை
-
போர்க்காலப் பாடல்களில் 'தாலாட்டுப் பாடல்கள்'
S. Karunanandarajah replied to நன்னிச் சோழன்'s topic in எங்கள் மண்
டியர் நன்னிச் சோழன் யுகசாரதியின் ஈழத்தாய் சபதம் நூலிலும் பக்கம் 91 இல் தூயவரிப்புலியே நீ தூங்கிடு என்மகனே! கல்லறை மெத்தையிலே நீகண்துயில்வாய் மகனே! ஆராரோ1 ஆராரோ ! ....என்று தொடங்கும் பாடலொன்று உண்டு. முடிந்தால் அதையும் தங்கள் லிஸ்டில் சேர்த்துக் கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறேன். -
கார்த்திகைப் பூ முருகனுக்குரியது. கார்த்திகேயனான முருகனை சிங்களவர்களும் வணங்குகிறார்கள். அவர்கள் அர்ச்சனை செய்ய வேண்டிய முருகனின் பூவை அவர்களே காலில் போட்டு மிதிக்கிறார்கள். நமக்கென்ன செய்துவிட்டுப் போகட்டும்.
- 30 replies
-
- 2
-
- கார்த்திகைப் பூ
- கார்த்திகை பூ
-
(and 1 more)
Tagged with:
-
கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்ற கேள்வி வெங்காயங்களுக்கே வரமுடியும். யார் அல்லது எது கடவுள் என்ற வரைவிலக்கணத்தைச் சரியாகக் கூறாமல் அவர், அவள் அல்லது அது இருக்கிறதா? என்று எப்படிக் கூறமுடியும்? பாரொடு விண்ணாய்ப் பரந்த எம்பரன் என்கிறது திருவாசகம். ஆக, கடவுள் இருக்கிறாரா? அல்லது கடவுளில் நாமிருக்கிறோமா என்ற கேள்வியே மிகச் சரியானது. நாமிருப்பதால் நம்மில் கடவுள் இருக்கிறார் என்பதே சரியான விடையாகும்.
-
'கொண்டாடினான் ஒடியற் கூழ்'
S. Karunanandarajah replied to kandiah Thillaivinayagalingam's topic in எங்கள் மண்
சமீபத்தில் எனது மகளின் தோழி காய்ச்சித்தந்த ஒடியற்கூழை இரசித்துச் சுவைக்கும் பாக்கியம் எனக்கும் கிடைத்தது. -
தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி சுவி.
-
https://www.google.co.uk/imgres?imgurl=https%3A%2F%2Fupload.wikimedia.org%2Fwikipedia%2Fen%2Fb%2Fbe%2FS._J._V._Chelvanayakam.jpg&tbnid=nJjvzqSJ3ysJ9M&vet=12ahUKEwj7uNS-tp6FAxX3sicCHeZmASkQMygAegQIARBK..i&imgrefurl=https%3A%2F%2Fen.wikipedia.org%2Fwiki%2FS._J._V._Chelvanayakam&docid=QmLL1nZ7Jg3YwM&w=148&h=187&q=sjv selvanayagam&ved=2ahUKEwj7uNS-tp6FAxX3sicCHeZmASkQMygAegQIARBK ஈழத்தமிழ் மக்களின் இதய தெய்வமாக விளங்கிய தந்தை செல்வாவின் பிறந்த நாள் -மார்ச்சு 31- இன்று. அவர் மறைந்த நாள் ஏப்பிரல் 26 – 1977. பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்ச்சங்கத்தில் நான் பத்திரிகையாசிரியராக (இளங்கதிர்) இருந்தபோது அவர் இறந்தார். அப்போது நடத்தப்பட்ட இரங்கற் கூட்டத்தில் என்னாற் பாடப்பட்ட அஞ்சலிக் கவிதையை இங்கு தருகிறேன். தந்தை செல்வா மறைவும் அஞ்சலியும் எண்பத்தி நாலு வரை வாழ்வேன் எங்கள் இனிய தமிழ் ஈழமதைக் காண்பேன் என்றே புண்பட்டுநொந்திட்ட தமிழர் நெஞ்சம் புத்துயிர் பெற்றெழுந்திடவே சொன்ன தந்தை கண்பட்டு வீழ்ந்திட்டான் தமிழர் வேறு கதியற்றார் துயருற்றார் கலங்கி நின்றார் எண்பட்ட யாவரையும் கவருமிந்த இழிகாலன் செய்கையது என்னே! என்னே! செல்வா என்றோர் வார்த்தை சொன்னால் அங்கோர் சேனையது தலைதாழ்த்திப் பணிந்து நிற்கும் செல்வா என்றே சொன்னாற் தமிழ மங்கை செழு முலையினூடோடி வீரம் சிந்தும் செல்வா என்றழைத்திட்டாற் தமிழர் வாழும் தேசமெலாம் அச்சொல்லின் சிறப்புத் தேங்கும் எல்லாமும் போனதடா ஈழம் சோர்ந்தாள் இழிகாலன் செய்கையது என்னே என்னே (வேறு) தந்தை செல்வாவைத் தானைத் தலைவனாய் ஏற்காதோரும் சிந்தையில் துயரடைந்தார் சிங்களர் கூடச் சோர்ந்தார் மந்திரச் சொல்லால் ஈழ மக்களைத் தன்பால் ஈர்த்து விந்தைகள் புரிந்த செம்மல் விழிகளை மூடிக் கொண்டான் ஓடியே ஒடுங்கிற்றம்மா உயிரினைத் தமிழுக்காக வாடியே கொடுத்த அன்னான் வண்டமிழ்த் தென்றல் மூச்சு பாடியே என்ன கண்டோம் பாடையில் வீழ்ந்த அந்த நீடிய தமிழ் மரத்தின் நிழலினிக் கிடைக்கப் போமோ? (வேறு) கண்ணார் தமிழின் உயர்வுக் குழைத்தே காற்றால் உதிர்ந்த சருகானாய் எண்ணார் உன்னை ஏற்காதோரும் ஏற்றும் தெய்வம் நீயானாய் விண்ணேகினையோ செல்வா தமிழின் விழியே உயிரே ஆரீரோ அண்ணா தூங்கு ஆறத் தூங்கு ஆரீர் ஆரீர் ஆரீரோ துன்பஞ் செய்த உடல் நோயோடும் தூய தமிழிற் குழைத்ததிலே இன்பங் கண்டாய் செல்வா என்றும் ஈழத் துயர்வே பேச்சானாய் என்புந் தோலும் கொண்டாய் எனினும் எங்கள் தமிழே மூச்சானாய் அன்பே போதும் ஆறத் தூங்கு ஆரீர் ஆரீர் ஆரீரோ கைகால் நடுங்கும் உந்தன் உருவைக் கண்டார் இரங்கும் படி வாழ்ந்தாய் மெய்யாய் உணர்விற் தமிழே நினைவாய் மெலிந்தாய் வாடி மிக நொந்தாய் பொய்யாகிய இவ்வுலகின் பதவிப் போரைச் சகியாதுயிர் சோர்ந்தாய் ஐயா தூங்கு ஆறத் தூங்கு ஆரீர் ஆரீர் ஆரீரோ சீரார் தமிழின் சிறப்பிற்காகச் சிறை சென்றனையே செல்வா நின் பாரா முகம் ஏன் இழிமைத் தமிழர் பதவிப் பித்தால் நொந்தாயோ சோரா மனதிற் துயரச் சுமையாற் தோள் சோர்ந்தனையோ செல்வா எம் ஆராவமுதே போதும் தூங்கு ஆரீர் ஆரீர் ஆரீரோ