நன்னிச் சோழன்
கருத்துக்கள உறவுகள்+
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Topic: தவிபு கரந்தடிப் போர்முறைக் காலப் படிமங்கள் | LTTE Guerrilla Warefare Period Images
Everything posted by நன்னிச் சோழன்
-
ஆழ்கடலில் களமமைத்து சிங்கள கடற்படைக்கலத்தை மூழ்கடித்து கடலில் காவியமான கடற்கரும்புலிகள்.
தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றிலே கடற்புலிகளின் கடல்விநியோகமானது மிகவும் முக்கியம் வாய்ந்ததொன்றாகும். சர்வதேசக்கடற்பரப்பிலே வரும் எமது கப்பல்களில் இருந்து பொருட்களை கரையே கொண்டுவரும் மிக முக்கியமானதும், ஆபத்து நிறைந்ததுமான, இவ் விநியோகத்தினை கடற்புலிகள் மிகவும் வீரத்துடனும், விவேகத்துடனும் செய்வார்கள். சிங்களக்கடற்படை வந்துவிடடால் வீரத்துடன் சமர்செய்தபடியே, கரையேபொருட்களை பாதுகாப்பாகக் கொண்டுபோய்ச்சேர்ப்பர். சிலவேளைகளில் காலநிலைசீரின்மையால் கடுங்கொந்தளிப்பான அலைகளின்மத்தியிலும், சுழன்றடிக்கும் காற்றின் போதும், விவேகத்துடன் அதனை எதிர் கொள்வார்கள். கடற்புலிகள் அடையும் துன்பத்தினை வெறும் வார்த்தைகளில் எழுதிவிடமுடியாது.எவ்வித துன்பத்தையும் தமிழீழ விடியலுக்காக சாதாரணமாக ஏற்றுக்கொண்டு, சத்தியவேள்வியில் வித்தாகிய மாவீரர்கள் கடலில் மறைந்தாலும், மக்கள் மனங்களில் என்றும் நிறைந்திருப்பார்கள். 26.06.2000 அன்று கடற்படையின் பாரிய கடற்கண்காணிப்புக்கு மத்தியில் இடம்பெற்ற உகண கப்பல் மீதான கடற்கரும்புலித் தாக்குதல் .சர்வதேச விநியோக நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் கப்பல் மற்றும் படகு சந்தித்து பொருட்கள் மாற்றுமிடத்திற்கு (முல்லைத்தீவிலிருந்து கிட்டத்தட்ட எழுபத்தைந்து கடல்மைல் உயர) அண்ணளவான தூரத்தால் கடற்புலிகளின் தாக்குதலுக்கு அஞ்சியும் கடற்புலிகளின் ஆழ்கடல் விநியோகத்தைக் கட்டுப்படுத்தவும், திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கான விநியோக நடவடிக்கையில் கடற்படையின் பாரிய கப்பல்களான சக்தி, லங்காமுடித்த, உகண கப்பல்களும், தரையிறங்குக் கலங்களும், இவைகளுக்கு உதவியாக அதிவேக டோறாப் படகுகளும், அடிக்கடி ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அதுமட்டுமல்லாமல் பத்துக் கடல்மைல் தொடக்கம் அறுபது கடல்மைல் தூரத்தைக் கண்காணிப்பதற்காக அதிவேகடோறாப் படகுகளும் அறுபது கடல்மைல்களுக்கப்பால் கண்காணிப்பதற்காக வீரயா மற்றும் ஆழ்கடல் கலங்களும், ஈடுபடுத்தப்பட்டன. கடற்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட ஆழ்கடல் விநியோகத்தை இல்லாமல் செய்வதற்காக, கடற்படையினரால் வர்ணகீர கடல் கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனால் ஆழ்கடல் விநியோகம் பாதிக்கப்பட்டது. இதனைக் கருத்திலெடுத்த தலைவர் அவர்கள் கடற்புலிகளுக்கு அக் கடற்படை விநியோக அணி மீது தாக்குதல் நடாத்தி கடற்புலிகளின் ஆழ்கடல் விநியோக நடவடிக்யைத் தொடருமாறும், அதற்கான தாக்குதல் திட்டத்தையும் கொடுத்தது மட்டுமன்றிசில ஆலோசனைகளையும் கொடுத்தார். அதற்கமைவாக கடற்புலிகளின் கட்டளை அதிகாரிகளான லெப்.கேணல் ரஞ்சன். லெப்.கேணல் பழனி. மேஐர் ஆழியன் ஆகியோரின் தலைமையிலான சண்டைப்படகுகளும் இரண்டு கடற்கரும்புலிப் படகுகளும் சென்று ஆழ்கடலால் இராணுவத் தளபாடங்கள் மற்றும் படையினருக்குத் தேவையான பொருட்களுடன் வரும் கப்பலை இம்மூன்று சண்டைப்படகுகளால் தாக்கி வழியமைத்துக் கொடுக்க கரும்புலிப்படகுகளால் தாக்கி கப்பலை மூழ்கடிப்பதாகும். அதேநேரம் மேலதிகமாக வரும் கடற்படையினரை வழிமறித்து மறிப்புச்சமரை தொடுப்பதற்காக லெப்.கேணல் பகலவன் தலைமையிலான ஒரு தொகுதி சண்டைப் படகுகளும் இவர்களுக்கு உதவியாக கரும்புலிப்படகுகளும் நிலைகெண்டன. இவ்வளவு கண்காணிப்புக்களுக்கு மத்தியிலும் கடுமையான தென்மேற்க்குப் பருவக்காற்றுக்குள்ளும் இந்தத் தடைகளை உடைத்து தமிழீழத்திற்க்கு பலம் சேர்க்கின்ற நடவடிக்கைகளைத் தொடரவேண்டும் என்கிற நோக்கோடும் 25.06.2000 அன்று மாலை ரஞ்சன், பழனி, ஆழியன் ஆகியோர் தலைமையிலான சண்டைப்படகுகளும் கடற்கரும்புலிகளான சூரன் மற்றும் நல்லப்பன் தலைமையிலான கடற்கரும்புலிப்படகுகளும் சென்று முல்லைத்தீவுக்கு உயர அறுபது கடல்மைல் தூரத்தில் நிற்க - அந்தநேரத்தில் திருகோணமலையிலிருந்து கடற்படையின் விநியோகத் தொடரணி வருவதாக இப்படகுகளுக்கு அறிவிக்க தயார்நிலையிலிருந்த படகுகள் சீரற்ற காலநிலை மற்றும் கடும் காற்றிற்க்கும் மத்தியில் ஒருவாறு கப்பலை இணங்கண்டு அக்கப்பலைப் பின்தொடர்ந்த (26.06.2000 அன்று அதிகாலை) பழனி கப்பலின் மீது தாக்குதலைத் தொடுத்து வழியமைத்துக் கொடுக்க சூரனின் கரும்புலிப்படகு கப்பலின் மீது மோதியது. இம்மோதலால் கப்பல் நிலைகுலைய கப்பலிலிருந்து செறிவான தாக்குதல் நடாத்தியவண்ணமிருக்க பழனி, ரஞ்சன் மற்றும் ஆழியனது படகால் தாக்குதலை தொடுத்து வழியமைத்துக் கொடுக்க நல்லப்பனது கரும்புலிப்படகு கப்பல் மீது மோத கப்பல் வெடித்துச் சிதறி மூழ்கியது. இவ்வெற்றிகரத் தாக்குதலில் லெப் கேணல்.ஞானக்குமார், மேஐர் .சூரன், மேஐர். நல்லப்பன், மேஐர். சந்தனா, கப்டன் .இளமதி, கப்டன்.பாமினி ஆகிய கடற்கரும்புலிகள் கடலிலே காவியமானார்கள். இவ் வெற்றிகரத் தாக்குதலுக்குப்பின் சிங்களக்கடற்படையானது ஆழ்கடலிலும், கடற்புலிகளின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் திகைத்து நின்றனர். இந் நிலையினை எதிரிக்கு ஏற்படுத்தி கடலின் மடியில்.நிறைந்திருக்கும் எங்கள் வீரக்கடற்கரும்புலிகள், எங்களின் நினைவிலும் நிறைந்திருப்பார்கள். எழுத்துருவாக்கம்….சு.குணா. http://irruppu.com/wp-content/uploads/2023/06/கடற்புலிகளின்.jpg http://irruppu.com/2023/06/26/ஆழ்கடலில்-களமமைத்து-சிங-2/
-
பிரிகேடியர் சொர்ணம்
எங்கெல்லாம் தேசியத்தலைவர் நெருக்கடியான சிக்கல்களை முகம் கொடுக்கிறாரோ அங்கெல்லாம் 55 (பைபை) யின் குரல் முழங்கும். பிரிகேடியர் சொர்ணம் மதிப்பிற்குரிய பெருந்தளபதியுடனான நினைவுகளுடன்… திரு.அச்சுதன் (வான்புலிகளின் சிறப்புத் தளபதியாக இருந்தவர்) சொர்ணம் அண்ணா. அந்தப் பெயரிலே எத்தனை மிடுக்கு…. பள்ளிப் பருவங்களில் நாங்கள் புகைப்படங்களில் பார்த்து, அறிந்து வியந்த ஒரு மிகப்பெரும் கதாநாயகன். அவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்குமா, ஒரு முறையேனும் அவருடன் கதைத்து விட மாட்டோமா என்றெல்லாம் ஏக்கம் கொண்டிருந்தோம். http://irruppu.com/wp-content/uploads/2023/05/சொர்ணம்11.jpg உலகம் போற்றும் எம் பெரும் தலைவனைப் பாதுகாக்கும் பணியையும் பொறுப்பையும் திறன் பட ஏற்று சிறப்புடன் கடமையாற்றிக் கொண்டிருந்த பெரும் ஆளுமை மிக்க ஒரு தளபதியவர். அவரின் தோற்றமும் அவருக்கே உரித்தான அந்த நடையும் என்னையும் என்னைப் போல் பலரையும் கவர்ந்தன. http://irruppu.com/wp-content/uploads/2023/05/சொர்ணம்4.jpg நான் எனது கல்வியை முடித்து குறிப்பிட்ட வேலை திட்டங்களைச் செய்து கொண்டு 1998 இல் தாயகம் சென்றேன். மிகவும் கடுமையாக ஜெயசிக்குறு எதிர் சமர் நடந்து கொண்டிருந்த காலம் அது. ஒட்டுசுட்டான் வரை ராணுவம் முன்னேறி இருந்தது. இதே வேளை ஓயாத அலைகள்-3 இன் ஆரம்ப கட்ட வேலைகள் தொடங்கியிருந்தன. ஆனால் அப்போது அந்தச் சமரின் பெயர் அறியவில்லை. ஒட்டுசுட்டான் புதுக்குடியிருப்பு வீதி ராணுவத்தின் அடுத்த நகர்வாக இருக்கும் என கணிக்கப்பட்டதால் ஒட்டுசுட்டான் முக்கிய தளமாக இருந்தது. இந்தப் பகுதியின் பொறுப்பு சொர்ணம் அண்ணாவிற்கே வழங்கப்பட்டிருந்தது. ஓயாத அலைகள் 3 எதிர்ச் சமர் இப்பகுதியில் தான் ஆரம்பமானது. இச்சமருக்கான தொடக்க வேலைகளைச் செய்ததும் ஒட்டுசுட்டானை உடைத்து எதிரிகளை ஓட விரட்டி ஒரு பெரும் வெற்றிச் சமருக்கு வழி வகுத்து கொடுத்த வெற்றி நாயகனாக இவர் இருந்தார் என்பதையும் அறிந்தேன். http://irruppu.com/wp-content/uploads/2023/05/WhatsApp-Image-2023-05-15-at-07.56.50-840x485.jpeg அதேபோல் கடற்புலிகளின் நடவடிக்கைகள் கிழக்குக் கடல் பரப்பும் மேற்குக் கடல் பரப்பும் விரிவுபடுத்தப்பட்ட காலகட்டத்தில் கடற்புலிகளின் சிறப்புத் தளபதி பிரிகேடியர் சூசை அண்ணாவிற்கு உறுதுணையாக தமிழீழத்தின் மேற்குக் கடல் பகுதிகளுக்கான மன்னாரில் கடற்புலிகளின் நடவடிக்கைகளுக்கான பொறுப்பாளராக சொர்ணம் அண்ணா நியமிக்கப்பட்டிருந்தார். http://irruppu.com/wp-content/uploads/2023/05/சொர்ணம்10-496x840.jpg ஆண்டுகள் மெதுவாகக் கடந்தன. 2002 ஆம் ஆண்டு இறுதிப் பகுதியில் தலைவர் அவர்கள் சொர்ணம் அண்ணாக்கு என்னை அறிமுகம் செய்து வைக்கிறார். ஒருமுறை கண்டுவிட மாட்டோமா என்று நினைத்திருந்த எனக்கு அப்பெருந் தளபதியுடன் நெருங்கிப் பணியாற்றும் வாய்ப்பும் காலமும் கிடைத்ததில் பெருமிதமும் பெரு மகிழ்ச்சியும் கொள்கிறேன். வான் புலிகளின் சிறப்பு தளபதியாக இருந்த கேணல் சங்கர் அண்ணா அவர்களின் வீரச்சாவிற்குப் பிறகு வான்புலித் தலைமையில் ஒரு பெரும் வெற்றிடம் உருவானது. எமது படையாணி ஒரு மிகப்பெரும் வளர்ச்சியை நோக்கி பயணித்த காலகட்டம் அது. இந்த வேளை தளபதி கேணல் சங்கர் அண்ணாவின் இழப்பு இடியாய் விழுந்தது. http://irruppu.com/wp-content/uploads/2023/05/கேணல்-சங்கர்3.jpg விமானப் படையின் துரித வளர்ச்சியில் எந்தவொரு தொய்வுமில்லாமல் கொண்டு செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தலைவரின் ஆலோசனைக்கிணங்க கட்டுக்கோப்பாக படையணியைக் கொண்டு செலுத்தக்கூடிய ஒரு நபராக எமது தளபதி சொர்ணம் அண்ணா வான்புலிகளின் சிறப்புத் தளபதியாக தலைவரவர்களால் நியமிக்கப்படுகிறார். http://irruppu.com/wp-content/uploads/2023/05/வான்புலிகளின்-604x840.jpeg எமது பணிகள் காடு சார்ந்த இடங்களில் அமைந்திருந்ததால் அவரின் அனுபவம் எமக்கு பல விடயங்களை கற்றுத் தந்தது. வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். தலைவருடன் நெருக்கமாகப் பயணித்து அவரின் சிந்தனைகளுக்கு செயல் வடிவம் கொடுத்த ஒரு தளபதியுடன் பயணிக்கும் வாய்ப்பை நோக்கிச் சென்றேன். புதுக்குடியிருப்பில் இருக்கும் அவரின் தளத்திற்கு என்னை அழைத்திருந்தார். நான் சென்றவுடன் அவரே வந்து என்னை அழைத்துச் சென்று விருந்துபசாரங்கள் செய்து வெளிநாட்டு நிலவரங்களை கேட்டு அறிந்து கொண்டார். சங்கர் அண்ணா விட்டுச் சென்ற இடத்தை நிரப்பி அடுத்த கட்டத்திற்கு நாம் நகர உதவி தலைவர் கையளித்த பாரிய பணியை அவர் சிறப்புடன் நிறைவேற்றியது போன்ற பல விடயங்களை நான் அவரிடம் இருந்து கற்றுக் கொண்டேன். வான்புலிகள் காட்டுக்குள்ளேயே இயங்கிக் கொண்டிருந்த நிலையில் விமானங்களைப் பாதுகாத்துக் கடமையைச் சிறப்புடன் ஆற்றி அதைத் தெளிவாக எமக்கும் கற்றுக் கொடுத்தார். அருகிலேயே வைத்து நெருக்கடியான காலகட்டத்தை எப்படி கையாள்வது என்பதை செயல் வடிவாக்கிக் கற்றுத் தந்தார். பெருந் தரைச் சண்டைகளை ஒழுங்கமைத்து நடாத்தக்கூடிய வல்லமை மிக்க அத் தளபதி வரும் நாட்களில் ஆகாய தரைச் சமர்களை ஒருங்கிணைத்து நடாத்த வான்படை சார்ந்த அறிவைப் பெற்றுக் கொள்ள வேண்டிய தேவையும் அவருக்கு இருந்தது. போராளிகளை வழிநடத்தி சீர்ப்பட அதை எமது கைகளில் ஒப்படைக்கும் பொறுப்பை அவர் ஏற்றிருந்தார். அவர் என்னை அழைத்து ‘நான் தொடர்ந்து இந்த பொறுப்பில் இருக்க மாட்டேன் எனக்கு வேறு பொறுப்புக்கள் உள்ளன. நீங்கள் அனைத்தையும் தெளிவாக விரைவாகக் கற்றுப் பொறுப்பெடுங்கள்’ என்றார். பாதுகாப்பு. போராளிகளின் மனங்களை தொய்வடையாமல் பார்த்துக் கொள்வது. இப்பெரும் இயக்கத்தின் நிர்வாக முறைமை போன்றவற்றை செவ்வனக் கற்றுத் தந்தார். ஒரு நாள் என்னை மணலாற்றுக் காட்டிற்கு அழைத்துச் சென்று தளபதி பிரிகேடியர் பால்ராஜ் அண்ணாவை நோக்கி ‘லீமா இவர் யார் என்று தெரியுமா? இவர் தான் எனக்கு அடுத்துப் பொறுப்பேற்கப் போகிறார் என அறிமுகம் செய்தார். பின்பு இந்திய இராணுவ ஆக்கிரமிப்புக் காலத்தில் தலைவர் தங்கியிருந்த இடத்தைக் காட்டி மிகவும் அக்கறையுடன் சம்பவங்களை விளக்கிப் பொறுப்புணர்வுடன் நடந்த பெருந் தளபதி அவர். யாரின் அறிமுகமெல்லாம் தேவைப்பட்டதோ அவர்களையெல்லாம் சிறப்புடன் அறிமுகம் செய்து உறுதுணை மிக்க தளபதியாக விளங்கினார் சொர்ணம் அண்ணா. http://irruppu.com/wp-content/uploads/2023/05/சொர்ணம்12.jpg காட்டை மிகவும் அறிந்தவராக இருந்த சொர்ணம் அண்ணா எமது ஒடுதளத்திற்கான பாதையாக இரணைமடுவிற்க்கு கிழக்காகவும் வட்டக்கச்சி யிலிருந்து பழைய கண்டி வீதியில் ஒரு இடத்தை தேர்ந்தெடுத்தார். இது சண்டை தொடங்கினால் நகர்விற்கு இலகுவானதாகவும் இருந்தது. ஓடுதளம் அமைக்கும் பணி நன்றாக நடந்து கொண்டிருந்தது. http://irruppu.com/wp-content/uploads/2023/05/வான்3.jpeg இந்தக் காலகட்டத்தில் நான் மீண்டும் வெளிவேலையாக அனுப்பப்பட்டிருந்தேன். அப்போது தான் துரோகி கருணாவின் பிளவு ஏற்பட்டது. அத் துரோகச் செயலை முறியடித்து இயக்கத்தை மீட்டுவர கிழக்கிற்கு அனுப்பப்படும் பெரும் பொறுப்பையும் தேசியத் தலைவர் அவர்கள் சொர்ணம் அண்ணாவிற்கு வழங்கினார். எங்கெல்லாம் தேசியத்தலைவர் நெருக்கடியான சிக்கல்களை முகம் கொடுக்கிறாரோ அங்கெல்லாம் 55 (பைபை) யின் குரல் முழங்கும். அது தான் சொர்ணம் அண்ணாவின் திறன். http://irruppu.com/wp-content/uploads/2023/05/சொர்ணம்7.jpg தன்னுடன் நின்ற சில போராளிகளை வான்புலியில் விட்டு விட்டு ஒரு குறிப்பிட்ட போராளிகளுடனே அவர் திருகோணமலை சென்றார். சிலகாலம் கடந்த பின் தலைவரின் பணிப்பின் பெயரில் வட்டக்கச்சி முகாமில் வைத்து சிறந்த கட்டமைப்பாக என்னிடம் வான்படையைக் கையளித்து தனது வாகனம் ஒன்றையும் தந்தார். பறந்து காட்டுங்கள் உங்கள் காட்டில் மழை பெய்யும் எனத் தட்டிக் கொடுத்து என்ன உதவி என்றாலும் அழையுங்கள் செய்து தருகிறேன் எனக் கூறி மீண்டும் கோணமலை சென்றார். அடிக்கடி என்னை அழைத்து நிலவரங்களை தெரிந்து கொள்வார். http://irruppu.com/wp-content/uploads/2023/05/வான்-a.jpg அன்ரன் பாலசிங்கம் அண்ணா இறுதியாக தமிழ் ஈழம் வந்தபோது என்னை அழைத்துச் சென்று அறிமுகம் செய்தார். தமிழீழத்தின் பெரும் தளபதிகள் ஒன்று கூடியிருந்த அந்த இடத்தில் என்னையும் வான்புலியின் சிறப்பு தளபதி யாக அறிமுகம் செய்து பெருமைப் படுத்தினார். நன்றி உணர்வோடு நான் அவரை நினைக்கிறேன். தமிழீழ வரலாற்றில் பெரும் கதாநாயகனாகத் திகழ்ந்த சொர்ணமண்ணாவுடன் பயணித்த அனைவரும் பெருமை கொள்ள வேண்டும். http://irruppu.com/wp-content/uploads/2023/05/சொர்ணம்5.jpg நான் அறிந்து செய்வதறியாமல் நின்ற அவரின் ஈகம். வாழ்வா சாவா என்று நம் தேசம் களம் கண்டு கொண்டிருந்த நாட்களில் தன் மூத்த மகளை தானே கொண்டு போய் தேசத்திற்கான பெரும் பணியில் இணைத்துவிட்டு அதே மிடுக்குடன் நடந்த வீரத் தந்தையவர். அப்பாவும் மகளுமாய் ஒரே காலகட்டத்தில் நாட்டுக்காகப் பணி செய்து மடிந்த வீர காவியங்களை வடித்த நிலமாக எம் தாய் நிலம். இப்படிப்பட்ட வீரப் பெரும் தளபதிக்கும் அவரது மகளிற்க்கும் வீரவணக்கம். http://irruppu.com/wp-content/uploads/2023/05/சொர்ணம்9-594x840.jpg தம் குடும்பத்தை விடுத்து தலைவனையும் மண்ணையும் நேசித்து முள்ளிவாய்க்காலில் தமது இலட்சியப் பாதையில் மடிந்த வீரப்பெருந்தளபதிகளையும் போராளிகளையும் நெஞ்சில் நிறுத்தி நாம் ஒற்றுமையுடன் உரிமைக்காய் குரல் கொடுப்போம். ‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்’ -எழுத்து அ.வி.முகிலினி http://irruppu.com/2023/05/14/பிரிகேடியர்-சொர்ணம்/
-
"மண்டைதீவுச் சமர்" எவ்வாறு நடைபெற்றது
1994ம் ஆண்டு மாவீரர் வாரத்தில் தீவகம் முழுவதையும் கைப்பற்ற ஒரு நடவடிக்கை எம்மால் மேற்கொள்ளப்பட்டது. அதற்கமைவாக பெருமளவில் படையணிகளை ஒன்று திரட்டி கடும் பயிற்சிகள் கொடுக்கப்பட்டு தலைவரின் ஆலோசனையும் நிறைவுபெற்று திட்டங்கள் விளங்கப்படுத்தப்பட்டது. இந்நடவடிககையின் தரைத் தாக்குதலணியை மூத்த தளபதி பானு அவர்கள் வழிநடத்த கடல் நடவடிக்கையை கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை அவர்கள் வழி நடத்த இவைகளை ஒருங்கமைத்து தலைவர் வழிநடத்துவார். ஆனால் இறுதி நேரத்தில் வேவுத்தரவின் பிரகாரம் லெப் கேணல் கில்மன் அவர்களின் பெரியதொரு அணி செல்லவேண்டிய பாதையில் இரு காவலரணை தீடிரென இராணுவம் அமைத்ததாலும் இன்னும் சிலவேவுத்தரவுகளினாலும் இத்தாக்குதல் இடைநிறுத்தப்பட்டது. இத்தாக்குதல் பற்றி அணிகளுடன் கதைத்த தளபதி பால்ராஐ் அவர்கள், உள்ளுக்கு பானு அண்ணை தான் வருவார். நான் தெலைத்தொடர்புக் கருவியூடாக கதைத்தால் நீங்கள் நினையுங்கோ அண்ணைதான் கதைக்கிறார் என்றார். அதன் பின்னர் சிலகாலம் பயிற்சிகளில் ஈடுபட்ட எமதணிகள் 1995ம் ஆண்டு போர் நிறுத்த காலத்தில் அவரவர் மாவட்டங்களுக்குச் சென்றன . போர் நிறுத்தம் முடிந்தவுடன் மீண்டும்அவ் அணிகள் ஒன்றாக்கப்பட்டு மூத்த தளபதி பானு மூத்த தளபதி சொர்ணம் தலமையில் பளை எனுமிடத்தில் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இப்பயிற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் ஒருநாள் நாங்கள் மதிய உணவு சாப்பிட்ட பின்னர் பயிற்சிக்காக பயிற்சியிடத்திற்க்கு புறப்பட்ட வேளையில் ஒரு வாகனம் வந்ததைக் கவனித்த சொர்ணமண்ணை வாகனத்தருகே சென்றார். அங்கே தலைவரைக் கண்டவுடன் ”அண்ணை கதைக்க ஒழுங்குபடுத்தட்டா?” எனக் கேட்க தலைவரோ “ஒரே கதைக்கிறது தான் விடு பயிற்சி பார்க்க” எனக் கூறிவிட்டு பயிற்சியிடத்திற்க்குச் சென்று பயற்சிகளைப் பார்வையிட்டு சில ஆலோசனைகளையும் வழங்கினார். சிலவாரங்கள் பயிற்சிகள் நடைபெற்றன அதன் பின்னர் தாக்குதலிற்கான திட்டம் விளங்கப்படுத்தப்பட்டு தாக்குதல் நடைபெற்றது. இத் தாக்குதலில் ஈடுபடுகின்ற போராளிகளை 27.06.1995 அன்றிரவு கடற்புலிகள் செவ்வனவே மண்டைதீவூக்குள் தரையிறக்கினர். 28.06.1995 அன்று அதிகாலை இத்தாக்குதல் ஆரம்பித்தது. குறிப்பிட்ட நேரத்திற்க்குள் முகாம் விடுதலைப்புலிகளிடம் வீழ்ந்தது. இத்தாக்குதலை, உள்நடவடிக்கைகளை மூத்த தளபதி பானு அவர்கள் உள்ளேயிருந்து வழி நாடாத்த கடல் நடவடிக்கைகளை கடற்புலிகளின் சிறப்புத்தளபதி சூசை அவர்கள் வழிநடாத்த இவையிரண்டையும் மூத்த தளபதி சொர்ணம் அவர்கள் தலைவரின் ஆலோசனையுடன் வழிநடாத்தினார். இச்சமரில் மக்களின் பங்களிப்பும் மிகவும் அளப்பரியது. இச்சமர் முடந்தவுடன் அச் சண்டையில் பங்குபற்றிய அணிகளைச் சந்தித்த தலைவர் அவர்கள் அணிகளைப் பாராட்டியதுடன் தவறு செய்தவர்களை கண்டிக்கத் தவறவும் இல்லை. தமிழீழத்தில் இதுவரை இடம்பெற்ற சமர்களில் ஆயுத மற்றும் கூடிய இராணுவத்தை குறைந்த இழப்புகளுடன் இச்சமர் இடம் பெற்றதாகவும் தலைவர் குறிப்பிட்டார். – எழுத்துருவாக்கம் சு.குணா. http://irruppu.com/2022/06/27/மண்டைதீவுச்-சமர்-எவ்வாறு/
-
போராளிகளை வளர்த்து விடும் ஆசான் லெப். கேணல் சேரமான்.
மேற்கண்ட கட்டுரையை எழுதியவர் : சு. குணா
-
06.03.1987 அன்று விடுதலைப்புலிகளால் வெற்றிகரமாக தாக்கயழிக்கப்பட்ட யாழ் தொலைத்தொடர்பு நிலைய மினிமுகாம் தாக்குதல் ஒரு பார்வை
யாழ்ப்பாணம் கோட்டைமுகாமிலிருந்து முன்னேறிய இராணுவத்தினர் யாழ்தொலைத்தொடர்பு நிலையத்தில் முகாமிட்டனர் . அவ்வாறு முகாமிட்ட படையினர் அப்பகுதி மக்கள் மீது மிருகத்தனமான தாக்குதலை தொடர்ந்து நடாத்திக்கொண்டுவந்தனர்.{அதாவது மோட்டார் மற்றும் இலகுரக ஆயுதங்களைக் கொண்டு} இத்தகவல்களை தளபதி கிட்டண்ணா அவர்கள் தலைவர் அவர்களின் கவனத்திற்க்குக் கொண்டுவந்தார் . அத்துடன் இம்முகாம் சம்பந்தமான வேவுத்தகவல்களையும் கொடுத்தார். இவைகள் அனைத்தையும் தீவிரமாக ஆராய்ந்த தலைவர் அவர்கள் உடனடியாக இம்மினிமுகாமை தாக்கியழித்து மக்களைப்பாதுகாக்குமாறு பணித்ததுடன் யாழ்மாவட்ட தாக்குலனிகளுடன் மேலதிகமாக மன்னார் மாவட்ட தக்குதலனியையும் இத்தாக்குதலுக்கப் பயன்படுத்தமாறும் அத்துடன் தனது மெய்பாதுகாப்பாளர்கள் சிலரையும் அனுப்பிவைத்தார். அதற்கமைவாக இம்மினிமகாமைதாக்கியழிப்பதற்கான திட்டத்தை தளபதி கிட்டண்ணா அவர்கள் விளங்கப்படுத்தி இத்தாக்குதலுக்கான முக்கியத்துவத்தையும் தாக்குதலனிகளுக்குத் தெளிவுபடுத்தினார் .அதற்கமைவாக தாக்குலனிகள் 06.03.1987 அன்று அதிகாலை யாழ்தொலைத்தொடர்பு நிலைய மினிமுகாம்மீது தளபதி கிட்டண்ணா விளங்கப்படுத்திய தாக்குதற் திட்டத்திற்கமைவாக ஒரு அதிவேக மின்னல் தாக்குதலை மேற்கொண்டனர் . குறிப்பிட்ட நிமிடத் தாக்குதலின் பின் மினிமுகாம் விடுதலைப்புலிகளின் பூரண கட்டுப்பாட்டின் கீழ்வந்தது .இவ்வெற்றிகர மினிமுகாம் தாக்குலில் பல படையினர் கொல்லப்பட்டும் எட்டுப்படையினர் விடுதலைப்புலிகளிடம் சரணடைந்தனர். மற்றும் பல அதிநவீன ஆயுதங்களும் வெடிபொருட்களும் விடுதலைப்புலிகளால் கைப்பற்றப்பட்டன. இத்தாக்குதலில் ஐம்பது போராளிகள் பங்குபற்றியிருந்தனர்.இத்தாக்குதல் மூலம் பொதுமக்களுக்குப் பேரழிவை ஏற்படுத்திய முகாம் முற்றுமுழுதாக கைப்பற்றி தொடர்ந்தும் தமது முழுக்கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர்.இவ்வெற்றிகரத் தாக்குதலை தளபதி கிட்டண்ணா செவ்வனவே வழிநடாத்தியிருந்தார். கிட்டண்ணாவிற்க்கு உதவியாக அப்போதைய மன்னார் மாவட்டத் தளபதி ராதா அண்ணா அவர்களும் செவ்வனவே செயற்பட்டிருந்தார். இவ்வெற்றிகரத்தாக்குதலில் மூன்று போராளிகள் வீரச்சாவடைந்தனர் . அவர்களின்.. விபரம் வருமாறு. கப்டன். நிக்சன். 2ம் லெப். அசோக். வீரவேங்கை.ரதன் ஆகியோர் வீரச்சாவடைந்தனர். -எழுத்துருவாக்கம். சு.குணா.
-
கரும்புலி கப்டன் ஈழவன்
1991 ம் ஆண்டின் பிற்பகுதியில் பல்கலைக்கழக மாணவர்கள் ஒரு தொகையினர் ஒன்றாக வந்து அமைப்பில் இணைந்து கொண்டனர் .அவ் அணிகளில் ரொபேட்சனாக வந்தவன் தான் ஈழவன் .அவர்களை ஒன்றாக யாழ் நகரின் புறநகர்ப் பகுதியில் ஒரு பயிற்சிமுகாம் அமைக்கப்பட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு பயிற்சிகள் முடிவடைந்தவுடன் .யாழ் மாவட்டத் தாக்குதலனியில் இணைக்கப்பட்டு மேலதிக பயிற்சிகள் வழங்கப்பட்டுக் கொண்டிருந்த வேளையில் தான் .எதிரியின் பலவேகய 02 இராணுவ நடவடிக்கை எதிரான மறிப்புச் சமரில் பங்குபற்ற சந்தர்ப்பம் சிலருக்குக் கிடைத்தது .அதில் ஒருவனாக ஈழவனும் பங்கு பற்றினான்.இச் சமரில் இவன் தனது திறமையான செயற்பாட்டால் போராளிகள் பொறுப்பாளர்கள் மத்தியில் ஒருநல்ல சண்டைக்காரணாக இணங்காணப்பட்டான் இம் மறிப்புச் சமரின் இரண்டாம் நாளில் இவனது நண்பணான லெப்ரினன் சர்மா வீரச்சாவடைகிறான்.இச் சமரின் இவனது திறமையான செயற்பாட்டை அவதானித்த பொறுப்பாளர்.இவனை கனரக ஆயுதப்பிரிவிற்க்கு அனுப்புகிறார்..அங்குபயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையில் 150 காவலரன் மீதான தாக்குதலிற்கான அணிகள் பிரிக்கப்படும் போது இவனது அணியும் தேர்வு செய்யப்பட்டு அச்சமரில் பங்குபற்றியது.அதனைத் தொடர்ந்து யாழ் மாவட்டத்தில் நடைபெற்ற இராணுவத்தின் முன்னேற்றத்துக்கு எதிரான பெரும்பாலான சமர்களில் பங்குகொண்ட ஈழவன்.மணலாறு மண்கிண்டிமலை இராணுவ முகாம் தாக்குதலிலும் பங்காற்றினான்.அதன் பின்னர் வலிந்த தாக்குதல் ஒன்றிற்கு பயிற்சிக்காக அணிகள் பிரிக்கப்பட்டு பயிற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் இராணுவத்தின் யாழ்தேவி இராணுவ நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரிலும் தனது அணியுடன் மிகவும் திறம்படசண்டையிட்டான்.சண்டைமுடிந்தவுடன் பழையபடி பயிற்சிகள் தொடர்ந்தன .அவர்கள் எடுத்த பயிற்சிக்கான அந்த நாளும் வந்தது அதுதான் பூநகரி கூட்டுப்படைத்தளம் மீதான தாக்குதல் அத்தாக்குதலிலும் பங்காற்றினான்.இதற்கிடையில் தன்னை கரும்புலிகளனிக்கு தன்னை இணைத்துக் கொள்ளுமாறு தலைவர் அவர்களுக்கு அடிக்கடி கடிதம் எழுதிக் கொண்டிருந்தான்.அதற்கான பதிலும் வர யாழ்மாவட்டத் தாக்குதலனியிலிருந்து கரும்புலிகள் அணிக்குச் சென்றான்.அதன் பின் சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கைக்கு பின் புலமாக இயங்கும் வழங்கல் மற்றும் கனரக ஆயுதங்கள் மற்றும் கட்டளைமையங்கள்.மீது தாக்குதல் நடாத்தி எதிரியின் முன்னேற்ற நடவடிக்கையை திசைதிருப்புத்தாக்குதலை நடாத்துவதற்க்கு தலைவர் அவர்களால் கரும்புலிகளுக்கு வழங்கப்படுகிறது .கரும்புலிகளை இராணுவப் பிரதேசத்திற்குள் அனுப்பும் பொறுப்பு மூத்த தளபதி பானு அவர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.அதற்கமைவாக அளவெட்டியில் அமைந்திருந்த காவலரன்களை தாக்கி அழித்து கரும்புலிகளை இராணுவப் பிரதேசங்களுக்கு அனுப்பினார்கள்.அங்கு சென்றவர்கள்.இவர்கள் உள் நுழைந்ததை அறிந்ததால் இராணுவம் பின் தொடர்ந்து சென்றதாலும் ஏற்பட்ட மோதலில் இராணுவத்திற்க்கு பாரியதொரு தாக்குதலைத் தொடுத்து போராடி வீரச்சாவடைகின்றனர். இருப்பினும் இராணுவம் தனது இராணுவ நடவடிக்கையை தற்காலிகமாக இடைநிறுத்தி தனது பிரதேசங்களில் தேடுதல் நடாத்தினான் .இவர்களது இம் முயற்சி முழுமையாக வெற்றி பெறாவிடினும் இவர்களது தியாகத்தால் இயக்கம் இராணுவ முன்னேற்றத்திற்க்கு எதிராக தமது நிலைகளை பலப்படுத்துவதற்க்கும் அணிகளை மீளொளுங்கு செய்வதற்க்கும். காலஅவகாசத்தை வழங்கியது.இத்தீரமிகு வெற்றிகரத் தாக்குதலில் கரும்புலி கப்டன் ஈழவன் உட்பட்ட பதினொரு கரும்புலிகள் வீரச்சாவடைகின்றனர். எழுத்துருவாக்கம்...சு.குணா. http://irruppu.com/2021/01/31/கரும்புலி-கப்டன்-ஈழவன்-ஈ/
-
லெப். கேணல் ராஜனின் வீரச்சாவிற்கு நடத்தப்பட்ட பழிவாங்கும் தாக்குதல்
http://irruppu.com/2022/08/27/ஒரு-தளபதியின்-வீரச்சாவிற/ 27.08.1992 மாதகலில் காவியமான மேலாளர்கள் பயிற்சிக் கல்லூரியின் பொறுப்பாளர்(சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி) லெப்.கேணல் ராஜன் அண்ணா உட்பட்ட ஒன்பது மாவீர்களின் 30ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும் எதிரியால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் வீரச்சாவடைந்த தளபதி லெப்.கேணல் ராஜன் உள்ளிட்ட போராளிகளின் வீரச்சாவிற்க்கு பதிலாக பதிலடித் தாக்குதல் ஒன்றை நடத்தும்படி தலைவர் அவர்களால் தளபதி சொர்ணம் அவர்களுக்கு கூறப்பட்டது. ( உண்மையிலேயே காவலரனையோ முகாம்களையோ தாக்குவதாயின் அதற்கான வேவுத்தகவல்களை திரட்டி தலைவர் அவர்களிடம் கூறி அவர் அதன் சாதக பாதக நிலமையை உற்று நோக்கி அதற்கான ஆலோசனையும் வழங்கி அதன் பின்னர் அணிகளை ஒன்றாக்கி அதே போல காவலரனையோ முகாமையோ மாதிரி செய்து கடுமையான வேகமான பயிற்சிகள் முடித்து தாக்குதல் திட்டம் விளங்கப்படுத்தப்பட்டு அதன் பின்பே தாக்குதல் நடக்கும். ) அந்த நேரத்தில் வேவு பார்த்து தாக்குதல் நடத்துவதென்பது இலகுவானதொன்றல்ல. மாதக்கணக்கில் அல்லது வருடக்கணக்கில் கூடச் செல்லலாம் அதுவும் ஒரு தளபதியின் வீரச்சாவுக்குப் பழிவாங்குவதென்பதென்றால் உடனடியாக தாக்குதல் நடத்த வேண்டும். அதுவும் குறிப்பிட்டளவு படையினரைக் கொல்லவேண்டும். இவையிரண்டும் இல்லாவிடில் அது பழிவாங்குத் தாக்குதல் ஆகாது. அதுவும் பல்வேறு சமர்க்களங்களில் பங்குபற்றிய ஒருவீரன் கிட்டண்ணா யாழ்மாவட்டத் தளபதியாகவிருந்த காலத்திலிருந்து பல் வேறு சமரக்களங்களில் தனது திறமையான செயற்பாட்டால் போராளிகளின் மனதில் இடம் பிடித்த ஒருவீரன். பல் வேறு இடங்களில் பல்வேறு களங்களை வழிநாடாத்திய ஒரு தளபதியின் வீரச்சாவிற்கு பழிவாங்குவதென்றால். அதுவும் ஒரு நாளுக்குள் இச் சமர் இடம்பெற்றது. வேவு பார்க்கத் தொடங்கிய குறிப்பிட்ட நாட்களுக்குள் அவ் வேவுத்தகவல்களின் அடிப்படையில் இத்தளபதியின் வீரச்சாவிற்குப் பதிலடியாக ஒரு தாக்குதல் நடாத்துவதற்கான இடம் தெரிவு செய்யப்பட்டது. அதுதான் வெற்றிலைக்கேணி பெரிய மண்டலாய். வழமையான பயிற்சியில் ஈடுபட்ட போராளிகள் அவசரஅவசரமாக இயக்கச்சியில் ஒன்றாக்கப்பட்டு தாக்குதல் பற்றியும் அதன் முக்கியம் பற்றியும் தளபதி சொர்ணம் அவர்களால் போரளிகளுக்கு விளங்கப்படுத்தப்பட்டது.தாக்குதல் திட்டம் விளங்கப்படுத்தப்பட்டதோடு மட்டுமல்லாது அணிகளுடன் தாக்கவேண்டிய காவலரன்களுக்கு மிக அண்மையில் வந்து காவலரன் களையும் காட்டி தாக்குதலையும் வழிநடாத்தினார். தளபதி ராஜன் அவர்கள் வீரச்சாவடைந்து இருபத்திநான்குமணிநேரத்தில் அதாவது 28.08.1992ல் இடம் பெற்ற இப் பழிவாங்கு வெற்றிகரத்தாக்குதலில் நான்கு போராளிகள் வீரச்சாவடைந்தனர். எழுத்துருவாக்கம்….சு.குணா.
-
புலிகள் காலத்திய இயக்கப்பாடல்களின் 221 இறுவட்டுகள் | திரட்டு
இறுவட்டு அட்டைகள் பூநகரி நாயகன் எவ்வட்டை முதலில் வெளியானது என்பது தெரியவில்லை.
-
புலிகள் காலத்திய இயக்கப்பாடல்களின் 221 இறுவட்டுகள் | திரட்டு
இறுவட்டு அட்டைகள் பூகம்பப் பொறிகள்
-
புலிகள் காலத்திய இயக்கப்பாடல்களின் 221 இறுவட்டுகள் | திரட்டு
இறுவட்டு அட்டைகள் புனர்வாழ்வு
-
புலிகள் காலத்திய இயக்கப்பாடல்களின் 221 இறுவட்டுகள் | திரட்டு
இறுவட்டு அட்டைகள் புலிகள் பாடல் இதுவும் ஊழியால் அழிந்து போனது; இதன் இசைகொண்ட பாடல்கள் அழிந்துபோய்விட்டன. இருப்பினும் இவ்விறுவட்டினுள்ளிருந்த ஒவ்வொரு பாடலின் வரிகளும் உள. இதன் மூல அட்டை கூட கிடைக்கப்பெறவில்லை.
-
புலிகள் காலத்திய இயக்கப்பாடல்களின் 221 இறுவட்டுகள் | திரட்டு
இறுவட்டு அட்டைகள் புலிகள் ஓய்வதில்லை இவ்விறுவட்டின் மூல அட்டை எனக்குக் கிடைக்கப்பெறவில்லை. வணிக நோக்கில் வெளியிடப்பட்ட அட்டைகள் மட்டுமே காணக்கிடைக்கின்றன.
-
புலிகள் காலத்திய இயக்கப்பாடல்களின் 221 இறுவட்டுகள் | திரட்டு
இறுவட்டு அட்டைகள் புலிகளின் புரட்சி இசை விழா இதன் மூல அட்டையை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. வணிக நோக்கில் வெளியிடப்பட்ட அட்டைகள் மட்டுமே காணக்கிடைக்கின்றன.
-
புலிகள் காலத்திய இயக்கப்பாடல்களின் 221 இறுவட்டுகள் | திரட்டு
இறுவட்டு அட்டைகள் புலத்தில் தமிழர் எழுச்சிப் போராட்ட பாடல்கள்
-
புலிகள் காலத்திய இயக்கப்பாடல்களின் 221 இறுவட்டுகள் | திரட்டு
இறுவட்டு அட்டைகள் புலத்திலிருந்து ஓர் தமிழ்க்குயில்
-
புலிகள் காலத்திய இயக்கப்பாடல்களின் 221 இறுவட்டுகள் | திரட்டு
இறுவட்டு அட்டைகள் புயலாகும் புது ராகங்கள் இவ்விறுவட்டில் சிங்களத்திலும் தமிழிலும் விடுதலைப் பாடல்கள் இடம்பெற்றிருந்தன. இதுவும் ஊழியால் அழிந்து போனது. இதன் மூல அட்டை கூட கிடைக்கப்பெறவில்லை.
-
புலிகள் காலத்திய இயக்கப்பாடல்களின் 221 இறுவட்டுகள் | திரட்டு
இறுவட்டு அட்டைகள் புயல் அடித்த தேசம்
-
புலிகள் காலத்திய இயக்கப்பாடல்களின் 221 இறுவட்டுகள் | திரட்டு
இறுவட்டு அட்டைகள் புதுவேட்டு புலிப்பாட்டு
-
புலிகள் காலத்திய இயக்கப்பாடல்களின் 221 இறுவட்டுகள் | திரட்டு
இறுவட்டு அட்டைகள் புதியதோர் புறம் விடியலின் பாடல்கள் இசை இறுவட்டில் வெளியான சில பாடல்கள் புதியதோர் புறம் என்ற இறுவட்டில் தவறுதலான புரிதலால் சில வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளன. நெருப்பில் விளைந்த பொறிகள் திறனாய்வு: பாபு மூலம்: ஈழநாதம் 10-02-1991 பக்கம்: கடந்த 30-12-90 அன்று மட்டக்களப்பு பாடும் மீன் கலைமன்றத்தினரால் வெளியிடப்பட்ட 'புதியதோர் புறம்' ஒளிப்பதிவு நாடாவின் அறிமுகவிழா நல்லூர் சாதனா பாடசாலையில் நடைபெற்றது. தமிழீழக் களைஞர்களின் வளர்ச்சி வேகங்களின் வெளிப்பாடாக வெளிவந்த "இந்தமண் எங்களின் சொந்தமண்", "பூபாளம்", "வேங்கைகளின் விடுதலை வேதங்கள்" வரிசையில் 'புதியதோர் புறம்' எனும் புதிய வெளியீடான இது மிகவும் தரமானதாகவும், கேட்பதற்கு இனிமையாகவும் எமது மக்களின் விடுதலை வேட்கையையும் போராட்ட உணர்வுகளையும் ஆழமான கருத்துகள் மூலம் வெளிப்படுத்திக் காட்டுகின்றது. பாடு மீன் கலைமன்றத்தின் தலைவரான திரு அமிர்தராஜ் அவர்களின் இந்தப் பணியானது போராட்ட வளர்ச்சிக்கு கலைஞர்களின் பங்களிப்பை அதிகரிக்கும் நோக்கத்துடன், மக்களை தட்டி எழுப்பும் வகையில் அமைந்திருப்பதும் மிகவும் பாராட்டப்பட வேண்டியதாகும். ஒலிப்பதிவு நாடாவின் ஆரம்பத்தில் வரும் சில வரிகள் ஒலிப்பதிவு நாடாத் தொகுப்பானது இந்த மண்ணின் விடிவிற்காய் வகிக்கும் பங்கினை விபரிக்க, அதைத் தொடர்ந்து பாடல்கள் ஆரம்பிக்கின்றன. முதல் பாடலே, எம்மை பிரமிக்க வைக்கின்றது. எங்கோ ஒரு தெய்வ சந்நிதானத்தில் அமைதியான ஒரு சூழலில் ஒலிக்கும் தேவகானம் போன்று அந்தக் குரல் ஒலிக்கின்றது. "எந்தயர் ஆண்டது இந்நாடாகும்! இதை எதிரிகள் ஆள்வது கேடாகும்! வந்து நீ களத்தினில் போராடு, அடிமை வாழ்விலும் சாவது மேலாகும்" என்று ஆரம்பிக்கும் அந்தப்பாடல், மறைந்த தென் இந்தியப் பாடகர் சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் தமிழீழ மக்களுக்காக பாடிச் சென்றாரோ என எண்ணத் தோன்றுகின்றது. கணீரென்ற அவரது தொனியும், இசை அமைப்பும் உண்மையில் ஒரு தேவகானமேதான். அழகான அந்தக் குரலுக்குரியவர் பாராட்டப்பட வேண்டியவரே. அந்தப்பாடலில் விசேட அம்சம் என்னவெனில், தமிழீழத்தின் வளங்களைப் பற்றியும், தமிழீழத் துரோகிகளின் கொடுமைகளையும் சித்தரித்து, இறுதியில் "தாயகம் மீட்டிட நீ ஓடு - பிரயா தானையில் சேர்ந்தொரு புலியாகு போயினித் தெருவினில் விளையாடு – தமிழ் பூத்திட புதியதோர் புறம் பாடு" என்று அழகாக விபரித்திருக்கிறார் கவிஞர். அடுத்த பாடலும், எமது விடுதலைப் போராளிகளான புலிகளின் தன்மையை புலிகளின் மன உறுதியை எடுத்துச் சொல்வதைப் போன்று அமைந்த கவிஞரின் பாடலை ஆண்-பெண் குரலிசையால், சோடிப்பாடலாக அழகாகப்பாடி மெருகேற்றியிருக்கின்றார்கள் பாடகர்கள். பெண்குரலின் சங்கீத நயத்துடன் ஆரம்பிக்கும் அப்பாடல், "நெருப்பில் விளைந்த பொறிகள் - நாங்கள் நஞ்சைத் தின்னும் புலிகள், இரும்பில் வார்த்த சிலைகள் - தலைவன் இதயம் கவர்ந்த கணைகள்" என்று தொடர்கிறது. பெண்குரல் மிகத் தெளிவாகவும், அழகாகவும் ஒலிக்கின்றது. இதேபோல, இன்றைய காலகட்டத்தில் ஒரு ஸ்திரமற்ற ஒரு வாழ்க்கைப் பயணத்தில் நின்று கொண்டிருக்கும் குழந்தைகளை, "தம்பிகளே அன்புத் தங்கைகளே நில்லுங்கள் உங்கள் சரித்திரம் என்ன சொல்லுங்கள்! போர்க்களம் சென்றிட ஒன்றாய் சேருங்கள். புதயுகம் பல படைப்போம் வாருங்கள்" என கூவி அழைக்கும் கவிஞரின் பாடலை, அழகான குரலில் இனிமையாக சோகமாக பாடி மக்கள் மனதில் தன்னை பதியவைத்துள்ளார் ஒரு பாடகர். ஆண்குரல் மிக இனிமையாக ரசிக்கூடிய வகையில் இருக்கின்றது. ஒவ்வொரு பாடல்களையும் வித்தியாசமான வகைகளில் இசையமைத்திருக்கும் இசையமைப்பாளர் அடுத்தபாடலை ஒரு துள்ளிசையாக மெருகூட்டியிருக்கின்றார். காலம் சென்ற மக்கள் திலகம் எம். ஜி. ஆரின் கொள்கை விளக்க சீர்திருத்தப் பாடல்கன் போல அமைந்த இந்தப் பாடல் மிகவும் பிரமாதம். "போடு போடு வீரநடை போடு! வெல்வோம் வெல்வோம் வீரநடைபோடு. ஆறிலும் சாவு நூறிலும் சாவு மானமிருந்தால் தானே வாழ்வு" என்று ஆரம்பிக்கும் இந்தப் பாடல் கடைசி நிலைகளில் பாடலின் இசையின் சந்தம் மாறி பின்னர் மீண்டும் பழைய ராகத்துடன் சேர்ந்து "போடு போடு வீர நடை போடு" என்று நான்குமுறை சுருதியை அதிகரித்துப் பாடி பாடலை முடித்து வைக்கும் போது எமக்குள்ளேயே ஒரு உத்வேகம் பிறக்கின்றது. குதிரை மீது சென்று கொண்டிருப்பது போல கற்பனை பண்ணி இசை அமைத்திருக்கிறார் இசையமைப்பாளர். நிச்சயமாக இந்தப் பாடல் சிறுவர் - மாணவர் – இளைஞர் - யுவதிகள் - முதியவர் என்ற வேறுபாடின்றி ஒவ்வொருவரின் வாயிலும் வெளிவரும் என்பது திண்ணம். இந்தப் பாடகருக்கு பாராட்டுக்கள் பலமுறை வழங்களாம். அதைத் தொடர்ந்து, "மானம் ஒன்றே வாழ்வென கூறி வழியில் நடந்தான் மாவீரன் அவன் போன வழியில் பயலென எழுந்து ஓடி வந்தார் புலிவீரர்" என்று பெண்குரல் ஒன்று சோகமாக ஒலிக்கின்றது. குரலில் எந்தவித தள தளப்புகளும் இன்றி இனிமையாக பாடியிருக்கும் இந்தக் குரல் பாராட்டப்பட வேண்டிய குரல். போராட்டத்தின் சிந்தனையின்றி தூங்கிக் கொண்டிருக்கும் ஒருவரை தட்டியெழுப்புவது போலவும், வெட்டவெளியில் காவலரண்களில் நின்று போராடும் புலிகளின் நிலை பற்றியும் விளக்கும் வகையில் ஒலிக்கிறது ஓர் ஆண்குரல். "தூக்கமேனடா தமிழா தூக்கமேனடா! நிமிர்ந்து நில்லடா நீயும் துணிந்து செல்லடா" என்று ஆரம்பிக்கின்றது அந்தப் பாடல். உறுதியான குரலில் அழகாகப் பாடியிருக்கிறார் பாடகர். அது போல, "சிங்களம் எங்களைக் கொன்று குவிக்கும், தமிழர் சிந்திய குருதியில் எம் மண் சிவக்கும்! இங்கிவர் தீமையை தேசம் பொறுக்கும், கொடும் எதிரியை குதறிட புலிகள் கறுக்கும்" என்று ஒருபாடல் ஆண்குரலில் ஒலிக்கிறது. இப்பாடலில் தென் தமிழ் ஈழத்தின் இன்னல்கள் தெரிகிறது. அதற்கேற்ற தொனியில் பாடியிருக்கும் பாடகருக்கு வாழ்த்துக்கள். அடுத்ததாக, ஒரு போராளி மாண்டுபோன தனது சக போராளிகளை அழைப்பது போலவும் தாம் ஒன்றாய் கூடித்திரிந்த காலங்களையும், இன்று பிரிந்து நின்று கலங்குவதையும் விவரித்து ஒரு பாடல் ஒலிக்கின்றது. "மாண்டுபோன மைந்தர்களே என்னை சுமந்து நின்ற நண்பர்களே மீண்டும் இங்கே கூடுங்கள் ஈழம் மீட்போம் இங்கே வாருங்கள்.” என்று ஆரம்பிக்கும் இப்பாடலும் இனிமையாக இருக்கின்றது. ஒரு வித்தியாசமான வகையில் அமைந்ததும் எமது போராளிகளை காத்து வந்த காடுகளை வரம் வேண்டிப் பாடுகின்றது ஒரு மழலைக் குரல். "காடுகளே காடுகளே கொஞ்சம் கேளுங்கள்! தமிழ் ஈழத்தின் வீரர்களை என்றும் காத்தே வாருங்கள்" என்று மழலையின் செல்லக் குரல் ஒன்று ஒலிக்கின்றது. இந்தக் குரல் மிக விரைவாக வளர்ச்சியடையக் கூடிய வேகம் தெரிகிறது. இந்தக் குரலுக்கு ஒரு பாராட்டும் வாழ்த்தும் உரித்தாகட்டும். "சத்தியத்தை காப்பதற்கு ராமன் வனவாசம் சென்றான்! இலட்சியத்தைக் காப்பதற்கு தலைவன் உமை நாடி வந்தான்! தாய்போல காத்து எங்கள் வீரர்களை ஆளாக்கி, நீங்காத நினைவாக நெஞ்சமதில் வீற்றிடுவீர்" என்ற கவிஞரின் கோரிக்கையும் பாடலுக்குரிய மழலைக் குரலும் அற்புதமாக இருக்கின்றது. இறுதியாக, "வீட்டுக்கொரு மைந்தனே விரைந்து வா, அடிமை விலங்கை உடைத்தெறிய போராடுவோம்" என்று ஆரம்பிக்கின்றது ஒரு ஆண்குரல். மிக உறுதியாக போராட்டத்திற்கு அணிதிரட்டும் நோக்கம் கொண்ட இப் பாடலில், "நம்பி நேசம் போனதினால் வந்தவினை! சொந்த மண்ணில் வாழ்வதற்கே அஞ்சும் நிலை! கண்ணைக் கட்டி காட்டினிலே விட்டதயர்! மண்ணை மீட்கப் போராடும் எங்கள் கதை” என்ற வரிகள் எமது பரிதாபத்தை வெளிப்படுத்துகின்றன. பாடலுக்குரியவர் அழகாக, ஆழமான உணர்வுடன் பாடியுள்ளார். இவருக்கு மனமார்ந்த பாராட்டுகள். மொத்தத்தில், 'புதியதோர் புறம்' கொண்ட முத்தான பத்துப் பாடல்களும் மிக நன்றாக அமைந்திருக்கின்றன; இசையமைப்பு பிரமாத அடுத்த வெளியீடுகள் இதை விட சிறந்த இசையில் வெளிவர வாழ்த்துகிறேன். ஒலிப்பதிவு நன்றாக இருக்கின்றது. மொத்தத்தில் கலைஞர்களின் வளர்ச்சியும் "போடுபோடு வீரநடைபோடு" என்று கூறுமளவிற்கு அமைந்திருக்கின்றது. இப்படியொரு தரமான ஒலிப்பதிவு நாடாத் தொகுப்பை வெளியிட்ட பாடும்மீன் கலைமன்றத்தினருக்கும் அதன் தலைவர் திரு. அமிர்தராஜ் அவர்களுக்கும் தமிழ்மக்கள் சார்பில் நன்றிகள். *****
-
புலிகள் காலத்திய இயக்கப்பாடல்களின் 221 இறுவட்டுகள் | திரட்டு
இறுவட்டு அட்டைகள் புதிய காற்று இதிலுள்ள பாடல் வரிகளை கரும்புலி மேஜர் நிலவன் ( தரை) எழுதியுள்ளார்.
-
புலிகள் காலத்திய இயக்கப்பாடல்களின் 221 இறுவட்டுகள் | திரட்டு
இறுவட்டு அட்டைகள் புதிதாய் பிறக்கின்றோம்
-
புலிகள் காலத்திய இயக்கப்பாடல்களின் 221 இறுவட்டுகள் | திரட்டு
இறுவட்டு அட்டைகள் பாசறைப் பாடல்கள் இது நான்காவது இறுவட்டாகும். தமிழ்நாட்டிலிருந்து வெளியானது. குலை நடுங்கும் கொடூரங்கள் நிரம்பிய இந்தியப் படைக் காலத்தில் வெளிவந்தது.
-
புலிகள் காலத்திய இயக்கப்பாடல்களின் 221 இறுவட்டுகள் | திரட்டு
இறுவட்டு அட்டைகள் பரணி பாடுவோம் மூல அட்டை: இரண்டாவது அட்டை: திறனாய்வு: - மூலம்: விடுதலைப் புலிகள்: ஆனி 1991 பக்கம்: 5 விடுதலைப்புலிகள் கலை பண்பாட்டுக் கழகத்தினரது மூன்றாவது ஒலிப்பதிவு நாடாவாகிய "பரணி பாடுவோம்" வெளியீட்டு விழா அண்மையில் நடந்து முடிந்துள்ளது. கரும்புலிகளுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்ட இந்த ஒலிப்பதிவு நாடாவில் மொத்தம் 10 பாடல்கள் இருக்கின்றன. இந்த ஒலிப்பதிவு நாடா ஒரு விசேட அம்சத்தைக் கொண்டுள்ளது. இதில் உள்ள எட்டு பாடல்கள் போராளிகளால் இயற்றப்பட்டவை என்பது முக்கியமானதொரு அம்சமாகும். ஒன்று ஒரு தேசபக்தத் தந்தையால் இயற்றப்பட்டிருந்தது. எமது மூத்த உறுப்பினர் பேபி சுப்பிரமணியம், விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணிப் பொதுச் செயலாளர் யோகி, கலை பண்பாட்டுக்கழகப் பொறுப்பாளர் புதுவை இரத்தினதுரை, பைப், சகாதேவன் ஆகியோருடன் வன்னி மண்ணைச் சேர்ந்த திரு செல்லக்குட்டி என்பவரும் இப் பாடல்களை இயற்றியுள்ளனர். திரு செல்லக்குட்டியின் இரண்டு புதல்வர்கள் போராட்டத்தில் இணைந்து வீரமரணமடைந்துவிட்டனர். ஒருவரான கமல் இந்தியப்படைச் சண்டையின்போது யாழ்ப்பாணத்திலும், இன்னொருவரான லெப். சங்கர் சிலாபத்துறைத் தாக்குதலிலும் வீரமரணமடைந்துள்ளனர். தற்போது இவரது மகள் ஒருவர் இயக்த்தில் இருக்கின்றார். இவ்விதமாக "பரணி பாடுவோம்" ஒலிப்பதிவு நாடா, மற்றைய எல்லா எழுச்சிப் பாடல் நாடாக்களையும் விட தனித்துவமாக இருக்கின்றது. இந்த ஒலிப்பதிவு நாடா எதிர்காலத்தில் நிகழப்போகும் ஒரு பிரமாண்டமான - சமூக தாக்கத்தை ஏற்படுத்த இருக்கும் - மாற்றத்தின் குறியீடாக அமைந்துள்ளது எனலாம். அதாவது உள்ளார்ந்த ரீதியாக விடுதலை உணர்வால் விழுங்கப்பட்ட போராளிக் கலைஞர்களினால் கலை இலக்கியங்கள் படைக்கப்படுவது அதிகரிக்க இருக்கின்றது. இது கலை - இலக்கிய - பண்பாட்டு அரங்கிற்கு ஒரு புதுமையையும் செழுமையையும் கொடுக்கும் என்பது உறுதி. இந்த ஒலிப்பதிவு நாடா இதற்கு கட்டியம் கூறுகின்றது. இந்த ஒலிப்பதிவு நாடாவை வெளிக்கொணர்ந்த கலை, பண்பாட்டுக் கழகத்தினர் பாராட்டுக்குரியவர்கள். *****
-
புலிகள் காலத்திய இயக்கப்பாடல்களின் 221 இறுவட்டுகள் | திரட்டு
இறுவட்டு அட்டைகள் பசுந்தேசம்
-
புலிகள் காலத்திய இயக்கப்பாடல்களின் 221 இறுவட்டுகள் | திரட்டு
இறுவட்டு அட்டைகள் பகை வெல்லும் புலிவீரம்