Everything posted by நன்னிச் சோழன்
-
ஈழத் தமிழர்கள் மீதான இலங்கை முஸ்லிம் ஊர்காவல்படை மற்றும் ஆயுத குழுக்களின் அட்டூழியங்கள் | ஆவணக்கட்டு
செய்திகள் வலைத்தளம்: தமிழ்நெற் திகதி: 29/06/2002 கொழுவி: https://www.tamilnet.com/art.html?catid=13&artid=7135 தமிழாக்கம்: நன்னிச் சோழன் வாழைச்சேனை வன்முறையில் காவல்துறையினரின் கைவரிசை இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர் வாழைச்சேனையில் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இடம்பெற்ற வன்முறை நிகழ்வுகளுக்கு காவல்துறையினருக்கும் தொடர்பு இருப்பதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் சனிக்கிழமை குற்றஞ்சாட்டியுள்ளனர். சிறிலங்காவின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அவர்கள் எழுதிய கடிதத்தில், அப்பரப்பிற்குப் பொறுப்பான காவல்துறை அதிகாரிகள் ஓரவஞ்சனையுடன் செயற்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளனர். வன்முறை குறித்து உசாவ ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதியரசர் தலைமையில் உசவல் ஆணைக்குழுவை நியமிக்குமாறு பிரதமரிடம் கேட்டுக் கொண்டனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களான திரு.ஜோசப் பரராஜசிங்கம், திரு.த.தங்கவடிவேல் மற்றும் திரு.ஜீ.கிருஷ்ணப்பிள்ளை ஆகியோர் பிரதமருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தின் முழுவடிவம் பின்வருமாறு:- "உங்களின் கனிவான கவனத்திற்கும் குறைதீர்விற்காகவும் பின்வரும் மெய்யுண்மைகளை நாங்கள் கொண்டு வர விரும்புகிறோம். "வாழைச்சேனையில் 2002 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் இடம்பெற்ற அழிவு நிகழ்வுகள் இடம்பெற்ற இடங்களை நாம் கூட்டாகப் பார்வையிட்டோம். "இரு சமூகத்தினரையும் நேரில் கண்ட சாட்சிகளிடமும், குறிப்பாக நிகழ்வுகளால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களிடமும், நாங்கள் நடத்திய உசாவலில், இந்த நீதியற்ற இறப்புகள், ஆட்களுக்கு காயம் மற்றும் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு வழிவகுத்த சூழ்நிலையை கட்டுப்படுத்துவதற்கு வாழைச்சேனை காவல்துறையினர் தான் பொறுப்பென்றும் அவர்களின் விளைபயனற்ற தன்மையும் இருப்பதாகவும் கூறப்படுகிறது. "பெரும்பாலான நேரில் கண்ட சாட்சிகளின் கூற்றுப்படி, ஊரடங்குச் சட்டத்தின் போது கடைகள் எரிப்பு மற்றும் சூறையாடுதல் உள்ளிட்ட ஆட்களின் இறப்புகள் மற்றும் காயங்கள் நடந்துள்ளன. கடந்த 27ஆம் திகதி காலை வாழைச்சேனை பிரதேச சபை அலுவலகம் ஊரடங்குச் சட்டத்தின் போது எரிக்கப்பட்டது. ஊரடங்குச் சட்டத்தை கடைப்பிடிக்கும் பொறுப்பில் உள்ள பாதுகாப்புப் படையினர் இந்த அரச சொத்துக்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டனர். "வாழைச்சேனை காவல்துறை பிரிவின் உதவி காவல் கண்காணிப்பாளர் திரு.ஜமால்தீன் மற்றும் வாழைச்சேனை காவல் நிலைய பொறுப்பதிகாரி திரு.பியசேன ஆகியோருக்கு எதிராக இரு சமூகங்களையும் குறிப்பாக தமிழர்களையும் சேர்ந்த பல சாட்சிகள் அன்னார்கள் தமது கடமைகளை நிறைவேற்றுவதில் பக்கச்சார்பற்ற தன்மையை பேணவில்லை எனவும் சட்டத்தையும் ஒழுங்கையும் பேணவில்லை எனவும் முறைப்பாடு செய்துள்ளனர். "சிஐடி அதிகாரிகள் திரு.ஃவைஸ், திரு.மன்சூர், திரு.ரமீஷ் மற்றும் திரு.உவைஸ் ஆகியோர் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் மீது சுட்டதாக கூறப்படுவதும் நேரில் கண்ட சாட்சிகள் சிலரால் எங்கள் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது. அத்துடன் தமிழ் இளைஞரான திரு. காண்டீபன் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்ததற்கு திரு.ஃவைஸ் தான் காரணம் என்பது குறிப்பிடத்தக்கதாக குறிக்கப்பட்டிருந்தது. "வாழைச்சேனை கோட்ட செயலாளர் காரியாலயத்தில் அரசாங்க அதிபர் சி.சண்முகம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், நடப்பு காவல் மா அதிபர் திரு.த.ஆனந்தனராஜா முன்னிலையில் இவ்விரு அலுவலர்களையும் இவ் நிலையத்திலிருந்து உடனடி நடைமுறையுடன் இடமாற்றம் செய்வதற்கு இணக்கம் காணப்பட்டது. "இந்நிலையில், இந்த நிகழ்வுகள் குறித்து உசாவவும், குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தவும் ஓய்வுபெற்ற மூத்த உச்ச நீதிமன்ற நீதியரசர் தலைமையில் உசாவல் ஆணைக்குழு ஒன்றை உடனடியாக நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். "கீழ்க்கண்டவர்களுக்குப் போதுமான சிறப்பு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம். 1) இந்த சம்பவத்தில் இறந்த ஆட்களின் அடுத்தவர்கள் 2) காயம் அடைந்த ஆட்கள் 3) தீயினால் வீடுகள் மற்றும் கடைகள் சேதமடைந்தன அல்லது முற்றிலும் எரிந்தன 4) வேறு ஏதேனும் இடருதவி." *****
- 170 replies
-
- massacres
- muslim
- sri lanka
- tamils
-
Tagged with:
- massacres
- muslim
- sri lanka
- tamils
- அதிரடிப்படை
- அழிவுகள்
- இனப்படுகொலை
- இராணுவம்
- இலங்கை
- இலங்கை முஸ்லிம்களின் வரலாறு
- இஸ்லாமியர்
- இஸ்லாமியர் மீதான கொலை
- ஈழம்
- ஊர்காவல் படை
- ஊர்காவல்படை
- ஏறாவூர் படுகொலை
- கற்பழிப்பு
- காடையர்கள்
- காத்தான்குடி
- குற்றம்
- கொலை
- கொள்ளை
- சிறிலங்கா
- சிறிலங்கா இராணுவம்
- சோனகர்
- ஜிகாத்
- ஜிஹாத்
- தமிழர்
- தமிழர் படுகொலை
- தமிழீழம்
- தமிழ் இனப்படுகொலை
- தாக்குதல்
- திருகோணமலை
- நிகழ்த்திய
- படுகொலை
- படுகொலைகள்
- பள்ளிவாசல்
- மசூதி
- மட்டக்களப்பு
- முஸ்லிம் ஊர்காவல் படை
- முஸ்லிம் தாக்குதல்
- முஸ்லிம் படுகொலை
- முஸ்லிம் படுகொலைகள்
- முஸ்லிம்கள்
- முஸ்லிம்கள் படுகொலை
- வன்புணர்ச்சி
- வன்முறை
- விடுதலைப் புலிகள்
-
புலிகள் காலத்திய இயக்கப்பாடல்களின் 221 இறுவட்டுகள் | திரட்டு
இறுவட்டு அட்டைகள் கடற்கரும்புலிகள் பாகம் 04
-
புலிகள் காலத்திய இயக்கப்பாடல்களின் 221 இறுவட்டுகள் | திரட்டு
இறுவட்டு அட்டைகள் கடற்கரும்புலிகள் பாகம் 03
-
thaya - Info provided by anonymous
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
thana.jpg
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
sivaa.jpg
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
sethu.jpg
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
paappaa.jpg
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
Lt. Col. Senthozhan
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
adsa.jpg
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
5.jpg
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
ஈழத் தமிழர்கள் மீதான இலங்கை முஸ்லிம் ஊர்காவல்படை மற்றும் ஆயுத குழுக்களின் அட்டூழியங்கள் | ஆவணக்கட்டு
செய்திகள் வலைத்தளம்: தமிழ்நெற் திகதி: 27/06/2002 கொழுவி: https://www.tamilnet.com/art.html?catid=13&artid=7124 தமிழாக்கம்: நன்னிச் சோழன் இஸ்லாமிய தீவிரவாதிகளின் தாக்குதலில் 13 பேர் காயமடைந்துள்ளனர் வியாழன் அன்று மட்டக்களப்பில் இருந்து வடக்கே 32 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வாழைச்சேனையில் தீவிரவாத இஸ்லாமிய குழுவைச் சேர்ந்தவர்கள் என ஐப்படும் ஆயுததாரிகள் நடத்திய தாக்குதலில் 13 தமிழ் பொதுமக்கள் காயமடைந்துள்ளதுடன் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். வன்முறையை அடக்குவதற்காக வியாழன் மதியம் காவல்துறை ஊரடங்கு உத்தரவை பிறப்பித்த பின்னர், காலையில், இஸ்லாமிய தீவிரவாதிகளால் மேற்கொள்ளப்பட்டதொரு கைக்குண்டு தாக்குதலில் நான்கு தமிழர்கள் படுகாயமடைந்தனர், அவர்களில் ஒருவர் கடுமையாகவுள்ளார், அத்துடன் ஒருவரைக் கொன்றதோடு ஒன்மரைக் காயப்படுத்தினர். வாழைச்சேனைக்கு அருகிலுள்ள ஓட்டமாவடியில் 10 தமிழ் பெண்கள் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. "சமாதான முன்னெடுப்புகள் மூலம் எங்களின் நியாயமான உரிமைகளை அடைவதை தடுப்பதில் உறுதியாக இருப்பவர்கள் முறைமைப்படுத்தப்பட்ட வகையில் தமிழர்களை தாக்கி கிழக்கில் பொது வன்முறையை ஆக்க ஆயுதமேந்திய இஸ்லாமிய தீவிரவாதிகளை தூண்டுகின்றனர்" என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஜோசப் பரராஜசிங்கம் தெரிவித்தார். வாழைச்சேனைக்கு அருகில் உள்ள தமிழ் சிற்றூரான கருவாக்கேணியில் பத்து வயது சிறுவன் ஒருவரை இஸ்லாமிய தீவிரவாத கும்பல் அரிவாளால் தாக்கி படுகாயமடையச் செய்தது. வாழைச்சேனை பசாருக்குப் பின்னால் உள்ள தமிழர் வீடு ஒன்று இஸ்லாமிய அமைப்பினரால் தீக்கிரையாக்கப்பட்டது. அப்பரப்பில் உள்ள ஏராளமான தமிழ் குடும்பங்கள் தாக்குதல்களில் இருந்து தப்பிக்க உள்பகுதியில் தஞ்சம் புகுந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறுவனை மட்டக்களப்புக்கு கொண்டு சென்ற நோயாளர் காவுவண்டி மீது ஏறாவூரில் முஸ்லிம்கள் கல்லெறிந்தனர். மட்டக்களப்பில் இருந்து 5 கிலோமீற்றர் தெற்கே உள்ள காத்தான்குடியில் மற்றுமொரு நோயாளர் காவுவண்டிக்கு முஸ்லிம்கள் கல்லெறிந்ததோடு, ஓட்டமாவடியில் வியாழக்கிழமை காலை தமிழர்களுக்குச் சொந்தமான மூன்று பேருந்துகள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். வாழைச்சேனை நகர பஜாரில் 6 கடைகள் எரிக்கப்பட்டுள்ளன. இதேவேளை, முஸ்லிம் தீவிரவாதிகளின் ஆத்திரமூட்டல்களுக்கு தமிழர்கள் எதிர்வினையாற்ற வேண்டாம் என்றும் அமைதியாக இருக்குமாறும் வலியுறுத்தி மட்டக்களப்பில் உள்ள விடுதலைப் புலிகள் வியாழக்கிழமை பிற்பகல் துண்டுப்பிரசுரம் ஒன்றை வெளியிட்டுள்ளனர். முஸ்லீம் பகுதிகளிலிருந்து வந்த ஆயுதமேந்திய குண்டர்களின் தாக்குதல்கள் என்றும், எனவே கிழக்கில் உள்ள அப்பாவி முஸ்லிம்களின் நலன்களுக்கு தீங்கு விளைவிக்க தமிழர்கள் எதனையும் செய்யக்கூடாது என்றும் விடுதலைப் புலிகளின் துண்டுப் பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாழைச்சேனை மற்றும் அதனை அண்மித்த பரப்புகளில் இன்று (வியாழன்) மாலை 6 மணி முதல் காவல்துறை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது. "கிழக்கில் ஆயுதம் ஏந்திய இஸ்லாமிய தீவிரவாதிகள் தமிழர்களுக்கு எதிராகத் தூண்டிவிடப்படுவது வெளிப்படையாகத் தெரிகிறது. சிறிலங்காப் பாதுகாப்புப் படையினரும் புலனாய்வு அமைப்புகளும் கடந்த காலங்களில் கிழக்கில் பல தடவைகள் இந்த பிரித்தாளும் தந்திரத்தை கையாண்டுள்ளன. இதன் நோக்கம் சமாதான முன்னெடுப்புகளை சீர்குலைத்து, கிழக்கு கடலோரம் நடுவண் அரசியல் சிக்கல்களை குழப்பிவிடுவதுதான்" என்று திரு. ஜோசப் பரராஜசிங்கம் கூறினார். *****
- 170 replies
-
- massacres
- muslim
- sri lanka
- tamils
-
Tagged with:
- massacres
- muslim
- sri lanka
- tamils
- அதிரடிப்படை
- அழிவுகள்
- இனப்படுகொலை
- இராணுவம்
- இலங்கை
- இலங்கை முஸ்லிம்களின் வரலாறு
- இஸ்லாமியர்
- இஸ்லாமியர் மீதான கொலை
- ஈழம்
- ஊர்காவல் படை
- ஊர்காவல்படை
- ஏறாவூர் படுகொலை
- கற்பழிப்பு
- காடையர்கள்
- காத்தான்குடி
- குற்றம்
- கொலை
- கொள்ளை
- சிறிலங்கா
- சிறிலங்கா இராணுவம்
- சோனகர்
- ஜிகாத்
- ஜிஹாத்
- தமிழர்
- தமிழர் படுகொலை
- தமிழீழம்
- தமிழ் இனப்படுகொலை
- தாக்குதல்
- திருகோணமலை
- நிகழ்த்திய
- படுகொலை
- படுகொலைகள்
- பள்ளிவாசல்
- மசூதி
- மட்டக்களப்பு
- முஸ்லிம் ஊர்காவல் படை
- முஸ்லிம் தாக்குதல்
- முஸ்லிம் படுகொலை
- முஸ்லிம் படுகொலைகள்
- முஸ்லிம்கள்
- முஸ்லிம்கள் படுகொலை
- வன்புணர்ச்சி
- வன்முறை
- விடுதலைப் புலிகள்
-
ஈழத் தமிழர்கள் மீதான இலங்கை முஸ்லிம் ஊர்காவல்படை மற்றும் ஆயுத குழுக்களின் அட்டூழியங்கள் | ஆவணக்கட்டு
செய்திகள் வலைத்தளம்: தமிழ்நெற் திகதி: 26/06/2002 கொழுவி: https://www.tamilnet.com/art.html?catid=13&artid=7121 தமிழாக்கம்: நன்னிச் சோழன் மூதூர் ஊடகவியலாளர் வீட்டின் மீது இஸ்லாமிய தீவிரவாதிகள் தாக்குதல்! மூதூர் நகரில் உள்ள தமிழ் ஊடகவியலாளர் திரு. பி. சத்சிவானந்தத்தின் வீட்டின் மீது தீவிரவாத இஸ்லாமிய ஆயுதக் குழுவைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படும் ஆயுததாரிகள் புதன்கிழமை பிற்பகல் தாக்குதல் நடத்தியதில் ஏந்தனங்கள் (equipments) மற்றும் சொத்துக்களுக்கு கணிசமான சேதம் ஏற்பட்டதாக சிறிலங்கா காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. 'ஒசாமா முன்னணி' என்று தங்களை அழைத்துக் கொள்ளும் இஸ்லாமியக் குழுவின் ஆயுதக் கும்பல் புதன்கிழமை காலை கிழக்கு நகரம் வழியாக வெறித்தனமாகச் சென்று, கிழக்கு நகரத்தின் தமிழ் சுற்றுப்புறங்களில் உள்ள வீடுகளைத் தாக்கியது. இதனால் மூதூரில் உள்ள நூற்றுக்கணக்கான தமிழர்கள் உள்ளூர் தேவாலயத்தில் தஞ்சம் புகுந்தனர். செய்தியாளர் நடத்தி வந்த ஆதரவற்றோர் இல்லம் மீது இஸ்லாமிய தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இங்குள்ள குழந்தைகள் புனித அந்தோனியார் தேவாலயத்தில் தஞ்சம் புகுந்துள்ளதாக வண. சாந்தன் இம்மானுவேல் தெரிவித்துள்ளார். திரு.சசிவானந்தம் மீதான தாக்குதல், செவ்வாய்கிழமை இரவு ஒளிபரப்பான பிபிசியின் தமிழ்ச் சேவைக்கு ஊடகவியலாளர் வழங்கிய அறிக்கையுடன் தொடர்புபட்டது என கிழக்கிலங்கை ஊடகவியலாளர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் திரு.ஏ.நடேசன் தெரிவித்தார். "மற்றொரு தமிழ் ஊடகவியலாளர் திரு. எஸ். ஜெயானந்தமூர்த்தியும் இஸ்லாமிய தீவிரவாதக் குழுவினால் அச்சுறுத்தப்பட்டுள்ளார் என்பதை நாங்கள் கவனத்தில் கொள்ள விரும்புகிறோம்." என்று திரு நடேசன் மேலும் கூறினார். திரு. சத்சிவானந்தம் தமிழ் நாளிதழான வீரகேசரியின் மூதூர் செய்தியாளராகவும் பல பன்னாட்டு ஊடகங்களில் பங்களிப்பாளராகவும் உள்ளார். புதன்கிழமை காலை காவல்துறை ஊரடங்குச் சட்டத்தை நீக்கியவுடன் ஒசாமா முன்னணி (அணி) ஆயுதக் கும்பல்கள் தமிழர் வீடுகளைத் தாக்கத் தொடங்கின. மதியம் மீண்டும் நகரில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவை காவல்துறையினர் விதித்தனர். வன்முறையைக் அடக்க மூதூர் நகருக்கு மேலதிக காவலர்களும் படையினரும் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. திருகோணமலையில் உள்ள இலங்கை கண்காணிப்புப் பணியகத்தின் நோர்வேத் தலைவர் திருமதி விக்டோரியா லுண்ட் புதன்கிழமை காலை ஜோர்டானிய கண்காணிப்பாளர் அப்துல் பத்தாவுடன் நிலைமையைக் காண மூதூருக்கு விரைந்தார் என்று கண்காணிப்புக் குழு வட்டாரங்கள் தெரிவித்தன. ஒரு ஊரின் தெற்கே உள்ள மூதூரில் வன்முறை வெடித்தபோது, செவ்வாய்க்கிழமை இரவும் பகலும் ஊரடங்குச் சட்டம் மூதூரில் காவல்துறையால் போடப்பட்டது. யாழ்ப்பாண மாவட்டம் வேலணையில் விடுதலைப் புலிகளின் அரசியல் செயற்பாட்டாளர்கள் மீது கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மூதூர் தெற்கில் உள்ள பச்சனூர் சிற்றூரிலிருந்து தமிழர்கள் நடத்திய பேரணியும், மூதூரில் உள்ள விடுதலைப் புலிகளின் அரசியல் அலுவலகம் தாக்கப்பட்டமையும் வன்முறையைத் தூண்டியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே ஏற்பட்ட நேற்றைய தாக்குதல்களில் இரு தரப்பிலும் பலர் காயமடைந்துள்ளனர். ஐந்து பேர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் கொழும்புக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. *****
- 170 replies
-
- massacres
- muslim
- sri lanka
- tamils
-
Tagged with:
- massacres
- muslim
- sri lanka
- tamils
- அதிரடிப்படை
- அழிவுகள்
- இனப்படுகொலை
- இராணுவம்
- இலங்கை
- இலங்கை முஸ்லிம்களின் வரலாறு
- இஸ்லாமியர்
- இஸ்லாமியர் மீதான கொலை
- ஈழம்
- ஊர்காவல் படை
- ஊர்காவல்படை
- ஏறாவூர் படுகொலை
- கற்பழிப்பு
- காடையர்கள்
- காத்தான்குடி
- குற்றம்
- கொலை
- கொள்ளை
- சிறிலங்கா
- சிறிலங்கா இராணுவம்
- சோனகர்
- ஜிகாத்
- ஜிஹாத்
- தமிழர்
- தமிழர் படுகொலை
- தமிழீழம்
- தமிழ் இனப்படுகொலை
- தாக்குதல்
- திருகோணமலை
- நிகழ்த்திய
- படுகொலை
- படுகொலைகள்
- பள்ளிவாசல்
- மசூதி
- மட்டக்களப்பு
- முஸ்லிம் ஊர்காவல் படை
- முஸ்லிம் தாக்குதல்
- முஸ்லிம் படுகொலை
- முஸ்லிம் படுகொலைகள்
- முஸ்லிம்கள்
- முஸ்லிம்கள் படுகொலை
- வன்புணர்ச்சி
- வன்முறை
- விடுதலைப் புலிகள்
-
ஈழத் தமிழர்கள் மீதான இலங்கை முஸ்லிம் ஊர்காவல்படை மற்றும் ஆயுத குழுக்களின் அட்டூழியங்கள் | ஆவணக்கட்டு
.
- 170 replies
-
- massacres
- muslim
- sri lanka
- tamils
-
Tagged with:
- massacres
- muslim
- sri lanka
- tamils
- அதிரடிப்படை
- அழிவுகள்
- இனப்படுகொலை
- இராணுவம்
- இலங்கை
- இலங்கை முஸ்லிம்களின் வரலாறு
- இஸ்லாமியர்
- இஸ்லாமியர் மீதான கொலை
- ஈழம்
- ஊர்காவல் படை
- ஊர்காவல்படை
- ஏறாவூர் படுகொலை
- கற்பழிப்பு
- காடையர்கள்
- காத்தான்குடி
- குற்றம்
- கொலை
- கொள்ளை
- சிறிலங்கா
- சிறிலங்கா இராணுவம்
- சோனகர்
- ஜிகாத்
- ஜிஹாத்
- தமிழர்
- தமிழர் படுகொலை
- தமிழீழம்
- தமிழ் இனப்படுகொலை
- தாக்குதல்
- திருகோணமலை
- நிகழ்த்திய
- படுகொலை
- படுகொலைகள்
- பள்ளிவாசல்
- மசூதி
- மட்டக்களப்பு
- முஸ்லிம் ஊர்காவல் படை
- முஸ்லிம் தாக்குதல்
- முஸ்லிம் படுகொலை
- முஸ்லிம் படுகொலைகள்
- முஸ்லிம்கள்
- முஸ்லிம்கள் படுகொலை
- வன்புணர்ச்சி
- வன்முறை
- விடுதலைப் புலிகள்
-
ஈழத் தமிழர்கள் மீதான இலங்கை முஸ்லிம் ஊர்காவல்படை மற்றும் ஆயுத குழுக்களின் அட்டூழியங்கள் | ஆவணக்கட்டு
செய்திகள் நாளேடு: உதயன் திகதி: 2/10/2001 பக்கம்: 1,10 மட்டக்களப்பில் முஸ்லிம்களுக்காக தனியாக ஊர்காவல்படை அமைப்பு; ஐநூறு இளைஞர் திரட்டப்படுவராம் மட்டக்களப்பு, ஒக்ரோபர் 2 மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள முஸ்லிம் பிரதேச மக்களின் பாதுகாப் புக்காக ஐநூறு முஸ்லிம் இளைஞர்களைக் கொண்ட ஊர்காவல் படை ஒன்றை அமைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னாள் பிரதி அமைச்சர் எம் .எல் .ஏ.எம்.ஹிஸ்புல்லா மேற்கொண்டுள்ளார் என்று செய்தி ஏஜென்ஸி ஒன்று அறிவித்தது. காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி மற்றும் வாழைச்சேனை ஆகிய பிரதேசங்களின் பாதுகாப்புக்காகவே இந்த ஊர்காவல்படை அமைக்கப்பட விருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். அண்மைக் காலங்களில் விடுதலைப் புலிகளால் இப்பகுதி மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதுகாப்பின்மையைக் கருத்திற்கொண்டே இது அமைக்கப்படுவதாகவும் - இந்தக் கிராமங்களில் மேலதிக பொலீஸ் மற்றும் இராணுவ நிலைகளை அமைப்பது தொடர்பாகவும் தாம் பாதுகாப்பு அமைச்சுடன் தொடர்பு கொண்டிருப்பதாகவும் - அவர் மேலும் தெரிவித்ததாக அந்தச் செய்தி ஏஜென்ஸி குறிப்பிட்டது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிளவுபட்ட பின்னர், அமைச்சர் பேரியல் அஷ்ரப்பின் அணியில் ஹிஸ்புல்லா இடம்பெற்றிருப்பது தெரிந்ததே. இதற்கிடையில் இந்த ஊர்காவல் படையை அமைக்கும் நடவடிக்கைக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் பஸீர் சேகு தாவூத், ஐ.தே.கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாகிர் மௌலானா ஆகியோர் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். இந்த ஊர்காவல்படை அமைப்பது தமிழர் - முஸ்லிம்கள் உறவில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் - தனது அரசியல் சுயலாபத்துக்காக முஸ்லிம் இளைஞர்களைக் கொண்ட ஆயுதக்குழு ஒன்றை உருவாக்குவதற்கே ஹிஸ்புல்லா முயற்சி செய்கிறார் எனவும் - நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாகிர் மௌலான தெரிவித்தார். *****
- 170 replies
-
- massacres
- muslim
- sri lanka
- tamils
-
Tagged with:
- massacres
- muslim
- sri lanka
- tamils
- அதிரடிப்படை
- அழிவுகள்
- இனப்படுகொலை
- இராணுவம்
- இலங்கை
- இலங்கை முஸ்லிம்களின் வரலாறு
- இஸ்லாமியர்
- இஸ்லாமியர் மீதான கொலை
- ஈழம்
- ஊர்காவல் படை
- ஊர்காவல்படை
- ஏறாவூர் படுகொலை
- கற்பழிப்பு
- காடையர்கள்
- காத்தான்குடி
- குற்றம்
- கொலை
- கொள்ளை
- சிறிலங்கா
- சிறிலங்கா இராணுவம்
- சோனகர்
- ஜிகாத்
- ஜிஹாத்
- தமிழர்
- தமிழர் படுகொலை
- தமிழீழம்
- தமிழ் இனப்படுகொலை
- தாக்குதல்
- திருகோணமலை
- நிகழ்த்திய
- படுகொலை
- படுகொலைகள்
- பள்ளிவாசல்
- மசூதி
- மட்டக்களப்பு
- முஸ்லிம் ஊர்காவல் படை
- முஸ்லிம் தாக்குதல்
- முஸ்லிம் படுகொலை
- முஸ்லிம் படுகொலைகள்
- முஸ்லிம்கள்
- முஸ்லிம்கள் படுகொலை
- வன்புணர்ச்சி
- வன்முறை
- விடுதலைப் புலிகள்
-
தமிழீழப் படிமங்கள் | Tamil Eelam Images
.
- 662 replies
-
- தமிழீழம்
- தென் தமிழீழம்
- வட தமிழீழம்
- விடுதலைப்புலிகளின் கட்டுமானங்கள்
-
Tagged with:
- தமிழீழம்
- தென் தமிழீழம்
- வட தமிழீழம்
- விடுதலைப்புலிகளின் கட்டுமானங்கள்
- தமிழீழக் கட்டடங்கள்
- விடுதலைப்புலிகள்
- ஈழத் தமிழர்
- தாயகம்
- தமிழர்
- ஈழத்தவர்
- தமிழீழ நடைமுறையரசு
- ஈழம்
- ஈழநிலம்
- tamileelam
- tamil eelam
- eelam tamils
- de-facto tamil eelam
- de facto tamil eelam
- tamil tigers controlled areas
- liberation tigers of tamileelam
- north
- east
- sri lanka
- eelam
- பொங்குதமிழ்
- நினைவுச்சின்னம்
- புலிகள்
- ltte infrastructures
- ஈழவர்
-
adsa.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
ads.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
தமிழீழப் படிமங்கள் | Tamil Eelam Images
.
- 662 replies
-
- தமிழீழம்
- தென் தமிழீழம்
- வட தமிழீழம்
- விடுதலைப்புலிகளின் கட்டுமானங்கள்
-
Tagged with:
- தமிழீழம்
- தென் தமிழீழம்
- வட தமிழீழம்
- விடுதலைப்புலிகளின் கட்டுமானங்கள்
- தமிழீழக் கட்டடங்கள்
- விடுதலைப்புலிகள்
- ஈழத் தமிழர்
- தாயகம்
- தமிழர்
- ஈழத்தவர்
- தமிழீழ நடைமுறையரசு
- ஈழம்
- ஈழநிலம்
- tamileelam
- tamil eelam
- eelam tamils
- de-facto tamil eelam
- de facto tamil eelam
- tamil tigers controlled areas
- liberation tigers of tamileelam
- north
- east
- sri lanka
- eelam
- பொங்குதமிழ்
- நினைவுச்சின்னம்
- புலிகள்
- ltte infrastructures
- ஈழவர்
- The released two home guards (extreme left) are seen with Muslim religious leaders, Mr.Elilan, SLMM Trincomalee head Mr.Ove Jansen..jpg
-
muslim 22.3.06.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
ஈழத் தமிழர்கள் மீதான இலங்கை முஸ்லிம் ஊர்காவல்படை மற்றும் ஆயுத குழுக்களின் அட்டூழியங்கள் | ஆவணக்கட்டு
செய்திகள் வலைத்தளம்: தமிழ்நெற் திகதி: 05/09/1998 கொழுவி: https://www.tamilnet.com/art.html?catid=13&artid=1979 தமிழாக்கம்: நன்னிச் சோழன் ஆயுததாரி இஸ்லாமியக் குழு வெளிப்பட்டது அம்பாறை மாவட்டத்தின் தென்கிழக்கு கரையோரத்தில் உள்ள அக்கரைப்பற்றில் தமிழர்களுக்கு எதிராக வன்முறையை தூண்டுவதற்கு பி.எல்.ஓ என அழைக்கப்படும் ஒரு முஸ்லிம் ஆயுததாரி அமைப்பு முயற்சித்து வருவதாக அங்கிருக்கும் வட்டாரங்கள் தெரிவித்தன. பி.எல்.ஓ தமிழர்களை அச்சுறுத்தும் துண்டுக் காகிதங்களை வெளியிட்டதோடு தமிழர்களை முஸ்லிம்கள் ஆதிக்கம் செலுத்தும் நகரத்தின் பகுதிக்குள் நுழைவதைத் தடையும் செய்தது. அக்கரைப்பற்று நகரின் தமிழ் பகுதியிலுள்ள நான்காயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இஸ்லாமிய ஆயுததாரிகளின் அச்சுறுத்தல்களினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தென்கிழக்கு நகரவாசிகள் இன்று மாலை தெரிவித்தனர். 1985 மற்றும் 1990 ஆம் ஆண்டுகளில் அக்கரைப்பற்றில் தமிழர்களுக்கு எதிரான படுகொலைகளுக்கு, இதில் பத்திரகாளியம்மன் கோவில் உட்பட, நகரின் தமிழ் பகுதியின் பெரும் பகுதி எரிந்து நாசமானது, பின்னால் இருந்த ஆயுதமேந்திய இஸ்லாமிய ஜிஹாத்தின் (புனிதப் போர்) கூறுகளால் உருவாக்கப்பட்ட ஒரு குழுதான் பி.எல்.ஓ. என்று அக்கரைப்பற்றில் உள்ள தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. விடுதலைப் புலிகள் அப்பரப்பில் தங்களது அனைத்து நடவடிக்கைகளையும், குறிப்பாக ஊருக்கு தெற்கே உள்ள நெல் வயல்களில் இருந்து நெல்லை சேகரிப்பதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று பி.எல்.ஓ. (சுருக்கம் எதைக் குறிக்கிறது என்பது குறித்து யாருக்கும் உறுதியாகத் தெரியவில்லை) ஒரு துண்டுக் காகிதத்தில் கோரியுள்ளது. இன்று பிற்பகலில் இங்கு வசிக்கும் தமிழர்கள், பி.எல்.ஓ.க்கு உள்ளூர் சிறிலங்கா காவல்துறை மற்றும் சிறப்பு அதிரடிப்படைப் பிரிவுகளின் மறைமுக ஆதரவு இருப்பதாகத் தோன்றுகிறது என்று கூறினர். விடுதலைப் புலிகள் இயக்கம் அண்மையில் அப்பரப்பில் தங்கள் செயற்பாடுகளை நிறுத்தியதைத் தொடர்ந்து பி.எல்.ஓ. வளர்ந்ததாக அவர்கள் தெரிவித்தனர். அக்கரைப்பற்று நகருக்கு தென்மேற்கே 15 கிலோமீற்றர் தொலைவில் தொடங்கும் கஞ்சிக்குடிச்சாறு காடுகளில் புரட்சியாளர்கள் தங்கள் தளத்தை அடைய பயன்படுத்திய கேந்திர போக்குவரத்துப் புள்ளியை அறிந்த புலிகளின் ஆதரவாளர் ஒருவரை சில கிழமைகளுக்கு முன்பு சிறப்பு அதிரடிப்படையினர் கைது செய்தது. இந்த முன்னேற்றத்தின் வலுவால், சிறப்பு அதிரடிப்படையினர், தகவலறிந்த ஆதாரங்களின்படி, ஒரே கிழமையில் இந்த வழித்தடத்தில் புலிகளின் உறுப்பினர்கள் இருபது பேரை பதுங்கியிருந்து கொன்று சில ஏந்தனங்களை மீட்டனர். இந்த முன்னேற்றத்தையடுத்து அக்கரைப்பற்றில் புலிகள் தமது செயற்பாடுகளை தற்காலிகமாக நிறுத்தியிருந்தனர். இதுவே இதுவரை செயலற்ற நிலையில் இருந்த இஸ்லாமிய ஆயுததாரிகளை மீண்டும் அக்கரைப்பற்றில் குரல் எழுப்புவதற்கு ஊக்கமளித்ததாக இந்த கிழக்கு நகர தமிழர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இருப்பினும், பி.எல்.ஓ. உடன் நன்கு அறிமுகமான உள்ளூர் முஸ்லீம் வட்டாரம் இன்று இந்தக் குற்றச்சாட்டுகளை தற்செயலாக நிராகரித்துள்ளார். பி.எல்.ஓ. க்கு சிறப்பு அதிரடிப்படை மற்றும் சிறிலங்கா காவல்துறையினர் ஆதரவு அளித்தனர் என்று கூறப்படுவதில் உண்மை இல்லை என்று அவர் கூறினார். "பி.எல்.ஓ. என்பது ஒரு தன்னிச்சையான அமைப்பாகும், இது இங்கு இஸ்லாத்தின் நோக்கத்தில் மட்டுமே ஆர்வமாக உள்ளதோடு ஒசாமா பின்லேடனின் வீரச் செயல்களால் தங்கள் புனித பணியில் மீண்டும் ஈர்க்கப்பட்ட உறுதியான இளைஞர்களை உள்ளடக்கியது." என்று அவர் கூறினார், அக்கரைப்பற்று பி.எல்.ஓ. இன் அழைப்பாளரின் அடையாளத்தை அவர் வெளிப்படுத்த மறுத்துவிட்டார், ஆனால் விடுதலைப் புலிகள் சி.ஐ.ஏ. ஆதரவு பயங்கரவாதக் குழு என்று குற்றம் சாட்டினார். இதேவேளை, அக்கரைப்பற்றில் பி.எல்.ஓ.வினால் ஏற்பட்டுள்ள பதற்றத்தை கலைப்பதற்கான வழிமுறைகளை கிழக்கு நகர முஸ்லிம் மற்றும் தமிழ் சமூகத் தலைவர்கள் ஆராய்ந்து வருவதாக கொழும்பைத் தளமாகக் கொண்ட தமிழ் FM வானொலி நிலையமான 'சூரியன்' தனது மாலைச் செய்தியில் இன்று தெரிவித்துள்ளது. நாளேடு: உதயன் திகதி: 05/9/1998 பக்கம்: 1 சுவரொட்டிகளால் அம்பாறையில் பதற்றம் அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்றுப் பிரதேசத்தில் ஒட்டப்பட்டுவரும் அநாமேதய சுவரொட்டிகளினால் தமிழ்-முஸ்லிம் சமூகங்களிடையே பதற்றம் ஏற்பட்டிருக்கின்றது. "தமிழ்த்தொழிலாளர்கள் முஸ்லிம் பிரதேசத்துக்குள் வரக்கூடாது" என்று பி. எல். ஒ- சிறிலங்கா' என்ற அமைப்பாலும்- தமிழ்த் தொழிலாளர்கள் மறு அறிவித்தல் வரை முஸ்லிம் பிரதேசங்களுக்குள் செல்லக் கூடாது. முஸ்லிம்களுக்கு சலவை, சவரத்தொழில்கள் செய்யக்கூடாது. முஸ்லிம் வர்த்தகர்களிடம் பொருள்கள் வாங்கக் கூடாது." - என்று ஏ.டி. ரி எஸ். என்ற அமைப்பின் பெயராலும் - சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இந்தச் சுவரொட்டிகளால் இரு சமூகங்களையும் சேர்ந்த அன்றாட உழைப்பாளிகள் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகின்றது. (உ- 21) *****
- 170 replies
-
- massacres
- muslim
- sri lanka
- tamils
-
Tagged with:
- massacres
- muslim
- sri lanka
- tamils
- அதிரடிப்படை
- அழிவுகள்
- இனப்படுகொலை
- இராணுவம்
- இலங்கை
- இலங்கை முஸ்லிம்களின் வரலாறு
- இஸ்லாமியர்
- இஸ்லாமியர் மீதான கொலை
- ஈழம்
- ஊர்காவல் படை
- ஊர்காவல்படை
- ஏறாவூர் படுகொலை
- கற்பழிப்பு
- காடையர்கள்
- காத்தான்குடி
- குற்றம்
- கொலை
- கொள்ளை
- சிறிலங்கா
- சிறிலங்கா இராணுவம்
- சோனகர்
- ஜிகாத்
- ஜிஹாத்
- தமிழர்
- தமிழர் படுகொலை
- தமிழீழம்
- தமிழ் இனப்படுகொலை
- தாக்குதல்
- திருகோணமலை
- நிகழ்த்திய
- படுகொலை
- படுகொலைகள்
- பள்ளிவாசல்
- மசூதி
- மட்டக்களப்பு
- முஸ்லிம் ஊர்காவல் படை
- முஸ்லிம் தாக்குதல்
- முஸ்லிம் படுகொலை
- முஸ்லிம் படுகொலைகள்
- முஸ்லிம்கள்
- முஸ்லிம்கள் படுகொலை
- வன்புணர்ச்சி
- வன்முறை
- விடுதலைப் புலிகள்
-
ஈழத் தமிழர்கள் மீதான இலங்கை முஸ்லிம் ஊர்காவல்படை மற்றும் ஆயுத குழுக்களின் அட்டூழியங்கள் | ஆவணக்கட்டு
செய்திகள் வலைத்தளம்: தமிழ்நெற் திகதி: 04/02/1998 கொழுவி: https://www.tamilnet.com/art.html?catid=79&artid=7392 தமிழாக்கம்: நன்னிச் சோழன் வீரமுனையின் முடிவில்லாத அச்சம் ஜனவரி 3 ஆம் திகதி இரவு, முஸ்லிம் ஊர்காவல் படையினரின் தொடர்ச்சியான சுடுகல வேட்டொலி அம்பாறை மாவட்டத்தின் வீரமுனை ஊர்வாசிகளால் செவிமடுக்கப்பட்டது. இது சுமார் மாலை 9:15 மணியளவில் தொடங்கி மறுநாள் வைகறை 3:00 மணி வரை நீடித்தது. "நவநாதன், நித்தியானந்தன் இருவரும் எங்களுடன் வசித்து வந்தனர். நாங்கள் வெருண்டு வீட்டுக்குள்ளேயே இருந்தோம். அதிகாலை 4 மணியளவில் முன்பக்கக் கதவு தட்டப்படும் ஓசை கேட்டது. நான் அதைத் திறந்தபோது ஆயுதம் ஏந்திய இரு ஊர்காவலர்கள் வெளியே நின்று கொண்டிருந்தனர். அவர்கள் வீட்டினுள்ளே நுழைந்து சிறுவர்களை உலுக்கி எழுப்பி வெளியே கொணர்ந்தனர். பின்னர், சிறுவர்கள் எங்கள் கண் முன்னே சுட்டுக் கொல்லப்பட்டனர்.” என்று விடுதலைப் புலிகளின் தாக்குதலில் தமது தோழர்களில் ஒருவரின் சாவிற்குப் பகரடியாக முஸ்லிம் ஊர்காவல் படையினரால் இந்த மாத தொடக்கத்தில் கொல்லப்பட்ட தமிழ் இளைஞர்களில் ஒருவரான நவநாதனின் தந்தை திரு. இராசையா தெரிவித்தார். தமிழ்நெட் ஊடகவியலாளர் இந்த கிழமை அப்பரப்பிற்குச் சென்று பல குடியிருப்பாளர்களிடம் பேசினார். நிகழ்வின் பின்னர் சம்மாந்துறை காவல்துறையினர் இரு சிறுவர்களின் கொலையுடன் தொடர்புடையவர்கள் என ஐயப்படும் ஏழு ஊர்க்காவல் படையினரை கைது செய்தனர். அடையாள அணிவகுப்பு நடந்தது. கொலையாளிகளை அடையாளம் காணுமாறு நித்தியாந்தனின் தந்தை கே.மூத்தம்பியிடம் கோரப்பட்டது. "எங்கள் குழந்தைகளை சுட்டுக் கொன்றவர்கள் இந்த ஏழு பேரில் இல்லை என்றால், நாங்கள் என்ன செய்வது?" என்று திரு மூத்தம்பி கேட்டார். மூன்று நாட்களுக்குப் பிறகு ஒரு குழுவினர் வீட்டிற்கு வந்து திரு.மூத்தத்தம்பியிடம், கைது செய்யப்பட்ட ஊர்க்காவல் படையினருக்கு ஏதாவது நேர்ந்தால், அதற்கு அவர் மிகவும் வருந்த வேண்டியதாக இருக்குமென்று கூறினார்கள். ஆனால், ஜன.3ம் தேதி இரவு நவநாதன் மற்றும் அவரது முதல் மச்சான் நித்தியானந்தன் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு அந்த ஊரில் வசிப்பவர்களுக்கு புதிதல்ல. கடந்த 15 ஆண்டுகளில், முஸ்லிம் ஊர்காவல் படையினரும் தரைப்படையினரும் வீரமுனை மற்றும் அதனைச் சூழவுள்ள தமிழ் ஊர்களைச் சேர்ந்த போகூழான அப்பாவி மக்களைக் கொன்று கடத்துவதற்கு பேர்போனவர்களாவர். இருப்பினும் 1990ல் இந்த துன்புறுத்தல் தீவிரமடையத் தொடங்கியது. உள்ளூர் பாடசாலை ஆசிரியரான டி. சபாநாயகம் 1990ல் நடந்த நிகழ்வுகளை நன்றாக நினைவில் வைத்திருக்கிறார். 1990 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இரண்டாம் ஈழப்போர் வெடித்தவுடன் கிழக்கிற்குச் சென்ற சிறிலங்கா தரைப்படையினர் அம்பாறை மாவட்டத்தில் சிங்கள எல்லைக்கு அருகாமையில் உள்ள தமிழர் பரப்புகளில் வெறியாட்டத்தில் ஈடுபட்டபோது, முதலில் துயருற்றவர்கள் அண்டை ஊர்களிலிருந்து இடம்பெயர்ந்து வீரமுனைக்கு வந்த தமிழர்களேயாவர். "வளத்தாப்பிட்டி, மல்வத்தை, வீரச்சோலை, மல்லிகைத்தீவு, புதுநகரம், கந்தபுரம் ஆகிய பரப்புகளைச் சேர்ந்த 17,500 அகதிகள் வீரமுனையில் உள்ள சிந்தயாத்திரைப் பிள்ளையார் கோவிலுக்குத் தப்பிச் சென்றுள்ளனர். இடப்பற்றாக்குறை காரணமாக அருகில் உள்ள ராமகிருஷ்ணா வித்தியாலயத்தையும் எடுத்துக்கொள்ள வேண்டியதாயிற்று. " ஜூலை 12, 1990க்குப் பிறகு ஒரு மாதத்திற்கு, தரைப்படையைச் சேர்ந்த "கிளியரிங்க் பாட்டி" ஐந்து முறை முகாமைச் சுற்றி வளைத்து, 280 இளைஞர்களைக் கைது செய்தது. "இந்த சிறுவர் சிறுமிகள் உயிருடன் இருக்கிறார்களா அல்லது இறந்துவிட்டார்களா என்பது இன்னும் யாருக்கும் தெரியாது. அவர்களுக்கு என்ன நடந்தது என்பது கூட யாருக்கும் தெரியாது" என்றார் திரு.சபாநாயகம். இந்த அச்சுறுத்துகிற நிகழ்வுகளின் தொடர்ச்சி 1990 ஆகஸ்ட் 12 அன்று உச்சக்கட்டத்தை எட்டியது. அன்று காலை 9.15 மணியளவில் சம்மாந்துறை ஊர்காவல்படையின் பிரிவொன்றின் ஐந்து ஆயுததாரிகள் முகாமுக்குள் நுழைந்து கண்மூடித்தனமாக சுடத் தொடங்கினர். "சுமார் 40 நிமிடங்களுக்கு அவர்கள் தொடர்ந்து சுட்டுத் தள்ளினர். வேட்டு நிறுத்தப்பட்டதும், 21 ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் இறந்து கிடந்ததோடு 140 பேர் காயமடைந்தனர்." என்று திரு. சபாநாயகம் கூறினார். காயமடைந்தவர்களில் வீரமுனை ஊரின் குமுகாயத் தலைவராக இருந்த ஊரின் பிள்ளையார் கோவில் முகாமையாளர் (வண்ணாக்கர்) சிந்தாத்துரையும் அடங்குவார். அவர்கள் அனைவரும் பண்டுவத்திற்காக அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் காயத்திற்கு இழிவுபண்ணுவது போல், திரு.சிந்தத்துரை உட்பட மேலும் பத்து பேர் மறுநாள் மருத்துவமனையில் இருந்து கடத்தப்பட்டனர். ஆலய முகாமையாளர் திரு.சிந்தத்துரை வீரமுனையில் தமிழர்களுக்கு சிக்கல்களை ஏற்படுத்திய முஸ்லிம் ஊர்க்காவல் படையினருக்கு கீழ்ப்படியாத அஞ்சாதவராவார். அவர் ஊர்க்காவல் படையினரால் தான் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாக திரு. சபாரத்தினம் நம்புகிறார். இந்த மாதிரியான நிலைமையால் வீரமுனையில் வாழ முடியாத நிலை ஏற்பட்டது. அகதிகளை உடமைகளை பொதி செய்யுமாறு உள்ளுராட்சி அலுவலர்களால் உத்தரவிடப்பட்டு, அம்பாறை மாவட்டத்தின் தென்கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள பெரிய தமிழ் ஊரான தம்பிலுவிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 1992 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி, அகதி முகாம்களில் இரண்டு ஆண்டுகள் வசித்த பின்னர், ஊர் மக்கள் வீரமுனையில் மீள்குடியேற்றப்பட்டனர். ஆனால் ஓராண்டு கூட ஆகாத நிலையில், மேகநாதன் என்ற இளைஞன் அருகில் உள்ள கடையில் சாமான்களை வாங்கச் சென்றபோது காணாமல் போனான். "அடுத்த கிழமையில் மேகநாதனின் சட்டையும் சரமும் ஊரின் முஸ்லீம் குடியிருப்பில் உள்ள அலவாக்கரையில் உள்ள வாழைத்தோட்டத்தில் ஒரு குழியினுள் காணப்பட்டன. அவருக்கு என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது. அவர் கொலை செய்யப்பட்டார் என்று நாங்கள் கருதுகிறோம்" என்று திரு. சபாரத்தினம் கூறினார். இந்த நிகழ்வுகள் குறித்து செல்வாக்கு மிக்க ஆட்களுக்கு தகவல் தெரிவித்தும் ஊர் மக்களுக்கு எந்த இடர்தணிப்பும் கிடைக்கவில்லை. அவர்களை புத்திசாலிகளாக மாற்றிய மோசமான பட்டறிவுகளால் இன்று வீரமுனை மக்கள் முன்பு போல வடுப்படத்தக்கவர்களாகவே உள்ளனர். "நாங்கள் நிம்மதியாக வாழ வேண்டுமாயின் வீரமுனை - சம்மாந்துறை எல்லையில் அமைந்துள்ள ஊர்காவல் படையினர் முகாம் அகற்றப்பட வேண்டும்" என மூத்தம்பி தெரிவித்தார். *****
- 170 replies
-
- massacres
- muslim
- sri lanka
- tamils
-
Tagged with:
- massacres
- muslim
- sri lanka
- tamils
- அதிரடிப்படை
- அழிவுகள்
- இனப்படுகொலை
- இராணுவம்
- இலங்கை
- இலங்கை முஸ்லிம்களின் வரலாறு
- இஸ்லாமியர்
- இஸ்லாமியர் மீதான கொலை
- ஈழம்
- ஊர்காவல் படை
- ஊர்காவல்படை
- ஏறாவூர் படுகொலை
- கற்பழிப்பு
- காடையர்கள்
- காத்தான்குடி
- குற்றம்
- கொலை
- கொள்ளை
- சிறிலங்கா
- சிறிலங்கா இராணுவம்
- சோனகர்
- ஜிகாத்
- ஜிஹாத்
- தமிழர்
- தமிழர் படுகொலை
- தமிழீழம்
- தமிழ் இனப்படுகொலை
- தாக்குதல்
- திருகோணமலை
- நிகழ்த்திய
- படுகொலை
- படுகொலைகள்
- பள்ளிவாசல்
- மசூதி
- மட்டக்களப்பு
- முஸ்லிம் ஊர்காவல் படை
- முஸ்லிம் தாக்குதல்
- முஸ்லிம் படுகொலை
- முஸ்லிம் படுகொலைகள்
- முஸ்லிம்கள்
- முஸ்லிம்கள் படுகொலை
- வன்புணர்ச்சி
- வன்முறை
- விடுதலைப் புலிகள்
-
புலிகள் காலத்திய இயக்கப்பாடல்களின் 221 இறுவட்டுகள் | திரட்டு
இறுவட்டு அட்டைகள் கடற்கரும்புலிகள் பாகம் 02
-
புலிகள் காலத்திய இயக்கப்பாடல்களின் 221 இறுவட்டுகள் | திரட்டு
இறுவட்டு அட்டைகள் கடற்கரும்புலிகள் பாகம் 01