Everything posted by நன்னிச் சோழன்
-
புலிகள் காலத்திய இயக்கப்பாடல்களின் 221 இறுவட்டுகள் | திரட்டு
இறுவட்டு அட்டைகள் நெருப்பில் நீராடுவோம்
-
புலிகள் காலத்திய இயக்கப்பாடல்களின் 221 இறுவட்டுகள் | திரட்டு
இறுவட்டு அட்டைகள் நெருப்பலைகள்
-
புலிகள் காலத்திய இயக்கப்பாடல்களின் 221 இறுவட்டுகள் | திரட்டு
இறுவட்டு அட்டைகள் நெய்தல் நெய்தல் - ஒரு மதிப்பீடு திறனாய்வாளர்: பேராசிரியர் அ.சண்முகதாஸ் வெளியீடு: வெளிச்சம் திகதி: ஆடி-ஆவணி 1992 பக்கம்: 58- 59 ஒன்பது பாடல்கள் கொண்ட 'நெய்தல்' ஒலிப்பதிவு நாடா விடுதலைப் புலிகளின் கலை, பண்பாட்டுக் கழகத்தினாலே வெளியிடப்பட்டுள்ளது. கடலும் கடல் சார்ந்த இடம் பண்டைத் தமிழ் இலக்கியங்களிலே நெய்தல் என்ற பெயராலே அழைக்கப்பட்டது. இங்கு மதிப்பீட்டுக்கு எடுக்கப்பட்டுள்ள இசைநாடாவிலே அமைந்துள்ள பாடல்கள் யாவும் கடற்கரைப் பிரதேசத்தையும், அப்பிரதேசத்து மக்கள் வாழ்வினையும் வெளிக்காட்டுவனவாக அமைந்துள்ளன. சங்க இலக்கியங்களிலே நெய்தற் பாடல்களைப் படிப்பவர்கள் இரண்டு வகையான உணர்வுகளை அவற்றின் மூலம் இனங்கண்டு கொள்வர். ஒன்று, கடலிலே மீன்பிடிக்கச் செல்பவர், கப்பல் ஓட்டுபவர் ஆகியோருடைய வீரம்; மற்றையது, நெய்தல் நிலப் பிரதேசத்து மக்களுடைய இரங்கத்தக்க வாழ்வு. இவ்வொலிப்பதிவு நாடாவிலே அமைந்துள்ள பாடல்களிலே இவ்விரு உணர்வுகளும் சிறப்பாகப் புலப்படுத்தப்பட்டுள்ளன, "ஆழக் கடலெங்கும் சோழமகாராஜன் ஆட்சி புரிந்தானே அன்று - தமிழ் ஈழக் கடலெங்கும் எங்கள் கரிகாலன் ஏறி நடக்கின்றான் இன்று காலை விடிந்ததென்று பாடு - சங்க காலம் திரும்பியது ஆடு" என்று ஒலிப்பதிவு நாடாவின் முதற்பாடலே விறுவிறுப்புடன் வீர உணர்வு பொங்கிட அமைந்து விடுகின்றது. கடற்காவியப் பாடல்களுக்கு இது நுழைவாயிலாக அமைந்து விடுகின்றது. இதே போன்று "கடலதை நாங்கள் வெல்லுவோம்" என்ற பாடலும் வீர உணர்வு புலப்படும் பாடலாக அமைகின்றது. இன்னொரு புறத்தில், நெய்தல் நிலத்துக்கேயுரிய சோக உணர்வும் சில பாடல்களாலே புலப்படுத்தப்படுகின்றது. நெய்தல் நில மகளிர் மிகவும் பரிதாபத்துக்குரியவர். "கரைமேற் பிறக்க வைத்தான் எங்களைக் கண்ணீரில் மிதக்க வைத்தான்" என்பது அவர்களது அனுபவ உணர்வு. இன்று மாலை படகுகளிலே கடலுக்குச் செல்லும் மீனவர், அடுத்த நாள் திரும்பி வரும் வரை என்ன நடக்குமோ என்று வீட்டிலுள்ள மகளிர் ஏங்குவது இயற்கை வாழ்வு. இவ்வித இயற்கையான சோக வாழ்வுடன், தங்கள் இளங் குருத்துகளின் கடல் வீரத்தின் மத்தியிலும் ஏற்படும் சிறு சோகங்களும் கலக்கும் போது ஏற்படும் இரங்கு நிலையை நாம் வார்த்தைகளாலே வடித்துவிட முடியாது. இதற்காகத்தான், வார்த்தைகளுடன் இசையினையும் சேர்த்து நெய்தல் நில மக்களின் இரங்குணர்வை இவ்வொலிப்பதிவு நாடா மூலமாகப் புலப்படுத்துகின்றனர். "வெள்ளி நிலா விளக்கேற்றும் நேரம்" என்னும் பாடல் இதற்கு நல்லதொரு எடுத்துக்காட்டாகும். நாட்டார் இசை என்றுமே உயிர்த்துடிப்பும் இனிமையுமுடையது. உயர் இசை, மெல்லிசை என்பனவற்றுடன் நாட்டார் இசை சேருமிடத்து அக்கலவை புதிய தன்மையுடைய இசையினை எமக்கு நல்கும். அது மிகுந்த கவர்ச்சி ஆற்றலுடையதாக அமையும். "முந்தி எங்கள் பரம்பரையின் கடலம்மா - கரை முற்றும் நாங்கள் குடியிருந்த மடியம்மா" என்ற பாடல் அத்தகைய கவர்ச்சி ஆற்றல் உடையதாக அமைகின்றது. அப்பாடலின் இன்னொரு பகுதி, "அழுது கொண்டும் தொழுது கொண்டும் இன்னும் வாழ்வதோ - எங்கள் அப்பு ஆச்சி வாழ்ந்த மண்ணை எதிரி ஆள்வதோ" என அமைகின்றது. அம்பாப் பாடலோசையும் கப்பற்பாட்டிசையும் நன்கு பொருந்த, பாடலைப் பாடிய ஆண்குரலும் பெண்குரலும் நன்கு இசைவுறப் பாடல் அமைகின்றது. கடல், கடலலை, கடற்கரை வாழ் மக்கள், தமிழர் கடல் வீரவரலாறு இவற்றையெல்லாம் இன்றைய கடற் போராளிகளுடைய அனுபவ உணர்வுகளுடன் இணைத்துப் பாடல்கள் புனையப்பட்டுள்ளன. அப்பாடல்கள் புலப்படுத்தும் உணர்வுகளுக்கேற்ற இசை வழங்கப்பட்டுள்ளது. இப்பாடல்களைக் கேட்பவர்கள் நிச்சயமாக உள்ளம் உருகுவார்கள்; புதிய புதிய வீறுடைய உணர்வு பெறுவார்கள். பாடல்களைப் புனைந்த கவிஞர்களும் இசை வழங்கிய இசை வல்லாளனும் பாராட்டுக்குரியவர்கள். "காலை விடிந்ததென்று பாடு - சங்க காலம் திரும்பியதென் றாடு" என்ற பூரிப்புணர்வினை 'நெய்தல்' ஒலிப்பதிவு நாடா நமக்கு வழங்குகின்றது. ****** "நெய்தல்" - ஒரு நெடும் பாய்ச்சல் திறனாய்வாளர்: நம்பியாரூரன் வெளியீடு: ஈழநாதம் திகதி: 1992.07.10 பக்கம்: 5-6 கடலும் கடல் சார்ந்த நிலமும் நெய்தல் எனப்படும். நெய்தலுக்குரிய ஒழுக்கம், இரங்கல், நெய்தல் நிலத்தில் வாழும் மக்களுடைய தொழில் மீன் பிடிப்பதும், உப்பு விளைவித்தலும், முத்துக் குளிப்பதுமாகும். காற்றோடும் அலையோடும் மல்லாடும் இம் மக்கள் கடலுக்கே இரையாகிப் போவதுமுண்டு. கடலுக்குப் போய் மீளாத கணவனையோ, மகனையோ எண்ணி எண்ணி வாயிலும் வயிற்றிலும் அறைந்து கொண்டு பெண்கள் புலம்புவர். இதுவே இரங்கலுக்கான காரணம். இரங்கலைப் புலம்பல் என்றும் கூறலாம். இயற்கையின் சீற்றத்துக்கு மீனவர் பலியாவது உலகெங்கும் நிகழ்ந்து வருவதாயினும், அண்மைக் காலங்களில் தமிழ் மீனவர்களை மேலதிகமாக ஓர் ஆபத்து சூழ்ந்துள்ளது. சிறிலங்கா கடற்படையினர் நம் மீனவர்களை வெட்டியும் குத்தியும் சுட்டுக்கொல்வதும், அவர்களுடைய வள்ளம், வலைகளைச் சேதப்படுத்துவதும், மீனவர் குடியிருப்புகளை அழித்து கொலை, கொள்ளை புரிவதும் வழமையாகி வருகின்றது. கொடுங்கோன்மையின் இந்த முகம் இயற்கையின் கொடுமையை விட கோரமானது. எப்படி எமது பாரம்பரிய நிலப்பரப்பை பிரிக்கப்படாத வட-தென் தமிழீழத்தை நாமே ஆள வேண்டிய அவசியம் இருக்கிறதோ, அதே போலவே தமிழ் மண்ணின் பெரும் பகுதியைச் சூழவுள்ள கடற்பரப்பை நாமே கட்டியாள வேண்டிய தேவையும் இருக்கிறது. தமிழருக்கு இது ஒன்றும் புதிய விசயம் அல்ல. இராசராசன், இராசேந்திரன் முதலிய சோழப் பெருமன்னர் பெரிய கடற்படை ஒன்றை வைத்திருந்தது மட்டுமன்றி, ஜாவா, சுமாத்திரா (சிறிவிஜயம்) முதலிய தூரகிழக்கு நாடுகள் வரை சென்று தமது கடலாதிக்கத்தை நிலைநாட்டினார்கள். தமிழ் வணிகர்களுடைய கலங்களுடைய பாதுகாப்பை உறுதி செய்தார்கள். பாரம்பரியமான மரக்கலமொன்றில் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த மாலுமிகள் சப்தசமுத்திரங்கள் தாண்டிய அண்மைக்கால வரலாறு மெய்சிலிர்க்க வைப்பது. தமிழீழ விடுதலைப் போரை ஒடுக்கக் கங்கணம்கட்டி நிற்கும் சிறிலங்கா அரசு தரையிலும், கடலிலும், வானிலும் போர் தொடுக்கிறது. கடற்பாதைகளை மூடி எம்மை நசுக்கப் பார்க்கின்றது. எமது மீனவர்களை துன்புறுத்துகின்றது; கொல்கின்றது. இந்நிலையில் உதிர்த்ததுதான் 'கடற்புலி'கள் அமைப்பு. அதன் ஒரு பிரிவு 'கடற்கரும்புலிகள்' உயிரைத் துச்சமாக மதித்து எதிரியின் கப்பல்களையும் சக்திமிக்க படகுகளையும் மோதிச் சிதறடிக்கும் இவர்களுடைய வீரத்துக்கு முன் சிங்களம் திணறுகின்றது. நடந்து கொண்டிருக்கும் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதில் தமிழீழக் கலைஞர்கள் பெரும் பங்காற்றி வருகிறார்கள். விடுதலைக் கீதங்களைத் தாங்கி இதுவரை தமிழீழத்தில் எட்டு ஒலிப்பதிவு நாடாக்கள் வெளிவந்துள்ளன. அண்மையில் கடற்புலிகள் அமைப்புக் கலைஞர்களை இணைத்து விடுதலைப்புலிகள் கலை, பண்பாட்டுக்கழகம் உருவாக்கிய 'நெய்தல்' ஒலிநாடா வெளியிடப்படுகின்றது. தமிழீழ விடுதலைப்புலிகள் விடுதலை இயக்கம் பற்றி விமர்சனம் செய்த 'நியூஸ்வீக்' சஞ்சிகை "தமிழர் வரலாற்றில் ஓர் உன்னத இடத்தை வகிக்கின்ற சோழப் பெருமன்னர்களுடைய கொடியைத் தமது கொடியாகக் கொண்டுள்ளார்கள்" என்று குறித்துள்ளது. "ஆழ்கடலெங்கும் சோழ மகராஜன் ஆட்சி புரிந்தானே அன்று - தமிழ் ஈழக் கடலெங்கும் எங்கள் கரிகாலன் ஏறி நடக்கின்றான் இன்று" என்று எடுப்பாகத் தொடங்குகின்றது நெய்தல். கரிகாலனும் புகழ் பெற்ற ஒரு சோழனே. இமயத்தின் புலி இலச்சினையைப் பொறித்தவன் அவன். இந்தப் பெருமையை எல்லாம் பாடி அதன் வாரிசாக விளங்கும் எங்கள் கரிகாலன் (தலைவர் பிரபாகரன்) புகழ் பேசுகின்றது இவ் இசைப்பா. "எங்கள் கடல் மீதில் எதிரி வருகின்ற இன்னல் இனிமேலும் இல்லை" என்ற நம்பிக்கை தரும் ஒரு முத்தாய்ப்பு. 'கரும்புலிகள்' என்ற யோகியின் பாட்டு பிரபலமானது. "அம்மாவும் அப்பாவும் எங்களுக்குண்டு ஆனாலும் மண்மீதில் பெரும்பாசமுண்டு ஆறடி மண்கூட நமக்காகக் கேளோம்" எனக் கரும்புலிகளின் மன உணர்வுகளை வடித்தது அந்தக் கீதம். ஆறடி மண்ணுக்கு மேல் எதுவும் எதிர்பார்க்காத தரைப்புலிகள். ஆனால் கடற்கரும்புலிகளோ கடலோடு கரைந்து போகின்றவர்கள். ""ஆறடி மண்ணிலும் அடங்கிடோம்" - எனும் கரும்புலி உணர்வது கேட்குதா" "கடலலையே கொஞ்சம் நில்லு - தமிழன் வீரத்தை உலகெங்கும் சொல்லு" என்பது யோகி தரும் நெய்தல். மீனவர்கள் கரைவலை இழுக்கின்றார்கள். "ஏலேலோ ஐலசா -ஏலேலோ ஐலசா!" பரம்பரை பரம்பரையாக அவர்கள் இக்கடலலையின் மடியில் தவழ்ந்தவர்கள். ஆசியாவின் கடல் எல்லாம் ஆண்ட தமிழன் அகதியாக உலகெங்கும் அலையும் இழிநிலை கண்டு இரங்குகின்றார்கள். "எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே" என பெருமிதத்தோடு பாடினான் பாரதி. "அழுது கொண்டும் தொழுது கொண்டும் இன்னும் வாழ்வதோ - எங்கள் அப்பு ஆச்சி வாழ்ந்த மண்ணை எதிரி ஆள்வதோ" இது புதுவை இரத்தினதுரையின் உணர்ச்சிகரமான பாட்டு. "எதிரி வருவானா? கரையைத் தொடுவானா? என்று புயலாகி வென்றோம் - புலி அதிரும் வெடியோடு கடலில் நடைபோடும் அணியில் துணையாகி நின்றோம்" இது புதுவையின் இன்னொரு ஆவேசப்பாட்டு. ஆம்! தன் உடலைச் சிதறடிக்கின்ற வெடியோடு படகில் போகும் கடற்புலிகளின் துணிச்சலை, தியாகத்தை இணைக்கும் போது யார் தான் சிலையாகாதவர். நினைத்துப் பார்க்கின்றோம். சின்னச் சின்னப் பூக்களெல்லாம் புயலாகி போர்க்காலத்தில் நிற்கின்ற பூமியல்லவா இது! கூவியழைக்கின்றார் புதுவை இரத்தினதுரை. "பூவும் புயலாகிப் பாயும் புலியாகி போரில் குதித்துள்ள நாடு - தமிழ் ஈழம் உருவாகும் வேளை இதுவாகும் என்று களம் நோக்கி ஓடு" கடற்புலி ஒருத்தி கடமையில் ஈடுபட்டிருக்கின்றாள். ஆடாமல் அசையாமல் இலக்கினை உற்று நோக்கியபடி சிலையாகி கடல் விம்முகிறது. அலைகள் அவள் கண்களை மறைக்கின்றன. "அலையே நீயும் பொங்காதே - என் இலக்கினை இனியும் மறைக்காதே" உண்மையான அனுபவம் கலையாகும் அழகை ரசிக்கிறோம். நெய்தலில் புதுவை இரத்தினதுரை எழுதிய நெஞ்சை அள்ளும் மீனவப்பாட்டு ஒன்று வருகின்றது. "வெள்ளிநிலா விளக்கேற்றும் நேரம் - கடல் வீசுகின்ற காற்றில் உப்பின் ஈரம் தள்ளி வலை ஏற்றி வள்ளம் போகும் - மீன் அள்ளி வர நீண்ட நேரம் ஆகும்." எல்லாம் இவ்வளவு சுலபமாக முடிவதில்லையே கடலில் நேவிக்காரன் சுட்டுவிட்டால், "பேருமின்றி ஊருமின்றி பெற்றவளின் முத்தமின்றி ஈர உடல் கரையொதுங்கும் காலை" மீனவன் வீட்டு வாசலிலும் கோலம் போட்டு இருக்கின்றது. என்ன கோலம்? வறுமையின் வேதனையின் கோலம். "வாயிறுக்கி வயிறிறுக்கி வாழும் கடல் மீனவரின் வாசலெங்கும் வேதனையின் கோடு" நெஞ்சைப் பிழியும் சோக பாவத்துடன் ஒலிக்கின்ற இந்தப் பாட்டு நெய்தலின் சிகரம் எனலாம். பாடிய சாந்தனும் சிட்டுவும் பாராட்டுக்குரியவர்கள். தமிழீழ விடுதலைப் போரில் நெய்தல் நில மக்களே அதிக இழப்புகளை சந்தித்தவர்கள் எனலாம். மயிலிட்டி, 'தீவகம்', வெற்றிலைக்கேணி, மன்னார், முல்லைத்தீவு இன்னும் பிற பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்து தொழிலின்றி அலைபவர்களும் மீனவர்களே. இந்த நோக்கில் மீனவர்களுடைய உணர்வுகளை வெளியிடும் 'நெய்தல்' காலத்தின் தேவையாகவும், தமிழினத்தின் நிகழ்கால ஆவணமாகவும் விளங்குகின்றது. நெய்தலின் இசையமைப்பைப் பற்றிச் சிறப்பாகக் குறிப்பிட வேண்டும். நவநவமான கற்பனைகள் நடைபேதங்கள் ஒருசில இசைக் கருவிகளை வைத்துக் கொண்டு கேட்போரைக் கிறங்க வைக்கும் இசைக் கோலங்கள் பாடகர்களும் சிறப்பாகவே செய்திருக்கின்றார்கள். சாந்தன் கூட அடக்கி வாசிக்கின்றார். பார்வதி சிவபாதம் பல்லவியை பாடும் பாணியல் ஒரு புதுமை செய்கிறார். "நீலக்கடலே நெடுகன் நிலவே" என்ற கீதம் மழலைக் குரலில் இழைகிறது. "கடலலையே கொஞ்சம் நில்லு" ஒரு "முல்லை" முத்திரை ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில் இதுவரை வெளிவந்த விடுதலைக் கீதங்களில் ‘நெய்தல்' ஒரு-உச்சத்தாவல்-நெடும் பாய்ச்சல். ******
-
புலிகள் காலத்திய இயக்கப்பாடல்களின் 221 இறுவட்டுகள் | திரட்டு
இறுவட்டு அட்டைகள் நினைவாஞ்சலிக்கீதங்கள்
-
asfda.jpg
From the album: Tiger Era Tamil Eelam Album Covers
-
asfaf.jpg
From the album: Tiger Era Tamil Eelam Album Covers
-
புலிகள் காலத்திய இயக்கப்பாடல்களின் 221 இறுவட்டுகள் | திரட்டு
இறுவட்டு அட்டைகள் நல்லை முருகன் பாடல்கள் இது தான் மூல அட்டையா என்பது குறித்து எனக்கு சரியாகத் தெரியவில்லை.
-
புலிகள் காலத்திய இயக்கப்பாடல்களின் 221 இறுவட்டுகள் | திரட்டு
இறுவட்டு அட்டைகள் தோள் கொடுப்போம்
-
புலிகள் காலத்திய இயக்கப்பாடல்களின் 221 இறுவட்டுகள் | திரட்டு
இறுவட்டு அட்டைகள் தொலைதூர விடுதலைச் சுவடுகள்
-
புலிகள் காலத்திய இயக்கப்பாடல்களின் 221 இறுவட்டுகள் | திரட்டு
இறுவட்டு அட்டைகள் தேனிசைத் தென்றலும் புயலும் இவ்விறுவெட்டின் மூல அட்டை எனக்குக் கிடக்கப்பெறவில்லை.
-
புலிகள் காலத்திய இயக்கப்பாடல்களின் 221 இறுவட்டுகள் | திரட்டு
இறுவட்டு அட்டைகள் தேசம் மறவோம்
-
புலிகள் காலத்திய இயக்கப்பாடல்களின் 221 இறுவட்டுகள் | திரட்டு
இறுவட்டு அட்டைகள் தேசம் நோக்கி இது நோர்வே கலை பண்பாட்டுக் கழகத்தின் இரண்டாவது வெளியீடாகும். இதன் மூல அட்டை எனக்குக் கிடைக்கப்பெறவில்லை. அதற்கென வணிக நோக்கில் வெளியிடப்பட்ட அட்டைகளே கிடைக்கப்பெற்றுள்ளன.
-
புலிகள் காலத்திய இயக்கப்பாடல்களின் 221 இறுவட்டுகள் | திரட்டு
இறுவட்டு அட்டைகள் தேசத்தின் புயல்கள் பாகம் 05
-
புலிகள் காலத்திய இயக்கப்பாடல்களின் 221 இறுவட்டுகள் | திரட்டு
இறுவட்டு அட்டைகள் தேசத்தின் புயல்கள் பாகம் 04
-
தற்கொடைப்படையான கரும்புலிகள் இன் படிமங்கள் | LTTE's self-sacrifice force' Black Tigers images
தரைக்கரும்புலி மேஜர் மலர்விழி "ஆழமாய்க் காதலித்த தாயகத்திலே ஆள வந்தோர் ஆட்லறியை அறுத்தெறுந்தீரே! ஆந்திரா, சத்தியா, மலர்விழி தணலாகி தாமரைக்குளத்தை மீட்டிரே! பெரும் சரித்திரம் படைத்து சென்றீரே!" ''இறுதியாய், தலைவரோடு நிழற்படம் எடுப்பதற்காய் பொதிக்கிறார்'' 'அன்னார் இலகு தகரி எதிர்ப்பு ஆய்தத்தால் குறிவைக்கிறார்' 'அன்னார் உருசிய கவச சண்டை ஊர்தி-1 (BMP-1) இனுள் அமர்ந்திருந்து நேர்காணல் வழங்குகிறார்' 'அன்னார் பயிற்சியில் ஈடுபடுகிறார்'
- 273 replies
-
- balck tigers
- eelam commando
- eelam images
- eelam special force
-
Tagged with:
- balck tigers
- eelam commando
- eelam images
- eelam special force
- eelam tamil commando
- ground black tigers
- liberation tigers of tamileelam
- ltte
- ltte air commandos
- ltte black tigers
- ltte black tigers images
- ltte commando
- ltte commandos
- ltte images
- ltte naval commandos
- ltte self benefaction force
- ltte special commandos
- ltte special force
- ltte special forces
- non returnable mission commandos
- self-benefaction force
- sri lanka commandos
- sri lanka special force
- sri lankan army
- sri lankan rebel commandos
- srilanka special force
- srilankan rebel commandos
- tamil army
- tamil commando
- tamil commandos
- tamil commond
- tamil eelam
- tamil eelam army
- tamil eelam commando
- tamil eelam commandos
- tamil eelam de-facto
- tamil eelam de-facto state
- tamil eelam special force
- tamil ground commandos
- tamil naval commandos
- tamil special forces
- tamil tigers
- அதிரடிப்படை
- இலங்கை அதிரடிப்படை
- ஈழ சிறப்புப் படை
- ஈழத் தமிழ் கொமாண்டோக்கள்
- ஈழத் தமிழ் சிறப்புப் படை
- உயிராயுதங்கள்
- கடற்கரும்புலிகள்
- கரும்புலி
- கரும்புலிகள்
- கொமாண்டோ
- கொமாண்டோக்கள்
- சிங்கள கொமண்டோ
- சிறப்பு அதிரடிப்படை
- சிறப்பு படை
- சிறப்புப் படை
- சிறப்புப்படை
- சிறிலங்கா கொமாண்டோ
- சிறீலங்கா அதிரடிப்படை
- சிறீலங்கா கொமாண்டோ
- தடைநீக்கிகள்
- தமிழீழ அதிரடிப்படை
- தமிழீழ கொமாண்டோ
- தமிழீழ சிறப்பு அதிரடிப்படை
- தமிழீழ சிறப்புப் படை
- தமிழ் அதிரடிப்படை
- தமிழ் ஈழ கொமாண்டோ
- தமிழ் கொமாண்டோக்கள்
- தமிழ் சிறப்புப் படை
- தேசப்புயல்கள்
- நீரடி நீச்சல் கரும்புலிகள்
- புலிகளின் அதிரடிப்படை
- மறைமுகக் கரும்புலிகள்
- வான் கரும்புலிகள்
- விடுதலை அதிரடிப்படை
- விடுதலைப் புலிகளின் அதிரடிப்படை
- விடுதலைப்புலிகளின் அதிரடிப்படை
-
Ground Black Tigers...jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
புலிகள் காலத்திய இயக்கப்பாடல்களின் 221 இறுவட்டுகள் | திரட்டு
இறுவட்டு அட்டைகள் தேசத்தின் புயல்கள் பாகம் 03
-
புலிகள் காலத்திய இயக்கப்பாடல்களின் 221 இறுவட்டுகள் | திரட்டு
இறுவட்டு அட்டைகள் தேசத்தின் புயல்கள் பாகம் 02
-
புலிகள் காலத்திய இயக்கப்பாடல்களின் 221 இறுவட்டுகள் | திரட்டு
இறுவட்டு அட்டைகள் தேசத்தின் புயல்கள் தரைக்கரும்புலிகள் "தேசத்தின் புயல்கள்" எனப்பட்டனர். அவர்களின் சின்னத்திலும் இக்கூட்டுச்சொல் பொறிக்கப்பட்டிருக்கும்.
-
புலிகள் காலத்திய இயக்கப்பாடல்களின் 221 இறுவட்டுகள் | திரட்டு
இறுவட்டு அட்டைகள் தேசத்தின் குரல்
-
புலிகள் காலத்திய இயக்கப்பாடல்களின் 221 இறுவட்டுகள் | திரட்டு
இறுவட்டு அட்டைகள் தேசக் காற்று
-
புலிகள் காலத்திய இயக்கப்பாடல்களின் 221 இறுவட்டுகள் | திரட்டு
இறுவட்டு அட்டைகள் தேசக் காதல் https://eelapparavaikal.com/ms_song/thesakkathal/?_msr=1719871526 இந்த இறுவட்டில் உள்ள பாடல்களை சேகரித்து வைக்கவும். அரிதான ஒன்று. இதன் மூல அட்டையை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதற்கு வணிக நோக்கில் 2009இற்குப் பிறகு வெளியிடப்பட்ட அட்டைகளும் உண்டு. இதற்குள் : 01 அறிமுகம் 02 என்மனதில் கோவில் கொண்ட மாவீர தெய்வங்களே 03 ஆனையிறவிலே வீரப்புலிகளின் வெற்றிகளின் 04 எங்கு நான் தேடிப்பார்த்தேன் உந்தனின் (பெண்) 05 மண்ணை நினைக்கையிலே கண்கள் 06 காதலே வாழுமே என் தேசக்காதல் வாழும் 07 சோகங்கள் கேட்டு ஆறுதல் சொல்ல 08 தமிழை மறக்கும் தமிழனே நீ உன்னை 09 நாளையே எங்கள் தாயகம் விடியும் 10 வீர சுதந்திரம் வேண்டி நின்றார் பின் 11 எங்கு நான் தேடிப்பார்த்தேன் உந்தனின் (ஆண்) 12 நாளையே எங்கள் தாயகம் (வாத்திய இசை) என்பன இதிலிருந்த சில அறியப்பட்ட பாடல்களாகும். இவ்விறுவட்டானது ஏறத்தாழ 15/08/2024 அன்று அழிந்துபோனது. இதன் கடைசிப் படி "https://eelapparavaikal.com/ms_song/thesakkathal/" என்ற வலைத்தளத்தினுள் இருந்தது.
-
புலிகள் காலத்திய இயக்கப்பாடல்களின் 221 இறுவட்டுகள் | திரட்டு
இறுவட்டு அட்டைகள் துளிர்கள் கீழுள்ளது மூல அட்டையாகும். அடுத்துள்ளது இறுவட்டு மேல் உள்ள படிமமாகும்.
-
புலிகள் காலத்திய இயக்கப்பாடல்களின் 221 இறுவட்டுகள் | திரட்டு
இறுவட்டு அட்டைகள் திலீபன் அழைப்பது சாவையா? தியாகதீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் உண்ணாநோன்பு மேடையில் பாடப்பட்ட பாடல்கள் இவையாகும். ஒலிவாங்கி பிடித்து பாடிக்கொண்டிருந்த போதே இப்பாடல்கள் பதிவுசெய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இவ்விறுவட்டின் மூல அட்டையை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. கீழுள்ள இனந்தெரியாத அட்டையும் வணிக நோக்கிலான அட்டைகளுமே காணக்கிடைக்கின்றன.
-
தரைப்புலிகள் இன் படிமங்கள் | LTTE Ground Tigers' Images
லெப். கேணல் மகேந்தி, பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் மற்றும் (எனக்குப் பெயர் தெரியாத) போராளி ஒருவருடன் தலைவர் மாமா 3rd eelam war
- 1202 replies
-
- தமிழீழ ராணுவம்
- இராணுவம்
- sri lanka rebel army
- விடுதலைப்புலிகள்
-
Tagged with:
- தமிழீழ ராணுவம்
- இராணுவம்
- sri lanka rebel army
- விடுதலைப்புலிகள்
- சிறிலங்கா இராணுவம்
- விடுதலைப் புலிகளின் நிழற்படங்கள்
- sri lanka rebels
- தமிழீழம்
- புலிகளின் படங்கள்
- விடுதலைப் புலிகள்
- தமிழீழ விடுதலைப் புலிகள்
- புலிகளின் படையணிகள்
- tamil eelam army
- prabhakaran
- eelam land force
- தமிழீழ விடுதலைப்புலிகள்
- ltte land force
- தமிழீழ இராணுவம்
- ltte brigades
- ltte land tigers
- ltte fighters
- தமிழீழப்படை
- tamil eelam army images
- eelam army
- தரைப்படை
- ltte
- ltte army
- தமிழீழத் தரைப்படை
- ltte regiments
- kotti
- kotty
- srilankan rebel army
- ltte rebel
- ltte fire teams
- ltte battlions
- தமிழீழ படைத்துறை
- srilanka rebels
- சிறீலங்கா
- sri lankan land force
- sri lankan army
- ltte rebels
- ltte images
- ltte pictures
- ltte photos
- புலிகள்
- eelam fighters
- படைத்துறை
- ஈழப்படை
- prabakaran
- ராணுவம்
- tamil army
- tamil forces